ஸ்ரீ முமுஷுப்படி—த்வய பிரகரணம்-சூரணை–160-184 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -160
உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –

இனி உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –
ப்ராப்யமாவது –
ஸ்ரீ யபதியாய்-சர்வ ஸ்வாமியாய் -இருக்கிற சர்வேஸ்வரன் திரு அடிகளில் பண்ணும் கைங்கர்யம் –

———————————————————

சூரணை -161
ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்கை-

பிராபக வர்ணம் அநந்தரம் ப்ராப்யம்  சொல்லுகிற இதுக்கு அபிப்ராயம் அருளிச் செய்கிறார் –
பூர்வ வாக்யத்தில் பிரதி பாதிதமான சாதனம் பல சதுஷ்டய சாதாரணம் ஆகையாலே –
கீழ் பண்ணின பிராபக வர்ணம் ப்ராப்யாந்தரதுக்கு அன்று என்னும் இடம் சொல்லுகை -இப்போது
ப்ராப்யம் சொல்லுகிற  இதுக்கு பிரயோஜனம் என்றபடி –

——————————————————

சூரணை -162
உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினார் போலே
உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்தியை அர்த்திக்கிறது –

ப்ராப்யாந்தரங்களை விட்டு இந்த ப்ராப்யத்தை அபேஷிக்க வேண்டுவான் என் என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது
உபாய வர்ணம் பண்ணுகிற அளவில் அநந்ய சரணத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக
கர்ம ஞான பக்திகளாகிற உபயாந்தரங்களை விட்டு சரமமான சித்தோ உபாயத்தைப் பற்றினாப் போலே –
உபேய பிரார்த்தனை பண்ணுகிற அளவிலும் அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக
உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது -என்கை –

——————————————————

சூரணை -163
இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ -என்னில்

நினைவறியும் ஈஸ்வரன் பக்கல் பிரார்த்தனை மிகை என்று இருப்பார் பண்ணும்
பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-
இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில் -என்று
தனியாக ஏதும் இல்லை-

——————————————-

சூரணை -164
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ருக்ணதை ஆகையாலே சோற்றில் ஆசை அற்று கிடந்த பிரஜை ரோகம் தீர்ந்து –
பசி விளைந்து -சோறு-என்று அபேஷிக்கும் பாசுரம் கேட்டால் பெற்ற தாய் உகக்குமாப் போல் –
அநாதி காலம் ப்ராப்யாந்தர ப்ராவண்யம் ஆகிற நோய் கொண்டு இந்த ப்ராப்யத்தில்
நசை அற்றுக் கிடந்தவன் -இதிலே ருசி பிறந்து -தன் பக்கலிலே வந்து -இத்தை
அபேஷிக்கிற பாசுரம் கேட்டவாறே -சேஷியான அவன் திரு உள்ளம் உகக்கும் –
அதுக்காக அர்த்திக்கிறான் இத்தனை -என்கை-

———————————————-

சூரணை -165
ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ளவனுக்கு –

இனி இவ் வாக்யத்துக்கு பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம்
பற்றி பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –
அதுக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு என்று இங்கும் ஸ்ரீ சப்தத்துக்கு
பூர்வ வாக்யத்தில் சொன்ன வ்யுத்புத்தி த்வ்யமும் -அதில் அர்த்தமும் -மதுபர்த்தமான
நித்யயோகமும் அனுசந்தேயம் –

———————————————————-

சூரணை -166
அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷ காரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் -இருக்கும் –

இரண்டு இடத்திலும் நித்ய யோகம் ஒத்து இருக்கச் செய்தே அவ்வவதச அநு குணமாக
இவள் இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் –

அதாவது
அவன் சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளுக்கு உபாயமாம் இடத்தில்
சஹாயாந்தர சம்சர்க்கத்தை சஹியாமையால்-தானுபாய பாவத்தில் அன்வயம் இன்றிக்கே –
சாபராத சேதனருடைய அபராதங்களைப் பார்த்து அவன் சீரும் அளவில் -அத்தை சஹித்து
அங்கீகரிக்கும் படியாக பண்ணும் புருஷாகாரமாய் இருக்கும் –

அவன் சேதனருக்கு கைங்கர்ய பிரதி சம்பந்திதயா ப்ராப்யனாம் இடத்தில்
அவனோபாதி கைங்கர்ய பிரதி சம்பந்தயாய்க் கொண்டு தான் ப்ராப்யையுமாய் –
இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்தகையுமாய் இருக்கும் -என்கை-

இது தன்னை பரந்தபடியில் -பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தம் சேதனருடைய அபராதத்தையும் –
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் கண்டு -இவர்கள் அவனுடைய குரோதத்துக்கு விஷய பூதராய்
நசித்துப் போகாதே -இவனை கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும் -என்று சாபராதமான சேதனரை
ஈஸ்வரனோடு சேர்க்கைக்கான என்றுமொக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இங்குத்தை ஸ்ரீ மச்  சப்தம் -கைங்கர்ய பிரதி சம்பந்த்வத்தை  பற்றவும் -இவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாக படுத்துகைக்காகவும் -அனுபவ விச்சேதத்தில் தனக்கு
சத்தா ஹானி பிறக்கும் படி இருக்கையாலே -நிரந்தர சம்ஸ்லேஷதுக்காகவும் -அவனை ஷண காலமும் பிரியாதே
சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டயாய்  இருக்கும் -இருப்பைச் சொல்கிறது -என்று விஸ்தரேண அருளிச் செய்தார் –

———————————————————

சூரணை-167
இதிலே திரு மந்த்ரத்திலே சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –

திரு மந்த்ரத்தில் உத்தர பதத்துக்கு இவ்  உத்தர வாக்கியம் விவரணமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடத்தை சாப்தமாக பிரதிபாதிக்கிற
இந்த வாக்யத்திலே -நாராயணா -என்று கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடம்
ஆர்த்தம்  ஆகையாலே -அவிசதமாக சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது -என்கை-

அங்கு -நாராயணனுக்கே அடிமை செய்ய பெறுவேனாக வேணும் -என்கிற இவ்வளவு ஒழிய –
அடிமை கொள்ளுமவன் ஸ்ரீ மானாகாக வேணும் -என்றும்
அடிமை செய்பவன் நிர்மமனாக வேணும் -என்றும் சொல்லாமையாலும் -அவை இரண்டும்
இங்குச் சொல்லுகையாலும் இறே அந்த பதத்துக்கு இவ் வாக்கியம் விவரணம் ஆயிற்று –

————————————————-

சூரணை -168
இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்கை முறை –

இம் மிதுனத்திலே  அடிமை செய்ய வேணும் என்ற நிர்பந்தம் தான் ஏன் –என்ன
அருளிச் செய்கிறார்
அதாவது
பவாம்ஸ் து சஹா வைதேஹ்யா கிரிஸா நிஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்ச தி -என்று
பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே –
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே அடிமை
செய்கை இவ் ஆத்மாவுக்கு ஸ்வரூப ப்ராப்தம்-என்கை
மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் மிதுன கைங்கர்யம் இறே ஸ்வரூப ப்ராப்தம் –

———————————————————–

சூரணை -169
அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் இச் சேர்த்தியிலே –

இன்னும் அச் சேர்த்தியிலே அடிமை செய்யும் அளவில் உள்ள வாசியை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் உபேஷியாமல் கைங்கர்யம் கொண்டு அருளும் படி
பண்ணுமவள் இவள் ஆகையாலே –
சீதாமுவாச சீதாசமஷம் காகுத்ஸ்தமிதம் வசனம் அப்ரவீத் -என்று
இவள் முன்னிலையாக தம்முடைய ஸ்வரூப அநு ரூபமான அடிமையை
அபேஷித்துப் பெற்ற இளைய பெருமாளைப் போலே -இவன் ப்ரார்த்திக்கிற அடிமை தான்
சித்திப்பதும் -மாதா பிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே ஸூஸ்ருஷை பண்ணும்
புத்ரனுக்குப்  போலே -செய்கிற அடிமை ரசிப்பதும் -பிராட்டியும் அவனும் ஆன சேர்த்தியிலே என்கை –

————————————————-

சூரணை-170
நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு –

இனி இரண்டாம் பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாராயணாய -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்
நாரயணத்வம்-உபய விபூதி நாதத்வம் ஆகையாலே -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு -என்கிறார் –
கைங்கர்ய ப்ராப்தி சம்பந்தியாவான் சேஷி இறே –

————————————————

சூரணை -171
இதில் திரு மேனியையும் குணங்களையும் சொல்லும்

கைங்கர்யம் தான் அனுபவ ஜனித ப்ரீதி கார்யம் ஆகையாலும் -அந்த ப்ரீதி தான்
அனுபாவ்ய விஷய அதீனை ஆகையாலும் -அனுபாவ்ய விஷயம் சொல்ல வேண்டுகையாலே
அருளிச் செய்கிறார் –

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற இப் பதத்தில் கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாய் இருக்கும்
அனுபவத்துக்கு விஷயமான திவ்ய மங்கள விக்ரகத்தையும் -கல்யாண குணங்களையும் -சொல்லும் -என்கை –
சதா பஸ்யந்தி-என்றும் –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
திவ்ய மங்கள விக்கிரகமும் கல்யாண குணங்களும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்கிற ஸ்வரூபதோ  பாதி –
கைங்கர்ய வர்தகங்களுமாய்-போக்யங்களுமாய் இறே இருப்பது –

குணங்கள் என்று சாமான்யேன சொல்லுகையாலே -ஞான சக்த்யாதிகளோடு –
வாத்சல்யாதி குணங்களோடு -ஸௌர்யாதி  குணங்களோடு -வாசி அற எல்லா குணங்களும் –
அனுபாவ்யங்களாய் இருக்கையாலே -பூர்வ வாக்யத்தில் -நாராயண  பதத்தில் -உபாய வர்ணத்துக்கு
உபயுக்த்தயா அநு சந்தேயங்களான குண விசேஷங்களும் -இப் பதத்தில் ப்ராப்யதயா அநு சந்தேயங்கள் –
ஆஸ்ர்யமான ஸ்வரூபத்துக்கு ஆகார த்வயம் உண்டாய் இருக்கிறார் போலே -ஆஸ்ரயிகளான குண
விசேஷங்களுக்கும் ஆகார த்வ்யமும் உண்டாய் இறே இருப்பது –
இவை எல்லாம் பரந்தபடியில் அருளிச் செய்தார் 

—————————————————–

சூரணை -172
சேஷித்வத்திலே நோக்கு –

இனி இப் பதத்துக்கு தாத்பர்யம் இன்னதிலே என்கிறார் –
அதாவது –
அநுபாவ்யத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே சகல குணங்களும் பிரதிபாதிதமாய் இருந்ததே ஆகிலும்
சதுர்த்தி அம்சத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாய் இருப்பது
சேஷித்வம் ஆகையாலே அது இப்  பதத்துக்கு நோக்கு -என்கை-

—————————————————–

சூரணை -173
ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே ரசித்து இருப்பது –

இந்த சேஷித்வ கதனத்துக்கு  பிரயோஜனம் அருளிச் செய்கிறார் -அதாவது
சர்வம் பரவசம் துக்கம்-என்றும் –
சேவா ஸ்வ வ்ருத்தி -என்றும்-சொல்லுகிற படி
நிஷித்தமான அப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் போல் அன்றிக்கே –
சாயா வா சத்வ மநு கச்சேத்-என்றும்
சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் சொல்லுகிற படியே
விஹிதமான ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் இறே இவன் ரசிப்பது -என்கை –

——————————————–

சூரணை -174
இந்த சதுர்த்தி கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

இனி இப் பதத்தில் விபக்தி அம்சத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
சேஷத்வ ஞான கார்யமான உபாய பரிக்ரஹதுக்கு அநந்தரம் ப்ராப்தமாய் உள்ளதாகையாலே –
தாதர்யா பிரதி பாதகம் அன்றிக்கே -இந்த சதுர்த்தி பரிக்கிரஹித்த உபாயத்தினுடைய பலமான
கைங்கர்யத்தைப் பிரதி பாதிக்கிறது -என்கை –
கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கை ஆவது -கைங்கர்ய பிரார்த்தனையைப் பிரதி பாதிக்கை –
கைங்கர்யம் ஆவது -பகவன் முக விகாச ஹேதுவான வ்ருத்தி விசேஷம் –
இக் கைங்கர்யம் தான் -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்றும்
நம இத்யேவ வாதின -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிற படியே -வாசிக காயிக ரூபமாய் இருக்கும்-

——————————————-

சூரணை -175
கைங்கர்யம் தான் நித்யம் –

இக் கைங்கர்யம் பிரார்தன ஆதீனம் ஆகையாலே -காதாசித்தம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலும் –
அகிஞ்சித்கரஷ்ய சேஷத்வ அநு பாபத்தி -என்கிறபடி கிஞ்சித்காரபாவத்தில் அது தான்
அநு பபன்னம் ஆகையாலும் கைங்கர்யம் ஆத்மாவுக்கு நித்யம் -என்கை
ஆகையால் இறே -நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷ இஷ்யாமி -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது-

————————————————

சூரணை -176-
நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் –

நித்தியமாய் இருக்குமாகில் பிரார்த்திக்க வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
விஷயம் உத்துங்கமாய் இருக்கையாலும் -ஆஸ்ரய பூதனான சேதனன் அத்யந்த
பரதந்த்ரனாய் இருக்கை யாலும் -பிரார்த்தனா விசேஷம் இல்லாத போது கைங்கர்யம்
சித்தியாமையாலும் -நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் -என்கை-

———————————————

சூரணை -177
சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு
ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும் –

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து–

—————————————————————

சூரணை-178
நம-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –

அநந்தரம் சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நம -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
நமஸ்-சப்தம் சாமான்யேன அஹங்கார மமகாரங்களை  கழிக்கையாலே-
திரு மந்த்ரத்தில் மத்யம பதமான -நமஸ் சப்தம் போலே -ஸ்வரூப உபாய புருஷார்த்த –
விரோதிகள் மூன்றையும் கழிக்க வற்றாய் இருந்ததே ஆகிலும் -இங்கு -அங்கன் இன்றிக்கே –
கைங்கர்ய பிரார்தன அனந்தரோக்தம் ஆகையாலே -இந்த கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது -என்கை-

————————————————

சூரணை -179
களை யாவது தனக்கு என்னப் பண்ணும் அது –

கைங்கர்யத்துக்கு களை எது -என்ன -அருளிச் செய்கிறார் –
தனக்கு என்னப் பண்ணுகையாவது-போக்தாஹம்  மம போகோயம்-என்கிறபடியே
இத்தை தன்னுடைய ரசத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை –
பகவன் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி
ஒழிய -இதில் போக்த்ருத்வ பிரதி பத்தியும் -மதீயத்வ பிரதி பத்தியும் -நடக்குமாகில் –
அபுருஷார்தமாய் இறே இருப்பது –

—————————————————–

சூரணை -180
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் –

இன்னம் இந்த கைங்கர்ய ப்ராப்திக்கு விரோதிகள் ஆனைவையும் இதிலே
தள்ளுண்ணும் என்கிறார் –
அதாவது
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந் நமஸ்சிலே-
அநாத் மன்யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வ மிதி யா மிதி
அவித்யா தரு சம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம் -என்கின்றபடியே
அநாத்மன்யாத்மா புத்யாதிகளை -வடிவாக உடைத்தாய் -கர்மோத்புத்தி காரணமாய் இருந்துள்ள
அவித்யையும் -தத் கார்யமான கர்மங்களும் –
தத் கார்யமாக வரும் பிரகிருதி சம்பந்தமும் -எல்லாம் கழி உண்ணும் -என்கை –

ஆகை இறே -த்வய விவரணமான கத்யத்தில் நமஸ் சப்தார்த்தை அநு சந்தித்து அருளுகிற அளவிலே –
மநோ வாக் காயை  -இத்யாதி சூர்ணையாலே-அக்ருத்ய கர்ணாத்யகில கர்ம நிவ்ருத்தியையும்  –
அநாதி கால ப்ரவ்ருத்த -இத்யாதி சூர்ணையாலே -அவித்யா நிவ்ருத்யையும் –
மதீயாநாதி இத்யாதி சூர்ணையாலே -பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியையும் –
பாஷ்யகாரர் பிரசாதித்து அருளிற்று –

———————————————————

சூரணை -181
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்னும்படியே ஆக வேணும் –

ஆனாலும் இதுக்கு பிரதான அர்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி ஆகையாலே –
அத்தை உபபாதிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் கைங்கர்யம் பண்ணும் போது நாம் எப்படியாக வேணும் என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
கைங்கர்யம் பண்ணும் அளவில் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –திருப்பாவை -29-என்று
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –
உனக்கே உகப்பாக நாங்கள் அடிமை செய்ய வேணும் -என்கிறபடியே –
சேஷிக்கே உகப்பாக பண்ண வேணும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திரு வாய் மொழி –2-9-4-என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது –

—————————————————

சூரணை -182
சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே –

இனி இந்த கைங்கர்யத்துக்கு விக்னங்களை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அவனுடைய விக்ரஹ சௌந்தர்யமும் சித்த அபஹாரியாய் கை சோரப்
பண்ணுகையாலே -கைங்கர்யத்துக்கு விக்னம் –
இந் நமஸுக்கு கீழே சதுர்த்தியில் சொன்ன கைங்கர்யமும் -அபிமத விஷய
பரிசர்யை போலே ஸ்வ ரசத்துக்கு உடலாய் இருக்கையாலே அவனுடைய முக மலர்த்தியே
பிரயோஜனம் ஆக இருக்கும் அதுக்கு அதுவும் விக்னம் -என்கை-

——————————————————

சூரணை -183
கைங்கர்ய பிரார்த்தனை போலே -இப் பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு –

இப்படி ஆகையால் இவ் விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனை இடை விடாமல்
நடக்கும்படியே அருளிச் செய்கிறார் –
அதாவது –
சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனை காதா சித்தம் அன்றிக்கே –
நித்தியமாய் செல்லுமா போலே -இப் பதத்தில் சொல்லுகிற கைங்கர்ய விரோதி
நிவ்ருத்த பிரார்த்தனையும் -இங்கு இருக்கும் காலத்தோடு -ப்ராப்ய பூமியில்
போன காலத்தோடு வாசியற எல்லா காலமும் நடக்கக் கடவதாய் இருக்கும் -என்கை .

——————————————————–

சூரணை -184
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு-திரு வாய் மொழி -9-3-4–என்னா நின்றது இறே –

கந்தல் கழிந்த அந் நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்வ உதயம் உண்டாமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை
விளைத்து -ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும் பேஷஜம் ஆனவனே -என்று நித்ய சூரிகள் பேசும்
பாசுரமாக சொல்லா நின்றது இறே -என்கை –
ஆகையால் -அவ் விஷய வைலஷண்ய பிரயுக்தமாய் வரும் ஸ்வ போக்த்ருத்வ புத்தி
அங்கும் விளைகையாலே -இப் பதத்தில் பிரார்த்தனை என்றும் உண்டு என்னும் இடம்
சித்தம் என்றது ஆயிற்று –
ஆகை இறே முக்தருக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில் -நம இத்யேவ வாதின -என்றது –

ஆக –
புருஷகாரதையும்
தந் நித்ய யோகத்தையும்
தத் உத்பாவிதமான வாத்சல்யாதி குணங்களையும்
அந்த குண பிரகாசமான திவ்ய மங்கள விக்ரகத்தையும்
குண விக்ரக விசிஷ்ட வஸ்துவினுடைய உபாயத்வத்தையும்
அவ் உபாய ஸ்வீகாரத்தையும்
தத் பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் அத்தையும்
அவ் வஸ்துவினுடைய சர்வ சேஷித்வத்தையும்
தத் விஷய கைங்கர்யத்தையும்
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: