ஸ்ரீ முமுஷுப்படி-.-த்வய பிரகரணம்-சூரணை-144-159 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -144
சரனௌ-திரு அடிகளை –

இனி -சரனௌ-என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
தனியாக இல்லை –

————————————————-

சூரணை -145
இத்தால் சேர்த்தி அழகையும் -உபாய பூர்த்தியையும் -சொல்லுகிறது –

இந்த த்வி வசனத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
சரனௌ–என்று இரண்டு திரு அடிகளையும் சொல்லுகிற இத்தால்-
இணைத் தாமரை அடி-பெரிய திரு மொழி –1-8-3-என்கிற படி இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகையும் -த்வி வசனம் -இரண்டுக்கு மேல் மற்று ஓன்று புகுர
சஹியாமையாலே சஹாயாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது -என்கை –

————————————————-

சூரணை -146
பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது -திண் கழலாய் இருக்கும் –

இனி உபாயத்வ ஏகாந்தமான இதன் குணாதிக்யத்தை அருளிச் செய்கிறது –
அதாவது
ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாக  சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும்
-பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-என்னும் படி
நாராயண -பதத்தில் சொன்ன -குண விசிஷ்டனான அவனும்
கைவிடிலும் -திரு அடிகள் தன் வை லஷண்யத்தாலே-துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது-
வண் புகழ் நாரணன் திண் கழல் -திரு வாய் மொழி -1-2-10-என்கிறபடியே
பற்றினாரை நழுவ விடாதே திண்மையை  உடைத்தாய்  இருக்கும் -என்கை-

—————————————————

சூரணை -147
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை –

பிரஜை முலையிலே  வாய் வைக்குமா போலே –
இந்த குணாதிக்யத்தை பற்றவும் அன்றிக்கே -இவன் தன் ஸ்வரூப அநு குணமும் திரு அடிகளிலே
இழிகை என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது
சேஷி பக்கல் ஆஸ்ரயிக்க இழியும் சேஷ பூதன்
தன் ஸ்வரூப அநு குணமாக இழியும் துறை திரு அடிகள்-
ஸ்தந்த்ய பிரஜை தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
தனக்கு வகுத்ததாய் உள்ள முலையிலே வாய் வைக்குமா போலே –

——————————————————–

சூரணை -148
இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் –
குண பிரகாசமுமாய் –
சிசுபாலனையும் -அகப்பட திருத்தி சேர்த்து கொள்ளும்
திரு மேனியை நினைக்கிறது –

திரு அடிகளை சொன்ன இது -திரு மேனிக்கு உப லஷணம் என்கிறார் மேல் –
அதாவது
சரனௌ -என்று விக்ரக ஏகதேசமான திரு அடிகளைச் சொன்ன இத்தால் –
திரு இருந்த மார்வன்–மூன்றாம் திரு அந்தாதி –57-என்னும்படி ஸ்ரீ மத் -பதத்தில் சொன்ன
புருஷ கார பூதையான பிராட்டிக்கு இருப்பிடமாய் –
நாராயண பதத்தில் சொன்ன குணங்களுக்கு பிரகாசமாய் –4-3-5-என்கிறபடியே
பிரத்வேஷ பரனாய் நிந்தோக்திகளை பண்ணித் திரிந்த சிசுபாலனையும் -உள் பட –
அலவலைமை தவிர்த்த அழகன்-பெரிய ஆழ்வார் திரு மொழி-4-3-5-என்கிறபடி தன் அழகாலே
த்வேஷாதிகள் போம்படி திருத்தி -திரு அடி தாள் பால் அடைந்த -திரு வாய் மொழி -7-5-3-என்கிறபடி
சேர்த்து கொள்ளும் ஸ்வபாவத்தை உடைத்தான திவ்ய மங்கள  விக்ரகத்தை நினைக்கிறது -என்கை –

————————————————————

சூரணை -149
சரணம்-இஷ்ட ப்ராப்திக்கு
அநிஷ்ட நிவாரணத்துக்கு
தப்பாத உபாயமாக –

அநந்தரம்-சரணம்-பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
உபாயே க்ருக ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷா உபாயார்தைக வாசக -என்கிறபடியே –
சரண -சப்தம் ரஷிதாவுக்கும் க்ருஹத்துக்கும் உபாயத்துக்கும் -வாசகமே ஆகிலும் –
இவ் இடத்தில் உபாயத்துக்கே வாசகம் ஆகையாலும் –
உபாய க்ருத்யம்-இஷ்டாநிஷ்ட ப்ராப்த பரிஹார கரணம் ஆகையாலும் –
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக -என்று –
இப் பதத்துக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

இஷ்ட அநிஷ்டங்கள் தாம்  இன்னவை என்னுமத்தை பரந்த படியிலே விஸ்தரேண அருளி செய்தார் –
ஸ்ரீ ய பதி படியிலும் –

அநிஷ்டம் ஆகிறது அவித்யையும் –
அவித்ய ஆகாரமான ராக த்வேஷங்களும் –
புண்ய பாப ரூபமான கர்மங்களும் –
தேவாதி சதுர்வித சரீரங்களும் –
ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் –

இஷ்டம் ஆகிறது –
அர்ச்சிராதி மார்க்க கமநமும்-
பரமபத பிராப்தியும் –
பரமாத்ம தர்சனமும் –
குண அனுபவ கைங்கர்யங்களும் -என்று
சங்கரஹேண அருளி செய்தார் –
ஆகையால் இவ் இடத்திலும் அவை வக்தவ்யங்கள் –

——————————————————————

சூரணை -150
இத்தால் ப்ராப்யம் தானே ப்ராபகம் என்கிறது –

கீழே  நிர்தேசித்த வஸ்துவை உபாயமாக சொன்னதன் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் சொன்ன விஷயத்தை உபாயமாக சொல்லுகிற இத்தால்
ப்ராப்ய வஸ்து தானே ப்ராபகம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

——————————————————–

சூரணை -151
கீழ் சொன்ன மூன்றும் ப்ராப்யம் இறே

கீழ் பிராப்ய பிரசங்கம் உண்டோ -என்ன அருளி செய்கிறார் –
அதாவது
சமஸ்த பதமான பூர்வ பதத்தில் சொன்ன –
லஷ்மீ விசிஷ்டத்வமும் –
கல்யாண குண யோகமும் –
திவ்ய மங்கள விக்ரஹ உபேதத்வமும்-
ஆகிய மூன்றும்
ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே
சர்வான் காமான் அஸ்நுதே
சதா பஸ்யந்தி-என்று இவனுக்கு அனுபவ விஷயமாகச் சொல்லப் படுகிறவை ஆகையாலே
ப்ராப்யம் இறே -என்கை –

——————————————————-

சூரணை -152
இவன் செயல் அருதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை-

ஆனால் இத்தை உபாயம் ஆக்குகிறது தான் என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
அகிஞ்சனனாய் -அநந்ய கதியாய் இருக்கிற இவன்-தன் செயல் மாட்சியாலே
போக்யமான பாலை மருந்து ஆக்குவாரைப் போலே
ப்ராப்யமானது தன்னை ப்ராபகம் ஆக்குகிறான் இத்தனை -என்கை-

———————————————————-

சூரணை -153
சரனௌ சரணம் -என்கையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தமான உபாயம் -என்கிறது –

இது தன்னாலே இவ் உபாயத்துக்கு ஓர் அதிசயம் சொல்லுகிறது -என்கிறார்
அதாவது
சரனௌ சரணம் –என்று ப்ராப்ய வஸ்து தன்னையே ப்ராபகமாகச் சொல்லுகையாலே –
ப்ராப்யம் வேறும் தான் வேறுமாய் இருக்கும்  உபாயாந்தரங்கள் காட்டிலும் -வ்யாவ்ருத்தமான
உபாயம் இது என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

—————————————————-

சூரணை -154
ப்ரபத்யே -பற்றுகிறேன் –

அநந்தரம்-க்ரியா பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
இப் பதம் -பத கதவ்-என்கிற தாது சித்தம் ஆகையாலே –
கதி வாசி யாகையாலும் -உத்தமன் -ஆகையாலும் -பற்றுகிறேன் -என்று
இதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

—————————————————–

சூரணை-155
வாசிகமாகவும் -காயிகமாகவும் -பற்றினாலும் பேற்றுக்கு அழிவு இல்லை -இழவு இல்லை –

ஞானான் மோஷம் -ஆகையாலே மானசமாக கடவது –
இது தான் மானசக வாசக காயிக ரூபையான த்ரிவித கதியையும் காட்டவற்று ஆகையாலே –
அதில் எந்த கரணத்தால் உண்டான பற்றுதலை சொல்லுகிறார் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது -பவ சரணம் -இத்யாதி படியே-ரஷிக்க வேணும் -என்று பிராதிக்கை ஆகிற கேவல வாசிகமாகவும் –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ -என்கிறபடியே -பகவத் பிரசாத ஹேது பூதமான
அஞ்சலியை பிரயோகித்தல் –நிஷாத காகாதிகளை போலே ரஷக வஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கை யாகிற –
கேவல காயிகமாகவும் பற்றினாலும் -பல சித்திக்கு அழிவு இல்லை –
ஞானான் மோஷ-என்கிறபடியே ஞானத்தால் மோஷம் -என்கையாலே -மானசமான பற்றுதல் ஆக கடவது -என்கை-

அதாவது -ஒரு புத்தி விசேஷம் –
இந்த புத்தி விசேஷம் தன்னை பரந்த படியிலே விஸ்தரேண அருளிச் செய்தார் –
ஸ்ரீ யபதி படியிலும் –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனந்யார்க்க சேஷத்வ -ஞான கார்யமாய் –
இதர உபாய வ்யாவ்ருத்தமாய் -பகவத் ரஷகத்வ அநுமதி ரூபமாய் -சக்ருத அனுஷ்டேயமாய்-
வ்யபிசார விளம்ப விதுரமாய் -சர்வாதிகாரமாய் -நியம சூன்யமாய் -அந்திம ஸ்ம்ருதி நிர பேஷமாய்-
ஸூசுகமாய் -யஜ்ஞா கர்ப்பமாய் -திருட அத்யவச்ய ரூபமாய்-இருப்பதொரு ஞான விசேஷம் -என்று
அருளிச் செய்தார் –
ஆகையால் இவ் இடத்தே அதுவும் அனுசந்தேயம் –

————————————————————

சூரணை -156
உபாயம் அவன் ஆகையாலும் -இவை நேரே உபாயம் அல்லாமையாலும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –

இப்படி மானச மாத்ரமே அமையுமோ-சிந்தையாலும் -திரு வாய் மொழி -இத்யாதி படியே
த்ரிவித கரணத்தாலும் ஸ்வீகரிக்க வேண்டாவோ -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
பல சித்திக்கு உபாயம் -பற்றப் படும் ஈஸ்வரன் ஆகையாலும் –
கரண த்ரயத்தாலும் உண்டான பற்றுதல்கள் ஆன இவை ஆபாத ப்ரதீதியிலே உபாயம் போல்
தோற்றக் கழி உண்டு போம் அது ஒழிய சாஷாத் உபாயம் அல்லாமையாலும் –
பல சித்திக்கு அத்யாவசயாத்மகமான ஸ்வீகாரம் ஒன்றே அமையும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-

அதவா-
இப்படி ஓர் ஒன்றில் ஒதுக்கிச் சொல்லுகிறது என் -த்ரிவித கரணத்தாலும்  பற்றுதலை சொன்னாலோ என்ன –
உபாயம்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-அப்போதைக்கு ஓர் ஒன்றே அமையும் -இம் மூன்றும்
வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-
நிர்பந்தம் இல்லை என்கையாலே இந்த ஸ்வீகாரம் த்ரிவித கரணத்தாலும் உண்டானாலும்
குறை இல்லை என்னும் இடம் தோற்றுகிற -இப் பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாகவுமாம்-
ஏக கரணத்தாலே உண்டாகவுமாம் -பல சித்திக்கு குறை இல்லை -அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் வேணும் –
பல சித்திக்கு ஏக கரணமே அமையும் -உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் –
திவ்ய மங்கள விக்கிரகமும் -கரண த்ரயமும் -அபேஷிதமாய் இருக்கும் -என்று இறே பரந்த படியில் இவர்
தாம் அருளிச் செய்தார் –

—————————————————-

சூரணை -157
வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின போது அனுசந்திக்கைகாக –

சக்ரு தேவஹி சாச்த்ராத்த  க்ருதோயம் தார யேன்னரம் சக்ருதேவ பிரபன்னாய -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே பிரபத்தி சக்ருத் கரணீயையாய் இருக்க வர்த்தமானமாகச் சொல்லுகிறது
எதுக்கு என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபோ –
நின் அடி இணை அடைந்தேன் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –
என்கிறபடி சொல்லாதே -ப்ரபத்யே -என்று வர்த்தமானமாகச் சொல்லுகிறது –
பிரகிருதி யோடே இருக்கிற இவன் ரஜஸ் தமஸ் களாலே கலங்கி -உபாய உபாயங்களில்
ஏதேனும் ஒன்றில் அன்வயித்து -பின்னம் சத்வம் தலை எடுத்து -அனுதாபம் பிறந்து –
பயப்பட்ட காலத்திலேயே -பிராயச் சித்திரியம் -சாத்ர யத்புநஸ் சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
பிரபத்தி ஒழிய அதுக்கு பரிகாரமில்லாமை ஆகையாலும் -அது தான்
சக்ருத்  க்ருதமான பின்பு புன காரணம் -ஆகாமையாலும் -பூர்வ பிரபதனத்தை
அனுசந்திக்கைகாகக் கொழுந்து படக் கிடக்கிறது -என்கை –

———————————————————–

சூரணை -158
உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்கும்
இனிமையாலே விட ஒண்ணாமை யாலும்
நடக்கும் –

இன்னமும் இவ் வர்த்தமானத்துக்கு சில பிரயோஜனங்களை அருளிச் செய்கிறார் –
அதாவது –
பூர்வ வாசனையாலே அவசமாக உபாயாந்தரங்களிலே மனஸ் செல்லாமைக்காகவும்
இவ் அனுசந்தானத்தால் ஒழிய போது போக்க அரிதாகையாலே-கால ஷேபதுக்காகவும் –
இதனுடைய ரஸ்யத்தை யாலே விட மாட்டாமையலும்
இவ் அனுசந்தானம் இடைவிடாமல் நடக்க கடவதாய் இருக்கும் -என்கை-

———————————————————-

சூரணை -159
பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும் –

இங்கன் அன்றிக்கே பல சித்திக்கு பல காலம் அனுசந்திக்க வேணும் என்றாலோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
கீழ் சொன்ன பிரயோஜனங்களுக்காக அன்றிக்கே பேற்றுக்கு உறுப்பாக பல காலும்
அனுசந்திக்க வேணும் என்று பிரபத்தி பண்ணில்
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் -சணல் கயிறு கண்ட பிரம அஸ்தரம் போலே
தன்னை கொண்டு நழுவும் -என்கை –

ஆக பூர்வ வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: