ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -267/268/269/270/271/272/273/274–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாச்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாச்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாச்யம் –

இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை
தர்சிப்பிக்கிறார்  மேல் –

அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான  மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவசியம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம சுபாசுபம் நா புக்தம் ஷீய தே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே
அவச்யம் தத் பலமுள்ளத்தை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே -அனுபவ விநாச்யம் -என்கிறார்-
அனுக்ரஹத்துக்கு இலக்காக சொன்ன இருவரிலும் -வைத்துக் கொண்டு – உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு –
கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி –
ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே-கர்மம் பிராயச் சித்த விநாச்யம் என்கிறார் –
பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு – ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய் -அவற்றை அடைய ஈஸ்வரன்
பொறுக்கைக்கு  உறுப்பாக -பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே-அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம்
பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே-புருஷகார விநாச்யம் -என்கிறார்-

—————————————–

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –

இப்படி புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைர பேஷ்ய ஹானி  வாராதோ -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

அதாவது
சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் –
ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் –
புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை –
கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து

——————————————–

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

ஸ்வ பிரயோஜன பரரை-பிரதி கூலர் -என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை-அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் –
தோற்றி இருக்கையாலே -தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி -தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —

————————————————————-

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அத்தை பரிஹரிக்கிறார் –

அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில் -ஸ்வ பிரயோஜனம் -என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை -ஆஸ்ரய தோஷம் ஜன்யம் -என்று ஒதுக்குகையாலே -ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
இது தன்னை விஷய  தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–

————————————–

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –

அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட -ஸ்வ பிரயோஜனம் -ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் –
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –
அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை
பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-
இங்கு -என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் -ஆகையால் தோஷம் இல்லை -என்று –
ஆகையால்-என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது -ஸ்வ பிரயோஜன பரரை
பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை -என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

—————————————————–

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே -விஷய தோஷ ஜன்யம் ஆனாலும் –
ஸ்வரூப விருத்தமானது -த்யஜயமாய் அன்றோ -என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய்-ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படி யான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால்
வருகிற -ஸ்வ பிரயோஜன பரதை -தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம் –
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும் -விட அரிதாய் இறே -இருப்பது என்கை –
விஷய தோஷத்தாலே வருமது -என்ற பாடமான போது- ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –

—————————————-

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-

விஷய தோஷத்தால் வரும் அதின் -துஸ் த்யஜ்யத்வத்தில்
பிரமாணம் காட்டுகிறார் மேல் –

மற்று இருந்தீர்கட்க்கு -என்று தொடங்கி -அத்தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும்
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-நீ இங்கனே பதறலாகாது -என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே-என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு -எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி -ஸ்ரீ யபதி  விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய்-
இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால் -அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க –
அதுக்கு கால்நடை தாராதபடி தாராதபடி இருக்கிற எனக்கு -நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக -நீங்கள் செல்லும் வார்த்தை –
கேட்க்கைக்கு பரிகாரம் இல்லாத செவிடரோடே -சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே -இருப்பது ஓன்று என்று -ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –
தவாம் ரு தச்யந்தினி-என்று தொடங்கி -வகுத்த சேஷியான தேவருடைய
தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு சூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு – மது பரிபூரணமான தாமரைப் பூ வானது  நில்லா நிற்கச் செய்தே -அதின் -சுவடு அறிந்த தான் –
கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில்
சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –
விக்ரஹ வைல்ஷண்யம் கண்டு -பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று
தோற்றுகையாலே -விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே

——————————————

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —

ஆக –
தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை
விவரித்தார் கீழ் –
சதாசார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக்  கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –

இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –
1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் -ஹிதைஷியாய்-உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும் -அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு -அவனுக்கு உகந்த விஷயமாய் –
தன் பக்கலிலே விசேஷ  கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்ச்யமும்  அன்று -சம விகல்பமும் அன்று ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே -ஆசார்ய சந்நிதியை முற்பட அருளி செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்தி த்வ்ம மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –
2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது-துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின -ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும் –
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டு பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டு தொடங்கி -இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —
3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வ்யமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக ரகஸ்யமாக அனுசந்தித்து கொண்டு
போரப்படுமது -ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே
சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் -ஸ்வா ச்சார்யவம்சோ ஞேய ஆசார்யானாமசாவ ச வித்யா பகவத்த -என்கிறபடியே
ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு  தஞ்சமாக உபதேசித்த-த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்து கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம்  பிரகாரம் அருளி செய்கிற இடத்தில் -த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம்  வக்தா -என்று இறே -பெரிய பெருமாள் அருளிச் செய்தது –
4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் உற்று இருக்கைக்கு உறுப்பாக -கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது-நாத முனிகள் முதலாக
இவ்வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
சூவ்யாஹ்ருதா நிமஹதாம் சூக்ருதநி ததச்தாதா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சிலஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —
5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹாவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹாவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை
6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாராணன் ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேமா பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும் -தந்நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –
ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் -சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை -யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து -இவற்றிலே நிஷ்டனாய் போருகை – என்றது ஆயிற்று –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: