ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -289/290/291/292/293/294/295/296/297/298/299/300/301/302/303/304/305/306/307–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா கான்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

————————————-

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –

1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –
பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –
ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து  யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –

——————————————————-

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி –
தத்வ ஹித புருஷார்தங்களில் -தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –
வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு  இலேன் –
ந தர்மநிஷ்டோச்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி -இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாக கொள்ளலாவதொரு சூக்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரச்கரிக்கை
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே -விலம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –
ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –

———————————————-

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆச்சர்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிபது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
தத்வ ஹித புருஷார்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் சவாசனமாக நிவ்ருதமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய  ஞானத்தாலே –
பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத்கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத்தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய சககாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-
அவலம்பேன திருவடிகளை பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –
அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ்விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –

—————————————————

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய  அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்
வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கை க்கு உடலான ஞான பூர்த்தி –
ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாக கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –
ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்பட பண்ணும் அவன் வடிவழகு -என்கை –

——————————————-

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன
அருளிச் செய்கிறார் –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம  பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –
செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே சூச்பஷ்டமான அருளி செய்தார் இறே –

ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு-289- என்றும் –
அவை தான் இன்னது  என்றும் –
அவ் அவ்   தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் அவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம் என்றும் –
அவ் அஞ்ஞாநாதிகளை போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள் என்றும்
அவ அஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -294

—————————————-

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
இவ் அதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ் சொன்ன தச சதுஷ்டியம் போலே –
ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டைமும் உண்டு என்கை –

——————————————

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே
எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –

—————————————-

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே
ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று  கீழ் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –

——————————————–

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

இப்படி இருந்துள்ள இவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன
அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –

ஈஸ்வர குணங்களை  முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களை சொல்லி  முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஞ என்றும் –
சகஸ்ராம்சு -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷா ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ச்ஞாத   சகஸ்ராம்சு -என்றும்
அவிஞ்ச்ஞாதாஹி பக்தாநாம் ஆகஸ் சூகமல லேஷனே சதா ஜகத் சமஸ்தஞ்ச பச்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஞானாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயா வாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானதுக்கு விஷயம்-
பிரக்ருதி வச்யனான  இவன் பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராச்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப  அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை

——————————————

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன
குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான சாஸ்திர- (ப்ரபந்ந ) நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –

————————————————

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை
அருளிச் செய்கிறார் –

அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும்
சதுர் விதமாய் இருக்கும் -என்கை –

———————————

சூரணை-301-

அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே-
அவை தன்னை உத்தேசிக்கிறார் –

———————————————–

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார் –

பர ஹிம்சை யாவது -ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –
பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை  ஸ்துதிக்கை –
பரதார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ச்வீகரிக்கை –
பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-
அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தை சொல்லுகை –
அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –
துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம்  மனசா நிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசச்ச த்ரிவிதம் கர்ம மானசம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசு நஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபச்ச வான்மயம் ச்யாச்ச துர் விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவா விதானத பர தாரா அபஹாரச்ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதி களாலே
மனு ஆதி ஸ்ம்ருதி களிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே

———————————————

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை

அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –

தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ்க்ருதா
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று
தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டச்சாஸ் தாஜா நாநாம் சர்வாத்மா -தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப்யதிகச்ச த்ருச்சயதே -என்கிறபடியே
ஸ்வ இதர சகல நியாமகனாய் -சாமாநாதிகரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-
ராம கிருஷ்ணா ஆதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபி சந் நவ்யயத்மா பூதானாம் ஈச்வரோபிசன் ப்ரக்ருதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்மவச்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –
வர்ண ஆஸ்ரம விபரீத மான  உபசாரம் ஆவது -தத் ஆராதனா தசையில் -தரை வர்ணிகார்ஹமான வைதிக மந்தரங்களாலே  சதுர்த வர்ணரானவர்கள்
ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹச்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –
அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வ்ருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தை பண்ணி
எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரை போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-
ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே நந க்ருதுதம் பம் சோரேன ஆத்ம அபஹாரினா–என்று
சகல பாப மூலமாக சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்மா வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –
பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல்  -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-
துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-32 அபசாரங்கள் – உண்டு இறே

———————————————

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தல் தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

கீழ் சொன்ன வற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –

தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாக செய்கை –
அபஹரிப்பார்க்கு  சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சகாயம் பண்ணுகை –
அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரகை-யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து
வாங்கிக் கொள்ளுகை
அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிரகை-யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும் -என்றது
இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும் -என்கை

——————————————

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

அதாவது
பரோத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் முதலான அஹங்காரம் அடியாகவும் –
அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில்
இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை —

——————————————

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் –

ல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் -அசஹமானனாய் இருக்கை-யாவது –
கீழ் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால்
காண கேட்க பொறாதபடி இருக்கை-
ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளி செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை  நச்சி
அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –
தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான சப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –
அவர்கள் திறத்தில் பண்ணும் அசூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –

————————————————

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிக்களுமாய்
உபேய விரோதிக்களுமாய்
இருக்கும்–

இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளி செய்கிறார் மேல்-

ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்யா அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்கிஹம் அதிசயித்து இருக்கை –
அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-
அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்து கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –
அவ்வளவும் அன்று இறே -ஞாநீ த்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் –
அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் -அது தன்னளவும் அன்று இறே –
நிர் நிபந்தனமாக -தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாயகனாய் –
உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம் –
ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –
அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி இப்படிப் பிரித்து சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –
உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –
இரக்கம் உபாயம்- இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –
ஆகையால் இவ் அக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தை கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத்த ட்டில்லை –

தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும்-243 -என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதிபாதகமான ஸ்ரீ மத் நாராயண -பதார்த்தங்களை சூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது-286- -என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதி பாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு-79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
115-133 வரை -பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈச்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்யா ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வச்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்த்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –
ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் ஐந்தாவது பிரகரணம் முற்றிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: