ஸ்ரீ வசன பூஷணம் –

ஸ்ரீ வசன பூஷணம் –
ஆறு பிரிவு அடைவு –
1-புருஷகார உபாய வைபவம்-
2-உபாயம்
3-அதிகாரி நிஷ்டை
4-ஆச்சார்யா அனுவர்தனம்
5-பகவன் நிர்கேதுக கிருபை
6-சரம பர்வ  நிஷ்டை
என்பதாகும் –
இதையே ஒன்பது பிரிவாக
1-புருஷகார உபாய வைபவம்
2-உபாயம்
3-உபாயாந்தர தோஷம்
4-சித்த உபாய நிஷ்டர் வைபவம்
5-பிரபன்ன தின சர்யை
6-சதர்ச்சார்யா லஷணம்
7-சச் சிஷ்ய லஷணம்
8-பகவன் நிர்கேதுக விஷயீகாரம்
9-சரம பிராப்ய பிராபகம்-

திருவாய் மொழி பிள்ளை /திரு நாராயணபுரத்து ஆய்/மணவாள மா முனிகள்
மூவரும் அருளி செய்த வ்யாக்யானங்கள் உண்டு –

விண் வாழ்வை வேண்டி தொழுவார்க்கு தீ வினை வேர் அறுத்திம்
மண் வாழ்வை மாற்று மணவாள மாமுனி வண் கழல் என்
கண் வாழும் என் புன்சிரம் வாழும் வாழும் என் காதும் நிறைந்து
எண் வாழும் எண் இரு தோள் வாழும் வாழும் எனைக் கலந்தே —-மணவாள மா முனி நூற்று அந்தாதி –
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை விளக்காய் நின்ற திருவரங்கமே –பெரிய ஆழ்வார் திரு மொழி -படி

ஆசார்யர்கள் மண்டி இருந்த திருவரங்கம் –
மா முனிகள் -1370-1443-

திரு தந்தையார் -திகழக் கிடந்தான் திரு நாவீருடைய பிரான் தாதர் அண்ணர்

திரு குமாரர் -ராமானுச பிள்ளை
பௌத்ரிரர் -ஜீயர் நயினார்

சேற்று கமல வயல் சூழும் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றி தொழு நல்ல அந்தணர் வாழ இப் பூதலத்தே
மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யலவோ தமிழ் ஆரணமே –

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ பூக் கமழும்
தாதர் மகிழ் மார்பன் தானிவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் -திரு நாராயணத்து ஆய் –
சீர்வசன பூஷணமாம் தெய்வ குளிகை பெற்றோம்
பார் உலகை  பொன் உலாகாப் பார்க்க வல்லோம் -தேரில் நமக்கு
ஒப்பார் இனி யார் உலகாசிரியன் அருள்
தப்பாமல் ஓதிய பின் தான் -தனி பாடல்-மா முனிகள் –
பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைக்கும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சந்மத்
தாவங்கள் பற்றறும் தண் அரங்கன் புகழ் சாந்த குணத்
தீவன் கருணை மணவாளயோகியை சிந்திக்கவே –
சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழி பிள்ளை செம்முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய்  பதங்களும் தந் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன் அடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே – கோயில் கந்தாடை அண்ணன்

லோக குரும் குருபிச்சக பூர்வை
கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நகபதி அபிராம வரேசவ்
தீப்ர சயான குருஞ்ச பஜேஹம்-சர் மணவாள மா முனிகள் அருளி செய்த தனியன் –
கூர குலோத்தம தாசர் -பிள்ளை லோகாசார்யர் சிஷ்யர் –
திருமலை ஆழ்வார் -கூர குலோத்தம  தாசருக்கும் பிள்ளை லோகாச்சார்யருக்கும் சிஷ்யர் –
மா முனிகளுக்கு ஆசார்யர் –
அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -அபிராம வரேசவ் -மா முனிகளின் திரு தாயாரை பெற்ற பாட்டனார் –
பிள்ளை லோகாச்சாரின் சிஷ்யரும் கூட –

லோகாச்சார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய சூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதமே நம– ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளி செய்த தனியன் –

லோகாச்சார்ய க்ருபாபாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குணாவாசம் வந்தே கூர குலோத்தமம் -ஸ்ரீ திருவாய் மொழி பிள்ளை அருளி செய்த தனியன் –

நம ஸ்ரீ சைல நாத குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளி செய்த தனியன் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜஹம்சாயிதான்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌ ம்ய வரம் குரும் -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளி செய்த தனியன் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீசதாச  மமலமசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கருணா கந்தளித ஜ்ஞான மந்திரம்  கலயே-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளி செய்த தனியன் –

அகுண்ட உத்கண்ட வைகுண்ட  ப்ரியாணாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்
சான்காகிலா த்ரவிட சம்ஸ்ருத்த  ரூப வேத
சாரார்த்த சங்கரக மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ச லோக குரு நிர்மிதம் ஆர்யா போக்யம்
வந்தே சதா வசன பூஷன திவ்ய சாஸ்திரம் –புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌரவம்
தத்தகாரி  க்ருத்யம் அஸ்ய தத் குரூபச்ய சேவனம்
ஹரிதயா மஹேதுகீம் குரோரூபாய  தாஞ்சயோ
வசன பூஷனே வாதத் ஜகத் குரும் தமாஸ்ரயே

பேறு தருவிக்குமவள் தன் பெருமை
ஆறு பெறுவான் முறையவன்
கூறு குருவை பணிதல் கொள்வதிலையாகிய
குளிர்ந்த  அருள் தான்
மாறில் புகழ் நற் குருவின் வண்மையோடே
லாம் வசன பூடணமதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன்
கழல்கள்  சேரு என்  மனனே
திருமா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
திருமால் திருவடி சேர்வழி நன்மையையும்
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய்வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
ஆரணம் வல்லவர் அமரு நன்னெறியும்
நாரணன் தாள் தரு  நற் குரு நீதியும்
சோதி மா மலர் தொலஅருள் குருவின்
பாதமாமலர் பணிபவர் தன்மையும்
தீதில் வானவர் தேவன் உயிர் களை
ஏதம் இன்று எடுக்கும் படியையும்
மன்னிய இன்பமும் மா கதி யும்குரு
என்னும் நிலைபெறும் இன்பொருள் தன்னையும்
அசைவிலா வேதமதனுள் அனைத்தையும்
வசன பூஷண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை
இறையவன் எங்கோன்  ஏருலகாரியன்
தேமலர்செவடி சிந்தை செய்பவர்
மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவரே

லோகாச்சார்ய க்ருதே லோக ஹித வசன பூஷண
தத்வார்த்த தர்சினோ லோகே தந்நிஷ்டாச சூதுர்லப
ஜகதார்ச்ச ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷண
தத்வ ஜ்ஞா நஞ்ச தன்நிஷ்டாம் தேஹி நாத யதீந்த்ரமே

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: