ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–94/95/96/97/98/99/100/101/102/103/104—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

ஏவம் பூதமான பிராவண்யம் விஷய வைலக்ஷண்ய அதீனம் அத்தனை அன்றோ –
சம தமாதி ஆத்ம குணங்கள் அன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பது என்ன –
அவை தன்னையும் இது தானே உண்டாக்கும் என்கிறார் -மேல் –

சமதம நியதாத்மா –
அமாநித்வம் –
இத்யாதியில் சொல்லுகிறபடியே -இச் சேதனனுக்கு உண்டாக்க தக்க ஆத்ம குணங்கள் தான் அநேகம் உண்டு இறே–
இவை எல்லாவற்றுக்கும் இந்த பிராவண்யம் -பிரதானம்  ஹேது ஆகையாவது –
அனுகூல சஹவாச-சாஸ்த்ராப்ய-சா சாரய உபதேசிகளான- ஹேத்வந்தரங்களில் காட்டில் -முக்ய ஹேதுவாய் இருக்கை–

——————————————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

இவ் அர்த்தத்தில் பிரமாண உபாதாநம் பண்ணுகிறார் –

மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் –மூன்றாம் திரு வந்தாதி -13 –
என்று சர்வேஸ்வரன் பக்கலில் -ஹிருதயம் பிரவணமாக-போக்யைகளான ஸ்திரீகளுடைய தோளுடன் அணைகையில்
நசை அற்று -பிரமாணங்களில் மனசை  வைக்க எளிதாம் என்றும் –
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி-என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் –
அத்தாலே பரமாத்ம இதர விஷயத்தில் -விரக்தன் ஆவான் என்றும் –
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு கேட்டு உற்று
மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் –திருவாய் மொழி -என்று
பெரிய பிராட்டியாரும் தேவருமாய் ஒரு  தேச விசேஷத்திலே-எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியை கண்டு -அங்கே பிரவணனாய்-
ஐஸ்வர்ய கைவல்யங்களில் விரக்தன் ஆனேன் என்றும் –
பகவத் பிராவண்யம் இதர விஷய விரக்தி ஹேதுவாக சொல்லப் பட்டது இறே –

———————————————————–

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

பகவத் பிராவண்யம் ஆத்ம குணங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது என்று பிரஸ்தாவித்து-
இதர விஷய விரக்தி -ஹேதுத்வ மாத்ரத்தில் -பிரமாணங்களை தர்சிப்பான் என் என்கிற சங்கையில் –
அருளிச் செய்கிறார் –

சமம் ஆவது -அந்த கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமச்சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணச்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளி செய்தது –
மாறி சொல்லும் இடமும் உண்டு –
இந்த சம தமங்கள் உண்டான இடத்தில் -அல்லாத குணங்கள் தன்னடையே வரும் ஆகையால் –
பிரதானமான இவற்றுக்கு ஹேது என்னும் இடத்தில் பிரமாணம் காட்டப் பட்டது என்று கருத்து –
அன்றிக்கே –
கீழ் சொன்ன விரக்தி ஹேதுத்வம்-சகல ஆத்ம குண உத்பத்திக்கும் ஹேது என்னும் இடத்துக்கு உப லஷணமாக்கி-
இவ் ஆத்ம குணங்களில் பிரதானம் எது என்கிற சங்கையில் -ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -என்று அருளி செய்தார் ஆகவுமாம்-

——————————————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இந்த சம தமங்கள் உண்டானால் -இவனுக்கு உண்டாக கடவ-பல பரம்பரையை
அருளிச் செய்கிறார் மேல் –

பகவத் ப்ராவண்யம் அடியாக வரும் -பரி பூரணமான சம தமங்களை கீழ் சொல்லிற்றே ஆகிலும் –
இவ் இடத்தில் ஆச்சார்ய அங்கீகாரத்துக்கு பூர்வ பாவியான அளவில் ஒதுக்கிச் சொல்லுகிறது –
இந்த சம தமங்கள் இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுருகை யாவது –
இவ் ஆத்ம குணம் கண்டு உகந்து -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசிக்கும் படி இவனுக்கு வச்யனாகை-
தஸ்மை ஸ வித்வான் உபசந்தாய சமயக் பிரசாந்த சித்தாய சமான்விதாய –
யேனா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம்தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
சம தம உபேதனாய்கொண்டு உபசன்னானவனுக்கு இறே ப்ரஹ்ம வித்யையை -தத்வத -உபதேசிக்கச் சொல்லிற்று –
இந்த ஸ்ருதியில் ஆசார்யுபதேசதுக்கு உடலாக சொன்னசம தமங்களுக்கு -ஏதேன ஸ்ரவண உபயுக்தம் அவதானம் விவஷிதம் –
-நதூபாச நோபயுக்தாத் யன்தேந்த்ரிய ஜயாதி -என்று இறே சுருதி பிரகாசிகாகாரர் வியாக்யானம் பண்ணிற்று –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுருகை யாவது –
மந்த்ரா தீநஞ்ச தைவதம் -என்று -திருமந்தரம் இட்ட வழக்காய் இருக்கும்
அவனாகையாலே -அர்த்த சஹிதமாக அது கை புகுந்தவாறே -தத் ப்ரதிபாத்யனான தான் இவனுக்கு –
அநிஷ்ட நிவ்ருத்த பூர்வ இஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான – ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறபடியே
பிராப்ய பூமி  கை புகுருகை யாவது -தைவாதீனம் ஜகத் சர்வம் -என்று உபய விபூதியும்
ஈஸ்வரன் இட்ட வழக்கு ஆகையாலே -அவன் பிராபகனாய்  கை புகுந்தவாறே –
பிராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்டம் இவனுக்கு அத்யந்த சுலபமாகை-

——————————————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இப்படி சம தமங்கள் உண்டாகவே -உத்தரோத்தரம் இவை எல்லாம் சித்திக்கும் பிரகாரத்தை ஆரோஹா க்ரமத்தாலே அருளி செய்து –
இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாக சொல்லிற்று ஆக நியதம்-என்னும் இடத்தை அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார் –

இது தனக்கு பிரயோஜனம் -இது ஹேது பரம்பரையில் பிரதம ஹேது– சம தமங்கள்ஆகையாலே-அவஸ்யம் 
இவை இரண்டும் இவனுக்கு உண்டாக வேணும் என்கை –
ஈச்வரனே பிராபகன்  ஆகையாலே -பிராப்ய லாபம் ஈச்வரனாலே என்கிற -ஸ்தானத்திலே-பிராபகத்தாலே -என்று அருளிச் செய்தது-

——————————————–

சூரணை -99
இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

இந்த சமதமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –
ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் –
இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –
படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று -என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-
உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பச்யேத் -என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை  செய்து நன்புல வழி திறந்து ஞான நல்சுடர் கொளீ இ–திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே –
பிரபன்னர்க்கு அதிகார அரர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் – கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமாவை-துடக்கறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –

——————————————

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படி அதிகாரி த்ரயத்துக்கும் அபேஷிதமே ஆகிலும் -அதிகமாக
வேண்டுவது பிரபன்னனுக்கு என்கிறார் –

இவனுக்கு இதில் ஆதிக்யம் சொல்லுகைக்கு ஆக இறே
அல்லாதவர்களை இவ்விடத்தில் பிரசங்கித்ததும்-

—————————————————

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

அவ் ஆதிக்யம் தன்னை அருளி செய்கிறார் –

அதாவது
சப்தாதி போக பரனான ஐஸ்வர்ய காமனுக்கும் -சாதனாந்தர பரனான உபாசகனுக்கும் –
சாஸ்திர நிஷித்த விஷயமான பர தாராதியில் நிவ்ருத்தி மாதரம் அமையும் –
தத் உபய வ்ருத்தனாய் இருக்கிற பிரபன்னனுக்கு -சாஸ்திர விஹித விஷயமான
ஸ்வ தாரத்தில் நிவ்ருத்தி -அவர்களை பற்ற ஏற்றம் என்கை –
அவர்கள் இருவரிலும் ஐஸ்வர்ய காமனுக்கு ஸ்வ தாரத்தில் சாதன தசையில்
தர்ம புத்த்யா பிரவ்ருத்தியும் -பல தசையில் போக்யதா புத்த்யா பிரவ்ருத்தியுமாய் இருக்கும் –
உபாசகனுக்கு பலம் பகவத் அனுபவம் ஆகையாலே அவனை போலே பல தசையில்
அன்வயம் இல்லையே ஆகிலும் -உபாசன தசையில் தர்ம புத்த்யா பிரவ்ருத்தி வேணும் –
பிரபன்னனுக்கு தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வ அதிகார பஞ்சகம் ஆகையாலே
விஹித விஷயத்திலும்  நிவ்ருத்தி வேணும் என்றது ஆய்த்து–

———————————————

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா-பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

சிலருக்கு  அழகாலே பிறக்கும் -என்றது -சாஷத்க்ருத  பகவத் தத்வரான-பக்தி பாரவச்ய பிரபன்னருக்கு –
சகல ஜகன் மோகனமான தத் விக்ரக சௌந்தர்ய அனுபவத்தாலே பிறக்கும் என்ற படி –
சிலர்க்கு அருளாலே பிறக்கும் -என்றது -தத்வ யாதாத்ம்ய தர்சிகளான-ஞானதிக்ய பிரபன்னருக்கு –
நம்மை அனுபவிக்க இட்டு பிறந்த வஸ்து இப்படி-அந்ய விஷய பிரவனமாய் அநர்த்த படுவதே -என்று அந்ய விஷய சங்கம் அறும்படி
அவன் பண்ணும் பரம கிருபையாலே பிறக்கும் என்றபடி –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் -என்றது -அளவிலிகளான-அஞ்ஞான  பிரபன்னருக்கு அவதாரங்களில் –
மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா-என்கிறபடியே -அதிகார அனுகுணமாக அவன் ஆசாரித்தும் ஆசாரிப்பித்தும் போந்த படிகளையும் –
அளவுடையரான பூர்வாச்சார்யர்கள் ஆசரித்து போந்த படிகளையும் -சாஸ்திர முகத்தாலும் -ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலும் அறிகையாலே –
அவ் ஆசாரங்களை அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும் -என்றபடி —

—————————————-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ்வோ ஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை தஜ் ஜிஜ்ஞாசூ  பிரச்னத்தை
அனுவதித்து கொண்டு அருளிச் செய்கிறார் –

அழகு அஞ்ஞானத்தை விளைக்கை யாவது -சித்த அபஹாரி ஆகையாலே விஷயாந்தரம் தன்னை ஒன்றாக அறியாதபடி  ஆக்குகை –
அருள் அருசியை விளைக்கை யாவது -விஷயாந்தரங்களை காணும் போது அருவருத்து காரி உமிழ்ந்து போம் படி பண்ணுகை-
ஆசாரம் அச்சத்தை விளைக்கை யாவது -ருசி செல்லச் செய்தே -அவர்கள் ஆசாரித்தபடி செய்யாத போது நமக்கு அனர்த்தமே பலிக்கும்  என்று
விஷய ஸ்பர்சத்தில் இழிய நடுங்கும் படி பண்ணுகை –
ஆகையால் இக் க்ரமத்தில் பிறக்கும் என்று கருத்து —

——————————————-

சூரணை -104-

இவையும் ஊற்றத்தை பற்ற  சொல்லுகிறது –

இந்த த்ரிவித பிரபன்னருக்கும் -சௌந்தர்யாதி த்ரயத்தில் ஒரொன்றே
விரக்தி ஹேதுவாக சொல்லுகிறதுக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் -இத்யாதியால் -இவர்களுக்கு சொன்ன பிரபத்தி
ஹேதுக்களானவை ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றிச் சொன்னாப் போலே –
அழகாலே பிறக்கும் -என்று தொடங்கி சொன்ன -விரக்தி ஹேதுக்களான இவையும்
ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றி சொல்லுகிறது -என்கை-
இத்தால்-பக்தி பாராவச்ய பிரபன்னருக்கு -அருசிக்கு அடியான கிருபையும் –
அச்சத்துக்கு அடியான ஆசார அனுசந்தானாமும் உண்டாய் இருக்கச் செய்தே –
பகவத் விக்ரஹ வைலஷண்யத்தை சாஷாத்கரித்த்து அனுபவிப்பவர்கள் ஆகையால் –
எப்போதும் நெஞ்சு பற்றி கிடைக்கையால் -விஷயாந்தரங்களை அறியாதபடி பண்ணும் அவ் அழகே அவர் பக்கல் உறைத்து இருக்கும் –
ஞானாதிக்ய பிரபன்னருக்கு -அஞ்ஞான ஹேதுவான விக்ரஹ சௌந்தர்யத்தை
அர்ச்சாவாதாரத்தில் கண்டு அனுபவிக்கையும் -பய ஹேதுவான ப்ராக்தன சிஷ்ட ஆசார
அனுசந்தானம் உண்டாய் இருக்கச் செய்தே -அவன் தன கிருபையை முழுமடை செய்து எடுத்த
விஷயங்கள் ஆகையாலே -அருசிக்கு அடியான கிருபை அவர்கள் பக்கல் உறைத்து இருக்கும் –
அஞ்ஞான பிரபன்னருக்கு -அர்ச்சாவாதாரத்தில் காதாசித்கமகா -விக்ரஹ சௌந்தர்யாஅனுபவமும் –
அருசி ஹேதுவான கிருபையும் -ஒரு மரியாதை உண்டாய் இருக்க செய்தே -பூர்வர்கள் ஆசாரங்களையே
பலகாலம் அனுசந்தித்து கொண்டு போருகையாலே -பய ஹேதுவான அவ் ஆசாரங்கள் அவர்கள் நெஞ்சில் ஊன்றி  இருக்கும் –
இவ் ஊற்றத்தை பற்ற ஒரொன்றே  விரக்தி ஹேதுவாக சொல்லுகிறது -என்று ஆய்த்து-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: