ஸ்ரீ திரு விருத்தம் -44-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(கீழே திரு நிறம்
இதில் அவன் வைபவம் பெருமை
பத்துடை அடியவர்க்கு எளியவன் -மற்றவர்க்கு அறிய வித்தகன் அன்றோ
அத்வேஷம் ஆரம்ப நிலையே போதும்
முயற்சியால் அடைய முடியாது இதில் -இதுவே அறிய வித்தகன்
எழில் உரு பேசும் பாசுரம் கீழ் -ரூபம்
இது ஸ்வரூபம் -வைபவம் பேசும் –
குண உப ஸம்ஹார பாதம்
32-ப்ரஹ்ம வித்யை
இன்ன குணம் இனைய குணம் த்யானம்
எல்லா குணங்களும் இருந்தாலும் ஓன்றைப்பிடித்து தியானிக்க -அத்தையும் முழுக்க அறிய முடியாதே –
தஹர வித்யை உபாசகர்
ஸத் வித்யை உபாசகர்
இவர்கள் ஞானச் சமயிகள் -முனி பேர் -குணம் -இவை இவை என்று பேசினாலும்
அற -முழுவதுமாக அனுபவிக்க முடியாதே
ஞானத்துக்கு மட்டும் விஷயம்
அனுபவம் அவன் கொடுத்தால் தானே உண்டு )

அவதாரிகை —
மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் –
அவன் விஷயம் எட்டாதோ என்ன –
அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –
(எம்பிரான்-எனக்கு உபகரித்தவன் -அவன் காட்டக் காணலாம் )

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால்
சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தை யுடைய
வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப் பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்  –

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —

ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –

ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –

பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )

சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –

கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –

(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )

ராஜாக்கள் வெற்றிலையை விலக்குதல்–பால் குடியோம் என்னுதல் செய்வார்கள் –
இன்ன கோட்டை அழித்தால் அன்றி -என்று திரிவாரை போலே –

ஒன்றும் அறியாதே
காட்டில் திரியக் கடவ குரங்குகளும் அனுபவிக்கும் படி –
பெருக்காறு போலே இவ் வெறும் புறத்தில் அழகை கொள்ளை யூட்டிக் கொள்ளுகிறது என் –
(ஆபரணம் தடுப்பு அணை போல் என்றவாறு )

பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –
மகர நெடும் குழைக் காதர் போல –

திரு மலை நம்பி-(பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் -பிள்ளை திரு மலை நம்பி)
அந்திம தசையில்
கணியனூர் சிறியாத்தானை-
பிள்ளை (பட்டர்)தமக்கு  தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் –
அத்தை சொல்ல வேணும் -என்ன –

இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று
கூசி இரா நிற்க –

தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன

நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் போருவர் –
ஆகிலும் விரும்பி இருப்பது
அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன

பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது –
ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது போக்கி தஞ்சம் இல்லை -என்று
அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று
திரு நாட்டுக்கு நடந்தார் –

(நா அகாரியம் சொல்லில்லாதவர் அவதாரிகையில் இந்த ஐ திக்யம் உண்டே
ஆச்சார்ய திரு நாமம் சொல்லாதது நாவுக்கு அக்காரியம் என்றவாறு
பஞ்சம உபாய நிஷ்டர் -கணியனூர் சிறியாத்தான்)

கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர்

ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க
பட்டர் எழுந்து அருளி
செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன
பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத் திரு நாமத்தைச் சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார்  – 

உருவும் –
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –
நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன
வைகுண்டத்திலே  சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு
இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன் -என்றார் –
(இதே விஷயம் பட்டரும் அருளிச் செய்ததாகவும் உண்டே )

பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையை கடுக்கி (விலக்கி )திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –
நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் –
திரு நாம தழும்பும் இழக்கிறேனாக  கருதி அஞ்சா நின்றேன் -என்றார்

(அரும்பதம்
பெருமாள் காட்டி
அஞ்சினாயோ என்று கேட்டு அருள
பரமபதம் போவதும் அஞ்சினாயோ
அதில் பயம் இல்லை -சங்கையும் இல்லை
வைத்த அஞ்சல் என்ற கை இருக்க அஞ்சுவேனோ )

உருவும் -வடிவழகும் –
இவை இவை என்று –
இது ஓர் ஒப்பனையே –
இது ஒரு திரு நாமமே –
இது ஓர் அழகே -என்று –

அறமுயல் –
அறத்தில் முயலா நின்றுள்ள –
(உபாயாந்தர நிஷ்டர்கள் )

ஞான சமயிகள் –
தஹர வித்தை –
சாண்டில்ய வித்தை –
சத் வித்தை இவற்றாலே யனவரத பாவனை பண்ணி-பக்தி நிஷ்டனாய் –
அந்த ஸ்நேஹத்தாலே ஓர் ஓன்று அனுபவித்து –
அதுக்கு அவ்வருகு போக மாட்டாதே-இருக்கும் அவர்கள் –

பேசிலும் –
சொல்லப் புக்கார்கள் ஆகிலும் –

அங்கு அங்கு எல்லாம் –
அவ்  ஒப்பனையிலும் –
திரு நாமத்திலும் –
வடிவிலும் –

உற-
கிட்ட –

உயர் ஞான சுடர் விளக்காய் நின்றதன்றி –
மிக்க ஞான பிரகாசத்தை உடையரான மாத்திரம்  அன்றி –
எம்பிரான் பெருமையை ஒன்றும் பெற முயன்றார் இல்லையால் –
தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை
ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை என்று அந்வயம்-

(தாத்பர்யம்

சவுந்தர்யாதிகள் நினைக்க அரிது ஆனால் போல்
அவனை சாஷாத்கரிக்கவும் அரிது
கர்மயோகம் ஞான யோகங்கள் ஆகிற அங்கங்கள் யுடன் -பக்தி யோகமும் -பண்ணி
நிர்மல அந்தக்கரணமாய்
அவனது பேரையும் உருவத்தையும் சேஷ்டிதங்களையும்
அறிந்து
பிறருக்கு உபதேசித்தாலும்
அவன் கிருபை இல்லாமல்
அவனைக் கிட்டி அனுபவிக்க இயலாது என்கிறார் )

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: