ஸ்ரீ வசன பூஷணம்— சூர்ணிகை 7/8– ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை -7
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

அநந்தரம் புருஷகாரத்தின் படிகளை விஸ்தரேன உபபாதிக்க கோலி-
பிரதமத்திலே புருஷகாரத்வதுக்கு அவஸ்ய அபேஷித குணங்களை
அருளி செய்கிறார் -புருஷகாரம் ஆம் போது என்றது புருஷகாரம் ஆம் இடத்தில் என்ற படி –
க்ருபையாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
பாரதந்த்ர்யமாவது பார அதீனத்வம் –
அனந்யார்கத்வமாவது-தத் வ்யதிரிக்த விஷய அனர்ஹத்வம் –
இவை புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் ஆனபடி என் என்னில் –
சேதனர் சம்சாரத்தில் படுகிற துக்கம் கண்டு பொறுக்க மாட்டாமல் -ஈச்வரனோடே இவர்களை
சேர்க்கைக்கு உடலான யத்னம் பண்ணுகைக்கு கிருபை வேணும் –
ச்வதந்த்ரனை வசீகரிக்கும் போது அனுவர்த்தனத்தாலே வசீகரிக்க வேண்டுகையாலே
பாரதந்த்ர்யம் வேணும் -நம்மை ஒழிந்த ஒரு விஷயத்துக்கு அர்ஹ்ம் இன்றியே நமக்கே
அதிசயகரமாய் இருக்கும் வஸ்து ஆகையாலே நம் கார்யம் அன்றோ சொல்கிறது என்று –
சொன்னபடி அவன் செய்கைக்கு உறுப்பாகையாலே-அனந்யார்ஹத்வம் வேணும் –
ஆகையிலே இறே மூன்றும் புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் இறே –
ஈஸ்வர கிருபையில் காட்டில் இவள் கிருபைக்கு விசேஷம் என் என்னில் -ஈச்வரனாவன் நிரங்குச
ச்வதந்த்ரனானவன் -நிக்ரஹா அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் கடவனாய் -சேதனர் கர்மங்களை நிறுத்து அறுத்து
தீத்துமவன் ஆகையாலே -அவனுடைய கிருபை ச்வாதந்த்ர்யத்தால் அமுக்கு உண்டு கிடந்தது –
ஒரோ தசைகளிலே தலை எடுக்க கடவதாய் இருக்கும் –
இவள் அனுக்ரஹா ஏக சீலை ஆகையாலே இவளுடைய கிருபைக்கு வேறு ஒன்றால் ஓர்
அபிபவம் இல்லாமையாலே -எப்போதும் ஒருபடிபட்டு இருக்கும் –
ஆகையால் இவளுடைய கிருபை கரை அழித்து இருக்கும் –
சம்பந்தத்தில் வியாவ்ருத்தி  போலே ஆய்த்து கிருபையில் வியாவ்ருத்தியும் –
இப்படி இருக்கையாலே இறே இவளை ஆஸ்ரயிப்பார்க்கு வேறு ஒரு புருஷகாரம்
வேண்டாது ஒழிகிறது-ஈஸ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்த்ர்யா  அனந்யார்ஹத்வங்களும்
ஸ்வரூப பிரயுக்தமான மாதரம் அன்றிக்கே -ஹ்ரீச்ச  தே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் –
விஷ்ணு பத்நீ -என்றும் சொல்லுகிற பத்நீ த்வ பிரயுக்தமாயும் –
அஹந்தா பிராமணாஸ் தஸ்ய சாகமச்மி சனாதநீ-என்றும்
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப நிரூபகத்வாதி சித்தமான அனந்யத்வ பிரயுக்தமாயும் இருக்கும் –
இப்படி இருக்கையாலே இறே அல்லாதார்க்கு அடைய மிதுன சேஷத்வமும் –
இவள் ஒருத்திக்கும் ததேக சேஷத்வமுமாய் ஆய்த்து –
இந்த அவ்யவதா நேன வுண்டான சம்பந்தத்தால்  இறே இவளுக்கு ஈஸ்வரனை வசீகரிக்கும்
அளவில் புருஷகாரம் வேண்டாது ஒழிகிறது –
இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங்  சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் -ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா  அனந்யார்கத்வங்கள்
இரண்டும் -ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –

சூரணை-8-
பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

இந்த க்ருபாதி த்ரயத்தையும் எல்லாரும் அறியும் படி தானே வெளி இட்டு அருளின வைபவத்தை
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விஹ்ரஹ பரிக்ரகம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே -ராகவத்வேபவத்  சீதா -என்கிறபடியே –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே -பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று –
தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே – காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக -என்கை -எங்கனே என்னில் –
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொபனம் கண்டத்தாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் –
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச  வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய்போகாமே -ராவண வாத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் -கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கு இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும் -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது -மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி
திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனா நி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாதமூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யே கராத்ரம் காகுத்ச்த   வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான  வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய –
அத்தை பற்ற  போக விடுவாரை போலே -லோக அபவாத  பரிகார்த்தமாக –
பெருமாள் காட்டிலே  போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடையபத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-
கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே பெருமாள் நினைவை பின் சென்று தன பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையே பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத்  பார்த்து கார்யம்  விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே

-அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்
பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசெஷஞர் எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே -அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில் கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட -அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே – சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசி நீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –
யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –
ததா சபந்த்யாம்  வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை  நா மாசனே  சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று
அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க -ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது
என்கையாலே -இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறேஆக –
இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-இங்கன் அன்றாகில் -அநபாயி நியாய்-அகர்மவச்யையாய் –
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி  பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —
தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் -புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று
பட்டர் அருளி செய்தது -இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –
சாஸ்த்ரங்களில் கேட்கிற மாதரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: