ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -244/245/246–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

மூன்றாம் பிரகரணம்

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

இந்த திநசர்யையில் சொன்னவற்றை விவரிக்க வேண்டுமவற்றை விவரிப்பதாக
திரு உள்ளம் பற்றி -பிரதமத்தில் மங்களா சாசனத்தை
விவரித்து அருளுகிறார் –

ஹேய பிரத்ய நீகனாய் -கல்யாண ஏக தானனாய் -ஸ்வ இதர சகல ரஷகனாய் இறே
சர்வேஸ்வரன் இருப்பது -இப்படி இருக்கிறவனை தனக்கு உண்டான அமங்களங்களைப் போக்கி –
இல்லாத மங்களங்களை உண்டாக்கிக் கொள்ளக் கடவ தத் ரஷய பூதனான இவன்-
தனக்கு ரஷகனானவன் அவனுக்கு தான் மங்களங்களை யாசாஸிக்கை-ததேக ரஷ்யத்வ ரூபமான
ஸ்வரூபதுக்கு விருத்தம் அன்றோ என்கிற சங்கையை அநு வதிக்கிறார்-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் -என்று -அத்தை பரிகரிக்கிறார் –
ஜ்ஞான தசையில் -என்று தொடங்கி-ஜ்ஞான தசை யாவது -சர்வேஸ்வரனே ரஷகனாகவும் –
தான் அவனுக்கு ரஷ்ய பூதனாகவும் -பிரணவத்தில் சொல்லுகிறபடியே (ஜ்ஞான தசையில்) தெளியக் கண்டு அநு சந்தித்து இருக்கும் தசை -அந்த தசையில் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் -இத்யாதிப் படியே
தன்னுடைய அநிஷ்ட நிவ்ருத்யாதிகளுக்கு அவனே கடவன் என்று இருக்கையாலே –
ரஷ்ய ரஷக பாவம் தனக்கடைத்த ஆஸ்ரயத்திலே கிடக்கும் –
பிரேம தசை யாவது -சர்வேஸ்வரனுடைய சௌந்தர்ய சௌகுமார்யங்களை அநு  சந்தித்து இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ என்று –
அஸ்தானே பய சங்கை பண்ணி -அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்க ஷமர் அன்றிக்கே நெஞ்சு மறுகிறபடியான தசை –
அந்த தசையிலே ஈஸ்வரனை ரஷிக்க வழி தேடி தடுமாறுகையாலே- –
ஈஸ்வரன் பக்கலிலே ரஷ்ய பாவமும் -சேதனன் பக்கலிலே ரஷக பாவமும் -தனக்கடைத்த ஆஸ்ரயத்தில் அன்றிக்கே மாறாடிக் கிடக்கும் என்றபடி-

————————————————-

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

உக்தார்த்தத்தை விசதீகரிக்கிறார் –

அதாவது –
பிரதம அஷரத்தில் சொல்லுகிறபடியே -சர்வஜ்ஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -சர்வ ரஷகனான -அவனுடைய ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் –
அவனை -தனக்கு அநிஷ்ட நிவாரகனாய் கொண்டு -அஞ்ஞனாய் -அசக்தனாய்-பிராப்தனான தன்னை ரஷித்துக் கொள்ளும் –
பேசப் பிசகும் படியான அவன் ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் –
அவனுடைய சர்வ சக்தித்வாதிகளை மறந்து -குழைச் சரக்காக நினைத்து -தன்னை ரஷகனாகக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அவனை ரஷிக்கும் என்கை-
இவ்விடத்தில் ஸௌந்தர்யம் சொல்லிற்றே ஆகிலும் -அதுவும் மங்களாசாசன ஹேதுவாகையாலும்-மேலே சொல்லுகையாலும் –
ஸௌகுமார்யம் இதுக்கும் உப லஷணம்–

————————————————–

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

இப்படி ஸௌ குமார்யாதிகளை கண்டு கலங்கி -ரஷகனான அவனுடைய சர்வ சக்தி வைபவத்தை மறந்து -தான் அவனை ரஷிக்கும்  என்கிற
இவ் அர்த்தம் -எங்கே காணலாம் என்கிற அபேஷையிலே-இது சிஷ்டாசார சித்தம் என்னுமிடம் காட்டுகிறார் மேல் –

சக்கரவர்த்தி -பெருமாள் பிராட்டி யை திரு மணம் புரிந்து – மீண்டு எழுந்து அருளா நிற்க –
பரசுராமன் வந்து தோன்றின  அளவிலே -தாடகாதாடகேய நிரசனங்களாலே -இவருடைய சக்தி வைபவத்தை வியக்தமாக அறிந்து இருக்கச் செய்தேயும் –
இவருடைய பால்யத்தையும் ஸௌகுமாரத்தையுமே பார்த்து -என்னாகப் புகுகிறதோ என்று பீதனாய் -தான் முன்னோடியாகச் சென்று –
ஷத்ர ரோஷா த்ப்ரசாந்தத்வம் ப்ராஹ்மணஸ்ய மகாயஸா பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு –
பின்னையும் அவன் பெருமாள் மேலே அடர்ந்து செல்கிறபடியைக் கண்டு -நிஷ் பிராணனாய் நின்று –
கதோ ராம இதி ச்ருத்வா ஹ்ருஷ்ட பிரமுதி தோன்ரூப புனர் ஜாதம் ததா மேன சூதா நாத்மான மேவச -என்கிறபடியே
அவன் தோற்று மீண்டு போனான் என்று கேட்ட பின்பு -தானும் பிள்ளைகளும் – மறு பிறவி பிறந்தாராக  நினைத்து இருந்தான் இறே–

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தலை நீர்ப்பாட்டிலே -இவருடைய வைபவம் எல்லாம் அறிந்து இருக்குமவளாய் இருக்கச் செய்தேயும் –
திரு அபிஷேகம் பண்ணுகைகாக- அலங்க்ருத திவ்யகாத்ரராய் கொண்டு -சக்கரவர்த்தி திருமாளிகைக்கு எழுந்து அருளுகிற போது-
இவர் அழகிலே தோற்று -இதுக்கு என் வருகிறதோ என்று பிரேமத்தால் கலங்கி –
பதி  சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான் யபிதத்த்னுஷீ -என்று
திருவாசல் அளவும் தான் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு பின் சென்று –
பூர்வாம் திசம் வஜ்ரத ரோ தஷிணாம் பாது தோயம் வருண பச்சிமா மாசாம் தனச்தூத்தராம் திசம் -என்று
திக்பாலர்களை இவர்க்கு ரஷகராக அபேஷித்தாள் இறே –

ஸ்ரீ ஜனகராஜன் -என்றும் -திரு மகள் -என்றும் பிரித்து சொல்லவுமாம்-
அப்போதைக்கு -ஸ்ரீ ஜனக ராஜன் -மகேச்வர தனுர் பங்கத்தாலே-பெருமாளுடைய சக்தி வைபவத்தை கண்டு இருக்க செய்தேயும் –
இயம் சீதா மம சூத சக தர்ம சரீதவ பிரதீச்ச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ருஹ்ணீ  ஷவ பாணி நா -என்று
ஆபி ஜாதியாதிகளால் வீறு உடையவளான இவளை கை கொண்டு அருளும் என்று காட்டிக் கொடுக்கும் அளவில் –
இவருடைய அழகையும் ஸௌ குமார்யத்தையும் கண்டு கலங்கி இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வாராது ஒழிய வேணும் என்று -பத்ரந்தே –
என்று மங்களா சாசனம் பண்ணினான் என்கை–

விஸ்வாமித்திரன் -தன்னுடைய அத்த்வர த்ராணார்த்தமாக பெருமாளை அழைத்து கொண்டு போகிற போது –
நடுவே தாடகை பெரிய ஆரவாரத்தோடு ஆக்கிரமித்து கொண்டு வருகிற படியை கண்டு –
அஹம் வேத்மி மகாத்மாநாம்  ராமம் சத்ய பராக்கிரமம் -என்கிறபடியே
பெருமாளுடைய சக்தி வைபவத்தை அறிந்து இருக்கச் செய்தேயும் -ஸௌ குமார்யத்தை பார்த்து கலங்கி –
விச்வாமித்ரஸ்து ப்ரஹ்ம ரிஷிர் ஹூன்காரேண அபி பர்த்ச்யதாம் ஸ்வஸ்தி ராகவ யோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத—என்கிறபடியே
தான் முன்னே நின்று அவளை ஹூங்கரித்து பெருமாளுக்கும் திரு தம்பியாருக்கும் ஒரு தீங்கு வாராமைக்கு ஆக மங்களா சாசனம் செய்தான் இறே –

ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள்-
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்ம சாரின மங்களாநி பர யுஜ்ஞானா பிரத்யக்ருக்ணன் த்ருட வரதா -என்று
தங்கள் ஆபத் நிவ்ருதியையும் -அபிமத சித்தியையும் -பண்ணித் தருவார் இவரே என்று
சாதனா அனுஷ்டானம் பண்ணுகிற தாங்கள் -இவர் சந்நிகிதர் ஆனவாறே -அவற்றை மறந்து –
இவர் வடிவு அழகிலே துவக்குண்டு மங்களா சாசனம் பண்ணினார் இறே –

திருவடி -பிரதம  தர்சநத்திலே-
ஆயதாச்ச சூவ்ருத்தாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவி பூஷிதா -என்று கணையங்கள் போலே
இருக்கிற திரு தோள்களிலே மிடுக்கைக் கண்டு -நமக்கு இவர் ரஷகர் ஆகக் குறை இல்லை என்று புத்தி பண்ணி நிற்க செய்தேயும் –
அவற்றின் அழகைக் கண்டு ஈடுபட்டு -பிறர் கண் எச்சில் படி என் செய்வது என்று அதி சங்கை பண்ணி -திரு ஆபரணங்களாலே இதை மறைத்திட்டு வையாதே
இப்படி வெளி இடக் காரணம் என் என்று வயிறு பிடித்து -பின்பு பெருமாளுடைய சக்தி விசேஷத்தை பஹூ முகமாகக் காணா  நிற்கச் செய்தேயும் –
ஸௌ குமாரய அநு சந்தானத்தாலே இவர்க்கு என் வருகிறதோ என்று -துணுக்கு துணுக்கு சர்வ தசையிலும் கூட நின்று நோக்கிக் கொண்டு திரிந்தான் இறே –

மகா ராஜர் -வாலி வதாதிகளாலே பெருமாளுடைய சக்தி கௌரவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் –
சௌ குமாரத்தையே பார்த்து கலங்கி -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நாலு பேரும் தானும் வந்து தோற்றின போது –
ஏஷ சர்வாயுதோபேத ச்சதுர்பிஸ் சஹா ராஷசை ராஷசோ ப்ப்யேதிபச்யத்த்வம அஸ்மான்  ஹந்தும் ந சம்சய –
என்று நமக்கு எல்லாம் ஓர் உயிரான  பெருமாளை நலிகிற வழியாலே -நம்மை எல்லாம் முடிப்பதாக வருகிறான் இவன் என்று அறுதி இட்டு முதலிகளுக்குக் காட்டி –
ராகவம்  சரணம் கத – நிவேதயதமாம்  ஷிப்ரம் -என்கிற உக்திகளைக் கேட்டு வைத்தும் –
வத்த்ய தாமே ஷதீவ்ரென தண்டே ந சசி வைஸ் சக ராவணச்ய ந்ருசம்சசஸ் யப்ப்ராதா ஹ்யேஷா விபீஷணா -என்று
ராவண சம்பந்த்தையே பார்த்து -இவனை சித்ர வதம் பண்ண வேணும் எனபது
ராவணே ந ப்ரணி ஹிதம் தமவேஹி நிசாசரம் தச்யாஹம் நிஹ்ரகம் மந்யே ஷமம் ஷமவ தாம்வர -என்று ராவணன் வரவிட வந்தவன் என்றே
அவனை திரு உள்ளம் பற்ற வேணும் -அவனை தண்டிகையே பிராப்தம் என்று புத்தி பண்ணா நின்றேன்
என்பதாய்-இப்புடைகளிலே பலவற்றையும் சொல்லி -இவனை சர்வதாக கொள்ள ஒண்ணாது என்று ஒரு நிலை நின்று –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே தம்முடைய பலத்தையும் காட்டி யும்
கபோதோபாக்யானம் கண்டூபாக்யானம் இவை அருளிச் செய்தும் -தெளிவித்து -பயத்தைக் கெடுத்து –
ஆநயை  நம் ஹரிஸ்ரேஷ்ட -என்ன எண்ணும் படி -பெருமாளை குழை சரக்காக நினைத்து காத்துக் கொண்டும் போந்தான் இறே –

மகாராஜர் -என்று ஸ்ரீ ஜடாயு மகாரஜரையும் சொல்வார்கள் -அதாவது
ஸ்ரீ ஜடாயு மகாராஜர் பிராட்டிக்காக ராவணனோடு பொருது குத்துயிராக கிடக்கிற தம்மை பெருமாள் வந்து கண்ட அளவிலே –
ஜனஸ்தானத்தில் இருந்த பதினாலாயிரம் ராஷசர்களையும் தனி வீரம் செய்து நின்று கொன்ற தோள் வலியை அறிந்து இருக்க செய்தேயும் –
யாமோஷ திமிவாயுஷ் மன் நன்வேஷ சிமகாவனே சாதேவீ மம சபிராணா ராவண நோ பயம் ஹ்ருதம் -என்று
அருமருந்து தேடுவார் அடவிதொரும் தடுமாருமாப் போலே -எவள் ஒருத்தியை இந்த பரந்த காட்டிலே தேடிக் கொண்டு திரிகிறீர் -உமக்கு –
நித்ய பிராண சமையானவளும் என்னுடைய பிரானங்களும் -இரண்டும் -ராவணன் ஆகிற பையலாலே அபயஹ்ருதயமாயிற்று காணும்
என்று சொல்லா நிற்க செய்தே -இவருடைய விரக கிலேசத்தால் வந்த தளர்த்தியையும் – ஸௌ குமாரத்தையும் -ராஷசரோட்டை வான் பகையையும் நினைத்து –
என்னாக தேடுகிறதோ என்று அஞ்சி -ஆயுஷ்மன்-என்று ஆயுஸ்ஸை பிரார்த்தித்தார் இறே –

ஸ்ரீ நந்தகோபர் -பூதன நிரசனத்தாலே கிருஷ்ணனுடைய திவ்ய சக்தி யோகத்தை கண்டு இருக்கச் செய்தேயும் –
சைசவ பிரயுக்தமான ஸௌ குமாரத்தையே பார்த்து கலங்கி வயிறு எரிந்து –
ரஷது த்வாம ஷோனாம் பூதானாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி சமுத்பூதபங்கஜா தவவஜ்ஜகத் -என்று சர்வ ஜகத் காரண பூதனாய் –
ஸகல விரோதி நிரசன சீல னான   சர்வேஸ்வரன் உம்மை ரஷிப்பான் ஆக என்று ரஷை இட்டார் இறே –

ஸ்ரீ விதுரர் -கிருஷ்ணனுடைய சர்வஞ்ஞத்வ  சர்வ சக்தித்வாதிகளை அறிந்து இருக்கச் செய்தேயும் –
துர்யோதன கோஷ்டியில் எழுந்து அருளின போது -பொய்யாசனம் இட்டபடியை கண்டு அஞ்சி –
ப்ரேமாந்ததையாலே-சம்ச்புரு சன்னாசனம் ஸௌ ரேர் விதுரச்ச மகா மதி -என்று
தம்முடைய திரு மாளிகையிலே -தாம் இட்ட ஆசனத்தையும் அதி சங்கை பண்ணி -தன் கையாலே அமுக்கி பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -அத் தலையில் -ஜ்ஞான சக்தி யாதிகளை எல்லாம் அறிந்து –
பெருமாளே நமக்கு ரஷகர் என்று அறிந்து நிற்க செய்தேயும் -பிரேம பரவசர் ஆகையாலே –
பெருமாள் உலாவி வரும் போது -எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் -நம் பிராணனை விடும் இத்தனை என்று
சொட்டையை உருவிப் பிடித்து கொண்டு சேவிப்பார் என்று பிரசித்தம் இறே

துடக்கமானவர்கள் -என்ற இத்தால் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருன்யச்ச சாயம்ப்ரதாச்ச்மாஹிதா சர்வாந்தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்வின-என்ற திரு அயோத்யா வாசி ஜனங்கள் –
யன் மங்கலம் சுபர்ணச்ய வினதாகல்பாய த்புரா அம்ருதம் பிரார்த்தயா நஸய தத்தேபவது மங்கலம் -என்று ஸ்ரீ கௌ சல்யார்-
சாதோ சசிதேவ தேவேச சங்கு சக்கர கதாதரா திவ்ய ரூபம் இதம் தேவ பிரசாதே நோப சம்கர-என்ற ஸ்ரீ வசுதேவரும் –
உபசம்கர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாதுமாவதாரந்தே கம்சோசயம் திதி ஜன்மஜ -என்று தேவகி பிராட்டி
முதலானோரை எல்லாம் நினைக்கிறது –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: