ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–2/3/4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

சூரணை-2
ச்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக்  கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

இவற்றில் எத்தாலே எந்த பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது என்ன -அருளி செய்கிறார் –
உப ப்ரும்ஹ்யமான  வேதத்துக்கு பிரதிபாத்ய அர்த்த விசேஷத்தாலே இறே பாத பேதம் உண்டாய்த்து –
அப்படியே உப ப்ரும்ஹணங்களாயும்  பிரதிபாத்ய விசேஷத்தாலே பேதம் உண்டு இறே –
அதில் ஸ்ம்ருதிகள் பூர்வ பாக உபப்ரும்ஹணங்களாயும் -இதிகாசாதிகள்  உத்தர ப்ரும்ஹணங்களாயும் 
நிர்மிதன்கள் ஆகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களாயும்  கொண்டே தத் பாக அர்த்தம் நிச்சயம் பண்ண
வேண்டி இறே இருப்பது –
அத்தை பற்ற ஆசார  வ்யவஹார ப்ராயசித்தாதிகளுக்கு பிரதிபாதங்களான இதிஹாச புராணங்கள்
ஆகிற மற்றை இரண்டாலும் -பிரம பிரதிபாதகமான உத்தர பாகத்தில் அர்த்தம் நிச்ச்சயம் பண்ண கடவது என்கிறார் –
இப்படி உபய விதமான உப ப்ரும்ஹணங்களாயும்  உபய பாக அறத்தையும் அறுதி இடுகை யாவது –
அநதீத சாகாந்தரங்களுக்கும் பிரதிபாதகங்கள் ஆன இவற்றாலே அதீத சாகார்த்தங்களை அபேஷித விசேஷங்கள் கூடே
நிச்சயிக்கை -ஸ்ம்ருதிகள் தன்னிலே பிரம பிரதிபாதனமும் -இதிகாசாதிகளிலே கர்ம பிரதிபாதனமும்
உண்டாய் இருந்ததே ஆகிலும் –ஸ்ம்ருதிகளில் பிரம பிரதிபாதனம் கர்மங்களினுடையதத் ஆராதன
ரூபத்வ ஞாபன அர்த்தமாகவும் -இதிகாச புராணங்களில் கர்ம பிரதிபாதனம் கர்மங்களினுடைய உபாசன
அங்கத்தவ ஞாபன அர்த்தமாகவும் ஆகையாலே -இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை –
பரா யேன பூர்வ பாகர்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத
இதிகாச புரானாப்யாம் வேதந்தார்த்த பிரகாச்யதே -என்ன கடவது இறே –
சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

உத்தர பாக உப ப்ரக்மன த்வ்யத்துக்கும் தாரதம்யம் உண்டோ -தன்னில் ஒக்குமோ -என்கிற
சங்கையில் அருளி செய்கிறார் மேல் –
அன்றிக்கே –
ஏக பாக விஷயமான இரண்டு உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னத்துக்கு பிராபல்யம் என்னும் அத்தையும்
தர்சிப்பிக்க வேணும் என்று தாமே திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் ஆகவுமாம்

இவை இரண்டிலும் என்று தொடங்கி -அதாவது -ஸ்ரேஷ்ட பாக உப ப்ரும்ஹண தயா வந்த சேர்த்தியை
உடைத்தான இவை இரண்டிலும் வைத்து கொண்டு – ப்ரும்ஹணயத்தால் வந்தால் புராணத்திலும்
இதிகாசத்துக்கு பிராபல்யம் உண்டு என்கை-புராணத்தில் காட்டில் இதிகாசத்துக்கு பிராபல்யம் –
பரிக்ரக அதிசயம் -மத்யஸ்ததை-கர்த்துராப்த தமத்வம் -ஆகிய இவற்றாலே –
இவற்றில் பரிக்ரகம் ஆவது –சாஸ்திர பரிக்ரகம் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே  தசரதாத்மஜே  வேத ப்ராசேதசா தாசீத் சாஷாத் ராமாயனாத்மனா-
மதி மந்தா நமாவித்ய யேனாசொவ் சுருதி சாகராத் ஜகத்திதாய ஜநிதோ மகாபாரத சந்த்ரமா
வியாச வாக்ய ஜலவ்கேன குதர்மத ருஹாரினா வேத சைலா வதீர்னே ந நீர ஜஸ்கா மஹி க்ருதா
பிபேதி  கஹனாச் சாஸ்த்ரான் நரஸ் தீவ்ராதி  வவ்ஷதாத்  பாரதஸ் சாஸ்திர சாரோயம் அத
காவ்யாத்மனா கருத விஷ்ணவ் வேதேஷூ வித்வத்சூ குருஷூ பிராமனேஷூ ச பக்திர்பவதி
கல்யாணி பாரததேவ தீமதாம் -இத்யாதிகளாலே புராண விசேஷங்களிலே இதிஹாசம்
ச்லாகிக்க படா நின்றது இறே –
மத்யஸ்தை யாவது – யஸ்மின் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் பிராமணா புராதஸ்ய தச்யஸ்து மகாத்மியம்
தத் ஸ்வரூபென வர்ண்யதே-என்று சர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் பிரம்மாவாய்-அவனுக்கு
யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தால் யாதொரு குணம் விஞ்சி இருந்தது -அந்த குண அநு குண
தேவதையினுடைய  மகாத்ம்யத்தை புராணத்திலே சொல்லுகையாலே பஷா பாதிகளாய் இருக்கும்
புராணங்கள் போல் அன்றிக்கே -லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயித்திலே அதிக்ருதங்கள் ஆகையாலே
ஒரு விஷயத்திலும் பஷ பாதம் இன்றிக்கே இருக்கை–
கர்த்து ஆப்த தமத்வமாவது -பிரபன்ன கர்த்தா வானவன் –யாதா தர்சன
சாமர்த்தத்தையும் யதா த்ருஷ்டார்த்த வாதித்வத்தையும் மிகவும் உடையவனாய் இருக்கை –
அதேதிஹாச புராண யோரிதி ஹாசா பலியாம்ச குத தேஷாம் பரிஹ்ரகாதி குத தேஷாம்
பரிக்ரஹாதி சயாதிகளாலே புராண இதிகாசம் பிராபல்யம் சாமான்யேன தத்வ நிர்ணயத்திலே
உய்யக் கொண்டாராலும் -மகா பாரதம்ஹி பரிக்ரஹ விசேஷாவசிதம்-என்று தொடங்கி-தர்மே சார்த்தேச
காமேச மோஷச பரதர்ஷப  யதிஹாச்தி ததனயத்ரா யன் நேஹாச்தி ந தத் க்வசித் –
இதி லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேன க்வசிதபி  அபஷ பாதித்வாச்ச
புரானேப்யோ பலவத்தரம் -என்னும் அது அளவாக –
பரிக்ரஹ அதிசயத்தாலும் -மத்யஸ்தை யாலும் -புராணங்களில் காட்டில் இதிஹாச விசேஷமான
மகாபாரதத்துக்கு உண்டான பிராபல்யம் ஸ்ரீ சஹச்ர நாம பாஷ்யத்திலே பட்டராலும் பிரதிபாதிக்கபட்டது இறே –
சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –
அதின் பிராபல்யத்தை இசைவிக்கிறார் –
அந்த ப்ராபல்யத்தாலே -இதிஹாச புராணம் பஞ்சமம் –
இதிஹாச புரானாப்யாம்-என்றும் –
சுருதி ச்ம்ருதிகளிலே இரண்டையும் சேர சொல்லுகிற அளவில் –
இதிஹாசமானது புராணத்துக்கு முன்னே சொல்லப் பட்டது என்கை –
த்வந்த்வ  சமாசத்திலே -அல்பாச்தரமாதல் -அப்யர்ஹிதம் ஆதல் -இறே முற் படுவது –
அதில் அல்பாச்தரம் அன்றியிலே இருக்க அது முற் பட்டது அப்யர்ஹிதத்தாலே இறே –
இந்த அப்யர்ஹிதத்துக்கு மூலம் அதி பிராபல்யம் என்று கருத்து –
அதவா –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே என்று -பாகத்வய   உபப்ரும்ஹணங்களாயும் சமஸ்தமாக
சொல்லுகிற இடத்தில் –
இதிஹாசச்ச புராணா நிச இதிஹாச புராணா நி  சம்ர்தயச்ச இதிஹாச புராண நிச ச்மர்த்தீதிஹாச
புராணா நி -என்று இப்படி சமாச விவஷை ஆகையாலே -அல்பாச்தரமான புராணத்துக்கு
முன்னே இதிகாசத்தை அருளி செய்ததின் கருத்தை -இவை இரண்டிலும் -இத்யாதியாலே
அருளி செய்கிறார் ஆகவுமாம்–
இந்த யோசனையில்-அத்தாலே அது முற் பட்டது -என்கிற இதுக்கு அந்த ப்ராபல்யத்தாலே –
இதிஹாச புராணங்களாலே -என்கிற இடத்தில்  புராணத்துக்கு முன்னே இதிகாசம் சொல்லப் பட்டது
என்று பொருளாக கடவது –
ஆக
வேதார்த்தம் நிர்ணயம் பண்ணும் அளவில் தத் உப  ப்ரும்ஹணங்களாலே பண்ண வேணும் என்றும் –
அதில் பூர்வ உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னது என்றும் -உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாலே
இதிஹாச புராணங்களில் இதிகாசம் பிரபலம் என்றும் அருளி செய்கையாலே
மேல் தாம் அருளி செய்ய புகுகிற அர்த்தங்களுக்கு பிரமாணம் ஒருங்க விட்டு அருளினார் ஆயத்து –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: