சூரணை-1–வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..
பிரமாதா வானவன் பிரமாணத்தை கொண்டு இறே ப்ரமேயத்தை நிச்சயிப்பது ..அந்த பிரமாணம் தான் பிரத்யஷாதி ரூபேண அஷ்ட விதமாக சொல்லுவார்கள்..அதில் ப்ரத்யஷ மேகன்சார்வாக-இத்யாதியாலே சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டிகளை போல் அன்றிக்கே ப்ரத்யஷ அநுமான ஆகமங்கள் மூன்றையும் ,பிரமாண தயா அங்கீகரித்து உபமாநாதி பஞ்சகத்தையும் ( உபமாநம் ,அருத்தாபத்தி ,அபாவம், சம்பவம், மற்றும் ஐதீகம் )அவற்றிலே யதாயோகம் அந்தர்பவித்து,,அவற்றில் ப்ரத்யஷம் இந்த்ரிய கிரகண யோக்யங்களிலும் அநுமானம், ப்ரத்யஷம் ,ஸித்த வ்யாப்தி கிரகண அநுரூபமான கதி பயபரோஷார்தங்களிலும் பிரமாணம் ஆகவும் அதீந்த்ரி யார்த்ததில் சாஸ்திரமே பிரமாணமாக வும் நிஷ்கரித்து அது தன்னிலும் வேதே கர்த்ராத்ய பாவாத் பலவதி ஹி நயைஸ் த்வன்முகே நீயமாநே தன மூலத்வேன மாநம் ததி தர தகிலம் ஜாயதே -( ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம்-14 ) என்கிற படி ஸ்வ பிரமாண்யத்துக்கு மூல சபேஷமான பௌருஷேய சாஸ்த்ரத்தை பற்றாசாக பிரமாணம் உடைய வேதமே பிரபல பிரமாணம் ஆகவும் அறுதி இட்டு இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே இப் பிரபந்தங்களில் தாம் அருளி செய்கிற அர்த்தங்கள் எல்லாம் வேத பிரதி பாத்யம் என்னும் இடம் தோற்ற முதலிலே வேதத்தை பிரமாணமாக அங்கீகரித்து கொண்டு ததர்த்த நிர்ணயம் பண்ணும் க்ரமத்தை இவ் வாக்யத்தாலே அருளி செய்கிறார்..
அகில ஹேய பிரத்யதீகத்வ கல்யாணைக தானத்வங்களால் ஈஸ்வரன் அகில ப்ரமேய விலஷணனாய் இருக்குமா போல இறே அபௌருஷேயத்வ நித்யத்வங்களால் வேதம் அகில பிரமாண விலஷணமாய் இருக்கும் படி ..வேதத்தின் உடைய அபௌருஷேயத்வம் -வாசா விரூப வித்யயா–இத்யாதி சுருதியாலும் அநாதி நிதனாஹ்யேஷா வாகுச்த்ருஷ்டா ஸ்வயம்புவா ஆதவ் வேத மயீ திவ்யா யதாஸ் சர்வா ப்ரசூதய -இத்யாதி ச்ம்ருதியாலும் ப்ரிதிபாத்திக்க படா நின்றது இறே..இந்த சுருதி ஸ்ம்ருதிகள் வேத நித்தியத்தை சொல்லுகையாலே தத் பௌருஷேத்யத்வமும் சித்தம் இறே..அதேவ பரம விபர லம்ப ப்ரமதா சக்தி ரூப தோஷ சதுஷ்டய சம்பாவன கந்த ரஹீதமாய் இருக்கும் பௌருஷயத்வம் இறே அவை வருகைக்கு மூலம்..இப்படி இருக்கையாலே இதுக்கு மேம்பட்ட ஒரு சாஸ்திரம் இல்லை ..ஆகையாலே இறே -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ,ந தைவம் கேசவாத் பரம் -என்று ஐதிகாசகராலும் பௌராணிகராலும் ஏக கண்டமாக சொல்லப் பட்டது ..இதன் ஏற்றம் எல்லாம் திரு உள்ளம் பற்றி இறே –சுடர் மிகு சுருதி -என்று நம் ஆழ்வார் அருளி செய்தது ..அவரை பின் செல்லுபவராய் அபியுக்த அக்ரேசரான பட்டரும் -ஆதவ் வேதா : பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்றார் இறே ..
இத்தை வேதம் என்கிறது வேதயதீதி வேத : என்கிற வ்யுக்பக்தியாலே புபுஷூ க்களாய்–ஆச்திகராய் இருப்பாருக்கு ஸ்வார்த்த பிரகாசமாய் இருக்கையாலே ..இப்படி இருந்துள்ள-வேதம் தான் பிரதிபாத்யார்த்த விசேஷத்தாலே பாகத்வயாத்மகமாய் இருக்கும் .
.அத்தை இவ் இடத்தில் உபயபாக சாமான்யவாசியான வேத சப்தத்தாலே சாகல்யேன சொல்கிறது ..
..ஆகையாலே பாக துவயத்துக்கும் பிரதிபாத்யம் ஆராதனா ரூபமான கர்மமும் ,ஆராத்ய வச்துமான ப்ரஹ்ம இறே..
கர்மத்தின் உடைய பாகவத ஆராதநத்வம்
-ச ஆத்மா அங்கான் அன்யா தேவதா -என்று அக்நீத்ராதி சகல தேவதைகளும் பகவத் சரீர பூதராக சாஸ்திரம் சொல்லுகையாலே சித்தம் இறே .
.இவ் ஆகாரம் அறியாதார் அவ்வோ தேவதா மாத்ரங்களையும் உத்தேசித்து பண்ணும் கர்மமும் ,வச்துகத்யா பகவத் ஆராதநமாக தலை கட்டும்.
.யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மானான்சஹூதாச்னான் சர்வ பூதாந்த்ர ஆத்மாநாம் விஷ்ணு மேவ யஜந்தி தே-என்ன கடவது இறே
..யேப்அன்ய தேவதா பக்தா யஜந்தே ச்ரத்த யான்விதா தேபி மாமேவ கவந்தேய யஜந்தி விதி பூர்வகம்–கீதை 9-23-என்று தானே அருளி செய்தான் இறே ..ஆகவே எல்லா படியாலும் ,கர்மத்துக்கு பகவத் ஆராதனா ரூபம் சித்தம் இறே ..
இப்படி ஆராதனா ரூபமான கர்மமும், ஆராத்ய வஸ்துவான ப்ரஹ்மமும் ஆகிற அர்த்த தவத்தையும் அறியவே
த்யாஜ்ய உபாயதேய ரூப சகலார்தங்களையும் அறியலாய் இருக்கையாலே பாக த்வய ப்ரதிபாத்யம் கர்ம பிரமங்கள் என்கிறது
.எங்கனே என்னில் கர்மம் தான் புபுஷுகளுக்கு ஐஸ்வர்ய சாதனமாய் முமுஷுக்களில் பக்தி நிஷ்டருக்கு உபாசன அங்கமாய்
,பிரபன்னருக்கு கைங்கர்ய ரூபமாய இறே இருப்பது..
,அநந்த ஸ்திரபல பிரம ப்ராப்தி காமரான சாதகருக்கு இது உபாசன அங்கத்வேன உபாதேயம்.
.ஐச்வர்யாதிகளுக்கு உபாதேயமான ஆகாரத்தால் த்யாஜ்யம் என்று அறியலாம் அநந்ய சாதனருக்கு இது கொண்டு சாதிக்க வேண்டுவது ஓன்று இல்லாமையாலே கைங்கர்ய ரூபேண உபாதேயம் .
. உபாசகருக்கு உபாதேயமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்று அறியலாம் .
.ப்ரஹ்மத்தை அறியும் போது ,தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அறிய வேண்டும் ஆகையாலே
,விபூதி பூத சேதன அசேதனங்களின் ஸ்வரூபம் அறியலாம்
.ப்ரஹ்மத்தின் உடைய சேஷித்வ ப்ராப்யத்வங்களை அறியவே தத் அநுபாவாதிகள் புருஷார்த்தம் என்று அறியலாம்.
.தத் உபாச்யத்வ சரண்யத்வங்களை அறியவே தத் ப்ராப்தி சாதன விசேஷங்களை அறியலாம்.
.ப்ரஹ்மத்தின் உடைய நிரதிசய ப்ரஹ்மக்யத்வத்தையும் அநந்ய சாத்வத்தையும் தத் பிரகார தயா பரதந்த்ரமான ஸவஸ்ரூபத்தையும் தர்சிக்கவே சாத்யாந்தர சாதனாந்த்ரங்கள் உடைய த்யாஜ்யத்வத்தையும் ஸூஸ்பஷ்டமாக அறியலாம்
ஆக இப்படி இருக்கையாலே பாக த்வயத்துக்கும் பிரதிபாத்யம் ஆராதனா ஸ்ரூபமான கர்மமும் ஆராத்ய வஸ்துவான பிரமமும் என்ன குறை இல்லை
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஞா பநைஸ் த்வத் பதாப்தவ் -என்று இறே பட்டர் அருளி செய்தது –
இப்படி பாக த்வய பிரதிபாத்யங்களான இவ் அர்த்தங்களை அறுதி இடுகையாவது –
கர்மத்தினுடைய ஸ்வரூப அங்க பலாதிகளையும் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி யாதிகளையும் –
சம்சய விபர்யாயம் அற நிர்ணயிக்கை-அது தான் செய்யும் போது -சகல சாக ப்ரத்யய நியாயத்தாலும் -சகல வேதாந்த ப்ரத்யய நியாயத்தாலும்
செய்ய வேண்டும் -அதில் சகல சாகா பிரத்யயமாவது -ஒரு வாக்யத்திலே ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அதனுடைய அங்க உபாங்காதிகள் நேராக அறிக்கைக்காக -சாகாந்த்திரங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து
அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஞானம் பிறந்து -அவ அர்த்தங்களுக்கு அன்யோன்ய விரோதிகளையும் சமிப்ப்த்து –
தனக்கு அபிமதமான அங்கியோடே சேருமவற்றை சேர்க்கை –
சகல வேதாந்த ப்ரத்யய நியாயமாவது -ஒரு வேதாந்தத்திலே ஒரு வாக்கியம் ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அல்லாத வேதாந்தங்களிலும் சஞ்சரித்து -அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு அன்யோன்ய விரோதம்
பிறவாதபடி-விஷய விபாகம் பண்ணி -தனக்கு அபிமதமான அர்த்தங்களோடு சேருமவற்றை சேர்க்கை –
இது தான் மகா மதிகளான மக ரிஷிகளுக்கு ஒழிய -அல்லாதாருக்கு செய்ய போகாமையாலே –
உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிர்ணயிக்க வேணும் -ஆகையால் தத் நிர்ணய அங்கங்களை அருளி செய்கிறார் –
ஸ்ம்ருதி இதிகாச புரானங்களாலே -என்று ஸ்ம்ருதிகள் ஆவன -ஆப்தரான மன்வந்த்ரி விஷ்ணு ஹாரீத யஞவல்க்யாதிகளாலே
அபிஹிதங்களான தர்ம சாஸ்திரங்கள் –
இதிகாசங்கள் ஆவன -ப்ராவ்ருத்த பிரதிபாதங்களாக ஸ்ரீ இராமாயண மகா பாரதாதிகள் –
புராணங்கள் ஆவன -சர்காதி பஞ்ச லஷண உபேதங்களான-ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவாதிகள் –
வேதார்த்தம் அறுதி இடுவது இவற்றாலே என்று -இப்படி நியமேன அருளி செய்தது -இவற்றை ஒழிய
ஸ்வ புத்தியா நிர்ணயிக்கும் அளவில் -அல்ப ஸ்ருதனானவனுக்கு விப்ரதிபத்தி வருமாகையாலே –
வேத காலுஷ்ய ஹேதுவாம் என்று நினைத்து -இந் நியமம் தான் -இதிகாச புராணாப் யாம் வேதம் சம உப பிரம யேத்
பிபேத்யல் பஸ்ருதாத் வேதோ மா மாயம் பிரதரிஷ்யதி -என்று பார்கச்பத்திய ச்ம்ருதியிலும்-மகா பாரதத்திலும்
சொல்லப் பட்டது இறே –
இவ் உபக்கிரம வாக்ய பிரக்ரியையாலே -புருஷகாரம் வைபவம் தொடங்கி-ஆச்சார்யா அபிமானம்-பர்யந்தமாக
இப் பிரபந்தத்தில் இவர் அருளி செய்கிற வேதார்த்தங்கள் எல்லாம் உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிச்சயித்து
அருளி செய்கிறார் என்னும் இடம் தோற்றுகிறது -அது தான் தத் அர்த்தங்கள் அருளி செய்கிற ஸ்தலங்களில்
சம்ப்ரதிபந்தம் –
ஆக -இவ் வாக்யத்தால் –சகல பிரமாணங்களிலும்-வேதமே பிரபல பிரமாணம் என்னும் இடமும் –
தத் அர்த்தம் நிர்ணயம் பண்ணும் கரமமும் சொல்லிற்று ஆய்த்து –
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply