ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-15/16/17/18/19/20/21/22.–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

உபய சாதாரண வைபவம்
சூரணை-15
புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

ஆக புருஷகார உபாயங்கள் இரண்டுக்கும் அசாதாராண வைபவத்தை அருளி செய்தார் கீழ்-
உபய சாதாரண வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –
தத்தத் சாதாராண வைபவம் சொல்லுகையாலே -புருஷகாரத்தையும் -உபாயத்தையும் -தனித்தனியே உபாதானம் பண்ணி அருளி செய்தார் கீழ் –
இது உபயத்துக்கும் சாதாரண-வைபவ கதனம் ஆகையாலே -புருஷகரத்துக்கும் உபாயத்துக்கும் -என்று தந்த்ரே னோபாதனம்
பண்ணி அருளி செய்கிறார் -உபயத்துக்கும் அசாதாராண வைபவம் சொல்லுகிற இடங்களில்
-இருவரையும் திருத்துவது -இத்யாதியாலே சாப்தமாக புருஷகார ஸ்வரூபமும் –
உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொள்கையாலே -என்கையாலே -ஆர்த்தமாக-உபாய ஸ்வரூபமும் சொல்லப் பட்டது –
இங்கு உபய ஸ்வரூப கதன பூர்வகமாக வைபவத்தை அருளி செய்கிறார் –

தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-என்று -தோஷம் ஆவது -அக்ருத்ய  கரணாதி  நிஷித்த அனுஷ்டானம் –
குனஹாநியாவது -விஹிதாகரணம் –
இவை இரண்டையும் -மநோ வாக் காயை -இத்யாதி சூர்னையாலே எம்பெருமானார் அருளி செய்தார் இறே –
இதம் குரு -இதம் மா கார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமான சாஸ்திரம் தான் பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இறே இருப்பது –
ஸ்ருதிஸ் சம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று தானே அருளி செய்தான் இறே –
ஏவம் பூதம் சாஸ்த்ரத்தில் நிஷித்தத்தை செய்கையும் -விஹிதத்தை செய்யாமையும் இறே –
அநாதி காலம் ஷிபாமி ந ஷமாமி -என்னும் பகவன் நிக்ரகத்துக்கு இலக்காய் போருகைக்கு காரணம் –
இவை இரண்டையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே -என்றது –
ஆஸ்ரஎன உந்முக சேதன கதனங்களான இவற்றை தர்சித்து -இவனை வேண்டாம் என்று கைவிடாதே –
அங்கீகரிக்கும் மாத்ரம் அன்றிக்கே என்றபடி –

அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-யாவது –
அப்படிப் பட்ட தோஷ குண ஹானிகள் தன்னையே -முகம் மலர்ந்து
அங்கீகரிகைக்கு உறுப்பான உபகாரமாக கொள்ளுகை-
உபேஷியாமைக்கு ஹேது -தயா ஷாந்திகள்
பச்சை யாக கொள்ளுகைக்கு ஹேது -வாத்சல்யம் –
சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத பசு -தன் கடையில் நின்றும் விழுந்த கன்றின் உடம்பில்
வழும்பை போக்யமாக விரும்புமா போலே -இருப்பது ஓன்று இறே இது –
இக் குணத்துக்கு ஒப்பதொரு குணம் இல்லை இறே-ஆகையால் இறே -நிகரில் புகழாய் -என்று ஆழ்வார் அருளி செய்தது –
உடையவரும் -அபார காருண்யா சௌசீல்ய வாத்சல்ய என்று குணாந்தரங்கள் உடன்
ஒக்க அருளி செய்தே -இதன் வ்யாவ்ருத்தி தோற்ற மீளவும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றார் இறே –
இவ் வாத்சல்யம் தான் மாத்ருத்வ சம்பந்தத்தாலே ஈச்வரனிலும் பிராட்டிக்கு
அதிசயித்து இறே இருப்பது –
ஆகையால் இருவரும் தம் தாம் அங்கீகரிக்கும் தசையில் இச் சேதனனுடைய
தோஷ குண ஹானிகளை பச்சையாக கொண்டு அங்கீகரிப்பார்கள் என்கை-

———————————————————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி புருஷகாரமும் -உபாயமும் -தோஷ குண ஹானிகள் குலைவதற்கு  முன்னே அங்கீகரிக்கிறது என் –
அவை குலைந்தே அங்கீகரிக்க கடவோம் என்று இருந்தால் வருவது என்என்ன -அருளி செய்கிறார் –

இரண்டும் என்கிறது -புருஷகார உபாயங்களை –
இரண்டும்  குலைய வேணும் என்று இருக்கை யாவது -இவனை அங்கீகரிக்கும் போதைக்கு இவனுடைய
தோஷ குண ஹானிகள் இரண்டும் -போய் கொள்ள வேணும் என்று நினைத்து
ஆஸ்ர்யேன உன்முகனாக இவனை அங்கீகரியாது இருக்கை-இப்படி இருக்கில் –
இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது -புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும்-தோஷ குண ஹானிகள்  இரண்டும் வருகை –
எங்கனே என்னில் -தோஷம் வருகை யாவது –
தவம் மாதா சர்வ லோகானாம்
தேவதேவோ ஹரி பிதா
அகில ஜகன் மாதரம்
பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய-என்கிறபடியே
சகல சேதனருக்கும் நிருபாதிக மான தாயும் தகப்பனும் ஆகையாலே இச் சேதனனுடைய நன்மை தீமைகள் இரண்டும்
தங்கள் தாம் படியான உறவு உண்டாய் இருக்க -இச் சேதனனுடைய
தோஷாதிகளை பார்த்து அங்கீகரியாமையாலே-தாத்ருசா சம்பந்தத்ததுக்கு-கொத்தை விளைகை-
குண ஹானி வருகை யாவது -இவனுடைய துக்கம் கண்டு இரங்காமையாலும் –
இவனுடைய தோஷத்தை போக்யமாக கொள்ளாமையாலும்-க்ருபா வாத்சல்யங்களுக்கு ஹானி வருகை –
அதவா –
இரண்டும் உண்டாய்த்தாம் -என்கிற இடத்திலும் -தோஷ குண ஹானிகள் ஆவன –
அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்கள் ஆகவுமாம்
புருஷகாரத்துக்கு அக்ருத்யகரணமாவது-ஈஸ்வரனையும் உள் பட தோஷம்
காண ஒட்டாத  தான் -தோஷாதிகள் குலைந்து அன்று அங்கீ கரியேன்-என்று இருக்கை-
க்ருத்ய அகரணம் ஆவது -இவனுடைய தோஷாதிகள் பாராதே -கை கொண்டு
ஈச்வரனோடு சேர்பிக்கை ஆகிற ஸ்வ க்ருத்யத்வத்தை செய்யாமை –
ஈஸ்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது-சம்சாரி சேதனருடைய தண்மையை பார்த்து கை விடாதே –
நித்ய -நிருபாதிக சம்பந்தம் அடியாக -அத் வேஷமே உண்டாக்குகைக்கு -எதிர் சூழல் புக்கு திரிகிற சர்வ பூத சூக்ருதனான தான்
இச் சேதனனை அங்கீகரிக்கும் அளவில் இவன் தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீகரியேன் என்று இருக்கை –
க்ருத்ய அகரணமாவது-இவனுடைய தோஷாதிகளை பாராதே கை கொண்டு ஸ்வ க்ருத்யமான
அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை பண்ணாமை –
இது தான் சேதனனுக்கு சொன்ன அக்ருத்ய கரணாதிகளை சாஸ்த்ரத்தை பற்ற சொல்லுகிறது அன்றே –
இவர்கள் ஸ்வபாவத்தை பற்றி சொல்லுகிற இவை இத்தனை இறே-விமுகரையும் உள் பட தோஷ குண ஹானிகள் பச்சையாக மேல் விழுந்து அங்கீகரிக்கும்
ஸ்வபாவரான இவர்களுக்கு -அபிமுக சேதனர்களை அங்கீகரிக்கும் அளவில் தோஷாதிகள்
குலைய வேணும் என்று இருக்கை தான் முதலிலே கூடாமையாலே இவர்களுக்கு இவை
வருகைக்கு அவகாசம் இல்லை இறே-ஆயிருக்க செய்தே இப்படி அருளி செய்தது –
இவ் அர்த்த தத்வம் அறியாதவர்களுக்கு ஆச்ராயண உந்முக சேதன கதங்களான
தோஷ குண ஹானிகள் குலைய வேணும் என்று இராமல் அவற்றுடனே அங்கீகரிக்கை
இவர்களுக்கு அவஸ்ய கரணீயம் என்று அறிவிக்கைக்காக

————————————————-

சூரணை-17
இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியோம் என்று இருக்கில்
அத் தலைக்கு அவை இரண்டும் வரும் என்னும் இடம் சொல்லி –
தோஷாதிகள் குலைய பட்டு அன்றோ நம்மை அங்கீகரித்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இவை இரண்டும் வரும் என்கிறார் மேல் –

இரண்டும்  குலைந்தது என்று இருக்கை யாவது –
இத்தனை நாளும் நம்மை அங்கீகரியாதவர்கள்-இன்று அங்கீகரித்தது -நம் தோஷாதிகள்
குலையைப் பட்டு அன்றோ -ஆகையால் நமக்கு அவை குலைந்தது என்று அநு சந்தித்து இருக்கை –
இப்படி இருக்கில் -இத் தலைக்கு இரண்டும் உண்டாகையாவது –
அக்ருத்ய கரணமும்-க்ருத்ய அகரணமும் வருகை –
எங்கனே என்னில் -இவ் வதிகாரிக்கு -அநாதி காலம் அங்கீகரியாதவர்கள் இன்று நம்மை
அங்கீகரித்தது நம்முடையதோஷ ஹானிகள் இரண்டும் குலைந்த வாறே அன்றோ
என்று அநு சந்திக்கை -அக்ருத்யமாய் இருக்க -அத்தை செய்கையாலும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -திரு வாய் மொழி – 3-3 -4-
அமர்யாத
புத்தவாச நோச
அதிக்ரம அந் நாஜ்ஞம்-இத்யாதிபடியே
நம்முடைய தோஷ குண ஹானிகள்  இப்போது அளவாக ஒன்றும் குலைந்தது இல்லை என்றும் –
இப்படி இருக்க செய்தே தோஷாதிகளே பச்சையாக நம்மை அவன் அங்கீகரித்து அருளுவதே
என்றும் அநு சந்திக்கை க்ருத்யமாய் இருக்க அத்தை செய்யாமையாலும்-இரண்டும் வரும் இறே

————————————————

சூரணை -18
ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இப்படி புருஷகாரமும் உபாயமும் -தோஷாதிகள் பச்சையாக அங்கீகரித்த இடம் உண்டோ
என்னும் அபேஷையிலே-தத் தத் அங்கீகாரம் பெற்ற ராஷசிகள் உடையவும் –
அர்ஜுனன் உடையவும் –
தோஷங்களை தர்சிப்பிக்கவே அது சித்திக்கும் என்று நினைத்து
ப்ரதமம் ராஷசிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

ஏகாஷி ஏக  கரணி முதலான ஏழு நூறு ராஷசிகளும் பரஹிம்சை பண்ண பெறில் உண்ணாதே
தடிக்கும் படி ப்ரக்ருத்ய  பாப சீலைகளாய்-பத்து மாசம் ஒரு படி பட்ட தர்ஜன பர்த்ச்னம் பண்ணி
நலிந்து போந்தவர்கள் இறே –
இவர்கள் தோஷம்  பிரசித்தம்-என்றது -ஸ்ரீ ராமாயணம் நடையாடும் தேசத்தில்
அறியாதார் இல்லை என்ற படி -ஏவம் பூதைகள் ஆனவர்களை குறித்து
ராஜ சம்ஸ்ரைய வச்யானாம் –பாபானாம் வா சுபானாம் வா -என்று
குற்றத்தை குணமாக உபபாதித்து -திருவடியோடே மன்றாடி –
ரஷிக்கையாலே -தோஷமே பச்சையாக அங்கீகரித்தமை
பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சை யாம் இடத்தில்
குண ஹானி பச்சை யாம் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே என்று –
இவர்கள் தங்களுக்கு குண ஹானி யாவது –
இடைவிடாது நலிந்து போகிற இடத்தில் இவளும் நம்மோபாதி ஒரு பெண் பிறந்தவள்
அன்றே என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சில் இரக்கம் உண்டாதல் –
பவேயம் சரணம் ஹி வ -என்றதற்கு பின்பு நலிகிற இடத்தில் -ஐயோ இப்படி சொன்னவள் அன்றோ –
என்று சற்றும் நெஞ்சு உளுக்குதல் செய்யாமை -முதலானவை –

————————————————

சூரணை-19
ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

இப்படி தோஷ பிரசுத்தி அர்ஜுனன் பக்கல் இல்லாமையாலும் -குண பிரதை உண்டாகையாலும் –
இவனுக்கு தோஷம் எது என்கிற சங்கையை அனுவதித்து கொண்டு தத் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

ஜிதேந்திரியரில் தலைவன் என்றது –
ஆரணச்ய ஆபரணம் பிரசாதன விதே பிரசாதன விசேஷ
உபமானாச்யாபி சகே பிரத்யுபமானம் வாபஸ் தஸ்யா -என்னும் வைலஷண்யம் உடைய
ஊர்வசி வந்து மேல் விழ முறை கூறி நமஸ்கரித்து கடக்க நின்றவன் ஆகையாலே
இந்திரிய ஜெயம் பண்ணினாரில் தனக்கு மேல் பட்டார் இல்லாதவன் -என்கை
ஆஸ்திக அக்ரேசன் -என்றது
தர்ம அதர்ம பர லோக சேதன ஈச்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில்
ப்ரமாண்ய புத்தி உடையவர்களுக்கு முன் நடக்கும் அவன் என்கை –
கேசவச்யாத்மா என்று கிருஷ்ணனுக்கு தாரகமாய் இருக்கிற -என்றது
அர்ஜுன கேசவச்யாத்மா கிருஷ்ணஸ் சாத்மா கிரீடின-என்று அன்யோன்யம் பிராண பூதராய்
இருப்பார்கள் என்கையாலே -இவனை பியில் கிருஷ்ணன் தரிக்க  மாட்டான் என்னும் படி
அபிமத விஷயமாய் இருக்கும் அவன் என்கை

இப்படி இருக்க -அர்ஜுனனுக்கு தோஷம் எது என்ற சங்கை -என்னில் -என்றது -அநு வாதம் -தோஷங்கள் தன்னை சொல்லுகிறது –
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும் -என்று –
இவற்றில் சிநேக காருண்யங்கள் தோஷங்கள் ஆகிறது -அஸ்தானே க்ருதங்கள் ஆகையாலே –
வத பீதி தோஷம் ஆகிறது -ஸ்வ தர்மத்தில் அதர்ம புதத்யா வந்தது ஆகையாலே –
அஸ்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம த்யாகுலம் -என்று இறே ஆளவந்தாரும் அருளி செய்தது –
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே சமவேதா யுயுத்சவ -என்கிறபடியே யுத்த இச்சையிலே இரண்டு தலையும்
வந்து அணைந்து நின்ற பின் -யுத்தமே கர்த்தவ்யமாய் இருக்க -அத் தசையில் –
ந கான்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் சூகாநிச கிம் நோ ராஜ்யேன
கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா ஏஷாமர்த்தே கான்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் சூகாநிச
த இமே வச்திதாயுத்தே ப்ரானான் த்யக்த்வா தநாநிச -இத்யாதி படியே
இவர்களை கொண்டு நான் ஜீவிப்பதொரு ஜீவனம் உண்டோ என்று பந்துக்கள் பக்கல்
பண்ணின சிநேகம் -ஸ்வ வர்ண வ்ருத்தம் ஆகையாலே நிஷித்தம் இறே –
தான் சமீஷ்ய  ச கௌ ந்தேயஸ் சர்வான் பந்தூ ந வஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் நித மப்ரவீத் -என்னும்படி
அத் தசையில் பண்ணின காருண்யமும் -பஸ்வா லம்பநத்தில் காருண்யம் போலே நிஷித்தம் இறே –
கதம்  நஞ்ஞேய மச்மாபி பாபா தஸ்மா ந் நிவர்த்திதம்  குலஷய
க்ருதம் தோஷம் பிரபச்யத்பிர் ஜனார்த்தன -என்று தொடங்கி-
அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவசிதா வயம்
யத் ராஜ்ய  சூகலோபேன ஹந்தும் ஸ்வ ஜன முத்திதா -என்னும் அளவும்
ஸ்வ வர்ண தர்மமான வாதத்திலே அதர்மபுத்த்யா பண்ணிய பீதியும் அப்படியே இறே

—————————————————-

-சூரணை-20
திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது
கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இவை எல்லாம் அப்ரதானம் -இன்னும் பிரதான தோஷம் வேறே என்கிறார் –

முன்பு திரௌபதியை துர்யோதநாதிகள் பரிபவிக்கிற படியை கண்டு இருக்க செய்தே –
சூதிலே தோற்றமையை நினைத்து -அதர்ம பீதியாலே பொறுத்து இருந்தாலும் –
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணாம் கதம் -என்று கிருஷ்ணனை சரணம் புகுந்த பின்பு
பரிபவிக்கிற அளவில் -பகவத் ஆஸ்ரயிரை பிறர் பரிபவிக்க கண்டால் சக்தன் ஆகில் விலக்க வேண்டும் –
அசக்தன் ஆகில் இழவோடஅவ்வருகே போக வேணும் என்னும் விசேஷ சாஸ்திர மரியாதை பார்த்தாதல் –
தன் அளவில் கிருஷ்ணனுக்கு உண்டான சிநேக பஷ பாதங்களை நினைத்து -அவனை சரணம்
புகுந்தவள் பரிபவிப்பட பார்த்து இருந்தால் அவன் முகத்தில் நாளை விழிக்கும் படி என்-என்றாதல் –
சரக்கென எழுந்து இருந்து விலக்க இறே அடுப்பது –
அத்தை செய்யாதே முன்புத்தையில் காட்டில் ஒரு விசேஷம் அற இருந்தான் இறே –
இதுவே ஆய்த்து இவன் தோஷங்கள் எல்லா வற்றிலும் பிரதானமாக கிருஷ்ணன் திரு உள்ளத்தில்
பட்டுக் கிடப்பது -அத்தை பற்ற -கிருஷ்ணன் அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் -என்கிறது –
தோஷத்துக்கு பிரதாந்யம் க்ரௌர்யத்தால் இறே –
அல்லாதவை போல் அன்றிக்கே -ந ஷமாமி -என்னும் படி யான தோஷம் இறே இது –

—————————————————-

சூரணை -21
பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க
வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

இத் தோஷத்தின் கொடுமையை உபபாதிக்கிறார் மேல் –
அன்றிக்கே இத் தோஷம் ஐவர்க்கும் ஒவ்வாதோ -ஆன பின்பு இத்தலையையும்
நிரசித்து பொகடாமல் வைத்தது என் என்கிற சங்கையில் அருளி செய்கிறார் ஆகவும்-

முற்பட சங்கதிக்கு அர்ஜுனனை என்னாதே -பாண்டவர்களையும் -என்றது இத் தோஷம் ஐவர்க்கும்
ஒக்கும் என்று தோற்றுகைக்காக என்று யோஜிக்க கடவது –
அனந்தர சங்கதிக்கு தானே தன்னடைவே சேரும் இறே
பரிபவித்த துர்யோதனாதி களோபாதி பரிபவம் கண்டு இருந்த இவர்கள்
நிரசநீயர் என்கிறது  -ச சப்தத்தாலே –
நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது -என்றது -இவர்கள் செய்த கொடுமைக்கு
தலையை அறுத்து பொகட வேண்டி இருக்க -பிராணனனோடே இருக்கும் படி -வைத்தது என்ற படி –
திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக -என்றது -அவளுக்கு அபிமதமான மங்கள சூத்ரம்
போகாமைக்கு என்ற படி -விரித்ததலை காண மாட்டாதவன் -வெறும் கழுத்து காண மாட்டான் இறே –
இத்தால் ஆஸ்ரிதரை பரிபவித்தோரோ பாதி அது கண்டு இருந்தாரும் நிரசன நீயர் என்னும் இடமும் –
அவர்கள் தாங்களே ஆஸ்ரிதர்க்கு விட ஒண்ணாத தொரு பந்தம் உடையார் ஆகில்
அவர்களுக்காக அவனால் ரஷிக்க படுவர் என்னும் இடமும் -பிரகடிதம் ஆய்த்து –

——————————————————–

சூரணை -22
அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

ஆனால் இப்படி நிரச நீயன் ஆனவனுக்கு இழி தொழில் செய்ததும்
பரம ரஹச்யத்தை உபதேசித்ததும் -என் செய்ய என்ன -அருளி செய்கிறார் –

தூது போய்த்தது-பொய் சுற்றம் பேசி நின்று பேதம் செய்து பூசல் விளைக்காக-பெரியாழ்வார் திருமொழி
சாரத்தியம் பண்ணிற்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது ஆகையாலே -கொல்லா மா கோல் கொலை செய்து
பாரத போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவிக்கைக்காக -திரு வாய் மொழி -3- 2- 3-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்று -ந யோத்ச்யாமி -என்று இருந்தவனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி
யுத்தே பிரவ்ருத்தன் ஆக்குகைக்காக –
இவை எல்லாம் செய்தது -சரணாகதையான இவள் சங்கல்பத்தின் படியே
துர்யோநாதிகளை அழிய செய்து இவள் குழலை முடிப்பைக்காக இறே –
ஆக அர்ஜுனன் திறத்தில் செய்த தூத்யாதி த்ரயமும் இவளுக்காக செய்தான் என்கிறது –
பாண்டவர்களையும் என்று தொடங்கி -இவ்வளவும் கீழ் சொன்ன பிரதான தோஷ
க்ரௌர்யமும் உபபாதிதம் ஆய்த்து -ஆக இப்படி
அஸ்தான ச்நேகாதிகளும் -சரணாகதை பரிபவம் கண்டு இருந்த மகா தோஷமும்
இவனுக்கு உண்டாய்  இருக்க –
சர்வ குஹ்யதமம் பூய –
ஸ்ருணுமே பரமம் வச –
இஷ்டோசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம் –
மன் மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்  குரு மமே வைஷ்யசி சத்யம் தே
பிரதி ஜானே ப்ரியோசி மே -என்று
இவன் அளவில் உகப்பு தோற்ற அருளி செய்கையாலே இவன் தோஷங்களை பச்சையாக கொண்டு
அங்கீகரித்தமை பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சையாம் இடத்தில் குண ஹானி பச்சை யாம் என்னும் இடம்
கிம்புனர் நியாய சித்தம் ஆகையாலே —
இவன் தனக்கு குண ஹானிகள் ஆவன –
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -என்று அருளி செய்த போதே –
கரிஷ்யே வசனம் தவ -என்று எழுந்து இருந்து ஸ்வ க்ருத்யமான யுத்தத்தை பண்ணாமையும் –
கிருஷ்ணனை சரணம் புகுந்தவளை பரிபவிக்க விட்டு பார்த்து கொண்டு இருந்தோமே என்னும்
அநு தாப லேசமும் நெஞ்சில் இல்லாமையும் தொடக்கமானவை –
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காகா வாகில்-
இவன் தோஷத்தை பச்சையாக கொண்டு அங்கீகரித்தான் என்னும் அது கூடாதே-என்னில் -அதுக்கு குறை இல்லை –
இவள் கார்யார்த்தமாக இவனை குறித்து இவை எல்லாம் செய்கிற இடத்தில் -இவன் தோஷங்களை
பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே -அர்ஜுனனை குறித்து ஆச்சார்யா க்ருத்யாதிகளை
ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அவன் தோஷத்தை பச்சையாக கொண்டும் -சாரதியாக புரை யற கலந்து நின்றும்
செய்கை முதலானவை உண்டாகையாலே –
அறியாத அர்த்தங்களை -இத்யாதியாலே -ஆஸ்ராயண சௌகர்ய ஆபாதங்களான வாத்சல்யாதி குணங்கள் சூசிதம் –
இங்கே -தூத்ய சாரத்வங்கள் பண்ணிற்றும் -என்கிற இத்தாலே –
அஸ்மாத் வேத்த பரான் வேத்த  வேத்தார்த்தம் வேத்த பாஷிதம் யத் யதஸ் மத்திதம்
கிருஷ்ண தத் தத் வாச்யஸ் சூயோதன -என்கிறபடியே
கார்ய அகார்யா ஞான னான   தான் போனால் அல்லது கார்ய சித்தி உண்டாகாது என்று
இத்தலையை ரஷிக்கைகாக தான் தூது போனமையும் –
ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்கையாலே -சாரத்யத்தில் ப்ரவர்தனாய் கொண்டு தேர் காலாலே
பிரதி பஷத்தை அழிய செய்தமையும்  தோற்றுகையாலே – ஆஸ்ரித கார்ய ஆபாதங்களான
ஞான சக்தி யாதிகள் சூசிதம் –
இன்னமும் -பிரதி பத்தி பண்ணிற்றும் -என்கையாலும்-சரம ஸ்லோகத்தில் -மாம்-அஹம் -என்கிற
பதங்களால் சொல்லப் படுகிற உபயவித குணமும் சூசிதம் இறே-
ஆகையால் புருஷகார வைபவம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ மத் பதார்த்தம் பிரகடிதமானவோபாதி –
உபாய வைபவம் சொல்லுகிற இடத்தில் நாராயண பதார்த்தம் பிரகடிதம் –
உபாயத்வம் -சொல்லுகையாலே -சரணவ் சரணம் -என்றதும் சூசிதம் –
ஆக -இதிஹாச ஸ்ரேஷ்டம் -என்று தொடங்கி -இவ்வளவும் -ஸ்ரீ இராமாயண மகா பாரத
உக்தங்களான புருஷகார உபாய வைபவங்கள் தத் தத் ஸ்வரூபங்களோடே விசதமாக பிரதி பாதிக்க பட்டது –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: