ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-41/42/43/44/45/46/47/48/49/50–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

பிரபத்திக்கு தேச நியமம் -என்று -சூரணை -23 – தொடங்கி இவ்வளவும்
உபாய வர்ணாத்மிகையான பிரபத்தி யினுடைய தேச காலாதி நியம அபாவத்தையும் –
விஷய நியமும் தர்சிக்கப் பட்டது -இப்படி விஷய விசேஷத்தை தர்சிப்பித்த அநந்தரம் –
பகவத் சாஸ்த்ராதி சித்தமான அதிகாரி விசேஷங்களையும் பிரகாசிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -அதிகாரி விசேஷத்தை அருளி செய்கிறார் –
அதாவது –
சௌலப்யாதி குண பூர்த்தி யாலே பிரபத்திக்கு நியத விஷயமான இச் அர்ச்சாவதாரத்தில்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -பிரபதன ஹேது பேதத்தாலே -மூன்று வகை பட்டு
இருப்பர்கள்-என்கை–

————————————————–

சூரணை -42
அஞ்ஞரும்
ஞானாதிகரும்
பக்தி பரவசரும் —

அவர்கள் யார் என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞர் ஆகிறார் -பகவல் லாபத்துக்கு உறுப்பாக சாதனா அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான
ஞானம் இல்லாதவர்கள் -அஞ்ஞானம் அசக்திக்கும் உப லஷணம்-
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் அஞ்ஞான அசக்திகள் அன்று-சூரணை – 115- -என்று மேலே இவர் தானே
அருளி செய்கிறார் இறே –
ஞானாதிகர் ஆகிறார் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தேயும் -பகவதத்யந்த
பரதந்த்ரமான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனத்தாலே -உபயாந்தரங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று
பரித்யஜிக்கைக்கு ஈடான ஞான பூர்த்தி உடையவர்கள் –
பக்தி பரவச்ர் ஆகிறார் -ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமர் அல்லாதபடி
பகவத் பிரேமா அதிசயத்தாலே சிதில காரணராய் இருக்கும் அவர்கள் –

———————————————

சூரணை -43
அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இப்படி இவ் வஞ்ஞானாதிகள்  அடியாக பிரபத்தி பண்ணினவர்கள் இன்னார் என்னும் இடம்
காணலாம் இடம் உண்டோ என்னும் ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் -என்றது -இதர உபாய அனுஷ்டானத்தில் இழிகைக்கு
ஈடான ஞானாதிகள் முதலிலே இல்லாமையாலே -அநந்ய கதிகளாய் கொண்டு -பகவத் விஷயத்திலே
பரந்யாசம் பண்ணினவர்கள் என்ற படி —
அஸ்மாதாதிகள்  -என்று ஸ்வ நைச்ய அனுசந்தனத்தாலே மந்த அதிகாரிகளோடே
தம்மையும் கூட்டி அருளி செய்கிறார் –
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்றது -உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாசகம் என்று
நடும்கும் படியான ஸ்வரூப யாதாத்ம்ய  தர்சனத்தாலே வந்த ஞான பூர்த்தி யாலே
அநந்ய கதிகளாய் கொண்டு ஸ்வரூப  அனுரூபமாக பகவதி நியச்த பரர ஆனவர்கள் -என்றபடி –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -என்றது -பகவத் பிரேமா பௌ ஷ்கல்யத்தாலே –
கால் ஆலும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-என்றும் –
இட்ட கால் இட்ட கை –திருவாய் மொழி -7 -2 -4 -என்றும் சொல்லுகிறபடி
சிதில கரண ராய் இருக்கையாலே -சாதனா அனுஷ்டானத்துக்கு ஆள் அன்றிக்கே –
அநந்ய கதிகளாய் கொண்டு -அவன் பக்கலிலே பர சமர்ப்பணம் பண்ணினவர்கள் என்ற படி –
பக்தி பரவசருக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண போகாது என்னும் இடம் –
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்கு உற்றேனும் அல்லேன் –திரு வாய் மொழி -5 -7 -2 -என்றும் –
என் கொள்வன் –திருவாய் மொழி -5 -1 -4 -என்ற பாட்டிலும் ஆழ்வார் சூச்பஷ்டமாக அருளி செய்தார் இறே

—————————————

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இப்படி அஞ்ஞாதிகள் ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக
சொல்லுகைக்கு  மூலம்  இன்னது என்கிறார் –

அதாவது
அஞ்ஞான அசக்திகளும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்
பகவத் பக்தியும் –
இவை மூன்றிலும் மூவருக்கும் அன்வயமுண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும்
இவற்றில் ஒரொன்றே இவ் அதிகாரிகள் பக்கல் உறைத்து இருக்கையாலே என்கை
இத்தால் முற்பட்டவர்கள் பக்கல் ஞான பக்திகள் இரண்டும் குறைந்து -அஞ்ஞானமே விஞ்சி இருக்கும்
நடுவில் அவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -பக்தியும் அளவு பட்டு -ஞானமே விஞ்சி இருக்கும் –
பிற்பட்டவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -ஸ்வரூப ஞானமும் குறைவற்று இருக்க செய்தே –
ப்ரேமமே கரை புரண்டு இருக்கும் –
ஆகையால் எல்லாம் எல்லார் பக்கலிலும் உண்டே ஆகிலும் -அல்பங்களானவை கிடக்க செய்தே
அதிகமானதுவே அவ்வவருக்கு பிரபதன ஹேதுவாம்  என்றது ஆய்த்து –
இந்த யோஜனைக்கு ஒரு குறை உண்டு –
மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களுக்கும் அஞ்ஞானம் சிறிது கிடக்கிறது உண்டு என்று
கொள்ள வேண்டி வருகையாலே -ஆனால் செய்வது என் என்னில் –
ஊற்றத்தை பற்ற -என்கிற இத்தை அனுசந்தான பரமாக்கி யோஜிக்கும் அளவில் இவ் விரோதம் இல்லை –
அப்போது -இப்படி -இத்யாதிக்கு -அஞ்ஞான  அசக்திகளும் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும் -பகவத் பக்தியும் –
ஆகிய இம் மூன்றின் உடையவும் அனுசந்தானம் மூவர்க்கும் ஏதேனும் ஒருபடி உண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவ் அதிகாரிகளுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும் -இவற்றில் ஒரொன்றே இவ்  அதிகாரிகளுக்கு
ஊற்றம் ஆகையாலே என்று பொருளாக கடவது -அதாவது -அநந்ய கதிகளாய் பிரபன்ன ராகைக்கு உடலான
அஞ்ஞானாதி த்ரய அனுசந்தாநாமும் மூவர்க்கும் உண்டானாலும் -மூன்றிலும் வைத்து கொண்டு
பிரசுரமானதே தம்தாமுக்கு அநந்ய கதிகளாய் பிரபத்தியில்  இழிகைக்கு ஹேதுவாக அனுசந்தித்து-இருக்கையாலே என்றபடி –
இதில் -பிரதம அதிகாரிகளுக்கு அஞ்ஞான அனுசந்தானம் ஸ்வ ரசம் –
நடுவு சொன்னவர்களுக்கு பிரமாணிகர் ஆகையாலே -அஞ்ஞானத்தின் உடைய சவாசன நிவ்ருத்தி கூடாமையால்
அஞ்ஞான அனுசந்தானம் கூடும் –
பிற்பட்டவர்கள் மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே அஞ்ஞான அனுசந்தானம் நைச்ய நிபந்தநமாம் இத்தனை-

—————————————–
சூரணை -45
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

இவஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் இன்னது என்கிறார் –

மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -என்றது –
சாதன அனுஷ்டானத்திலே அஞ்ஞான அசக்திகளுக்கு மூலம் -கர்ம நிபந்தனமான
அசித் சம்பந்தம் ஆகையாலே -அஞ்ஞானம் அசித் தத்தவத்தை பற்றி வரும் –
இதர சாதனங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று பரித்யஜ்யைக்கு உடலான ஞான பூர்த்திக்கு அடி
மத்யமபதத்தில் சொல்லுகிற ஆத்மா ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் ஆகையாலே
ஞானாதிக்யம் ஆத்மா தத்தவத்தை பற்றி வரும் –
ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதபடி கரண சைதில்யத்தை பண்ணும்
பக்தி வ்ருத்திக்கு காரணம் -காதல் கடல் புரைய விலை வித்த காரமர் மேனி -திருவாய் மொழி -5- 3- 4-
என்னும் பகவத் விக்ரஹ வைலஷண்யம் ஆகையாலே -பக்தி பாரவச்யம் பகவத் தத்தவத்தை பற்றி வரும் -என்றபடி –

——————————————

சூரணை -46
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

அதிகாரி த்ரயத்துக்கும் -அஞானாதி   த்ரயத்திலும் அந்வயம் உண்டாய் இருக்க
ஒரொன்றே பிரபதன ஹேதுவாக சொல்லுகிறது-ஊற்றத்தை பற்ற -என்று இறே சொல்லிற்று –
இப்படி ஏக அதிகாரி பக்கலிலே இம் மூன்றும் உண்டு என்னும் இடம் காணலாம் இடம் உண்டோ
என்ன-அருளி செய்கிறார் –

அதாவது-
எம்பெருமான் தம்முடைய  ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே –
தன்னை பெரும் இடத்தில் சில சாதன அனுஷ்டானம் பண்ண வேணும் என்று இருந்தானாக கொண்டு –
உபயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாதபடி அஞனான நான் என் செய்கேன் –
ஞானம் தந்தோமே என்னில் -நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து
சாதன அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற -நான் என் செய்கேன் –
ஸ்வரூபத்துக்கு சேராதாகிலும்-உன்னை பெறலாமாகில்-இது தன்னை அனுஷ்டிக்கலாய்த்து இறே
ஞான மாத்ரத்தை தந்தாய் ஆகில் -பக்தி ரூபாபன்ன ஞானத்தை தருகையாலே -ஒன்றையும் அடைவு பட
அனுஷ்டிக்க ஷமன் அல்லாதபடி -பக்தி பரவசனான -நான் என் செய்கேன் -என்று
இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் ஆகையாலே அவ்விடத்தில் இம்  மூன்றும் உண்டு என்கை –
ஆகையால் -இவ்விடத்திலே காணலாம் -என்று கருத்து –

———————————-
சூரணை -47
அங்கு ஒன்றை பற்றி இருக்கும் –

ஆனால் இம் மூன்றும் அவ்விடத்தில் பிரபத்தி காரணம் ஆகிறதோ -என்ன –
அங்கு ஒன்றை பற்றி இருக்கும் -என்கிறார் –

அதாவது –
அவ்விடத்தில் பிரபத்தி யானது மூன்றிலும் வைத்து கொண்டு
ஊன்றி இருக்கிற பக்தி பாரவச்யத்தையே தனக்கு ஹேதுவாக
பற்றி இருக்கும் என்றபடி –

——————————————
சூரணை -48
முக்கியம் அதுவே –

இந்த ஹேது த்ரயமடியாக வரும் பிரபத்திகளில் முக்கியம் எது என்ன அருளி செய்கிறார் –

அதாவது பக்தி பாரவச்யம் அடியாக பிரபத்தி பண்ணும் இடத்தில்
ப்ராப்ய ருசி கண் அழிவு அற உண்டு ஆகையாலே -அதுவே முக்கியம் என்றபடி –

————————————————-

சூரணை -49
அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

இவ் அதிகாரி த்ரயத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன -பிரதமம் பட்டர் அருளி செய்த
ஒரு ஸ்லோகத்தை யுதாஹரிக்கிறார் –

அவித்யாதோ தேவ பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம் நாவா ஜகதி கதி மன்யா மவிதுஷாம்
கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –
இச் ஸ்லோக அர்த்தம் -ஜிதந்தா வ்யாக்யானோ போத்காதத்திலே –
பிரபத்திக்கு அதிகாரிகள் -அஞ்ஞரும் சர்வஞ்ஞரும் பக்தி பரவசரும் என்று
த்ரிவிதமாக பட்டர் அருளி செய்தார் இறே -என்று தொடங்கி –
அஞ்ஞன் ஆகிறான் -பகவல்  லாபத்துக்கு தன் பக்கல் ஞான சக்திகள் இல்லாதவன் –
சர்வஞ்ஞன் ஆகிறான் -தேச கால வஸ்துகளால் பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை
உடையவன் ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்தியம் என்று இருக்கும் அவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தே -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும்-பகவத் விஷயமொழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு பிராபகனுமாய் பிராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தை என்று பேரை உடைத்தான மந்திர ரஹச்யத்தை  சர்வஞ்ஞானான  ஸ்ரீ  ஸௌநக பகவான்
வியாக்யானம் பண்ண பெறுவதே -என்கிறார் -என்று ஆச்சான் பிள்ளை அருளி செய்தார்
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்ற இடத்தில் ஸ்வரூப யாதாத்ம்ய  ஞானம் பிரபதன
ஹேதுவாக சொல்லிற்று -இந்த ஸ்லோகத்தில் பகவத் அநந்ய சாத்யத்வ ஞானம் பிரபத்ன ஹேதுவாக
சொல்லிற்று -ஆகையால்-இரண்டும் ஞானாதிகருக்கு அநந்ய கதித்வ பூர்வகமான பிரபதனதுக்கு
ஹேதுவாம் என்று கொள்ள  வேண்டும் –
கீழும் இது தானே அர்த்தமானாலோ என்னில் -ஒண்ணாது -இம் மூன்றும் மூன்று தத்வத்தையும்
பற்றி வரும் -என்றத்தோடு சேராமையாலே

———————————————-

சூரணை -50
இதம் சரணம் அஜ்ஞானாம் –

அநந்தரம் -இவ் அர்த்த விஷயமாக -அகில ஜகன் மாதாவாய் -ஆப்த தமையான -பிராட்டி
லஷ்மீ தந்த்ரத்தில் அருளி செய்த வசனத்தை உபாதானம் பண்ணுகிறார் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம் -இந்த ஸ்லோகத்தில் –
இதம் என்று பராமர்சிக்கிறது -கீழ் சொன்ன சரணா கதியை –
அபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திதி மாஸ்திதா-சரணாகதி ரக்ர்யைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ–99 -என்று இறே கீழ் சொல்லி நின்றது –
இயம் -என்று ஸ்திரீ லிங்க நிர்த்தேசம் அன்றிக்கே -இதம் -என்று நபும்சக லிங்க வ்யத்யயம்
சரண சப்த விவஷையாலே-இதில் அஞ்ஞா சர்வஞஞர்களை-ஸ்புடமாக சொல்லுகையாலே –
மேல் பக்தி பரவசரை சொல்லுகிறது  என்று கொள்ள  வேணும் –
இதம் திதீர்ஷதாம் பாரம் -என்றது -சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும்-த்வரையை உடையார்க்கு என்றபடி –
ஆனந்த்ய மிச்சதாம் -என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவத் அனுபவத்தை பெற்றால் அல்லது
தரிக்க மாட்டாதார்க்கு என்ற படி -இவை இரண்டும் பக்தி யினுடைய பூமாவாலே வரும் அவை இறே –
பக்தி பாரவச்யம் உபாயாந்திர அனுஷ்டானத்தில் -அசக்திக்கும் உறுப்பாய் -அநிஷ்ட நிவ்ருத்தியிலும் –
இஷ்ட பிராப்தியிலும் உண்டான விளம்பா ஷமதைக்கும் உடலாய் இறே இருப்பது –
அதில் விளம்ப அஷமதைக்கு உடலான ஆகாரத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறது –
ஆனால்-கீழ் அசக்திக்கு உடலாய் அன்றோ சொல்லிப் போந்தது -அதுக்கு இது பிரமாணமோ என்னில் -அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே-
இவ்விடத்தில் அபேஷிதம் ஆகையாலே இது பிரமாணமாக சொல்ல தட்டில்லை –
அவித்யாதா -என்கிற ஸ்லோகத்தில் -ஞானாதிக்யதுக்கு  உடலாக சொன்னதும் -கீழ் சொல்லி வந்ததும்
பின்னமாய் இருக்க செய்தே -அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணமாக அத்தை சொன்னாப் போலே –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: