ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–275/276/277/278/279/280/281/282/283/284/285/286/287/288–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்

கீழ் -என்றது வஸ்தவ்யாதிகளை சொன்ன இந்த கணனையில் என்றபடி –
பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே -என்றது –
பகவான் இவனுக்கு இப்போது வாய் திறந்து ஒன்றை அருளிச் செய்யாமை யாலே –
தத் பிரதிபாதகமான ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் -என்கை
ஆசார்ய கைங்கர்யம் அறிவது -சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் –என்றது –
ஆச்சார்ய விஷயத்தில் சிஸ்ருஷா பிரகாரங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திர முகத்தாலும் –
தனக்கு இஷ்ட அநிஷ்டங்கள் இன்னது என்னும் இடத்தை அவன் அருளி செய்த வசனத்தாலும் -என்கை –

———————————————————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனிமேல் கைங்கர்யம் தன்னை அறிவிக்கைக்காக -கைங்கர்யம் தான் இரண்டு -என்கிறார் –

———————————————-
சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

அது ஆவது என்ன -அதாவது இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்கிறார் –

————————————————

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

இவை தான் இரண்டும் எத்தை அவலம்பித்து இருக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
கீழ் சொன்ன கைங்கர்ய பிரதிசம்பந்திகள் இருவருடையவும் இஷ்ட  அநிஷ்டங்கள்
இவ் அதிகாரி உடைய வர்ண ஆஸ்ரமங்களையும் -ஆத்ம ஸ்வரூபத்தையும் -பற்றி இருக்கும் -என்கை –
1-இஷ்ட அநிஷ்டங்கள் வர்ண ஆஸ்ரமங்களை பற்றி இருக்கையாவது –
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரமே உசிதமான தர்மங்களை பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை இஷ்டமாய் –
ஸ்வார்த்த புத்த்யாய்-அநிஷ்டமாய் இருக்கை-
பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை-யாவது -லோக சங்கரக தயாவாகவும் –
சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும் ஆந்ரு சம்சயத்தலே அனுஷ்டிக்கை –
இவ் அர்த்தத்தை -இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிற இவை சிஷ்ய புத்ரர்களுடைய
உஜ்ஜீவன அர்த்தமாக ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் அத்தனை –
இப்படி அனுஷ்டியாத போது -பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாச ஹேது வாகையாலே
ஈஸ்வரனுக்கு அநபிமத பூதனாவன் -ஆகையால் யாதொரு அளவாலே லோக
சங்கரகம் பிறக்கும் -யாதொரு அளவாலே சிஷ்யர் புத்ரருகளுக்கு உஜ்ஜீவனம் உண்டாம்
அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது ஆயிற்று –
பிரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்த தர்மமோபாதி-இந்த நிவ்ருத்த தர்மமும் பிராப்யமாக கடவது –
இவ்விடத்திலே அகரணே பிரத் யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது –
என்று தனி ஸ்லோகத்தில் இவர் தாமே அருளி செய்தார் இறே-
இனி ஸ்வார்த்ய புத்த்யா அனுஷ்டிக்கை யாவது -ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக விஹிதமாகையாலே -நமக்கு இவை அனுஷ்டியாது ஒழியில்-
க்ருத்ய அகரண ரூப பாவம் வரும் என்று நினைத்து அனுஷ்டிக்கை –
இஷ்ட அநிஷ்டங்கள் ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கை யாவது –
இச்சை ஸ்வ ரூபம் -என்கிறபடியே -விநியோக தசையில் -சேஷி உடைய இச்சா அநு குணமாக ஸ்வரூபத்தை விநியோக படுத்துகை -இஷ்டமாய் –
தட்டுமாறி விநியோகம் கொள்ளும் அளவில் தன்னுடைய சேஷத்வத்தை இட்டு இறாய்த்தல்-
பாரதந்த்ர்யத்தை இட்டு எதிர் விழி கொடாது ஒழிதல் செய்கை அநிஷ்டமாய் இருக்கை –
அங்கன் இன்றிக்கே –
2-இஷ்ட அநிஷ்டங்கள் -இத்யாதி
ஸ்வ  வர்ண ஆஸ்ரம உசிதங்களை  செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களை செய்கை அநிஷ்டம்-என்றும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமாக செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களை செய்கை அநிஷ்டம் –
என்றும் யோஜிக்க்கவுமாம் –
அங்கனும் அன்றிக்கே –
3-ஒவ்பாதிகமாயுமாய்  அநித்யமுமாய்  வர்ண ஆஸ்ரமங்களிலே ஊற்றி இருக்கை அநிஷ்டம்
நிருபாதிக நித்ய சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தில் ஊற்றி இருக்கை இஷ்டம் -என்றும்
யோஜிக்க்கவுமாம் –
இங்கன் ஊற்றத்தை பற்றி சொல்லுகை அன்றிக்கே அநிஷ்டம் வர்ண ஆஸ்ரமத்தை பற்றி இருக்கும் –
இஷ்டம் ஆத்ம ஸ்வரூபத்தை அவலம்பித்து இருக்கும் என்று இங்கனே விபஜித்து -வர்ண ஆஸ்ரமத்தை அநிஷ்ட கோடியாக சொல்லப்  பார்க்கில் –
சுருதி ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜா ஆஸ்தா
முல்லன்க்ய வர்த்த -ஆக்ஜாச்ச்செதி மமத்ரோஹீ மத்பக்தோ பின வைஷ்ணவ –என்றும் –
அபிப்லவாய தர்மாணாம் பால நாயகுலசயச
ஸந்கரஹாய ச லோகச்ய மர்யாதாஸ் ததாப நாய்ச ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவ தேவஸ்ய சார்ந்கினா
மநீஷீ வைதிகாசாரம் மனசாபி நலன்கயேத் யதாஹி வல்லபோ ராஜ்ஞ்ஞோ நதீம் ராஞ்சா ப்ரவர்த்திதாம்
லோகோபயோகி நீம் ரம்யாம் பஹூசச்ய விவர்த்திநீம் லங்கயன் சூலமா ரோஹேதா அனபேஷா பிதாம்பிரதி–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்– என்றும்
ஏவம் விலங்க கயன் மர்த்யோ மாயாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோ சனப்ரியோ ஸௌ மே மதா  ஜ்ஞாவ்யதி வர்த்த நாத் –
உபாயத்வ க்ரகம் தத்ர வர்ஜே யேன் மனசா சூதீ—ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்றும்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளி செய்த வசனங்களோடும் -பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டானங்களோடும் விரோதிக்கும் இறே-
ஆன பின்பு கீழ் சொன்ன படியே -இவ்வாக்யத்துக்கு பொருளாகக் கடவது –

—————————————————-

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே

இம் மூன்று யோஜனைக்கும் மேலில் வாக்யத்தோடு சங்கதி என் என்னில் –
பிரதம யோஜனையில்-இப்படி வர்ணாஸ்ரம அனுஷ்டானத்தில் பிரதிபத்தி விசேஷங்களிலும்-ஆத்ம ஸ்வரூபத்தினுடைய விநியோக தசையில்
அனுகூல்ய பிரதி கூல்யங் களிலுமாக இஷ்ட அநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ண வேணுமோ –
வர்ணாஸ்ரம ரூபமாயும் ஸ்வரூபமாயும் உள்ளவற்றைச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டம் என்றாலோ என்ன
அருளிச் செய்கிறார் -மேல் –
த்வதீய யோஜனையில் -இப்படி வர்ணாஸ்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையும் செய்கை அநிஷ்டம் என்று இவனுக்குச் சொல்லித்
தவிர்ப்பிக்கை தான் வேணுமோ உன்ன -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
த்ருதீய யோஜனையில் இப்படி வர்ணாஸ்ரமங்களில் ஊற்றம் அறுத்தால் அக்ருத்ய கரணங்கள் வந்து புகுராதோ என்ன –
புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

பகவத் அனுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சித்தமாக இருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி என்னும் அத்தாலே புண்ணியம் செய்கைக்கு உட்பட அஞ்சுகிற இவ்வதிகாரி
பகவத் நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சுத்தமாய் நரகாவஹம் என்று சாமான்யரும் உட்படச் செய்யாத பாபத்தை ஒருக்காலும் செய்யான் இறே

————————————————————-

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

இவன் புண்ணியத்துக்கு அஞ்சும்படியையும்
வத்சலனான  ஈஸ்வரனுக்கும் இடம் அறும்படி பாப பிரவிருத்தியில்  அந்வயம் அற்று இருக்கும் படியையும் –
தர்சிப்பிக்கிறார் மேல் –

அதாவது –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கையாலே –
புண்ணியம் பாபங்கள் இரண்டும் மோஷ விரோதி என்று இருக்கும் இவ்வதிகாரி –
நாட்டார்சுகள் ஹேது என்று  விரும்பி இருக்கும் புண்ணியத்தை -பகவத் பிராப்தி பிரதிபந்தக தயா அநிஷ்டாவஹம் ஆகையாலே –
துக்க ஹேதுவான பாபம் என்று நினைத்து -வெருவி இருக்கும் –
ஆஸ்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளும் அதிமாத்ரா வத்சலனான ஈஸ்வரன் –
இவ்வதிகாரி ஏதேனும் ஒரு பாபத்தை பண்ணினாலும் -அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்து கொண்டு இருக்கும் –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -இவ்வதிகாரி பாப பிரவ்ருத்தியில் அந்வயம் அற்று
நியதனாய் வர்திக்கையாலே -பாபத்தை புண்ணியமாக கொள்ளும் வத்சலனனான அவனுக்கு
ஆசைப்பட்டு போம் இத்தனை ஒழிய கிடையாது என்கை –

ஆக –
கீழ் கர்தவ்யமாக சொன்ன கைங்கர்யம் அறிவது இன்னத்தாலே–276-  என்றும் –
கைங்கர்யம் தான் த்விவிதம்–277- என்றும் –
அது தான் இன்னது–278-என்றும் –
தத் உபயமும் இன்னத்தை அவலம்பித்து இருக்கும் என்று சொல்லி –
அதில் பிரசங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப் பட்டது –

————————————

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

ஈத்ருச கைங்கர்யம் இவனுக்கு ஏதேனும் ஒரு வழியாலே ஆகிலும் உண்டாக வேணும் -என்று இதனுடைய அவஸ்ய கரணீயத்வத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

பக்தி மூலம் வருகை யாவது -சேஷி உடைய முக மலர்த்திக்கு உறுப்பானவையே செய்து கொண்டு நிற்க வேண்டும்படியான -தத் விஷய ப்ரேமம் அடியாக வருகை –
அல்லாத போது பீதி மூலமாய் வருகை -யாவது -அது அன்றிகே ஒழிந்தால் -அகிஞ்சித் கரச்யய சேஷத்வா நுபபத்தி -என்கிறபடியே –
சேஷத்வ விருத்தி இல்லாத போது -சேஷத்வ ஹானி பிறக்கும் என்னும் பீதி அடியாக வருகை –
இதில் பக்தி மூலம் ஆனதுவே முக்கியம் – தத் அலாபத்தில் பீதி மூலம் தாம் ஆகிலும் வேணும் என்றபடி –

———————————————

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அது தானும் இல்லா விடில் செய்வது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அதிமுக்க்யமான பீதி மூல கைங்கர்யம் தானும் இல்லாத போது –
கிஞ்சித் கார அபாவத்தாலே -சேஷத்வ ரூபமான அதிகாரத்திலும்  –
அதிகாரி சா பேஷமாய் இருந்துள்ள சேஷி உடைய கிருபா ரூபமான உபாயத்திலும் –
இவனுடைய அனுகூல விருத்தி சா பேஷமான அவனுடைய முக மலர்த்தி யாகிற உபேயத்திலும்-
அந்வயம் அற்று விடும் -என்கை –

——————————————–
சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாகக வேணும்

ஆக –
கீழ் இரண்டு வாக்யத்தாலும் -கைங்கர்ய அவஸ்ய கர்த்தவ்யமும் -கைங்கர்ய அபாவத்தில்
வரும் அநர்த்த விசேஷங்களும் காட்டப் பட்டது –
ஏவம் வித கைங்கர்யத்தில் சாதன புத்தியை தவிர்க்கிறார் மேல் –

அதாவது –
இப்படி அவஸ்ய கரணீயயக -கீழ் சொன்ன கைங்கர்யம் தன்னை பண்ணும் அளவில் –
த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில்-ஏதேனும் ஒன்றுக்கு -சாதனமாக -பிரதிபத்தி பண்ணாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக பிரதி பத்தி  பண்ண வேணும் என்கை –

———————————————

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்க
பண்ணுகை–

இத்தை விசதீகரிக்கிறார் மேல் –

அதாவது -என்றது -இத்தை சாதனம் ஆக்காதே பலம் ஆக்குகை யாவது என்றபடி —
தான் கை ஏலாதே அவனை கை ஏற்கப் பண்ணுகை–யாவது -கைங்கர்யம் பண்ணுகிற தான் –
அதுக்கு பலமாக அவன் பக்கலிலே ஒன்றை அர்த்தியாதே -ஸ்வயம் பிரயோஜனமாக
செய்யா நின்று கொண்டு -கைங்கர்யம் கொள்ளுகிற அவனை –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதிக்ருணா தி வைஸ்வயம்-என்கிறபடியே
தன் பூர்த்தி பாராதே -சா பேஷனாய் -விரும்பிக் கை கொள்ளும்படி பண்ணுகை –

——————————————-

சூரணை -285-

கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

இவ்வளவும் போராது-தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு
பிரத்யு உபகாரம் பண்ணவும் வேணும் என்கிறார் மேல் –

அதாவது –
தேஹி மே ததாமிதே -என்கிறபடியே -தான் அவனுக்கு ஒன்றை  சமர்ப்பித்து -அவன் பக்கலிலே
ஒரு பிரயோஜனம் கொள்ளாதே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்ற
பெரிய ஆழ்வார் திருமகளைப் போலே -தான் சமர்ப்பித்த த்ரவ்யத்தை அவன் அங்கீகரித்த உபகாரத்துக்காக -அப்படி இருந்துள்ளவற்றை –
தன் அபிநிவேச அநு குணமாக நிறைய கொண்டு வந்து சமர்ப்பியா நின்று கொண்டு -பின்னையும்
அடிமை செய்கையும் ஆகிற கைக் கூலி கொடுக்க வேணும் -என்கை –

—————————————–

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

ஆக இப்படி அநந்ய பிரயோஜனனாய் கிஞ்சித்கரித்தால் ஆயிற்று
ஸ்வரூபம்  உஜ்ஜ்வலம் ஆவது என்னுமத்தை -சத்ருஷ்டாந்தமாக
அருளி செய்கிறார் மேல் –

——————————————-

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

திருஷ்டாந்த பூதரான அவர்கள் கிஞ்சித்கரித்த பிரகாரம் தன்னை
அருளிச் செய்கிறார் –

1-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரை சோதிக்கைக்காக
மடி யை பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –
அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –
புக்தவத் சூத்விஜாக் ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  சுசீனி குணவந்திச-என்று
பாவனத்வ -போக்யத்வ -ப்ரசச்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –
2-சுருள் மாறாத பூ ஆவது -அக்நி ஸ்பர்சம் உண்டானால் சுருள் நாறும் படி இறே பூவின் ஸ்வாபம் இருப்பது –
அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற சுருள் நாற்றம் இல்லாதபடி -அநந்ய பிரயோஜனத்வ பரிமள யுக்தமாக இடும் புஷ்பம் –
இப்படி இருந்துள்ள புஷ்பம் இறே -பிரசாத பரமவ் நாதவ் மமஹெக முபாகதவ் தந்யோ அஹம் அரச்ச இஷ்யாமீ த்யாகமால் யோப ஜீவன -என்று
விசேஷஜ்ஞர்-பராசரர் – ச்லாக்கிக்கும் படி -அத்யாதர பூர்வகமாக ஸ்ரீ மாலா காரர் அவனுக்கு கொடுத்தது –
3-சுண்ணாம்பு தடவாத சாந்தாவது -ஆயிரம் பொன் அழிய கூட்டியும் -சுண்ணாம்பு திவலை பட கெடும் படி இறே –
சாந்தின் ஸ்வாபம் -அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற தோஷம் இன்றிக்கே -அநந்ய பிரயோஜனமான சாந்து -இப்படி இருந்துள்ள சாந்து இறே –
சூகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர்கா த்ரசத்ருசம்  தீயதாம நுலேபனம் -என்று அவன் அர்த்தித அநந்தரம்-
பூசும் சாந்தாம்படி கூனி கொடுத்தது –

ஆக இப்படி அநந்ய பிரயோஜனமாக கிஞ்சித் கரித்தால் ஆயிற்று -கைங்கர்ய ஆஸ்ரயமான
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது -என்கை
ஆக –
இவ்வளவும் வஸ்தவ்யாதி கணனையில் -சரம உக்தமான -கர்தவ்ய ரூப கைங்கர்யத்தை
சோதித்து -தாத்ருச கைங்கர்யத்தாலே -ஸ்வரூபம் உஜ்ஜ்வலமாம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

இப்படி அநந்ய பிரயோஜனனாய் கொண்டு கைங்கர்யம் செய்தாலே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்று சொன்ன இதிலே –
முக்த அவஸ்தையில் -கைங்கர்ய தசையில் ஸ்வரூப உஜ்ஜ்வல்யமும் அர்த்தாதுக்தம் என்று நினைத்து -இப்படி
கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்குமோபாதி-ஏதத் பூர்வ தசா விசேஷங்களிலும் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் என்று
அருளிச் செய்கிறார் மேல் –
முன்புள்ள தசைகளிலும் -என்றது -கைங்கர்யத்துக்கு பூர்வ தசைகளிலும் -என்ற படி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: