ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-அவதாரிகை–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அசமத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததன்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா

பூதம் சரச்ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தான்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோச்மி நித்யம்

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம்  வரயோகி ந மீடே
லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ  சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே-

புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத  ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ  லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்

பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –
திரு மா மகள்  தன் சீர் அருள் ஏற்றமும்
திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர்  பணிபவர்தன்மையும்
தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

லோகாச்சார்ய  க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த  தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா
ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷனே
தத்வ ஞாநஞ்ச  தந் நிஷ்டாஞ்ச  தேஹி நாத யதீந்திர மே
————-

அவதாரிகை

சகல வேத சந்க்ரஹமான திரு மந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும் -பிரதிபாதிக்க படுகிற
ஆகாரத்ரயமும் –சர்வாத்ம சாதாரணம் ஆகையாலே -யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய சூரிகளோபாதி-சுத்த சத்வமான பரம பதத்தில் -நித்ய அசங்குசித ஞானராய் கொண்டு –
நிரந்தர பகவத அனுபவ ஜனித-நிரதிசய-அநந்த த்ருப்தராய் இருக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க செய்தேயும் –
அநாதி மாயயா சூப்த -என்கிறபடி தில தைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணத் துரத் யயா  நாதி
பகவன் மாயாதி ரோஹித ஸ்வ பிரகாசராய்-அநாதய வித்யா சஞ்சித அநந்த புண்ய அபுண்ய கர்ம அநு குணமாக –
சூரா நர திர்யக்ஸ்தாவர யோநிகள் தோறும் –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய்மொழி -2-6-9-
பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் –தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஆகிற
படு குழிகளில் விழுந்து -தத் அநு குண சாத்திய சாதனங்களிலே மண்டி –யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை –திரு விருத்தம் -95-ஏறிட்டு
கொண்டு -ப்ராப்த சேஷியாய் -பரம ப்ராப்ய பிராபக பூதனாவன் பக்கல் அத்யந்த விமுகராய் –
கர்ப்ப ஜன்ம பால்ய யௌ வன வார்த்தக  மரண நரகங்கள் ஆகிற அவஸ்தா சப்தகத்திலே நிரந்தர
வித்த விவித நிரவதிக துக்கங்களை அநு பவித்து திரிகிற இஸ் சம்சாரி சேதனரிலே-
ஆரேனும் சிலர்க்கு -ஜாயமானகால பகவத் கடாஷ விசேஷத்தாலே-
ரஜஸ் தமஸ் கள் தலை மடிந்து -சத்வம் தலை எடுத்து -மோஷ ருசி உண்டானாலும்
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அவை தம்மை சாஸ்திர முகத்தாலே  அறிய பார்க்கும் அளவில் -சாஸ்த்ரங்களில்
தலையான வேதமானது –அநந்தா வை வேதா -என்கிறபடி –
அனந்தமாய்-ஸ்வார்த்த நிர்ணயித்தில் -சர்வசாகா ப்ரத்யய நியாயாதி சாபேஷமாய் இருக்கையாலே –
அல்ப மதிகளுக்கு அவஹாகித்து அர்த்த நிச்சயம் பண்ண அரிதாகையாலும்-
அனந்த வேத பாரகராய் -ஸ்வ யோக மகிம சாஷாத்க்ருத பராவர தத்வ விபாகரான –
வ்யாசாதி பரமரிஷிகளாலே -பரணீ தங்க ளாய்-வேத உப ப்ருஹ்மணங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணங்களிலும்
சார அசார விவேக சதுரர்க்கு ஒழிய -தாத்பர்யாம்சம் தெரியாமையாலும் –
அவை போல் அன்றிக்கே சம்சார சேதனோ உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன்-தானே ஆச்சார்யனாய் –
வெளிப்படுத்தின சகல வேத சாரமான ரஹச்ய த்ரயமும் -அதி சங்கரக தயா அதி கூட அர்த்தங்கள் ஆகையாலும் –
பகவதாகச்மிக கடாஷ விசேஷத்தாலே-மயர்வற மதி நலம் அருள பெற்று -சகல வேத சாஸ்திர தாத்பர்யங்களையும் –
கரதலாமலகமாக சாஷாத்கரித்த பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்கள் அருளி செய்த திராவிட வேத தத் அங்க உபாங்களான திவ்ய பிரபந்தங்களும்
அளவிலிகளால் அர்த்த தர்சனம் பண்ண போகாமையாலும் –
ருசி பிறந்த சேதனர் இழந்து போம்படி இருக்கையாலே –ஆழ்வாருடைய  நிர்கேதுக  கடாஷ லப்த திவ்ய
ஞானரான நாதமுனிகள் தொடக்கமாக சத் சம்ராதாய சித்தராய்-சகல சாஸ்திர நிபுணராய் -பரம தயாளுக்களான-
பூர்வாச்சார்யர்கள் அந்த வேதாதிகளில் அர்த்தங்களை சங்க்ரகித்து மந்த மதிகளுக்கும் சூக்ரகமாம் படி
பிரபந்தீகரித்தும் உபதேசித்தும் போந்தார்கள் -அப்படியே சம்சாரி சேதனர் இழவு சஹிக்க  மாட்டாத பரம கிருபையாலே –
தத் உஜ்ஜீவன அர்த்தமாக தாமும் பல பிரபந்தங்கள் அருளி செய்த பிள்ளை லோகாச்சார்யர் ஆச்சர்ய பரம்பரா
ப்ராரப்தங்களான வர்த்தங்களில் -அவர்கள் தாங்கள் கௌ ரவ அதிசயத்தாலே -ரஹச்யமாய் உபதேசித்து போந்தமையாய்  –
அருமை பெருமைகளை பற்ற இதுக்கு முன்பு தாமும் பிரகாசிப்பியாமல் அடக்கி கொண்டு போந்தவையுமான அர்த்த
விசேஷங்கள் எல்லாத்தையும் –பின்பு உள்ளாறும் இழக்க ஒண்ணாது என்கிற தம்முடைய க்ருபா அதிசயத்துக்கு மேலே
பெருமாளும் ஸ்வப்பனத்திலே திரு உள்ளமாய் அருளுகையாலே –ஸ்ரீ வசன பூஷணம்  ஆகிற இப் பிரபந்த முகேன
வெளி இட்டு அருளுகிறார் –

முன்பே பேர் அருளாள பெருமாள் தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு
நம்பி யாரை விசேஷ கடாஷம் பண்ணி அருளி -தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை தாமே
அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –
அவர் இங்கே வந்து பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -நமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு  கோவிலிலே வர்த்தியா நிற்க செய்தே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்  வி டம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க -அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவதே -என்று பிள்ளை கேட்டு அருள -பேர் அருளாள  பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே -பெருமாள் அவருக்கு  ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும்  என்று திரு உள்ளமாக
அவர் இப்படி பெருமாள்திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய -ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –
பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று

இப் பிரபந்தத்தில் —சூரணை- 1- வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-சூரணை – 4-
அத்தாலே அது முற்பட்டது -என்னும் அளவாக வஷ்யமநார்த்த நிர்ணயக பரமான நிர்த்தேசம்
பண்ணுகிறது ஆகையாலே –பிரபந்த உத்போதகாதம் –

இதிஹாச ஸ்ரேஷ்டம் -என்று தொடங்கி
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்  இவளுக்காக -என்னும் அளவும் சாபராத சேதனருடைய
சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து ரஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷகார வைபவரும்
அந்த புருஷகாரமும் மிகை யாம் படி யான உபாய வைபவமும் சொல்கிறது –

ப்ரபத்திக்கு -என்று தொடங்கி ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய -என்னும் அளவு இவ் உபாய வரண ரூப
பிரபத்தியினுடைய தேச காலாதி நியம அபாவம் -விஷய நியமம் -ஆஸ்ரய விசேஷம் –
இத்தை சாதனமாக்கில் வரும் அவத்யம் -இதன் ஸ்வரூப அங்கங்கள் -முதலானவற்றை சேர சொல்லி
பிரபத்யவனே உபாயம் என்று சாதிக்கையாலே –பூர்வோக்த உபாய சேஷம் ஆகையாலே -உபாய பிரகரணம் –

இதில் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்னும் அளவும் பிரதான பிரமேயம்
மேல் என்னுமளவு-இவ் உபாயத்தை கொண்டு உபேயத்தை பெருவானொரு சேதனனுக்கு உபாய உபேய
அதிகார பிரதான அபேஷிதங்களையும்-உபாயாந்தர த்யாக ஹேதுக்களையும்-மற்றும் த்யாஜ்ய உபா தேயங்களாய்
உள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதிகாரி நிஷ்டாக்ரமம் சொல்லுகிறது –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-என்று தொடங்கி உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –
என்னும் அளவாக ஹித உபதேச சமயத்தில் -ஸ்வ ஆச்சார்ய பாரதந்த்ர்யாதிகளான-சதாசார்யா லஷணம்-
சச்சிஷ்ய லஷணம் -தத் உபயர் பரிமாற்றம் -தீ மனம் கெடுத்த ச்வாச்சார்ய விஷயத்தில் சிஷ்யன் உபகார
ஸ்ம்ருதி க்ரமம்- இவற்றை சொல்லுகையாலே சித்த உபாய நிஷ்டனான அதிகாரி யினுடைய ச்வாச்சார்ய
அநு வர்த்தன க்ரமம் சொல்லுகிறது

-ஸ்வ தோஷ அநு சந்தானம் பய ஹேது -என்று தொடங்கி
நிவர்தாக ஞானம் அபய ஹேது -என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி –
ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தமாக உண்டான பேறுகளுக்கு எல்லாம் ஹேதுவாய்-
ஸ்வ கர்ம பய நிவர்தகமான –பகவன் நிர்கேதுக க்ருபா பிரபாவம் சொல்லுகிறது –

ச்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -என்று தொடங்கி மேல் எல்லாம் மிக்க வேதியர்
வேதத்தின் உள் பொருளான சரமபர்வ நிஷ்டையை வெள்ளியதாக  சொல்லுகிறது

-வேதார்த்தம் அறுதி இடுவது என்றுதொடங்கி இவ் அர்த்தத்திலே தலை கட்டுகையாலே
இப் பிரபந்தத்தில் சரம பிரகரண ப்ரதிபாத்யமான அர்த்தம் வேத தாத்பர்யம் என்னும் இடம்
சம்ப்ரதிபன்னம் –

ஸ்ரீ கீதைக்கு சரம ஸ்லோகம் போலே இறே இப் பிரபந்தத்துக்கு சரம பிரகரணம் –
அங்கு சாத்திய உபாயங்களை உபதேசித்து கொண்டு போந்து -ச்வாதந்த்ர்யா பீதனான அவனுக்கு
அவற்றை தள்ளி சித்தோ உபாயம் காட்டப் பட்டது –
இங்கு சித்த உபாயத்தை சொல்லி கொண்டு போந்து ஈஸ்வர ச்வாதந்த்ரத்துக்கு அஞ்சினவனுக்கு
பிரதமபர்வத்தை தள்ளி சரம பர்வம் காட்டப் பட்டது
ஆக இப்படி ஆறு பிரகரணமாய் ஆறு அர்த்த பிரதிபாதகமாய் இருக்கும் –

ஒன்பது பிரகரணமுமாய்-ஒன்பது அர்த்த பிரதிபாதகமாயுமாய் இருக்கும் என்னவுமாம் –
அந்த பஷத்திலும் பிரதம பிரகரணம் பூர்வவத் –

மேல் -பிரதிபத்திக்கு -என்று தொடங்கி -பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் -என்னும் அளவும் –
பூர்வ பிரகரண உக்தோபாய சேஷம் ஆகையால் உபாய பிரகரணம் –

ப்ரபாந்தர பரித்யாகத்துக்கு  -என்று தொடங்கி -ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும் –
என்னும் அளவும் உபாயாந்தர தோஷ பிரகரணம் –

இப் பிரகரணத்தில் -பிரபத்தி உபாய வைலசன்ய கதனம் ப்ராசங்கிகம்-
இவன் அவனை  பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் -என்னும் அளவும்
சித்தோ உபாய நிஷ்டருடைய வைபவ பிரகரணம் –

இப்படி சர்வ பிரகாரத்திலும் -என்று தொடங்கி –
உபேய விரோதிகளாய் இருக்கும் -என்னும் அளவும் பிரபன்ன தினசரியா பிரகரணம் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது -என்று தொடங்கி –
செதநனுடையருசியாலே வருகையாலே -என்னும் அளவும் சதாச்சார்ய லஷண பிரகரணம் –

சிஷ்யன் எனபது -என்று தொடங்கி -உபகார ஸ்ம்ருதியும் நடக்க  வேணும் -என்னும் அளவும்
சச் சிஷ்ய லஷணப்ரகரணம் –

ஸ்வ தோஷ அநு சந்தானம் -என்று தொடங்கி -நிவர்த்தாக ஞானம் அபய ஹேது –
என்னும் அளவும் பகவத் நிர்கேதுக விஷயீகார  பிரகரணம் –

ச்வதந்த்ரனை -என்று தொடங்கி மேலடங்க சரம ப்ராப்ய பிராபக பிரகரணம் –

இவ் இரண்டையும் பற்ற  இறே -பேறு தருவிக்குமாள் தன்பெருமை -திரு மகள் தன் –
என்கிற தனியன்கள் இரண்டும் அவதரித்தது –
ஆகையால் இரண்டு பிரகாரமும் அனுசந்திக்க  குறை இல்லை
-இப் ப்ரபந்தம் தான் தீர்க்க சரணாகதியான திரு வாய் மொழி போலே த்வய விவரணமாயிருக்கும்-எங்கனே என்னில்
-திரு வாய் மொழியாலே முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தத்தையும் -மேல் மூன்று பத்தாலே பூர்வ கண்ட அர்த்தத்தையும் சொல்லி –
மேல் நான்கு பாத்தாலும் அவ உபாய உபேயோகியான குணங்களையும் – ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும் –
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக பந்தத்தையும் – தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியையும் பிரதிபாதிக்கையாலே –
தத் அநு ரூப அர்த்தங்களை சொல்லி தலை கட்டினாப் போலே –
இதிலும் –
பிரதமத்தில் புருஷகாரத்தையும்
அநந்தரம் உபாயத்தையும்
அநந்தரம் ஏதத் உபாய அதிகாரி நிஷ்டையையும் சொல்லுகையாலே
பூர்வ கண்ட அர்த்தத்தையும் –
அவ்  அதிகாரி நிஷ்டை சொல்லுகிற அளவில்
உபேய அதிகாரி அபேஷிதங்களை சொல்லுகிற இதுக்குள்
உத்தர கண்ட அர்த்தைத்தையும் சொல்லி –
மேல் பிரபந்த சேஷத்தாலும்-தத் உபதேஷ்டாவான ஆச்சார்யன் அளவில்
இவனுக்கு உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்த்தன பிரகாரங்களையும் –
இவனுக்கு மகா விசுவாச ஹேதுவான பகவன் நிர்ஹேதுக க்ருபா பிரபாவத்தையும் –
வாக்ய த்வய உக்தி உபாய உபேய சரமாவதியையும் சொல்லி தலை கட்டுகையாலே
ஒன்பதர்த்த பிரதிபாதகமான பஷத்திலும் -பூர்வ வாக்யத்தில் -க்ரியாபத உக்தமான
ச்வீகார உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் அல்லது இல்லாமையாலும்
திநசர்யையும் அப்பதத்தில் சொல்லப் படுகிற அதிகாரிக்கே உள்ளது ஆகையாலும்
சதாச்சார்ய லஷணம் த்வய உபதேஷ்டாவான ஆச்சார்யன் படி சொல்லுகிறது
ஆகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்க குறை இல்லை —

இப்படி த்வய விவரணமான இதினிலே த்வயம் -தன்னில் போலே மற்றை ரஹச்யத்வ்ய அர்த்தங்களும்
ஸங்க்ரஹ ணோத்தங்களாய் இருக்கும் -எங்கனே என்னில் –
அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியான் என்று இறே -என்னுமளவாகவும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் என்றும் –பிரணவ அர்த்தம் சொல்லப் பட்டது –

ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதியாலும் -தன்னை தானே முடிக்கை யாவது -என்று தொடங்கி
இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்கிறதுக்கு கீழ் உள்ளதாலும் -நம-சப்த அர்த்தம் சொல்ல்சப் பட்டது –

பர பிரயோஜன பிரவ்ருத்தி -இத்யாதியாலும் உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -இத்யாதியாலும்
கைங்கர்யம் தான் பக்தி மூலம் அல்லாத போது -இத்யாதியாலும் த்ருதீய பத அர்த்தம் சொல்லப்  பட்டது –

அக்ஞானத்தாலே -இத்யாதியாலும் ப்ராபகந்தர பரித்யாகத்துக்கு -இத்யாதியாலும்
உபாயாந்தர த்யாகத்தை சஹேதுகமாக சொல்லுகையாலே -தத் த்யாஜ்யதையும் –
த்யாக பிரகாரத்தையும் சொல்லுகிற  பத த்வய அர்த்தமும் சொல்லப் பட்டது –

இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதியாலும்
ப்ராப்திக்கு   உபாயம் அவன் நினைவு -இத்யாதியாலும் –மாம் ஏகம் சரணம் -என்கிற
பதங்களின் அர்த்தம் சொல்லப் பட்டது –

பிரபத்தி உபாயத்துக்கு -இத்யாதியாலே வ்ரஜ -என்கிற ச்வீகார வைலஷண்யம் சொல்லப் பட்டது –

அவன் இவனை என்று தொடங்கி ச்வதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் -என்னும் அளவும் –
சர்வ பாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும்
க்ருபா பலம் அனுபவித்தே அற வேணும் -என்று பல சித்தியில்
கண் அழிவு இல்லாமையும் சொல்லுகையாலே  உத்தர அர்த்தத்தில் அர்த்தம் சொல்லப் பட்டது-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: