திரு விருத்தம் -46-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே-என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –
இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ -அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி
சஹகரித்திலையோ-உன்னாலே அன்றோ நான் இது பெற்றது -என்று -கொண்டாடினார் கீழ் –
கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்-பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து -அது கைவராமையாலே கலங்கி -இவர்படுகிற வியசநத்தை  கண்டு –
திரு உள்ளம் -நான்இங்குற்றை  செய்ய வேண்டுவது என் -என்ன –
அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய்
என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விட்டார் –
அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –
பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு –
ஸ்ரீ நரசிம்கமான  இடத்தே தூது விடுவான் என் என்னில் -இரண்டு அவதாரமும்
ஆஸ்ரிதம் அர்த்தம்  என்கையாலே விடுகிறார் –
மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு-அல்லேன் -என்னாதே
ஆபிமுக்யத்தை  பண்ணி அதுக்கு உடன் பட்டது என்று நெஞ்சைக் கொண்டாடினார் -இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் -இப்போது இன்னாதாகிறது  என் -அப்போது
கொண்டாடுகிறது என் -என்னில் -ஆசை கரை புரளும்படி -அதுக்கு தானே கிருஷி யைப் பண்ணி -அவ்வாசைக்கு இரை இட்டு -இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே -அதுக்கு தானே-சஹகரியாதே -தன்னைக் கொண்டு அகல நின்றது  என் என்று -இன்னாதாகிறார் -இது சஹகரிக்கை
ஆவது என் என்னில் -பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே-ரஷதர் மேணபலேநசைவ -என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-அவனே உபாயம் என்கிறது -ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –
அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –
அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே -ஒன்றாக சொல்லுகிற
அத்தனை இறே -இத்தலையால் வரும் அவை தான் -எவை என்னில் -பேற்றுக்கு சாதனன் தான் உளனாக வேணுமே -தான் உளன் என்னா-உபாயத்தில் அநவ யியான் இறே -புருஷார்த்தத்தை அறிந்து -ருசித்து -சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –
ஈத்ருசங்கள் சில உண்டு இறே -இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்க செய்தேயும் -கரண சரீரத்தில் நிவேசியாதே -சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்க கடவது -அவனே உபாயமுமாய் -அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்க செய்தே -சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது -ஈத்ருசங்களில் இல்லாமை இறே –
ஆக -இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க –
அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்தன்று தாறும் திரிகின்றதே -46-

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் -நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –அருள் பெறுவார் அடியார் -10-6-

மட நெஞ்சம் -என்றும் -தமது -என்றும் –
நாட்டிலே இங்கனே இருப்பதொரு பிரமமுண்டு –
தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு பவ்யமாய் இருக்கும் என்றும் –
இச் சேதனன் புருஷார்த்தத்தை சாதித்து கொள்ளுகைக்கு உறுப்பாக
சர்வேஸ்வரன் இவனோடே கையடைப்பாக்கி வைக்கையாலே –
இத்தை-தம்மது -என்றும் இருப்பர்கள்-இறே –
இச் சரீரத்தை கொடுத்தவோபாதி -சரீர ஏக தேசமான நெஞ்சையும் –
புருஷார்த்தத்தை அறிந்து –
ருசி பண்ணுகைகாக-
கொடுத்து வைத்தான் –
ஆன  பின்பு -இவனுக்கு -என்னது -என்கைக்கு தட்டில்லை இறே –
பவ்யராய் இருப்பார்க்கு -எதிர்தலை நோவு படா நின்றால்-
ஒக்க நின்று -முகம் காட்டி -நீ பட்டது என் -நான் பட்டது என் -என்ன வேணும் -இறே –
சேஷபூதன் சேஷிக்கு அதிசயத்தை பண்ண வேணும் –
அவை இரண்டும் இல்லையே இற்றே இதற்க்கு –
ஒரு கருமம்-இத்யாதி –
ஒரு பிரயோஜனத்தை குறித்து -நெஞ்சை யேவுகையிலே துணிந்தவர்கள் –
அக்கார்யம் தன்னையே விட்டு பிடிக்க அமையும் -இது செய்வது என்கிறதன்று
அக் கார்யம் தன்னை விட்டு பிடிக்க அமையும் என்கிறது –
என்றான்-விட தேடுகிறது என் -என்ன –
அப்பொன் பெயரோன் -இத்யாதி –
பவ்யமுமாய் -சேஷமுமாய் இருக்கிற இது செய்து திரிகிற கார்யம் இது அன்றோ –
அப்பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விட –
கார்யம் கொள்ள ஒண்ணாத தோரிடத்திலே தான் விட்டேனோ –
நமக்கு கார்யம் செய்து உபகரித்து நிற்கிறவன் பக்கலில் அன்றோ விட்டது –
ஆஸ்ரிதரில் ஒருவருக்கு செய்தது -தமக்கு செய்ததாக இருக்கிறார் –
அப்பொன் பெயரோன் -தன் வயிற்றிலே பிறந்த பிரஜை வாயாலே
திருநாமத்தை சொல்ல -அவனை சத்ருக்கள் செய்யுமத்தை செய்து
நலிய கோலின க்ரௌர்யத்தை நினைத்து –அப்பொன் பெயரோன் -என்கிறார் –
பள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்திலே ஏதேனும் சொல்லிலும்
கோ துகலாமாய் இறே இருப்பது –
தன் சிறுவன்-ஆரேனும் பிள்ளைகள் சொல்லிலும் இனிதாய் இருக்கும் பருவத்திலே –
தன் வயிற்றில் பிறந்தவனும் -இறே
வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத –
சத்ருவை சொல்லிலும் – காலிலே விழ வேண்டும்படி வார்த்தையை ஆயிற்று சொல்லிற்று –
அப்பருவத்தில்-அவன் சொன்ன வார்த்தையாலே -ஒன்றையே குவாலாக சொல்லுகிறார் –
ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி -அசஹ்யா அபசாரம் ஆயிற்று –
நிருபாதிக பந்தம் உண்டாய் இருக்க -அவற்றையும் காற்கடை கொண்டு –
சத்ருக்கள் செய்யும் அத்தை செய்தான் –
பிள்ளையை சீறி -திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக இவனை -புத்திரன் அன்று -என்று-கை விட்டான் -இவர் அவனோடு தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லுகிறார் –
தட நெஞ்சம்-தேவதைகளுடைய வரத்தை ஊட்டியாக விட்டு -திரு உகிருக்கு இரை
போரும்படி வளர்த்த பெரிய மார்பை –
கீண்ட -நரசிம்ஹனுடைய சீற்றத்தை கண்டவாறே அவன் சரீரம் உருகிற்று –
அநாயாசேன கிழித்து பொகட்டான்–
பிரானார் -தகப்பன் பகையாக வந்து
உதவின இவன்-
தான் அகல நிற்கையாலே வந்த ஆற்றாமைக்கும் ஆளவிட்டால் பொறுத்தான் -இறே
அவன் தெளிவிக்கு உதவின அவன் கலக்கத்துக்கு உதவாமை இல்லை இறே –
அவனதும் பக்தியே ஆகிலும் –
மத்தச்சர்வ மகம் சர்வம் -என்கிற தெளிவோடேகூடி இருக்கும் இறே –
தமதடிக் கீழ் விட -அவன் திருவடிகளில் விட
போய் திட நெஞ்சமாய் -போகிறபோது -இத் தலையில் ஆற்றாமை கண்டு
கண்ணும் கண்ண நீருமாய் -இத்தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ச்வாபாவத்தை  பஜித்தது-
பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —
அவன் தான் போகிறபோதும் இவன் அகல நின்றால் தாழான் என்று இறே போக விட்டது -அவன் ச்வபாவத்தை பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரகர்  என்றதோடு சேர்த்தி என் என்னில் –
அவ்  உபகாரத்தை பற்றி சொல்லிற்று அது –
இவ் ஆற்றாமையிலே முகம் காட்டாமையை பற்றி சொல்லிற்று இது –
எம்மை நீது –
என்னை அற சந்யசித்து
இன்று இத்யாதி –
நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத் தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்க பெற்றோம்-

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: