ஸ்ரீ முமுஷுப்படி-த்வய பிரகரணம்-சூரணை-130-143–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -130
மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது –

ஆக ஸ்ரீ மத் பதத்தில் பிரக்ருத்யம்சத்தை அருளி செய்தார் கீழ்-
பிரத்யயாம்சத்தை அருளி செய்கிறார் மேல் –
அதாவது
இம் மதுப்புத்தான் நித்ய யோக மதுப்பு ஆகையாலே -இத்தால்
புருஷகார பூதையான பிராட்டியும் ஈஸ்வரனுமான இவருடைய
சேர்த்தியும் எப்போதும் உண்டு என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-

———————————————–

சூரணை -131
இவளோடு கூடிய வஸ்து வினுடைய உண்மை –

இந் நித்ய யோகத்தை உபபாதிக்கிறார் –
அதாவது ஸ்ரீ ய பகிர் நிகில ஹேய பிரத்யநீக கல்யாணை கதாநஸ்வேதர
சமஸ்து வஸ்து விலஷண ஞான ஆனந்த ஏக ஸ்வரூப -என்று
ஸ்வரூப நிரூபகமான ஞான ஆனந்தாதிகளுக்கு முன்னே –
ஸ்ரீ யபதித்வத்தை  சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு பிரதான
நிரூபகையாய் இருக்கையாலே -இவளோடு கூடிய வஸ்துவினுடைய சத்பாவம் இருப்பது -என்கை-

—————————————————–

சூரணை -132
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் -சேதனன் உடைய  அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –

ஆக ஸ்வரூப  அனுபந்தித்வ பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இவளுடைய குண பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு நிறுத்து அறுத்து தீர்க்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேப்ய நாச்யம்-இத்யாதிப்படியே
கால தத்வம் உள்ள அனைத்தும் அனுபவியா நின்றாலும் -சிறிது வரை இட்டுக் காட்டக் கடவது
அல்லாதபடி பண்ணி வைத்த இச் சேதனனுடைய அக்ருத்ய கரண இத்யாதி அபராதத்தையும் கண்டு –
என்னாகப் புகுகிறதோ -என்னும் பயத்தாலே ஈஸ்வரனை விட்டு ஒரு ஷண காலமும் அகல மாட்டாள் -என்கை-

——————————————————–

சூரணை -133
சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டா –

இத்தால் சேதனனுக்கு பலிக்கும் அதை அருளிச் செய்கிறார் –
அதாவது
இப்படி இவள் இருந்து நோக்குகையாலே -சேதனனுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமும்
ஸ்வ அபராதமும் ஆகிற இவை இரண்டையும் நினைத்து -என்னாய் விளையப் புகுகிறதோ  –
என்று அஞ்ச வேண்டா -என்கை–

——————————————–

சூரணை -134
இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா -என்கிறது –

இனி இம் மதுப்பின் தாத்பர்ய அம்சத்தை அருளிச் செய்கிறார் –
இப்படி புருஷகார உபாய வஸ்துக்களின் உடைய நித்ய யோகத்தை பிரதி பாதிக்கிற
இம் மதுப்பால்-இவ் விஷயத்தை ஆஸ்ரயிப்பாருக்கு-ஆஸ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது –
இரண்டு தலையும் கூடி இருக்கும் தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே -என்று  ஆஸ்ரயணத்துக்கு காலம்
பார்த்து இருக்க வேண்டா என்கிறது -என்கை-

—————————————————-

சூரணை -135
இவள் சன்னதியால் காகம் தலைப் பெற்றது –
அதில்லாமையால் ராவணன் முடிந்தான் –

இனி இவள் புருஷ காரத்வத்தின் அவஸ்ய அபேஷித்வத்தை அறிவிக்கைகாக –
இவள் சந்நதிக்கும் அசந்நதிக்கும் உண்டான வாசியை அருளிச் செய்கிறார் –
தேவ்யா காருண்யா ரூபய-என்கிறபடி கிருபை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்த்ர்யத்தை அமுக்கி கிருபையைக் கிளப்பும் அவளான இவள் சந்நிதியாலே –
அபராதத்தை தீரக் கழியச் செய்து -ப்ரஹ்ம அஸ்த்ரத்துக்கு இலக்காய்-தலை அறுப்பு உண்ணத் தேடின காகம் –
க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடி க்ருபா விஷயமாய் தலைப் பெற்றுப் போயிற்று –
அப்படி இருக்கிற இவள் சந்நிதி இல்லாமையாலே போக்கற்று செயல் மாண்டு நின்ற நிலை
ஒத்து இருக்க செய்தேயும் -காகத்தோபாதி அபராதம் இன்றிக்கே இருக்க –
ராம சரத்துக்கு இலக்காய் ராவணன் முடிந்தே போனான் -என்கை –
ஆகையால் ஆஸ்ரயிப்பாருக்கு இவள் சந்நிதியே வேணும் என்று கருத்து –
ஆக ஸ்ரீ மத் பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

———————————————————-

சூரணை -136
புருஷ கார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால்-தலை எடுக்கும்
குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் –

அநந்தரம் நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
உபதேசத்தாலும் அழகாலும் கண் அழி வற வசீகரித்து கார்யம் கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே –
ஆஸ்ரயண உந்முகனான சேதனன் அநாதி காலம்  பண்ணின அபராதங்களைப் பார்த்துச் சீறி –
அங்கீகரியேன்-என்று இருக்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் தலை மடிந்தால் அதன் கீழ்
தலை எடுக்கப் பெறாத செறிப்பு தீர்ந்து தலை எடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது -நாராயண பதம் -என்கை –

———————————————————-

சூரணை -137
அவை யாவன -வாத்சல்யமும்-ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் -ஞானமும் சக்தியும் –

அவை தாம் எவை என்ன அருளிச் செய்கிறார் –
இவற்றில் வத்சத்தின்  பக்கல்  தேனு இருக்கும் இருப்பு -அதாவது –
அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும் –
ஷீரத்தை கொடுத்து வளர்க்கையும் –
எதிரிட்டவரை கொம்பிலும் குளம்பிலும்  கொண்டு நோக்குகையும் -இறே
அப்படியே -ஈஸ்வரனும் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
பாலே போல் சீர் –பெரிய திரு அந்தாதி -58–என்கிற குணங்களாலே தரிப்பித்து –
கதஞ்சன ந த்யஜேயம்-என்றும் அபயம் சர்வ பூதேப்ய -என்றும் சொல்லுகிறபடி
அனுகூலர் நிமித்தமாகவும் -பிரதி கூலர் நிமித்தமாகவும் நோக்கும் –

ஸ்வாமித்வமாவது-இவள் விமுகனான தலையிலும் விடாதே நின்று -சத்தையை நோக்கிக் கொண்டு
போருகைக்கு ஹேதுவான ஒரு பந்த விசேஷம் -அதாவது உடையவனாய் இருக்குமிருப்பு –
அத்வேஷம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக உண்டான ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம்
உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம் அடியாக –

சௌசீல்யமாவது -உபயவிபூதி யோகத்தாலும் -பெரிய பிராட்டியாரோடு சேர்த்தியாலும்-நிரங்குசமாய்  இருக்கிற
ஈஸ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் நான் யார் –திரு வாய் மொழி -5-1-7-என்று
பிற்காலிடாதபடி எல்லோரோடும் ஒக்க மேல் விழுந்து புரை அறக் கலக்கையும்-
அது தன் பேறாக இருக்கையும் –
எதிர் தலையிலே அபேஷை இன்றியிலே இருக்க கலக்கையும் –

சௌலப்யமாவது -கண்ணுக்கு விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு
ஆஸ்ரிக்கலாம் படி எளியனாய் இருக்கை-

ஞானமாவது -இச் சேதனனுக்கு கழிக்க  வேண்டும் அநிஷ்டங்களையும்
கொடுக்க வேண்டும்  இஷ்டங்களையும் நேராக அறிகைக்கு ஈடான ஸ்வ வ்யதிர்க்த சமஸ்த
பதார்த்தங்களையும் ஒரு காலே அபரோஷிக்க வல்ல அறிவு –

சக்தியாவது -ஹேயரான நித்ய சம்சாரிகளை உபாதேய தமரான நித்ய சம்சாரிகளோடு ஒரு கோர்வை ஆக்க வல்ல
அகடிதகடிந சாமர்த்தியம் –

இவற்றில்  வாத்சல்யாதிகள் நாலும் ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதிகம்
ஞானாதிகள்    இரண்டும் ஆஸ்ரித கார்ய ஆபாதிகம் –

நிகரில் புகழாய் -திரு வாய் மொழி -6-10-10-என்று தொடங்கி -வாத்சல்யாதிகள் நாலும் இறே –
ஆஸ்ரயணதுக்கு உடலாக ஆழ்வார் அருளிச் செய்தது –
ஞான சக்திகள் இரண்டும் சொன்ன இது -ப்ராப்தி பூர்த்திகளுக்கும் உப லஷணம் –
கார்யகரத்வதுக்கு அவையும் அபேஷிதங்கள் ஆகையாலே –

——————————————-

சூரணை -138
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –

இக் குணங்களுக்கு இவ் இடத்தில் விநியோகங்கள் எவை என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆஸ்ரயணோந்முகனான இச் சேதனன் தன் தோஷத்தை பார்த்து அஞ்சாமைக்கு உறுப்பு –
தோஷத்தை போக்யமாகக் கொள்ளும் வாத்சல்யம் –
நம் கார்யம் செய்யுமோ செய்யானோ -என்று சங்கியாதே கார்யம் செய்யும் என்று
விஸ்வசிக்கைக்கு உறுப்பு இழவு பேறு தன்னதாம் படியான ஸ்வாமித்வம் –
உபய விபூதிக்கும் கடவனாய் இருக்கும் பெருமைக்கு பிரகாசமான ஸ்வாமித்வத்தை
கண்டு ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாமைக்கு உறுப்பு தாழ நின்றவர்களோடு
புரை அறக் கலக்கும் ஸ்வபாவமான சௌசீல்யம்
அதீந்த்ரியம் என்று பிற்காலியாமல் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பு
தன் வடிவை சஷூர் விஷயம் ஆக்குகை ஆகிறது சௌலப்யம் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிறபடியே ப்ராப்தி விரோதியைப் போக்கி
ப்ராப்யனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு -ப்ராப்தா வான இவன் கீழ் நின்ற நிலையும்
மேல் போக்கடியும் அறிகைக்கும்-அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும் – ஏகாந்தங்களான ஞான சக்திகள்-என்கை-

——————————————————-

சூரணை -139
இங்கு சொன்ன சௌலப்யதுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்

சௌகர்ய ஆபாதங்களான குண சதுஷ்ட்யத்திலும் சௌலப்யம் பிரதானம் ஆகையாலும் –
அந்த சௌலப்ய காஷ்டையை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இப் பதத்தில் ஆஸ்ரயண உபயோகியாய் சொன்ன சௌலப்யம்- ஆஸ்ரிதர் உகந்தது ஒன்றை திரு மேனியாகக்
கொண்டு -சதா சந்நிதி பண்ணி இருக்கும் அர்ச்சாவதாரம் என்கை –

——————————————–

சூரணை -140
இது தான் பர வ்யூஹ விபவங்கள் போல் அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படி இருக்கும் –

இது தன்னை உபபாதிக்கிறார் –
அதாவது –
இச் அர்ச்சாவதாரம் தான் தேச விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயம் ஆகாத
பர வியூஹங்களும் கால விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயமாகாதபடி போன
விபவமும் போல் அன்றிக்கே
ஆசன்னமாய் அநவரத சந்நிதி பண்ணிக் கொண்டு இருக்கையாலே -அநவரதம் கண்ணாலே
காணலாம்படி இருக்கும்-என்கை-

——————————————————–

சூரணை -141
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –

இக் குணங்கள் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே காணலாமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது சௌகர்ய ஆபாதகமாகவும் கார்ய ஆபாதகமாகவும் சொன்ன
இக் இக்குணங்கள் எல்லாம்-இவை காண்கையாலே அபேஷை உடைய நமக்கு
நம்முடைய பெருமாள்-உரிமையாக நம்பெருமாளை மா முனிகள் அருளும் ஸ்ரீ ஸூக்தி – பக்கலிலே காணலாம் -என்கை-

————————————–

சூரணை -142
திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் நிற்கிற
நிலையே நமக்கு தஞ்சம் –

பெருமாள் பக்கலிலே இக் குணங்களுக்கு பிரகாசங்களாய் உள்ளவற்றைச் சொல்லி –
இவற்றுடனே நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம் -என்கிறார் –
அதாவது
கார்யகரத்வ உபயோகியான ஞான சக்திகளுக்கு பிரகாசகமாம் படி
திருக் கைகளிலே தரித்துக் கொண்டு இருக்கிற சங்கு சக்ராதி திவ்ய ஆயுதங்களும் –
வாத்சல்ய பிரகாசகமாம் படி வைத்து அஞ்சல் என்ற கையும் –
ஸ்வாமித்வ பிரகாசகமாக கவித்த முடியும் –
சௌசீல்ய ப்ரகாசகமான முகமும் முறுவலும் –
அனைவருக்கும் கண்டு பற்றலாம் படி சௌலப்ய ப்ரகாசகமான ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாக-
கொண்டு எழுந்து அருளி இருக்கிற நிலையே அநந்ய கதிகளான நமக்கு ரஷகம் -என்கை –

——————————————————-

சூரணை -143
ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும் –

உபாய உபேய நிஷ்டருக்கு அபேஷிதமான ஆகாரங்கள் இரண்டும் கீழ்ச் சொன்னபடியே
நிற்கிற திரு மேனியிலே தோற்றும் என்கிறார் –
அதாவது
ரஷண பரிகரமான திவ்ய ஆயுதங்களோடும் ரஷணத்துக்கு கவித்த முடியோடும் கூடி இருக்கையாலே –
ரஷகத்வம் தோற்றுகையாலும் -அணியார் ஆழியும் சங்கும் ஏந்தும் -திரு வாய் மொழி -8-3-6-
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திரு வாய் மொழி -3-1-1–என்கிறபடி
அவை தானே அழகுக்கு உடலாய் -வைத்தஞ்சல் என்று கையும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்தில்
அழுந்தின திரு அடிகளும் -ஓர் ஒன்றே அழகுக்கு எல்லை நிலமாய் இருக்கையாலே போக்யத்வம் தோற்றுகையாலும் –
இரண்டும் திரு மேனியிலே பிரகாசிக்கும் -என்கை –
ஆக நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: