ஸ்ரீ வசன பூஷணம் —சூர்ணிகை—227/228/229/230/231/232/233/234/235/236–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா சவிப்றேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் சயதிஸ் சச பண்டித -என்று சொன்ன
விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் –
அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா
அருளிச் செய்கிறார் –

அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக –
வசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷயாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் அந்த சரீரம் தன்னோடே
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-

————————————————————

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –

இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார்  மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே
சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்
பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று
கீழ் சொன்ன அர்த்தத்தை ச்வீகரிக்கைகாக ராவண அனுஜனை குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண
ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் -குபிதனாய் -த்வாந்து திக் குல பாம்ச்னம் -என்று
இக்குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள் -இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று
ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும் -என்கையாலே -இவனை
ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ்வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே
பாகவத அனுகூல்யம் உண்டாகவே ப்ராக்ருதர் -இவன் நமக்கு உடல் அல்லன் -என்று கை விடுவார்கள் என்னும் இடமும் –
பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும்   என்னும் இடமும் சொல்லப் பட்டது-

——————————————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு –
ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை –
அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத்தம்பியாரும் கூட இருக்க செய்தே -தாமே சாதாரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில்
புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது

—————————————————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

இவ்வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேச்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்தி கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தை பார்ப்பது –
ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுல படா நிற்கச் செய்தே –
தர்மா ராஜஸ்து தத்ரை நம் சஞ்சிஸ் கார யிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ
ப்ரவீத்-போபோ ராஜன் நாதக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ்
சனாதய -லோக வை லக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோ  சவ் ந சோச பரதர்ஷப —
என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான
இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ
ப்ரஹ்மேத சம்ச்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

————————————————-

ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

அநந்தரம்-ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ர வணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சதுர வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி சம்ரூதியோடே ஜாதன்
ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமன ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு சுஸ்ருஷா
விசேஷத்தாலும்-சகல தர்ம சூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்மவ்யாதன் வாசலிலே சென்று –
மாதா பித்ரு சுச்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான
தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில்
சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யா யீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌ சிகொநாம  பாரத ஸாங்கோ பநிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம சவ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச்சாரயன் ஸ்தித
உபரிஷ்டாச்ச வ்ருஷச்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய்
இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு
நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன மார்பிலே பட்டவாறே
க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராகத்வேஷ பலாத்க்ருதராய் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பலகாலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று –
பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்-
நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர சுத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக
உத்யோகியா நிற்க செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை சிஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் –
என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தை பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –
-நான் பார்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் சிச்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை –
என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –
என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருக தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச்
சொல்லிக் காட்டி -இவ் அவபராதத்தை பொறுக்க வேணும் -பார்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் சுஸ்ருஷையிலே பரவசையாய்
நின்றேன் இத்தனை -என்னுடைய பதி சுஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி –
தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் வித்து-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபிச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் சுஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரமதர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -சுத்தராய் இருக்க செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு சுஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்க கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகாமதே வ்யாத பரப்ரவீஹி யதாததம்-என்று –
சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியாணவனே –
இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற
பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும்
உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயன்கள் தீர பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்மபுத்ரனுக்கு மார்கண்டேயர் அனுஹரித்ததாக ஆரண்ய பர்வத்தத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி –
பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே
இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –
இத்தால் ஜன்மாத்யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

அநந்தரம்-யத்யதாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை
அருளி செய்கிறார் –

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பச்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தை பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை
நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ்யஹம் நவர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித
மாமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன்
ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது சூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவசரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே சுசீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம்
ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

———————————————

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே
குரு சுச்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆராதன அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண –
அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்சம் உள்ளவை ஆத்மா குணைக தர்சிகளான விசேஷஞர்க்கு
அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையராய்
அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார்
அபிமானித்து அருளின இத்தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று
அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் –
என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள -பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில்
காட்டிக் கொடாதே தாம பள்ளி படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள
வேண்டிற்றோ -என்ன -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதி யோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க
வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

——————————————————–

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

ப்ராதுர்பாவைஸ் சூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே சூர நர சஜாதீயன் ஆகா நிற்க்கும்-
ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் –
இதில் கர்ஹை இல்லை -ச்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

——————————————

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாசூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று
வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே
அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும்
பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு –
பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு
இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமண கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான
பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: