திரு விருத்தம் -45-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –ஊனில் வாழ் உயிரே -2-3-
வியாக்யானம் –
பெரும் கேழலார் –ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே -ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –
மாசுடம்பில் நீர் வாரா -ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–
பன்றியாம் தேசு -ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜசுக்கு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது  இருக்கை –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன்
என்றால் அது தேசமோ -தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு
தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –பெரும் கேழலார்-சிலம்பினிடை இத்யாதி –தம் பெரும் கண் மலர் -பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –
கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை
மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –
தம் பெரும் கண் மலர் -இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து
பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்-ஸ்ரீ பூமி பிராட்டியை குளிர நோக்கி
கொண்டு இருக்கிற இருப்பு –
நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –
ஒருங்கே -ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி
பிறழவைத்தார் -மிக வைத்தார் -தம்மால் தரிக்க போகிறது இல்லை
இவ்வகாலம் -சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும்
முறியுமாய் நிற்குமது போலே –

ஒருவர் நம் மேல் வரும் கேழ்பவர் உளரே -ஆரேனும் ஒருவர் நம்மை போலே
வரும் நன்மை உடையார் உண்டோ –
சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே  இல்லை –
முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே  அவர்களுக்கு இல்லை –
பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை –
நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற
வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை –
இவரை போலே தாழ நின்று -இப்ப்பேறு பெற்றார் இல்லை -என்றபடி –
தொல்லை இத்யாதி -பழையதாய் -ஸ்ம்ருத்தமாய்–பொல்லாதாய்-
போக்கற வளைப்பதான ஜன்மம்-என்னோடு சம்பந்தம் உடையார் பக்கல்
கிட்டப் பெறுமோ -மதன் வயாநாம்-
சொல்லு வாழி மட நெஞ்சமே -கண்டதில் எல்லாம்  நாக்கு நீட்டி திரிந்த
நீ சொல்லாய்-
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலர் உளவோ -திரு விருத்தம் -55 –
என்னுமா போலே –மட நெஞ்சமே -எனக்கு பவ்யமாக நீ வாழ்வாயாக –


ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: