ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை–80/81/82/83/84/85–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-
அதிகாரி நிஷ்டா க்ரமம்–80-307

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்[படி பிரித்து அனுபவம் –

———————————

சூரணை -80-

உபாயத்துக்கு-
பிராட்டி யையும்
த்ரவ்பதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

அனந்தரம் அதிகாரி சோதனம் பண்ணுகிறது -உபாயம் உபேயார்த்தம் ஆகையாலும் –
உபேயத்தில் உகப்பு என்றும் –
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம் -என்றும் –
உபேய அதிகாரமும் கீழ் பிரசக்தம் ஆகையாலும் –
த்வய நிஷ்டன் ஆன அதிகாரிக்கு -உபயமும் -அபேஷிதம் ஆகையாலும் –
உபாய உபேய அதிகாரங்களில் இச் சேதனன்  இன்னபடி இருக்க வேணும் என்னும் அத்தை
தத் தந் நிஷ்டரை நிதர்சனம் ஆக்கி கொண்டு அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வயத்தாலே –

உபாயத்துக்கு -என்றது -உபாயதுக்கு அதிகாரி யாம்போது என்ற படி-
உபாய அதிகாரிக்கு -என்னவுமாம் –
அப்படியே உபேயதுக்கு -என்றதுவும் –
உபாயத்தில் -என்ற பாடம் ஆன போது-உபய விஷயத்தில் -என்ற படி-
இப்படி மற்றையதுவும் –

———————————————————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும்
வாசி
சக்தியும் அசக்தியும் –

அவர்களை போலே இருக்க  வேணும்   என்றதின் கருத்தை தர்சிப்பிக்கைகாக
அவர்கள் தங்கள் படிகளை அடைவே அருளி செய்கிறார் மேல் –
அதில் பிராட்டி உடையவும் -திரௌபதி உடையவும் படிகளைஅருளி செய்கைக்கு உடலாக பிரதமத்தில்
உபயருக்கும் வாசியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்த பிராட்டிக்கும் –
ரஷமாம் -என்ற திரௌபதிக்கும் தம்மில் வாசி –
சீதோ பவ -என்று நெருப்பை நீர் ஆக்கினால் போலே -தக்தோ பவ -என்று
விரோதி வர்க்கத்தை பஸ்மம் ஆக்கி தன்னை ரஷித்து கொள்ள வல்ல சக்தி உண்டாகியும் –
ஸ்வ யத்னத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கி கொள்ளப் பார்த்தாலும்-(இச்சை இருந்தாலும் )
நோக்கிக் கொள்கைக்கு ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் என்கை-

————————————

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

ஏவம் பூதர் ஆனவர்கள் செய்தவை தன்னை அருளி செய்கிறார் –

ஸ்வ சக்தி விடுகை யாவது -நாயகரான பெருமாள் ரஷிக்கும் அத்தனை அல்லது
நம்முடைய சக்தியால் நம்மை ரஷித்து கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு
நாசகம் என்று -ஸ்வ சக்தியை கொண்டு கார்யம் கொள்ளாது ஒழிகை –
அசந்தேசாத்து  ராமஸ்ய தபசஸ் சானுபாலநாத்ந த்வாம் குர்மி தசக்ரீவ பாசமா பச்மார்ஹா தேஜஸா என்றாள் இறே–
லஜ்ஜையை விடுகையாவது -துச்சாசனன் சபாமத்யே துகிலை உரிக்கிற அளவில் –
லஜ்ஜா விஷ்டையாய் கொண்டு -தானொரு தலை இடுக்குகை அன்றிக்கே -இரண்டு கையும் விடுகை –
பேர் அளவு உடையாள் ஆகையாலே- பிராட்டிக்கு -பெருமாளே ரஷகர் -என்று விஸ்வசித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம் -அத்தனை அளவு இன்றிகே இருக்க செய்தே –
மகாஆபத்து தசையிலே– -இவ்வளவிலே கிருஷ்ணனே ரஷகன் -என்று மகா விசுவாசம் பண்ணி –
மகா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இறே அரிது –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் -அதாவது –
ஸ்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வ வியாபாரங்களை விட்டான் –
ஒரு சேவகனுடைய நாயை -ஒரு சேவகன் அடிக்க -அவன் அது பொறாமல் -அடித்தவனோடே எதிர்த்து பொருது -அவனையும் கொன்று -தானும் குத்தி கொள்வதாக-
இருக்கிற படியைக் கண்டு -ஒரு சூத்திர சேதனன் தந் அபிமானத்தில் ஒதுங்கினது என்னும்
இவ்வளவுக்காக தன்னை அழிய மாறின படி கண்டால்-பரம சேதனன் அபிமானத்தில் ஒதுங்கினால்
அவன் என் படுமோ என்று -ஸ்வ ரக்ஷண வியாபாரங்களை விட்டு அந்த நாயோபாதி யாகத் தம்மை அனுசந்தித்து கொண்டு
அப்போதே வந்து திரு கண்ண மங்கையில் பத்தராவி திரு வாசலில் கைப் புடையிலே புகுந்து கண் வளர்ந்தார் என்று பிரசித்தம் இறே-

———————————————————————–

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

இனி உபேய அதிகாரிகளில் பிரதானரான -இளைய பெருமாள் படியை விஸ்தரேண அருளி செய்கிறார் –

அதாவது –
பசியராய் இருப்பவர் -தங்கள் பசியின் கனத்தாலே -இதுக்கு
முன்பு ஆக்கின சோறும் -இப்போது ஆக்குகிற சோறும் -எல்லாம் நாமே உண்ண வேணும்
என்று மனோ ரதிக்குமா போலே -பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
பால்யாத் ப்ரப்ருதி சூசநிக்தரான இளைய பெருமாள் -படை  வீட்டில் நின்றும் புறப்படுவதற்கு
முன்பே கூடப் போவதாக உத்யோக்கிற படியை கொண்டு -நீர் நில்லும் -என்று நிர்பந்தித்து அருள –
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் நேக வித்யதே க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்பதே -என்றும் –
கங்கை கடந்து  ஏறின அன்று மீள விடுகைக்கு உறுப்பாக அவர் அநேகம் அருளி செய்ய-
ந ச சீதா த்வயா ஹீனா ந சாஹமபி ராகவ -முகூர்த்தமபி ஜீவாவோ ஜலான்  மத்ஸ்யா விவோத்ருத்ருதவ் -என்றும் சொல்லுகையாலே –
பிரியில் தாம் உளராக மாட்டாமையை முன்னிட்டு -குருஷ்வ மாம் -என்று அனந்தரத்தில்-
தனுராதாய சகுணம் கனிதர பிடகாதர அக்ரதாஸ் தே கமிஷ்யாமி பந்தா நமனு தர்சயன் ஆஹாரிஷ்யாமி தே நித்யம்
மூலாநிச பலாநிச வந்யாணி யாநி சாத்யணி ச்வஆகாராணி தபச்வினாம் -என்கையாலே
ஸ்வ சேஷ அநு குணமாக -அடிமை செய்ய வேணும் -என்றும்
தத் அனந்தரத்திலே-பவாம்ச்து சஹா வைதேஹ்யா கிரிசா அனுசூ ரம்ச்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ச்வபதச்ச ச -என்கையாலே –
அது தன்னிலும் இன்ன இன்னடிமை என்றுஒரு நியதி இன்றியே எல்லா அடிமையும் செய்ய வேணும் –
பஞ்சவடியில் எழுந்து அருளின  போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு -பிரதேசத்தை பார்த்து -பர்ண சாலையை சமையும் என்ன-
ஏவ முக்தச்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி சீதா சமஷம் காகுத்ஸ்மிதம் வசதம பிரவீத் -என்று
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே -பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் -பிராட்டி முன்னிலையாக கையும் அஞ்சலியுமாக நின்று –
பரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேச  க்ரிய நாமிதி மாம் வத-என்கையாலே அடிமை செய்யும் அளவில் –
ச்வாதந்த்ர்யம் ஆகிற தோஷம் கலசாதபடி -உசித கைங்கர்யன்களிலே ஏவிக் கொள்ள வேணும் என்று -பிரார்த்தித்தார் -என்கை –
படை வீட்டில் -இத்யாதி -திருப் படை வீட்டில் எழுந்து அருளி வந்து புகுந்து திரு அபிஷேகம்
பண்ணி அருளின போது -தம்மோடு கூட அடிமை செய்கைக்கு ஒருவரும் இல்லாத ஒரு
தனிக் காட்டில் -தாமேஅடிமை செய்து -கைங்கர்ய அபிநிவேசத்தை பெருக்குகையாலே –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினவன் ஒப்பூண் உண்ண மாட்டாதவன் போலே –
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமனவர்களோடு  ஒக்க தாமும் ஒரு அடிமை செய்து நிற்க மாட்டாதே —
திரு வெண் குற்றக் கொடியை எடுக்கை -திரு வெண் சாமரம் பரிமாறுகை –
ஆகிய இரண்டு  அடிமையை -ஏககாலத்தில் செய்தார் -என்கை –
இந்த விருத்தாந்தம் தான் -ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை –
சத்ர சாமர பாணி ஸ்து லஷ்மண அனுஜகாமாகா-என்கிறது ஸ்ரீ ராமாயணம் அன்றோ என்னில் –
காட்டுக்கு எழுந்து அருளுவதற்கு முன்னே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
தம்முடைய திவ்ய அந்தபுரத்தில் நின்றும் புறப்பட்டு -சக்கரவர்த்தி திரு மாளிகையை நோக்கி
திரு தேரில் ஏறி பெருமாள் எழுந்து அருளின போது -இளைய பெருமாள் செய்த விருத்தாந்தமாக
திரு அயோத்யா காண்டத்தில் சொல்லப் பட்டது ஆகையாலே -இவ்விடத்துக்கு அது சேராது –
ஆனால் இவர் என் கொண்டு இப்படி அருளி செய்தார் என்னில் -பாத்ம புராணம் பிரக்ரியையாலே அருளி செய்தார் –
அத தஸ்மின் தினே புன்யே சுப லக்னே சுன்விதே
ராகவச்ய அபிஷேகார்த்தம்  மங்களம் சக்ரிரே ஜனா -என்று தொடங்கி பரக்க
சொல்லி கொண்டு வந்து -மந்திர பூத ஜலைஸ் சுத்தைர் முநயஸ் சம்ஸ்ரித வ்ரதா-
ஜபந்தோ வைஷ்ணவான் சூக்தான் சதுர்வேத மயான் சுபான்
அபிஷேகம் சுபஞ்ச்சக்று காகுஸ்தம் ஜகதாம் பதிம்
தஸ்மின் சுபதமே லக்னே தேவ துந்துபயோ திவி
நிநேது புஷ்ப வர்ஷாணி வவர்ஷூச்ச சமந்ததா
திவ்யாம்பரைர்  பூஷணைச்சதிவ்யகாந்த்  தானுலே பனை
புஷ்பைர்  நானா விதர் திவ்யர் தேவ்யா சஹா ரகூத்வஹா –
அலங்க்ருதச்ச சுசுபே முநிபிர் வேதபாரகை
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் லஷ்மணஸ் ததா
பராச்வே  பரத சத்ருனவ் தாளவ்ருந்தம்  விவேஜது
தர்ப்பணம்  ப்ரதவ் ஸ்ரீ மான் ராஷசேந்தரோ விபீஷண
ததார பூர்ண கலசம் சூக்ரீவோ வானரேச்வர
ஜாம்பவாம்ச்ச  மகாதேஜோ புஷ்பமாலாம் மநோ ஹரம்
வாலி புத்ரஸ்து தாம்பூலம்  ச கர்ப்பூரம்  தாத்தாவ் பிரியாத்
ஹனுமான் தீபிகாம் திவ்யம்  சூஷேணச்து த்வஜம் சுபம்
பரிவார்யா  மகாத்மானாம் மந்த்ரினஸ் சமுபாசிரே -என்று
பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாம் அத்யாத்தில்-சொல்லப் பட்டது இறே-
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் -என்றது தோற்ற இறே –
திரு வெண் கொற்றகுடையும் திரு வெண் சாமரத்தையும் தரித்து -என்று அருளி செய்தது –

—————————————

சூரணை -84
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

பெரிய உடையாரும்  பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள் –
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை பெரிய உடையார் -என்று ஆய்த்து நம் முதலிகள் அருளி செய்தது –
இவர்தாம் -பஞ்சவடியில் பெருமாள் எழுந்து அருளி -தம்மை அங்கீகரித்து –
இஹா வத்ச்யாமி சௌமித்ரே  சார்த்த மேதென பஷிணா-என்றவன்று தொடங்கி
திருவடிகளுக்கு மிக்கவும் பரிவராய் -பெருமாள் எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஆஸ்ரமத்துக்கு
காசன்னமாக வர்த்தியா நிற்க செய்தே -அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியை பிரித்து கொண்டு போக-
அப்போது  பிராட்டி இவரை ஒரு வ்ருஷத்தின் மேல் கண்டு  -என்னை இவன் இப்படி
அபஹரித்து போகா நின்றான் -என்று இவர் பேரை சொல்லி கூப்பிட -உறங்குகிறவர் இந்த
ஆர்த்த த்வனியை கேட்டு உணர்ந்து -ராவணன் கொண்டு போகிற படியை கண்டு –
உனக்கு இது தகாது காண்-என்று தர்ம உபதேசம் பண்ணின அளவில் அவன்கேளாமையால்-
நம் பிராண னோடே இது கண்டு இருக்கக் கடவோம் அல்லோம் -யுத்தம் பண்ணி மீட்குதல் –
இல்லையாகில் முடிதல் செய்ய கடவோம் -என்று அத்யவசித்து -அதிபல பராக்ரம் ஆகையாலே
அவனோடே மகா யுத்தத்தை பண்ணி -அவன் கையாலே அடி பட்டு -விழுந்து தந் திரு மேனியை விட்டார்  -இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ குடும்பமாக -திரு நாராயண புரத்தில்
வேத நாராயண பெருமாளை -சேவிக்க சென்று புகுந்த அளவில் -பர சமயிகள்
அந்த கோவிலிலே அக்னி பிரஷேபத்தை பண்ணி உள்ளு நின்றார்கள் எல்லாரும்
புறப்பட்டு ஓடி போகசெய்தே -அந்த எம்பெருமான் திரு மேனிக்கு அழிவு வருகிற படியை கண்டு
சகிக்க   மாட்டாதே பிரேமாதிசயத்தாலே -தாமும் ஒக்க முடிவதாக அத்யவசித்து இவர் நிற்க்கையாலே –
பிள்ளைகளும் இவரை விட்டு போகோம் என்று நிற்க -அவர்களும் தாமும் கூடுவதுக்கு உள்ளே நின்று
திரு மேனியை விட்டார் என்று பிரசித்தம் இறே –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று -அதாவது –
காசித்  ஆவச தச்யாந்தே  ச்தித்வ த்ருஷ்ட்வா  பஹிர் குரும்
தன்மயத்வேன கோவிந்தம்  தத்யவ் மீலித லோசன
தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததாததப்ராப்தி
மகா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்தயந்தீ ஜகத்சூதிம்  பர ப்ரஹ்ம  ஸ்வரூபினம்
நிருச்ச்வா சதயா முக்திம் கதாநயா கோப கன்யகா-என்கிறபடியே
திரு குரவை யினன்று -திரு குழலோசை கேட்டு -ஸ்ரீ பிருந்தாவனம் ஏற
போவதாக புறப்பட்ட அளவிலே -குரு தர்சனத்தால் போக மாட்டாமல் நின்று –
கிருஷ்ணனை த்யானம் பண்ணி -தத்கதசித்தை யாகையாலே வந்த நிர்மல சுகத்தாலும் –
தத் அபிராப்தி நிபந்தனமான நிரவதிக துக்கத்தாலும் –ப்ரஷீண அசேஷ புண்ய பாபையாய்-
தத் ஸ்மரணம் செல்லா நிற்க -தத் பிராப்த்ய அலாப க்லேசத்தால் தரிக்க மாட்டாமல்
மூச்சு அடங்குகையாலே -இவளுக்கு தான் உபேஷிக்க வேண்டாதபடி
தேஹம் தன்னடையே விட்டு கொண்டு நின்றது -என்கை –

———————————————151

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும் —

ஆக -இப்படி நிதர்சன பூதர் படிகளை சொல்லி  -இனி இவர்களைப் போலே இருக்க வேணும்
என்றதின் கருத்தை அருளிசெய்கிறார் –

அதாவது –
உபாயத்துக்கு அதிகாரி யாம் போது –
தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக் கொள்கைக்கு உறுப்பான சக்தியும் –
தான் பரிகிரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகள் ஆனவற்றை விடும் அளவில்
நாட்டார் சிரிக்கும் அதுக்கு கூசும் லஜ்ஜையும் –
தந் பாரதந்த்ர்யா விரோதியான ஸ்வ யத்னமும் கை விட வேணும் —
உபேயத்துக்கு-அதிகாரி ஆகும் போது
சேஷியை பிரியாது நின்று -எல்லா அடிமையும் அவன் ஏவின படி செய்ய
வேணும் என்ற பிரேமமும் –
அத் தலைக்கு ஒரு தீங்கு வரில் அது கண்டு ஆற்ற மாட்டாமல்
தந் உடம்பை உபேஷிக்கையும் –
தத் விக்ரஹ அனுபவ அலாபத்தில் தரித்து இருக்க மாட்டாமல் மூச்சு அடங்கும்படி யாகவும்
வேணும் என்றபடி –
ஆகையாலே அவர்களை போலே இருக்கை யாவது -இவ் வதிகாரங்களை உடையார் ஆகி-என்று கருத்து –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: