ஸ்ரீ வசன பூஷணம்- சூர்ணிகை –5/6..-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

முதல் பிரகரணம்-புருஷகார வைபவம்
சூரணை -5
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –
முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே -வேத தத் அர்த்த தத் உப ப்ரும்கனங்களை
சாகல்யேன உபாதானம் பண்ணி -அந்த வேதத்தினுடைய பாக விபாக தத் உப ப்ரும்கன
விபாகங்களையும் பண்ணினாரே ஆகிலும் -செதனருடைய உஜ்ஜீவனத்துக்கு அபேஷித அர்த்தங்களை
அருளி செய்ய இழிந்தவர் ஆகையாலும் -அது தான் பூர்வ பாக வேத்யம் அன்றிக்கே -உத்தர பாக
வேத்யம் ஆகையாலும் -பூர்வ பாகத்தில் முமுஷுவுக்கு ஞாதவ்ய அம்சம் உள்ளதும் -உத்தர பாக
அர்த்தங்களான ஸ்வரூப  உபாய புருஷார்த்த பிரதிபாதன ஸ்தலங்களிலே -தத் தத் அனுகுண
த்யாஜ்யுபாதேய கதன முகேன ஞாபிகலாய் இருக்கையாலும் -உத்தர பாக அர்த்த நிர்ணயத்திலே –
ப்ரவர்த்தராய் -அது தன்னிலும் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவத் உபாசானாதிகளையும்
பரக்க நின்று பிரதிபாதிக்கிற இடங்களில் -சார அசார விவேக பூர்வகமாக தாத் பர்யங்களை சந்க்ரகித்து –
சம்சய விபர்யாயம்  அற செதனருக்க்கு பிரபத்தி விஷயமாம் படி அருளி செய்து செல்லுகிறார் மேல் –
அதில் பிரதமத்திலே உத்தர பாக உப ப்ரும்கன த்வயத்தில் பிரபலமாக சொன்ன இதிகாசங்களில் வைத்து கொண்டு
ஸ்ரீ ராமாயணத்தினுடைய பிராபல்யத்தை பிரகாசிப்பியா நின்று கொண்டு தத் பிரதிபாத்ய விசேஷத்தை அருளி செய்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்துக்கு இதிஹாச ஸ்ரேஷ்டத்வமாவது -வால்மீகயே மகர்ஷயே சந்தி தேச
ஆசனம் தத பிராமணா சமனுஜ்ஞாதஸ் சோப்யு பாவிசத சனே-என்று சகல லோக பிதாமஹானான
பிரஹ்மாவாலே சம்பாவிதனான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரநீயதம் ஆகையாலும் –
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்று -பர்மா அநு க்ரகிக்கையாலே இதில் சொன்ன
அர்த்தங்களை எல்லாம் மெய்யாக கடவதாகையாலும் -தாவத் ராமாயண கதா லோகேஷூ பிரசர்ஷயதி -என்று
சகல லோக பரிக்ரகம் உண்டாகையாலும் -இதிஹாசாந்தரங்களை பற்ற பிரபல பிரமாணமாய் இருக்கை-இது தன்னை
நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தத்தவத்ரய பிரபந்தத்தில் பிரமாண அதிகாரத்திலே அருளி செய்தார் இறே-
இன்னமும் வேத வேத்யே பரே பும்சி-இத்யாதி படியே சர்வச்மாத்பரனான சர்வேஸ்வரன் சம்சாரி சேதன ரஷன அர்த்தமாக
இதர சஜாதீயனாக வந்து அவதரித்தால் போலே -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான வேதமும் -தத் அவதார குண சேஷ்டித
பிரதிபாதன முகேன-தத் ஆச்ரயண ருசியை சம்சாரிகளுக்கு உண்டாக்கி ரஷிக்கைகாக ஸ்ரீ ராமாயண ரூபேண அவதரித்தது என்று
சொல்லப் படுகையாலும் -இதனுடைய ஏற்றம் சம்ப்ரதிபந்தம் –
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக -தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி
மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது – அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் -சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே -ஆஸ்ரிதரான தேவர்கள்
உடையஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –
இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷன அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது  என்னும் இடம் -காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம்
சீதாயாஸ் சரிதம் மஹாத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண  மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர்

அநந்தரம் மகாபாரத பிரதிபாத்யத்தை அருளி செய்கிறார் -மகா பாரதத்தால் என்று தொடங்கி –
க்ருஷ்ணத் வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும் கோக்யந்தோ புவி மைத்ரேய மகாபாரத
க்ருத் பவேத் ஏவம் விதம் பாரதந்து  ப்ரோக்தம்  யேன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபி மகா முனி –
என்று பகவத் ஆவேச அவதாரமாய்-சஹோவாச வியாச பாராசர்ய-என்று ஆப்த தமனாக பிரசித்தமாய்
இருந்துள்ள -ஸ்ரீ வேத வியாச பகவானாலே -வேதான் அத்யாபயாமாச ,அகா பாரத பஞ்சமாத் -என்கிறபடி –
பஞ்சம வேதமாய் -பரணீ தமாய் -அநேக புராண பிரசச்தமாய் இருந்துள்ள மகா பாரதமும் ஸ்ரீ ராமாயணத்தோ பாதி
பிரபல பிரமாணம் -இதுவும் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தாமே அருளி செய்தார் -பெரிய பட்டரும் ஸ்ரீ சஹஸ்ரநாம
பாஷ்ய உத்போதகத்தில் ஸ்ரீ இராமாயண வந் மகா பாரதம்  சரணம் -என்று அருளி செய்தார் இறே
சர்வேஸ்வரன் -என்னாதே -தூது போனவன் -என்றது அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேவதேவனானவன் தன்பெருமையையும் -செய்கிற தொழிலின் தண்மையையும் -பாராதே –
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்தது-
ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாய் இறே -இது தான் இவனுடைய ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதாக நீர்மைக்கு
உடலாய் இருந்துள்ள வாத்சல்யாதிகளுக்கு எல்லாம் பிரகாசமாய் இருப்பது ஓன்று இறே –
இந்த குண ஆதிக்யத்திலே ஈடு பட்டு இறே -இன்னார் தூது என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்றும்
குடை மன்னர் இடை நடந்த தூதா –பெரிய திரு மொழி -6-2-9–என்றும் –
திரு மங்கை ஆழ்வார் அருளி செய்தது  அந்த திவ்ய சூக்தி இறே இவர் இப்படி அருளி செய்கைக்கு மூலம் -பேசிற்றே பேசுகை இறே இவர்களுக்குஎற்றம் –
தூது போனது தண்மை ஆவது -கர்மவச்யத்தை அடியாக வரிலே இறே –
ஐ ச்சமாக ஆஸ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சி எல்லாம்
ஏற்றத்துக்கு உடலாய் இறே இருப்பது -ஸ உச்ரேயான் பவதி ஜாயமான -என்று
பரார்தமாக பிறக்கையாலே நிறம் பெரும்யென்று சுருதி சொன்ன இது பர்ரர்தமாக
தன் இச்சையிலே செய்யும் அவை எல்லாம் இவனுக்கு தேஜஸ் கரம் என்னும் அதுக்கு உப லஷணம் இறே –
இவன் செய்த தூத்யத்தை மாந்த்ய ஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலை யானவர்கள் இத்தனை –
அறிவில் தலை நின்றவர்கள் -எத்திறம் -என்று மோகிக்கும் படி இறே இருப்பது -இப்படி இருந்துள்ள
இந் நீர்மையின் ஏற்றத்தை -வெளி இடுகைக்காக ஆய்த்து இவர் -தூது போனவன் -என்று அருளி செய்தது –
மகா பாரதம் எல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தாத் பர்யம் ஆகையாலே இறே
மகாபாரத கதை சொல்ல தொடங்குகிறவன் -நாராயண கதாம் இமாம் -என்றது –
ஆக பிரபந்த த்வ்யத்துக்கும் பிரதான பிரதிபாத்யங்கள் என்னது என்னும் இடம் பிரகாசிக்க பட்டது –

———————————————-

சூரணை-6
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

உபய ப்ரக்மன முகேன -வேதார்த்த தாத்பர்யத்தை நிஷ்கரித்து -உஜ்ஜீவனதுக்கு உடலான வற்றை
சொல்லுவதாக இறே உபக்ரமித்தது -அதில் இப்போது சொன்ன இவற்றால் வேதாந்தத்தில் எவ் அர்த்தங்கள்
சொல்லிற்று ஆய்த்து -என்னும் காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிறை இருந்தவள் ஏற்றம்-தூது போனவன் ஏற்றம் -என்ற இவை இரண்டாலும் அபராத பூயிஷ்டரான
சேதனருக்கு ஆஸ்ரயநீயை யாம் அளவில் -அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் -க்ருபாதிகளாலும் –
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -வந்து ஆஸ்ரயிகலாம் படி யாய்-அபராதங்களை பார்த்து சீறி –
ஷீபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும் –
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-
என் அடியார் அது செய்யார் -என்று மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்
உபாய பூதனானவன் வைபவமும் சொல்லிற்று ஆய்த்து என்கை-
புருஷகாரம் -என்றும் -உபாயம் -என்றும் -இவற்றை நிரூபகமாக அருளி செய்தது –
பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -அசாதாரணம் என்று தோற்றுகைக்காக-
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் -என்றும் –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன
மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன
மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
மற்றை பிராட்டிமாருக்கும் சூரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற
புருஷகாரத்வம் இறே உள்ளது -இவளை போலே ச்வதஸ் சித்தம் அன்றே –
ஆகை இறே –
ஏதத் சாபேஷ சம்பந்தா தன்யேஷா மாமலாத்மனாம்
தேவி சூரி குரூ னாஞ்ச கடகத்வம்  நது ஸ்வத-என்று தீப சங்கரத்திலே ஜீயர் அருளி செய்தது
உபாயத்வமும் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமாக சொல்லப் படுகிற
அவனுக்கே ச்வதஸ்  சித்தமாய் -ததீயருக்கு ததா சித்தி அடியாக வருகிறது இறே உள்ளது –
ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -நிரூபகமாக
தட்டு இல்லை -இவ் அர்த்தத்தை வெளி  இடுகைக்கு ஆய்த்து இவர் இப்படி அருளி செய்தது –
இப்படி உப ப்ரஹ்மணமான பிரபந்த த்வ்யத்தாலும் பிரதி பாதிக்க படுகிற புருஷகாரத்வமும் உபாயத்வமும்
உப ப்ரும்ஹ்யமான  வேதாந்தத்தில் உக்தமான ஸ்தலம் எது என்னில் கடவல்லி உபநிஷத் சித்தமான
த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே உபயமும் சேர உக்தம் இறே -இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம்
உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயனதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமானவாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை
அன்றிக்கே -கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும் குற்றவாளர்க்கும் கூசாமல்
வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்-பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தொடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூரதண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன்  அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: