திரு விருத்தம் -47-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவுபடுகிற தலை மகளைக் கண்ட
திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் –
இவள் ஆர்த்தவத்தையும் –
அனுசந்தித்து -என்னை விளைய கடவதோ -என்கிறாள் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ -பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் -நாங்கள் வரி வளை -8-2-

வியாக்யானம் –
திரிகின்றது வட மாருதம் –
வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –
வாடை யாவது குளிரக் கடவது இறே –
அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –
திங்கள் இத்யாதி –
இதனுடைய ச்வாபம் அந்யதாபவித்தவாறே -நாம் தான் பேசாது இருக்கிறது என் –
என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரிய தொடங்கினான் –
வெம்தீ-
நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –
நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –
முகந்து சொரிகின்றது –
அங்கு குறைவற்று கிடக்கிறது –
வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு
பாதகமாவன சில உண்டு இறே –
ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி குழல் ஓசை -குயில் -என்றாப் போலே –
இவற்றிலே ஓன்று புத்தி-அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே –அதுவும்  அப்படியே -என்கிறாள் –
அன்றிக்கே –
திரிகின்றது என்றது அவ்வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து
சொரியா நின்றது -என்கை — கண்ணன் இத்யாதி –
புறம்பே சிலர் பாதகராக நின்றார் கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து சுலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பே யாய் காட்சி கொடுக்கிற
கண்ணன் விண்ணூர் –
ராகவச்ய நிவேசனே -சுந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –
தண்ணம் துழாய் -இத்யாதி -அவையானால் கொண்டு இட்டவை இறே –
ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி-பதி சம்மாதிதா -அயோத்யா காண்டம் –18-21 – கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று-அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டு –
கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று -உடம்பு வெளுக்கிறது –

வண்ணம் இத்யாதி -ச்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு
உடம்பு அடைய பரவா நின்றது –
என்னாம் கொல் இத்யாதி –
ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –
மருது ச்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –
அதுக்கு மேலே இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: