ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–86/87/88/89/90/91/92/93–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யாஜிகலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

விஷ்ணோ கார்யம் சமுதிச்ய தேக த்யாகோ
யதா கருத ததா வைகுண்ட மாசாத்ய முக்தோ பவதி மானவே -என்று
ஆக்நேய புராணத்திலும் –
தேவ கார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் யா பரித்யஜேத் சாயாதி  விஷ்ணு
சாயுஜ்யமபி பாதக க்ருன்  நர -என்று வாயவ்யத்திலும் –
ரங்கநாதம் சமாஸ்ரித்ய தேஹத்யாகம் கரோதிய
தஸ்ய வம்சே ம்ருதாஸ் சர்வே  கச்சந்த்யாத்யந்திகம் லயம் -என்று வாம நீயத்திலும் –
சொல்லுகையாலும் -விசேஷித்து ஆச்வமேதிக பர்வதத்தில் -வைஷ்ணவ தர்மசாஸ்த்ரத்தில்
பஞ்சம அத்யாயத்திலே -அக்னி பிரவேசம் யச்சாபி குருதே மத்கதாத் மனா ச யாத்யக்னி
ப்ரகாசென வ்ரஜென் யானென மத க்ருஹம் -என்று பகவான் தானே அருளி செய்கையாலும் –
இப்படி மோஷ சாதனமாக சொல்லப் படுகிற -பகவத்தர்தமானே ஸ்வ தேக தியாகம் –
அநந்ய சாதனான இவனுக்கு த்யாஜ்யம் அன்றோ –
பிரபன்னரராய் இருக்கிற பிள்ளை  திரு நறையூர் அரையர் இத்தை அனுஷ்டிப்பான் என் -என்ன
அருளி செய்கிறார் –

அதாவது-
இதம் குர்யாத் -என்று ஒரு விதி பிரயுக்தமாய் வருமது இறே –
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இவனுக்கு கை விடல் ஆகாது
அங்கன் இன்றிக்கே தன் விரஹத்தால் ஆற்ற போகாதபடி
போக்யமுமாய் பிராப்தமுமான விஷயத்தில் ராக பிரயுக்தமாய்
வருமது வருந்தியும் கை விடப் போகாது இறே -என்கை–

————————————————————————-

சூரணை -87
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

வைதவம் வரும் அளவில்  சூத்யஜமாய் -ராக ப்ராப்தமாய் -வரும் அளவில் -துஸ்த்யஜமாவான் என் என்ன -அருளி செய்கிறார் –

உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது –
வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை
சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றது
ராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வர கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று -தேக த்யாகம் தன்னை புருஷார்த்தமாக
அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே –
வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு நிவர்தகமாம் –
ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

————————————————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

இப்படி ஒரு சாதன புத்த்யா அன்றிக்கே -தத் விஷய ப்ரவண்ய அதிசயத்தாலே –
ஸ்வ தேகத்தை விடும்படியான நிலை விளையக் கூடுமோ என்ன -அருளி செய்கிறார் –

அதாவது -ஸ்வரூப பிராப்தம் அல்லாத தேக விஷயங்களிலே பிரவணன் ஆனவன் –
தன்னை அழிய மாறி யாகிலும் -அவ் விஷயத்தை லபிக்க வேணும் என்று –
ஸ்வ தேக த்யாகத்தில் பிரவர்தியா நின்றால்-ஸ்வரூப பிரப்தமான விலக்ஷண விஷயத்தில் பிரவணன் ஆனவனுக்கு -அவ் விஷயத்தை பற்றி அழிய
மாறுகை யாகிற இது கூடுமோ என்னும் இடம் கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-
ஒரு வேச்யை அளவில் ஒருவன் அதி சக்தனாய்க் கொண்டு போருமவனாய் -அவளுக்கு வியாதி கனக்க வந்த அளவிலே -இவள் ஆறி எழுந்தவாறே நான் என்
தலையை அரிந்து தருகிறேன் -என்று ஒரு தேவதைக்கு பிரார்த்தித்து -பின்பு தலையை அரிந்து -கொடுப்பது செய்தான் என்று பிரசித்தம் இறே –

——————————————————-

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

உபாய உபேய அதிகாரங்களுக்கு உடலாக மற்றும் சொன்ன அனுஷ்டானங்கள்போல் அன்றிக்கே –
உபாய தயா சாஸ்திர சித்தம் ஆகையாலே -அநந்ய சாதனனுக்கு அந் அனுஷ்டானமான இந்த தேக த்யாகம் ராக ப்ராப்தம் ஆகையாலே –
துஸ்த்யஜமாய் இருந்ததே ஆகிலும் -உபாய கோடியிலே-அன்வயித்தது அன்றி -நில்லாதே -என்ன – அருளி செய்கிறார் –

அதாவது –
அனுஷ்டானமாக சொன்ன ஸ்வ சக்தி த்யாகாதிகளும் -ப்ரேமாதி களும் –
உபாய உபேய அதிகார அந்தர்பூதம் ஆகையாலே -உபாய கோடியிலே அன்வயிதாப் போலே –
அந் அனுஷ்டானமாக சொன்ன -ஸ்வ தேக  த்யாகமும் -உபாய புத்தியா அனுஷ்டிதம் அன்றிக்கே –
ராக பிராப்தம் ஆகையாலே உபாய கோடியில் அன்வயியாது -உபேய அதிகாரத்தில் அந்தர் பாவிக்கும் அத்தனை -என்கை –
உபாயதயா சாஸ்திர சித்தமே ஆகிலும் உபாய புத்த்யா அனுஷ்டிதம் ஆனதுக்கு இறே
உபாயத்வம் உள்ளது -அங்கன் அன்றாகில் -பிரபன்னனான அவன் உபாய புத்தி அற உபேய புத்த்யா பண்ணுகிற
புண்ய தேச வாசாதிகளும்-(ஆதி சப்தம் -நித்ய கைங்கர்யங்கள் ) உபாய கோடியிலே அன்வயிக்க வேணும் இறே –

————————————————-

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

அன்றிக்கே -இப் பிரவ்ருத்தி தான் -உபாய கோடியிலே அன்வயித்தது ஆகிலும் –
அநந்ய உபாயத்வத்துக்கு குலைதல் வரும் இத்தனை இறே -அது பிரேம பரவசருக்கு
அவத்யம் அன்று என்கைக்காக-பிரேம பரவசர் பிரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் –

அநந்ய உபாயத்வம்  குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
திருந்தவே தோற்கின்றேன் –
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் –
குதிரியாய் மடலூர்த்தும் -குஸ்தித ஸ்திரீயாய் நேர் வழியாக போகாமல் –
ஓதி நாமம் –
ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –
உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
(சாத்தியம் கைப்பட்டபின்பும் சாதனம் கை விடாமல் இன்றும் மடலை அஞ்சலி ஹஸ்தங்களுக்குள் வைத்து சேவை சாதிக்கிறார் -உபாயாந்தரம் என்ற நினைவால் இல்லையே )
என்று -நோன்பு நோற்கை-மடல் எடுக்கை -முதலான வியாபாரங்களில் இழிகை-
அநந்ய உபேயத்வம் குலையும் படியானபிரவ்ருத்தி யாவது –
அத தலைக்கு அதிசயத்தை விளைகையே புருஷார்த்தம் என்று இருக்கை தவிர்ந்து –
நமக்கே நலமாதலில் -என்றும்
தூ மலர் தண்  அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
(பர கத அதிசயம் இல்லாமல் ) தனக்கு அதிசயம் தேட தொடங்குகை –
அநந்ய தைவத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதேன் –
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் -என்று
காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி ஆராதிக்கை –
காணா நின்றோம் இறே -என்றது -பிராப்ய வஸ்துவின் ப்ராவண்ய அதிசயத்தாலே-
பேரளவு உடையவர்கள் பக்கலில் உண்டாக காணா நின்றோம் இறே என்கை –
முன்பு சொன்ன பிரவ்ருத்திக்கு உபாய கோட்ய அன்வயம் வச்துகதையா வரும் என்று
கொள்ளுகிற மாதரம் இறே -அங்கன் இன்றிகே நேரே உபாய புத்த்யா அனுஷ்டிதமானவை இறே இவை –
ஆகையால் பிரேம பரவசருக்கு இது அவத்யம் அன்று என்று கருத்து –

—————————————————–

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

இத்தனையும் கலக்கத்தாலே வந்தவை இறே –
அஞ்ஞானம் மூலமாய் வருமவை ஒன்றும் ஆதரணீயம் அன்றே என்ன –
அருளி செய்கிறார் –

ஞான விபாகம் ஆவது -ஞானம் கனிந்த நலம் -என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய பரிபாக ரூபையான பக்தி -அதன் கார்யமான அஞ்ஞானம் ஆவது –
அந்த பக்தி அதிசயத்தாலே வரும் ப்ராப்த அப்ராப்த விவேக அபாவம் -அத்தாலே வரும்
பிரவ்ருத்தி  விசேஷங்கள் எல்லாம் -அடிக் கழஞ்சு பெறும் -என்றது -அதி ச்லாக்யங்களாய்
இருக்கும் என்றபடி –
கர்ம நிபந்தனமான அஞ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்கள் என்று கருத்து

——————————————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

ஆனாலும் இவ்வதிபிரவ்ருத்தி  -இத் தலையில் பிரவ்ருத்தியில் ஒன்றையும்
சாஹியாத சித்த உபாயத்தின் கார்ய  கரத்வத்துக்கு பிரதி பந்தகம் ஆகாதோ என்ன –
அருளி செய்கிறார் –

உபாய பலம் -என்றது சித்த உபாயம் ஆனவன் பண்ணின கிருஷி பலம் என்றபடி –
மயர்வற மதி நலம் அருளினன் –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்றும்-
ஏவம் பூத பிரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனும் அவனே இறே –
ஆகையால் பக்தி பாரவச்ய நிபந்தனமான இப் பிரவ்ருத்தியை -உபாய பலம் -என்கிறது –
உபேய அந்தர் பூதமாய் இருக்குமது -என்றது –
பிராப்ய தசையில் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு -இத் தலைபடுகிற
அலமாப்பு எல்லாம் -நம்மை ஆசைப்பட்டு இப்படி படப் பெறுவதே என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பு ஆகையாலே –
மடல் எடுக்கை தொடக்கமான இந்த பிரவ்ருத்திகள் அவன் முக மலர்திக்காக பண்ணும்
கைங்கர்யத்தோ பாதியாக கொண்டு உபேயத்தில் அந்தர் பூதமாய் இருக்கும் என்கை –
உபாய பிரதி பந்தம் ஆகாது -என்றது-ஏவம் பூதமானது -உபாயத்தின் உடைய கார்ய
கரத்வதுக்கு விலக்காகாது-என்றபடி-

——————————————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இப்படி மடல் எடுக்கை முதலானவை சித்த  உபாய பிரதி பந்தகம் ஆகாது என்னும் இடம் சொல்லி –
அவை தனக்கு சித்த உபாய சாம்யத்தை விவஷித்துஅருளி செய்கிறார் மேல் –

சாத்ய வஸ்துவே சாதனம் ஆகையாலே -சாத்தியத்துக்கு சமானம் என்றும் –
பல விளம்பத்தை சஹியாதே சீக்கிரமாக கார்யம் செய்து கொடுக்கும் என்று இறே –
இதர சாதனங்களில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்தியத்தில் பிராவண்யம் அடியாக இறே இந்த சாதக பரிக்ரகம் தன்னில் இழிகிறது –
அவை இரண்டும் இவற்றுக்கு உண்டு என்று கருத்து -எங்கனே என்னில் -மடல் எடுக்கை முதலான
பிரவ்ருத்திகள் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே -கைங்கர்ய ரூப சாத்தியத்துக்கு
சமானங்களாய் இருக்கை யாலும் –
மடலூர்தல்-நோன்பு நோற்க்குதல்-செய்வன் என்று துணிந்தபோதே –
சர்வேஸ்வரன் த்வரிதது கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி
பண்ணிக் கொடுக்கையாலே -பல விளம்ப அசஹங்களாய் இருக்கையாலும் –
சித்த சாதனம் போலே இதர சாதனங்களில் காட்டிலும் ஏற்றத்தை உடையதாய் –
சாத்ய ப்ராவண்யம் அடியாக இவற்றில் இழிகிற ஆகாரமும் ஒத்து
இருக்கையாலே -இத்தால்-சித்த உபாயத்தை ஒழியவும் இது தானே கார்யம் செய்யவற்று ஆகையாலே
தத் பிரதிபந்தகம் என்னும் தூஷணம் இல்லை என்று கருத்து –
அன்றிக்கே -(பாவானத்வ மாத்திரம் இல்லாமல் போக்யமாயும் இருக்குமே இவை )
உபாய பிரதி பந்தகம் ஆகாது -என்றத்தை இன்னமும் முக பேதத்தால் உபபாதிக்கிறார் –
சாத்ய -இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே -அதாவது -பால் மருந்தாம் போலே
சாத்ய வஸ்து தானே சாதன ஆகையாலே-சாரச்யத்தில் சாத்யத்தோடு ஒத்து இருக்கும் என்றும் –
சாத்தியத்தை பிராபிக்கும் அளவில் கால விளம்பத்தை பொறாது கடுக பிராபித்து விடும் என்றும் அன்றே
சாதனாந்தரத்தில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம்-இப்போது இது சொல்லுகிறது-இவ் ஆகார த்வயமும்
சாத்ய ப்ராவண்ய ஹேதுவாம் என்று தோற்றுகைக்காக-இப்படி ஆகையாலே –
தன் அடியாக விளைந்து -க்ஷண கால விளம்பம் பொறாமல்  துடிக்கும் படி முறுகடி இடுகிற
சாத்ய ப்ராவண்யம் அடியாக இறே மடல் எடுக்கை  முதலான இஸ் சாதனத்தில் இழிகிறது என்கை –
ஆகையால் ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே  கண்ணாஞ்சுழலை இட்டு செய்கிற இப் பிரவ்ருத்திகள்
உபாயம் மேல் விழுந்து கார்யம் செய்கைக்கு உடலாம் இத்தனை அல்லது-தத் பிரதி பந்தகம் ஆகாது என்று கருத்து –

ஆக
இவனுக்கு வைதமாய் வருமது இறே த்யஜிக்க  லாவது -சூரணை – 86-என்று தொடக்கி –
இவ்வளவு வர -பிள்ளை திரு நறையூர் அரையர் பிரவ்ருத்தி  வ்யாஜத்தாலே –
பகவத் பிரபன்னனாய் இருந்தானே ஆகிலும் -உபேய பரன் ஆனவனுக்கு
தத் விஷய ப்ராவண்யத்தால் வரும் ஸ்வ தேக த்யாகம் துச்த்யஜம் –
உபாய புத்தா அனுஷ்டிதம் அல்லாமையாலே -அது தான் உபாய கோடியில் அன்வயியாது –
வச்துகத்யா அன்வயித்தது ஆகிலும் பிரேமபரவஸ்ருக்கு  தோஷாயவன்று-
புத்தி பூர்வகமாக வனன்ய   உபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள்
தெளிய கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே–இவை தான் அஞ்ஞான மூலமே ஆகிலும்
பிரேம கார்யமான அஞ்ஞாநத்தாலே வந்தவை ஆகையாலே -அதி ச்லாக்யங்கள் –
சித்தோ உபய பிரதி பந்தகம் ஆகாது -அவ்வளவு அன்றிக்கே அத்தோடு ஒக்க
சொல்லலாம் படி அன்றோ இவற்றின் பெருமை என்று சொல்லுகையாலே
உபேய அதிகாரத்தில் -தன்னை பேணாமை -என்று சொன்ன இது -அநந்ய
சாதனத்வத்துக்கு சேருமோ என்னும் அதி சங்கா பரிஹாரம் பண்ணப் பட்டது –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: