ஸ்ரீ முமுஷுப்படி—சரம ஸ்லோஹ பிரகரணம்-சூரணை-185-198 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

அவதாரிகை –
மத்யம ரகஸ்யமான த்வயத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் –
அதில் பூர்வ வாக்யத்தில் சொல்லுகிற உபாய வர்ணம் சர்வேஸ்வரன் தானே விதிக்கையாலே –
தத் அபிமதம் -என்னும் அத்தையும் –
வரண அங்கமான சாதனாந்தர பரித்யாகத்தையும் –
வரணத்தில் சாதனத்வ புத்தி ராஹித்யத்தையும் –
சாப்தமாக -பூர்வ அர்த்தத்தாலே பிரதிபதிக்கையாலும் –
உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தையும்
உத்தர அர்த்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கையாலும் –
த்வயதுக்கு விவரணமாய் –
பஞ்சம வேத சார பூத கீதோ உபநிஷத் தாத்பர்யமாய் –
சரம ரஹஸ்யமாய்
இருந்துள்ள சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சயம்  விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –

இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று -நம்பி தாமும் இதில் அர்த்தத்தின் உடைய
கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே -இவருடைய
ஆஸ்திக்ய ஆதா பரீஷார்த்தமாக பல கால் நடந்து துவளப் பண்ணி சூளுரவு கொண்டு -மாச உபவாசம் கொண்டு –
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –

நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய் –
பரமாத்மநி ரக்தனாய் –
அபராதமநி வைராக்கியம் உடையனாய் –
பிரமாண பரதந்த்ரனாய் –
பகவத் வைபவம் ஸ்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான
விஸ்ரம்ப பாஹுள்யம் உடையனாய் –
ஆஸ்திக அக்ரேசனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானதுக்கு அதிகாரி ஆகையாலே –
அதிகாரி  துர்லபத்வத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் –
இத்தை வெளி இடாதே மறித்து கொண்டு போந்தார்கள்-எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –

சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி கிருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அனர்ததத்தையே பார்த்து வெளி இட்டு அருளினார் எம்பெருமானார் –
அப்படி உபதேசித்து விடுகிற மாதரமும் இன்றிக்கே -இவ் அர்த்தத்தை எல்லாரும் அறிந்து
உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையாலே -இது தன்னை பல
பிரபந்தங்களிலும் -ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண இவர் அருளிச் செய்தது –
மற்று உள்ள  பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் போல் அன்றிக்கே -ஸ்திரீ பாலர்களுக்கும் –
அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்தது இப் பிரபந்தத்தில் இறே –

————————————————————-

சூரணை -185
கீழே சில உபாய  விசேஷங்களை உபதேசிக்க அவை துச் சகங்கள் என்றும் –
ஸ்வரூப விரோதிகள் என்றும் -நினைத்து சோக விசிஷ்டனான அர்ஜுனனைக்
குறித்து -அவனுடைய சோக நிவ்ருத்தி அர்த்தமாக -இனி இதுக்கு அவ் அருகு இல்லை –
என்னும் படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் என்று
இதுக்கு பேராய் இருக்கிறது

இதில் பிரதமத்தில் இந்த ஸ்லோக அர்த்தத்தினுடைய கௌரவத்தை எல்லாருடைய
நெஞ்சிலே படுதுக்கைக்காக -இது தனக்கு சரம ஸ்லோகம் என்று திரு நாமம் ஆகைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்ம ஞாநாதிகளான சில
உபாய விசேஷங்களை -ஸ்வ ப்ராப்தி லஷண மோஷ சாதனமாக விஸ்தரேண-
இந்திரிய ஜெயம் அரிதாகையாலும்
சாவதானமாக சிர காலம் சாதிக்க வேண்டி இருக்கை யாலும் –
அவை அனுஷ்டிக்க அசக்யங்கள் என்றும் –
ஸ்வ சரீரத்வ கதநாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு  ஸ்வ யத்ன
ரூபங்களான இவை விரோதிகள் என்று புத்தி பண்ணி -இவற்றாலே எம்பெருமானைப் பெற எனபது
ஓன்று இல்லை -இனி இழந்தே போம் இத்தனை ஆகாதே என்கிற சோகத்தால் ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து –
அவனுடைய அந்த சோகம் போகைக்காக –
ஸூசகத்வாலும் ஸ்வரூப அநு ரூபதையாலும் இனி இதுக்கு மேல் இல்லை –
என்னும்படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் -என்று இதுக்கு
திருநாமமாய் இருக்கிறது -என்கை-

—————————————————————-

சூரணை-186
இதில் பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அர்த்த த்வயயாத்மகமான இந்த ஸ்லோகத்தால் பூர்வ அர்த்தத்தாலே இவ் உபாயதுக்கு
அதிகாரி ஆனவன் செய்யும் அம்சத்தை அருளிச் செய்கிறான்-
உத்தர அர்த்தத்தாலே -உபாய பூதனான தான் இவருக்கு செய்யும் அம்சத்தை
அருளிச் செய்கிறான் -என்கை-

—————————————————–

சூரணை -187
அதிகாரிக்கு  க்ருத்யமாவது -உபாய பரிக்ரஹம் –

அதிகாரி க்ருத்யமாவது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
அதிகாரி ஆனவனுக்கு இங்குச் செய்யத் தக்கது
இவ் உபாயத்தை ஸ்வீகரிக்கை-என்கை-

—————————————

சூரணை -188
அத்தை சாங்கமாக விதிக்கிறான் –

ஆனால் அவ்வளவை விதியாதே உபாயாந்தர பரித்யாகம் சொல்லுவான் என்ன -அருளிச் செய்கிறார்
அதாவது –
அந்த உபாய ஸ்வீகாரத்தை உபாயாந்தர பரித்யாகமாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான் -என்கை
ப்ரஷால்ய பாதா வாசா மேத் ஸ்நாத்வா விதி வதர்ச்ச யேத் ஸ்தித்வார்க்யம்
பானவே தத்யாத் த்யாத்வா தேவம் ஜபேன்மனும்-என்று
ஆசமநாதிகளுக்கு அங்கமாகச் சொன்ன -பாத ப்ரஷாலாநதி ஒழிய அவை அனுஷ்டிக்க
ஒண்ணாது போலே இங்கும் -ல்யபந்த பதத்தாலே அங்கமாகச் சொல்லுகிற உபாயாந்தர த்யாகத்தை
ஒழிய ஸ்வீகாரம் அநு பபன்னம் என்னும் இடம் சித்தம் இறே-
ஆகையால்-சர்வ தர்மான் பரித்யஜ்ய ஸ்தி தச்சேத்-என்று துஷ்கரத்வ புத்தியாலே –
ஸ்வத ப்ராப்தமான உபாயாந்தர பரித்யாகத்தை அனுவதித்து -சித்தோ உபாய ஸ்வீகாரத்தை
விதிக்கிறது என்கிற அநு வாத பஷம் ஆயுக்தம் -என்றது ஆயிற்று –

——————————————————-

சூரணை -189
ராக ப்ராப்தமான உபாயம் தானே வைதமானால் கடுக பரிக்ரகைக்கு உடலாய் இருக்கும் இறே –

ஆனால் ஸூசகத்வாதிகளாலே ராக ப்ராப்தமான இதுக்கு விதி தான் வேணுமோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
போக்யதையாலே ராக ப்ராப்தமான ஷீரத்தை பித்த ரோகத்துக்கு மருந்தாகக் கொடுக்கச்
சொல்லி விதித்தால் சீக்கிரம் கைக் கொள்ளுகைக்கு உடலாமா போலே -உபாயாந்தரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைலஷண்யத்தாலே -சேதனுடைய ராகத ப்ராப்தமாய் இருந்துள்ள உபாயம் தானே இத்தை
ஸ்வீகரி என்னும் விதி பிரயுக்தமுமானால் சீக்ரமாக ஸ்வீகரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே -என்கை-

————————————————————

சூரணை -190
இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்

இனி இதுக்கு பிரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக -பூர்வார்த்த
பத சங்கையை அருளிச் செய்கிறார் –

————————————————

சூரணை -191
சர்வ தர்மான்-

எல்லா தர்மங்களையும் –
அதில் பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –

————————————————-

சூரணை -192
தர்மம் ஆவது பல சாதனமாய் இருக்குமது –

இது தான் தர்மமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் –
த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே -இம் மூன்றுக்கும் அர்த்தம்
அருளிச் செய்வதாக -ப்ரதமம் தர்ம லஷணத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————-

சூரணை -193
இங்குச் சொல்லுகிற -தர்ம -சப்தம் -த்ருஷ்ட பல சாதனங்களைச் சொல்லுகை அன்றிக்கே
மோஷ பலசாதனங்களைச் சொல்லுகிறது –

தர்ம சப்தம் த்ருஷ்ட பல சாதனத்திலும் வ்யாப்தம் ஆகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் –
அதாவது –
பூர்வ உபாயங்கள் தன்னை உபதேசிக்கிற போதே த்ருஷ்ட பல சாதனங்கள் வ்யாவ்ருத்தம் ஆகையாலும் –
மோஷ உபாயங்களை உபதேசித்து வருகிற பிரகரணம் ஆகையாலும் –
இவ் இடத்தில் சொல்லுகிற -தர்ம-சப்தம் –
புத்ர பச்வந்தாதி ஐ ஹிகமாகவும்
ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகமாயும் –
இருந்துள்ள த்ருஷ்ட பலங்களுக்கு சாதனங்கள் ஆனவற்றை சொல்லுகை இன்றிக்கே –
பகவத் ப்ராப்தி ரூபமான மோஷ பலத்துக்கு சாதனமாய் உள்ளவற்றைச் சொல்லுகிறது -என்கை-

———————————————————-

சூரணை -194
அவை தான் ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய் -பலவாய் இருக்கையாலே
பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது -என்கை –

இனி மேல் பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்த மோஷ பல சாதனங்கள்  தாம் பல -உப ப்ரஹ்ம உப ப்ரஹ்மணங்களாய்
இருந்துள்ள ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே விஹிதங்களாய்க் கொண்டு -அநேகங்களாய் இருக்கையாலே –
தர்மான்-என்று பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது –

————————————————————

சூரணை -195
அவை யாவன –
கர்ம ஞான பக்தி யோகங்களும் –
அவதார ரகஸ்ய ஞானமும் –
புருஷோத்தம வித்யையும் –
தேச வாசம்
திரு நாம சங்கீர்த்தனம் –
திரு விளக்கு எரிக்கை –
திரு மாலை எடுக்கை –
தொடக்கமான உபாய புத்தியா செய்யும் அவையும் –

அப்படி இருந்துள்ளவை தாம்  எவை என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் பலவாக சொல்லப் பட்ட அவை யாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜநகாதய
தஸ்மாத் அசக்தஸ் சததம் கார்யம் கர்ம சமாசார -என்று
ஸ்வதந்திர சாதனமாக உக்தமான கர்ம யோகமும்
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரமிஹா வித்யதே
ஞாநாக்னிஸ் சர்வ கர்மாணி பச்மசாத் குருதே ததா -என்று சொல்லப்பட்ட
கர்ம சாத்தியமான ஞான யோகமும் –
பக்த்யா த்வனன்யாசக்யா-
மன்மனா பவ மத் பக்த -இத்யாதிகளாலே சொல்லப் பட்ட
கர்ம ஞான சஹ்ருதமான பக்தி யோகமும் -ஆகிற இவையும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யாக்வா
தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சொர்ஜுனா-என்று
விரோதி நிவ்ருத்தி பூர்வமான பகவத் ப்ராப்திக்கு சாதனமாகச் சொல்லப் பட்ட
அவதார ரகஸ்ய ஞானம்
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் கருத க்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே -க்ருதக்ருத்யனாய் ஆகும் என்கிற புருஷோத்தம வித்யை –
தேசோயம் சர்வ காம துக் -என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசம் –
சர்வ பாப விசுத்தாத்மா யாதி பிரதம சனாதனம் -என்று
சர்வ பாப விமோசன பூர்வகமான பகவத் ப்ராப்தியை பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் –
க்ருதேன வாத தைலேன தீபம் யோ ஜ்வாலயேன் நர விஷ்ணவே
விதிவத் பக்த்த்யா தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு விஹாய சகலம் பாபம்
சஹஸ்ர ஆதித்ய சன்னிப ஜ்யோதிஷ்மதா விமோநேன விஷ்ணு லோகே மகீயதே -என்று
பாப நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படுகிற திரு விளக்கு எரிக்கை –
அப்படி -விரோதி நிவ்ருத்தி பூர்வக பகவத்  ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படும் -திரு மாலை எடுக்கை
முதலாக சாதனா புத்த்யா செய்யப் படும் அவையும் -என்கை-

————————————————-

சூரணை-196
சர்வ சப்தத்தாலே அவ்வவ சாதன விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில்
அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது –

இனி சர்வ சப்தார்த்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
தர்ம விசேஷணமான-சர்வ சப்த்தாலே -பஹு வசநோக்தமான அவ்வோ சாதன
விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில் –
சந்த்யாஹின அசுசிர் நித்யம் அனர்ஹஸ் சர்வ கர்மஸூ -என்கிறபடியே
அயோக்யன் ஆகாமல் தன்னை அனுஷ்டிக்கையாலே அவற்றுக்கு யோக்யனாகையை
உண்டாக்கிக் கொடுக்கும் –
சந்த்யா வந்தன பஞ்ச மகா யஞ்ஞாதிகளான-நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது -என்கை –

————————————–

சூரணை -197
ஆக ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் -நித்ய நைமித்திகாதி ரூபங்களான
கர்ம யோகாத்ய உபாயங்களை -என்ற படி –

உக்தத்தை நிகமிக்கிறார் –
அதாவது
கீழ் சொன்ன எல்லாவற்றாலும் சோதனா லஷண அர்த்தோ தர்ம -என்று
சோதனை யாகிற விதி வாக்யத்தை பிரமாணமாக உடைத்தான அர்த்தம் தர்மம் -என்கையாலே –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆகிற பிரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய் –
நித்யம் நைமித்திகம் முதலானவற்றை வடிவாக உடைதான கர்ம யோகம் தொடக்கமான
உபாயங்களை என்றபடி -என்கை –

————————————————————

சூரணை -198
இவற்றை -தர்மம் -என்கிறது பிரமித்த அர்ஜுனன் கருத்தாலே –

ஸ்வரூப வ்ருதத்வாத் அதர்மமாகச் சொல்ல வேண்டும் அவற்றை -தர்மம்-
என்கிறதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற உத்தேச்யத்துக்கு விரோதியாய் இருக்கையாலே –
அதர்ம சப்த வாச்யங்களாக -அப்ராப்தங்களாய் இருக்கிற இவற்றை தர்மம் என்று சொல்லுகிறது –
ஸ்வ தர்மமான யுத்தத்தை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும்
பிரமித்த அர்ஜுனனுடைய நினைவாலே இத்தனை -என்கை –

ஆக
பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .
————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: