ஸ்ரீ வசன பூஷணம்—-சூர்ணிகை–51/52/53/54/55/56/57/58/59/60–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே
இது தான் குலையகடவதாய் இருக்கும் –

ஆக –
பிரபத்திய அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணம் காட்டினாராய் நின்றார் கீழ் —
இந்த த்ரிவித பிரதிபத்தியிலும் -பக்தி பாரவச்ய பிரதிபத்யே முக்கியம் என்று இறே கீழ் சொல்லிற்று –
ஏவம் பூத பிரபத்தி நிஷ்டர் ஆனவர்கள் -தந் நிஷ்டை குலைந்து -பகவல் லாப அர்த்தமாக
ஸ்வ யத்னத்திலே மூளுவது -அவன் வரக் கொள்ள அவனையும் உபேஷிப்பதாகிற இவற்றுக்கு
நிதானம் ஏது என்ன -அருளி செய்கிறார் –

பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறக்கை யாவது –
கரண சைதில்யத்தாலே ஸ்வயத்ன ஷமர் அன்றிக்கே அவனே உபாயமாக அத்யவசித்து
அவன் வரவு பார்த்து இருக்கும் அவஸ்தை அளவு அன்றிக்கே –
கண்ணாஞ் சுழலை இட்டு –
ஏதேனும் ஒருபடி ஆகிலும் -அவனை இப்போதே பெற வேண்டும் என்னும்
அதிமாத்ர த்வரை அவஸ்தை விளைகை-
இது -என்று பிரபத்தியை சொல்லுகிறது –
தாத்ருசாவஸ்தை பிறந்தால் பிரபத்தி குலைகையாவது -என்னான் செய்கேன் -என்று
ஸ்வ பிரபத்தியில் அந்வயம் அற்று பகவதி நியச்த பரராய் இருக்கும் இருப்பு குலைகை–

————————————————

சூரணை -52
தன்னைப் பேணவும் பண்ணும் –
தரிக்கவும் பண்ணும் –

இப்படி பிரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் –
அவஸ்தா பேதம் விளைக்கும் அத்தை அருளி செய்கிறார் –

தன்னை பேணப் பண்ணுகை யாவது -காறை பூணும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -3 -7 -8 – இத்யாதியில்  படியே
அவன் வரவுக்கு உடலாக தன்னை அலங்கரிக்கும் படி பண்ணுகை –
அதாவது பகவத் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூட்டும் என்ற படி –
இது -மடல் எடுக்கை -முதலான வற்றிலே மூட்டும் அதுக்கும் உப லஷணம் –
தரிக்க பண்ணுகை யாவது -அரை ஷணம் அவனை ஒழிய தரிக்க மாட்டாமையாலே –
அவன் வரவுக்கு உடலாக ஸ்வ யத்னத்திலே மூளும்படி பண்ணுவது தானே –
அவன் வர கொள்ள விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பி –
கழக மேறேல் நம்பி –
என்று அவனையும் உபேஷித்து தள்ளி தரித்து இருக்கும் படி பண்ணுகை –
ஆகை இவை இரண்டாலும் -என்னான் செய்கேன் -என்றும் –
தரியேன் இனி -என்றும் –
இருக்கும் இருப்பு பிரதிகோடியை விளக்கும் என்றபடி –
ஆகையாலே பிரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வ பிரவர்த்தி யாதிகளில் இழிகைக்கு அடி
பக்தி யினுடைய அவஸ்தா பேதம் என்று கருத்து –

——————————————————

சூரணை -53
இந்த ஸ்வாபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திரு குழல் ஓசையிலும்
காணலாம் –

தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்று எம்பெருமான் வருகைக்கு உடலாக
க்ருஷி பண்ணுகையும்-அவன்  வரக் கொள்ள அவனை உபேஷிக்கை-யுமாகிற பரஸ்பர விருத்த
ஸ்வபாவங்களை விளைக்கும் படியை இறே சொல்லிற்று -இப்படி பக்தியானது
ஸ்வ அவஸ்தா விசேஷங்களாலே சேதனருக்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள்
தத் விஷய மாத்ரத்தில் அன்றிக்கே -தத் சம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும்
காணலாம் என்கிறார் மேல் –

இந்த ஸ்வபாவ விசேஷங்கள் -என்று -கீழ் சொன்னவை தன்னையே சொல்லுகிறது என்று  –
இப்படி பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -என்றபடி –
அவை யாவன -அநு பாவ்ய விஷயம் ஒருபடி பட்டு இரா நிற்க செய்தே –
அத்தை அநு பவிக்கிறவர்களுக்கு தாரகமாய் தோற்றுகையும்-
பாதகமே தோற்றுகையும் –
கல்யாண குணங்கள்-இத்யாதி –
கோவிந்தன் குணம் பாடி யாவி காத்து இருப்பேனே –நாச்சியார் திரு மொழி – 8- 3- -என்று தாரகமாகவும் –
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திரு வாய் மொழி – 8- 1- 8-என்று-பாதகமாகவும் -சொல்லுகையாலும்
கல்யாண குண விஷயம் ஆகவும் –
சரங்கள் ஆண்ட தந் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –பெரிய திரு மொழி -7 -3 -4-என்று தாரகமாகவும் –
சரங்களே கொடியதாய் அடுகின்ற-என்று பாதகமாகவும் –பெரிய திருமொழி -10- 2- 9-சொல்லுகையாலே
திரு சர விஷயம் ஆகவும் –
திரு மாலை பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி  வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14 -என்று தாரகமாகவும் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -திரு வாய் மொழி -9 -5 -8 என்று பாதகமாகவும் -சொல்லுகையாலே
திரு நாம விஷயம் ஆகவும் –
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத வுன் குழலின் இன்னிசை போதராதே –பெருமாள் திரு மொழி -6 -9 -என்று தாரகமாகவும் –
அவனுடை தீம் குழலும் ஈருமாலோ -திரு வாய் மொழி -9 -8 -5 -என்று பாதகமாகவும் சொல்லுகையாலே –
திரு குழலோசை விஷயமாகவும் காணலாம் என்றபடி -என்றும் ஒக்க போக்யங்களாய் இருந்துள்ள கல்யாண குணாதிகள்
தாரகமாக தோற்றுவது பாதகமாக தோற்றுவது ஆகிறது –அது போக்தாக்களான
இவர்களுடைய பிரேம ஸ்வாபவ விசேஷங்களாலே இறே -அல்லது
குணாதிகளின் ஸ்வரூப பேதத்தால் அன்றே -ஆகையால்-பகத் த்வய அவஸ்தா பேத ஜநிதங்களான
ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துகள் விஷயமாகவும் காணலாம் என்கிறது –
குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிற இடத்தில்-இரண்டும் ஒருவர் பேச்சு
அன்றிக்கே இருந்ததே ஆகிலும் -ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரகிருதிகள் ஆகையாலும் –
எல்லாருடைய பக்தியும் -பகவத் பிரசாத லப்தை யான பர பக்தி ஆகையாலும் -அந்த
பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே இவ்விடத்தில்-அபேஷிதம் ஆகையாலே விரோதம் இல்லை –
சரங்களே கொடிதாய்  அடுகின்ற -என்கிற இது பராஜித ராஷசர் பாசுரம் அன்றோ -அத்தை
சரங்கள் ஆண்ட-என்கைக்கு பிரதி கோடியாக சொல்லாமோ என்னில் -ராம விஜயம் தனக்கு இஷ்டம் ஆகையாலே
அந்த விஜயத்துக்கு இலக்காய்-தோற்ற ராஷசர் தசை பிறந்து -பிராட்டிமார்  தசை பிறந்து பேசுமாப் போலே
தாமான தன்மை தோற்றாதே தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -விஜயத்தை பேசி அனுபவிக்கிறார்
என்று இறே இத் திரு மொழிக்கு வியாக்யானம் பண்ணி அருளுகிற ஆச்சார்யர்கள் அருளி செய்வது –
ஆகையால் தம்முடைய பிரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபன்னமான பின்பு -திரு சரங்கள்
பாதகமாய் ஆய்த்தும் தமக்கே யாய் தோற்றி பேசுகையாலே அப்படி சொல்லக்குறை இல்லை –

அதவா –
தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்ற இவை இரண்டாலும் –
அவன் தானே வரும் அளவும் தரியாமல் வரவுக்கு உடலாய் யத்னிக்கப் பண்ணுவது –
வரக் கொள்ள ப்ரணய ரோஷத்தால் தள்ளித் தரித்து இருக்கப் பண்ணுவதாம் படியை  இறே சொல்லிற்று –
இப்படி விருத்த ச்வபாவங்களை ஓன்று தானே செய்கிறார் -இந்த -என்று தொடங்கி –
அதாவது –
இப்படிப் பட்ட  ஸ்வபாவ விசேஷங்கள் -கோவிந்தன் குணம்  பாடி -என்று தொடங்கி –
கீழ் சொன்ன படியே -ஒரு தசையில் தாரகமாகபேசுவது-ஒரு தலையில் பாதகமாக போவதாம் படி –
இவர்களுக்கு தரிப்பும் பாதையும் ஆகிற விருத்த ஸ்வபாவன்களை விளைவிக்கிற கல்யாண குணாதிகளிலேயும் காணலாம் என்கை –
ஆக
பிரபத்திக்கு –சூரணை – 37-என்று  தொடங்கி இவ்வளவாக
பிரபத்தி வைபவத்தையும்
தத் விஷய வைபவத்தையும்
தத் அதிகாரி த்ரை வித்யத்தையும்
த்ரிவித பிரபத்தியிலும்  பக்தி பாரவச்ய ஹேதுக பிரபத்தி யினுடைய முக்க்யத்தையும்
அது தனக்கு ஸ்வ ஹேது பூத பக்த்ய அவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும்
அந்த பக்த்யா அவஸ்தா பேதம் செய்விக்கும் சங்கை களையும்
அருளி செய்தார் –

——————————————–

சூரணை -54
இது தன்னை பார்த்தால்
பிதாவுக்கு புத்ரன்
எழுத்து வாங்குமா போலே
இருப்பது ஓன்று –

இப்பிரபத்தி  தனக்கு -தர்ம புத்ராதிகளும்-என்று தொடங்கி -கீழ் உக்தரான அதிகாரிகள்
பக்கலிலே -சாதன தயா அனுஷ்டானம் காண்கையாலும்-
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் -என்று உபாயங்களோடே சகபடிதமாய் போருகையாலும் –
யத் யேன காமகாமேன ந சாத்யம் சாதனந்தரை
முமுஷூணா யத் சாந்க்யேன யோகேன  நச பக்தித
ப்ராப்யதே பரமம் தாம யதோ நவர்த்ததே புன
தேன தேனாப்யதே தத் தந்ந்த்யா சேனைவ மகாமுனே
பரமாத்மாச தேனைவ சாத்யதே புருஷோத்தம -என்றும் –
இதம் சரணம் அஞ்ஞானம் -என்றும்
இப்படியே சாஸ்த்ரங்களில் இத்தை சாதனமாக சொல்லுகையாலும் –
உபாயத்வ பிரதிபத்தி யோக்யதை உண்டாகையாலே -அத்தை வ்யாவர்த்திக்கைக்காக –
அதுக்கு உடலான பலவற்றையும் அருளி செய்கிறார்-மேல் –
அதில் -பிரதமத்திலே -இப் ப்ரபத்தியை உபாயமாக கொண்டால் – வரும் அவத்யத்தை தர்சிப்பிக்கிறார் –

இதுதன்னை பார்த்தால் -என்றது-இச் சேதனர் ஈஸ்வர விஷயத்தில் பண்ணும் இப் பிரபத்தி –
தன்னை உபாயம் என்ன பார்த்தால் என்றபடி -ஈஸ்வரன் தன்னை ரஷிக்கைக்கு ஹேதுவான இச் சேதனன்
பண்ணும் இப் பிரபத்தி தன்னை நிரூபித்தால் என்று இங்கனே அனத்யாஹாரேன யோஜிக்க்கவுமாம் –
அப்போதும் அர்த்தம் ஒக்கும் இறே –
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று -என்றது –
உத்பாதகன் ஆகையால் -ஹிதைஷி யாய் -தான் அறியாத தசையிலும் -தன்னை
ரஷித்துகொண்டு போரும் தம் அப்பனுக்கு  புத்ரன் ஆனவன் -தான் அறிந்த தசையிலே நீ என்னை ரஷிக்க வேணும்
என்று எழுத்து வாங்கினால் -இரண்டு தலைக்கும் உண்டான உறவு கொத்தை யாம் போலே –
சத்தாகாரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு -பொறுக்கிற -அகார வாச்யனான
சர்வேஸ்வரனுக்கும்-மகார வாச்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி –
எழுத்து வாங்குகையாவது-ரஷகன் பேரை தந் மார்பில் எழுதி கொள்ளுகை

————————————-

சூரணை -55
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னை பொறாது
ஒழிகை –

ஆனால் இது தனக்கு ஸ்வரூபம்  ஏது என்ன அருளி செய்கிறார் –

இது தனக்கு ஸ்வரூபம் -என்றது -இப் பிரபத்தி தனக்கு அசாதாராண காரம் என்றபடி –
தன்னை பொறாது ஒழிகையாவது-உபாய வரண ஆத்மகமான தன்னை -உபாயம் -என்ன-சஹியாத படியாய் இருக்கை –
அதாவது –
ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் -ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதி பத்திக்கு
யோக்யமாக மாட்டாத படி இருக்கை -என்றபடி –
அன்றிக்கே –
தன்னை பொறாது ஒழிகை -என்கிற இடத்தில் -உபாயத்வேன ப்ரதீதிமான தன்னை
பொறாது ஒழிகை என்று அநத்யா ஹாரேன யோஜிக்கவுமாம் -இப்படி சொன்னாலும்
ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதிபதி அசஹத்வமே பொருளாம் இறே –

——————————————–

சூரணை -56
அங்கம் தன்னை
ஒழிந்தவற்றை
பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –

யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன –
அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  –
இது தன்னை அருளி செய்கிறார் –

தன்னை ஒழிந்தவற்றை போறது ஒழிகை யாவது -ஸ்வீகார ரூபமான தன்னை
ஒழிந்த சேதன பிரவ்ருத்திகள் ஒன்றையும் சஹியாத படி இருக்கை –
சாதன ரூப சகல பிரவ்ருத்திகளின் உடையவும் சவாசனத் யாகமிறே இதுக்கு அங்கம் –
யத் யத் சாங்கம் -என்கிற இடத்தில் -பிரவ்ருத்தி  ரூப அங்க சஹிதமனவற்றை  இறே
சாதனமாக சொல்லுகிறது –
அப்படி இன்றிக்கே –
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி ரூபம் ஆகையாலே -இது தானே இதனுடைய
அனுபாயத்வ சூசகம் என்று கருத்து-

———————————————

சூரணை -57
உபாயம் தன்னை பொறுக்கும்-

இதனுடைய அனுபாயத்வத்தை  த்ருடீகரிக்கைக்காக -சித்த சாத்திய உபாயங்களின்
படிகளை சொல்லி -அவை இரண்டையும் பற்ற -இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
அருளி செய்கிறார் -மூன்று சூரணைகளால்-/இது -அதிகார விசேஷணமாய் ஸ்வீ கார வர்ணம் /

உபாயம் தன்னை பொறுக்கும் -என்றது –
சித்த உபாயமான சர்வேஸ்வரன் -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும்
ஸ்வயமேவ நிர்வாகன் ஆகையால் -தன்னை உபாயம் என்றால் -அதுக்கு தகுதியாய் இருக்கும் -என்றபடி –
உபாய உபேயத்வ ததிஹா தவ தத்வம்  நது குநௌ-என்று
உபேயத்வோபாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாய் இறே உபாயத்வமும் இருப்பது –
ஏச வேதவிதோ விப்ரா யோசாத் யதமவிதோ ஜனா
தே வதந்தி மகாத்மானாம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் –
சரண்யம் சரணஞ்ச த்வமாகூர்  திவ்யா மகார்ஷய
அம்ருதம் சாதனம் சாத்யம் சம்பச்யந்தி மநீஷிணா-என்ன கடவது இறே
தன்னை பொறுக்கும் -என்கிற இவ்வளவே சொல்லி விடுகையாலே –
தன்னை ஒழிந்தவற்றை பொறாமை அர்த்தாத் சித்தம் –
இந்த சித்த உபாயம் சஹாயாந்தர  சம்சர்க்க அசஹமாய் இறே இருப்பது –
இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமா இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே
அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத சுவேதம் போலே
சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை
பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

————————————————–

சூரணை-58
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

சித்தோ உபாய தரமான சாத்திய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யா ஞான ரஹீதராய் –
ஸ்வ யத்ன பரராய் இருப்பார்க்கு -மோஷ சாதன தயா -சாஸ்திர விகிதம் ஆகையாலே –
ஸ்வ ஸ்மின் உபாயத்வ பிரதி பத்தி சஹமூகமாய் ச்வோத் பத்யாதிகளில்
பிரவ்ருத்தி ரூப அங்க சாபேஷம் ஆகையாலே ஸ்வ வ்யதிரிதக்தங்களையும்
சஹிக்குமதாய் இருக்கும் என்ற படி –
பக்த்யா லப்யஸ் தவ நன்யயா –
உபாயபரிகர்மித  ச்வாந்தச்ய ஐ காந்தி காத்யந்திக  பக்தி யோகைக லப்யா-
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி
நராணாம் ஷீன பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –
என்னக் கடவது இறே-

—————————————–

சூரணை -59
இது இரண்டையும் பொறாது

இது இரண்டையும் பொறாது -என்றது-

சித்தோ உபாய வர்ண ரூபமாய் –
நிவ்ருத்தி சாத்திய ரூபமாய் –
அதிகாரி விசேஷணமாய்-
ஸ்வரூப அனதிரேகையாய் –
இருக்கிற இந்த பிரபத்தி
உபய அசஹமாய் இருக்கும் என்ற படி –
ஆகையால் சித்த சாத்திய உபாய வ்யாவிருத்த வேஷையாய்
இருக்கிற இந்த பிரபத்திக்கு
உபாயத்வம் அசம்பாவிதம் என்றது ஆய்த்து-

அன்றிக்கே –
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதிக்கு -ஆனால் சாங்கமாக சாஸ்திர விஹிதமான
இந்த பிரபத்திக்கு ஸ்வரூபம் எது -இதுக்கு சொல்லுகிற அங்கம் தான் என்ன -அவை
இரண்டையும் அடைவே அருளி செய்கிறார் -இது தனக்கு -இத்யாதி வாக்யத்தாலே –
ஆனால் தன்னை பொறுப்பது எது என்ன அருளி செய்கிறார்-உபாயம் -இத்யாதி –
தன்னையும் தன்னை ஒழிந்தவற்றையும் பொறுக்கும் அது எதுஎன்ன
அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதி-
இந்த சித்த சாத்திய உபாயங்கள்  இரண்டிலும் -இப் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தை நிகமிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதி –
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
அதவா –
இதன் அனுபாயத்தை சாதிக்கைக்காக இதனுடைய ஸ்வரூப அங்கங்கள் இரண்டையும்
தாமே அருளி செய்கிறார் -இது தனக்கு-இத்யாதி வாக்யத்வயத்தாலே-
இதன் அனுபாயத்வத்தை ஸ்புடம் ஆக்குகைக்காக சித்த சாத்திய உபாயங்களின் படிகளை
தர்சிப்போம் என்று திரு உள்ளம் பற்றி -பிரதமம் சித்த உபாயத்தின் படியை அருளி
செய்கிறார்-உபாயம்-இத்யாதியால் –
அநந்தரம்-சாத்திய உபாயத்தின் படியை அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதியால்
இவை இரண்டிலும் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதியால்-
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
இவ் உபய சங்கதிக்கும் வாக்யங்களுக்கும் அர்த்தம் பூர்வவத் –

————————————————

சூரணை -60
பலத்துக்கு ஆத்ம ஞானமும்
அப்ரதிஷேதமுமே
வேண்டுவது –

இப்படி இப் பிரபத்தி உபாயம் அல்லவா விட்டால் பல சித்திக்கு இவன் பக்கலிலும்
சில வேண்டாவோ என்ன -அருளிசெய்கிறார் –

பலத்துக்கு -என்றது -பல சித்திக்கு -என்றபடி –
ஆத்ம ஞானம் ஆவது -ஸ்வ ஸ்வரூப ஞானம் -அதாவது
தத் ஏக சேஷத்வ-தத் ஏக ரஷத்வங்களை அறிகை-
அப்ரதிஷேதம் ஆவது -நிருபாதிக சேஷியாய்-நிருபாதிக ரஷகன் ஆன அவன்
பண்ணும் ரஷணத்தை விலக்காமை-அதாவது
ஸ்வ ரக்ஷணே ச்வான்வய நிவ்ருத்தி –
அவதாரணத்தால்-இவை இரண்டும் ஒழிய பின்னை ஒன்றும் வேண்டாதபடி –
சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொலுகிற
ஆத்ம ஞானமும் -மத்யம பதத்தில் சொல்லுகிற அபிரதிஷேதமும் இறே வேண்டுவது..

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: