Archive for April, 2012

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை- -397/398/399/400/401/402/403/404/405/406–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 30, 2012

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இனி இவ் அர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் அந்யோந்ய விருத்தம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரமும் –
இவ் அர்த்த ஸ்தாபகமாக மற்றும் சொல்ல  வேண்டும் பிரமாணங்களும் தர்க்கங்களும் இவ் இடத்திலே
தாம் அருளிச் செய்யாமைக்கு ஹேது இன்னது என்கிறார் –

அதாவது –
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆகிற இவ் அர்த்த விஷயமாக -இவ் விஷயீ காரத்துக்கு இலக்காய்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற -ஆழ்வார்களுடைய-பகவத் அங்கீகார பிரகாசங்களான-பாசுரங்களில் –
வெறிதே அருள் செய்வர் –
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -என்றும் –
திரு மால்  இரும் சோலை மலை என்றேன் என்ன –
மாதவன் என்றதே கொண்டு -என்றும் –
நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்றும் –
நோற்றேன் பல் பிறவி -என்றும் –
யான் என் தவத்தால் காண்மின் கொல் இன்று -என்றும் –
யானே தவம் செய்தேன் -என்றும் -இத்யாதிகளாலே
தவத் அங்கீகார ஹேதுக்கள் ஒன்றும் தங்கள் பக்கல் இல்லை என்பதும் -உண்டானாப் போலே சொல்லுவது ஆகையாலே –
கருத்து அறியாதவர்களுக்கு பரஸ்பர விருத்தம் போலே பிரதி பாசிக்கும் -என்கை –
அவற்றில் சொல்லும் பரிகாரங்களான-
மாதவன் -மலை -என்கிறவை வியாவருத்தி உக்தி மாத்ரம் ஆகையால் அவற்றை
ஆரோபித்து வந்து மேல் விழுகிற பகவத் கிருபையே அங்கீகார ஹேது -அவை ஹேது அன்று என்ற இடம் சித்தம் –
நோற்றேன் பல் பிறவி -என்றது இவனுக்கு பல ஜன்மங்கள் உண்டாகும் படியாக
ஆயிற்று நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிற்று என்று -ஸ்வ நிகர்ஷம் சொன்ன இத்தனை –
அநேக ஜன்மமும் அவனைப் பெருகைக்கு சாதனா அனுஷ்டானம் பண்ணினேன் என்ற படி அன்று –
யானே தவம் செய்தேன் -என்றது -இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொல்லப் பெற்ற
ப்ரீதி அதிசயத்தாலே -என்னைப் போலே பாக்கியம் பண்ணினார் இல்லை என்று
இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம் என்று இப்புடைகளிலே –
நிர்ஹேதுக வசன விரோதம் -வராதபடி ச ஹேதுகம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரங்கள் –
மற்றும் உண்டான வக்தவ்யங்கள் ஆவன –

மற்றும் இந் நிர்ஹேதுக ஸ்தாபன அர்த்தமாக சொல்ல வேண்டும் அவையான –
ஏவம் சம் ஸ்ருதி சக்ரச்தே பப்ராம்யமானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே –
நிர்ஹேதுக கடாஷேன மதீயேன மகாமதே
ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்னுவந்தி பராம்கதிம்
நாசவ் புருஷகாரேண நசாப் யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -இத்யாதி பிரமாணங்களும்
ஏதத் அனுஹ்ரஹ தர்க்கங்களும் விஸ்தார பயத்தால் சொல்லுகிறோம் அல்லோம் -என்றது -இவை
எல்லாம் சொல்லப் பார்க்கும் அளவில் க்ரந்த பரப்பு வரும் என்று அஞ்சி சொல்லுகிறோம் இல்லை -என்றபடி –

———————————————–

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆக
கீழ் -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்ன பிரதிக்ஜைக்கு உபபாதமாக -த்ரிபாத் விபூதியிலே -என்று துடங்கி -இவ்வளவும் –
இவ் ஆத்மா உஜ்ஜீவன அர்த்தமாக -விமுக தசையே பிடித்து கிருஷி பண்ணிப் போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அது தன்னை -நிகமிக்கிறார் –

அதாவது –
ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால் -இப்படி இச் சேதனன் தன் பக்கல் விமுகனான
அவஸ்தையிலும் உட்பட இவன் உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணிப் போந்த குணாதிகனான அவனை அனுசந்தித்தால் –
ஏவம் பூதனான அவன் இவ் அவஸ்த்த ஆபன்னராக்கின நம்மை கர்ம அநு குணமாக சம்சரிக்க விடான் என்று –
தத் குண விச்வாசத்தாலே சர்வ காலமும் நிர்பயனனாயே இருக்கும் இத்தனை -பய பிரசங்கம் இல்லை -என்றபடி –

—————————————-

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின -ஈஸ்வரனை அனுசந்தித்தால் -என்று தாம் கீழ்
அருளிச் செய்த அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக – ஞானாதிகருடைய அனுசந்தான  விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

எதிர் சூழல் புக்கு -என்றது -எனக்கு தப்ப ஒண்ணாதபடி பார்த்த இடம் எங்கும் தாமே யாம்படி யான வ்யாப்தியிலே உள் புக்கு என்ற படி –
எதிர் சூழல் -என்கிறது -அவதார பரமாக மற்று உள்ளாராலே வ்யாக்யாதம் ஆயிற்று ஆகிலும் –இப்போது இவர் இவ் இடத்தில் வ்யாப்தி பரமாக
அருளிச் செய்கிறார் -அநேக யோஜனைகள் உண்டாய் இறே இருப்பது –

——————————————–

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைவாரைப் போலே –
வ்யாப்தியும் –

அதுக்கு திருஷ்டாந்தம்  அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் -அவனை தப்பாமல் பிடிக்க வேணும் என்ற அபிநிவேசத்தால் அவ்வூரைச் சேர வளையுமா போலே யாயிற்று –
ஒரு ஆத்மாவை அகப்படுத்தி  கொள்ளுகைக்காக -சகல சேதன அசேதனங்களிலும் வியாபித்து நிற்கும் படி –
ஆகையால் -வ்யாப்தியும் ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது என்கிறார் –
வியாப்தியும் -என்றது -சர்வ சத்தா ஹேதுவான அதுவும் உட்பட -என்றபடி –

————————————

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

சிருஷ்டி அவதாராதிகளை ஸ்வ அர்த்தமாக அனுசந்திக்கையை சித்தவத்கரித்து
இதுக்கு திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

முந்நீர் ஞாலத்தில் முதல் பாட்டிலே சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
இரண்டாம் பாட்டிலும் மூன்றம் பாட்டிலும் அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
இவர் தாமே அநு சந்தித்து அருளினார் -இறே
அவதாராதிகள் -என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தாலே -குண சேஷ்டாதிகளைச் – சொல்லுகிறது —

———————————-

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும்
அனுபவித்தே அற வேணும் –

இப்படி இவன் விமுகனான தசையிலும் -சிருஷ்டி அவதாரதிகளாலே இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகிறது –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே இறே –
தாத்ருசா க்ருபா பலம் இவனுக்கு அவசியம் அனுபாவ்யம் என்னும் இடத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்யா நின்று கொண்டு –
கீழ்-நிர்பரனாய் இருக்கும் இத்தனை – என்றவற்றை ஸ்த்ரீகரிக்கிறார் மேல் –

அதாவது –
தான் செய்த புண்ய பாப ரூப கர்ம பலம் -அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி –
அனுபவித்தே அற வேண்டுமோபாதி-நித்ய சம்சார ஹேதுவான கர்மத்தை தள்ளி –
நித்ய ஸூ ரிகளோடு சமான போகபாகி ஆக்குகைக்கு ஹேதுவான அவனுடைய கிருபா பலம் -இவனுக்கு இச்சை இல்லை ஆகிலும்
அவசியம் அனுபவித்தே விட வேணும் -என்கை – –

——————————————–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

ஏவம் பூத கிருபை அநாதி யாக இருக்கச் செய்தே கர்மா கர்த்தாவான சேதனனுடையவும்
தத் பல தாதாவான ஈச்வரனுடையவும் ஸ்வாதந்த்ர்யங்களாலே  தகையைப்பட்டு அன்றோ கிடந்து போந்தது —
இன்னும் அப்படி ஆனாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
கிருபா குணம் -நிரந்குச ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் தானிட்ட  கட்டளையிலே வந்தவாறே -அங்கீகரிக்கக் கடவோம் என்று இச் சேதனனை
கர்ம அனுகுணமாக நிர்வகிக்கும் அளவில்- இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும்- தகையப்பட்டு நிற்கும்
அது ஒழிய -அக்கட்டளையிலே வாராமையாலே -துர்க்கதியே பற்றாசாக -இவனை அவன் தானே மேல் விழுந்து அங்கீகரிகைக்கு உடலாம்படி
பெருகும் அளவில் -ஸ்வ ஆஸ்ரயமான ஈஸ்வரனுடைய -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜயா யச்தா முல்லன்கைய வர்த்ததே என்கிறபடியே
ஈஸ்வர ஆக்ஜ்ஜையை அதிலங்கித்து நடக்கைக்கு அடியான- ஸ்வாதந்த்ர்யத்தாலும் நிரோதிக்க ஒண்ணாதபடி –
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே -உபய ஸ்வாதந்த்ர்யமான இரண்டு தலையும்  உடைந்து அழியும்படி –
ஒரு மட்டில் நில்லாமை மேல் மேலும் பெருகா நிற்கும் -என்கை-

—————————————–

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

பிரகரண ஆதியில் -பய அபய ஹேதுக்களாக சொன்ன -ஸ்வ தோஷ- பகவத் குணங்களில் வைத்து கொண்டு –
கர்ம காருண்யங்கள் பிரதானங்கள் ஆகையால் -அவற்றை உபபாதித்து கொண்டு வந்தார் கீழ் –
அது தன்னை நிகமித்து அருளுகிறார் மேல் –

அதாவது –
ஈச்வரனே உபாயம் என்று இருக்கிற இவ் அதிகாரிக்கு இன்னமும் -சம்சாரம் அனுவர்த்திக்கில் செய்வது என் என்கிற பயத்துக்கு ஹேது –
அந்தி காலம் சம்சரிக்கைக்கு காரணமாய் போந்த -ஸ்வ கர்ம ஸ்மரணம் –
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெருமே –திரு விருத்தம் -45-என்கிறபடியே -சம்சாரம் நம் அருகே வர மாட்டாது –
சரீர அவசாநத்தில் பகவத் ப்ராப்திக்கு கண் அழிவு இல்லை என்று நிர் பயனாய் இருக்கைக்கு ஹேது -கர்மத்தை பாராமல் அங்கீகரித்து –
சம்சாரத்தை அடி அறுத்து- தன் திருவடிகளில் சேர்த்து கொள்ளுகைக்கு உறுப்பான -அவனுடைய நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம் என்கை –
ஸ்வ தோஷ அனுசந்தானம் -பகவத் குண அனுசந்தானம் -என்று துடங்கினத்தை
நிகமிக்கும் இடம் ஆகையாலே -கர்மம்-காருண்யம் -என்கிற இடத்தில் ஸ்மரண பர்யந்தம்  விவஷிதம் –

———————————————–

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இப் பயம் அபயங்கள் இரண்டும் இவனுக்கு எவ்வளவாக நடக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் க்ருபா விஷயமாயும் -பிரகிருதி யோடே இருக்கையாலே அநாதி காலம் சம்சரண ஹேதுவாய் போந்த ஸ்வ கர்மத்தை அனுசந்திப்பது –
அத்தைப் பாராதே அங்கீகரித்த பகவத் காருண்யத்தை அனுசந்திப்ப தாய்க் கொண்டு இறே இவ் அதிகாரி இருப்பது –
அதில் கர்மத்தை அனுசந்தித்த போது பயமும் – காருண்யத்தை அனுசந்தித்த போது அபயமுமாய் -இரண்டும் மாறி மாறி –
பிரகிருதி சம்பந்தம் அற்று பகவத் ப்ராப்தி பண்ணும் அளவும் நடக்கும் -என்கை –

————————————————-

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது

இப்படி உபயமும் மாறி மாறி பிராப்தி அளவும் நடக்கிறது என் -தத் குண
விச்வாசத்தாலே எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்க ஒண்ணாதோ -என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அவனுடைய காருண்யத்தாலே நிவர்த்திக்க படுமதான -அவித்யா -கர்ம -வாசனை-ருசி – பிரகிருதி சம்பந்த விஷய ஞானம் -இவை
கிடைக்கையாலே இனமும் சம்சாரம் மேலிட்டால் செய்வது என் என்கிற பய ஹேது
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று சர்வேஸ்வரன் அவற்றை
தள்ளிப் பொகடும் படி பண்ணுகையாலே -இவற்றுக்கு நிவர்தகமான அவனுடைய காருண்ய விஷய ஞானம் -தத் பய ராஹித்ய ஹேது -என்கை –
நிவர்த்தாக பலம் அறிந்தாலும் -நிவர்த்யம் கிடக்கும் அளவும் – பயமும் நடு நடுவே கலசி செல்லும் என்று கருத்து –

ஆக –
இப் பிரகரணத்தில் –
இவனுக்கு பய அபய  ஹேதுக்களும் -366-
தத் உபய விபர்யயத்தில் சித்திக்கும் அதுவும் -367-
தந் நிபந்தன சங்க பரிகாரங்களும் -368-380-
சர்வேஸ்வரன் சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணும் படியையும் -381-
அஞ்ஞாத ஸூக்ருத பகவத் அங்கீகார ஹேதுத்வமும் -381-
அந் நிர்ஹேதுக விஷயீகார வைபவ அநபிஜ்ஞர் படியையும் -383-
ஏதத் வைபவ அபிஜ்ஞர் படியையும் -384-
இவ் அர்த்தம் அபியுக்த வசன சித்தம் என்னும் அதுவும் -385-
அஜ்ஞ்ஞாத ஸூக்ருத் வ்யாஜேனே அவன் அங்கீகரிக்கும் படியையும் -386-
அங்கீகார ஹேது வாக்கும் அஞ்ஞாத ஸூக்ருதங்களின் தத் கிருஷி பலத்வமும் -387
தந் நிரூபண  பலித்வமும் -அங்கீகார பற்றாசாம் அவை காதாசித்கமாக ஸ்வயமேவ விளைக்கைக்கு அடியும் -389-
அவற்றின் த்வை விதயமும் –
ஏவம் பூத விஷயீகார சாஸ்திர சித்தத்வமும் -392-
இவ் விஷயீகாரம் பெற்றவர் இத்தை வெளியாக பேசின படியும்-393-
ஏதத் அநபிஞ்ச வசன பரிகாரமும் -394-
ஆபி முக்யவதத் வேஷ தத் கிருபா ஜனித்வமும் -395-
யாத்ருச்சிகாதிகளின் ஸூக்ருத நாமம் ஈஸ்வர க்ருதம் என்னும் அதுவும் -396-
ஏதத் அர்த்த விஷய அபியுக்த வசன பரஸ்பர விரோதி பரிகாராத் அனுயுக்தி ஹேதுவும் -397-
கீழ் பரக்க உபபாதித்து வந்த இதின் பலிதமும் -398-
தத் ஆப்தி ஹேது தயா ஞானாதிகர் அநு சந்தானமும் -399-
நிர்ஹேதுக கிருபா பல அவஸ்ய அனுபாவ்யத்வமும் -402-
ஈத்ருசா கிருபா பிரவாஹா துர்நிவாரகத்வமும் -403-
பிரகரண ஆதி ப்ரதிஞ்ஞா தத் அர்த்த நிகமனமும் –404-
பய அபய அனுவர்த்தன காலாவதியும் -405-
ஏதத் உபய ஹேது பூத ஜ்ஞான விசேஷங்களும்-406- -சொல்லுகையாலே –
இவ் அதிகாரிக்கு அத்வேஷாதி மோஷ பர்யந்த அகில லாப ஹேதுவான பகவத் ஆகஸ்மிக கிருபா பிரபாவம் விஸ்தரேண பிரதிபாதிக்க பட்டது –

இத்தால் -த்வய உபதேஷ்டரு பூதாசார்ய உபசத்யாதிகளுக்கும் தத் உபதிஷ்ட த்வார்த்த ஞானாதிகளுக்கும் –
ஹேதுவான பகவந் நிர்ஹேதுக கிருபா வைபவம் சொல்லப் பட்டது –
(த்வயத்தை பெற்றது ஆச்சார்யம் மூலம் -உபசத்யாதி-கைங்கர்யாதிகள் –ஆச்சார்யரைப் பெற்றது பகவத் நிர்ஹேதுக கிருபையால் என்றதாயிற்று-)

ஆறு  பிரகரணங்களில் ஐந்தாவதான -பகவந் நிர்ஹேதுக கிருபா பிரபாவம் முற்றிற்று –
——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -387/388/389/390/391/392/393/394/395/396–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 30, 2012

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இப்படி அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை ஆகிலும் ஹேதுவாக கொண்டு
கடாஷிக்கும் அளவில் -அங்கீகாரம் சஹேதுகம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்களும் உள்பட இவனுக்கு உண்டாம் படி இறே
இவற்றுக்கும் யோக்யதை இல்லாதபடி கரண களேபர விதுரனாய் கிடந்த இவன் தன்னை –
சிருஷ்டி காலத்தில் கரணாதிகளை கொடுத்து அவன் உண்டாக்கிற்று -என்கை –
இத்தால் கடாஷ ஹேதுவாக சொன்ன யாத்ருச்சாதிகளும் அவனுடைய கிருஷி பலம் -என்கை –
ச -சப்தத்தாலே துல்ய அந்ய அஞ்ஞாத ஸூஹ்ருத பலங்களும் அடி அவன் கிருஷி -என்கிறது –
அன்றிக்கே –
வஹ்யமான நிருபண  விசேஷங்களை சமுச்சியிகிறதாகவுமாம் –
சிருஷ்டி தான் சேதன கர்ம அநு குணமாக வன்றோ என்னில் –
சிருஷ்டிப்பது கர்மத்தை கடாஷித்தே ஆகிலும் -யௌக பத்யம் அனுக்ரஹ கார்யம்-இறே —

————————————-

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும்
செய்ய வேண்டாதபடியாய்  -இருக்கும் –

தந் நிரூபணத்தில் இவனுக்கு சம்பவிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அசித  விசேஷிதமாய் கிடக்கிற தசையில் -உஜ்ஜீவன உபயோகியான கரண களேபரங்களை பரம தயையாலே அவன் தந்த படியை -அநு சந்தித்தால் –
தத் அதீன சத்தாதிகனான இவன் தனக்கு ஸ்வ உஜ்ஜீவன அம்சத்தில் அவன் செய்தபடி கண்டு இருக்கை ஒழிய
தான் ஒரு ப்ரவருத்தி  பண்ண வேண்டாதபடியாய் இருக்கும் -என்கை –

—————————————–

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவைதான் தன்னடையே விளையும் படியாயிற்று –

பக்தி உழவன் பழம் புனத்தை சிருஷ்டித்த கட்டளை –
ஈஸ்வர ஸ்ருஷ்டியால் இவனுக்கு விளையும் அங்கீகார பற்றாசைகள்-யாத்ருச்சிகதிகள் -மாத்ரமே அன்று -இன்னம் சில உண்டு என்று –
தர்சிப்பிக்கைகாக வாதல் -கீழ் சொன்ன இவைதான் உண்டாம் பிரகாரத்தை உபபாதிக்கைக்காக வாதல் -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
புதியதாக தரிசு திருத்தினது அன்றிக்கே  பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்க் கொண்டு –
செய்காலாய்ப்  போரும் ஷேத்ரத்திலே -கர்ஷகன் அதுக்கு என்று ஒரு க்ருஷியும் பண்ணாது இருக்க –
உதிரியானது முளைத்து விளைந்து தலைக் கட்டுமா போலே –
மேல் சொல்லப்  படுகிற நிரூபண விசேஷங்கள் ஆதல் – கீழ் சொன்ன யாத்ருச்சிகாதிகள்  ஆதல் –
இதுக்கு என்ன ஒரு கிருஷி செய்ய  வேண்டாதே -இச் சேதனர் பக்கல்
தன்னடையே விளையும் படி ஆயிற்று -பக்திக்கு கர்ஷகனான ஈஸ்வரன்
பிரவாஹ ரூபேண நடக்கிற சம்சாரம் ஆகிற பழம் புனத்தை சிருஷ்டித்து திருத்தும் -என்றபடி –

——————————————-

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

இவை என்று கீழ் அருளிச் செய்தவற்றை விசதீகரிக்கைக்காக
தத் விஷய பிரசனத்தை அனுவதிக்கிறார் –

———————————————–

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
முன்பு செய்யப்பட்ட-புண்ய பாப ரூப கர்ம த்வ்யத்தினுடையவும் பலங்களை ஸ்வர்க்க நரகாதிகளிலே நெடும் காலம் அனுபவித்து –
மேலுள்ள காலத்தில் – பூர்வ கர்ம வாசனை கொண்டு -புண்ய பாப ரூப கர்மங்களில் ப்ரவர்த்திக்கும் அத்தனை என்று -சொல்லத்தக்கதாம் படி –
அச்ச கர்மாவாய் கர்ம பல அனுபவத்தில் கை ஒழிந்து நின்ற தசையிலே –
காண்கிற தேகமோ -தேகாதி இதிரிக்தரோ -ஸ்வதந்த்ரரோ -நாம் யார் என்றும் –
நசிக்கும்படி நின்றோமோ -பிழைக்கும் படி நின்றோமோ -நாம் நின்ற நிலை யேது என்றும் –
இப்படி நின்ற நமக்கு இனிமேல் ஈடேறுகைக்கு ஈடான போக்கடி யேது என்று -தன்னடையே உண்டாவான சில நிரூபண விசேஷங்கள் உண்டு –
அந் நிரூபண விசேஷங்கள் ஆதால்-பூர்வ உக்தங்களான யாத்ருச்சிகாதி ஸூ ஹ்ருதங்கள் ஆதல் -என்கை –

———————————————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

இந் நிர்ஹேதுக விஷயீகாரம் சாஸ்த்ரத்தில் எங்கே சொல்லிற்று என்ன –
அருளிச் செய்கிறார் –

பகவத் சாஸ்திரம் நூற்று எட்டு சம்ஹிதையாய் இறே இருப்பது –
அதிலே ஓன்று இறே யஹிர்புத்த்ன சம்ஹிதை –
பாஞ்சராத்ர ச்யக்ருத்ஸ் நஸய வக்தா நாராயண ஸ்வயம் -என்கிறபடியே –
சகலத்துக்கும் ஆதி வக்தா பகவானாய் இருக்கச் செய்தே -தத் தத் சம்ஹிதைகள்
தோறும் -அவாந்தர வக்தாக்களும் உண்டு இறே -அதில் இந்த சம்ஹிதைக்கு
அஹிர் புத்னய சம்ஞகனான ருத்ரன் வக்தாவாய் இருக்கையாலே -இத்தை அஹிர் புத்த்ன்ய  சம்ஹிதை என்கிறது –
இந்த சம்ஹிதையிலே -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் -என்கிறபடி -சத்வம் தலை எடுத்த போது-சூஷ்ம தர்சியாய் இருக்கும் ருத்ரனை –
தேவர் ரிஷியாய் ப்ரஹ்ம வித்தமனான ஸ்ரீ நாரத பகவான் சென்று அநு வர்த்தித்து
ஸ்வ ஸம்சயங்களை எல்லாம் கேட்க -அவன் நிர்ணயித்து கொண்டு வாரா நிற்க -பதினாலாம் அத்யாயத்தில் -இவன் பண்ணின பிரசனத்துக்கு உத்தரமாக
சம்சாரமோ –மேல்படி ஹேதுக்களாக நிக்ரஹ சக்தி -அனுக்ரஹ சக்தி என்று –
சர்வேஸ்வரனுக்கு இரண்டு சக்தி உண்டு என்று பிரதிக்ஜ்ஜை பண்ணி -அதில் –
திரோதா நகரீச கதி ஸ்ஸா நிக்ரஹா சமாஹ்வயா புமாம் சாம் ஜீவ சம்ஜ்ஞம் ஸா திரோபாவயதி  ஸ்வயம் -என்று துடங்கி –
நிஹ்ரகாத்மிகையான சக்தியிலே -திரோஹித ஸ்வ ஸ்வரூபாதிகனாய் ஜீவாத்மா சம்சரிக்கும் படியை விஸ்தரேண பிரதிபாதித்து –
அநந்தரம்-
அநுக்ரஹாத்மிகையான சக்தியாலே சம்சாரானாம் முக்தனாம் படியை பிரதிபாதிப்பதாக –
ஏவம் சம் சுருதி சக்ரச்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபாகாப்யு பஜாயதே
சமீ ஷீதச்து தாசோயம் கருணா வர்ஷா ரூப்யா கர்ம சாம்யம் பஜத்யேவஜீவோ விஷ்ணு சமீஷயா
சக்தி பாவஸ் ஸ்வை ஜீவை முத்தாரயதி சம்ஸ்ருதே கரமாநிஸ் ஸ்மே தத்ர தூஷ்ணீம் ப்பாவ முபாகதே-என்று
சம்சார சக்ரச்தனாய் -துக்காகுலானன  ஜீவன் விஷயமாக சர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை ஜனிக்கும்படியையும் -அந்த கிருபைக்கு அடியாக
உண்டான அவன் கடாஷத்துக்கு விஷய பூதனனாய் கொண்டு இவன் கர்ம சாம்யத்தை -பஜிக்கும் என்னும் அத்தையும் -அந்த அநுக்ரஹாத்மிகையாந சக்தியினுடைய
சத்பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும் –
கீழ் கர்ம சாம்யம் என்றதின் கருத்தையும் சங்க்ரஹேண சொல்லி –
யதா ஹிமோஷ காபந்த்தே பரிபர்ஹமுபெயுஷி நிவ்ருத்த மோஷ னோத்த்யோகா ஸ்தாதாசந்த உபாசதே
அநுக்ரஹாத்மிகாயாஸ்து  சக்தே பாத்ஷா னே ததா உதாசாதே சமீபூய கர்மநீதேசு பாசுபே
தத்பாதாநன்தரம் ஜந்துர் யுகதோமோஷா சமீஷயா ப்ரவர்த்தமான வைராக்யோ விசேஷ அபிநிவேசவான்
ஆகமானநு சஞ்சித்ய குருநபயபசர்வயச லப்த்த சத்த பிரகாரச்த்தை ப்ரபுத்தோ போத பாலன-இத்யாதி அத்யாத சேஷத்தாலே
வழி போகிறவன் சம்பாரத்தை வைத்து மறைய நின்ற அளவிலே -அவனுடைய சம்பாரத்தை அபஹரிப்பதாக உத்யோக்கிகிற தஸ்கரர்-அந்த சம்பாரத்தை அவன் வந்து
கை பற்றின அளவில் -யாதொருபடி -நிவ்ருத்த மோஷண உத்யோகராக நின்று கொண்டு எப்போதும் உதாசீனராய் இருந்து விடுவர்கள் -அப்படியே பகவத் அனுக்ரஹ சக்தி
இவன் பக்கல் வந்த ஷணத்தில் இவ் ஆத்மாவை தந் வழியே இழுப்பதாக நின்ற புண்ய பாபங்கள் இரண்டும் இவனை வந்து மேலிடாமல் உதாசீனத்து இருந்து விடும் –
அந்த அநுக்ரஹாத்மிகையான சக்தி தந் பக்கல் வந்த அநந்தரம் -இச் சேதனன் -மோஷ சமீஷா யுக்தனாய் பிரவ்ருத்தமான வைராக்யனாய் விவேக அபிநிவேசயாய்
சாஸ்திர பிரவணனாய் சதாச்சார்யா சம்ஸ்ராயணம் பண்ணி லப்த்த சத்தாகனாய் லப்த்த ஞானனாய் -அந்த ஞானத்தை ரஷித்து கொண்டு -சாராக் க்ராஹியாய்
சமுசித உபாய பரிக்ரகத்தாலே சம்சார உத்தீரணாய் பரம பதத்தை பிராபிக்கும் என்று சொன்னான் -இறே
ஆகையாலே -யதாஹி மோஷ காபந்த்தே -என்று துடங்கி -இந் நிர்ஹேதுக விஷயீகாரத்தின் உடைய க்ரமத்தை ஆப்த பிரமாணமான
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று -என்கிறார் –

————————————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக
அருளிச் செய்தார் -இறே –

இப்படி சாஸ்திரம் சொன்ன அளவு அன்றிக்கே -நிரஹேதுக விஷயீகாரத்துக்கு நேரே பாத்திர பூதராய் –
ஆப்த தம அக்ரேசரான ஆழ்வார் இவ் அர்த்தத்தை  தெளிய அருளிச் செய்தார் என்கிறார் -மேல் –

வெறிதே அருள் செய்வர் -என்றது -நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவார் -என்றபடி –
இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளி செய்தார்-என்றது –
இந் நிர்ஹேதுக விஷயீகாரமாகிற ரகஸ்ய அர்த்தத்தை -சம்சய விபர்யயம் அற சகலரும் அறியும் படி பிரகாசமாக அருளி செய்தார் -என்கை –

—————————————–

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அந்த திவ்ய ஸூக்திக்கு அநந்தரம் ஓர் உக்தியில் அபிப்ராயம் அறியாதார் சங்கையை அனுவதித்து பரிஹரிக்கிறார் –

அதாவது –
அருள் செய்வர் -என்ற அநந்தரம் -ஆர்க்கு தான் என்னும் அபேஷையில்-செய்வார்கட்கு -என்று
அருளுகுகைக்கு உறுப்பாக திரு உள்ளம் உகக்கும்படி சிலவற்றை செய்யும் அவர்களுக்கு என்கையாலே –
அவன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -சேதன ஸூஹ்ருதம் -என்னா நின்றதே -என்னில் –
இப்படி சொல்லும் போது -நிர்ஹேதுக வாசகமான -வெறிதே -என்கிற இடம் சங்கதம் ஆகாதே -என்கை –
ஆகையால்-செய்வார்கட்கு -என்றது -தான் செய்ய நினைத்தவர்களுக்கு -என்றபடி –

————————————————-

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆபிமுக்க்யத்துக்கு பகவத் கிருபை வேணும் –
அத்வேஷத்துக்கு ஸூஹ்ருதம் காரணம் என்று நினைத்து சொல்லுவார் வசனத்தை
அநுவதித்து கொண்டு பரிஹரிக்கிறார் –

அதாவது –
அநாதி காலம் விமுகனாய் போந்த -இச் சேதனனுக்கு பகவத் விஷயத்தில் பிறக்கிற
ஆபிமுக்க்யம் இவனுடைய ஸூஹ்ருத நிபந்தனம் ஆக அன்றிக்கே -கேவல பகவத் கிருபையாலே பிறக்கிறது –
தத் பூர்வ பாவியான அத்வேஷம் ஸூஹ்ருதம் அடியாக பிறக்கிறது என்று சொல்லப் பார்க்கில் -அகில ஆத்ம குணாதியாய் ஆத்மா உஜ்ஜீவன
ஆங்குரமாய் இருந்துள்ள பகவத அத்வேஷமாகிற இப் பல விசேஷத்துக்கு -அதி ஷூத்ரமான யாத்ருச்சிகாதி
ஸூஹ்ருதத்தை காரணம் என்று சொல்ல ஒண்ணாது -என்கை –
ஆகையால்-அத்வேஷத்துக்கும் பகவத் கிருபையே காரணம் என்று சொல்ல வேணும் என்று கருத்து –

——————————————-

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

சாஸ்திர அவிஹிதமாய் -சேதன அவிதிதமுமான இந்த யாத்ருச்சிகாதிக்கு
ஸூஹ்ருதம் என்று பேர் இட்டார் என்னும் இடத்தை சங்கா பரிஹர ரூபேண
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இதம் குர்யாத் -என்று சாஸ்திர விகிதமுமாய் -கர்த்தரு பூதரான சேதனராலே புத்தி பூர்வேண அனுஷ்டிதமுமான ஒன்றை இறே-
ஸூஹ்ருதம் எனபது -அப்படியே இத்தை செய்வான் என்று சாஸ்திரமும் விதியாதே -இன்ன ஸூஹ்ருதம் பண்ணினோம் என்று
தத் கர்த்தாக்களான நாமும் அறியாதே இருக்கிற- இந்த யாத்ருச்சிகாதியை ஸூஹ்ருதம் என்று -நாம் பேரிட்டபடி எங்கனே என்னில் –
இதுக்கு ஸூஹ்ருதம் என்று நாம் பேரிடுகிறோம் அன்று –
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக சர்வஞ்ஞனான ஈச்வரன் -ஸூஹ்ருதம் என்று பேரிட்டு வைத்தான் என்று தத்வ தர்சிகளான ஆச்சார்யர்கள்
அருளிச் செய்ய கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கை-

ஆக –
கீழே வெறிதே அருள் செய்வர் -என்று மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில் தலைவரான நம் ஆழ்வார்
நிர்ஹேதுக விஷயீகாராம் ஆகிற இவ் அர்த்தத்தை விசதமாக அருளிச் செய்த படியை தர்சிப்பித்து –
அதன் மேல் வந்த சங்க பரிஹாரம் பண்ணி அருளினார் ஆயிற்று –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை–382/383/384/385/386– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 29, 2012

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –
சுருக்கம் ஓழியக் காணலாம்

இவ் அஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அடியாக ஈஸ்வரன் அங்கீ கரிக்கும் என்னும் அது –
காணலாம் இடம் உண்டோ -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
விதர்ப்ப ராஜ சூதையாய் -காசி ராஜ மகிஷியான லலிதை -ச பத்நிகளான முன்னூறு ஸ்திரிகளில் காட்டில் –
ஆபிரூப்யம்-அதிவச்ய பர்த்ருமத்தை -தேக தேஜஸ் ஸூ -சர்வ குண சம்பத்தி -இவை உடையளாய்-அஹோராத்ரா விபாகம் அற-
பகவத் சந்நிதியிலே அநேகம் திரு விளக்கு ஏற்றி -அதிலே நிரதையாய் போருகிற படியைக் கண்டு –
உனக்கு இவ் ஆபி ரூபாதிகளுக்கும் தீப ஆரோபண கைங்கர்ய ப்ராவன்யத்துக்கும்-காரணம் என் என்று ச பத்நிகள் கேட்க –
அவள் ஜாதி ஸ்ம்ருதியோடே பிறந்தவள் ஆகையால் –
ததேஷா கதயாம் யேதத்யத்வ்ருத்தம்  மமசோ ப நா -என்று துடங்கி –
ஸௌ வீர  ராஜஸ் யபுரா மைத்ரேயோ பூத்புரோஹிதா
தேனசாய தனம் விஷ்ணோ காரிதம் தேவி கா தடே –
அஹன்யஹாநி சிச்ரூஷாம் புஷ்ப தூபாம் புலேபனை
தீபா தானாதி பிச்சைவ சக்ரே தத்ர வசந்திவிஜா -என்று
ஸௌ வீர ராஜ புரோகிதனான மைத்ரேயன் -தேவி ஆற்றம் கரையிலே -ஓர் எம்பெருமான் கோவில் உண்டாக்கி –
அங்கே நாள் தோறும் சகல கைங்கர்யங்களையும் பண்ணி வர்த்தித்த படியையும் –

கார்த்திகே தீப தோ தீப  உபாத்தஸ் தேன சைகைதா
ஆசின் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நிசி –
தேவதா ஆயதனே சாசம் தத் ராஹா ம்பி மூஷிகா
பிரதீ  பவர்த்தி க்ரஹேண க்ருத புத்த்திர் வராநனா
க்ருஹீ தாசம யாவர்தீ ப்ரூஷதம் சோர ராவச
நஷ்டா சாஹம் ததஸ் தஸ்ய மார்ஜாலச்ய பயா நுகா
வக்த்ர ப்ராந்தே  நனஸ் யந்த்யா சதி பப்ரேரிதோ மயா
ஜ்ஜ்வால பூர்வத் தீப்த்யா தஸ்மின் நாயத நே பு ந -என்று
கார்த்திகை மாசத்திலே அவன் அந்த எம்பெருமான் சன்னதியில் ஏற்றின திரு விளக்கவியத் தேடுகிற அளவில் -அக் கோவிலிலே பெண் எலியாய் கொண்டு
வர்த்திக்கிற தான் -அத் திரு விளக்கிலே திரியைக் கவ்விக் கொண்டு போவதாக நினைத்து கவ்வின அளவில் -ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டு அஞ்சி –
மரணத்தை அடையா நிற்க -அப்போது பயத்தாலே நடுங்குகிற தன் மூஞ்சியாலே அத் திரி தூண்டப் பட்டு -முன்பு போலே அத் திரு விளக்கு பள பளத்து எரிந்த படியும் –
ம்ருதாசாஹம்  ததோ ஜாதா வைதர்ப்பீ ராஜா கன்யகா
ஜாதிஸ் மரா காந்திமதீ பவதீ நாம் பரா குணை-என்று
அநந்தரம் தான் மரித்து விதர்ப்ப ராஜனுக்கு புத்ரியாய்-ஜாதி ஸ்ம்ருதியாதிகளோடே பிறந்த படியையும் –
ஏஷ பிரபாவோ தீபச்ய கார்த்திகே மாசி சோபனா
தத் தஸ்ய விஷ்ணு ஆயுதனே யஸ் ஏயம் வுயுஷ்டி ருத்தமா
அசம்கல்பிதம் அப்யச்ய ப்ரேரணம் யத்தக்  ருதம் மயா
விஷ்ணு ஆயுதனே தீபச்ய தச்யத்தப் புஜ்யதே பலம்
ததோ ஜாதி ஸ்ம்ருதிர் ஜன்ம மானுஷ்யம் சோபனம் வபு
வஸ்ய பதிர் மே சர்வாசம் கிம்பு நர் தீப தாயினாம் -என்று அந்த அஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் பலமாக தனக்கு இவ் ஏற்றங்கள் எல்லாம் உண்டான படியையும் -சொன்னாள் என்று –
ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே லலிதா சரிதம் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே-

இனி -ஆதி -சப்தத்தாலே –
தத்வ வித்தாய் இருப்பான் ஒரு பிராமணனுடைய புத்ரியான ஸூ வ்ரதை-அதி பால்யத்திலே மாத்ரு ஹீனையாய் -அது தோற்றாதபடி-பரம தயாளுவான –
பிதா வர்த்தித்துக் கொண்டு போர வளர்ந்து -இனி ஒருவர் கையிலே பிரதானம் பண்ண ப்ராப்தம் என்னும் அளவிலே -அந்த பிதாவும் மரிக்கையாலே-யதீவ சோகார்த்தையாய்
யேன சம்வர்த்தி தாபாலா எனாச்மி பரிரஷிதா
தேன பித்ரா வியுக்தாஹம் நஜீவயம் கதஞ்சன
நத்யாயம்வா நிபதிஷ்யாமி சமித்தேவா ஹூதாசனே
பர்வ தாத்வா பதிஷ்யாமி பித்ரு ஹீனா  நிராஸ்ரையா-என்று தேஹா த்யாகோத்யுக்தையான  அளவிலே
ஆகத்ய கருணா விஷ்டோ யமஸ் சர்வ ஹிதே ரத
ஸ்தவிரோ ப்ரஹ்மனோ பூத்வா ப்ரோவாசே தம் வசச்ததா -என்கிறபடியே
சர்வ பிராணிகள் உடையவும் ஹிதத்தில் நிரதனாய் இருக்கும் யமன் -க்ருபா விஷ்டனாய் -ஒரு பிராமண வேஷத்தை கொண்டு  வந்து –
அலம்பாலே விசாலாஷி ரோத நே நா தி வஹ்வலே
ந பூய ப்ராப்ய தேதாத ச்தச்மான் நார்ஹதி சொசிதும் -இத்யாதியாலே இவளுடைய சோகாப நோதனத்தை பண்ணி –
தச்மாத்த்வம் துக்க முத்ஸ்ருஜ்ய ச்ரோதும் மர்ஹசி சூவ்ரதே
பித்ருப்ப்யாம் விப்ரயோகோயம் யேனா பூத் கர்மணாதவ-என்று- ஆகையால் உன்னுடைய துக்கத்தை விட்டு -இந்தா மாதா பித்ரு வியோகம்
உன்னுடைய யாதொரு கர்மத்தாலே உண்டாயிற்று -அத்தை சொல் கேள் என்று தான் சொல்லி –
புராத்வம்  சுந்தரி நாம வேச்ய பரம சுந்தரி
நிருத்த கீதாதி நிபுணா வீணா வேணு விசஷணா-என்று துடங்கி –
நீ பூர்வ ஜன்மத்தில் -சுந்தரி என்பாள் ஒரு வேச்யை-உன்னாலே வசீக்ருதனாய் -உன்னுடன் சம்ஸர்க்கித்து   போருவான் ஒரு பிராமண புத்ரனை உன் நிமித்தமாக
ஸ்பர்சையாலே -ஒரு சூத்திரன் வதிக்க-அவனுடைய மாதா பிதாக்கள் எங்கள் புத்ரனை கொல்லுவித்த நீ -இனி ஒரு ஜன்மத்தில் மாதா பிதாக்களை இழந்து மருகி பரிதவிப்பாய் என்று
சபித்த படியாலே காண் உனக்கு இந்த சோகம் வந்தது என்ன -ஆனால் இந்த பாவியான நான் உத்தம ஜன்மத்தில் பிறக்கைக்கு ஹேது என் என்று கேட்க –
ஸ்ருணு தஸ்ய மகா ப்ராஜ்ஞ்ஞே நிமித்தங்க ததோ மம
யே நத்வம் ப்ராக்மணச்யாச்ய குலே ஜாதா மகாத்மான -என்று துடங்கி –
ஞ்ஞாநாதிகனாய்  ஒன்றிலும் பற்று அற்று -சர்வத்ர சம தர்சியாய் -பகவத் த்யான பரனாய் -க்ராமைக்ராந்தர ந்யாயத்தாலே எங்கும் சஞ்சரிப்பான் ஒரு பாகவதன் ஒரு ராத்திரி உன்
புறத் திண்ணையிலே ஒதுங்கின அளவிலே -தலாரிக்காரன்  அவனை கள்ளன் என்று பிடித்து கட்ட -அவ்வளவிலே நீ வோடிச் சென்று -அக்கட்டை விடுவித்து அந்த பாகவதனை
உன்க்ரஹத்திலே கொண்டு புக்கு ஆஸ்வசிப்பித்தாய்-அத்தாலே உனக்கு இது உண்டாயிற்று என்று இதிகாச சமுச்சயத்திலே சொல்லப்பட்ட ஸூ வ்ரதோ உபாக்யானமும் –

இன்னம் ஒரு ஸ்திரி யமபடராலே அத்யந்த பீடிதையாய் -ஆகாசத்திலே ரஷக அபேஷை தோற்ற -கூப்பிட்டுக் கொண்டு வரா நிற்க –
அஸ்வத்த தீர்த்தத்திலே சிரகாலம் தபசு பண்ணி இருந்த மாதலி -அத்தை கண்டு கிருபை பண்ணி -தான் ஒரு நாள் செய்த தப பலத்தை அவளுக்கு கொடுக்க –
அப்போதே யம படரும் பந்து பூதராய்-யாம்ய மார்க்கமும் – ஸூ கோத்தரமாய் யதனா சரீரமும் போய் -விலஷண சரீரமுமாய் இவளையும் கொண்டு அவர்கள் யம சந்நிதியில் சென்ற அளவில் –
பிதேவ தர்ம ராஜோ பூத் தச்யாஸ் தத்ப்ரிய தர்சன
சாந்த்வயன்ச மஹாதேஜோ வியாஜ ஹாராச தாம்ப்ரிதி -என்று பித்ருவத் ப்ரன்னவதனாய் இவளைக் குறித்து இன்னும் சொல்லும் சொல்லி யமன் –
பத்ரேத்வையா சூஷ்டுக்ருதம் நகிஞ்சிதிஹா வித்யதே
இதோ த்வாதச ஜன்மாந்தே த்வாம் கச்சித் சித்த ஆவிசத்
விஷ்ணு பக்தோ நிவாசார்த்தம் ராத்ர்யா
சாஹிவை பிரம விதுஷீ ஸ்ரீமத் ரங்கம் உபாச்ரிதா
தத்ர தீர்தோத்தமம் ஸ்ரீ மத ச்வத்தம் நாம சம்ஸ்ரிதா
தர்மஜ்ஞா தர்ம பரமா யச்யாச்தே சங்கமோ பவத் -என்று மாதலியினுடைய அங்கீகாரம் உனக்கு வருகைக்கு உறுப்பாக நீ அறியச் செய்த ஒரு நன்மை இல்லை –
இன் ஜென்மத்துக்கு பன்னிரண்டாம் ஜன்மத்திலே ஒரு ராத்திரி உன்னுடைய க்ரஹத்திலே தங்கிப் போகைகாக ஒரு பாகவதன் வந்து உன்னைக் கிட்டி இருந்து போனான் –
தத் சந்நிதானத்தினாலே உண்டது காண் உனக்கு இந்த சாது சமாஹம் என்று முன்பே உண்டானதோர் அஞ்ஞாத ஸூஹ்ருதத்தை இவள் பேற்றுக்கு அடியாக சொன்னான
என்கிற காருட புராணத்திலே கோவில் மகாத்ம்யத்தில் கதையும் முதலான வற்றை சொல்லுகிறது –

சுருக்க மொழியக் காணலாம் -என்றது விஸ்தரேண காணலாம் என்றபடி –
இவ் அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியான பகவத் கடாஷமே இவர்களுக்கு இவ்வோ  பலங்கள் வருகைக்கு ஹேதுவாகையாலே-
அஞ்ஞாத ஸூஹ்ரு தங்களை பற்றாசக் கொண்டு ஈஸ்வரன் அங்கீகரிக்கும் என்னும் இதுக்கு இவை உதாஹரணம் ஆகலாம் இறே-

———————————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்
வாளா தந்தான் என்று
இருப்பர்கள்-

ஆக –
சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக கிருபையாலே சம்சார சேதனை உஜ்ஜீவிப்பிக்கையில் யுத்யுக்தனாய் –
கரண களேபர பிரதாநாதிகளைப் பண்ணி -ஸ்வ ஆஞ்ஞா ரூப சாஸ்திர அநு குணமாக இவர்கள் பக்கலிலே சில ஸூ ஹ்ருத விசேஷம் கண்டு
அங்கீகரிக்கலாம் வழி உண்டோ என்று பார்த்து -தத் அபாவத்தில் –
சர்வ முக்தி  பிரசங்கமும் -வைஷம்ய நைர் க்ருண்யமும் வாராமைக்காக -அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை தானே கல்பித்து –
அவை தன்னை ஜன்ம பரம்பரைகள் தோறும் -ஓன்று பத்தாக்கி நடத்திக்  கொண்டு போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்து –
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அங்கீகார ஹேதுவாம் படியையும்-தர்சிப்பித்தாராய்  நின்றார் கீழ் –
இந் நிர்ஹேதுக விஷயீகார வாசி அறியாதவர்கள் -இதுக்கு இசைந்து வைத்தே -ஏதத் அநு சந்தான வித்தர் ஆகாமல் இருப்பர்கள் என்கிறார் மேல் –

அஞ்ஞர் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவம் அறியாதவர்கள் –
வாளா தந்தான் என்று இருப்பர்கள் -என்றது -இப்படி உபகரித்து அருளுவதே என்று தலை சீத்து ஈடுபடுவது வேண்டி இருக்க –
அது செய்யாமல் -வெறுமனே உபகரித்தான் என்கிற மாத்ரத்தை அநு சந்தித்து இருந்து விடுவர்கள் என்றபடி –

————————————————-

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக்  கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

இதன் வாசி அறிந்தவர் கள் ஈடுபடும் படியை அருளி செய்கிறார் –
ஞானவான்கள் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவத்தை உள்ளபடி அறியும் அவர்கள்-
இன்று என்னை பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் -இத்யாதி –
அநாதி காலம் அவஸ்துவாய் கிடந்த என்னை -இன்று வஸ்துவாக்கி -நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான தன்னை –
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னுடைய ஹேயமான நெஞ்சுள் வைத்தான் –
பெரிய உடையாரைப் போலே தலை உடன் முடிந்தேனோ -திருவடியைப் போலே -த்ருஷ்டா சீதா -என்று வந்தேனோ –
அன்றிக்கே –
தன்னுடைய ஆஞ்ஞா அனுவர்தனம் பண்ணினேனாம் படி விஹித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சிலே புகுந்து -பெறாப் பேறு பெற்றானாய் விளங்குகிறது –
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து உஜ்ஜீவிப்பியா நின்ற ஸ்வாமீ-
எனக்கு அஞ்ஞாத ஞாபனத்தை பண்ணி ஸ்வாமியான நீ சேஷ பூதனான என் பக்கல் பண்ணின உபகாரம் -உபகரித்த நீ அறியில் அறியும் இத்தனை என்னால்
சொல்லித் தலைக் கட்டப் போமோ –
அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பனாய் கிடந்த என்னை -சந்தமேனம்-என்கிறபடியே சாத்தானை  ஒரு வஸ்துவாம்படி பண்ணி -அந்த சத்தை நிலைநிற்கும் படி
கைங்கர்யத்தையும் கொண்டு அருளினாய் –
அம்ருதத்தையும் விஷயத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே
உன்னையும் உகந்து ஸூ த்திர விஷயங்களையும்  உகக்கும்  பொல்லாத நெஞ்சைப் போக்கினாய் –
அநந்ய பிரயோஜநமாய்  கொண்டு உன்னையே அனுபவிக்கும் மனசை தந்தாய் –
என்று அவன் நிர்ஹேதுகமாகப் பண்ணின உபகார விஷயங்களை அநு சந்தித்து தலை சீய்த்து ஈடுபடா நிற்ப்பர்கள் -என்கை
அன்றிக்கே-
அஞ்ஞர் இத்யாதிக்கு -வாளார் தந்தார் -என்று பாடமாகில் –
இப்படி சர்வேஸ்வரன் தன நிர்ஹே துக கிருபையாலே தங்களை உஜ்ஜீவிப்பிக்க கிருஷி பண்ணிக் கொண்டு வரும் பிரகாரத்தை அறியாத மனுஷ்யர் –
வாள் வலியாலே ஜீவித்து திரிவார் -தங்களுக்கு வந்த தொரு சம்ருதியை நம்முடைய  வாளார் தந்தார் என்று நினைத்து இருக்குமா போலே –
நிர்ஹேதுகமாக வந்த பகவத் அங்கீகாரத்தை தங்கள் ஸூக்ருத பலத்தாலே வந்ததாக நினைத்து இருப்பர்கள் என்று பொருளாகக் கடவது –
அப்போதைக்கு –
சகலமும் அவன் அருளாலே வந்தது என்று தெளிய கண்டவர்கள்- அவன் நிர்ஹேதுகமாக பண்ணின உபகார விசேஷங்களை அநு சந்தித்து ஈடுபடும்படியை
அருளிச் செய்கிறார் என்று -மேலில் வாக்யத்துக்கு சங்கதி

——————————————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

இந்த நிர்ஹேதுக விஷயீகார ஸ்தாபகம் ஆனதோர் ஐதிஹ்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

அதாவது –
சகல வேதாந்த தாத்பர்ய அர்த்தங்கள் எல்லாம் -சம்சய விபர்யயம் அற நடந்து செல்லுகிற -நல்லடிக் காலமான பாஷ்யகாரர் காலத்தில் –
ஒருநாள் பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து -பெரிய திருமண்டபத்துக்கு கீழாக ஞானாதிகரான முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் யார்வாசலில் அவர்கள் புறப்பாடு பார்த்து இருந்தோமோ என்று தெரியாது –
இன்று வகுத்த சேஷியான பெருமாள் புறப்பாடு பார்த்து வந்து இருக்க என்ன-ஸூ ஹ்ருதம் பண்ணினோம் என்ன –
தத் பிரசங்கத்திலே -நித்ய சம்சாரியாய் போந்தவனுக்கு -பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஞ்ஞாத சூக்ருதம் என்ன பிறந்ததாய்-
அவ்வளவிலே கிடாம்பி பெருமாள் இருந்தவர் -நமக்கு பகவத் விஷயம் போல ஸூஹ்ருத தேவர் என்னும் ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயர் என்ன –
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது நினைக்கிற விஷயம் தன்னைக் காண் -என்று அருளிச் செய்ய –
ஆக -இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பது -என்றபடி –
இக்கதை தான் -தரு துயரம் தடாயேல்-என்கிற பாட்டில் வ்யாக்யானத்திலே சங்க்ரஹேண பூர்வர்கள் அருளி செய்து வைத்தார்கள் -இறே –
இத்தால் அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் உண்டாயிற்று ஆகிலும் பல ஹேது அன்று –
அத்தை வ்யாஜமாக்கி அங்கீகரிக்கும் ஈச்வரனே பல ஹேது என்றது ஆயிற்று –

————————————————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறார்-

அதாவது –
கீழ் சொன்ன  பிரகாரத்தாலே –
சர்வ முக்தி பிரசாங்காதிகள் வாராமைக்காக இச் சேதனன் அறியாமல் விளையும் அவையான சில ஸூஹ்ருத விசேஷங்களையே-இவனை
அங்கீகரிக்கைக்கு பற்றாசாக பிடித்து கொண்டு விசேஷ கடாஷத்தை பண்ணா நிற்கும் -என்கை-

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–381–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 24, 2012

சதுர்த்த பிரகரணம்-

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் –
கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான
சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்-

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை
காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –

தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப்  போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்-
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

இனி பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது -என்று கீழ் அருளிச் செய்ததை விசதீகரிகைக்காக –
ஈஸ்வரன் இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு பண்ணும் கிருஷி பரம்பரையை -அருளிச் செய்கிறார் –

த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -என்கையாலே -நித்ய விபூதியை த்ரிபாத் விபூதி என்னக் கடவது இறே-
இதனுடைய த்ரிபாத்த்வம் பல படியாக நிர்வகிக்கலாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
பாதேரச்ய விசவா பூதானி திரிபாத ச்யாம்ருதம் திவி -என்று இந்த விபூதியில் –
எல்லா பூதங்களும் இவனுக்கு நாலாத் தோன்றும் என்னும் படி அல்பமாய் இருக்கும் –
பரம ஆகாசத்தில் இவனுடைய நித்தியமான விபூதி -த்ரிபாத் -என்னும் படி மும்மடன்காய் இருக்கும் –
இந்த விபூதி த்வய விஷயமான -பாத சப்தமும் -திரிபாத -சப்தமும் –
அல்ப மகத்வங்களுக்கு-உப லஷணம் இத்தனை ஒழிய –
பரச்தேத பரம் அன்று -லீலா விபூதியில் அண்டங்கள் தானே அசங்கயாதங்களாய்-இறே இருப்பது –
என்று -தீப பிரகாசத்திலே ஜீயர் அருளி செய்கையாலே –
இவ்விபூதியில் -கார்யா ரூப பிரதேசத்தை  பற்ற-பரம ஆகாசத்தில் நித்ய விபூதி
மும்மடங்காய் இருக்கும் என்னவுமாம் –
அன்றிக்கே –
இத்ய ப்ராக்ருதம் சத்தாநமுச்யதே  த்ரிபாத்த்வஞ்ச அப்ராக்ருதைர் போக்ய போக உபகரண போக ஸ்தான விசேஷைர்வா-
பூஷணா அஸ்த்ராதி ரூபேண ஜகத் அந்தரகத வஸ்த அபிமானிபிர்
நித்யை பகவத் அனுபவ மாத்ர பரைச்ச நித்ய சித்தைர் முக்தைச்சாத்மா பிர்வா சம்பவதி -என்று
ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளி செய்தபடி –
அப்ராக்ருதமாய் இருந்துள்ள -போகய விசேஷங்கள் போக உபகரண விசேஷங்கள் –
போக  ஸ்தான விசேஷங்கள் -ஆக மூன்று அம்சங்களோடு இருக்கையாலே ஆதல் –
அஸ்த்ர பூஷணத்தியாயத்தில் படியே பூஷண அஸ்த்ராதி ரூபத்தாலே –
ஜகத் அந்தர்கத வச்தபிமாநிகளான-நித்தியரும்  –
கேவல பகவத் அனுபவராய் இருக்கும் -நித்தியரும் முக்தருமாய் -இப்படி
மூன்று அம்சமாய் இருக்கும் ஆத்மாக்களை உடைத்தாயாகையாலே –
த்ரிபாத் -என்னவுமாம் –
ஆக இப்படி லீலா விபூதியில் -அத்யந்த வ்யாவ்ருத்தை ஆகையாலே
நிரதிசய சுக வஹையான நித்ய விபூதியிலே –
பரி பூர்ண அனுபவம் -நடவா நிற்க –
நித்ய முக்தரோடே கூடி இருந்து வேறு ஒன்றே -நிரதிசய ஆனந்த ஜனகமான –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாவற்றையும் -யுகபவதேவ – அநுபகிக்கை
ஆகிற பரி பூர்ண அனுபவம் -அவிச்சின்னமாய் செல்லா நிற்க –
அது உண்டது உருக்காட்டாதே –
அதாவது –
அப்போது அப்போது வடிவிலே இட்டு மாறினால் போலே -புதுக்கணித்து வரப் பண்ணும்
அந்த அனுபவம் ஒன்றும் வடிவிலே தோன்றாதே என்கை-

தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் -அதாவது –
அநேக புத்ரர்களில் வைத்து கொண்டு -ஒருவன் ஸ்வ கர்ம அனுகுணமாக
தேசாந்தரமே போனால் -மற்று உண்ட புத்ரர்களும் தானுமாய் இருந்து ஜீவியா நிற்கச் செய்தேயும் –
இவர்களோபாதி அவனும் கூடி இருந்து -வாழுகைக்கு இட்டு பிறந்து வைத்து -இத்தை
ஒழிந்து கிடக்கிறானே என்று -தேசாந்தர கதனான அந்த புத்திரன் பக்கல் பிதாவினுடைய
ஹிருதயம் கிடக்குமா போலே -நித்தியரும் முக்தரும் தானும் கூடி இருந்து வாழச் செய்தே –
இப்போகத்தில் ப்ராப்தி உண்டாய் இருக்க -இச் சேதனன் இழந்து கிடப்பதே என்று –
தேசாந்தர ஸ்தரான சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் நேராக போய் -என்கை –

இவர்களை பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
அதாவது –
சம்ஹ்ருதி சமயத்தில் பிராப்தி உண்டாய் இருக்க -நித்ய விபூதியில்
சம்சாரி சேதனரை தான் பிரிந்து தான் இருக்கும் அளவில் -புத்திர பௌ த்ராதிகளோடு
ஜீவித்தவன் -அவர்களை இழந்து -தனியனானால் போலே –
ச ஏகாகீ ந ரமேத -என்கிறபடி -அவ் இழவு சஹிக்க மாட்டாதே -என்கை –
சம்ஹ்ருதராய்க் கிடக்கும் அளவில் -இவர்களை சரீரமாய் கொண்டு -தான்
சரீரியாய் இருக்க செய்தேயும் -அத்தை ஒரு கலவியாக நினையாதே –
கரண களேபர சஹிதராய் அவர்கள் வர்த்திக்கிற காலத்தில் -அந்தர் ஆத்ம தயா –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை -நிர்வகித்து கொண்டு இருக்கை முதலான வற்றை இவர்களோடு
கலவி யாகவும் -இவர்கள் கரண களேபர விதுரராய்-அசித் அவிசேஷிதராய் கிடக்க -தான்
நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை இவர்களை பிரிந்து இருக்கிற இருப்பாகவும்
நினைத்து இருக்கையாலே -இவர்களை பிரிந்தால் -என்று அருளி செய்கிறார் –

இவர்களோடு கலந்து பரிமாறுகைக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
அதாவது –
அந்தராத்மதையாலும் –
அவதார –
அர்ச்சாவதார ங்களாலும் –
இவர்களோடு கலந்து பரிமாறிக்கைக்கு உறுப்பாக –
விசித்ரா தேக சம்பந்தி -இத்யாதிப்படியே –
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயேண உபகரணமான கரண களேபரங்களை  தயமானமனாவாய் கொடுத்தது என்கை –

அவற்றைக் கொண்டு வ்யாபரிகைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
அதாவது –
அந்த கரண களேபரங்களைக் கொண்டும் அவற்றை அறிந்து -செய்ய வேண்டும் அவற்றை செய்து
தவிர வேண்டும் அவற்றை தவிர்ந்து -இப்படி வ்யாபரிக்கைக்கு ஈடான –
சித் சக்தி -பிரவ்ருத்தி சக்தி -நிவ்ருத்தி சக்தி -கள் ஆகிற சக்தி விசேஷங்களையும் கொடுத்தது -என்கை –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று
கண்ணுக்கு தோற்றாத படி –
அதாவது –
இத்தனையும் செய்து -ஸ்வாமித்வ ப்ராப்தி தோற்ற இவர்கள் கண்ணுக்கு விஷயமாக நிற்கில் –
த்வம்மே – என்றால் சஹியாமல் –
அஹம்மே -என்றும் ஸ்வ தந்த்ரர் ஆகையாலே -எங்கள் கண் முகப்பில் நீ ஒருக்காலும் –
நிற்க்கக் கடவை இல்லை -என்று திரு ஆணை இட்டு -நிஷேதிப்பர்கள் என்று -நினைத்து –
ந சஷூஷா பஸ்யாதி கைச்ச நைநம் – –
கட்கிலி –
என்கிற படி இவர்கள் -கண்ணுக்கு ஒருக் காலமும் விஷயம் ஆகாதபடி -என்கை –

உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே -அகவாயிலே அணைத்து-
அதாவது –
தன்னையும் தாயும் அறியாதே கிடந்தது உறங்குகிற பிரஜையை –
வத்சலை யானவள் -தான் அறிந்த ரஷ்ய ரஷக  பாவ சம்பந்தம் அடியாக -முதுகிலே அணைத்து –
கொண்டு கிடக்குமா போலே -அநாதி மாயயா சூப்தராய் -ஸ்வ பர ஸ்வரூபங்களில் ஒன்றையும் அறியாமல் –
கிடக்கிற இச் சேதனரை-சேஷியான தான் அறிந்த -ரஷ்ய ரஷக சம்பந்தமே ஹேதுவாக விட -ஷமன் அன்றிக்கே –
யா ஆத்ம நிதிஷ்டந்-என்கிறபடியே -அந்தராத்மத்வேண -இவற்றை ஸ்பரிசித்து கொண்டு -என்கை –

ஆட்ச்சியில் தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி –
அதாவது –
ஒருவன் உடைமையை வேறு ஒருவன் அபஹரித்து ஆளா நிற்க -உடையவனாய் வைத்து
உடைமையை இழந்தவன் தன்னது என்ன தோற்ற பல நாளும் துடர்ந்து போந்தால் பின்பு
வ்யவஹாரத்தில் விஜய ஹேதுவாக நிற்கும் இறே –
அப்படியே -அனுபவ விபவாத் -என்கிற சேதனர் ஆட்சியிலும் நம்மது என்னும் இடம் தோற்ற
ஒரு தலை பற்றிக் கொண்டு போருகிற தொடர்ச்சி பிரபலம் என்று நினைத்து –
அந்தராத்மா தயா வஸ்திதனான தான இவர்களை ஒருக்காலும் கை விடாதே –
தாரகனாய் கொண்டு தாரக  பூதரான இவர்கள் சத்தை அழியாமல் நோக்கி -என்கை –

உடன் கேடனாய் –
அதாவது
இப்படி சத்தா தாரக தயா -ஸ்வர்க்க நரக ப்ரேவேசாதி-சர்வ அவஸ்தையிலும் –
இவர்களுக்கு துணையாக போருகை-
உடன் கேடன் -எனபது -இவன் கேடு தன் கேடாய் இருக்கும் அவனை  இறே

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
அதாவது –
ஆதவ் ஈச்வரதத் தயைவ புருஷ -ஸ்வாதந்த்ர்ய சக்த்யா ஸ்வயம்-தத் தத் ஜ்ஞான சிகீர்ஷாண பிரயத்நாதி உத்பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
அடியிலே தான் கொடுத்த ஜ்ஞாத்ருத்வ ரூப ஸ்வா தந்த்ர்யா சக்தியாலே -ஸ்வ ருஷ்ய அநுகுணமாக –
பிரவ்ருத்தீகளைக் கொண்டு போருகைக்கு யோக்யரான இச் சேதனர் துர்வாசன பலத்தாலே
பாப கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் அளவிலும் –
அந்தர்யாமியான தான் நினைத்தால் மீட்க்கலாய் இருக்கச் செய்தேயும் -அப்படி செய்யும் அளவில் –
ஸ்வ ஆஞ்ஞா  ரூப சாஸ்திர விநியோகம் அறும் என்னத்தை பற்றவும் -மீட்க மாட்டாதே
அனுமதி தானத்தை பண்ணியும் -உதாசீனன் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் -இவர்கள் என் பட்டால்
நல்லது என்று இருக்கும் உதாசீனரைப் போலே இருந்தும் -அசத் கர்மாவில் பிரவர்த்திக்கும் பொழுது மீட்க நன்மை என்னும்
பேர் வைக்கும்படி தீமையும் கிடைக்காத பொழுது -அதில் நின்றும் அவர்களை மீட்க்கைக்கு
உறுப்பாக சொல்லிக் கொள்ள தக்கதொரு நன்மை ஆகிய அவகாசம் பார்த்து -என்கை –

நன்மை என்று பேரிடலாவது தீமையும் காணாதே –
அதாவது –
பரஹிம்சை செய்து கொண்டு திரியா நிற்கச் செய்தே -பகவத் பாகவத விரோதிகளாய் இருப்பாரை -யாத்ருச்சிகமாக ஹிம்சிக்கை –
விஷய ப்ரவணனாய் பகவத் தாசி களைப் பின் பற்றி பல காலம் கோவில்களிலே புக்கு புறப்படுகை –
வயல் தின்ன பசுவை தொடர்ந்தவாறே அது ஒரு கோவிலிலே வளைய  வருமாகில் அத்தை அடிக்கையில் உண்டான ஆக்ரஹத்தாலே தானும் வளைய வருகை –
நிந்தார்த்தமாக திருநாமங்களை சொல்லுகை -முதலானவை –

நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ண நீரோடே மீளுவது–
அதாவது –
சர்பதஷ்டராய்  ம்ருத கல்பர் ஆனவர்களை -மந்த்ராதிகளால் எழுப்புகைக்கு
பிராண ஸ்த்தி பரிஷார்த்தமாக நெற்றியை கொத்திப் பார்த்தால் ஒரு பிரகாரமும்
ரத்த ஸ்பர்சை காணாத அள்ளவிலே -இவ் விஷயம் நமக்கு இனி கை புகுகிறான் என்று
இராதே- இழவோடு கை வாங்கும் பந்துக்களைப் போலே -நன்மை காணாத அளவில்- விடாதே –
நன்மை என்று பேரிடலாவது -தீமை தான் உண்டோ என்னும் அளவாக பார்த்த அளவிலும்
ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் பக்கல் பசை காணா விட்டால் இவ் விஷயம் நமக்கு ப்ராபிக்க
படுமது அல்ல -இத்தை இழந்தோம் என்று அழுது கண்ண நீரோடு மீளுவது -என்கை –

அன்றிக்கே –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமை -என்கிறது –
ச்யேநேந அபி சரண்யஜேத-என்று ஆஸ்திக்ய ஜனகமாய் -விஹிதம் ஆகையாலே –
நன்மை என்று பேரிடலாய் இருக்குமதாய் -பர ஹிம்சை ஆகையாலே தீமை ஆகிற
ச்யேனவித்ய அனுஷ்டானத்தை யாய் -அங்கீகாரத்துக்கு உடலானதொரு நன்மை
காணாத அளவு அன்றிக்கே -சாஸ்திர மரியாதை யாலே மேல் தானாகிலும் ஆக்கிக் கொள்ளுகைக்கு
யோக்யமான சாஸ்திர ஆஸ்திக்யத்துக்கு  உடலான -அது தானும் உட்பட இவர்கள் பக்கல்
காணப் பெறாதே என்னவுமாம் –
அப்போதைக்கு -நெற்றியை கொத்திப் பார்த்தால் -இத்யாதியால் -ஜ்ஞாத ஸூ ஹ்ருத யோக்யதை இல்லாமையாலே -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் தான் உண்டோ
என்று ஆராய்ந்து-அதுவும் இல்லாமையாலே ஒரு வழியாலும் அங்கீகார யோக்யதை அற்று -இழவோடு   மீளும் படி சொல்லிற்று –

தனக்கேற இடம் பெற்ற அளவில் –
அதாவது –
இப்போது மீண்டால் போலே -மீண்டு விடுகை அன்றிக்கே -இவர்களை
உஜ்ஜீவிப்பிகைக்கு அவகாசம் பார்த்து திரியும் -தனக்கேற அவகாசம் பெற்ற அளவில் -என்கை –

என்னூரைச் சொன்னாய் -இத்யாதி -என்றால் போலே சிலவற்றை ஏறிட்டு –
அதாவது –
அவ்வூர் இவ்வூர் என்று இவன் பல ஊர்களையும் சொல்லா நிற்க -கோவில் திருமலை
முதலாக தானுகந்த ஊர்களிலே ஏதேனும் ஒன்றைச் சொன்னால்-அம்மாத்ரமே பற்றாசாக என்னுடைய ஊரைச் சொன்னாய் என்றும் –
அவர் இவர் என்றால் போலே சொல்லா நிற்க -ஒருவன் பேரை சொல்லுகிறதாக
திரு நாமங்களிலே ஒன்றைச் சொன்னால் -அவ்வளவைக் கொண்டு என்பேரைச் சொன்னாய் என்றும் –
சில பாகவதர் காட்டிலே வழி போகா நிற்க -அவர்களை ஹிம்சித்து கையில் உள்ளது அபஹரிப்பதாக
வழி பறிக்காரர் உத்யோக்கிக்கும் அளவில் -ஸ்வ காரியத்தில் போகிறான் ஒரு சேவகன் அவர்கள் பின்னே தோன்ற –
அவனை தத் ரஷண அர்த்தமாக வருகிறான் என்று நினைத்து -அவர்கள் பயப்பட்டு பறியாது ஒழிய -அது பற்றாசாக அந்த சேவகனை
என் அடியாரை நோக்கினாய் என்றும் –
ஒருவன் கர்ம-வெயில்- காலத்திலே தன் வயல் தீய புக்க வாறே -நீருள்ள இடத்தில் -நின்று
வயலிலே வர நெடும் தூரத்திலே துலை இட்டு இறையா நிற்க -மரு பூமியிலே நெடும் தூரம் நடந்து
இத்தனை ஜலம் பெறில் தம் பிராணன் தரிக்கும் என்னும்படி இளைத்து வருகிறார்கள் சில பாகவதர்கள்-அவன் அறியாமல் அந்த நீரிலே
தங்கள் ஸ்ரீ பாதம் முதலான வற்றை விளக்கி இளைப்பாறிப்  போனால் -அதடியாக -என் அடியார் விடாய் தீர்த்தாய் -என்றும் –
ஒருவன் தனக்கு சூது சதுரங்கம் போருகைகும் -காற்று அபேஷிதமான போது வந்து இருக்கைக்கும் -இவற்றுக்காகா புறம் திண்ணை கட்டி வைக்க –
வர்ஷ பீடிதரா -அங்கே ஒதுங்குவோம் என்று -வருகிறார் சில பாகவதர் அங்கே ஒதுங்கி இருந்து போக –
தாவன் மாத்ரத்தாலே என் அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும் –
இப்புடைகளிலே சிலவற்றை அவர்கள் அறியாது இருக்க -தானே ஆரோபித்து -என்கை –

மடி மாங்காய் இடுகை  -ஆவது-
மாங்காய் எடாமல் வெறுமனே வழி போகிறவன் மடியிலே -மாங்காயை மறைத்து கொண்டு சென்று இட்டு மாங்காய் களவு கண்டாய் -என்கை –
இது வலிய வாரோபிக்கும் அதுக்கு திருஷ்டாந்தம் –

பொன் வாணியான் -இத்யாதி -ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் –
அதாவது –
பொன் வாணியம் செய்வான் ஒருவன் ஆரேனும் பரீஷிக்கைக்காக காட்டின பொன்னை
உரைகல்லிலே வைத்து -ஒன்றும் சோராதபடி மெழுகாலே ஒத்தி எடுத்து –
நாள் வட்டதுடனே கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டுமா போலே –
ஒரு ஜன்மம் இரண்டு ஜன்மத்து அளவு அன்றிகே சேதனருடைய ஜன்ம பரம்பரைகள் தோறும் –
விடாயைத் தீர்த்தாய் -ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் -என்றால் போலே உண்டாக்கும் -யாத்ருச்சிகம் –
ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -என்றால் போலே வரும் ப்ராசங்கிகம்-
அடியாரை நோக்கினாய் -என்றாப் போலே உண்டாகும் ஆநு ஷங்கிகம்-என்கிற ஸூ ஹ்ருத விசேஷங்கள் –
சாஸ்திர விஹிதமும் -சேதன விதிதமும் அன்றி இருக்க -தானே கல்ப்பித்தும் -கல்பிதமான தன்னை ஒன்றையே அநேகமாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கை –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை -366/367/368/369/370/371/372/373/374/375/376/377/378/379/380—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 23, 2012

ஆறு பிரகரணங்களில் ஐந்தாவதான–பகவந் நிர்ஹேதுக க்ருபா பிரபாவ -பிரகரணம் –

சூரணை -366
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

இனி ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம்-அபய ஹேது -என்று துடங்கி –
நிவர்த்ய ஞானம் பய ஹேது -நிவர்த்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு –
அநாதி கால ஆர்ஜித -கர்ம விநாச காரணமாய் -அத்வேஷம் முதலாக -ப்ராப்தி பர்யந்தமாக நடுவாக  உள்ள பேறுகளுக்கு எல்லாம் பிரதான ஹேதுவான –
பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப் படுகிறது –
சம்சாரிகள் தோஷமும் ஸ்வ தோஷம் என்று நினைக்கை முதலாக -ப்ரசக்த அனு ப்ரசக்தமாய் வந்த
அர்த்த விசேஷங்களை பிரதிபாதித்துத் தலைக் கட்டின -அநந்தரம்-கீழ்
ஸ்வ தோஷத்துக்கும்-இத்யாதி வாக்யத்தாலே -இவனுக்கு அநவரத கர்தவ்யமாய் சொன்ன
ஸ்வ தோஷ -பகவத் பாகவத குண அனுசந்தானங்களில் -வைத்துக் கொண்டு -பாகவத குண அனுசந்தானம்
பிரதிபாத்ய அம்சத்துக்கு உபயுக்தம் அல்லாமையால்-அத்தை விட்டு –
அதுக்கு உபயுக்தமான ஸ்வ தோஷ -பகவத் குண அனுசந்தானங்களை அங்கீகரித்து கொண்டு அவை இரண்டுக்கும்
பிரயோஜனம் இன்னது என்கிறார் மேல் –

ஸ்வ தோஷம் ஆவது –
அநாத்ம குணாதிகளும்-அதுக்கு மூலமாய் -அநாதி காலமே பிடித்து காட்பேறிக் கிடக்கிற
அவித்யாதிகளும் –
ஏதத் அனுசந்தானம் இது இதுவாக இன்னம் சம்ஸ்ரனம் வரில் செய்வது என் என்னும்
பயத்துக்கு ஹேது –
பகவத் குணம் ஆவது -இத் தோஷத்தை பார்த்து இகழாமல் அங்கீகரித்து -இவற்றைப் பொறுத்து –
இவ்வாத்மாவை திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகைக்கு  உடலான அவனுடைய தயா ஷாந்தியாதிகள் –
ஏதத் அனுசந்தானம் அநாதிகாலம் சம்சார ஹேதுவாய் போந்த ஸ்வ தோஷ பலத்தை பார்த்து –
இன்னமும் அப்படியாகில் செய்வது என் என்கிற பயத்தினுடைய நிவ்ருத்திக்கு ஹேது என்கை-
துரந்தஸ்யா அநாதே அபரகரநீயச்ய மகாதோ நிஹீந ஆசாரோ அஹம் நிரூபசு அசுபச்யாஸ் பதமபி– தயா சிந்தோ -பந்தோ- நிரவதிகவ வாத்சலிய ஜலதே
தவஸ் மாரம் ஸ்மாரம் குண காமம் இதீ இச்சாமி கதாபி – ஸ்தோத்ர ரத்னம்- என்னக் கடவது -இறே-

——————————————————

சூரணை-367-

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்
அஜ்ஞதையே சித்திக்கும் –

இப்படி இவ்விடத்திலே -பய அபய ஹேதுக்களான-சகல தோஷ -சகல குணங்களையும் -சேரச் சொல்லி இருக்கச் செய்தே –
இழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை -என்றும் -கர்ம பலமும் போலே க்ருபா பலமும் அனுபவித்தே அற  வேணும் -என்றும்
கர்மத்தையும் கிருபையுமே இழவு பேறுகளுக்கு ஹேதுவாய் சொல்லிக் கொண்டு போய் -பய ஹேது கர்மம் -அபய ஹேது காருண்யம்-என்று நிகமித்தது –
இவை எல்லாத்திலும் இவனுக்கு -சம்சார மோஷங்களுக்கு பிரதான ஹேதுக்களவை ஆகையாலே -இவை இரண்டையும் பின் செல்லும் –
மற்றுள்ளவையும் இவை புக்கிடத்தே தானே வந்து விடும் இறே –
இங்கன் அன்றிக்கே –
அவன் படியை நினைத்து பயமும் –
தன் படியை நினைத்து அபயமுமாம் அளவில் அறிவிலித் தனமே பலிக்கும் -என்கிறார் –

அதாவது –
கீழ் சொன்னபடி அன்றிகே –
அநாதி காலம் தனக்கு பரதந்த்ரமான ஆத்ம வஸ்துவை -கர்ம வ்யாஜத்தாலே சம்சரித்துப் போனவன் அன்றோ –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆனவன் இன்னமும் சம்சரிப்பிக்கில் செய்வது என் -என்று அவன் படியை நினைத்து பயப்படுகையும் –
முன் போல் அன்றிக்கே –
நமக்கு இப்போது ஆத்ம குணங்கள் உண்டாகையாலே -பேற்றில் கண் அழிவு இல்லை என்று –
தன் படியை நினைத்து பயம்  கெடுகையாம் அளவில் – தான் தமக்கு நாசகன் என்று பயப்படுகையும் –
ஈஸ்வரன் ரஷகன் என்று பயம் கெடுகையும் ஆகிற –
ஜ்ஞாத்ருத்வ வேஷம் இல்லாமையாலே -அஜ்ஞத்தையே சித்தித்து விடும் -என்கை –

——————————————————–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

அஜ்ஞதையே சித்திக்கும் -என்ற இத்தை தள்ளுகைக்காக -ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு –
பயத்ய ஸ்தானம் பண்ணினவர்கள் சங்கையை அனுவதிக்கிறார் –

அதாவது –
இப்படி ஆகில் -தத்வ வித அக்ரேசர் ஆன ஆழ்வார்கள் –
உள் நிலாவிய இவை ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்றும் –
காட்டிப் படுப்பாயோ -என்கிற படியே
விஷயங்களை காணில் முடியும்படியான என்னை -உள்ளே நிரந்தர வாசம் பண்ணுகையாலே
ஆந்த்ர சத்ருக்களாய் இருக்கிற இந்திரியங்கள் ஐந்தினாலும் நலிவு உண்ணும் படி பண்ணி –
ப்ராப்தமுமாய் போக்யுமுமான உன் திரு வடிகளைக் கிட்டாதபடி யாகவே
சரணாகதனான பின்பும் சம்சாரத்திலே வைத்து நலிய வெண்ணா நின்றாய் என்றும் –
மக்கள் தோற்றக் குழி தோற்றி விப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்று
மனுஷ்யர்களுடைய -கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அநு குணமாக
இன்னம் சம்சரிப்பிக்கிறாயோ என்று -இப்போது இப்போது போயிற்று என்னும்படி –
பய ஸ்தானமான ஆற்றம் கரையிலே வர்த்திக்கிற மரம் போல் -உன் ஸ்வாதந்த்ர்யத்தை
நினைத்து அஞ்சா நின்றேன் என்றும் அருளிச் செய்த
பாசுரங்களுக்கு நிதானம் என் என்னில் -என்கை-

———————————–

சூரணை -369-

பந்த
அனுசந்தானம் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது
பேறு இழவுகள் இரண்டும் அவனாலே என்னலாம்  படி -நிருபாதிக ரஷகன் ஆனவனோடு
தங்களுக்கு உண்டான சம்பந்தத்தினுடைய அனுசந்தானம் -என்கை –

—————————————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

பந்த அனுசந்தானத்தாலே இப்படி தன்னால்  வரும் அவற்றை -அவன் குறையாக சொல்லலாமோ என்ன –
ஆம் என்னும் இடத்தை -ச த்ருஷ்டாந்தமாக –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
க்ரீடார்தமாக தஐவிலே ஓடித் திரிகிற பிரஜை -அங்கே இடறி கால் நொந்தவாறே –
அழுது கொண்டு அகத்திலே வந்து -தனக்கு இவ்வேதனை வந்தது -தாயாலே யாக நினைத்து
அவள் முதுகிலே குத்துமா போலே -ஒரு உபாதி  பரயுக்தம் அல்லாமையாலே –
ஒழிக்க ஒழியாத பந்தத்தை உடையவனுமாய் -இச் சேதனனுடைய கர்மத்தோடு
பிரகிருதி ப்ராக்ருதங்களோடு வாசி அற நலிவை தவிர்க்கைக்கு சக்தனுமாய் இருக்கிறவன்
நலிவு பட விட்டு விலக்காது ஒழிந்தால் -அவன் இவற்றை இட்டு நலிவிக்கிறான் என்னலாம் -இறே

———————————————–

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –

விலக்காத மாத்ரம் கொண்டு -அவன் செய்தான் என்னலாமோ -என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
கிணற்றின் கரையிலே பிரஜை இருக்கிற படியைக் கண்ட மாதாவானவள் –
அப்பொழுது ஓடிச் சென்று -கிணற்றின் கரையின் நின்றும்  வாங்காது ஒழிந்தால் –
கிணற்றிலே பிரஜை விழுந்த அளவில் -தாய் அப்போதே சென்று எடுத்தாள் ஆகில் –
இப்ப்ரஜை விழுமோ -கிணற்றின் கரையில்  இருப்பை -இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது –
ஆனபின்பு -இவள் அன்றோ -தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே -என்கை –

———————————————

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

ஆனால் –
அப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு –
அனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி –
ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை
ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற
இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

———————————————

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இவ் அனுமதி த்வயம் பின்னை ஆவது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

இருவருக்கும் ஸ்வரூபம்-என்றது –
பர தந்த்ரனாயும்- ஸ்வதந்த்ரனாயும் இருக்கிற இருவருக்கும் ஸ்வ அசாதாரண ஆகாரம் என்றபடி -அதாவது –
பரதந்த்ரனான இவனுக்கு ஸ்வ ரஷ்யத்வ அனுமதி -ஸ்வரூப அதிரேகி அல்லாமையாலே -ஸ்வரூபம் –
ஸ்வ தந்த்ரனான அவனுக்கு ஸ்வ ரஷ்ய வஸ்து ரஷணத்தில் ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர அநு குண நிர்வாகண அர்த்தமான
சம்சார அனுமதி -ஸ்வாதந்த்ர்ய  வேஷம் ஆகையாலே -ஸ்வரூபம் -என்கை –

————————————-

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் இழவு பேறு களுக்கு அடி எவை என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் விஷயத்தை அநாதி காலம் இழக்கைக்கு  ஹேது –
முன் செய்த முழு வினை -என்னும் படி
அநாதிகால சஞ்சிதமான இவனுடைய கர்மம் –
இப்படி இழந்து கிடந்தவன் அவ்விஷயத்தைப் பெருகைக்கு ஹேது –
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்னும் படி
இரு கரையும் அழியப் பெருகும் -பகவத் கிருபை -என்கை –

————————————–

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

இங்கன் அன்றிகே -மாறிச் சொல்லும் அளவில் வரும் அனர்ததத்தை
அருளி செய்கிறார் மேல்-

அதாவது –
இப்படி அன்றிக்கே -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்-என்கிற இடத்தில் -போலே –
இழவுக்கு அடி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் –
பேற்றுக்கு அடி சேதன சத் குணம் -என்கிற
இழவு பேறு களுக்கு ஹேதுவை மாற்றிச் சொல்லில் –
ஈஸ்வரன் கை வாங்குகையாலே-அவன் திருவடிகளைப் பெறாமல்
இழந்து போகைக்கு உடலாம் -என்கை –
அதவா –
மற்றைப்படி -இத்யாதிக்கு –
இழவுக்கு அடி சேதன கர்மம் –
பேற்றுக்கு அடி ஈஸ்வர கிருபை -என்று
இழவு இவனாலும் -பேறு அவனாலுமாகச் சொன்னபடி அன்றிக்கே –
இழவு பேறுகள் இரண்டுக்கும் அடி -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே என்று
அநாதி காலம் இழந்ததுக்கும் அடி அவனாகச் சொல்லில் -அவன் கை
வாங்குகையாலே -ஒருகாலும் அவனைப் பெறாமே-இழந்து போகைக்கு
உடலாய் விடும் -என்னவுமாம் –

—————————————

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

இப்படி சொல்லும் அளவில் ஈஸ்வரன் கை வாங்கும் என்னும் அத்தை –
லௌகிக நியாயத்தை உபஜீவித்து கொண்டு தர்சிப்பிக்கிறார் –

அதாவது –
ஆழ்ந்த கிணற்றில் தன் கர்ம அநு குணமாக அவனவதாநத்தாலே விழுந்தவனை –
அருகு நின்றான் ஒரு க்ருபனானவன் எடுப்பதாக யத்தனிக்கும் அளவில் –
தான் விழுகிற போது-அவன் ஆசன்னனானவன்  என்கிற மாத்ரத்தை கொண்டு –
அவன் தன்னை தள்ளினனாக நினைத்து -இக் கிணற்றில் என்னைத்
தள்ளினாயும்  நீ அன்றோ -என்றால்-நான் செய்யாத கார்யத்தை இவன் சொல்வதே
என்று -சீற்றம் எழுந்து இருந்து -எடாமல் கை வாங்குகைக்கு உறுப்பு ஆம் போலே –
ஸ்வ கர்மத்தாலே சம்சாரம் ஆகிற  படு குழியில் விழுந்து கிடக்கிற தன்னை –
எடுக்க நினைக்கிற க்ருபவானனான ஈஸ்வரனை –
இத்தனை காலமும் என்னை சம்சாரத்தில் தள்ளி விட்டு வைத்ததாயும் நீ யே-என்றால்-
சீறிக் கை வாங்கி பட்டதுப் படுகின்றான் என்று விடுகைக்கு உறுப்பாம் இறே -என்கை –

————————————————-

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே-
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே

அப்படி சொல்லுகை ஈஸ்வரனுக்கு சீற்றத்துக்கு உடல் என்னும் இது
லௌகிக ந்யாயம் கொண்டு சொல்ல வேணுமோ –
தத்வ தர்சிகளான-திருமங்கை ஆழ்வார் -பூர்வோக்திக்க அனந்தரத்திலே –
தாமே அருளிச் செய்தார் இறே -என்கிறார் –

அதாவது –
இன்னம் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று –
ஈஸ்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே சம்சரிப்பிக்கிறான் ஆக சொன்ன இது –
கர்ம அநு குணமாக சம்சரிக்கிற ஆத்மாவை -சம்சாரத்தில் நின்று எடுக்கைக்கு
கிருஷி பண்ணிப் போரும் அவன் திரு உள்ளம் சீறுகைக்கு உடல் என்று நினைத்து –
கீழ் விண்ணப்பம் செய்த வார்த்தையாலே திரு உள்ளத்துக்கு சீற்றம் உண்டு என்ன
முதல் வார்த்தைக்கு அநந்தரம் -இழவுக்கு அடி அவனாக சொல்லுகை -நிக்ரஹ ஜனகம் -என்னும்
இவ் அர்த்தத்தை -முன்பு அப்படி அருளிச் செய்த தாமே – அருளிச் செய்தார்  -என்கை

—————————————–

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உளன் -என்ற பின்பும்
ஆகிலும் செப்புவன் -என்று முன்பு சொன்னது -தன்னையே சொல்லுகைக்கு
ஹேதுவை -ப்ரச்ன உத்தர ரூபேண-பிரகாசிப்பிகிறார் –

அதாவது –
கீழ் சொன்ன இத்தால் ஈஸ்வரன் திரு உள்ளத்துக்குச் சீற்றம் உண்டு என்று அறிந்தால் –
பின்னையும் இவ் வார்த்தையை கூசாமல் திரு முன்பே சொல்லும்படி எங்கனே -என்னில் –
அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் –
உன் சீற்றம் கண்டு அஞ்சி வாய் மூட ஒட்டாதபடி கரை இழந்து செல்லுகிற சம்சார ஆர்த்தியும் –
சீறி எடுத்து எறியிலும் வேறு புகல் இல்லாமையாகிற -அநந்ய கதித்வமும் –
சொல்லும்படி பண்ணும் -என்கை –
இத் திரு மொழி யிலே-11-8-
அடைய அருளாயே -நினைக்கும் தன் அருளே -6
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -7
தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் -9-என்று பல இடங்களிலும் அவன் அருளையும் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -1
காற்றத்திடை பட்ட கலவர் மனம் போலே ஆற்ற துளங்கா நிற்பன் -2-கலவர் -மரக்கலத்தில் இருப்பவர் –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் தாங்காது உள்ளம் தள்ளும் -3
இருபாடு எரி கொள்ளியின் உள் எறும்பு போல் உருகா நிற்கும் என் உள்ளம் -4-
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் -5-என்றும்- பல த்ருஷ்டாந்தகளாலும் தம்முடைய-
ஆர்த்தி
அநந்ய கதித்வங்களை யும் அருளி செய்தார்-இறே-

——————————————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இ றே

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி
பரம க்ருபாவானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றால் நினைத்தபடி எல்லாம் சொல்லலாம் இ றே என்கை –

———————————————-

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும்  படிக்கு பிரமாணம்  காட்டுகிறார் –

அதாவது –
சதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம்
வதார்ஹமபி ககுஸ்த்ச  க்ருபயா பர்யபாலயத் –ஸூ ந்தர காண்டம் -38- –என்று அபராதத்தை தீரக் கழியச் செய்து –
ப்ரஹ்மாஸ்ரத்துக்கு இலக்காய்-புறம் புகல் அற்றவாறே வந்து -திருவடிகளிலே விழுந்த காகத்தை – கிருபையாலே ரஷித்தார் ஆகையாலும் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -என்று –
பெருகைக்கு வருந்தி -வரம் கிடந்தது -பெற்ற தாயானவள் -இது செய்த தீங்கைக் கண்டு –
எறிந்து பொகட வேணும் சீற்றத்தை உடையவளாய் கொண்டு -கிட்ட வர ஒட்டாமல் தள்ளி விட்டாலும் -வேறு போக்கடி அற்று
சீறி எடுத்து எறிகிற அவளுடைய முகத்து இரக்கத்தையே நினைத்து -அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே –
என் அபராதத்தைக் கண்டு அருகு வராதபடி தேவரீர் தள்ளி விடப் பார்க்கிலும் –
திருவடிகள் அல்லது வேறு போக்கடி அற்று இருந்தேன் என்று -ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்கையாலும் –
சீறினாலும் காலை கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவன் -என்னும் இடம் சித்தம் -என்கை –
இப்படி ஆழ்வார் அருளி செய்த இவ் வர்த்தத்தை –
நிராஸ கஸ்யாபி நதாவதுத் சஹே மகேசஹாதும்  தவ பாத பங்கஜம்
ருஷா நிரச்தோசபி சிசுச்த நந்த்தயோ நஜாதுமாதுச் சரணவ் ஜிஹாசதி -என்று ஆளவந்தாரும் அருளி செய்தார் -இறே

ஆக
இவ்வளவும்
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் –
என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

த்ருதீய  பிரகரணம் சம்பூர்ணம் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை –353/354/355/356/357/358/359/360/361/362/263/364/365–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 22, 2012

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

தத் விஷய ப்ரச்னத்தை அநு வதிக்கிறார்-

பரகதமாய் தோற்றுகிற அது -ஸ்வ தோஷமான படி எங்கனே என்னில்-என்றபடி –

——————————————

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு சந்திர த்விதாதிகள் தோற்றுமா போலே –
நிர்தோஷமான விஷயங்களில் -தோஷம் தோன்றும்படியான -துர்வாசன துஷ்ட சித்தை யாகிற ஸ்வ தோஷத்தாலும் –
புத்ராதிகள் தோஷம் பித்ராதிகள் தாமாம் போலே அவர்களுக்கு உண்டான தோஷம்
தன்னதாம் படி அவர்களோடு தனக்கு உண்டான பந்த விசேஷத்தாலும் -என்கை –
ஸ்வ தோஷத்தாலும் -என்கிற இது அத்தலையில் தோஷ அபாவத்தை பற்றிச் சொல்லுகிறது –
மற்றை யது தோஷ வத்தையை அங்கீ கரித்து கொண்டு சொல்லுகிறது –

———————————–

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷத்தாலே என்னலாவது-தோஷம் தான் உண்டானால் அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது-
சந்திர த்வித்வ தர்சன ஹேதுவான சஷூர் தோஷம்- இல்லாத போது-சந்திர ஏகத்வமே தோற்றுமா போலே –
தோஷ தர்சன ஹேதுவான ஸ்வ சித்த தோஷம் இல்லாதபோது -பகவத் பாகவத விஷயங்களில் –
குண பிரதிபத்தியே நடக்கும் -என்கை-அது நடவாமையால் தோஷம் உண்டு என்று கொள்ள வேண்டும் -என்று கருத்து –

————————————–

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லையாகில் வரும் தோஷம் என்-என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
குண பிரதிபத்தி நடவாது ஒழிந்தால் -தோஷ பிரதிபத்தி இறே நடப்பது –
அந்த தோஷ ஜ்ஞானம் தானே -இவனுக்கு பகவத நிக்ரஹ ஹேதுவான தோஷமாம் –
இதடியாக வேறு ஒரு தோஷம் உண்டாம் என்ன வேண்டாம் -என்கை –
இத்தால் இது அவஸ்யம் பரிஹர நீயம் என்னும் இடம் சொலிற்று ஆயிற்று –

————————————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

இது தான் எல்லாம் சொல்ல  வேண்டுவது -இது தனக்கு அவகாசம் இவனுக்கு
உண்டானால் இறே என்கிறார் மேல் –

அதாவது -பகவத் பாகவத தோஷ சிந்தனம் ஆகிற இது -தனக்கு அவசரம் தான்
முதலிலே இல்லை -என்கை –

———————————

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

அது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை –
அமர்யாதா சூத்திர -வித்வேஷ மா ந மதரா கவி லோபமோ ஹாத்யஜ்ஞான பூமி –
அதிக்ராம ந் நா ஜ்ஞாந்தவ விதி நிஷே தேஷு பவதே
ப்யபித்ருஹ் ய ந் வாக்த்தீக்ருதி பிரவி பக்தாய சததம்
அஜாநந்ஜாநந் வாப  வத சஹா நீ யாக சிரத –
ஸ்ரீ ரெங்கேச த்வத் குணா நாமி வாச்மத் தோஷானாங்க
பாரத்ருச்வாய தோஹம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
அனவதிகமான தன்னுடைய தோஷ அனுசந்தானத்துக்கும் –
அந்த தோஷத்தை பாராமல் -அங்கீகரித்து அருளின -பகவானுடையவும் –
வேதம் வல்லார்களைக் கொண்டும் -என்றும் –
போத யந்த பரஸ்பரம் -என்றும் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -உறுமோ-என்றும் சொல்லுகிறபடியே –
புருஷகார உசாத் துணையும் -ப்ராப்யருமான பாகவதர்கள் உடையவும் –
சமஸ்த கல்யாண குணாம் ருதோததி-
அசங்க்யேய கல்யாண குண கணவ்க மகார்ணவ்-
எதா ரத்னா நிஜல தேர அசங்க்யேயாநிபுத்ரக
ததா குனாஹ்ய நந்தச்ய அசங்க்யேயா மகாதமன-
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குனான்
பத்ம புவோப்ய கம்யான்-என்றும் சொல்லுகிறபடியே
அசங்க்யேமாய் இருந்துள்ள  குண அனுசந்தானங்களுக்குமே காலம் போந்து -மற்று ஒன்றுக்கு அவகாசம் இல்லாமையாலே -என்கை –
இவற்றுக்கே காலம் போருகையாலே -என்கையாலே –
ஸ்வ குண ஸ்மரனத்துக்கு அவகாசம் இல்லை என்னும் இடம் அர்த்தாத் சித்தம் இறே –

—————————————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்க கடவன் –

ஆக –
மனசுக்கு தீமையாவது -என்று துடங்கி -இவ்வளவும்
பகவத் பாகவத தோஷ ஸ்மரணம் ஆகாது என்னும் இடமும் –
அவர்களுடைய நைர் தோஷமும் –
தோஷம் உண்டு என்று நினைக்கில் -அது தத் தோஷம் அன்று -ஸ்வ  தோஷம் என்றும் –
அது ஸ்வ தோஷம் ஆகைக்கு நிதானங்களும் –
ஸ்வ தோஷ பாவ சங்கைக்கு உத்தரமும் –
தோஷ பிரதிபத்தி நடக்கில் -அது தான் இவனுக்கு மகா தோஷம் என்றும் –
ஸ்வ தோஷ பகவத் பாகவத குண அனுசந்தானத்துக்கே காலம் போருகையால் இது தனக்கு இவனுக்கு அவசரம் இல்லை -என்றும்
அருளி செய்தார் கீழ்
இப்படி தனக்கு உத்தேச்யமான -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாமலும் –
நினைத்தான் ஆகிலும்  அது தன்னுடைய தோஷமாக நினைத்து இருக்க வேணும் என்று அருளி செய்த பிரசங்கத்திலே –
சம்சாரிகள் தோஷ விஷய அனுசந்தானமும் -இன்னபடியாக வேணும் என்கிறார் -மேல் –
அதாவது-
சம்சாரிகளுக்கு உண்டான பகவத் வைமுக்க்யம்- அநாத்ம ந்யாத்மா புத்தி- யச்வேஸ் ஸ்வ புத்தி –
முதலான தோஷம் கண்டால் -அந்த தோஷங்களை இட்டவர்களை இகழ்ந்து இவர்களுக்கும் நமக்கும் பணி என்று இராதே  –
அவர்களுடைய தோஷம் -தன்னுடைய தோஷம் என்று அனுசந்திக்க கடவன் -என்கை-

—————————————

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அதுக்கு ஹேது என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
தனக்கு சேஷிகளான-பகவத் பாகவதர்கள் தோஷம் ஸ்வ தோஷமாக அனுசந்தைகு ஹேது அவர்களோடு தனக்கு உண்டான சம்பந்த ஞானம் ஆனாப் போலே –
சம்சாரிகளுடைய தோஷத்தை தன்னுடைய தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது – நாராயணத்வ பிரயுக்தமான -சம்பந்த ஞானம் -என்கை –
எல்லோர்க்கும் ஈச்வரனோடு சம்பந்தம் ஒத்து இருக்கையாலே -அவ்வழியாலே தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உண்டு ஆகையாலே –
தனக்கு அவர்ஜ நீயரான -பிரகிருதி பந்துக்களுக்கு வந்த தோஷம் தனக்கு வந்ததாக நினைத்து இருக்குமோ  பாதி -சம்சாரிகளுக்கு உண்டான தோஷம்
தன்னுடைய தோஷம் என்றே நினைக்கக் குறை இல்லை -இறே –

————————————

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இது தான் வேண்டுவது -அவர்கள் தோஷம் தான் -இவனுக்கு தோன்றில் இறே –
அது தான் முதலில் இவனுக்கு தோன்றாது என்கிறார் மேல் –

அதாவது –
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
பரம பதத்தில் -நித்ய சூரிகள் பரிந்து பரிசர்யை பண்ண இருக்கும் பெருமை உடையனாய் வைத்து -திருக் கடல் மல்லையிலே வந்து -தங்களை பெறுகைக்காக-
தரைக் கிடை கிடக்கிற நீர்மையை உடையவனை -இது ஒரு நீர்மை இருக்கும் படி என் -என்று
அந்நீர்மையிலே தோற்று -அனவரதம் அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க –
அவனிடை ஆட்டம் கொண்டு கார்யம் அற்று கேவல தேக போஷாணாதி பரராய் இருக்கிற சம்சாரிகளை க்ஷண காலமும் நினையோம் -என்கையாலே –
சம்சாரிகள் தோஷம் தான் இவ் அதிகாரிக்கு தோன்றாது -என்கை –
திரு மங்கை ஆழ்வார் அருளி செய்த இது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லார்க்கும் ஒக்கும் இறே –

——————————————–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

தோன்றாது -என்னப்  போமோ –
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
கொண்ட பெண்டிர் -இத்யாதியாலே ஆழ்வாருக்கு உள்பட்ட சம்சாரிகள் குற்றம்
தோன்றிற்று இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சம்சாரிகள் தோஷம் தோன்றுவது -அந்த தோஷங்களின் நின்றும்
அவர்களை நிவர்திப்பிக்கைக்காக -என்கை –
சொன்னால் விரோதம் -முதலான வற்றால் ஆழ்வாரும் அதில் திரு உள்ளம் வைத்தது –
அசேவ்ய சேவ்யாதிகளின்  நின்றும் அவர்களை நிவர்திப்பிக்கைகாக இறே –
அது எல்லார்க்கும் ஒக்கும் என்று கருத்து –

——————————————

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

ஆக இவ் அதிகாரி சம்சாரிகள் தோஷம் கண்டால் அனுசந்திக்கும் பிரகாரமும் –
தத் தோஷம் தான் இவனுக்கு தோன்றாது என்னும் இடமும் –
தோன்றுவது இன்னதுக்காக என்றும் அருளிச் செய்தார் கீழ் –
இப்படி காதா சித்தமாக தோன்றும் சம்சாரிகள் தோஷங்களை ஸ்வ தோஷமாக நினைத்தும் –
தன் நிவர்தகனாயும் போரும் அளவன்றிகே -ஸ்வ விஷயத்திலே குற்றங்களை செய்தால்
இவன் இருக்க வடுக்கும் படி அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
ஏகாஷீ-ஏக கர்ணி -முதலான ஏழு நூறு ராஷசிகள் -ஏக திவசம் போலே பத்து மாசம் தர்ஜன பர்த்ச்னம் பண்ண இருந்த பிராட்டி -இவர்கள் அப்படி செய்த குற்றத்தை –
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தன் விஷயமாக பிறர் செய்த குற்றங்களை -பகவத் விஷயத்தில் ஆதல் –
பாகவத விஷயத்தில் ஆதல் -மறந்தும் விண்ணப்பம் செய்ய கடவன் அல்லன் -என்கை –

————————————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இது கிம் புனர் நியாய சித்த மாம்படி -ஈஸ்வரன் படியை அருளிச் செய்கிறார் –

அதாவது-
எதிர் சூழல் புக்கு -என்கிறபடியே -தன் னுடைய சீல ஸௌலப்யாதிகளை காட்டி -சம்சாரி சேதனரை தப்பாமல் அகப்படுத்தி கொள்ளுவதாக வந்து அவதரித்து –
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-அவர்கள் அப்படி அனுகூலராய் தோன்றாது ஒழிந்தாலும்-இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்
-நாம் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம்  இறே -என்று அது தானே போக்யமாக இருப்பர்-அதுக்கு மேல் அவர்கள் வைமுக்க்யம் பண்ணினார்கள்  என்று
அவர்கள் குற்றத்தை -தனி இருப்பிலே பிராட்டிக்கும் அருளிச் செய்யார் -என்கிற –
சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டில் சேதனர் செய்த குற்றங்களை -தன் திரு உள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு பிராப்தனான சர்வேஸ்வரனும்
உள் பட தன் திரு பவளம் திறந்து அருளிச் செய்யாதே -தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் -அறிய வல்ல சர்வஞா விஷயங்களுக்கும் மறைக்கும் என்று
சொல்லா நின்றது இறே -என்கை –
இத்தால் அவன் உட்பட இப்படி மறையா நின்றால்- இவனுக்கு பின்னை சொல்ல வேணுமோ -என்றபடி –

————————————-

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிகப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

இப்படி உத்தேச்ய விஷயங்களில் அறிவியாது இருக்கும் மாத்ரம் போராது –
குற்றம் செய்தவர்கள் விஷயமாக -ஷம தயாதிகளும்-நடக்க வேணும் என்கிறார் -மேல் –

1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை-யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால்  செய்யலாவது ஓன்று இல்லை இறே  –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால்
தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியை பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே –
இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு -ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் –
தனக்கு பிரதி கூலங்களாகவும் – நினைத்து இருக்கையாலே -தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல் –
தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல் -செய்தால் உகக்குமா போலே – அவர்கள் அளவில் பிறக்கும் -ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும் -நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான
செறுப்புக்களை செய்தும் -இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும் –
க்ருதக்ஜ்ஜை – நடக்க வேணும் -என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே
இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-

ஆக
இப் பிரகணத்தால்-ஹித உபதேச சமயத்தில் -விபிரதி பத்தி விசேஷங்களும் -308-ஆரம்பித்து-
தத் ரஹிதமாக உபதேசிக்க வேணும் என்னும் இடமும் –
உபதேச சாஷாத் பலமும் -311-
உபதேஷ்டாவின் ஆசார்யத்வமும் சித்திக்கும் வழிகளும் –
வி பிரதிபத்தி யுடன் உபதேசிக்கில் உபயர்க்கும் ஸ்வரூப சித்தி இல்லாமையும் -312-
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313-
சாஷாத் ஆச்சர்யத்வம் இன்ன மந்த்ரத்தை உபதேசித்தவனுக்கு என்றும்-315- – சொல்லுகையாலே –
சதாசார்யா லஷணத்தையும் -308-320-
தத் அநந்தரம்-
சச் சிஷ்ய லஷணத்தையும் –321-
தத் உபயருடைய பரிமாற்றங்களையும் –
சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் -தீ மனம் கெடுத்தாய் -இத்யாதி படியே
யாவச் சரீர பாதம் உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் -எனும் அத்தையும் –
மனசுக்கு தீமை என்னது என்னும் இடத்தையும் –
அதில் உபபாத நீயாம்சத்தின்  உபபாதநத்தையும்
தத் பிரசங்கத்திலே-
மற்றும் இவனுக்கு அபேஷிதமான அர்த்த விசேஷங்களையும் -பிரதிபாதிக்கையாலே –
கீழ் சொல்லி வந்த த்வய நிஷ்டனான அதிகாரிக்கு –
தத் உபதேஷ்டாவான ஆச்சார்ய விஷயத்தில் உண்டாக வேணும் பிரதி பத்திய அனுவர்தன பிரகாரங்களும் சொல்லப் பட்டது –

ஆறு பிரகரணங்களில் நான்காவதான-சதாசார்யா அனுவர்தன பிரகரணம் -முற்றிற்று –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருக் மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -341/342/343/344/345/346/347/348/349/350/351/352–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 22, 2012

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை -என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –
நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை

————————————

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

———————————————-

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –

அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி  உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

—————————————-

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

———————————————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

அது என்ன அருளிச் செய்கிறார் –

ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –

—————————————–

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

ஆசார்யனுக்கு உகப்பாக இவன் பண்ணும் கைங்கர்யம் தான் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமாய் இருக்கையாலே –
பிரவ்ருத்தி ரூபமானவற்றை அருளி செய்த அநந்தரம்-
நிவ்ருத்தி ரூபமானவற்றை அருளிச் செய்கிறார் மேல்-
அவை தன்னை உத்தேசிக்கிறார் -இத்தால் –

—————————————–

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

இப்படி உத்தேசித்த அவற்றின் பிரகாரங்களை அடைவே
விசதீகரிக்கிறார் மேல்-

பகவத் த்ரவ்யம் -என்கிறது –
பிறர் நன் பொருள் -என்னும் படி -ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ச்ப்ருஹநீயமான ஆத்ம த்ரவ்யத்தை –
ஸ்வாதந்த்ர்யம் ஆவது -சேஷத்வைக நிரூபநீயமானவற்றை தனக்கு உரித்தாக நினைத்து இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் ஏக சேஷமானவற்றை தத் இதர சேஷமாக நினைத்து இருக்கை –
இது தான் மாதா பித்ராதி தேவதாந்திர பர்யந்தமாய் இருக்கும் –
இவை இரண்டும் பிரதம அஷரத்தில் சதுர்தியாலும் -மத்யம அஷரத்தாலும் கழிக்கப் படுகிறவை இறே –
இது தன்னை –
கின்தேந நக்ருதம்பாபம் சோரேனாதமா பஹாரினா -என்று சகல பாப மூலமாக சொல்லப்படா நின்றது இறே –
பகவத் போஜனம் இத்யாதி -ரஷணத்தை பகவத் போஜனம் என்கிறது
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்-அவனுக்கு பசித்தவனுக்கு ஊண் போலே தாரகமாய் இருக்கையாலே –
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட -என்கிற இடத்தில் –
ரஷணம் அவனுக்கு தாரகமாய் இருக்கையாலே -உண்ட என்கிறது -இல்லையேல் -காக்கும் -என்ன அமையும் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்தது –
ஏவம் பூதமான அவனுடைய ரஷகத்வத்தை விலக்குகையாவது-அவ ரஷணே -என்கிற
தாதுவாலே நிருபாதிக சர்வ ரஷகனாக சொல்லப்படுகிற அவனுக்கு ரஷிக்க இடமறும்படி-ஸ்வ யத்னத்தாலே  யாதல் –
பிறராலே ஆதல்-தன்னை ரஷிக்கையில் பிரவிருத்தன்  ஆகை-
இது தான் பகவத் ஏக ரஷ்யத்வ பிரதிபாதகமான -நமஸால்-கழிக்கப் படுகிறது இறே –

———————————————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

குரு பரிபவம் ஆவது -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்ட்டிக்காது ஒழிகையும் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –
மந்த்ரபரிபவம் ஆவது -அர்த்தத்தில் விச்ம்ருதியும்- விபரீதார்த்த பிரதிபத்தியும் –
தேவதா பரிபவம் ஆவது -கரண த்ரயத்தையும்- அப்ராப்த விஷயங்களிலே பிரவணம் ஆக்குகையும் –
தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் –

அவன் ரஷித்து அருளும் க்ரமம் தான் என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
சர்வ ரஷகனான அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணம் என்கிற
பிரபந்தத்திலே விசதமாக சொன்னோம் -அங்கே கண்டு கொள்வது என்கை –
அதிலே அவனை ஒழிந்தார் அடங்கலும் ரஷகர் அல்லர் என்னும் அத்தை பிரதிபாதித்த அநந்தரம் –
ஈஸ்வரன் மாதா பிதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் –
பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து -என்கிறபடியே
தன் உருக்கெடுத்து வேற்று உருக் கொண்டு தான் முகம் காட்டி இன் சொல் சொல்லியும் –
என்று துடங்கி -இவனே எல்லார்க்கும் ரஷகன் -என்கிறது அளவாக
அவனுடைய ரஷகத்வ க்ரமத்தை ஸூவ்யக்தமாக அருளிச் செய்தார் இறே

-குரு பரிபவம் -இத்யாதி -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்டியாது ஒழிகை -யாவது –
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக அவன் அருளிச் செய்து கேட்ட த்யாஜ்ய உபாதேய ரூபமான –
அர்த்த விசேஷங்களுக்கு தகுதியாய் இருந்துள்ள த்யாக ஸ்வீ கார ரூபமான அனுஷ்டானத்தை பண்ணாது ஒழிகை –
அநதிகாரர்களுக்கு உபதேசிக்கையாவது -தனக்கு தஞ்சமாக அவன் உபதேசித்த
சாரார்தங்களை நாஸ்திக்யாதிகளாலே-இதுக்கு அதிகாரி இல்லாதவர்களுக்கு
க்யாதி லாபாதிகளை நச்சி உபதேசிக்கை-
மந்திர பரிபவம் -இத்யாதி -அர்த்தத்தில் விச்ம்ருதி யாவது -ஆசார்யன் அந்த மந்த்ரத்துக்கு அருளிச் செய்த
யதார்த்தங்களை பலகாலும் அனுசந்தித்து நோக்கிக் கொண்டு போருகை அன்றிக்கே -ஒவ்தாசீந்த்யத்தாலே மறந்து விடுகை –
விபரீதார்த்த பிரதிபத்தி -யாவது -ஆசார்யன் அருளிச் செய்த -பிரகாரம் அன்றிகே –
மந்த்ரத்துக்கு விபரீதமாய் இதுக்கும் அர்த்தங்களை இதுக்கு அர்த்தம் என்று ப்ராந்தியாலே பிரபத்தி பண்ணி இருக்க்கை-
தேவதா பரிபவம் இத்யாதி -கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களில் பிராவண்யம் ஆக்குகை -யாவது –
விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் –
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை-என்கிறபடியே- பகவத் பரிசர்யர்த்தமாக ஸ்ருஷ்டங்களாய்
உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கை தொழவே -என்கிறபடியே
அவனை நினைக்கைக்கும் -ஸ்துதிக்கைகும் -வணங்குகைக்கும்-உறுப்பான மனோ வாக் காயங்களை -ஸ்வரூபம் பிராப்தம் அல்லாத
ஹேய விஷயங்களில் -மேட்டில் நீர் பள்ளத்தில் விழுமா போலே பிரவணமாம் படி பண்ணுகை –
தத் விஷயத்தில் பரவணம் ஆகாது ஒழிகை யாவது -மால் கொண்ட சிந்தையராய் –
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
ஸ்வரூப ப்ராப்தமான அவ் விஷயத்தில் மண்டி விழும்படி பண்ணுவியாது ஒழிகை –
ஆக –
மந்தரே தத் தேவதா யாம்ச ததா மந்திர பிரதே குரவ் த்ரிஷூ பக்தி  ச்ஸ்தாகார்யா-என்றும் –
மந்திர நாதம் குரும் மந்த்ரம் சமத்வே நானுபாவயேத்-என்றும் –
பூஜ்யமாக சொல்லப் படுகிற இம் மூன்று விஷயத்தையும் பரிபவிக்கை யாவது இவை ஆயிற்று –

——————————————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக இப்படி ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக செய்ய வேண்டும் அவையும் –
தவிர வேண்டும் அவையும் -அருளிச் செய்தாரார் நின்றார் கீழ் –
இன்னும் அவனுக்கு அபேஷிதமாய் இருப்பது ஒன்றை அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
இவ் அதிகாரிக்கு சரீரத்தோடு இருக்கும் காலம் இத்தனையும் -மகோ உபாகாரனான ஆசார்யன் பக்கல்-
என்னுடைய தீய மனசை போக்கினாய் –
அநந்ய பிரயோஜனமாக அனுகூல விருத்திகளை பண்ணும் மனசை தந்தாய் –
என்று உபகார ஸ்ம்ருதி அநு வர்த்திக்க வேணும் என்கை-

—————————————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பாகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

மனசுக்கு தீமை யாவது என் என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஸ்வ குணத்தை நினைக்கையாவது -சம தம ஆத்ம குணங்கள் தனக்கு உண்டானாலும் –
நிறை ஒன்றும் இலேன் –
நலம் தான் ஒன்றும் இலேன் –
என்கிறபடியே -நமக்கு ஒரு ஆத்ம குணமும் இல்லை என்று தன வெறுமையை அனுசந்திக்க வேண்டி இருக்க –
இவை எல்லாம் நமக்கு இப்போது உண்டு என்று தனக்கு உண்டான சத் குணங்களை போரப் பொலிய நினைக்கை –
பகவானுடைய தோஷத்தை நினைக்கை யாவது –
1-தனக்கு பரதந்த்ரமான இவ் ஆத்ம வஸ்து -தன் உபேஷையாலே-அநாதிகாலம் கர்மத்தை வியாஜமாக்கி கை விட்டு இருந்தவன் –
2-அவ்வளவும் அன்றிக்கே -நிர்தயரைப் போலே -யதா கர்ம  பல தாயியாய் நிரயங்களிலே தள்ளி -அறுத்து அறுத்து தீர்த்துமவன் –
3-கைக் கொண்டாலும் -நிரந்குச ஸ்வ தந்த்ரன் ஆகையாலே இன்னபோதுஇன்ன செய்யும்  என்று விச்வசிக்க ஒண்ணாதவன் என்றால் போலவும் –
4-கிருஷ்ண அவதாரத்தில் ஸ்வைர விஹாரங்களை இட்டு தர்ம சம்ஸ்தாபனம்
பண்ணப் பிறந்தவனுக்கு இங்கன் செய்கை முறைமையாய் இருந்தது இல்லையோ- என்றால் போலவும் நினைக்கை –
அல்லது –
சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்தில் நினைக்கலாவது ஒரு தோஷம் இல்லை இறே-
இனி பாகவத தோஷத்தை நினைக்கை யாவது –
திருமேனி யோடு இருக்கையாலே மேல் எழத் தோற்றுகிற ஆகாரங்களை இட்டு
பிரகிருதி வஸ்யர் அஹங்கார க்ரஸ்தர் என்றால் போலே நினைக்கை –
ஆக-இது -ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷத்தையும் -நினைக்கை யாவது –

——————————————

சூரணை-351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

ஆனால் தனக்கு சிலம் குணம் உண்டாய் இருக்க -அது நினைக்கலாகாதோ என்கிறாப் போலே –
அத் தலைக்கும் சில தோஷம் உண்டாய் இருக்க நினைக்கலாகாதோ-என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் பாகவத விஷயங்களிலே தோஷம் நினையாது ஒழிகிறது-
தனக்கு குணம் உண்டாய் இருக்க -அது நினையாது ஒழிகிறாப் போலே –
உண்டாய் இருக்க நினையாது ஒழிகிறது அன்று -முதலிலே இவ் விஷயங்களிலே அது இல்லாமையாலே -என்கை-
எங்கனே என்னில் –
1-சர்வ முக்தி பிரசங்கம் வாராதபடி தான் இட்ட கட்டளையிலே அங்கீகரிக்கைக்காக –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்றும்
எதிர் சூழல் புக்கு -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஆத்மாக்களுடைய உஜ்ஜீவனத்துக்கு ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலே
கிருஷி பண்ணிக் கொண்டு போருகையாலே -அநாதி காலம் உபேஷிகனாய் கை விட்டு இருந்தான் என்ன ஒண்ணாது –
2-நிர்த்தயரைப போலே -கர்ம அநு குணமாக தண்டிக்கிறதும் -மண் தின்ன பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் தாயைப் போலே
ஹித பரனாய் செய்கையாலே -உஜ்ஜீவனத்துக்கு உடலாம் இத்தனை –
3-நிரங்குச ஸ்வாதந்த்ர்யம் பூர்வம் பந்த ஹே துவாய் போந்ததே ஆகிலும் -கிருபா பரதந்த்ரனாய் அங்கீ கரித்த பின்பு -நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடு
சம போக பாகி ஆக்கும் அளவில் -நிவாகர் அற செய்கைக்கு உறுப்பாக இத்தனை ஆகையால் ஸ்லாக்யமாம் இத்தனை –
4-கிருஷ்ண அவதாரத்திலே ஸ்வைர விஹாரம் -யதிமே பிரமசர்யம் ஸ்யாத்-என்கிறபடியே தனக்கு இந்த போகத்தில் ஒட்டு இல்லாமையை வெளி இடுக்கைக்காகவும் –
கோபயா காமாத் -என்கிறபடியே அவ்வழியாலே அவர்களை தன் பக்கல் ப்ரவணராக்கி யுத்தரிப்பிக்கைகாவும் செய்தார் ஆகையாலே -குணம் அத்தனை அல்லது குற்றமன்று –
இனி -பாகவதர்களும் – குற்றம் இன்றி குணம் பெருக்கி -என்கிறபடியே -நிர்தோஷராய்-நிரவதிக குணராய் இருக்கையாலே
உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் -அவர்கள் பக்கலிலும் காணலாவது தோஷம் இல்லை இறே-
மற்றும் இப்புடைகளிலே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றித்தாகில் பரிகாரங்கள் கண்டு கொள்வது –
இவை எல்லாம் திரு உள்ளம் பற்றி ஆயிற்று -இல்லாமையாலே -என்று இவர் அருளிச் செய்தது –

————————————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பரதோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் இல்லை என்று ஸ்வ பஷத்தால் சாதித்தார் கீழ் –
இனி பர தோஷத்தால் -தோஷ சத்பாவத்தை அங்கீகரித்து கொண்டு –
தத் பரிகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
கீழ் சொன்னபடி அன்றிக்கே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் உண்டு என்று நினைக்கில் –
அவர்கள் பக்கல் தனக்கு தோற்றுகிற தோஷம் -அவர்கள் தோஷம் அன்று –
தத் த்ரஷ்டாவான தன்னுடைய தோஷம் -என்கை –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்-

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–327/328/329/330/331/332/333/334/335/336/337/338/339/340–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 21, 2012

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

இருவரும் இரண்டையும் அந்யோந்யம் நடத்தும் க்ரமம் என் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு இரண்டையும் நடத்தும் இடத்தில் -தன் ஸ்வரூப அநு குணமாக
ஆச்சார்ய முக உல்லாசமே புருஷார்த்தம் என்று நினைத்து -தன்னுடைய கிஞ்சித் காராதிகளாலே –
தன் ஆசார்யனுக்கு சர்வ காலமும் பிரியத்தை நடத்திப் போரக் கடவன் –
மங்களா சாசன பரனாகையாலே-இவ் விபூதி ஸ்வாபத்தால் திரு உள்ளத்தில் ஒரு கலக்கம்
வாராது ஒழிய வேணும் என்றும் -அப்படி ஏதேனும் ஓன்று வந்த காலத்தில் -இத்தை போக்கிக் தந்து
அருள வேணும் என்று பிரார்த்தித்து ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் -என்கை –
ஆசார்யன் மாறாடி நடத்துகை -யாவது -ஹித ஏக பரனாகையாலே -இவனுக்கு ஸ்வரூப ஹானி வாராதபடிக்கு
ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ச்க்காலித்யம் பிறவாமல் நியமித்து –
சர்வ காலமும் -நல்வழி நடத்திக் கொண்டு போருகையாகிற ஹிதத்தை தான் நடத்தி –
த்ருஷ்டத்தில் சங்கோசத்தாலே இவன் மிகவும் நலங்கும் அளவில் -இருந்த நாளைக்கு
இவன் நலங்காமல் இவையும் அவனுக்கு உண்டாம்படி திரு உள்ளம் பற்றி அருள வேணும்
என்று அர்த்தித்து -ஈஸ்வரனைக் கொண்டு பிரியத்தை நடத்தக் கடவன் -என்கை —

———————————————

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ் ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

இப்படி செய்து போரும் இடத்தில் இருவருக்கும் இரண்டும் சம பிரதானமாய் இருக்குமோ –
என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் சேஷ பூதன் ஆகையாலே சேஷியான ஆசார்யனுடைய ப்ரீதியில் ஊற்றமாய் போரும் –
ஆசார்யன் பரம க்ருபாவான் ஆகையாலே -தன்னுடைய சிஷ்யனான இவன் சம்சாராத் உத் தீர்ணனாய் –
உஜ்ஜீவிக்கையிலே ஊற்றமாய் போரும் என்கை –
ஆகையால் சிஷயனுக்கு பிரிய கரணமும்- ஆசார்யனுக்கு ஹித கரணுமுமே- பிரதானம் -என்று கருத்து –

———————————————

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

கீழ் சொன்னவற்றால் பலிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுடைய பிரிய கரணமும்
ஆசார்யன் சிஷ்யனுடைய ஹித  கரணமும்
பிரதானமாக நடத்திப் போருகையாலே -சிஷ்யனான இவன் ஆசார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமாக போருகை ஒழிய –
அநிஷ்ட கரணாதிகளாலே நிக்ரகத்துக்கு விஷயம் ஆகைக்கு இடம் தான் முதலிலே இல்லை என்கை –
ஆகையாலே -என்று உகப்பிலே ஊன்றிப் போரும் என்று சொன்னது ஒன்றையும் அநு வதிக்கிறதாகவுமாம்-

—————————————-

சூரணை -330-

நிக்ரகத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

பிரகிருதி சம்பந்தத்தோடு இருக்கிறவனுக்கு -எப்போதுமொரு படி பட்டு இருக்குமோ –
காலுஷ்யங்கள் உண்டாகாதோ -அதடியாக நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது –
அந்த நிக்ரஹம் இரண்டு தலைக்கும் -எங்கனே யாகக் கடவது -என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநிஷ்ட கரணாதிகள் அடியாக ஆச்சார்ய நிக்ரஹதுக்கு பாத்ரமாம் தசையில் -அந்த நிக்ரஹம்
சிஷ்யனான இவனை யபதே பிரவர்த்தன் ஆகாத படி நியமித்து நல்வழி நடதுக்கைக்கு
உறுப்பாகக் கொண்டு -ஹித ரூபமாய் இருப்பது ஓன்று
ஆகையாலே -இப்படி நம்மை நிக்ரஹிப்பதே என்று -இவன் நெஞ்சு உளைதல்-
இவனை இப்படி நிக்ரஹிக்க வேண்டுகிறதே என்று ஆசார்யன் நெஞ்சு உளைதல் –
செய்கை அன்றிக்கே -நிக்ரஹ விஷயமான இவனுக்கும் -நிக்ரஹ ஆஸ்ர்யமான
ஆசார்யனுக்கும் -அங்கீகார்யம் -என்கை

—————————————–

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்
த்யாஜ்யம் –

நிக்ரஹம் உபாதேயம் ஆகில் -நிக்ரஹ காரணமும் உபாதேயம் ஆகாதோ என்ன -அது
த்யாஜ்யம் என்கிறார் –

அதாவது –
நிக்ரஹம் உபாதேயம் என்று நினைத்து மீளவும் தத் காரணத்தை செய்ய ஒண்ணாது –
யாதொரு காரணத்தாலே நீரிலே நெருப்பு எழுமா போலே -தன் விஷயத்தில் குளிர்ந்து தெளிந்து
இருக்கிற -ஆச்சார்ய ஹிருதயத்தில் நிக்ரஹம் எழுந்து இருந்தது -அந்த காரணத்தை
மறுவலிடாதபடி இட வேணும் -என்கை-

————————————————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

கீழ் சொன்ன ஆச்சார்ய நிக்ரஹம் ஹித ரூபம் என்று வைதமாக உபாதேயமாம்
அளவன்றிக்கே -இவனுக்கு பிராப்ய கோடி கடிதமாய் இருக்கும் என்னும் அத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது ஸ்வ ஆசார்யன் ஸ்வ விஷயத்தில் -ஹித ரூபேண பண்ணுகிற நிக்ரஹம் தான் –
ஸ்வ விரோதி நிவ்ருத்திக்கு உறுப்பாகையாலே-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –
செய்யேல் தீவினை -இத்யாதிகளில் சொல்லுகிற
பகவந் நிக்ரஹம் போலே புருஷார்த்த கோடியிலே அந்தர்பூதம் -என்கை-
ஆசார்யன் அர்த்த காமங்களிலே நசை அற்றவன் ஆகையாலே -அவை ஹேதுவாக பொறுக்கவும் வெறுக்கவும் பிராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தானாகில் அதுவும் பிராப்ய அந்தர்கதமாக கடவது -என்று
இது தன்னை மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே –

———————————————-

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண-
பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –

அதாவது –
உஜ்ஜீவன பரனான ஆசார்யன் உஜ்ஜீவ விஷுவாய் வந்து -உபசத்தி பண்ணி –
உகப்பிலே ஊன்றி போகிற -சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை -பிரேம அதிகமாகவும் –
ஒரு பழுது வாராதபடி ஏகாக்ர சித்தனாய் கொண்டு -உபதேசாதிகளாலே நோக்கிக் கொண்டு போரக் கடவன் –
பிரிய பரனான சிஷ்யன் -தன்னுடைய உஜ்ஜீவன பரனாய்-தன் ஸ்வரூப ரஷணமே
நோக்கிக் கொண்டு போருகிற ஆசார்யனுடைய திருமேனியை -உசித கைங்கர்யங்களாலே –
சர்வ காலமும் -ஏகாக்ர சித்தனாய் நோக்கிக் கொண்டு போரக் கடவன் -என்கை –

——————————————-

சூரணை -334-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கரமுமாய் இருக்கும் –

இப்படி இருவரும் இரண்டும் பேணினால் -இரண்டு தலைக்கும்
பலிக்கும் அத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆச்சார்யரானால் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணுகையும் –
சிஷ்யனால் ஆசார்யனுடைய தேகத்தை பேணுகையும் -ஸ்வ அசாதாரணங்கள்
ஆகையாலே -இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -அஹம் அன்னம் -என்கிறபடியே –
அவனுக்கு போக்கியம் ஆகைக்கு யோக்யமாய் வைத்து -அநாதி காலம் அப்படி
விநியோகப்படப் பெறாமல் கிடந்த இவன் ஸ்வரூபம் –
தாத்ருச விநியோக அர்ஹமாய் திருந்தும்படி பேணிக் கொண்டு போருகையும் –
நன்கு என்னுடல் அங்கை விடான் -என்கிறபடியே -அவனுக்கு விட்டு பிடிக்க சஹியாத படி
போக்யமாய் இருக்கிற ஆச்சார்ய விக்ரஹத்தைப் பேணிக் கொண்டு போருகையும் –
பகவானுக்கு  மிகவும் உகப்பு ஆகையாலே –
இவை தான் வஸ்து கதயா பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் -என்கை –

———————————————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

இப்படி வியவச்திததமாக வேணுமோ-ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணத்திலும்-
சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷனத்திலும் அந்வயம் உண்டானால் வரும் அது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
தன்னுடைய தேக யாத்ரையில் தான் உபேஷகனாய் இருக்க –
சிஷ்யன் இதுவே நமக்கு ஸ்வரூபம் என்று தன்னுடைய தேகத்தை பேணிக் கொண்டு போருகை ஒழிய –
தன்னுடைய தேகத்தை தான் ரஷிக்கை யாகிற இது -ஆசார்யனுக்கு -ஆசார்யத்வம்  ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –
தான் ஆசார்யன்  பக்கலிலே ந்யச்த பரனான பின்பு -தன் ஸ்வரூபத்தை அவன் பேணிக் கொண்டு போரக் கண்டு இருக்கை ஒழிய-
தான் தன் ஆத்ம ரஷணம் பண்ணுகை யாகிற இது -சிஷ்யனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி -என்கை –
ஆகையால்-மறந்தும் -சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணமும்- ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணமும்
கர்த்தவ்யம் அன்று -என்றது ஆயிற்று –

———————————————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இனி ஆசார்யனும் சிஷ்யனும் தம் தாமுக்கு வியவச்திதங்களான ஆத்ம ரஷண-தேக ரஷணங்களை
பண்ணும் இடத்தில் அவசியம் பரிஹர நீயங்களான விரோதிகளை அருளிச் செய்கிறார்-

அதாவது
ஹிதபரனான ஆசார்யன் -ஸ்வ உபதேசாதிகளால் சிஷ்ய ஆத்ம ரஷணம்
பண்ணும் இடத்தில் -நான் ரஷித்து கொண்டு போகிறேன் -என்கிற அஹங்காரம் –
ஆச்சார்ய பரதந்த்ரம் ஆகிற தன் அதிகார விரோதி –
பிரிய பரனான சிஷ்யன் -த்ரவ்யாதிகளாலே ஆச்சார்ய தேக ரஷணம் பண்ணும் இடத்தில் –
என்னுடைய த்ரவ்யங்களாலும் கரணங்களாலும் இப்படி ரஷித்து கொண்டு போகிறேன் -என்கிற மமகாரம் –
சரீர அர்த்த பிராணாதிகள் எல்லாம் ஆச்சார்ய சேஷம் என்று இருக்கக் கடவ -தன் அதிகாரி விரோதி -என்கை –

————————————–

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தம் தாமுடைய தேக ரஷண தசையில் பிரதிபத்தி
விசேஷங்களை வகுத்து அருளி செய்கிறார் மேல் –

சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத் -என்கிறபடியே சிஷ்ய சர்வமும் -அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை –
அவனது என்னும் நினைவு அன்றிக்கே -தன்னது என்றே வாங்கி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் -என்றது –
தனக்கு ஓர் உடைமை இன்றிக்கே -சகலமும் ஆச்சர்ய சேஷம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக விநியோகம் கொள்ளும் அவற்றை -ஆசார்யன் உடைமை என்று
பிரதிபத்தி பண்ணி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

——————————————-

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆசார்யன் தேக ரஷணத்தில் வந்தால் சிஷ்யன் தனக்கு உள்ளது எல்லாம்
அங்குற்றை உடைமை என்னும் நினைவாலே கொடுக்கையும் –
ஆசார்யனும் தாத்ருச வஸ்துவை வாங்குகையும் ஒழிய –
சிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்துவை இருவரும் கொள்ளவும் கொடுக்கவும்
கடவர்கள் அல்லர் என்கிறார் –

ஆசார்யன்சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் -என்றது -இவன்
மதியம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை மறந்தும் -அங்கீகரிக்க கடவன் அல்லன் -என்கை –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் -என்றது –
ஸ்வகீயம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை -அஹங்கார மமகார
ஸ்பர்சம் உள்ளவை விஷம் என்று வெருவி இருக்கும் -ம்ருது பிரக்ருதியான
ஆசார்யனுக்கு விஷத்தை இடுமா போலே சமர்ப்பிக் கடவன் அல்லன் -என்கை –

—————————————

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

—————————————

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –

அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -315/316/317/318/319/320/321/322/323/324/325/326–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 21, 2012

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

இப்படி உபதேச  அநு குண நியமங்களை தர்சிப்பித்த அநந்தரம் -உபதேசிக்கும் அளவில் –
இந்த மந்த்ரத்தை உபதேசித்தவனையே -சாஷாத் ஆசார்யன் எனபது -என்கிறார் –

நேரே ஆசார்யன் எனபது –என்கிறது -ஆசார்யத்வம் குறைவன்றி இருக்க செய்தே –
ப்ரதீதி மாத்திரம் கொண்டு செல்லும் அளவு அன்றிக்கே -சாஷாத் ஆசார்யன் என்று சொல்லுவது -என்றபடி –
சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை -என்றது
ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப் படியே அகில பல பிரதமாய் இருந்ததே ஆகிலும் –
அந்ய பலங்களில் தாத்பர்யம் இன்றிக்கே -மோஷ பலத்தில் நோக்காய் இருக்கையாலே –
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாஷ ரோந ரூணாம் அபுநர்ப்பவ காங்ஷீணாம்ம்-என்கிறபடியே
சம்சார நிவர்தகமாய் -அத ஏவ – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்ய முத்தமம்
பவித்ரஞ்ச பவித்ரானாம் மூல மந்த்ரஸ் சநாதன -என்கிறபடியே
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான பெருமை உடைத்தான திரு மந்த்ரத்தை –
சம்சார நிவர்தகத்வ பிரதி பத்தி யோடே கூட உபதேசித்தவனை-என்கை –
த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே -இதில் மத்யம சரம பத விவரணமாய் -சரம ஸ்லோகம்
பூர்வ உத்தர அர்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமாய்
இருக்கையாலே -மற்றைய ரஹச்ய த்வயமும் -பிரதம ரஹச்யமான இத்தோடே அன்வயமாய்
இருக்கையாலே -இத்தை சொல்லவே – அவற்றினுடைய  உபதேசமும் தன்னடையே
சொல்லிற்றாம் என்று திரு உள்ளம் பற்றி -பெரியதிரு மந்த்ரத்தை உபதேசித்தவனை – என்கிறார் –
ஆகையால் இது ரஹச்ய த்ரயத்துக்கும் உப லஷணம் –

———————————————————-

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

பகவன் மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசித்தவர்களுக்கும்
ஆசார்யத்வம் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சம்சாரத்தை நிவர்த்திப்பியாத மாத்திரம் அன்றிக்கே -வளர்க்குமவையாய்-
பெருமை அன்றிக்கே ஷூத்ரங்களுமாய் இருந்துள்ள -தத் இதர பகவன் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு -உபதேஷ்ட்ருத்வ பிரயுக்தமான ஆசார்யத்வ பிரதிமாத்ரம் ஒழிய தத் பூர்த்தி இல்லை -என்கை –

——————————-

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

ஷூத்ரங்கள் எனபது -சூத்திர தேவதா மந்த்ரங்களை அன்றோ –
பகவந் மந்த்ரங்களை இப்படிச் சொல்லுகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பரதேவதையான பகவத் விஷயம் ஆகையாலே வந்த பெருமையை உடைய மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்று சொல்லுகிறது -அர்த்த காம புத்திர வித்யாதி சூத்திர
பலன்களை கொடுக்கிற வழியாலே –

விலக்ஷண பகவான் மந்த்ரங்களை -ஷூத்ரம் -என்னலாமோ என்னில் -பலத்தினால் -அபிசந்திக்கு ஈடாக -விருப்பத்துக்கு தக்கபடி தருவதால்

———————————————

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சம்சார வர்த்தகங்கள் என்கிறது என் என்ன -அருளிச் செய்கிறார் –

அத்தாலே -என்றது கீழ் சொன்ன பந்தகமான சூத்திர பலன்களை
கொடுக்கையாலே -என்கை –

——————————————

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

ஆனால் இவற்றுக்கு இது ஸ்வாபாவிகமோ என்ன -அருளிச் செய்கிறார் –

இது தான் -என்று ஷூத்ர பல பிரதத்வத்தை பராமர்சிக்கிறது –
ஒவ்பாதிகம் -என்றது -உபாதி பிரயுக்தமாய் வந்தது இத்தனை -என்கை –

—————————————–

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –

அத்தை உபபாதிக்கிறார் –

அதாவது –
பகவன் மந்த்ரங்கள் ஆகையால் -மோஷ ப்ரதத்வசக்தியும் உண்டாய் இருக்க செய்தே -இவற்றினுடைய சூத்திர பல ப்ரதத்வம்
பிரகிருதி வச்யனான சேதனனுடைய சூத்திர பல ருசியாலே வருகையாலே -என்கை –
ஐஸ்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் –
புத்திர காமர்க்கு ராம மந்த்ராதிகளும் –
வித்யா காமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும் –
விஜய காமர்க்கு -சுதர்சன நார சிம்ஹ மந்த்ராதிகளுமாய் -இப்படி நியமேன
சூத்திர பலன்களையே கொடுத்துப் போருகிற இது -சேதனனுடைய ருசி அநு குணமாக
இவ்வோ மந்த்ரங்களில் இவ்வோ பலன்களைக் கொடுக்கக் கடவது என்று ஈஸ்வரன் நியமேன கல்பித்து வைக்க இறே –
அது தான் சேதனருடைய ருசி அநு குணமாக கல்பித்தது
ஆகையாலே அவற்றுக்கு அவை ஸ்வாபாவிகம் அன்று -ஒவ்பாதிகம் என்னலாம் இறே

——————————

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா சூச்ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

ஆக –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது -என்று துடங்கி -ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –
என்னும் அளவும் ஆசார்ய ஸ்வரூபம் சோதனம் பண்ணி -அநந்தரம் அதின் மேல் வந்த
பிரா சங்கிக சங்கைகளையும் பரிகரித்தார் கீழ்-
மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –

சிஷ்யன் எனபது -என்றது -உபதேச ஸ்வரணம் மாத்திரம் கொண்டு -மேல் எழுந்த வாரியாக
சொல்லுகை அன்றிக்கே-சிஷ்யன் என்று முக்கயமாக சொல்லுவது -என்றபடி –
சாத்யாந்தர நிவ்ருத்தி-யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற
ப்ராப்யாந்தரத்தில் மறந்தும் அன்வயம் அற்று இருக்கை –
அன்றிக்கே
இவ் ஆசார்யன் தன்னை ஒழிய வேறு ஒரு பிராப்ய வஸ்து அறியேன் என்று இருக்கையும் ஆகவுமாம்-
பல சாதனா சூச்ரூஷை-யாவது -குரு சுச்ரூஷா  தயா வித்யா -என்கிறபடி
ஆசார்யனை தான் பண்ணுகிற சூச்ரூஷையாலே சந்தோஷிப்பித்து ஞானோப ஜீவனம் பண்ணுகை
ப்ராப்தம் ஆகையாலே -ஆசார்யன் தனக்கு உபகரிக்கிற தத்வ ஞானம் ஆகிற
பலத்தினுடைய சித்திக்கு சாதனமாய் இருந்துள்ள ஆசார்ய பரிசர்யை –
அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான பலத்திலும் -சாதனத்திலும் உண்டான ஸ்ரோதும் இச்சை யாகவுமாம்-
அதவா
ஆசார்ய முக உல்லாசம் ஆகிற பலத்துக்கு சாதனமான தத் பரிசர்யை -என்னவுமாம் –
ஆர்த்தி -யாவது -இருள் தருமா ஞாலம் -என்கிறபடியே பிறந்த ஞானத்துக்கு விரோதியான
இவ் விபூதி யினின்றும் கடுகப் போகப் பொறாமையாலே வந்த க்லேசம் –
அன்றிக்கே
ஆசார்ய விக்ரக அனுபவ அலாபத்தில் க்லேசம் ஆகவுமாம் –
ஆதரம்-ஆவது -உத்தரோத்தரம் அனுப பூஷை-விருப்பம் – விளையும் படி ஆசார்யன் அருளி செய்கிற
பகவத் குண அனுபவத்தில் மென்மேலும் உண்டாகா நிற்கிற விருப்பம் –
அன்றிக்கே
ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலே -தத் அனுபவ
கைங்கர்யங்களிலே மண்டி விழும்படியான விருப்பம் ஆகவுமாம் –
அநசூயை ஆவது -ஆசார்யன் -பகவத் பாகவத வைபவங்களை பரக்க
உபபாதியா நின்றால்-ப்ரவஹ்யாம் ய ந சூயவே -என்னும் படி இதில் அசூயை அற்று இருக்கை –
அன்றிக்கே
ஆசார்யனுடைய உத்கர்ஷத்தையும் -ச பிரமசாரிகளுடைய உத்கர்ஷத்தையும் கண்டால்
அதில் அசூயை அற்று இருக்கை -என்னவுமாம்-அசூயா பிரசவ பூ -என்கிற இதுக்கு ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமே ஆயிற்று
பொறாது என்று இறே பூர்வர்கள் அருளி செய்தது -பகவத் விஷயத்தில் உள் பட அசூயை
பண்ணா நின்றால் -ததீய விஷயத்தில் சொல்ல வேணுமோ –
இதம் துதே குஹ்ய தமம் ப்ரவஹ்யாம் யநசூயவே-என்றான் இறே –
ஆக -இப்படி இருந்துள்ள  சத் குண சம்பன்னனை ஆயிற்று -நேரே சிஷ்யன் எனபது –

———————————

சூரணை-322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி உக்த லஷணனான சிஷ்யனுக்கு ஸ்வ ஆசார்யர் விஷயத்தில்
உண்டாக வேண்டும் பிரதிபத்தி விசேஷத்தை விதிக்கிறார் மேல் –

அதாவது –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே அநு சந்தாத்ரு ரஷகமாய் இருந்துள்ள –
திருமந்த்ரமும் –
தத் பிரதிபாத்ய -பர தேவதையும் –
தத் பிரசாத லப்தமான -கைங்கர்ய ரூப மகா பலமும் –
தத் அநு பந்திகளான-அவித்யாதி நிவ்ருத்தி பூர்வகமான -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாகமும் –
சா லோக்யாதிகளும் -ஆகிய இவையும் –
ததாவித பல பிரதமான சாதனமும் –
புத்திர தார க்ருக ஷேத்திர பச அன்னாத்ய அநு பவ ரூபமான இஹலோகத்தில் போக்யமான இவை எல்லாம்
நமக்கு நம்முடைய ஆசார்யனே என்று பிரதிபத்தி பண்ணக் கடவன் -என்கை-
குருரேவ பரம் பிரம
குருரேவ பரா கதி
குருரேவ பரா வித்யா
குரு ரேவ பராயணம்
குருரேவ பரா காமோ
குருரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ
தஸ்மாத் குருத ரோகுரு-என்றும் –
ஐ ஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷர தோகுரு இத்யேவம் யே நமந் யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி-என்றும் இப்படி
சாஸ்த்ரங்களில் சொல்லுகையாலே -நினைக்கக் கடவன் -என்று விதி ரூபேண அருளி செய்கிறார்-

——————————–

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இப்படி தாம் அருளிச் செய்த இவ் அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக இது பரமாச்சார்ய வசன சித்தமும் -என்று அருளிச் செய்கிறார் –

அதாவது
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி ஸ சர்வம்
யதேவநிய மே நம தன்வயானாம் -என்றி ஐ ஹிக போகங்களையும் -சர்வம் -என்று
அநுக்த சகல கத நத்தாலே -மந்திர தேவதா பலாதிகளையும் எடுத்து –
இத்தனையும் ஆழ்வார் திருவடிகளே என்று அருளிச் செய்கையாலே –
அந்த ஸ்லோகத்தில் இவ் அர்த்தத்தை பரமாச்சார்யான -ஆளவந்தாரும் – அருளி செய்தார் என்கை –

————————————————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

இப்படி எல்லாம் இவனே என்று அநு சந்திக்கைக்கு அடி எது என்ன-
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி ஆசார்யனே நமக்கு சகலமும் என்று அநு சந்திக்கைக்கு ஹேது –
நித்ய சம்சாரயாய் கிடந்த தன்னை -உபதேசாதிகளாலே திருத்தி –
நித்ய சூரிகளுடைய அனுபவத்துக்கு அர்ஹனாம் படி பண்ணின உபகார அநு சந்தானம் -என்கை –

————————————————–

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை-
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –

இவ் உபகார ஸ்ம்ருதி பிரசங்கத்திலே -அதனுடைய பிரதம சரம அவதிகளை
தர்சிப்பிக்கிறார்-

இச் சேதனன்  முந்துற அநு சந்திப்பது -அஞ்ஞான ஞாபனசுமுகத்தாலே -தனக்கு அகிலத்தையும் அறிவித்து –
பகவத் விஷயத்தை கைப் படுத்தின -ஆசார்யன் பண்ணின உபகாரத்தை ஆகையாலே -உபகார ச்ம்ருதிக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்சதை -என்கிறது –
க்ருதஜ்ஜ்தையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம்
ஆச்சார்ய கெளரவம் நெஞ்சில்பட -அவ் விஷயத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஈஸ்வரன் பண்ணின கிருஷி பரம்பரையை பின்னை அநு சந்திக்கையாலே –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –என்கிறது -இதுவும் ஈஸ்வரன் பக்கல் உபகார ஸ்ம்ருதி என்றபடி –
இத்தால் -பகவத் விஷயத்தை உபகரித்த ஆசார்யன் பண்ணின உபகாரத்தை அநு சந்திக்க இழிந்தால் -அவனுடைய வைபவம் நெஞ்சிலே ஊற்று இருந்தவாறே –
இப்படி இருக்கிற விஷயத்தை நாம் பெற்றது எம் பெருமானாலே அன்றோ என்று தத் க்ருத உபகார அநு சந்தானத்திலே சென்று தலைக் கட்டும் என்றது ஆயிற்று –

———————————

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

இந்த சாதாச்சர்யா -சச் சிஷ்யர் களுடைய பரிமாற்றம் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் மேல் –

அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்துகை யாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
ஆசார்யன் சிஷ்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
நடத்தக் கடவர்கள் –என்றது இதனுடைய அவஸ்ய கரணீ யத்வம் -தோற்றுகைக்காக-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை-308/309/310/311/312/313/314–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 20, 2012

சூரனை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

அநந்தரம்-தான் ஹித உபதேசம் பண்ணும் போது–என்று துடங்கி –
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -என்னும் அளவாக
இவ் அதிகாரிக்கு கீழ் சொன்ன அர்த்த விசேஷங்கள் எல்லாம் -உபதேஷ்டாவான
ஆசார்ய விஷயத்தில் -உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்தன பிரகாரங்களை தர்சிப்பிக்கைக்காக –
சதாசார்யா லஷணம் –
சச் சிஷ்ய லஷணம் –
தத் உபயருடைய பரிமாற்றம் -இவை இருக்கும் படியை ப்ரசக்த அநு ப்ரசக்தமாக அருளிச் செய்கிறார் –
இவ் அதிகாரிக்கு அசக்தி விஷயமான நிஷித்தங்கள் சொன்ன பிரசங்கத்தில்
அவை எல்லாத்திலும் -க்ரூர நிஷித்தம் -பர உபதேச சமயத்தில் -விப்ரதிபத்தி – என்று அருளிச் செய்கிறார் –

அதாவது
கீழ் பிரபந்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரி லஷணங்கள் எல்லாத்தாலும் குறை அற்று
இருந்துள்ள தான் -உஜ்ஜீ விஷுக்களாய் வந்து -தன்னை உபசத்தி பண்ணினவர்களுக்கு
உஜ்ஜீவன ஹேதுவான மந்திர ரூப ஹிதத்தை உபதேசிக்கும் காலத்தில் –
உபதேஷ்டாவான தன்னையும் –
உபதேச பாத்ரனான சிஷ்யனையும் –
உபதேச பலத்தையும் –
விபரீத பிரதிபத்தி பண்ணுகை-பூர்வ உக்த நிஷிதங்களில் காட்டில் -க்ரூர நிஷித்தம் -என்கை-
அவ்வோ நிஷித்தங்கள் இவன் தனக்கு நாசகம் இத்தனை இறே
அவ்வளவு இன்றிக்கே –
இவன் உபதேசம் கேட்டவனுக்கும் கேடாகையாலே இத்தை
அவற்றிலும் காட்டில் க்ரூர நிஷித்தம் என்கிறது –
இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை என்று இறே மேல் சொல்லத் தேடுகிறது –

———————————————

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் -மாறாடி நினைக்கை யாவது -எது என்னும்
ஆ காங்ஷையிலே -அவற்றை உபபாதிக்கிறார் –

அதாவது
உபதேஷ்டாவான தன்னை உள்ளபடி நினையாமல் -மாறாடி நினைக்கை யாவது –
உபதேச சமயத்தில் -தன்னுடைய ஆசார்யனையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும் –
தான் அங்குத்தைக்கு கரண பூதனாகவும் -பிரதி பத்தி பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டி இருக்க –
அப்படி செய்யாதே -ஸ்வாசார்ய பரதந்த்ரனான இருக்கிற தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைக்கை –
உபதேச பாத்ரனான சிஷ்யனை உள்ளபடி நினையாமல்-மாறாடி நினைக்கை யாவது –
தன்னோபாதி இவனையும் -தன்னுடைய ஆசார்யனுக்கு சிஷ்யனாய் பிரதிபத்தி பண்ணி உபதேசிக்க
வேண்டி இருக்க -அது செய்யாதே -இவனை தனக்கு சிஷ்யன் -என்று நினைக்கை –
உபதேச பலத்தை உள்ளபடி நினையாதே -மாறாடி நினைக்கை யாவது -பர உபதேசம் பண்ணும்
அளவில் -இவ் ஆத்மா திருந்தி -ஆளும் ஆளார் -என்கிற விஷயத்துக்கு மங்களா சாசனத்துக்கு
ஆளாக வேணும் என்னும் இதுவே பலமாக உபதேசியாதே -இவனால் வரும் அர்த்த சிஸ்ருஷ ரூபமான
த்ருஷ்ட பிரயோஜனத்தை ஆதல் –
சிஷ்யனான இவன் சம்சாராது உத் தீர்னனாய் வாழுகை யாகிற உஜ்ஜீவனத்தை ஆதல் –
திரு நந்தவனாதிகளை செய்கிற இதிலும் காட்டில் ஓர் ஆத்மாவை திருத்தினால்
எம்பெருமான் திரு உள்ளம் உகக்குகையாலே -இப்படி இருந்துள்ள பகவத் கைங்கர்யம் ஆதல் –
சம்சாரத்தில் இருக்கும் நாள் தன் தனிமை தீர கூடி வர்திக்கை யாகிற சகவாசத்தை யாதல் –
உபதேசத்துக்கு பலமாக நினைக்கை -என்றபடி –

———————————————-

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இவன் இப்படி நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் -என்கிற
தஜ்ஜிஞாசூ ப்ரச்னத்தை அனுவதித்துக் கொண்டு -அவை சித்திக்கும் வழி  அருளிச் செய்கிறார் –

சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் -என்றது –
சிஷ்யனாவன் தனக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று அநு சந்தித்து இருக்கையாலே –
கிஞ்சித்காரம் இல்லாதபோது -சேஷத்வம் கூடாது என்று -தன் ஸ்வரூப லாபத்துக்காக
தன்னாலான கிஞ்சித்காரம் பண்ணிக் கொண்டு போருகையாலே -அர்த்த சிஸ்ருஷைகள்
ஆகிற த்ருஷ்ட பலம் -சித்திக்கும் -என்றபடி –
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றது –
எதிர் சூழல் புக்கு திரிந்து -தன் விசேஷ கடாஷங்களாலே அத்வேஷாதிகளை உண்டாக்கி-
ஆசார்ய சமாஸ்ரயணத்திலே மூட்டி -இவ் ஆச்சார்யனுடைய உபதேச அன்வயத்தை
உண்டாக்கி -அதடியாக இவனை சம்சாரத்தின் நின்று அக்கரைப் படுத்த வேண்டுகிற
எம்பெருமானுடைய க்ருபா கார்யமான நினைவாலே சிஷ்யனுடைய உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றபடி –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –என்றது –
இவன் ஹிதோபதேசம் பண்ணி மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி சேதனரை திருத்துகிற இது –
எம்பெருமான் திரு உள்ளத்துக்கு மிகவும் உகப்பாகையாலே -இது பகவத் கைங்கர்யம் அன்றோ
என்று அநு சந்தித்து இருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே -உபதேஷ்டாவான தனக்கு கைங்கர்யம் சித்திக்கும் -என்றபடி –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –என்றது –
அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி —

—————————————-

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

இப்படி இவன் நினையாது இருக்க -இப்பல சதுஷ்ட்யமும்-சிஷ்ய ஈஸ்வர -ஸ்வாசார்யர்கள்
நினைவாலே சித்திக்கும் என்னும் இடம் அருளிச் செய்து –
உபதேசத்துக்கு சாஷாத் பலமாய் உள்ளதும் –
உபதேஷ்டாவான ஆசார்ய பரதந்த்ரனுக்கு உபதேச பாத்ரமானவனை குறித்து உண்டாம் ஆசார்யத்வமும் –
சித்திக்கும் படியை -பிரசநோத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –

சாஷாத் பலமாவது-உபதேச பாத்ரமான இவன் திருந்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-
இது தன் நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷ்டாவான தான் விப்ரதிபத்திகள் ஒன்றும் இன்றி
இதுவே பலமாக நினைத்து உபதேசிக்க -அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரி ஆகை-
ஆசார்யத்வம் ஆவது -தன்னை ஆசார்ய பரதந்த்ரனாகவே அநு சந்தித்து இருக்கிற இவன்
தன் பக்கல் உபதேசம் கேட்கிறவனுக்கு ஆசார்யன்  ஆகை –
இது -ஈஸ்வரன் நினைவால் சித்திக்கை யாவது –
இப்படி -தன்னையும் -சிஷ்யனையும் -பலத்தையும் -விப்ப்ரபத்தி பண்ணாதே
உள்ளபடி அநு சந்தித்து உபதேசிக்கும் பரிபாகம் உடையனான இவன் -இவனுக்கு
ஆசார்யன் என்று நினைப்பிட்டு அருளுகையாலே இவனுக்கு ஆசார்யத்வம் உண்டாகை-

————————————–

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

இங்கன் அன்றி க்ரூர நிஷிதமாக அடியில் சொன்ன விப்ரதிபத்தியாலே உபதேசிக்கில்
உபய ஸ்வரூபமும் சித்தியாது -என்கிறார் –

இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை -என்றது –
கீழ் சொன்னபடியே யதா பிரதிபத்தியோடே உபதேசிக்கில் ஒழிய -ஈஸ்வரன் இவனை
ஆச்சார்யனாக நினைப்பிடாமையாலே -உபதேஷ்டாவுக்கு ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூப
சித்தி இல்லை-அப்படி யதா பிரதிபத்தியாலே இவன் உபதேசியாத அளவில் -உபதேச
சுத்தி இல்லாமையாலே அவனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூப சித்தி இல்லை -என்கை

—————————————

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆசார்யனுக்கு இரண்டு குணம் அவஸ்யம் வேணும் என்கிறார் –

அதாவது
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு உஜ்ஜீவிஷூவாய் வந்து உபசன்னான சிஷ்யன் பக்கல்
ஐயோ என்று இரங்கி -அவன் உஜ்ஜீவிகைக்கு உறுப்பான உபதேசாதிகளை பண்ணுகைக்கு
ஈடான கிருபையும் -தன்னைக் கர்த்தாவாக நினையாதே -அத்தலைக்கு கரண பூதனாக
அநு சந்திக்கைக்கு ஈடான ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யமும் அவஸ்யம் உண்டாக வேணும் என்கை-

—————————————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவற்றால் பலிக்கும் அவற்றை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அப்படி அவன் ஸ்வரூபம் திருந்தும் அளவும் உபதேசாதிகளை பண்ணிப் போரும்
இவன் கிருபையாலே -நாளுக்கு நாள் ஸ்வரூபம் நிர்மலம் ஆகையாலே சிஷ்யனுடைய ஸ்வரூபம் சித்திக்கும் –
ஸ்வ கர்த்ருத்வ புத்தி அற்று -ஸ்வாசார்ய கரண பூதனாக தன்னை அநு சந்திக்கைக்கும் –
மற்றும் சர்வ கார்யத்திலும் -தத் அதீனாய் வர்திக்கைக்கும் உடலான பாரதந்த்ர்யத்தாலே
ஆசார்யனான தன்னுடைய ஸ்வரூபம் சித்திக்கும் -என்கை –

ஆக
கீழ் செய்ததாய் ஆயிற்று ஹித உபதேச சமயத்தில் ஸ்வ விஷயத்திலும் –
சிஷ்ய விஷயத்திலும் –
பல விஷயத்திலும்
உண்டாம் விப்ரதிபத்திகள் தான் இன்னது என்றும் -308-
இவன் நினையாது இருக்க -த்ருஷ்ட பிரயோஜனாதிகள் வந்து சித்திக்கும் வழியும் -310-
சாஷாத் பல ஆசார்யத்வங்கள் சித்திக்கும் வழியும் -311-
இப்படி அன்றியே விப்ரபுத்த்யா உபதேசிக்கில் உபய ஸ்வரூபமும் சித்தியாமையும் -312-
ஆசார்யனான அவனுக்கு  அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313
தத் உபய பலமும் -314
சொல்லிற்று ஆயிற்று –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்