ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -247/248/249/250/251/252/253/254/255/256–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இவ் விஷய வைலஷண்யம் யாரையும் மங்களா சாசனத்தில்
மூட்டும் என்னும் இடத்துக்கு இன்னுமொரு உதாரணம் காட்டுகிறார் –

அதாவது –
சுருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி ஸ்ரீ குகப் பெருமாளை விஷயீகரித்து
அருளின அன்று -பாங்கு அறிந்து இளைய பெருமாள் படுத்து குடுத்த பர்ண சய்யையிலே –
பிராட்டியும் பெருமாளும் பள்ளி கொண்டு அருளா நிற்க -பால்யாத் பிரப்ருதி சுச்நிக்தர்
ஆகையாலே -என் வருகிறதோ என்று அஞ்சி -முதிகில் இட்ட அம்பராதூணியும்-
கட்டின விறல்சரடும்-நாண் ஏறிட்டு நடுக் கோத்த வில்லும் தாமுமாக நடையாடும்
மதிள் போலே வளைய வருகிற இளைய பெருமாளைக் கண்டு ஸ்ரீ குகப் பெருமாள் –
ஒரு தம்பி தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கி -கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டான் –
இவனும் அவ்வோபாதி ஒரு தம்பி அன்றோ -தனி இடத்திலே என் செய்ய நினைத்து இப்படி
யாயத்தமாய் நின்றான் -என்று தெரியாது என்று அதி சங்கை பண்ணி -அப்படி ஏதேனும் ஒரு தீங்கு நினைக்கில்
இவன் தன்னை தீரக் காணக் கடவோம் என்று வில்லும் கோலுமாய்  கொண்டு -இவர் இட்ட அடியிலே அடி இட்டு நிற்க –
ஸ்ரீ குகப் பெருமாள் யேவல் தொழில் செய்து திரியும் பரிகரம் -அவன் ஜ்ஞாதி- இவன் குறும்பனான அந்நியன்
இவர்கள் இருவருமாக இவ் விஷயத்தை என் செய்ய தேடுகிறார்களோ என்று -இருவரையும் அதி சங்கை
பண்ணி -அப்படி செய்யில் இவர்களை அழிய செய்தும் -நாம் அத் தலையை நோக்க கடவோம் என்று –
தனித் தனியே கையில் வில்லுமாக  கொண்டு பெருமாளை ரஷித்தது இறே என்கை —

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு விசேஷம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ குகப் பெருமாள்
நியம்யப்ருஷ்டேது தலான்குலித்ரவான் சரச்சூ பூர்ணாமிஷூ திம்பரம் தப
மகத் தநுஸ் சஜ்ய மகோப்ய லஷ்மனோ நிசா மதிஷ்டத்  த்வரிதோ அசய கேவலம் ததஸ்
தவஹந்ஜோத்தம சாப பாண பிருத்  ஸ்திதிதோ பவம் தத்ரச்ய த்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபி ஆர்த்த கார்முகைர் மகேந்திர கல்பம் பரிபாலயம் சத்தா-என்று அந்த ராத்ரியில் விருத்தாந்தத்தை சொன்னான் இறே —

—————————————–

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஸ்ரீ குகப் பெருமாளுக்கும் பரிகரத்துக்கும் கண்ட மாதரம் ஒழிய -பெருமாள் உடன் முன்பு வாசனை  இல்லை இறே —
இப்படி இருக்கச் செய்தே இவர்களுக்கு இவ்வாகாரம் கூடின படி என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
நெடுநாள் வாசனை பண்ணுகை அன்றிக்கே -ஒருநாள் முக தர்சனம் பண்ணினவர்களையும் –
அவன் விக்ரக வைலஷண்யம் படுத்தும் படி ஆயிற்று இது -என்கை –
சதா பஸ்யந்தி -பண்ணினாரோபாதி -சக்ருத் தர்சனம் பண்ணினாரையும் –
பிரேமாந்தரராய் -அஸ்தானே பய சங்கையாலே-அனுகூலரையும் அதிசங்கை பண்ணி பரிந்து
நோக்கும் படி பண்ண வற்றாய் இறே -பகவத் விக்ரக ஸௌந்தர்யம் இருப்பது –

—————————————

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே
என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இன்னும் இவ் அர்த்தத்துக்கு உதாரணமாக -கீழ் சொன்னவர்கள் காட்டில் வ்யாவிருத்தரான
ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

இவர்கள்-என்று சக்கரவர்த்தி முதலாக -கீழ் சொன்ன அதிகாரிகள் அடைய பராமர்சிக்கிறது —
ஆனால் பிராட்டியையும் ஒக்க சொல்லலாமா என்னில் -ஆழ்வார்களில் தலைவரான
நம் ஆழ்வாரைக் காட்டிலும் பெரிய ஆழ்வாருக்கு ஏற்றம் சொல்லுகிற வோபாதி –
போக பரவசையான அவளைக் காட்டிலும் மங்களா சாசனத்திலூற்றத்தாலே
ஆழ்வார்களுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –
ஆனாலும் -நம்முடைய கோடியிலே -என்னலாமோ -என்னில் -இவ் அர்த்த நிஷ்டையில் இவர்களுடைய
ஆதிக்யத்தை தர்சிப்பிகைக்காக சொன்னது ஆகையாலே விரோதம் இல்லை –
ஆகையால் இவ் விஷய வை லக்ஷண்ய கலுஷ சித்தராய்-இதுக்கு என் வருகிறதோ என்று பரிந்து
நோக்கினவர்களாகக் கீழ் சொல்லப் பட்டவர்கள் எல்லாரும் என்ற படி –
நம்முடைய கோடியிலே என்னும் படி ஆயிற்று -என்றது -இவ் விஷயத்திலே அன்வயித்து இருக்கச் செய்தேயும் –
பிரேம பாவத்தாலே மங்களா சாசனத்திலூற்றம் அற்று இருக்கும் நம் போல்வர் மாத்ரம் என்று
சொல்லாம் படி ஆயிற்று என்றபடி –
ஆழ்வார்கள் நிலை -என்றது மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே
நிரதிசய பிரேம யுக்தரான ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டை என்ற படி —

———————————————–

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர் பெரிய ஆழ்வார்-

இவ் ஆழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால்
தங்களில் ஒப்பார்களோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடுவாசி உண்டு என்கை-

—————————————–

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –

அவர்களை பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை  ஒத்து இருக்கச் செய்தே -வைர உருக்காய்- ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் –
பாகவத விக்ரக வைலக்ஷண்யத்தை அநு சந்தித்தால் -உத்தோரத்தர அனுபவ காமராராக இருக்கும் -மற்ற ஆழ்வார்களுக்கு
பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம் -எப்போதும் ஒக்க இன்றிகே -எங்கேனும் ஒரு தசையிலே தேடித் பிடிக்க
வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வை லக்ஷண்யத்தை தர்சன அநந்தரம்-தத் அனுபவ பரராகை அன்றிகே -அஸ்தானே பய சங்கை பண்ணி -திருப் பல்லாண்டு பாடும் –
பிரேம ஸ்வாபரான இவருக்கு இந்த மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை —

————————-

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அதுக்கு ஹேது ஏன் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அனுபவபரரான அவர்களை -த்ருஷ்டி சித்த அபகாரம் பண்ணி -ஆழம்கால் படுத்தும்-அவனுடைய சௌந்தர்யம் தானே -அதுக்கு என் வருகிறதோ
என்று அஞ்சி -மேன்மேலும் காப்பிடும்படி -மங்களா சாசனபரரான இவர்க்கு தரித்து
நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

————————————-

சூரணை -253-

அவர்களுக்கு
உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

இவருக்கு பய ஹேது எங்கனே -என்னும்  அபேஷையில் அருளிச் செய்கிறார் –

அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி
இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்தியம பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பீ
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வன்சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் -அழித்து –
பராதிசயகரத்வமே  வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் எனபது -ஓன்று
அறியாதபடி -தன பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌ ந்த்ர்யம் –

அந்த ஸௌ ந்தர்ய தர்சனத்தில் -அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என் வருகிறதோ என்று வயிறு  எரிந்து காப்பிடும் வரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்சசன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கையாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக -அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌ ந்த்ர்யம் -இவருக்கு இப்படி செய்கையாலே –
அவர்களுடைய ஆழம் கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே -அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிகே –
மங்களா சாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

————————————————

சூரணை -256-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதா சித்தமாக செய்தே -இவர்க்கு
நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
1-தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிகரிகைக்காக -மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட -இந்த தோள் வலியை நினைத்து மதியாதே -அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாக கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது –
உண்டான அவமங்களங்கள் போக்கைகும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைகும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்-என்று நம்மை பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று –
லஷ்மீ சம்பந்தத்தை காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது —
இந்த பயத்தை பரிகரிக்கைகாக -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி -கல் மதிள் இட்டால் போலே இருக்கிற  இவர்களை பாரீர் என்று –
இரண்டு இடத்திலும் ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட -அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
2-அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை துணையாக கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே-
பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும் -ஐஸ் வர்யார்த்திகளையும் திருத்தி -மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூளர் ஆக்கிக் கொள்ளுவது –
3-இலங்கை பாழ் ஆளாக  படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு -பிற் காலத்திலேயே -சம காலத்தில் போல் வயிறு எரிந்து -மங்களா சாசனம் பண்ணுவது –
4-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று பகவத் பிராப்திக்கு பலமும் அந்த மங்களா சாசனமே எனபது –
5-ச்நேஹாத அஸ்த்தாந ரஷாவ்யசநி பிரபயம் சாரங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷாவ்யசநிகள் ஆகையாலே -அநிமிஷராய் இருக்கிற திவ்யாயூத ஆழ்வார்கள்
முதலானவரை பார்த்து -குண வித்தராய் -நஞ்சுண்டாரை போலே உந்தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே அழுந்து கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே -உணர்ந்து நோக்கும் கோள் என்று பலகாலும் சொல்லுவதாய் கொண்டு –
இவ் மங்களா சாசனமே விருத்தியாய் செல்லும் என்கை –

————————————————–

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்
தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர்
ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திருப் பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில் –
அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும் வ்யாவிருத்தி என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

அதாவது
பரோ உபதேசத்தில் வந்தால் -மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஞாநாத்தாலே-நல துணையான பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் –
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில் -போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் –
தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே -சௌகுமார்ய அநு சந்தானத்தாலே வயிறு மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் –
அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை -தம் வாசி அறிந்து நோக்க்குகைகும் -ஒரு ஆளும் ஆளுகிறிலர்- என்று
பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்யா யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர
மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று -இதுவே பிரயோஜனமாக வாயிற்று –
பரம காருணிகரான-பிராமாணிகரான- ஆச்சர்யர்களில் பாஷ்ய காரரும் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்களில் -இவ் ஆழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-
ஆகையால் –
இவ் ஆழ்வார் பிரதிகூலரை அனுகூலராக-அனுகூலர் ஆகும்படியாக – உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –
எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

—————————————

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்
பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –

மயர்வற மதிநலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலேயாக   அன்றோ தோற்றுகிறது-
அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப்போதைக்கு மங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சத்தை யாவது -தாங்கள் உளராகை-இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒருநாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு ஜால கரந்தரத்திலே ஆகிலும்
ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே -தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–
சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாதரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்புஅது அவர்களுக்கு
அந்தாமத்து  அன்பு -முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் —
அன்றிகே –
தர்சன -அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் -கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுவம் இல்லாத போது குலையும் -என்று இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும் –
நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில் அழுகவும் கூட சத்தை இல்லை என்று -கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன்-என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாக தோற்றுகையாலும்-
சத்திக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு இவற்றுக்கு என் வருகிறதோ என்று –
வயிறு எரிந்து மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில் தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக  செல்லுகை தானே தழை புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலேயாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: