ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை-23/24/25/26/27/28/29/30/31/32—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை -23
பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று
ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தி யினுடைய படியை -விஸ்தரேண அருளி செய்கிறது மேல் –

அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால
விசேஷம் பாராமல் -ச்நாநாதிகளும் இன்றிகே இருக்க -உபதேசிப்பான் என் –
இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளி செய்கிறார் -பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும்
அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் –
அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாள நாதி பூர்வகமாக செய்ய வேணும் –
பிரகாரா ந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை   வர்ணிகராக வேணும் –
அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் –
அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
தேச கால சாத்குண்யா வை குண்யங்கள் அடியாக வரும் அதிசய அனதிசயங்களை
உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் –
தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் -சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே
ஸ்வயமேவ பவித்ரமாய் -சுத்த அசுத்த விபாகம் அற –
தன்னோடு அன்வயிகலாம் படி இருக்கையாலும் –
வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் –
செதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்றாலும் –
இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம்
பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம்  சர்வகாம பலப்ரதா -என்று
பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

———————————————-

-சூரணை -24
விஷய நியமமே உள்ளது –

இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன
அருளி செய்கிறார் –

அதாவது
இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி –
இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே

—————————————————–
சூரணை-25
கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த் ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இதுக்கு இவை ஒன்றும் இல்லை யாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன –
அருளி செய்கிறார் –

கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவன தயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச்சுக்ல கிருஷ்ண பஷ
பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களை சொல்லுகிறது –
வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே
கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்வத் பிரகாரங்களான ஸௌ சாமசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களானஅவ்வவ பிரகாரங்கள் –
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி  அதிகாரிகளான வர்களுக்கே
வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே –
இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்த த்வாதிகளுக்கும் உப லஷணம்-
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-

——————————————–

சூரணை -26
ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –

பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை
உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம் தேச கால -நியம
ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –

பத்த வைராச்ச பாபச்ச ராஷ செந்தராத் விபீஷண
அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு  ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர்
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி –
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி
ச ஏஷ கால தேச
காலச்ச  பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி
தவ் ராத்மயம்  ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச  ததா த்வயி
யுக்தம் ஆகமனம்  தஸ்ய சத்ருசம் தஸ்யபுத்தித -என்று ராவண னாலே அவமாநிதனாய்  ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு கொண்டு
சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று
தேவருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது -இந்த பஷத்திலே விசேஷித்து
எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே
யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும்
யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்ய கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில் –
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரை யான ராவணனில் காட்டில்
சத்வோத்தர் ஆகையாலே -பரரஷணம் யாத்ரை யாய் இருக்கிற தேவரீரை பிராப்யராக புத்தி பண்ணி
அப்படியே அவனை விட்டு போராது ஒழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு சஹகாரியாய்-அந்த
ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகிற தோஷத்தையும் -தார்மிகரான தேவரீர் உடன் கூடப் பெற்றால்
தத் பலமாக தேவரீர் உடைய திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகை யாகிற நன்மையையும்-புத்தி பண்ணி
அப்படியே தேவரீர் திரு உள்ளத்தில் புண் படும் படி குற்றத்தை தீர கழிய செய்து நிற்கிற ராவணன்
தவ் ராத்மத்தையும் -துராத்மாக்களை அநாயேசன அழிக்க வல்ல தேவரீர் ஆண் பிள்ளை
தனத்தையும் கண்டால் விசேஷ ஞானன் அவனுக்கு இவ் வரவு பிராப்தம் –
நியாயத்திலே சஞ்சரிக்கும் அவனுடைய புத்திக்கும் இது சத்ருசம் என்றான் இறே-
ஆக இப்படி பாவ சுத்தியை உடையனான ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் சரணம் என்று வந்த
தேச கால ங்களில் குறை பார்க்க கடவது அல்ல -அவன் வந்த அதுவே தேசமும் காலமும்
என்று சரணாகதி  தர்மஜ்ஞனான திருவடி நிர்ணயிக்கையாலே பிரபதிக்கு தேச கால நியமம் இல்லை என்கை-

—————————————————–

சூரணை-27
இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்

இது தான்  பிரபத்திய அனுஷ்டான ரூபமான த்வ்யத்தில்
பிரதம பதத்தில் காணலாம் என்கிறார் –

அதாவது
சகல உபநிஷத் சாரமாய்–சர்வாதிகாரமாய் – -அவிளம்ப்ய பல பிரதமாய் -சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய் -சர்வ மந்த்ர உத்க்ருஷ்டதயா-
என்கிறபடியே மந்திர ரத்னாக்க்யமாய் இறே த்வயம் இருப்பது –
அந்த வைபவம் தோற்றுகைகாக-மந்திர ரத்னம் என்கிறார் -த்வயம் – என்னாதே
அதில் பிரதம பதத்தில் மதுப் அர்த்தமான -புருஷகார உபாய நித்ய யோகத்துக்கு பிரயோஜனம் –
ஏதேனும் ஒரு தேசத்தில் -ஏதேனும் ஒரு காலத்தில் -ஒரு சம்சாரி சேதனனுக்கு சமாஸ்ராயண ருசி விளைந்தால் –
சஞ்சலம் ஹி மன –
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-
என்கிற படியே சூறாவளி காற்று போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து
க்ஷண பங்குரையான ருசி தீருவதற்கு முன்னே -தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிகலாய் இருக்கை இறே-
ஆகையாலே பிரபத்தி யினுடைய தேச கால நியம ராஹித்யம்-அந்த பதத்தில் நன்றாக தோற்றும் என்கிறார்-

———————————————

சூரணை-28
பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

பிரகார நியம ராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

எங்கும் காணலாம் -என்றது –
இத்தை அனுஷ்டிப்பார்
ஸ்ரவிப்பார் –
எல்லார் பக்கலிலும் காணலாம் என்ற படி –

——————————

சூரணை-29-
திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

அது எங்கே கண்டது என்ன -பூர்வ பிரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார் –

திரௌபதி இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே -ஸ்நாததையா
ரஜஸ் வலைக வச்த்ராஹம் நது மாம் நேது  மர்ஹசி குரூணாஞ்ச புரச்ஸ்தாதும்
சபாயாம் நாஹா முத்சஹே-என்னும் படி அசுத்தையாய் இருக்கிறவள் ஸ்நானம் பண்ணி அன்றே பிரபத்தி
பண்ணிற்று என்றபடி -இத்தால் பிரபத்தி பண்ணுவார்  பிரயதராய் பண்ண வேணும் என்னும்
நியதி இல்லாமை காட்டப் பட்டது -நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது -என்ற இடத்தில்
நீசர் என்கிறது -நெடும் தகையை நினையாதார் நீசர் -பெரியதிரு மொழி -11 -6 -8 –
ஆழ்வார் அருளிச் செய்த ஸௌரி சிந்தா விமுகரான ஹேயரை-
விஷ்ணு பக்தி விஹிநச்து யதிச்ச ச்வபசாதம
விப்ராத் த்விஷட்குனயுதா தரவிந்த நாப பாதாரவிந்த விமுகாஸ் ச்வபசம் வரிஷ்டம் -என்று
பகவத் விமுகரை ச்வபசதமராக சொல்லிற்று இறே –
அதுக்கு மேல் சரணாகதையை  பரிபவித்தும் சரணா கதரான பாண்டவர்கள் திறத்திலே
தீங்குகளை செய்தும் போருகையாலே -சத்யஸ் சண்டாலதாம் வ்ரஜேத் -என்கிற கர்ம சண்டாளர் இறே
கை கலந்து நிற்கிறது –
நீசர் நடுவே என்கையாலே நீசஸ்   ப்ருஷ்டியால் இவனுக்கு உண்டான அசுத்தியும்
நீச சகாசத்திலே என்னும் இடமும் தோற்றுகிறது-
இத்தால் பிரபத்தி ஸ்ரவணம் பண்ணும் போது-நீசர் மத்யத்தில் ஆகாது என்னும் நியதி
இல்லாமை காட்டப் பட்டது-

—————————————————

சூரணை -30
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

இத்தால் பலித்ததை சொல்லா நின்று கொண்டு இவ் அர்த்தத்தை நிகமிக்கிறார் –

ஆகையால் -என்றது -அனுஷ்டான தசையிலும் சரவண தசையிலும் இவர்கள் இருவரும் இப்படி
செய்கையால் என்றபடி –
சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா -என்றது -பிரபத்தியில் அன்வயிக்கும் அளவில்
அசுத்தனாய் இருக்கும் அவனுக்கு சுத்தி சம்பாதிக்க வேண்டா –
சுத்தனாய் இருக்கும் அவனுக்கு அசுத்தி சம்பாதிக்க வேண்டா என்றபடி –
அசுத்திதேட வேண்டாம் என்றது -கீழ் சொன்ன வர்கள் இருவரும் அசுத்தமான தசையில்
பிரபத்தியில் அன்வயித்தமை சொல்லுகையாலே -அசுத்தி தான் இதுக்கு வேணும் என்று
சங்கியாமைக்கு-
இருந்தபடியே அதிகாரி யாம் இத்தனை -என்றது -பிரபதன காலத்தில் அசுத்தனாய் ஆதல் –
சுத்தனாய் ஆதல் -யாதொரு படி இருந்தான் -இருந்ததொரு பிரகாரத்திலே -இதுக்கு
அதிகாரி யாம் இத்தனை என்றபடி
திரௌபதியும் அர்ஜுனனும் -பிரபத்தி அனுஷ்டான -தத் ஸ்ரவண தசைகளில் –
தத் அங்கமாக சுத்தி சம்பாதியாதவோபாதி அசுத்தியும் சம்பாதித்து கொண்டமை இல்லை இறே –
இருந்தபடியே அதிகாரிகளான இத்தனை இறே –

————————————————

சூரணை -31
இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

இவ் அர்த்த விஷயமாக ஆப்த வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –

அதாவது -வேல் வெட்டி பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே –
இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று
நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு
உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி –
என்று உபதேசித்தான் ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில்
கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய்  இருக்கையாலே –
தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை –

———————————————–

சூரணை -32
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அநந்தரம்-
அதிகாரி நியம அபாவத்தையும் உபபாதிப்பதாக -தத் -ஞிஜ்ஜாஸூ  பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் -என்று –
அதுக்கு உத்தரம் அருளி செய்கிறார் -தர்ம புத்ராதிகளும் -என்று தொடங்கி-

அதாவது
திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம்
என்று ஷத்ரியரான தர்ம புத்ராதிகளும் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்த புண்டரீகாஷம்
ரஷமாம் சரணா கதாம் -என்று ஸ்திரீயான திரௌபதியும் –
ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத-என்று
தேவ ரூபத்தை மறைத்து வந்து மகா அபராதத்தை பண்ணின காகமும் –
சோஹந்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ச்துதவ் நச
சாமர்த்யவான் க்ருபாமாத்ர மனோவ்ருத்தி ப்ரசீத மே-என்று-திர்யக் யோநி ஜனாய் பிரதிகூலனுமான காளியனும் –
பரம பதமா பந்தோ மனசா சிந்த யத்ஹரிம் சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண -என்று
திர்யக் ஜன்மாவாய் அனுகூலனுமாயும் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும் –
சொஹம் பருஷிதஸ் தேன தாச வச்சாவமா நித
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று-ராக்ஷஸ சஜாதீயனான  ஸ்ரீ விபீஷண  ஆழ்வானும் –
பாஹும் புஜக போகாப முபதாயாரி சூதன
அஞ்சலிம் பிரான்முக க்ருத்வா  பிரதிசிச்யே மகோததே -என்று-சர்வ சரண்யரான பெருமாளும் –
சப்ராதுஸ் சரணவ்காடம் நிபீட்ய ரகு நந்தன
சீதா முவாசா தியசா ராகவஞ்ச மகா வரதம் -என்று
அக்கரையராய் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாளும் –
தொடக்கமானவர்கள் -என்கையாலே-
சோஹம் த்வாம் சரண மபார மப்ரமேயம் சம்ப்ராப்த
பரமபதம் யதோ ந கிஞ்சித்  சம்சார ஸ்ரம பரிதாப தப்த செத்தா நிர்வானே
பரிணததாம் நி சாபிலஆஷா -என்ற முசுகுந்தனும் –
மூடோய மல்பமதி ரல்ப விசேஷ்டி தோயம் க்லிஷ்டம் மனோச்ய விஷயர் நமயிப்ரசங்கி
இத்தம் க்ருபான் குரு மயிபிரண தே கிலேச தவாம் ஸ்தோது மம்புஜ பவோபிஹி  தேவ நேச -என்று ஷத்ர பந்துவும் –
பகவந்தம் பிரபன்நாஸா பகவன் தமவாப ஹ என்று மாதவியும் –
தம் பிரபன்ன சிரோக்ரீவம் ஆச்யேப்ய ஸ்ருத சோணிதம் விலோக்ய சரணம் ஜக்முஸ்
தத் பத்ன்யோ மதுசூதனம் -என்று காளிய பத்நிகளும் –
பிரணாம பரவண நாத தைத்ய சைனா பராஜித
சரணம் த்வா மனு பிராப்தாஸ் சமஸ்தா தேவதா தேவதா கணா-என்று இந்திராதி தேவர்களும் –
ராஷசைர் வைத்திய மாநானாம் வாநாரானாம் மகாசமூ
சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -என்று ஸ்ரீ வானர சேனையும்
முதலாய் உள்ளவர்கள் எல்லாரும் சரணம் புகுருகையாலே –
பிரபதிக்கு இன்னார் அதிகாரிகள் என்ற ஒரு நியதி இல்லை –
ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் என்கை-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: