Archive for March, 2012

ஸ்ரீ வசன பூஷணம்- சூர்ணிகை –14–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 24, 2012

உபாய வைபவம் –
சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

க்ருபாதிகளை வெளி இட்டமை சொன்ன  போதே -ஸ்ரீ ராமாயணத்தில் புருஷகார
வைபவம் முக்தமான படியை உபபாதித்தாராய் -மகா பாரதத்தில் உபாய வைபவம்
முக்தமானமையை உபபாதிக்கிறார் –
அஞாதஞாபனம் ஆச்சார்ய கிருத்யம் இறே -சரண்ய கிருத்யம் அன்றே –
ஆகை இறே என்னைப் பெற்ற அத் தாயாய் தந்தையாய் -திரு வாய் மொழி -2 -3 -2 -என்று
பிரிய கரத்வ ஹித கரத்வங்கள் ஆகிற -மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வ யமேவ தமக்கு
செய்த உபகாரத்தை அருளி செய்த அநந்தரம்-ஆச்சார்யன் செய்யும் விசேஷ உபகாரத்தையும்
தானே தமக்கு செய்தமையை அருளி செய்கிற ஆழ்வார் -அறியாதன அறிவித்த -என்று அருளி செய்தது –
இவ்விடத்தில் இவர் அருளி செய்கிற வாக்கியம் தான் அந்த திவ்ய சூக்திக்கு சூசகமாய் இறே இருக்கிறது -அறியாத அர்த்தங்களை அடைய அறிவிக்கை யாவது –
தத்வ விவேகம் தொடங்கி -பிரபத்தி பர்யந்தமாக -அர்ஜுனனுக்கு முன்பு அஞ்ஞாதமாய் இருந்த
அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கை –
தேக ஆத்மா அபிமானியாய் –
தேக அநு பந்திகளான பந்துக்கள் பக்கலிலே அஸ்தானே சிநேகத்தை பண்ணி நிற்கிற இவனை –
பிரகிருதி ஆத்ம விவேகாதிகளாலே தெளிவிக்க வேண்டுகையாலே –
நத்வ வாஹம் ஜாது நாசம் நத்வம் நேம ஜனாதிபா
நசைவ நபவிஷ்யாமஸ்  சர்வே  வயமித பரம்
தேஹி நோச்மின் யதா தேஹே கௌ மாரம்  யௌ வனம் ஜரா ததா
தேகாந்தர ப்ராப்திர்  தீரஸ் தத்ர ந முஹ்யதி-இத்யாதிகளாலே
பிரகிருதி ஆத்ம விவேகம்
ஆத்ம பரமாத்ம விவேகம் ஆகிய தத்வ விவேகத்தையும் –
அந்தவந்த இமே தேஹா நித்யச்யோக்தா ச்சரீரின
அனாசினோ  பிரேமயச்ய  தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
ந ஜாயதே ம்ரியதேவா  கதாசின்  நாயம் பூத்வா பவிதாவா  நபூய
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே
ஹன்யமானே சரீரே வாஸாம்சி ஜீர்னாணி யதா விஹாய
நவானி க்ருஹ்னாதி நரோ பராணி ததா சரீராணி
விஹாய ஜீர்னான் யன் யானி சம்யாதி நவானி தேஹீ -இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ
தேஹாத்ய அனித்யங்களையும்
பிரதமம் உபதேசித்து -இவனுடைய ச்வாதந்திர பிரமத்தை தவிர்க்கைக்காக –
பூமிரபோ நலோ வாயு கம் மனோ புத்தி ரேவச அஹங்கார இதீயம்
மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபேரே யமிதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -என்கிறபடியே –
சேதன அசேதன சரீரியாய் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ  மத்தஸ் ச்ம்ருதிர் ஞான மபோஹநஞ்ச -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத் தேசெர்ஜூன திஷ்டதி ப்ராமயன்
சர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா -என்றும்  சொல்லுகிறபடி
சர்வ  ஜன ஹ்ருதயச்தனாய் நின்று –
சகல பிரவ்ருத்திநிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை  யாகிற தன்னுடைய
நியந்த்ருவத்தையும் –
அப்படிசர்வ நியந்தாவாய்கொண்டு சர்வச்மாத்பரனாய் இருக்கும் அளவன்றிக்கே –
பரித்ரானாயா சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்று அவதாரப்ரயுக்தமான
தன்னுடைய சௌலப்யத்தையும் –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய-என்று
தன்னுடைய ஆஸ்ரயனித்வ சாம்யத்வையும் –
ப்ரக்ருதே க்ரியமானாதி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமுடாத்மா கர்த்தா ஹமிதீ மந்யதே -என்று
அஹங்கார தோஷத்தையும் –
யாததோ ஹ்யபி கௌ ந்தேய புருஷஸ்ய விபச்சித
இந்திரியாணி பரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -என்று
இந்திரிய பிராபல்யத்தையும் –
அசம்சயம் மகாபாஹோ மனோ துர் நிக்ரகஞ் சலம் -என்றுஅந்த ப்ராபல்யத்தில் மற்றை இந்திரியங்களை பற்றவும் மனசினுடைய
ப்ராதான்யத்தையும் தர்சிப்பிக்கையாலே -ஆச்ராயண விரோதிகளையும் –
தானி சர்வாணி சம்யய யுக்த ஆஸீத் மத் பர -வசேஹி யச்யேந்திரியாணி
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -என்றும் –
யதோ யதோ நிச்சலதி மனஸ் சஞ்சலம் அஸ்திரம் ததஸ் ததோ
நியம்யை ததாத் மன்யமேவ  வசம் நேத் -என்று
ஆச்ராயண உப கரணங்களான பாஹ்யாப்யாந்தர கரணங்களை
சுவாதீனமாக நியமிக்கும் பிரகாரத்தையும் –
சதுர்விதா பஜந்தே மான் ஜனாஸ் சூக்ருதிநோர்ஜூன
ஆர்த்தோ ஜிஞ்ஞா சூரரத்தார்த்தீ ஜ்ஞானிச பரதர்ஷப -என்று
ஆஸ்ரயிக்கும் அதிகாரிகளுடைய சாதுர் வித்யத்தையும்
த்வவ் பூத சர்கவ் லோகேச்மின் தைவ ஆசூர ஏவச
தைவீ சம்பத்  விமோஷாய நிபந்த்தாயா சூரி மாதா -என்று தன்னுடைய
ஆஞ்ஞா அநு வர்த்தன பரரானவர்கள் தேவர்கள்
தத் அதிவர்த்தன பரரானவர்கள் அசுரர்கள் என்று
தேவ அசுர விபாகத்தையும் –
ஹந்த தே கதயிஷ்யாமிவிபூதி ராத்மனஸ் சுபா ப்ராதான்யாத குரு ஸ்ரேஷ்ட நாச்த்யந்தோ விச்தரச்ய மே-என்று தொடங்கி-
இவ் விபூதியில் சமஸ்த பதார்த்தங்களுக்கும் வாசகமான சப்தங்கள் தன அளவிலே பர்யவசிக்கும் படி
இவற்றை அடைய ஸ்வ பிரகாரமாக கொண்டு வியாபித்து நிற்கும் படியையும் –
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகமைச்வர்யம் -என்று திவ்ய சஷுசை கொடுத்து
பச்யாமி தேவான் தவ தேவ தே ஹே சர்வாந்ததா பூத விசேஷ சங்காத்
பிரம்மாண மீசம் கமலா சனச்ச்தம் ருஷீம்ச்ச சர்வான் உரகாம்ச்ச தீப்தான் -இத்யாதியாலே –
தன்னுடைய விஸ்வரூபத்தை கண்டு பேசும்படி பண்ணுகையாலே –
தான் உகந்தாருக்கு திவ்ய ஞானத்தை கொடுத்து தன படிகளை தர்சிப்பிக்கும் என்னும் அத்தையும் –
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி  யுக்த்வைவம் ஆத்மானம்  மத் பராயணா –
என்று இப்படி இருந்துள்ள பரதவ சௌலப்ய யுக்தனான தன திரு அடிகளை பிராபிக்கை ஆகிற
பரம புருஷார்த்ததுக்கு உபாயமாய் இருந்துள்ள கர்ம ஞான ரூப அங்க சஹிதையான பக்தியையும் -மாமேவ யே பிரத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே தமேவசாத்யம் புருஷம் பிரபத்யேத்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத -என்று அந்த பக்தி அங்கமான பிரதி பத்தியையும் –
சரம ச்லோகத்தாலே -அந்த பக்தி உபாயத்தின் துஷ்கரத்வாதிகளை உணர்ந்து சோகிப்பாருக்கு
சூகரமுமாய் -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் பிரபத்தி என்னும் அத்தையும்
தானே அறிவித்து அருளினான் இறே-
ஆக இப்படி அறியாதன அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கையாலே
ஆச்சார்யா க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்டான் என்கிறது -இனி புருஷகார க்ருத்யமும் -சரண்யனான தன்னதன்றே -பிராட்டி க்ருத்யம் இறே –
மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்தூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வ  நிர்திஷ்டா பரமர்ஷிபி மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லஷணம் பவேத் -இத்யாதிகளாலே –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
இவனுக்கு தத்வ ஜ்ஞானாதிகளை உண்டாக்கி கொள்ள வேண்டுகையாலே
ஆச்சார்ய க்ருதயத்தை ஏறிட்டு கொண்டான் ஆகிறான் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ள வேண்டுவான் என்-
அங்கீகரித்து விட அமையாதோ என்னில் -அங்கீகாரத்துக்கு இதுவும் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
எங்கனே என்னில் -இவ் உபாயத்துக்கு புருஷ சாபேஷை யோபாதி புருஷகார சாபேஷைதையும் உண்டு இறே இவ் உபய சாபேஷைதையும் -உபாய வர்ண ரூபமான பூர்வ  வாக்யத்தில்
பிரதம சரம பதங்களிலே காணலாம் -ஸ்ரீ -சப்தத்தாலே புருஷகாரத்தையும் உத்தமனாலே
அதிகாரியையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் சேதனர் தன்னை உபாயமாக பற்றும் இடத்தில் -ஸ்வ அபராத பயத்தாலே
பிராட்டியை புருஷகாரமாக முன்னிட -அவள் இவன் அபராத நிபந்தனமான தன திரு உள்ளத்தின்
கலக்கைத்தையும் தானே தணித்து கொண்டு இவனை சேர்த்து கொள்ளுகையாலும் –
அதுதான் செய்கிற அளவில் -அர்த்தித்வ நிரபேஷமாக செய்கையாலும் –
புருஷகார க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் -என்கிறது -இனி உபாய  க்ருத்யம் தன்னதாய் இருக்க -அத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் என்கிறது –
த்வமேவ உபாய பூதா மே பவ -என்று இவர் அர்த்தித்தால் -கார்யம் செய்ய அமைந்து இருக்க –
நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணக் கடவோம் என்று தானே என்று கொண்டு –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கையாலே –
அல்லது -உபாய உபேயத்வே ததிஹா தவ தத்தவம்  ந்து கு னவ்-என்கிற வஸ்துவுக்கு
உபாய க்ருத்யத்வம் வந்தேறி அன்று இறே –
உபய லிங்க விசிஷ்டத்வத்தாலே உபாய உபேயத்வங்கள் இரண்டும் ச்வதஸ் சித்தமாய் இறே இருப்பது –
அன்றிக்கே உபேயமான தன்னை உபாயம் ஆக்குகையாலே உபாய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டான்
என்கிறது என்பாரும் உண்டு -அது பால் மருந்தாம் போலே இவனும் உபாயமாம் இடம் இங்கும் உள்ளது ஒன்றாகையாலே
அர்ஜுனனுக்கு இப்போது அசாதாராணமாக செய்தது ஓன்று அல்லாமையாலும் –
உபாயம் -என்றே வஸ்துவை நிர்தேசித்து தத் வைபவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலும்
இவ் இடத்துக்கு உசிதம் அன்று -ஆன பின்பு கீழ் சொன்ன படியே பொருளாக வேணும் –
ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் -கார்பண்ய தோஷோபகத ஸ்வபாவ
ப்ருச்சாமி த்வா தர்ம சம்மூட சேதா-யச்ஸ்ரேயஸ் சியான் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்
தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் என்று இவன் அர்த்தித்வம் உண்டாகையாலே
அந்ய க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்ட மாத்ரமே விவஷிதம் ஆகையாலும் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அந்ய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டமையும் –
அது தன்னை அர்த்தித்வ நிரபேஷமாக ஏறிட்டு கொண்டமையும் விலஷிதம் ஆகையாலும் –
ஸ்வ க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அர்த்தித்வ நிரபேஷமாக செய்த அளவே
விவஷிதம் ஆகையாலும் –
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே -என்கிற இது -க்ருத்ய த்ரயத்திலும் யதாயோகம்
அந்வயிக்க கடவது –
ஆச்சார்ய அஞ்ஞாத ஞாபனம் பண்ண –
பிராட்டி புருஷீகரிக்க –
வந்த தன்னை உபாயமாக பற்றினவனுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணி கொடுக்க அமைந்து இருக்க –
இவை எல்லா வற்றையும் தானே ஏறிட்டு கொண்டது வைபவம் இறே –
ஏறிட்டு கொள்ளுகையாலே மகா பாரதத்தில் உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து-என்றது
ஏறிட்டு கொண்டமையை பிரதிபாதிகையாலே சொல்லிற்று ஆய்த்து -என்றபடி –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்- சூர்ணிகை –9/10/11/12/13–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 23, 2012

சூரணை-9
சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும்
புருஷகாரத்வம் தோற்றும் –

ஏவம் பூத குண விசிஷ்டை யான இவளுடைய புருஷகாரத்வம் தொடருவது எங்கே -என்ன
அருளி செய்கிறார் மேல் –
புருஷகாரத்வம்  ஆவது கடகத்வம்-
அது இவளுக்கு அவனோடு கூடி இருக்கும் தசையிலும் -நீங்கி இருக்கும் தசையிலும் பிரகாசிக்கும் என்கை-

சம்ச்லேஷ தசையிலே -இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது-
பெருமாள் நிறுத்தி போவதாக தேடின அளவில் -என்னைக்கூட கொண்டு போக வேண்டும் என்று
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசா தியசா  ராகவஞ்ச மகா வ்ரதம்-என்கிறபடி
சரணம் புகுகிற அளவிலும் –
பஞ்சவடியிலே எழுந்து அருளின போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு பிரதேசத்தை
பார்த்து பர்ண சாலையை சமையும் என்று பெருமாள் அருளி செய்ய –
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் -ஏவ முக்தஸ்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி
சீதா சமஷம் காகுத்ஸ்தமிதம் வசன மப்ரவீத்
பரவா நஸ்மி  காகுஸ்த த்வயி  வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதா மிதமாம் வத-என்கிறபடியே
தம்முடைய பாரதந்த்ர்யத்தை பெறுகைக்காக கையும் அஞ்சலியுமாய் நின்று
அபேஷிக்கிற அளவிலும் -பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு–தம் அபேஷிதம் பெறுகையாலும்-

ஆசூர பிரக்ருதியான ஜெயந்தன் காக ரூபத்தை கொண்டு வந்து ஜனனி பக்கல் அக்ருத்ய ப்ரவர்தனாக –
க க்ரீடதி சரோஷேன பஞ்ச வக்த்ரென போகினா -என்று பெருமாள் அவன் மேல் சீறி தலையை
அறுப்பதாக ப்ரஹ்மாச்த்ரத்தை பிரயோக்கிக்க -ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன்லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்கிறபடியே எங்கும் சுற்றி திரிந்த இடத்திலும்
ஒரு புகலிடம் இல்லாமையாலே போக்கற்று சரணம் புக –
ச தம் நிபதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் வதார்ஹமபி காகுஸ்த  க்ருபயா பர்யபாலயத் -என்றும் –
புரத பதிதம் தேவீ தரண்யாம் வாயசம் ததா தச்சிர
பாதயோஸ் தஸ்ய யோஜயாமாச ஜாநகீ தமுத்தாப்ய கரெனோத
க்ருபாபீயுஷூ  சாகர ரரஷா ராமோ குணவான் வாயசம் தயையை ஷத்-என்றும்
ஸ்ரீ இராமாயண பாத்ம புராணங்களிலே சொல்லுகிறபடியே இவள்
புருஷகாரமாக பெருமாள் ரஷிக்கையாலும் –

விஸ்லேஷ தசையிலே
இஹசந்தோ நவா சந்தி சதோவா நானுவர்த்த சே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஷிதா -இத்யாதியாலே
விபரீத புத்தியான ராவணனை பெருமாள் திரு அடிகளிலே சேர்க்கைக்கு விரகு பார்க்கையாலும் –

ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்புக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவன்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன் இரங்க தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொருப்பிகையாலும்-

உபய தசையிலும்
இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்  தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ்  சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –
அவ்விடத்தில் புருஷீகரித்தமை எங்கனே என்னில் –
பலாத்காரத்தால் அன்றிக்கே அநு சாரத்தாலே அபராதங்களை பொறுக்கையாலே
புருஷகாரத்வம் என்கிறது –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே –

ஆகையால் இரண்டு தசையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்தை
சொல்லுகிற இவ்  வாக்யத்திலும் கூட்டக் குறை இல்லை

———————————-

சூரணை-10-
ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும்

இவ் வுபய தசையிலும் இவள் புருஷீகரிக்கும் பிரகாரம் என்ன -என்ன
அருளி செய்கிறார் –

ஈஸ்வரனை திருத்துகையாவது -அபராதத்தையே பார்த்து -ஷீபாமி-ந ஷமாமி -என்று
இருக்கும் இருப்பை குலைத்து அங்கீகார உந்முகன் ஆக்குகை-
சேதனனை திருத்துகையாவது -அக்ருத்ய கரணாதி சீலனாய் -பகவத் விமுகனாய் -திரிகிற
ஆகாரத்தை குலைத்து ஆஸ்ரேயன உந்முகன் ஆக்குகை –
சம்ச்லேஷ தசையில் இளைய பெருமாளுக்காக ஈஸ்வர விஷயத்திலும் –
விஸ்லேஷ தசையில் ராஷசிகளுக்கு திருவடி விஷயத்திலும் புருஷி கரித்தமை
உபய தசையிலும் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாதரத்துக்கு கூட்டி கொள்ளலாய்
இருந்தது ஆகிலும் -ப்ராகரனிகமான அர்த்தம் சம்சாரி சேதனனையும் ஈஸ்வரனையும் சேர விடுகையாலே
இவ் வாக்யத்துக்கு இப்படியே அர்த்தமாக கடவது –
ஆகையால் ஈஸ்வரனுடன் தான் கூடி இருக்கும் தசையில் சேதனன் ஆச்ராயண உன்முகனாய் வந்து
இருக்க செய்தே -பூர்வ அபராதத்தை பார்த்து ஈஸ்வரன் அங்கீகரியாது இருக்கும் அளவில் –
அவன் ச்வாதந்த்ர்யத்தை தவிர்த்து –
க்ருபாதி குணங்களை கிளப்பி –
இவனை அங்கீகரிக்கும் படி ஆக்குகையும் –
பிரிந்து இருக்கும் தசையில் –
ஈஸ்வரன் அங்கீகார உன்முகனாய் வந்து இருக்க செய்தே -இச் சேதனன்
கர்ம அநு குணமாக விமுகனாய் இருக்கும் அளவில் –
இவன் வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைப்பித்து
ஆச்ரயண உந்முகன் ஆக்குகையும்
இவள் இரண்டு தலையையும் திருத்துகை ஆவது –
ஆக இப்படி-
அங்கீகார விரோதியான ச்வாதந்த்ர்யத்தை மாற்றி -அங்கீகாரத்துக்கு உடலான
க்ருபாதிகளை உத்பவிக்கையாலும் –
ஆச்ரயண விரோதியான வைமுக்யத்தை மாற்றி -ஆச்ரயண ருச்யாதிகளை
ஜனிப்பிக்கையாலும் –
ஸ்ரு ஹிம்சாயாம் -என்கிற தாதுவிலும்
ஸ்ரு விஸ்தாரே-என்கிற தாதுவிலும்
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்திலும் ஸ்ருனாதி ஸ்ரூனாதி -என்கிற வ்யத்பத்தி த்வய அர்த்தமும்
இவ் இடத்திலே தோற்றுகிறது
ஸ்ருனாதி  நிகிலான் தோஷான் ஸ்ருனாதி ச குணைர் ஜகத் -என்று
இவ் உத்பத்தி த்வ்யமும் சேதன பரமாக தோற்றிற்றே ஆகிலும் –
ஈஸ்வரனை திருத்தும் -என்கிற இடத்திலும் இந்த நியாயம் தோற்றுகையாலும் –
இப்படி சொல்ல குறை இல்லை-

————————————————

-சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் திருத்துவது எவ் வழியாலே என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –
ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரஷனா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வரஷகத்வம் விகலம் ஆகாதோ –
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –

பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு  அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே  கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம்  த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப்  பட்டது இறே –

இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா கோரம்
த்வயா ஸௌ புருஷர்ஷப விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ  பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று
பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் –
அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று
வழி அடிக்க வேணுமே -உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –
அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண் -எளிமையாக  எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண் -நான்  பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கை கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம்  பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே -அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம்  இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே சரு ஸ்ரவனே-என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில் ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்
அதவா விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ  பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும் வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –
ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –

————————————————–

சூரணை-12
உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

இவ் உபதேசத்தால் இரண்டு தலையிலும் பலிக்கும் அது என்ன -அருளி செய்கிறார் –
அதாவது –
எப்படி இரண்டு தலைக்கும் தத் தத் அநு குணமாக இவள் பண்ணும் உபதேசத்தாலே
புண்ய பாபங்களின் வசத்திலே இழுப்பு உண்டு பகவத் விமுகனாய் திரிகை யாகிற சேதனனுடைய-கர்ம பாரதந்த்ர்யமும் –
இவன் பண்ணின கர்மத்தை பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக செய்வன் இத்தனை என்று
இவனுடைய ரஷணத்தில் விமுகனாய் இருக்கை யாகிற ஈஸ்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யமும்-நிவ்ருத்தமாம் என்கை-
சேதனனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -அனாத் யசித் சம்பந்த  கார்யமான அவித்யா நிபந்தனம்
ஈச்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -நிரந்குச ச்வாதந்த்ர்யம் கார்யமான ஸ்வ சங்கல்ப நிபந்தனம் –
இவை இரண்டும் -அநாதி சித்தமாய் போந்ததே ஆகிலும் -மாத்ருத்வ சம்பந்த்தாலே -சேதனனுக்கு ஆப்தையாய்
மகிஷீத்வ சம்பந்த்தாலே ஈஸ்வரனுக்கு அபிமதையும் ஆன இவள் –
இரண்டு தலையும் நெஞ்சு இளகி ஆஸ்ராயண அங்கீகார அபிமுகமாம் படியாக பண்ணும் உபதேசத்தாலே நிவ்ருத்தமாக தட்டில்லை-

———————————————————-

சூரணை -13
உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

இவ் உபதேசத்தாலே இவர்கள் மீளாத போது இவள் செய்வது என்ன -என்ன
அருளி செய்கிறார் –

சேதனன் மீளாமைக்கு அடி -அநாதி காலம்–யாதானும்  பற்றி நீங்கும் -திரு விருத்தம் – 95- என்கிறபடியே
பகவத் விமிகனாய் -விஷயாந்தர ப்ரவணனாய்–போருகையால் வந்த துர்வாசநாதிகள்-
ஈஸ்வரன் மீளாமைக்கு அடி அபாரத அநு குணம் இவனை சிஷிக்க வேணும் என்னும் அபிசந்தியாலே
நின்ற நிலை இளகாமல் நிற்க்கைக்கு உடலான நிரங்குச ச்வாதந்த்ர்யம் –
இவ்வோ ஹேதுகளாலே இரண்டு தலையும் தன்னுடைய உபதேசத்தால் ஸ்வ ஸ்வ கர்ம-பாரதந்த்ர்யத்தில் நின்றும் மீளாத அளவில் –
சேதனனை அருளாலே திருத்துகை யாவது -ஐயோ இவனுடைய துர்புத்தி நீங்கி
அநு கூலபுத்தி உண்டாக வேணும் என்று அவன் திறத்தில் தான் பண்ணுகிற
பங்கயத்தாள் திரு அருள் -பெரிய திரு மொழி -9 – 2-1 -என்கிற பரம கிருபையாலே
அவன் பாப புத்தி குலைந்து பகவத் அபிமுகனாம் படி பண்ணுகை –
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-

ஆக -புருஷகாரம் ஆம் போது -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்— சூர்ணிகை 7/8– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

March 23, 2012

சூரணை -7
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

அநந்தரம் புருஷகாரத்தின் படிகளை விஸ்தரேன உபபாதிக்க கோலி-
பிரதமத்திலே புருஷகாரத்வதுக்கு அவஸ்ய அபேஷித குணங்களை
அருளி செய்கிறார் -புருஷகாரம் ஆம் போது என்றது புருஷகாரம் ஆம் இடத்தில் என்ற படி –
க்ருபையாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
பாரதந்த்ர்யமாவது பார அதீனத்வம் –
அனந்யார்கத்வமாவது-தத் வ்யதிரிக்த விஷய அனர்ஹத்வம் –
இவை புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் ஆனபடி என் என்னில் –
சேதனர் சம்சாரத்தில் படுகிற துக்கம் கண்டு பொறுக்க மாட்டாமல் -ஈச்வரனோடே இவர்களை
சேர்க்கைக்கு உடலான யத்னம் பண்ணுகைக்கு கிருபை வேணும் –
ச்வதந்த்ரனை வசீகரிக்கும் போது அனுவர்த்தனத்தாலே வசீகரிக்க வேண்டுகையாலே
பாரதந்த்ர்யம் வேணும் -நம்மை ஒழிந்த ஒரு விஷயத்துக்கு அர்ஹ்ம் இன்றியே நமக்கே
அதிசயகரமாய் இருக்கும் வஸ்து ஆகையாலே நம் கார்யம் அன்றோ சொல்கிறது என்று –
சொன்னபடி அவன் செய்கைக்கு உறுப்பாகையாலே-அனந்யார்ஹத்வம் வேணும் –
ஆகையிலே இறே மூன்றும் புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் இறே –
ஈஸ்வர கிருபையில் காட்டில் இவள் கிருபைக்கு விசேஷம் என் என்னில் -ஈச்வரனாவன் நிரங்குச
ச்வதந்த்ரனானவன் -நிக்ரஹா அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் கடவனாய் -சேதனர் கர்மங்களை நிறுத்து அறுத்து
தீத்துமவன் ஆகையாலே -அவனுடைய கிருபை ச்வாதந்த்ர்யத்தால் அமுக்கு உண்டு கிடந்தது –
ஒரோ தசைகளிலே தலை எடுக்க கடவதாய் இருக்கும் –
இவள் அனுக்ரஹா ஏக சீலை ஆகையாலே இவளுடைய கிருபைக்கு வேறு ஒன்றால் ஓர்
அபிபவம் இல்லாமையாலே -எப்போதும் ஒருபடிபட்டு இருக்கும் –
ஆகையால் இவளுடைய கிருபை கரை அழித்து இருக்கும் –
சம்பந்தத்தில் வியாவ்ருத்தி  போலே ஆய்த்து கிருபையில் வியாவ்ருத்தியும் –
இப்படி இருக்கையாலே இறே இவளை ஆஸ்ரயிப்பார்க்கு வேறு ஒரு புருஷகாரம்
வேண்டாது ஒழிகிறது-ஈஸ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்த்ர்யா  அனந்யார்ஹத்வங்களும்
ஸ்வரூப பிரயுக்தமான மாதரம் அன்றிக்கே -ஹ்ரீச்ச  தே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் –
விஷ்ணு பத்நீ -என்றும் சொல்லுகிற பத்நீ த்வ பிரயுக்தமாயும் –
அஹந்தா பிராமணாஸ் தஸ்ய சாகமச்மி சனாதநீ-என்றும்
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப நிரூபகத்வாதி சித்தமான அனந்யத்வ பிரயுக்தமாயும் இருக்கும் –
இப்படி இருக்கையாலே இறே அல்லாதார்க்கு அடைய மிதுன சேஷத்வமும் –
இவள் ஒருத்திக்கும் ததேக சேஷத்வமுமாய் ஆய்த்து –
இந்த அவ்யவதா நேன வுண்டான சம்பந்தத்தால்  இறே இவளுக்கு ஈஸ்வரனை வசீகரிக்கும்
அளவில் புருஷகாரம் வேண்டாது ஒழிகிறது –
இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங்  சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் -ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா  அனந்யார்கத்வங்கள்
இரண்டும் -ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –

சூரணை-8-
பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

இந்த க்ருபாதி த்ரயத்தையும் எல்லாரும் அறியும் படி தானே வெளி இட்டு அருளின வைபவத்தை
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விஹ்ரஹ பரிக்ரகம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே -ராகவத்வேபவத்  சீதா -என்கிறபடியே –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே -பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று –
தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே – காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக -என்கை -எங்கனே என்னில் –
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொபனம் கண்டத்தாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் –
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச  வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய்போகாமே -ராவண வாத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் -கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கு இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும் -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது -மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி
திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனா நி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாதமூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யே கராத்ரம் காகுத்ச்த   வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான  வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய –
அத்தை பற்ற  போக விடுவாரை போலே -லோக அபவாத  பரிகார்த்தமாக –
பெருமாள் காட்டிலே  போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடையபத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-
கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே பெருமாள் நினைவை பின் சென்று தன பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையே பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத்  பார்த்து கார்யம்  விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே

-அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்
பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசெஷஞர் எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே -அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில் கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட -அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே – சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசி நீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –
யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –
ததா சபந்த்யாம்  வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை  நா மாசனே  சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று
அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க -ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது
என்கையாலே -இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறேஆக –
இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-இங்கன் அன்றாகில் -அநபாயி நியாய்-அகர்மவச்யையாய் –
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி  பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —
தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் -புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று
பட்டர் அருளி செய்தது -இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –
சாஸ்த்ரங்களில் கேட்கிற மாதரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்- சூர்ணிகை –5/6..-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

March 22, 2012

முதல் பிரகரணம்-புருஷகார வைபவம்
சூரணை -5
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –
முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே -வேத தத் அர்த்த தத் உப ப்ரும்கனங்களை
சாகல்யேன உபாதானம் பண்ணி -அந்த வேதத்தினுடைய பாக விபாக தத் உப ப்ரும்கன
விபாகங்களையும் பண்ணினாரே ஆகிலும் -செதனருடைய உஜ்ஜீவனத்துக்கு அபேஷித அர்த்தங்களை
அருளி செய்ய இழிந்தவர் ஆகையாலும் -அது தான் பூர்வ பாக வேத்யம் அன்றிக்கே -உத்தர பாக
வேத்யம் ஆகையாலும் -பூர்வ பாகத்தில் முமுஷுவுக்கு ஞாதவ்ய அம்சம் உள்ளதும் -உத்தர பாக
அர்த்தங்களான ஸ்வரூப  உபாய புருஷார்த்த பிரதிபாதன ஸ்தலங்களிலே -தத் தத் அனுகுண
த்யாஜ்யுபாதேய கதன முகேன ஞாபிகலாய் இருக்கையாலும் -உத்தர பாக அர்த்த நிர்ணயத்திலே –
ப்ரவர்த்தராய் -அது தன்னிலும் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவத் உபாசானாதிகளையும்
பரக்க நின்று பிரதிபாதிக்கிற இடங்களில் -சார அசார விவேக பூர்வகமாக தாத் பர்யங்களை சந்க்ரகித்து –
சம்சய விபர்யாயம்  அற செதனருக்க்கு பிரபத்தி விஷயமாம் படி அருளி செய்து செல்லுகிறார் மேல் –
அதில் பிரதமத்திலே உத்தர பாக உப ப்ரும்கன த்வயத்தில் பிரபலமாக சொன்ன இதிகாசங்களில் வைத்து கொண்டு
ஸ்ரீ ராமாயணத்தினுடைய பிராபல்யத்தை பிரகாசிப்பியா நின்று கொண்டு தத் பிரதிபாத்ய விசேஷத்தை அருளி செய்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்துக்கு இதிஹாச ஸ்ரேஷ்டத்வமாவது -வால்மீகயே மகர்ஷயே சந்தி தேச
ஆசனம் தத பிராமணா சமனுஜ்ஞாதஸ் சோப்யு பாவிசத சனே-என்று சகல லோக பிதாமஹானான
பிரஹ்மாவாலே சம்பாவிதனான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரநீயதம் ஆகையாலும் –
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்று -பர்மா அநு க்ரகிக்கையாலே இதில் சொன்ன
அர்த்தங்களை எல்லாம் மெய்யாக கடவதாகையாலும் -தாவத் ராமாயண கதா லோகேஷூ பிரசர்ஷயதி -என்று
சகல லோக பரிக்ரகம் உண்டாகையாலும் -இதிஹாசாந்தரங்களை பற்ற பிரபல பிரமாணமாய் இருக்கை-இது தன்னை
நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தத்தவத்ரய பிரபந்தத்தில் பிரமாண அதிகாரத்திலே அருளி செய்தார் இறே-
இன்னமும் வேத வேத்யே பரே பும்சி-இத்யாதி படியே சர்வச்மாத்பரனான சர்வேஸ்வரன் சம்சாரி சேதன ரஷன அர்த்தமாக
இதர சஜாதீயனாக வந்து அவதரித்தால் போலே -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான வேதமும் -தத் அவதார குண சேஷ்டித
பிரதிபாதன முகேன-தத் ஆச்ரயண ருசியை சம்சாரிகளுக்கு உண்டாக்கி ரஷிக்கைகாக ஸ்ரீ ராமாயண ரூபேண அவதரித்தது என்று
சொல்லப் படுகையாலும் -இதனுடைய ஏற்றம் சம்ப்ரதிபந்தம் –
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக -தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி
மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது – அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் -சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே -ஆஸ்ரிதரான தேவர்கள்
உடையஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –
இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷன அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது  என்னும் இடம் -காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம்
சீதாயாஸ் சரிதம் மஹாத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண  மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர்

அநந்தரம் மகாபாரத பிரதிபாத்யத்தை அருளி செய்கிறார் -மகா பாரதத்தால் என்று தொடங்கி –
க்ருஷ்ணத் வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும் கோக்யந்தோ புவி மைத்ரேய மகாபாரத
க்ருத் பவேத் ஏவம் விதம் பாரதந்து  ப்ரோக்தம்  யேன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபி மகா முனி –
என்று பகவத் ஆவேச அவதாரமாய்-சஹோவாச வியாச பாராசர்ய-என்று ஆப்த தமனாக பிரசித்தமாய்
இருந்துள்ள -ஸ்ரீ வேத வியாச பகவானாலே -வேதான் அத்யாபயாமாச ,அகா பாரத பஞ்சமாத் -என்கிறபடி –
பஞ்சம வேதமாய் -பரணீ தமாய் -அநேக புராண பிரசச்தமாய் இருந்துள்ள மகா பாரதமும் ஸ்ரீ ராமாயணத்தோ பாதி
பிரபல பிரமாணம் -இதுவும் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தாமே அருளி செய்தார் -பெரிய பட்டரும் ஸ்ரீ சஹஸ்ரநாம
பாஷ்ய உத்போதகத்தில் ஸ்ரீ இராமாயண வந் மகா பாரதம்  சரணம் -என்று அருளி செய்தார் இறே
சர்வேஸ்வரன் -என்னாதே -தூது போனவன் -என்றது அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேவதேவனானவன் தன்பெருமையையும் -செய்கிற தொழிலின் தண்மையையும் -பாராதே –
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்தது-
ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாய் இறே -இது தான் இவனுடைய ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதாக நீர்மைக்கு
உடலாய் இருந்துள்ள வாத்சல்யாதிகளுக்கு எல்லாம் பிரகாசமாய் இருப்பது ஓன்று இறே –
இந்த குண ஆதிக்யத்திலே ஈடு பட்டு இறே -இன்னார் தூது என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்றும்
குடை மன்னர் இடை நடந்த தூதா –பெரிய திரு மொழி -6-2-9–என்றும் –
திரு மங்கை ஆழ்வார் அருளி செய்தது  அந்த திவ்ய சூக்தி இறே இவர் இப்படி அருளி செய்கைக்கு மூலம் -பேசிற்றே பேசுகை இறே இவர்களுக்குஎற்றம் –
தூது போனது தண்மை ஆவது -கர்மவச்யத்தை அடியாக வரிலே இறே –
ஐ ச்சமாக ஆஸ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சி எல்லாம்
ஏற்றத்துக்கு உடலாய் இறே இருப்பது -ஸ உச்ரேயான் பவதி ஜாயமான -என்று
பரார்தமாக பிறக்கையாலே நிறம் பெரும்யென்று சுருதி சொன்ன இது பர்ரர்தமாக
தன் இச்சையிலே செய்யும் அவை எல்லாம் இவனுக்கு தேஜஸ் கரம் என்னும் அதுக்கு உப லஷணம் இறே –
இவன் செய்த தூத்யத்தை மாந்த்ய ஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலை யானவர்கள் இத்தனை –
அறிவில் தலை நின்றவர்கள் -எத்திறம் -என்று மோகிக்கும் படி இறே இருப்பது -இப்படி இருந்துள்ள
இந் நீர்மையின் ஏற்றத்தை -வெளி இடுகைக்காக ஆய்த்து இவர் -தூது போனவன் -என்று அருளி செய்தது –
மகா பாரதம் எல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தாத் பர்யம் ஆகையாலே இறே
மகாபாரத கதை சொல்ல தொடங்குகிறவன் -நாராயண கதாம் இமாம் -என்றது –
ஆக பிரபந்த த்வ்யத்துக்கும் பிரதான பிரதிபாத்யங்கள் என்னது என்னும் இடம் பிரகாசிக்க பட்டது –

———————————————-

சூரணை-6
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

உபய ப்ரக்மன முகேன -வேதார்த்த தாத்பர்யத்தை நிஷ்கரித்து -உஜ்ஜீவனதுக்கு உடலான வற்றை
சொல்லுவதாக இறே உபக்ரமித்தது -அதில் இப்போது சொன்ன இவற்றால் வேதாந்தத்தில் எவ் அர்த்தங்கள்
சொல்லிற்று ஆய்த்து -என்னும் காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிறை இருந்தவள் ஏற்றம்-தூது போனவன் ஏற்றம் -என்ற இவை இரண்டாலும் அபராத பூயிஷ்டரான
சேதனருக்கு ஆஸ்ரயநீயை யாம் அளவில் -அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் -க்ருபாதிகளாலும் –
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -வந்து ஆஸ்ரயிகலாம் படி யாய்-அபராதங்களை பார்த்து சீறி –
ஷீபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும் –
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-
என் அடியார் அது செய்யார் -என்று மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்
உபாய பூதனானவன் வைபவமும் சொல்லிற்று ஆய்த்து என்கை-
புருஷகாரம் -என்றும் -உபாயம் -என்றும் -இவற்றை நிரூபகமாக அருளி செய்தது –
பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -அசாதாரணம் என்று தோற்றுகைக்காக-
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் -என்றும் –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன
மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன
மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
மற்றை பிராட்டிமாருக்கும் சூரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற
புருஷகாரத்வம் இறே உள்ளது -இவளை போலே ச்வதஸ் சித்தம் அன்றே –
ஆகை இறே –
ஏதத் சாபேஷ சம்பந்தா தன்யேஷா மாமலாத்மனாம்
தேவி சூரி குரூ னாஞ்ச கடகத்வம்  நது ஸ்வத-என்று தீப சங்கரத்திலே ஜீயர் அருளி செய்தது
உபாயத்வமும் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமாக சொல்லப் படுகிற
அவனுக்கே ச்வதஸ்  சித்தமாய் -ததீயருக்கு ததா சித்தி அடியாக வருகிறது இறே உள்ளது –
ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -நிரூபகமாக
தட்டு இல்லை -இவ் அர்த்தத்தை வெளி  இடுகைக்கு ஆய்த்து இவர் இப்படி அருளி செய்தது –
இப்படி உப ப்ரஹ்மணமான பிரபந்த த்வ்யத்தாலும் பிரதி பாதிக்க படுகிற புருஷகாரத்வமும் உபாயத்வமும்
உப ப்ரும்ஹ்யமான  வேதாந்தத்தில் உக்தமான ஸ்தலம் எது என்னில் கடவல்லி உபநிஷத் சித்தமான
த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே உபயமும் சேர உக்தம் இறே -இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம்
உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயனதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமானவாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை
அன்றிக்கே -கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும் குற்றவாளர்க்கும் கூசாமல்
வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்-பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தொடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூரதண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன்  அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–2/3/4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 21, 2012

சூரணை-2
ச்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக்  கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

இவற்றில் எத்தாலே எந்த பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது என்ன -அருளி செய்கிறார் –
உப ப்ரும்ஹ்யமான  வேதத்துக்கு பிரதிபாத்ய அர்த்த விசேஷத்தாலே இறே பாத பேதம் உண்டாய்த்து –
அப்படியே உப ப்ரும்ஹணங்களாயும்  பிரதிபாத்ய விசேஷத்தாலே பேதம் உண்டு இறே –
அதில் ஸ்ம்ருதிகள் பூர்வ பாக உபப்ரும்ஹணங்களாயும் -இதிகாசாதிகள்  உத்தர ப்ரும்ஹணங்களாயும் 
நிர்மிதன்கள் ஆகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களாயும்  கொண்டே தத் பாக அர்த்தம் நிச்சயம் பண்ண
வேண்டி இறே இருப்பது –
அத்தை பற்ற ஆசார  வ்யவஹார ப்ராயசித்தாதிகளுக்கு பிரதிபாதங்களான இதிஹாச புராணங்கள்
ஆகிற மற்றை இரண்டாலும் -பிரம பிரதிபாதகமான உத்தர பாகத்தில் அர்த்தம் நிச்ச்சயம் பண்ண கடவது என்கிறார் –
இப்படி உபய விதமான உப ப்ரும்ஹணங்களாயும்  உபய பாக அறத்தையும் அறுதி இடுகை யாவது –
அநதீத சாகாந்தரங்களுக்கும் பிரதிபாதகங்கள் ஆன இவற்றாலே அதீத சாகார்த்தங்களை அபேஷித விசேஷங்கள் கூடே
நிச்சயிக்கை -ஸ்ம்ருதிகள் தன்னிலே பிரம பிரதிபாதனமும் -இதிகாசாதிகளிலே கர்ம பிரதிபாதனமும்
உண்டாய் இருந்ததே ஆகிலும் –ஸ்ம்ருதிகளில் பிரம பிரதிபாதனம் கர்மங்களினுடையதத் ஆராதன
ரூபத்வ ஞாபன அர்த்தமாகவும் -இதிகாச புராணங்களில் கர்ம பிரதிபாதனம் கர்மங்களினுடைய உபாசன
அங்கத்தவ ஞாபன அர்த்தமாகவும் ஆகையாலே -இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை –
பரா யேன பூர்வ பாகர்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத
இதிகாச புரானாப்யாம் வேதந்தார்த்த பிரகாச்யதே -என்ன கடவது இறே –
சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

உத்தர பாக உப ப்ரக்மன த்வ்யத்துக்கும் தாரதம்யம் உண்டோ -தன்னில் ஒக்குமோ -என்கிற
சங்கையில் அருளி செய்கிறார் மேல் –
அன்றிக்கே –
ஏக பாக விஷயமான இரண்டு உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னத்துக்கு பிராபல்யம் என்னும் அத்தையும்
தர்சிப்பிக்க வேணும் என்று தாமே திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் ஆகவுமாம்

இவை இரண்டிலும் என்று தொடங்கி -அதாவது -ஸ்ரேஷ்ட பாக உப ப்ரும்ஹண தயா வந்த சேர்த்தியை
உடைத்தான இவை இரண்டிலும் வைத்து கொண்டு – ப்ரும்ஹணயத்தால் வந்தால் புராணத்திலும்
இதிகாசத்துக்கு பிராபல்யம் உண்டு என்கை-புராணத்தில் காட்டில் இதிகாசத்துக்கு பிராபல்யம் –
பரிக்ரக அதிசயம் -மத்யஸ்ததை-கர்த்துராப்த தமத்வம் -ஆகிய இவற்றாலே –
இவற்றில் பரிக்ரகம் ஆவது –சாஸ்திர பரிக்ரகம் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே  தசரதாத்மஜே  வேத ப்ராசேதசா தாசீத் சாஷாத் ராமாயனாத்மனா-
மதி மந்தா நமாவித்ய யேனாசொவ் சுருதி சாகராத் ஜகத்திதாய ஜநிதோ மகாபாரத சந்த்ரமா
வியாச வாக்ய ஜலவ்கேன குதர்மத ருஹாரினா வேத சைலா வதீர்னே ந நீர ஜஸ்கா மஹி க்ருதா
பிபேதி  கஹனாச் சாஸ்த்ரான் நரஸ் தீவ்ராதி  வவ்ஷதாத்  பாரதஸ் சாஸ்திர சாரோயம் அத
காவ்யாத்மனா கருத விஷ்ணவ் வேதேஷூ வித்வத்சூ குருஷூ பிராமனேஷூ ச பக்திர்பவதி
கல்யாணி பாரததேவ தீமதாம் -இத்யாதிகளாலே புராண விசேஷங்களிலே இதிஹாசம்
ச்லாகிக்க படா நின்றது இறே –
மத்யஸ்தை யாவது – யஸ்மின் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் பிராமணா புராதஸ்ய தச்யஸ்து மகாத்மியம்
தத் ஸ்வரூபென வர்ண்யதே-என்று சர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் பிரம்மாவாய்-அவனுக்கு
யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தால் யாதொரு குணம் விஞ்சி இருந்தது -அந்த குண அநு குண
தேவதையினுடைய  மகாத்ம்யத்தை புராணத்திலே சொல்லுகையாலே பஷா பாதிகளாய் இருக்கும்
புராணங்கள் போல் அன்றிக்கே -லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயித்திலே அதிக்ருதங்கள் ஆகையாலே
ஒரு விஷயத்திலும் பஷ பாதம் இன்றிக்கே இருக்கை–
கர்த்து ஆப்த தமத்வமாவது -பிரபன்ன கர்த்தா வானவன் –யாதா தர்சன
சாமர்த்தத்தையும் யதா த்ருஷ்டார்த்த வாதித்வத்தையும் மிகவும் உடையவனாய் இருக்கை –
அதேதிஹாச புராண யோரிதி ஹாசா பலியாம்ச குத தேஷாம் பரிஹ்ரகாதி குத தேஷாம்
பரிக்ரஹாதி சயாதிகளாலே புராண இதிகாசம் பிராபல்யம் சாமான்யேன தத்வ நிர்ணயத்திலே
உய்யக் கொண்டாராலும் -மகா பாரதம்ஹி பரிக்ரஹ விசேஷாவசிதம்-என்று தொடங்கி-தர்மே சார்த்தேச
காமேச மோஷச பரதர்ஷப  யதிஹாச்தி ததனயத்ரா யன் நேஹாச்தி ந தத் க்வசித் –
இதி லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேன க்வசிதபி  அபஷ பாதித்வாச்ச
புரானேப்யோ பலவத்தரம் -என்னும் அது அளவாக –
பரிக்ரஹ அதிசயத்தாலும் -மத்யஸ்தை யாலும் -புராணங்களில் காட்டில் இதிஹாச விசேஷமான
மகாபாரதத்துக்கு உண்டான பிராபல்யம் ஸ்ரீ சஹச்ர நாம பாஷ்யத்திலே பட்டராலும் பிரதிபாதிக்கபட்டது இறே –
சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –
அதின் பிராபல்யத்தை இசைவிக்கிறார் –
அந்த ப்ராபல்யத்தாலே -இதிஹாச புராணம் பஞ்சமம் –
இதிஹாச புரானாப்யாம்-என்றும் –
சுருதி ச்ம்ருதிகளிலே இரண்டையும் சேர சொல்லுகிற அளவில் –
இதிஹாசமானது புராணத்துக்கு முன்னே சொல்லப் பட்டது என்கை –
த்வந்த்வ  சமாசத்திலே -அல்பாச்தரமாதல் -அப்யர்ஹிதம் ஆதல் -இறே முற் படுவது –
அதில் அல்பாச்தரம் அன்றியிலே இருக்க அது முற் பட்டது அப்யர்ஹிதத்தாலே இறே –
இந்த அப்யர்ஹிதத்துக்கு மூலம் அதி பிராபல்யம் என்று கருத்து –
அதவா –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே என்று -பாகத்வய   உபப்ரும்ஹணங்களாயும் சமஸ்தமாக
சொல்லுகிற இடத்தில் –
இதிஹாசச்ச புராணா நிச இதிஹாச புராணா நி  சம்ர்தயச்ச இதிஹாச புராண நிச ச்மர்த்தீதிஹாச
புராணா நி -என்று இப்படி சமாச விவஷை ஆகையாலே -அல்பாச்தரமான புராணத்துக்கு
முன்னே இதிகாசத்தை அருளி செய்ததின் கருத்தை -இவை இரண்டிலும் -இத்யாதியாலே
அருளி செய்கிறார் ஆகவுமாம்–
இந்த யோசனையில்-அத்தாலே அது முற் பட்டது -என்கிற இதுக்கு அந்த ப்ராபல்யத்தாலே –
இதிஹாச புராணங்களாலே -என்கிற இடத்தில்  புராணத்துக்கு முன்னே இதிகாசம் சொல்லப் பட்டது
என்று பொருளாக கடவது –
ஆக
வேதார்த்தம் நிர்ணயம் பண்ணும் அளவில் தத் உப  ப்ரும்ஹணங்களாலே பண்ண வேணும் என்றும் –
அதில் பூர்வ உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னது என்றும் -உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாலே
இதிஹாச புராணங்களில் இதிகாசம் பிரபலம் என்றும் அருளி செய்கையாலே
மேல் தாம் அருளி செய்ய புகுகிற அர்த்தங்களுக்கு பிரமாணம் ஒருங்க விட்டு அருளினார் ஆயத்து –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு விருத்தம் -44-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

March 21, 2012

அவதாரிகை —
மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் -அவன் விஷயம் எட்டாதோ என்ன –
அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்  –

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —
ஆயதா -திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாட தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களை கண்ட போதே –
ஆயதா ஆஜான பாஹூ –திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –
பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –
கிமர்தம் நவிபூஷிதா -இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –
ராஜாக்கள் வெற்றிலையை விலக்குதல்–பால் குடியோம் என்னுதல் செய்வார்கள் –
இன்ன கோட்டை அழித்தால் அன்றி -என்று திரிவாரை போலே –
ஒன்றும் அறியாத காட்டில் திரிய கடவ குரங்குகள் அனுபவிக்கும் படி –
பெருக்காறு போலே இவ் வெறும் புறத்தில் அழகை கொள்ளையூட்டி கொள்ளுகிறது என் –பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் -மகர நெடும் குழை காதர் போல –

திரு மலை நம்பி-பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் –
அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை-பிள்ளை தமக்கு  தஞ்சமாக
நினைத்திருக்கும் திரு நாமம் என் -அத்தை சொல்ல வேணும் -என்ன –
இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –
தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன
நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் பொருவர் -ஆகிலும் விரும்பி இருப்பது
அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன
பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது -ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது
போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று
திரு நாட்டுக்கு நடந்தார் –

கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர்
ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க பட்டர் எழுந்து அருளி
செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன
பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத திரு நாமத்தை சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார்  – 

உருவும் -ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –
நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன
வைகுண்டத்திலே  சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு
இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன் -என்றார் –

பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையை கடுக்கி திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –
நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் –
திரு நாம தழும்பும் இழக்கிறேனாக  கருதி அஞ்சா நின்றேன் -என்றார்

உருவும் -வடிவழகும் –
இவை இவை என்று –
இது ஓர் ஒப்பனையே -இது ஒரு திரு நாமமே -இது ஓர் அழகே -என்று –
அறமுயல் –
அறத்தில் முயலா நின்றுள்ள –
ஞான சமயிகள் –
தஹர வித்தை -சாண்டில்ய வித்தை -சத் வித்தை இவற்றாலே யனவரத பாவனை பண்ணி-பக்தி நிஷ்டனாய் –
அந்த ஸ்நேஹத்தாலே ஓர் ஓன்று அனுபவித்து -அதுக்கு அவ்வருகு போக மாட்டாதே-இருக்கும் அவர்கள் –
பேசிலும் –
சொல்லப் புக்கார்கள் ஆகிலும் –
அங்கு அங்கு எல்லாம் –
அவ்  ஒப்பனையிலும் -திரு நாமத்திலும் -வடிவிலும் –
உற-
கிட்ட –
உயர் ஞான சுடர் விளக்காய் நின்றதன்றி –
மிக்க ஞான பிரகாசத்தை உடையரான மாத்திரம்  அன்றி –
எம்பிரான் பெருமையை ஒன்றும் பெற முயன்றார் இல்லையால் –
தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை
ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை என்று அந்வயம்-

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை-1–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

March 18, 2012

சூரணை-1–வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..

பிரமாதா வானவன் பிரமாணத்தை கொண்டு இறே ப்ரமேயத்தை நிச்சயிப்பது ..அந்த பிரமாணம் தான் பிரத்யஷாதி ரூபேண அஷ்ட விதமாக சொல்லுவார்கள்..அதில் ப்ரத்யஷ மேகன்சார்வாக-இத்யாதியாலே சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டிகளை  போல் அன்றிக்கே ப்ரத்யஷ அநுமான ஆகமங்கள் மூன்றையும் ,பிரமாண தயா  அங்கீகரித்து உபமாநாதி பஞ்சகத்தையும் ( உபமாநம் ,அருத்தாபத்தி ,அபாவம், சம்பவம், மற்றும் ஐதீகம் )அவற்றிலே யதாயோகம் அந்தர்பவித்து,,அவற்றில் ப்ரத்யஷம் இந்த்ரிய கிரகண யோக்யங்களிலும் அநுமானம், ப்ரத்யஷம் ,ஸித்த வ்யாப்தி கிரகண அநுரூபமான கதி பயபரோஷார்தங்களிலும் பிரமாணம் ஆகவும் அதீந்த்ரி யார்த்ததில் சாஸ்திரமே பிரமாணமாக வும் நிஷ்கரித்து அது தன்னிலும் வேதே கர்த்ராத்ய பாவாத் பலவதி ஹி நயைஸ் த்வன்முகே  நீயமாநே தன மூலத்வேன மாநம் ததி தர தகிலம் ஜாயதே -(  ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம்-14 ) என்கிற படி ஸ்வ பிரமாண்யத்துக்கு மூல சபேஷமான பௌருஷேய சாஸ்த்ரத்தை பற்றாசாக பிரமாணம் உடைய வேதமே பிரபல பிரமாணம் ஆகவும் அறுதி இட்டு இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே இப் பிரபந்தங்களில் தாம் அருளி செய்கிற அர்த்தங்கள் எல்லாம் வேத பிரதி பாத்யம் என்னும் இடம் தோற்ற முதலிலே வேதத்தை பிரமாணமாக அங்கீகரித்து கொண்டு ததர்த்த நிர்ணயம் பண்ணும் க்ரமத்தை இவ் வாக்யத்தாலே அருளி செய்கிறார்..

அகில ஹேய பிரத்யதீகத்வ கல்யாணைக தானத்வங்களால் ஈஸ்வரன் அகில ப்ரமேய விலஷணனாய் இருக்குமா போல இறே அபௌருஷேயத்வ  நித்யத்வங்களால் வேதம் அகில பிரமாண விலஷணமாய் இருக்கும் படி ..வேதத்தின் உடைய அபௌருஷேயத்வம் -வாசா விரூப   வித்யயா–இத்யாதி சுருதியாலும் அநாதி நிதனாஹ்யேஷா வாகுச்த்ருஷ்டா ஸ்வயம்புவா ஆதவ் வேத மயீ திவ்யா யதாஸ் சர்வா ப்ரசூதய -இத்யாதி ச்ம்ருதியாலும் ப்ரிதிபாத்திக்க படா நின்றது இறே..இந்த சுருதி ஸ்ம்ருதிகள் வேத நித்தியத்தை சொல்லுகையாலே தத் பௌருஷேத்யத்வமும் சித்தம் இறே..அதேவ பரம விபர லம்ப ப்ரமதா சக்தி ரூப தோஷ  சதுஷ்டய சம்பாவன கந்த ரஹீதமாய் இருக்கும் பௌருஷயத்வம் இறே அவை வருகைக்கு மூலம்..இப்படி இருக்கையாலே இதுக்கு  மேம்பட்ட ஒரு சாஸ்திரம் இல்லை ..ஆகையாலே இறே -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே  வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ,ந தைவம் கேசவாத் பரம் -என்று ஐதிகாசகராலும் பௌராணிகராலும் ஏக கண்டமாக சொல்லப் பட்டது ..இதன் ஏற்றம் எல்லாம் திரு உள்ளம் பற்றி இறே –சுடர் மிகு சுருதி -என்று நம் ஆழ்வார் அருளி செய்தது ..அவரை பின் செல்லுபவராய் அபியுக்த அக்ரேசரான பட்டரும் -ஆதவ் வேதா : பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்றார் இறே ..

இத்தை வேதம் என்கிறது வேதயதீதி வேத : என்கிற வ்யுக்பக்தியாலே புபுஷூ க்களாய்–ஆச்திகராய் இருப்பாருக்கு ஸ்வார்த்த பிரகாசமாய் இருக்கையாலே ..இப்படி இருந்துள்ள-வேதம் தான் பிரதிபாத்யார்த்த விசேஷத்தாலே பாகத்வயாத்மகமாய் இருக்கும் .
.அத்தை இவ் இடத்தில் உபயபாக சாமான்யவாசியான  வேத சப்தத்தாலே சாகல்யேன சொல்கிறது ..

அர்த்தம் என்று பூர்வ பாக ப்ரதிபாத்யமான கர்மத்தையும் உத்தர பாக  பிரதிபாத்யமான ப்ரஹ்மத்தையும் சொல்லுகிறது..பூர்வோத்தர மீமாம்சைகளில் ,-அதாதோ  தர்ம ஜிஜ்ஜாசா -என்றும்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா என்றும் இறே உபக்ரமித்தது
..ஆகையாலே பாக துவயத்துக்கும் பிரதிபாத்யம் ஆராதனா ரூபமான கர்மமும் ,ஆராத்ய வச்துமான ப்ரஹ்ம இறே..
கர்மத்தின் உடைய பாகவத ஆராதநத்வம்
-ச ஆத்மா அங்கான் அன்யா தேவதா -என்று அக்நீத்ராதி சகல தேவதைகளும் பகவத் சரீர பூதராக சாஸ்திரம் சொல்லுகையாலே  சித்தம் இறே .
.இவ் ஆகாரம் அறியாதார் அவ்வோ தேவதா மாத்ரங்களையும் உத்தேசித்து  பண்ணும் கர்மமும் ,வச்துகத்யா பகவத் ஆராதநமாக தலை கட்டும்.
.யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மானான்சஹூதாச்னான்  சர்வ பூதாந்த்ர ஆத்மாநாம் விஷ்ணு மேவ யஜந்தி தே-என்ன கடவது இறே
..யேப்அன்ய தேவதா பக்தா யஜந்தே ச்ரத்த யான்விதா  தேபி மாமேவ கவந்தேய யஜந்தி விதி பூர்வகம்–கீதை 9-23-என்று தானே அருளி செய்தான் இறே ..ஆகவே எல்லா படியாலும் ,கர்மத்துக்கு பகவத் ஆராதனா ரூபம் சித்தம் இறே ..

இப்படி ஆராதனா ரூபமான கர்மமும், ஆராத்ய  வஸ்துவான ப்ரஹ்மமும் ஆகிற அர்த்த தவத்தையும் அறியவே
த்யாஜ்ய உபாயதேய ரூப சகலார்தங்களையும் அறியலாய் இருக்கையாலே பாக த்வய ப்ரதிபாத்யம் கர்ம பிரமங்கள் என்கிறது
.எங்கனே என்னில் கர்மம் தான் புபுஷுகளுக்கு ஐஸ்வர்ய சாதனமாய் முமுஷுக்களில் பக்தி நிஷ்டருக்கு உபாசன அங்கமாய்
,பிரபன்னருக்கு கைங்கர்ய ரூபமாய இறே இருப்பது..

இப்படி இருந்துள்ள கர்மத்தின் வேஷத்தை உள்ளபடி அறியவே
,அநந்த ஸ்திரபல பிரம ப்ராப்தி காமரான சாதகருக்கு இது உபாசன  அங்கத்வேன உபாதேயம்.
.ஐச்வர்யாதிகளுக்கு உபாதேயமான ஆகாரத்தால் த்யாஜ்யம் என்று அறியலாம் அநந்ய சாதனருக்கு இது கொண்டு சாதிக்க வேண்டுவது ஓன்று இல்லாமையாலே கைங்கர்ய ரூபேண உபாதேயம் .
. உபாசகருக்கு உபாதேயமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்று அறியலாம் .
.ப்ரஹ்மத்தை அறியும் போது ,தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அறிய வேண்டும் ஆகையாலே
,விபூதி பூத சேதன அசேதனங்களின் ஸ்வரூபம் அறியலாம்
அதில் ஞாநாநந்த லஷணமான சேதனஸ்வரூப  வைலஷணம் அடியாக  வருகிறது ஆகையாலே  கைவல்யத்தின் வேஷமும் அறியலாம்.
.ப்ரஹ்மத்தின் உடைய சேஷித்வ ப்ராப்யத்வங்களை அறியவே தத் அநுபாவாதிகள் புருஷார்த்தம் என்று அறியலாம்.
.தத் உபாச்யத்வ சரண்யத்வங்களை அறியவே தத் ப்ராப்தி சாதன விசேஷங்களை அறியலாம்.
.ப்ரஹ்மத்தின் உடைய நிரதிசய ப்ரஹ்மக்யத்வத்தையும் அநந்ய சாத்வத்தையும் தத் பிரகார தயா பரதந்த்ரமான ஸவஸ்ரூபத்தையும் தர்சிக்கவே சாத்யாந்தர  சாதனாந்த்ரங்கள் உடைய த்யாஜ்யத்வத்தையும்  ஸூஸ்பஷ்டமாக அறியலாம்
ஆக இப்படி இருக்கையாலே பாக த்வயத்துக்கும் பிரதிபாத்யம்  ஆராதனா ஸ்ரூபமான கர்மமும் ஆராத்ய வஸ்துவான பிரமமும் என்ன குறை இல்லை
த்வதர்ச்சா விதி முபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஞா பநைஸ் த்வத் பதாப்தவ் -என்று இறே பட்டர் அருளி செய்தது –
இப்படி பாக த்வய பிரதிபாத்யங்களான இவ் அர்த்தங்களை அறுதி இடுகையாவது –
கர்மத்தினுடைய ஸ்வரூப அங்க பலாதிகளையும் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி யாதிகளையும் –
சம்சய விபர்யாயம் அற நிர்ணயிக்கை-அது தான் செய்யும் போது -சகல சாக ப்ரத்யய நியாயத்தாலும் -சகல வேதாந்த ப்ரத்யய நியாயத்தாலும்
செய்ய வேண்டும் -அதில் சகல சாகா பிரத்யயமாவது -ஒரு வாக்யத்திலே  ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அதனுடைய அங்க உபாங்காதிகள் நேராக அறிக்கைக்காக -சாகாந்த்திரங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து
அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஞானம் பிறந்து -அவ அர்த்தங்களுக்கு அன்யோன்ய விரோதிகளையும் சமிப்ப்த்து –
தனக்கு அபிமதமான அங்கியோடே சேருமவற்றை சேர்க்கை –
சகல வேதாந்த ப்ரத்யய நியாயமாவது -ஒரு வேதாந்தத்திலே ஒரு வாக்கியம் ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அல்லாத வேதாந்தங்களிலும் சஞ்சரித்து -அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு அன்யோன்ய விரோதம்
பிறவாதபடி-விஷய விபாகம் பண்ணி -தனக்கு அபிமதமான அர்த்தங்களோடு சேருமவற்றை சேர்க்கை –
இது தான் மகா மதிகளான மக ரிஷிகளுக்கு ஒழிய -அல்லாதாருக்கு செய்ய போகாமையாலே –
உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிர்ணயிக்க வேணும் -ஆகையால் தத் நிர்ணய அங்கங்களை அருளி செய்கிறார் –
ஸ்ம்ருதி இதிகாச புரானங்களாலே -என்று ஸ்ம்ருதிகள் ஆவன -ஆப்தரான மன்வந்த்ரி விஷ்ணு ஹாரீத யஞவல்க்யாதிகளாலே
அபிஹிதங்களான தர்ம சாஸ்திரங்கள் –
இதிகாசங்கள் ஆவன -ப்ராவ்ருத்த பிரதிபாதங்களாக ஸ்ரீ இராமாயண மகா பாரதாதிகள் –
புராணங்கள் ஆவன -சர்காதி பஞ்ச லஷண உபேதங்களான-ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவாதிகள் –
வேதார்த்தம் அறுதி இடுவது இவற்றாலே என்று -இப்படி நியமேன அருளி செய்தது -இவற்றை ஒழிய
ஸ்வ புத்தியா நிர்ணயிக்கும் அளவில் -அல்ப ஸ்ருதனானவனுக்கு விப்ரதிபத்தி வருமாகையாலே –
வேத காலுஷ்ய ஹேதுவாம் என்று நினைத்து -இந் நியமம் தான் -இதிகாச புராணாப் யாம் வேதம் சம உப பிரம யேத்
பிபேத்யல் பஸ்ருதாத் வேதோ மா மாயம் பிரதரிஷ்யதி -என்று பார்கச்பத்திய ச்ம்ருதியிலும்-மகா பாரதத்திலும்
சொல்லப்  பட்டது இறே –
இவ் உபக்கிரம வாக்ய பிரக்ரியையாலே -புருஷகாரம் வைபவம் தொடங்கி-ஆச்சார்யா அபிமானம்-பர்யந்தமாக
இப் பிரபந்தத்தில் இவர் அருளி செய்கிற வேதார்த்தங்கள் எல்லாம் உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிச்சயித்து
அருளி செய்கிறார் என்னும் இடம் தோற்றுகிறது -அது தான் தத் அர்த்தங்கள் அருளி செய்கிற ஸ்தலங்களில்
சம்ப்ரதிபந்தம் –
ஆக -இவ் வாக்யத்தால் –சகல பிரமாணங்களிலும்-வேதமே பிரபல பிரமாணம் என்னும் இடமும் –
தத் அர்த்தம் நிர்ணயம் பண்ணும் கரமமும் சொல்லிற்று ஆய்த்து –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-அவதாரிகை–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 17, 2012

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அசமத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததன்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா

பூதம் சரச்ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தான்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோச்மி நித்யம்

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம்  வரயோகி ந மீடே
லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ  சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே-

புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத  ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ  லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்

பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –
திரு மா மகள்  தன் சீர் அருள் ஏற்றமும்
திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர்  பணிபவர்தன்மையும்
தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

லோகாச்சார்ய  க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த  தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா
ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷனே
தத்வ ஞாநஞ்ச  தந் நிஷ்டாஞ்ச  தேஹி நாத யதீந்திர மே
————-

அவதாரிகை

சகல வேத சந்க்ரஹமான திரு மந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும் -பிரதிபாதிக்க படுகிற
ஆகாரத்ரயமும் –சர்வாத்ம சாதாரணம் ஆகையாலே -யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய சூரிகளோபாதி-சுத்த சத்வமான பரம பதத்தில் -நித்ய அசங்குசித ஞானராய் கொண்டு –
நிரந்தர பகவத அனுபவ ஜனித-நிரதிசய-அநந்த த்ருப்தராய் இருக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க செய்தேயும் –
அநாதி மாயயா சூப்த -என்கிறபடி தில தைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணத் துரத் யயா  நாதி
பகவன் மாயாதி ரோஹித ஸ்வ பிரகாசராய்-அநாதய வித்யா சஞ்சித அநந்த புண்ய அபுண்ய கர்ம அநு குணமாக –
சூரா நர திர்யக்ஸ்தாவர யோநிகள் தோறும் –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய்மொழி -2-6-9-
பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் –தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஆகிற
படு குழிகளில் விழுந்து -தத் அநு குண சாத்திய சாதனங்களிலே மண்டி –யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை –திரு விருத்தம் -95-ஏறிட்டு
கொண்டு -ப்ராப்த சேஷியாய் -பரம ப்ராப்ய பிராபக பூதனாவன் பக்கல் அத்யந்த விமுகராய் –
கர்ப்ப ஜன்ம பால்ய யௌ வன வார்த்தக  மரண நரகங்கள் ஆகிற அவஸ்தா சப்தகத்திலே நிரந்தர
வித்த விவித நிரவதிக துக்கங்களை அநு பவித்து திரிகிற இஸ் சம்சாரி சேதனரிலே-
ஆரேனும் சிலர்க்கு -ஜாயமானகால பகவத் கடாஷ விசேஷத்தாலே-
ரஜஸ் தமஸ் கள் தலை மடிந்து -சத்வம் தலை எடுத்து -மோஷ ருசி உண்டானாலும்
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அவை தம்மை சாஸ்திர முகத்தாலே  அறிய பார்க்கும் அளவில் -சாஸ்த்ரங்களில்
தலையான வேதமானது –அநந்தா வை வேதா -என்கிறபடி –
அனந்தமாய்-ஸ்வார்த்த நிர்ணயித்தில் -சர்வசாகா ப்ரத்யய நியாயாதி சாபேஷமாய் இருக்கையாலே –
அல்ப மதிகளுக்கு அவஹாகித்து அர்த்த நிச்சயம் பண்ண அரிதாகையாலும்-
அனந்த வேத பாரகராய் -ஸ்வ யோக மகிம சாஷாத்க்ருத பராவர தத்வ விபாகரான –
வ்யாசாதி பரமரிஷிகளாலே -பரணீ தங்க ளாய்-வேத உப ப்ருஹ்மணங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணங்களிலும்
சார அசார விவேக சதுரர்க்கு ஒழிய -தாத்பர்யாம்சம் தெரியாமையாலும் –
அவை போல் அன்றிக்கே சம்சார சேதனோ உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன்-தானே ஆச்சார்யனாய் –
வெளிப்படுத்தின சகல வேத சாரமான ரஹச்ய த்ரயமும் -அதி சங்கரக தயா அதி கூட அர்த்தங்கள் ஆகையாலும் –
பகவதாகச்மிக கடாஷ விசேஷத்தாலே-மயர்வற மதி நலம் அருள பெற்று -சகல வேத சாஸ்திர தாத்பர்யங்களையும் –
கரதலாமலகமாக சாஷாத்கரித்த பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்கள் அருளி செய்த திராவிட வேத தத் அங்க உபாங்களான திவ்ய பிரபந்தங்களும்
அளவிலிகளால் அர்த்த தர்சனம் பண்ண போகாமையாலும் –
ருசி பிறந்த சேதனர் இழந்து போம்படி இருக்கையாலே –ஆழ்வாருடைய  நிர்கேதுக  கடாஷ லப்த திவ்ய
ஞானரான நாதமுனிகள் தொடக்கமாக சத் சம்ராதாய சித்தராய்-சகல சாஸ்திர நிபுணராய் -பரம தயாளுக்களான-
பூர்வாச்சார்யர்கள் அந்த வேதாதிகளில் அர்த்தங்களை சங்க்ரகித்து மந்த மதிகளுக்கும் சூக்ரகமாம் படி
பிரபந்தீகரித்தும் உபதேசித்தும் போந்தார்கள் -அப்படியே சம்சாரி சேதனர் இழவு சஹிக்க  மாட்டாத பரம கிருபையாலே –
தத் உஜ்ஜீவன அர்த்தமாக தாமும் பல பிரபந்தங்கள் அருளி செய்த பிள்ளை லோகாச்சார்யர் ஆச்சர்ய பரம்பரா
ப்ராரப்தங்களான வர்த்தங்களில் -அவர்கள் தாங்கள் கௌ ரவ அதிசயத்தாலே -ரஹச்யமாய் உபதேசித்து போந்தமையாய்  –
அருமை பெருமைகளை பற்ற இதுக்கு முன்பு தாமும் பிரகாசிப்பியாமல் அடக்கி கொண்டு போந்தவையுமான அர்த்த
விசேஷங்கள் எல்லாத்தையும் –பின்பு உள்ளாறும் இழக்க ஒண்ணாது என்கிற தம்முடைய க்ருபா அதிசயத்துக்கு மேலே
பெருமாளும் ஸ்வப்பனத்திலே திரு உள்ளமாய் அருளுகையாலே –ஸ்ரீ வசன பூஷணம்  ஆகிற இப் பிரபந்த முகேன
வெளி இட்டு அருளுகிறார் –

முன்பே பேர் அருளாள பெருமாள் தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு
நம்பி யாரை விசேஷ கடாஷம் பண்ணி அருளி -தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை தாமே
அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –
அவர் இங்கே வந்து பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -நமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு  கோவிலிலே வர்த்தியா நிற்க செய்தே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்  வி டம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க -அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவதே -என்று பிள்ளை கேட்டு அருள -பேர் அருளாள  பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே -பெருமாள் அவருக்கு  ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும்  என்று திரு உள்ளமாக
அவர் இப்படி பெருமாள்திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய -ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –
பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று

இப் பிரபந்தத்தில் —சூரணை- 1- வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-சூரணை – 4-
அத்தாலே அது முற்பட்டது -என்னும் அளவாக வஷ்யமநார்த்த நிர்ணயக பரமான நிர்த்தேசம்
பண்ணுகிறது ஆகையாலே –பிரபந்த உத்போதகாதம் –

இதிஹாச ஸ்ரேஷ்டம் -என்று தொடங்கி
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்  இவளுக்காக -என்னும் அளவும் சாபராத சேதனருடைய
சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து ரஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷகார வைபவரும்
அந்த புருஷகாரமும் மிகை யாம் படி யான உபாய வைபவமும் சொல்கிறது –

ப்ரபத்திக்கு -என்று தொடங்கி ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய -என்னும் அளவு இவ் உபாய வரண ரூப
பிரபத்தியினுடைய தேச காலாதி நியம அபாவம் -விஷய நியமம் -ஆஸ்ரய விசேஷம் –
இத்தை சாதனமாக்கில் வரும் அவத்யம் -இதன் ஸ்வரூப அங்கங்கள் -முதலானவற்றை சேர சொல்லி
பிரபத்யவனே உபாயம் என்று சாதிக்கையாலே –பூர்வோக்த உபாய சேஷம் ஆகையாலே -உபாய பிரகரணம் –

இதில் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்னும் அளவும் பிரதான பிரமேயம்
மேல் என்னுமளவு-இவ் உபாயத்தை கொண்டு உபேயத்தை பெருவானொரு சேதனனுக்கு உபாய உபேய
அதிகார பிரதான அபேஷிதங்களையும்-உபாயாந்தர த்யாக ஹேதுக்களையும்-மற்றும் த்யாஜ்ய உபா தேயங்களாய்
உள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதிகாரி நிஷ்டாக்ரமம் சொல்லுகிறது –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-என்று தொடங்கி உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –
என்னும் அளவாக ஹித உபதேச சமயத்தில் -ஸ்வ ஆச்சார்ய பாரதந்த்ர்யாதிகளான-சதாசார்யா லஷணம்-
சச்சிஷ்ய லஷணம் -தத் உபயர் பரிமாற்றம் -தீ மனம் கெடுத்த ச்வாச்சார்ய விஷயத்தில் சிஷ்யன் உபகார
ஸ்ம்ருதி க்ரமம்- இவற்றை சொல்லுகையாலே சித்த உபாய நிஷ்டனான அதிகாரி யினுடைய ச்வாச்சார்ய
அநு வர்த்தன க்ரமம் சொல்லுகிறது

-ஸ்வ தோஷ அநு சந்தானம் பய ஹேது -என்று தொடங்கி
நிவர்தாக ஞானம் அபய ஹேது -என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி –
ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தமாக உண்டான பேறுகளுக்கு எல்லாம் ஹேதுவாய்-
ஸ்வ கர்ம பய நிவர்தகமான –பகவன் நிர்கேதுக க்ருபா பிரபாவம் சொல்லுகிறது –

ச்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -என்று தொடங்கி மேல் எல்லாம் மிக்க வேதியர்
வேதத்தின் உள் பொருளான சரமபர்வ நிஷ்டையை வெள்ளியதாக  சொல்லுகிறது

-வேதார்த்தம் அறுதி இடுவது என்றுதொடங்கி இவ் அர்த்தத்திலே தலை கட்டுகையாலே
இப் பிரபந்தத்தில் சரம பிரகரண ப்ரதிபாத்யமான அர்த்தம் வேத தாத்பர்யம் என்னும் இடம்
சம்ப்ரதிபன்னம் –

ஸ்ரீ கீதைக்கு சரம ஸ்லோகம் போலே இறே இப் பிரபந்தத்துக்கு சரம பிரகரணம் –
அங்கு சாத்திய உபாயங்களை உபதேசித்து கொண்டு போந்து -ச்வாதந்த்ர்யா பீதனான அவனுக்கு
அவற்றை தள்ளி சித்தோ உபாயம் காட்டப் பட்டது –
இங்கு சித்த உபாயத்தை சொல்லி கொண்டு போந்து ஈஸ்வர ச்வாதந்த்ரத்துக்கு அஞ்சினவனுக்கு
பிரதமபர்வத்தை தள்ளி சரம பர்வம் காட்டப் பட்டது
ஆக இப்படி ஆறு பிரகரணமாய் ஆறு அர்த்த பிரதிபாதகமாய் இருக்கும் –

ஒன்பது பிரகரணமுமாய்-ஒன்பது அர்த்த பிரதிபாதகமாயுமாய் இருக்கும் என்னவுமாம் –
அந்த பஷத்திலும் பிரதம பிரகரணம் பூர்வவத் –

மேல் -பிரதிபத்திக்கு -என்று தொடங்கி -பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் -என்னும் அளவும் –
பூர்வ பிரகரண உக்தோபாய சேஷம் ஆகையால் உபாய பிரகரணம் –

ப்ரபாந்தர பரித்யாகத்துக்கு  -என்று தொடங்கி -ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும் –
என்னும் அளவும் உபாயாந்தர தோஷ பிரகரணம் –

இப் பிரகரணத்தில் -பிரபத்தி உபாய வைலசன்ய கதனம் ப்ராசங்கிகம்-
இவன் அவனை  பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் -என்னும் அளவும்
சித்தோ உபாய நிஷ்டருடைய வைபவ பிரகரணம் –

இப்படி சர்வ பிரகாரத்திலும் -என்று தொடங்கி –
உபேய விரோதிகளாய் இருக்கும் -என்னும் அளவும் பிரபன்ன தினசரியா பிரகரணம் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது -என்று தொடங்கி –
செதநனுடையருசியாலே வருகையாலே -என்னும் அளவும் சதாச்சார்ய லஷண பிரகரணம் –

சிஷ்யன் எனபது -என்று தொடங்கி -உபகார ஸ்ம்ருதியும் நடக்க  வேணும் -என்னும் அளவும்
சச் சிஷ்ய லஷணப்ரகரணம் –

ஸ்வ தோஷ அநு சந்தானம் -என்று தொடங்கி -நிவர்த்தாக ஞானம் அபய ஹேது –
என்னும் அளவும் பகவத் நிர்கேதுக விஷயீகார  பிரகரணம் –

ச்வதந்த்ரனை -என்று தொடங்கி மேலடங்க சரம ப்ராப்ய பிராபக பிரகரணம் –

இவ் இரண்டையும் பற்ற  இறே -பேறு தருவிக்குமாள் தன்பெருமை -திரு மகள் தன் –
என்கிற தனியன்கள் இரண்டும் அவதரித்தது –
ஆகையால் இரண்டு பிரகாரமும் அனுசந்திக்க  குறை இல்லை
-இப் ப்ரபந்தம் தான் தீர்க்க சரணாகதியான திரு வாய் மொழி போலே த்வய விவரணமாயிருக்கும்-எங்கனே என்னில்
-திரு வாய் மொழியாலே முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தத்தையும் -மேல் மூன்று பத்தாலே பூர்வ கண்ட அர்த்தத்தையும் சொல்லி –
மேல் நான்கு பாத்தாலும் அவ உபாய உபேயோகியான குணங்களையும் – ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும் –
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக பந்தத்தையும் – தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியையும் பிரதிபாதிக்கையாலே –
தத் அநு ரூப அர்த்தங்களை சொல்லி தலை கட்டினாப் போலே –
இதிலும் –
பிரதமத்தில் புருஷகாரத்தையும்
அநந்தரம் உபாயத்தையும்
அநந்தரம் ஏதத் உபாய அதிகாரி நிஷ்டையையும் சொல்லுகையாலே
பூர்வ கண்ட அர்த்தத்தையும் –
அவ்  அதிகாரி நிஷ்டை சொல்லுகிற அளவில்
உபேய அதிகாரி அபேஷிதங்களை சொல்லுகிற இதுக்குள்
உத்தர கண்ட அர்த்தைத்தையும் சொல்லி –
மேல் பிரபந்த சேஷத்தாலும்-தத் உபதேஷ்டாவான ஆச்சார்யன் அளவில்
இவனுக்கு உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்த்தன பிரகாரங்களையும் –
இவனுக்கு மகா விசுவாச ஹேதுவான பகவன் நிர்ஹேதுக க்ருபா பிரபாவத்தையும் –
வாக்ய த்வய உக்தி உபாய உபேய சரமாவதியையும் சொல்லி தலை கட்டுகையாலே
ஒன்பதர்த்த பிரதிபாதகமான பஷத்திலும் -பூர்வ வாக்யத்தில் -க்ரியாபத உக்தமான
ச்வீகார உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் அல்லது இல்லாமையாலும்
திநசர்யையும் அப்பதத்தில் சொல்லப் படுகிற அதிகாரிக்கே உள்ளது ஆகையாலும்
சதாச்சார்ய லஷணம் த்வய உபதேஷ்டாவான ஆச்சார்யன் படி சொல்லுகிறது
ஆகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்க குறை இல்லை —

இப்படி த்வய விவரணமான இதினிலே த்வயம் -தன்னில் போலே மற்றை ரஹச்யத்வ்ய அர்த்தங்களும்
ஸங்க்ரஹ ணோத்தங்களாய் இருக்கும் -எங்கனே என்னில் –
அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியான் என்று இறே -என்னுமளவாகவும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் என்றும் –பிரணவ அர்த்தம் சொல்லப் பட்டது –

ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதியாலும் -தன்னை தானே முடிக்கை யாவது -என்று தொடங்கி
இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்கிறதுக்கு கீழ் உள்ளதாலும் -நம-சப்த அர்த்தம் சொல்ல்சப் பட்டது –

பர பிரயோஜன பிரவ்ருத்தி -இத்யாதியாலும் உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -இத்யாதியாலும்
கைங்கர்யம் தான் பக்தி மூலம் அல்லாத போது -இத்யாதியாலும் த்ருதீய பத அர்த்தம் சொல்லப்  பட்டது –

அக்ஞானத்தாலே -இத்யாதியாலும் ப்ராபகந்தர பரித்யாகத்துக்கு -இத்யாதியாலும்
உபாயாந்தர த்யாகத்தை சஹேதுகமாக சொல்லுகையாலே -தத் த்யாஜ்யதையும் –
த்யாக பிரகாரத்தையும் சொல்லுகிற  பத த்வய அர்த்தமும் சொல்லப் பட்டது –

இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதியாலும்
ப்ராப்திக்கு   உபாயம் அவன் நினைவு -இத்யாதியாலும் –மாம் ஏகம் சரணம் -என்கிற
பதங்களின் அர்த்தம் சொல்லப் பட்டது –

பிரபத்தி உபாயத்துக்கு -இத்யாதியாலே வ்ரஜ -என்கிற ச்வீகார வைலஷண்யம் சொல்லப் பட்டது –

அவன் இவனை என்று தொடங்கி ச்வதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் -என்னும் அளவும் –
சர்வ பாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும்
க்ருபா பலம் அனுபவித்தே அற வேணும் -என்று பல சித்தியில்
கண் அழிவு இல்லாமையும் சொல்லுகையாலே  உத்தர அர்த்தத்தில் அர்த்தம் சொல்லப் பட்டது-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-263 -278–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 16, 2012

இனி இந்த ஸ்லோக அர்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும் –
இந்த ஸ்லோகம் தனக்கு இன்னதிலே நோக்கம் என்னுமத்தையும் –
இதில் விஸ்வஸ் உத்பத்தியின் அருமையையும் –
ஈஸ்வரன் தான் முதலிலே இத்தை உபதேசியாமைக்கு ஹேதுவையும் –
வேத புருஷன் உபயாந்தரங்களை  விதிக்கைக்கு ஹேதுவையும் –
உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்கும் அளவில் தோஷம் இல்லை என்னுமத்தையும் –
அவை தானே முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னும் இடத்தையும் –
பேற்றுக்கு சாதனம் இன்னது என்னுமத்தையும் –
பல சித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்சத்தையும் –
ஈஸ்வரனுக்கு இவனுடைய ஸூக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும் –
இவ் அர்த்தத்தில் ஆஸ்திகயாதிகள் உண்டாய் பிழைத்தல்-இல்லையாகில் நசித்தல் இத்தனை -என்னுமத்தையும் –
வ்யவசாயஹீனன் இதில் அந்வயித்தால் விநாச பர்யந்தமாம் என்னுமத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் –
அடைவே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————————————————

சூரணை -263
உய்யக் கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

அவற்றில் பிரதமத்தில் -இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்சிப்பிக்கைக்காக
ஓர் ஐதிக்யத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தத்வ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் பக்தி நிஷ்டராய் இருக்கையாலே -அவரை
பிரபத்தி நிஷ்டராம் படி பண்ண வேண்டும் என்று அவருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்த அளவிலே –
அர்த்த ஸ்திதி அழகிதாய்  இருந்தது -ஆகிலும் அத்தை விட்டு இத்தை பற்ற தக்க ருசி எனக்கு இல்லை -என்ன –
வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி பிறந்தது இல்லை -என்று
அவர் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது -என்கை –

—————————————————-

சூரணை -264
இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு –

இனி இந்த ஸ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் -தான் ஒரு தலையுமாய் இருக்கிற இந்த இச் சேதனனுக்கு தானே –
நிரபேஷ சாதனமாய் -ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு –
ஸ்வ ப்ராப்தியை பண்ணிக் கொடுக்கும் -ஸ்வாதீன சகல ப்ரவர்த்தகனான ஈஸ்வரனுடைய
ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம் -என்கை-

————————————————————-

சூரணை -265
இது தான் அநுவாத கோடியிலே-என்று வங்கி புரத்து நம்பி -வார்த்தை –

இனி இதில் விஸ்வாஸ உத்பத்தியில் அருமையை அருளிச் செய்கிறார் –
அதாவது இந்த ஸ்லோக அர்த்தம் தான் அனு வாதத்தினுடைய கோடியிலே -என்று
ஆப்த தமரான வங்கி புரத்து நம்பி அருளிச் செய்யும் வார்த்தை -என்கை –
அனுவாதம் -கூறிய ஒன்றை மீண்டும் கூறுவது -அர்ஜுனனன் அறிந்தவற்றை மீண்டும் கண்ணன் அருளிச் செய்கிறான் –

————————————————————

சூரணை -266
அர்ஜுனன்-கிருஷ்ணனுடைய ஆனை தொழில்களாலும் –
ருஷிகள் வாக்யங்களாலும் –
கிருஷ்ணன் தன் கார்யங்களிலே அதிகரித்துப் போருகையாலும் –
இவனே நமக்கு தஞ்சம் என்று துணிந்த பின்பு –
தன்னைப் பற்றி சொல்லுகையாலே –
அது எத்தாலே -என்ன -அருளி செய்கிறார் –

அதாவது –
இதுக்கு அதிகாரியான அர்ஜுனன் பால்யமே தொடங்கி கிருஷ்ணனுடைய அகடிதகடநா
சாமர்த்திய பிரகாசமான அதி மானுஷ சேஷ்டிதங்களாலும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
புண்யா த்வாரவதீ யத்ர தத்ராச்தே மது சூதன
சாஷாத் தேவ புராணோ அசௌ சஹி தர்மஸ் சனாதன
யத்ர நாரயனோ தேவ பரமாத்மா சனாதன
தத்ர க்ருத்ச்னம் ஜகத் பார்த்த தீர்த்தாந் யாயதநாநி ச
யே ச வேத விதோவிப்ரா யே சாத்யாத்மா விதோ ஜனா தேவதந்தி
மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ராம் பரமுச்யதே
புண்யா நாம்பி புண்யா அசசௌ மங்களாணாம் ச மங்களம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நா முத்பத்தி ரபி சாப்யய
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம்  விச்வம் சராசரம் -என்றும்
இத்யாதிகளில் இருந்துள்ள பராவர தத்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும் –
பல்யாத்ப்ரப்ருதி புரவாச தசையோடு -வன வாச தசையோடு -வாசியற கிருஷ்ணன்
தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும் –
இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்கு தஞ்சம் அன்று -இவனே நமக்கு தஞ்சம் –
என்று விச்வசித்த பின்பு -ஆனால் என்னை பற்று -என்று சொல்லுகையாலே -என்கை –

————————————————————–

சூரணை-267-
புறம்பு பிறந்தது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கைக்காக-

இது தன்னை முதலில் உபதேசியாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது
யச்சரேய சியான் நிச்சிதம் ப்ருஹூ தன்மே சிஷ்ய ஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் –
என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத் தொடங்கிகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் -அவ்வளவிலே பர்யவசித்து விடுமோ -அவற்றினுடைய
தோஷத்தாலே இவ் உபாய உபதேசத்துக்கு  அதிகாரி யாமோ -என்று
இவனுடைய ஹ்ருதயத்தை  சோதிக்கைக்காக என்கை –

——————————————————–

சூரணை -268
வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது -கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பு அற்ற ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக–

ஆனால் இவன் அன்றோ இப்படி ஹ்ருதய சோதன அர்த்தமாக உபாயந்தரங்களை உபதேசித்தவன் –
வேத புருஷன் அவற்றை விதிப்பான் என் -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆப்த தமனான வேத புருஷன் -விஞ்ஞாய  ப்ரஞ்ஞாம் குர்வீத –
ஒமித்யாத்மானம்  த்யாயத ஆத்மானமேவ லோகமுபாசீத
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்யோ  நிதித்யா சிதவ்ய-இத்யாதிகளாலே
உபாயாந்தரங்களை மோஷ சாதனமாக விதித்தது –
பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வசப்படுகைக்காக கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகார வச்யனாய் களித்து திரிகிற இவனுக்கு –
ஜன்மான் தரசஹஸ்ரேஷூ  தபோ ஞான சமாதிபி -என்கிறபடி
காய க்லேச ரூபமான கர்ம அனுஷ்டானம் -இந்த்ரிய ஜெயம் -முதலான
அரும் தேவைகளாலே செறுப்பு உண்டு அந்த களிப்பு போய் -பகவத் பாரதந்த்ர்யம் ஆகிற
ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக -என்கை –

——————————————————–

சூரணை -269
சந்நியாசி முன்பு உள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்
இவற்றை விட்டால் குற்றம் வாராது –

ஆனால் இப்படி ஸ்வரூப ஞான உதய ஹேதுவான இவற்றை விட்டால் குற்றம் ஆகாதோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
சரம ஆஸ்ரமத்திலே அந்விதன் ஆனவன் பூர்வாஸ்ரம தர்மங்களை விடுமா போலே -அந்ய உபாயங்களினுடைய
ஸ்வரூப விரோதித்வாதிகளாலே -சித்த உபாயத்தில் இழியும் படி இவ்வளவான ஞான பாகம் பிறந்தவன் –
இவ் உபாயந்தரங்களை விட்டால் தோஷம் ஆகாது -என்றபடி –

————————————————————-

சூரணை -270
இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் –

இவை தான் ஆகாரந்தரத்தாலே அன்விதங்கள் ஆகையாலே இவற்றில் இவன் தனக்கு
ஸ்வரூப த்யாகம் இல்லை -என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணின இவ் அதிகாரி தான் –
கர்ம ஞானாதிகள் ஆகிற  இவை தன்னை ஸ்வரூபேண த்யஜித்து இலன் -என்கை –

———————————————————-

சூரணை-271-
கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-

நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே-
ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –

பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான
ருசியிலே அந்தர்பவிக்கும் –

சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-

———————————————————

சூரணை -272
ஒரு பலத்துக்கு அரிய  வழியையும் -எளிய வழியையும் உபதேசிக்கையாலே –
இவை இரண்டும் ஒழிய -பகவத் ப்ரசாதமே உபாயமாகக் கடவது –

பக்தி பிரபத்திகள் இரண்டையும் கழித்தால்
இவன் தனக்கு பல சாதனம் ஆவது எது -என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது-
பகவத் ப்ராப்தி ஆகிற ஒரு பலத்துக்கு –
ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
அநேக ஜன்மங்களிலே கர்ம ஞானாதிகள் ஆகிற அங்கங்களாலே சாதிக்கப் படுமதாகையாலே
அரிதாய் இருந்துள்ள பக்தி மார்க்கத்தையும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சக்ரு தனுஷ்டேயம் ஆகையாலே -எளிதாய் இருந்துள்ள பிரபத்தி மார்க்கத்தையும் -உபதேசிக்கையாலே
சாதனா கௌரவ லாகவங்களில் தாத்பர்யம் அன்றிக்கே தத் வயாஜேன பல பிரதானாக
நின்றுள்ள அவனுடைய ப்ரசாதமே பிரதானம் ஆகையாலே –
பக்தி பிரபத்திகள் ஆகிற இவை இரண்டும் ஒழிய
பகவானுடைய  ப்ரசாதமே உபாயமாக கடவது -என்கை –

——————————————————————

சூரணை -273
பேற்றுக்கு வேண்டுவது விலக்காமையும் இரப்பும்-

ஆனாலும் பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ –
என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
பலசித்திக்கு சேதனன் பக்கல் உண்டாக வேண்டுவது –
ஸ்வ யத்னத்தாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காது ஒழிகையும் –
அது புருஷார்த்தம் ஆகைக்கு உறுப்பான இரப்பும் -என்கை-

———————————————————————-

சூரணை -274
சக்கரவர்த்தி திரு மகன் பாபத்தோடு வரிலும் அமையும்
இவன் புண்யத்தைப் பொகட்டு வர வேணும் என்றான் –

இங்கன் அன்றிக்கே இவன் பக்கலிலும்  சில ஸூக்ருதம் உண்டானால் ஆகாதோ -என்ன
உபாய பூதனுக்கு அநிஷ்டம் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ராமோ விக்ரகவான் தர்ம -என்கிற சக்கரவர்த்தி திரு மகன் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று பபிஷ்டனான ராவணன் தான் ஆகிலும்
அழைத்து வாரும் -என்கையலே -பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கு உடல் அல்லாமையலே
பாபத்தோடு வரிலும் அமையும் -என்றான் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று இவன் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே
பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தை பொகட்டு  வர வேணும் என்றான் -என்கை
ஆகையால் சகாயாந்தர சம்சர்க்க அசஹனான -உபாய பூதனுக்கு இவன் பக்கல் ஸூக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து –

———————————————————————–

சூரணை -275
ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –

இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய
மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –
அதாவது –
இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய்
இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ –
என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –
என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

———————————————————————–

சூரணை -276
வ்யவாசாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம் -ஆமத்தில் போஜனம் போலே –

வ்யவசாய ஹீனனுக்கு இதில் அந்வயம் விநாசத்துக்கு உடலாம் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது –
இதில் சொல்லுகிற  த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யவாசயம் இல்லாதவனுக்கு
இதில் உண்டான அந்வயம் அஜீர்ண தசையில் பண்ணின போஜனம் மரண ஹேதுவாமா போலே
விநாச ஹேதுவாய் பர்யவசிக்கும் -என்கை –

—————————————————————–

சூரணை -277
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் –

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –நாச்சியார் திரு மொழி –11-10-என்று கரண த்ரயத்தாலும் -செவ்வியராய் –
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு -கோவிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –
அர்ஜுன வ்யாஜ்யத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த
யதார்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்கிற வார்த்தையை
பெரிய ஆழ்வார் கேட்டு -தந் நிஷ்டராய் இருபபார்-என்கிறபடி -இவ் அர்த்தத்துக்கு
அதிகாரிகள் இது கேட்டால் இதன் படியே நியதராய் இருக்குமவர்கள் -என்கை –

—————————————————————

சூரணை -278
வார்த்தை அறிபவர் -என்கிற பாட்டும்
அத்தனாகி -என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அநு சந்தேயம் –

இவ் அர்த்த நிஷ்டரான ஆழ்வார்கள் உடைய திவ்ய ஸூக்தி யில் இதுக்கு
அர்த்தமாக அநு சந்திக்க படுமவற்றை அருளி செய்து -இது தன்னை
நிகமிக்கிறார் –

அதாவது-
வார்த்தை அறிபவர் பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளி உற்று
மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -திரு வாய் மொழி -7-5-10–என்று –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்ற நல் வார்த்தையை அறியும் அவர்கள்
பரணி கூடு வரிந்தால் போலே -இவ் ஆத்மாவை சூழப் பொதிந்து கிடக்கிற ஜன்மங்களோடும்-
அவை புக்க இடத்தே புகக் கடவதான வ்யாதியோடும் –
அங்கனே ஆகிலும் சிறிது நாள் செல்லாத படி இடி விழுந்தால் போல் வரும் ஜரையோடும் –
அங்கனே ஆகிலும் இருக்க ஒண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான-வினாசமுமாகிற -இவற்றை –
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி -அவை போன்ற அநந்தரம் வரக் கடவதான –
கைவல்யம் -ஆகிற மகா துக்கத்தை சவாசனமாகப் போக்கி –
பாத ரேகை போலே தன் திரு அடிகளின் கீழ் சேரும் படி பண்ணி –
புனராவ்ய வசிதராய் கொண்டு தங்களுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு –
விரோதி நிவர்தகனான ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆள் ஆவாரோ –
என்று நம் ஆழ்வார் அருளிச் செய்த -வார்த்தை அறிபவர் -திரு வாய் மொழி -7-5-10-என்கிற பாட்டும் –

முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் புகுந்து -நம்முள் மேவினார் -ஏழை நெஞ்சமே
எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று
ஹேய ப்ரத்ய நீகர் ஆகையாலே -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தபூமி பிரதர் ஆனவர் –
சகல தேக வர்திகளான ஆத்மாக்களும் ஞான ஏக ஆகாரதையா ஒத்து -தேவாதி பேதத்தலே
ஒவ்வாமல் இருக்கும் பல வகைப் பட்ட ஜன்மங்களைப் போக்கி –
நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை நித்ய ஸூரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும்  பிதாவாகவும் –
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாகவும் -அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமி யாயும் –
இப்படி சர்வ வித பந்துமாய் –
நம்முடைய தண்மையையும்-தம்முடைய பெருமையும் பாராதே -நம்முடைய சர்வ பரத்தையும்
தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினர் –
அறிவிலியான நெஞ்சே -நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஞ்ஞராயோ -அவன் அஞ்ஞனாயோ
ஹிதத்தை ப்ரவர்த்திப்பைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்கைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று உபகரிக்கும் அவனே இருக்க –
எத்தாலே நீ துக்க சாகரத்தில் கிடக்கிறது -என்று
திரு மழிசைப் பிரான் அருளி செய்த -அத்தனாகி -திரு சந்த விருத்தம் -115- என்கிற பாட்டும்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக அநு சந்தேயம் -என்கை –

—————————————————————-

ஆக -இத்தால் –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் -சர்வ தரமான்-
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் -பரித்யஜ்ய –
அந்த தர்ம த்யாக பூர்வகமாக பற்றும் விஷயத்தின் உடைய சௌலப்யாதி குண யோகத்தையும் -மாம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவினுடைய-சகாய அசஹத்வ லஷணமான நைர பேஷத்தையும் -ஏகம்-
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் -சரணம்-
அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் -வ்ரஜ –
ஸ்வீக்ருதமான உபாயத்தின் உடைய ஞான சக்த்யாதி குண யோகத்தையும் -அஹம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் -த்வா –
அதிகாரிக்கு விரோதியான பாப சமூகத்தையும் -சர்வ பாபேப்யோ –
அப் பாப விமோசன பிரகாரத்தையும் -மோஷ இஷ்யாமி –
அப் பாப விமோசகனைப் பற்றின அதிகாரி உடைய நைர்பர்யத்தையும்-மா ஸூச -என்று
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-254-262-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

March 16, 2012

சூரணை -254
மோஷ இஷ்யாமி -முக்தனாம் படி பண்ணக் கடவன் –

அநந்தரம் –
சதுரத்த பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மோஷ இஷ்யாமி-என்று -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்
அதாவது –
இவற்றில் நின்றும் விடப் பட்டவனாம் படி பண்ணக் கடவன் -என்கை-

—————————————

சூரணை -255
ணி-ச்சாலே -நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டு
போம் காண் -என்கிறான் –

அதாவது – இஷ்யாமி -என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தா வாகை அன்றிக்கே –
தான் பிரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேன் -என்கையாலே
நானும் இதுக்கு ஒரு யத்னம் பண்ண வேண்டா –
நீயும் இதுக்கு பிரார்த்திக்க வேண்டா –
நீ என்னை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே -உன்னைக் கண்டு தாமே
பயப்பட்டு -கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு அந்தாதி -54-
என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம் காண்
என்று அருளிச் செய்கிறான் -என்கை-

———————————————————-

சூரணை -256
என்னுடைய நிக்ரஹ பலமாய் வந்தவை
நான் இரங்கினால் கிடக்குமோ -என்கை –

இப்படி அருளிச் செய்ததின் கருத்தை வெளி இடுகிறார் –
அதாவது –
பாபங்கள் ஆகிறன-குப்பையிலே ஆமணக்கு போலே மிடற்றை பிடிப்பது
ஒன்றன்று இறே  -சேதனன் பண்ணின கர்மங்கள் ஷண த்வம்சிகள் ஆகையாலே –
அப்போதே நசித்துப் போம் -அஞ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக –
ஸ்வதஸ்  சர்வஞனாய் ஓன்று ஒழியாமல் உணர்ந்து இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமல் நிறுத்து அனுபவிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -அந்த நிக்ரஹ
பலமாய் வந்தவை -நிக்ரஹத்துக்கு பிரதி கோடியான அனுக்ரஹத்தை நான் பண்ணினால்
அவ் விஷயத்தின் பின்னே கிடக்குமோ -என்கை- இதுக்கு கருத்து என்கிற  படி –

—————————————————————-

சூரணை -257
அநாதி காலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை
அவை தாம் படும் படி பண்ணுகிறேன் –

தன்னடையே விட்டு போம் என்கிற இடத்தில் அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
அநாதியான காலம் எல்லாம் துக்க அவஹமான பாபங்கள் வந்து மேலிடப் புக்கால் –
அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கம் எல்லாம் -மத் ஆஸ்ரயண ராஜ குல மகாத்மயம் உடைய –
உன்னைக் கண்டு அவை தான் குடல் கரிந்து நடுங்கும் படி பண்ணக் கடவேன் -என்கை –
அவை தானே விட்டு போம்படி பண்ணுகையாவது-இவை நமக்கு  முன்பு உண்டாய் –
கழிந்தது என்று  தோற்றாத படி போக்கை-அதாகிறது -இவை ஸ்ம்ருதி விஷயம் ஆனாலும் –
தன்னுடைய ஸ்வபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே இவை
நமக்கு வந்தேறி யாய் கழிந்தது என்று இருக்கையும் -ஸ்ம்ருதியாலே துக்கம் அநு வர்த்தியாய் இருக்கையும் –
என்று தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்தது இவ் இடத்திலே அனுசந்தேயம் –

————————————————————

சூரணை -258
இனி உன் கையிலும் உன்னை காட்டித் தாரேன் -என் உடம்பில் அழுக்கை
நானே போக்கிக் கொள்ளேனோ –

மோஷ இஷ்யாமி -என்கிற உத்தமனில் அபிப்ரேதமான
ஓர் அர்த்த விசேஷத்தை இனி அருளிச் செய்கிறார் –
அதாவது —
இத்தனை காலமும் — நம் கார்யத்துக்கு நாம் கடவோம் -என்று நீ திரிகையாலே
தன் கார்யம் தானே செய்து கொள்கிறான் -என்று இருந்த இத்தனை போக்கி –
எனக்கு நீ சரீரிதையா சேஷம் -என்று அறிந்து என் பக்கலிலே நியஸ்த பரனான  பின்பு –
உன்னுடைய பாப விமோசன அர்த்தமான யத்னம் நீ பண்ணிக் கொள் என்று –
உன் கையிலும் உன்னைக் காட்டி தாரேன் –
எனக்கு சரீர பூதனான உன்னுடைய அவித்யா ரூப மாலின்யத்தை
சரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ என்கை –
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைகாக-

ஆகையால் உன்னுடைய விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும்
பலமாய் இருக்க -ஒன்றைச் சொல்லுவான் என் என்னில் மற்றையது தன்னடையே வருகையாலே
சொல்லிற்று  இல்லை -மாமேவைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய
இவ் உபாயதுக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –
ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் -அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தமாய் இருக்கையாலே -தனித்துச் சொல்ல  வேண்டா இறே –
என்று ஸங்க்ரஹேண ஸ்ரீ யப்பதி படி ரஹஸ்யத்திலும்-விஸ்தரேண -பரந்த படி  தனி சரமங்களிலும் அருளிச் செய்த
சங்கா  பரிகாரங்கள் இவ் இடத்தில் அனுசந்தேயம் –

————————————————

சூரணை-259
மாஸூச -நீ உன் கார்யத்தில் அதிகரியாமையாலும் –
நான் உன் கார்யத்தில் அதிகரித்துப் போருகையலும் –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண்-என்று
அவனுடைய சோக நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான் –

அநந்தரம் –
சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மா ஸூச -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ உன் கார்யத்தில் அதிகரித்து நின்றாய் ஆகில் -நம் கார்யத்துக்கு என் செய்வோம் -என்று
கரைந்து சோகிக்க ப்ராப்தம் –
நான் உன் கார்யத்தில் அதிகரியாது இருந்தேன் ஆகில் -நம் கார்யத்தில் இவன் உதாசீனனாய்
இரா நின்றான் -நாம் எங்கனே உஜ்ஜீவிக்க போகிறோம் -என்று சோகிக்க ப்ராப்தம் –
இங்கன் இன்றிகே யத்ன பலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாத படியான
ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து -நீ உன் உடைய ரஷண  கார்யத்தில் அதிகரியாது ஒழிகை யாலும் –
உன்னுடைய ரஷணத்தில் யத்ன பலித்வங்கள் இரண்டும் என்னதாம் படி ஸ்வாமியான நான்
உன் பக்கலில் தடை அறுக்கையாலே-உன்னுடைய ரஷண கார்யத்தில் அதிகரித்து கொண்டு போருகையாலும் –
உனக்கு சோகிகைக்கு  நிமித்தம் இல்லை காண் என்று -முன்பு சோக விசிஷ்டனாய் நின்ற அவனுடைய
சோகத்தின் உடைய நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான் -என்கை

இத்தால் -அஹம் -த்வா-என்கிற பதங்களால் சொல்லப்  பட்ட -ரஷக ரஷ்ய பூதரான –
இவருடைய ஸ்வபாவத்தையும் அனுவதித்துக் கொண்டு சோகாபநோதனம் பண்ணின படியை –
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————-

சூரணை -260
நிவர்தக ஸ்வரூபத்தைச் சொல்லி -நிவர்த்யங்கள் உன்னை வந்து மேலிடாது என்று சொல்லி –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண் -என்கிறான் –

இனிமேல் நிவர்தகனாக தன்னுடையவும் -நிவர்தங்களான பாபங்களின் உடையவும்
ஸ்வபாவங்களைச்  சொல்லி சோகாபநோதனம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஹம் என்று -சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -விரோதி நிவர்தகனாய் இருக்கிற –
தன் ஸ்வரூபத்தை சொல்லி –
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ணி ச்சால் நிவர்த்யங்களான  பாபங்கள் உன்
தன்னைக் கண்டு தானே அஞ்சி ஓடி போம் ஒழிய -என்னையே உபாயமாக ஸூவீகரித்து இருக்கிற உன்னை
வந்து மேலிடாது என்னும் இடம் சொல்லி –
அநந்தரம் -மாஸூச -என்கையாலே –
இப்படி யான பின்பு உனக்கு சோகிக்க நிமித்தம் இல்லை -என்கிறார்-என்கை –

———————————————————

சூரணை -261
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்கிறான்
இத் தலையில் விரோதியைப் போக்குகைக்கு தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து –
இவனுடைய சோகத்தை போக்குகிறமையை-அபியுக்த யுக்தியை  நிதர்சனம் ஆக்கிக் கொண்டு
அருளிச் செய்கிறார் –

அதாவது –
திரு மழிசை பிரான்-எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே-திரு சந்த விருத்தம் -115- என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வேஸ்வரன் இத்தலையில் விரோதியை போக்கி அடிமை கொள்வதாக ஏன்று கொண்டு
வந்து புகுந்து இருக்கிற படியைச் சொல்லி -இனி எதுக்காக நீ துக்க சாகரத்தில் அழுந்துகிறாய்-என்றால் போலே
ஈஸ்வரனும் இப்போது இத் தலையில் சகல பாபங்களையும் போக்குவதாக தானே ஏறிட்டு கொண்டமையை
அறிவித்து -இனி எதுக்காக சோகிக்கிறாய்-என்று இவனை குறித்து அருளிச் செய்கிறான் -என்கை-

—————————————————————–

சூரணை -262
பாபங்களை நான் பொறுத்து -புண்யம் என்று நினைப்பிடா நிற்க –
நீ சோகிக்க கடவையோ –

இனி இவனுடைய சோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவத் அபிப்ராய
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய ஷமா விஷயமாக்கி –
அவ்வளவும் அன்றிக்கே -பின்னை உன் பக்கல் எனக்கு உண்டான -வாத்சல்யத்தாலே –
செய்த குற்றம் நற்றமாகவே  கொள் -திரு சந்த விருத்தம் -111
செய்தாரேல் நன்றே செய்தார் –பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-
என்கிறபடியே அவை தன்னை பாபமாக நினையாதே
புண்யம் என்று நினைப்பிடா நிற்க இனி நீ சோகிக்க கடவையோ -என்கை-

ஆக
இவ் உத்தர அர்த்தத்தில் அஞ்சு பதத்தாலும் –
நிவர்த்தக ஸ்வரூபத்தையும் –
நிவர்த்திய ஆஸ்ரயத்தையும்-
நிவர்தங்களான பாபங்களையும் –
அவற்றினுடைய நிவ்ருத்தி பிரகாரத்தையும் –
தத் கார்யமான சோக நிவ்ருத்தியையும்-
சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –