ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-73/74/75/76/77/78/79—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

சேஷத்வாதிகளும் -ஜ்ஞாத்ருவாதிகளும் -ஆத்மா தர்மங்களாய்  இருக்க செய்தே –
சேஷத்வாதிகளை பிரதானம் ஆக்கி -ஜ்ஞாத்ருவாதிகளை தத் அநு குணமாக யோஜிக்கைக்கு நியாமகம் எது -மற்றை படி தானானாலோ என்ன –
அருளி செய்கிறார் –

அஹம் அர்த்தமாவது –
பிரத்யக்த்வேன அஹம் புத்தி  வியவ ஹாரார்ஹமான ஆத்ம வஸ்து -ஞான ஆனந்தங்கள் ஆவன -தத்கதமான பிரகாசத்வ அநு கூலத்வங்கள் –
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் ஞானாந்தைக லஷணம்-என்று இவற்றை இட்டு இறே வஸ்துவை நிரூபிப்பது –
தடஸ்தம் என்னும் படி -என்றது -பஹிரங்க நிரூபகதயா புற விதழ்  என்னும் படி -என்றபடி –
தாஸ்யம் ஆவது -சேஷத்வம் –
இது அந்தரங்க நிரூபகம் ஆகையாவது –
பகவத் ஸ்வரூபத்துக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு தன் சத்தையாம் படி இருக்கும் வஸ்து ஆகையாலே -பிரதமம்
சேஷத்வத்தை இட்டு நிரூபித்து கொண்டே மற்றுள்ள ஆகாரங்களை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் நிரூபகம் ஆகையாவது –
வஸ்துவை வஸ்துவந்தரத்தில் காட்டில் வ்யவர்த்திப்பிக்கும் அது ஆகையாலே –
தாஸ்யம் ஈஸ்வர வ்யவர்த்தகமாய் -ஞாநானந்தங்கள் அசித் வயாவர்த்தங்களாய்  இருக்கும் –
இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேஷிதமாய் இருக்க செய்தே
பகவத் பிரகார தயா லப்த சாத்தாகமான  வஸ்துவுக்கு அசித்தில் காட்டில் உண்டான வாசியை
அறிவிக்கிற மாத்ரமான ஞாநானந்தங்கள் புற இதழாம் படி
பிரகாரத்வ பிரயுக்தமான  சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாய் இருக்கும் என்றது -ஆய்த்து இறே -என்று -இவ் அர்த்தத்தில் பிரமாண பிரசித்தி –
பிரதமம் சேஷத்வத்தை இட்டு வஸ்துவை நிரூபித்து கொண்டு -பின்னை
ஞான ஆனந்த  லஷணமுமாய்-ஞான குணகமுமாய்-அசித் வ்யாவிருதமுமாய் –
இருக்கும் என்னும் இடத்தை த்ருதீய  பதத்தாலே நிரூபிக்கிற பிரணவமும் –
சமஸ்த வஸ்துகளும்  சர்வேஸ்வரனுக்கு பிரகாரம் என்னும் அத்தை பிரதிபாதிக்கிற நாராயண பதமும் -முதலானவை இதில் பிரமாணம் –
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மானா பரமாத்மன ந அன்யதா லஷணம் தேஷாம் பந்தே  மோஷே ததைவச -ஹரிதஸ் ஸ்ம்ருதி -இத்யாதிகளும்  உண்டு இறே –
அடியேன் உள்ளான் -என்றார் இறே ஆழ்வாரும்
திரு கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆறு மாசம் ஆழ்வான் சேவித்து நின்று மகா நிதியாய் பெற்ற அர்த்தம் இறே இது –
இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகம் ஆகையால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞாத்ருவாதிகளையே
தத் அநு குணமாக யோஜிக்க வேணும் என்று கருத்து –

—————————————————————

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

இது ஸ்வரூப நிரூபகம் ஆகில் -ஆத்மா உள்ள வன்றே தொடங்கி உண்டாய் -போர வேண்டாவோ
இதுக்கு முன்பு இன்றிக்கே -இப்போது உண்டாகையாலும் -லோகத்தில் இது தான் ஓவ்பாதிகமாய் நடக்க காண்கையாலும்-
தாஸ்யம் ஆத்மாவுக்கு வந்தேறி அன்றே என்ன -அருளி செய்கிறார் –

இது தான் -என்று பிரக்ருதமான தாஸ்யத்தை பராமர்சிக்கிறது –
வந்தேறி -யாவது -ஆகந்துகம் –
அன்று -என்கையாலே -ஸ்வாபாவிகம் -என்ற படி –
ச்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாச்யம் ஹரேஸ் ஸ்வாம்யம்  ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் –
நானும் உனக்கு பழ வடியேன் -என்ன கடவது இறே-

————————————————

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்
அந்ய சேஷத்வமும்
வந்தேறி —

ஆனால் வந்தேறியாக விவஷிதங்கள் எவை –
இதுக்கு விரோதிகள் ஆனவை எவை -என்று அருளிசெய்கிறார் –

ஸ்வாதந்த்ர்யம் ஆவது -நான் எனக்கு உரியன் என்று இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் அந்ய விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கை-
இவற்றை வந்தேறி என்கிறது -இவனுடைய அவித்யாதிகள் அடியாக வந்தவை ஆகையாலே –

———————————————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-
தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இவை இதுக்கு விரோதிகள் ஆனமையை உபபாதிக்கிறார் மேல் –

சேஷத்வ  விரோதி ஸ்வாதந்த்ர்யம் -என்றது நான் எனக்கு உரியேன் என்று இருக்கும் அளவில் –
ஒரு விஷயத்திலும் சேஷத்வம் இல்லாமையாலே -ஸ்வாதந்த்ர்யம் சேஷத்வத்தை உதிக்க ஒட்டாது என்ற படி –
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் -என்றது -ஸ்வாதந்த்ர்யம் குலைந்து –
சேஷத்வத்துக்கு இசைந்தாலும் -பகவத் வ்யதிரிக்த  விஷயங்களிலே ஒன்றுக்கு தன்னை சேஷம் என்று இருக்குமது –
நிருபாதிக சேஷியாக-அவன் பக்கலிலே சேஷத்வத்தை தலை எடுக்க ஒட்டாது என்றபடி –

——————————————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –
ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

இது தான் வந்தேறி அன்று -என்று தொடங்கி –உபபாதித்த அர்த்தத்தை முதலிக்கிறார் மேல் –

அஹங்காரம் தான் –
தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் –
இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –
அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதி களாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –
யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத-
ஆத்மா தாஸ்யம் –
இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –

——————————–

சூரணை -78-

க்ராம குலாதிகளால்
வரும்பேர்
அநர்த்த ஹேது –

அது என்-க்ராம குலதிகளால் வரும்  வ்யபதேசம் அன்றோ நடந்து போகிறதோ என்ன
அருளி செய்கிறார் –

அதாவது
க்ராம குலாதி வ்யபதேசம் அஹங்கார ஜனகம் ஆகையாலே
ஸ்வரூப ஹானி ரூப அநர்த்த கரம் என்ற படி –
ஆகையால் -அவற்றால் இவன்  வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்று கருத்து –

———————————-

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

உக்தார்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -இத்தால் –
பகவத் ஏக பரனாய் இருக்கும் அவன் -க்ராம குலாதி சம்பந்தங்களை இட்டு -சொல்லப் படும் அவன் அல்லன் -பகவத் சம்பந்தத்தை இட்டு  சொல்லப் படுமவன் –
அவனுக்கு அந்த க்ராம குலாதிகள் எல்லாம் பகவானே என்கிறது –

ப்ராப்தாவும் -இத்யாதி வாக்யத்திலே
இச் சேதனனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தாதிகளை-தோற்றினபடியால் இவற்றுக்கு இன்னது நிதானம் என்றும் –
ஏவம் பூதனுடைய -பிரயத்ன -சைதன்ய -பிரயோஜனமும் –
சேஷத்வாதி பிரதான்ய  ஹேது -ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய தாஸ்யம் அந்தரங்க-நிரூபகத்வம் என்றும் –
இப்படி இருக்கிற இது ஸ்வாபாவிகம் -ஏதத் விரோதிகள் ஒவ்பாதிகம் என்றும் –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யமே நித்ய நிரூபகமாய் இருக்கும் என்கையாலே – இவ் அர்த்தத்தை மூதலித்தும்-
க்ராம குலாதிகளால் இவன் வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்றும் –
உத்தார்த்தத்தில் பிரமாணமும்  சொல்லுகையாலே –
ஸ்வ யதன நிவ்ருத்தி -இத்யாதி வாக்கியம் தொடங்கி-இவ்வளவும் பிராசங்கிகம்-

ஆக இப் பிரகரணத்தால் –
பிரபத்திக்கு தேசாதி நியமங்கள் இல்லை -விஷய நியமமே உள்ளது என்னும் இடமும் –
அவ் விஷயம் தான் என்னது என்னும் இடமும் –
அவ் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் –
அதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் உடைய த்ரைவித்யமும் –
பிரபத்தியை உபாயம் ஆக்கினால் வரும் அவத்யமும் –
பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபாதிகளும்-
பிரபத்தவ்யனே உபாயம் என்னும் இடமும் –
பிரதி பாதிக்கப் பட்டது –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: