ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை-61/62/63/64/65/66/67/68/69/70/71/72.–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை-61-

அல்லாத போது
பந்தத்துக்கும்
பூர்த்திக்கும்
கொத்தையாம் –

இப்படி அன்றிக்கே -பல சாதனமாக இவனுக்கு சில செய்ய வேணும் என்றால்
வரும் தீங்கு என் என்ன -அருளி செய்கிறார் –

அல்லாத போது -என்றது -இவ்வளவு அன்றிக்கே பல ஹேதுவாக இவன் சில செய்ய வேண்டும் போது என்றபடி –
பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாகை -யாவது -இவனுடைய ரஷணம் தன் பேறாம் படியான
அவனுடைய நிருபாதிக நிரபேஷ உபாயத்வத்துக்கு-அவத்யமாய் தலை கட்டும்-என்கை–

———————————————-

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –
அத்தை விளைத்து கொள்ளாது
ஒழிகையே வேண்டுவது –

ஆனாலும்–அநந்த க்லேச பாஜனமான -சம்சார சாகரத்தில் அழுந்தி கிடந்து
அலைகிற தன் ஆபத்தை உணர்ந்தால்-ஆபத் சகனான ஈஸ்வரனை
ஸ்வ  பிரபத்தியால் வசீகரித்து -தத் பிரசாதத்தாலே இத்தை
கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-

அதாவது –
சர்வேஸ்வரன் திருவடிகளிலே பிரபத்தி பண்ணி -சம்சாரம் ஆகிற ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம்
என்று -தான் பண்ணுகிற பிரபத்தியாலே தன் ஆபத்தை போக்கி கொள்ளுகிறனாக பிரமித்து –
தத் ஏக பார தந்த்ர்யா ரூப ஸ்வரூப ஹானியாகிற-ஆபத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே
தந் நிவ்ருத்திக்கு இவன் செய்ய வேண்டுவது என்ற படி –
ஓர் ஆபத்தை பரிஹரிக்க புக்கு-ஓர் ஆபத்தை விளைத்து கொள்ளாதே-
இவன் ஸ்வ யத்னத்திலே நிவ்ருத்தனாய் இருக்கவே -எம்பெருமான் தானே ரஷிக்கும் என்று கருத்து –
அத்தை -என்றது -ஆபத் சாமான்யத்தை பற்ற -அல்லது- பர க்ருதாபத்து தன்னையே பராமர்சித்த படி என்று ..

—————————————————

சூரணை -63-

ரஷணத்துக்கு
அபேஷிதம்
ரஷ்யத்வ
அனுமதியே –

ஆனாலும் -ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்று ரஷகனான சர்வேஸ்வரன்
ரஷ்ய பூதனான இச் சேதனனுடைய அபேஷையை பார்த்து இருக்கும் -என்கையாலே –
அவன் பண்ணும் ரஷணத்துக்கு இவன் அபேஷையும் வேண்டும் அன்றோ இருக்கிறது -என்ன-அருளி செய்கிறார் –
அதாவது –
நிருபாதிக ரஷகனானவன் பண்ணும் ரஷணத்துக்கு -இச் சேதனன் பக்கல்  வேண்டுவது –
நீ எனக்கு ரஷ்யம் என்றால் -அல்லேன் என்னாதே–
தன்னுடைய ரஷ்யத்வத்தை இசையும் இவ்வளவே என்கை –
ரஷ்யா அபேஷாம் -என்கிற இடத்தில் -சொல்லுகிற அபேஷை
ரஷ்யத்வ அனுமதி த்யோதகம் இத்தனை -என்று கருத்து –
யாச்னா பிரபத்தி பிரார்த்தனா மதி -என்கிற ச்வீகாரத்தை அப்ரேதிஷேத த்யோதகம்
என்று இறே இவர் தாம் அருளி செய்தது -முமுஷுபடி -சூரணை -233 –

————————————————–

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூபாதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாகக ஒண்ணாது —

இப்படி அனுமதி சாபேஷனாய் ரஷிக்கும் ஆகில் –
இவ் அனுமதி தான் சாதனம் ஆகாதோ -என்ன -அருளி செய்கிறார் –

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் –
நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே –
சகல உபாய சாதாரணமாய் இருக்கை-இத்தால் ஓர் இடத்திலும் இவ் அனுமதிக்கு
இவ் அதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பலசாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –
சைதன்ய கார்யம் ஆகை யாவது -ரஷ்யத்வம் -சேதன அசேதன சாதாரணமாய்
இருக்க செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் ஆகாரத்தை அறிகிக்கைக்கு
யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே –
அத்தை அறிக்கைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் -பக்கல் உண்டான அனுமதி –
இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை -இத்தால் இவ் அனுமதி இச் சேதனனுடைய
வாசியை பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –
பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் –
அவன் வ்யாமோஹா அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி –
கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்
பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –
ஸ்வரூபாதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ
பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் அனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –
இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூபாதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —
அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில்
வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் ஆகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி –
இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது -இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்
அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –
அசித் வ்யாவ்ருத்தி வேஷம் -என்று பாடம் ஆகில் -ஜ்ஞான சூன்யமான அசித்தில் காட்டில்
ஆத்மாவுக்கு உண்டான ஜ்ஞாத்ருத்வ ரூப வ்யாவிருத்தியின் வேஷமான அனுமதியை-என்று சப்தார்த்தம் –

—————————————–

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்
உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்
உபேயத்தில் உகப்பும் –

ஆனால் இவ் அசித் வ்யாவிருத்தி தனக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –

உபாயத்தில் உபகார ஸ்ம்ருதி யாவது –
என்னை தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி – 2- 7- 8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி – 2- 7- 7-என்கிறபடியே
சித்த உபாயமான எம்பெருமான் தன் திறத்தில் பண்ணின உபகாரங்களை அனுசந்திக்கை –
உபேயத்தில் உகப்பு யாவது -அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் –
உகந்து பணி செய்து -திருவாய்மொழி -10 -8 -10 -என்ற உகப்பும் –
அத்தால் அவனுக்கு விளைகிற ப்ரீதியை கண்டு தனக்கு விளைகிற ப்ரீதியும் –

———————————————-

சூரணை -66
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
பிராப்திக்கு உபாயம்
அவன் நினைவு —

இப்படி இவன் பக்கல் உள்ளது ஒன்றும் உபாயம் அன்று ஆகில் –
இவனுக்கு தத் பிராப்தி உபாயம் தான் எது என்ன அருளி செய்கிறார்-

அதாவது –
இத் தலையில் உள்ளது ஒன்றும் பேற்றுக்கு உபாயம் அல்லாமையாலே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2 -7 -1 -என்று
கை கழிந்தவற்றுக்கும் ஒரு போக்கடி  பார்த்து இருக்க கடவ –
உன் திரு உள்ளத்தால் நினைத்து இருந்தது என் என்று -ஹிதைஷியான அவன் நினைவே உபாயம் என்று ஆழ்வார் அநு சந்தித்தபடியே-
அவனை பிராபிக்கைக்கு உபாயம் -சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியாய் -பிராப்தனாய் –
பரம தயாளுவாய்-இருக்கிற அவனுடைய -இச் சேதன உஜ்ஜீவன அர்த்தமான நினைவு -என்றபடி –

——————————————–

சூரணை -67
அது தான் எப்போதும் உண்டு –

அந் நினைவுதான் அவனுக்கு எப்போது உண்டாவது என்ன –
அருளி செய்கிறார் –

எப்போதும் -என்றது -இவன் யாதானும் பற்றி நீங்கி திரிகிற-திரு விருத்தம் -96 – காலத்தோடு
இன்றோடு வாசி யற-சர்வ காலத்திலும் -என்றபடி –

——————————————-

சூரணை -68-

அது பலிப்பது
இவன் நினைவு மாறினால் –

ஆனால் இது நாள் வரை பலியாது இருப்பான் என் -என்ன
அருளி செய்கிறார் –

அதாவது –
அவன் நினைவு இவனுக்கு கார்ய கரமாவது
இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறின காலத்தில் -என்றபடி –

————————————-

சூரணை -69
அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இவ் அர்த்தத்தினுடைய ஆப்த் யர்த்தமாக நஞ்சீயர் வார்த்தையை அருளி செய்கிறார் –

அதாவது –
நஞ்சீயர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ளார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -நோவறிகைக்காக
சென்று எழுந்து அருளி இருக்கிற அளவில் -அந்த ஸ்ரீ வைஷ்ணவர் -அடியேனுக்கு அந்திம
காலத்துக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிசெய்ய வேணும் -என்ன –
அந்திம காலத்துக்கு தஞ்சம் நமக்கு இப்போது தஞ்சம் என் என்கிற
தன்னுடைய ஸ்வ ரஷண சிந்தை குலைகை காணும் -என்று அருளி செய்த வார்த்தை –
ஆகையால் ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு  உறுப்பாக பண்ணும் சிந்தை
பலிப்பது இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறினால் என்றது ஆய்த்து-

—————————————–

சூரணை -70
பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

பிராபகன் ஈஸ்வரன் ஆனாலும் -பிராப்தாவும்  பிராப்திக்கு  உகப்பானும் இவன் அன்றோ –
ஆன பின்பு இவன் நினைவை  இப்படி நேராக துடைக்கலாமோ என்ன –
அருளி செய்கிறார் –
அன்றிக்கே –
இச் சேதனன் கையில் உள்ளவற்றில் உபாயத்வ கந்தம் அற துடைத்து
ஈஸ்வரனை உபாயம் என்று நிஷ்கரிஷித்த  போதே -பிராப்த்ருத்வமும் -பிராப்தியில் வரும் உகப்பும் -இவனது அன்றிகே –
உபாய பூதனான ஈச்வரனேதயதாய் பலித்து விடுகையாலே -பிராப்தாவும் -ப்ராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் -அவனே -என்று
நிகமித்து அருளுகிறார் ஆகவுமாம்–

ப்ராப்தா அவன் ஆகையாவது –
ஸ்வ த்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம்  ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிற
ஸ்வதஸ் சித்தமான ஸ்வ ஸ்வாமித்வ சம்பந்தம் அடியாக -உடைமையை பிராபிக்கும் உடையானை போலே
இவ் ஆத்மாவை பிராபிப்பான் தானாய் இருக்கை –
பிராபகன் அவன் ஆகையாவது -தான் இவனை பிராபிக்கும் இடத்தில் பிராப்திக்கு உபாயமும் –
சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வ சத்ய சங்கல்பத்வாதி குண விசிஷ்டனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனான-தானாய் இருக்கை –
பிராப்திக்கு  உகப்பான் அவன் ஆகையாவது -ஸ்வத்தினுடைய லாபத்திலே தத்-போக்தாவான ஸ்வாமி ஹ்ருஷ்டனாப் போலே -இவனை பிராபித்தால் பிராபிக்க
பெற்றோமே -என்று உகப்பானும் -இவ் ஆத்மாவுக்கு நித்ய போக்தாவான தானாய் இருக்கை –
இவை மூன்றும் -அவனே -என்கிற அவதாரணத்தாலே-இவற்றில் இவனோடு அன்வயிப்பது ஒன்றும் இல்லை என்கை –
இதில் -பிராப்தாவும்  பிராபகனும்  அவனே -என்கையாலே -இவனுக்கு ஸ்வ யத்னத்திலே-அன்வயம் இல்லை என்னும் இடமும் –
பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கையாலே-ஸ்வ பிரயோஜனத்தில் என்னும் இடத்தில் அன்வயம் இல்லை என்னும் இடமும் சித்தம் ஆய்த்து –

——————————————

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

ஆனால்  ஜ்ஞாத்ருத்வ கார்யமான -கர்த்ருத்த்வ  போக்த்ருத்வங்களை உடையவன் ஆகையாலே
ஸ்வயத்ன ஸ்வ பிரயோஜனங்களுக்கு அர்ஹனாய் இருக்க -இவை இரண்டின் உடைய நிவ்ருத்தி
இவனுக்கு எவ் வழியாலே வருகிறது  என்கிற சங்கையில் அத்தை அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வத்தாலே –

அதாவது –
ஜ்ஞாத்ருத்வ  நிபந்தநமான கர்த்த்ருத்வம் உண்டாய் இருக்க செய்தே –
பகவத் பிராப்திக்கு தானொரு யத்னம் பண்ணாமல் இருக்கை யாகிற –
இந்த ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பராதீன ஸ்வரூப ஸ்தித்யாதி மத்தவமாகிற-பாரதந்த்ர்யத்தின் கார்யம் –
அப்படியே –
போக்த்ருத்வமுண்டாய் இருக்க செய்தே -அத தலையை ரசிப்பிக்கும் அது ஒழிய
தனக்கு என்று ஒன்றில் ரசம் இன்றிக்கே இருக்கை யாகிற -ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி –
பராதிசய ஆதாயகத்வமே வடிவாய் இருக்கை யாகிற சேஷத்வத்தின் கார்யம் –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் இரண்டும் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலே –
அவ்வாகாரங்களை அறியவே -இவை இரண்டும் தன்னடையே வரும் என்றது -ஆய்த்து –

——————————————————-

சூரணை -72
பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

ஆனால் இப்படி ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜனங்களில் அன்வயம் அற்று
இருக்கும் ஆகில் -இவனுடைய பிரயத்னத்துக்கும் -சைதன்யத்துக்கும் -பிரயோஜனம் என்ன-என்ன
அருளிச் செய்கிறார்-இந்த வாக்ய த்வயத்தாலே –

அதாவது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்கிறபடி
பரனுக்கு பிரயோஜனமாக பண்ணும் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தி – இவனுடைய பிரவ்ருத்தி  உத்யோக ரூபமான ப்ரயத்னத்துக்கு பிரயோஜனம் –
நித்ய கிங்கர ப்ரஹர்ஷ இஷ்யாமி-ஸ்தோத்ர ரத்னம் -என்கிறபடியே -அத தலையில் உகப்புக்கு உறுப்பாக
தான் பண்ணுகிற கைங்கர்யத்தாலே -அத்யந்த ஹ்ருஷ்டனாய் இருக்கிற அந்த பரனை விஷயமாக உடைத்தான ப்ரீதி-
இவனுடைய அசித் வ்யாவிருத்தி ரூபமான சைதன்யதுக்கு பிரயோஜனம் -என்கை –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்னக் கடவது இறே –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்களாலே பலித்த
ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜன நிவ்ருத்திகளை உடையனான சேதனனுடைய-பிரயத்ன சைதன்யங்களுக்கு –
பாரதந்த்ர்ய சேஷத்வ அனுகுணமாக பிரயோஜனங்கள் சொல்லிற்று -ஆய்த்து –
——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: