ஸ்ரீ முமுஷுப்படி-திருமந்திர பிரகரணம் -சூரணை 95-104–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை-95
நாராயணன் என்றது நாரங்களுக்கு அயநம்  என்ற படி

அநந்தரம் நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நாராயண பதம் தான் -நாரணாம் அயநம் ய ச நாராயண -என்றும் –
நாரா அயநம் யஸ்ய ச நாராயண -என்றும்
தத் புருஷ பஹூ வ்ரீஹி ரூப சமாச த்வய சித்தம் ஆகையாலே –
அதில் தத் புருஷனில் அர்த்தத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

(பேறு பலம் புருஷார்த்தம் ப்ராப்யம் உபேயம் பர்யாய சொற்கள்
புருஷனாலே அர்த்திக்கப் படுவதே புருஷார்த்தம் -அஜீரணம் தொலைந்த பிள்ளை பசி சொல்ல சொல்லத் தானே
கஞ்சி தொடங்கி கிரமமாக தருவது போலே – )

———————————————————

சூரணை -96
நாரங்கள் ஆவன நித்ய வஸ்துக்களினுடைய திரள் –

நாரங்கள் ஆகிறவை தாம் எவை -என்ன அருளிச் செய்கிறார் –
நார பதம் –
நர -என்றும்-நார -என்றும் -நாரா -என்றுமாய் –
ரிங்க்ஷயே-என்கிற தாதுவிலே -ர -என்ற பதமாய் -ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி –
நகாரம் அதை நிஷேஷித்து –
நர -என்று ஷயம் இல்லாத நித்ய வஸ்துவைக் காட்டி –

சமூஹார்த்தத்திலே -அன்-பிரத்யமும் -ஆதி வ்ருத்யுமாய் -நார -என்று நித்ய வஸ்து சமூகத்தைச் சொல்லி –

நாரா -என்று பஹூ வசனம் ஆகையாலே -சமூக பாஹூள்யத்தைச் சொல்லுகையாலே –
நித்ய வஸ்துகளினுடைய திரள் -என்கிறார் –

இதில் -நித்ய -என்கையாலே -நர -சப்தார்த்தமும் –
வஸ்துக்கள்-என்கையாலே -நார -சப்தார்த்தமும் –
அவற்றின் உடைய -திரள்-என்கையாலே பஹூ வசநார்த்தமும் சொல்லப் பட்டது இறே-
(கறவை கணங்கள் பல போல மூன்றும் இங்கும் )

————————————————–

சூரணை-97
இவை ஆவன
ஞான ஆநந்த அமலத்வாதிகளும் –
ஞான சக்தியாதிகளும் –
வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
திரு மேனியும் –
காந்தி சௌகுமார்யாதிகளும் –
திவ்ய பூஷணங்களும்-
திவ்ய ஆயுதங்களும் –
பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும் –
நித்ய சூரிகளும் –
சத்ர சாமராதிகளும் –
திரு வாசல் காக்கும் முதலிகளும் –
கணாதிபரும்-
முக்தரும் –
பரம ஆகாசமும் –
பிரகிருதியும் –
பத்தாத்மாக்களும் –
காலமும் –
மஹதாதி விஹாரங்களும் –
அண்டங்களும் –
அண்டத்துக்கு உள் பட்ட தேவாதி பதார்த்தங்களும் —

தாத்ருசங்களானவை தாம் எவை-என்ன -அருளிச் செய்கிறார்
ஞான ஆநந்த அமலத்வாதிகள் -ஆவன –
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –
ஆதி சப்த்தத்தாலே -அனந்த்தத்வத்தைச் சொல்லுகிறது –

ஞான சக்த்யாதிகள் -ஆவன –
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான சமஸ்த கல்யாண குணங்களுக்குப்
பிரதானமாய் இருந்துள்ள -ஞான சக்தி பல ஐஸ்வர்யம் வீர்ய தேஜஸ் களாகிற ஷட் குணங்கள் –

வாத்சல்ய சௌசீல்யாதிகள் -ஆவன
அந்த ஷட் குண்ய ஆயத்தமான -வாத்சல்ய சௌசீல்ய ஸ்வாமித்வ
சௌவ்லப்யாதி அஸங்க்யேய கல்யாண விசேஷங்கள்-

திரு மேனி -ஆவது –
அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரகம் –
ஏக வசனம் ஜாத் அபிப்ராயமாய்-நித்யமான திவ்ய விக்ரகத்தையும் –
ஐச்சிகமாக பரிகிரஹிக்கும் விக்ரஹாந்தரங்களையும் சொல்லுகிறது –
அல்லாத போது ஒரே சமூகமாக எண்ணி வருகிற பிரகரணத்துக்குச் சேராது –
இது தான் நடுவில்  திரு வீதி பிள்ளை பட்டர்-ஆச்சான் பிள்ளை -இவர்கள் அருளிச் செய்த
பிரபந்தங்களிலே ஸூஸ்பஷ்டம் –

காந்தி சௌகுமார்யாதிகள் -ஆவன –
அந்த விக்ரக குணங்களான -சௌந்தர்ய சௌகுமார்ய லாவண்ய யவ்வனாதிகள் –

திவ்ய பூஷணங்கள் -ஆவன –
ஆபரண சூரணையிலே பாஷ்யகாரர் அருளிச் செய்தபடியே –
க்ரீடாதி நூபுரமந்தமாக -அத் திருமேனிக்குச் சாத்தும் அசங்க்யேயமான திரு ஆபரணங்கள் –

திவ்ய ஆயுதங்கள் -ஆவன –
அழகுக்கும் ஆஸ்ரய விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருந்துள்ள –
சங்கு சக்கர கதா அஸி சார்ங்காதி அசங்க்யேய ஆயுத விசேஷங்கள் –

பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சியார் -ஆவார் –
ஸ்ரீ வல்லப ஏவம் பூமி நீளா நாயக –
தேவி த்வாமனு நீளயா சஹா மஹீ தேவ்யா சஹஸ்ரம் ததா-ஸ்ரீ பட்டர் -என்கிறபடியே -பிரதான மஹிஷியான
பெரிய பிராட்டியார் முதலாக -தத் சமானைகளான பூமி நீளை களும் -மற்றும் அநேகராக சொல்லப் படுகிறவர்களும்-
லஷ்மீ ப்ரப்ருதி  மகிஷி வர்க்கங்களும் -என்று இறே ஆச்சான் பிள்ளை பரந்த படியில் அருளிச் செய்தது –

நித்ய சூரிகள் -ஆவார் –
அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாய் இருந்துள்ள அசங்க்யேயரான ஸூரி ஜனங்கள் –

சத்ர சாமராதிகள் -ஆவன-
கைங்கர்ய உபகரணங்களான சத்ர சாமர தால வ்ருந்த ப்ருங்கார பதத் க்ருஹாதிகள் –

திரு வாசல் காக்கும் முதலிகள்-ஆவார் –
சண்ட பிரசண்ட -பத்ர ஸூபத்ர-ஜய விஜயாதிகள்-(தாதா விதாதா )
கணாதிபர்-ஆவார்-குமுத குமுதாஷ-புண்டரீக வாமன-சங்கு கர்ண சர்வ நேத்ர ஸூமுக ஸூப்ரதிஷ்டாதிகள் –
(கோயில் காப்பார்களும் வாசல் காப்பார்களும் )

முக்தர் -ஆவார் –
கரை கண்டோர் -என்கிறபடியே சம்சார சாகரத்தைக் கடந்து அக்கரைப் பட்டு –
நித்ய ஸூரிகளோடு சாமானகாரராய் -நிகில கைங்கர்ய நிரதராய் இருக்கும் -அசங்க்யேயரான சேதனர்-

பரம ஆகாசம் -ஆவது –
பஞ்ச உபநிஷத் மயமான பரம பதம் -இது தான் பஞ்ச உபநிஷத்மயம்
ஆகையாலே -சமுகாத் மயமாய் இறே இருப்பது -ஆகையால் சமூக கணனைக்கு விரோதம் இல்லை –
பஞ்ச உபநிஷத் மயமாகையாலே பரம பதமும் சமூகாத் மயமாய் இருக்கும் -என்று இறே
ஆச்சான் பிள்ளை அருளி செய்தது –
பஞ்ச உபநிஷத்கள் -பரமேஷ்டி-புமான் -விச்வன்-நிவ்ருத்தன் -சர்வன் –

ஆக –
ஞான ஆநந்த அமலத்வாதிகளும் -என்று தொடங்கி-இவ்வளவும்
ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் –
நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான கல்யாண குணங்களையும் –
அக் குணங்களுக்கு பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
விக்ரஹ குணமான சௌந்த்ர்யாதிகளையும் –
அந்த சௌந்தர்யாதிகளோபாதி பூத்தால் போலே சாத்தின திவ்ய ஆபரணங்களையும் –
அவ் ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படியான திவ்ய ஆயுதங்களையும் –
இவை இத்தனையும் காட்டில் எரித்த நிலவாகாத படி அருகே இருந்து அனுபவிக்கிற நாச்சிமாரையும் –
அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்ய ஸூரிகளையும் –
அவர்களுக்கு கைங்கர்ய உபகரணங்களான சத்ர சாமராதிகளையும் –
இச் சேர்த்திக்கு என்ன வருகிறதோ -என்று வயிறு எரிந்து நோக்கும் திரு வாசல் காக்கும் முதலிகளும் –
அப்படி மங்களாசாசன பரராய் -திரு படை வீட்டுக்கு அடைய காவலாய் இருக்கிற கணாதிபரையும்-
நிவ்ருத்த சம்சாரராய் -அவர்களோடு ஒரு கோர்வையாய் அடிமை செய்கிற முக்தரையும் –
அவ் அடிமைக்கு வர்த்தகமான பரம பதத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

லீலா விபூதியில் உள்ளவற்றை அருளிச் செய்கிறார் மேல் –
பிரகிருதி -ஆவது –
குண த்ரயாத் மகதயா சமூஹாத்மிகையாய் இருக்கும் மூல பிரகிருதி –
குண த்ரயாத்மிகை ஆகையாலே மூல பிரகிருதியும் சமூஹாத்மிகையாய் இருக்கும் -என்று இறே
இதற்கும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –

பத்தாத்மாக்கள்-ஆவார் –
உரை மெழுகில் பொன் போலே இப் பிரக்ருதிக்குள்ளே உரு மாய்ந்து
கிடக்கிற ஆத்மாக்கள் –

காலம்-ஆவது –
அஹோத்ராதி விபாக யுகததயா சமூஹமாய் இருக்கும் அசித் விசேஷம் –
அஹோத்ராத்ராதி விபாகங்கள் அநேகம் ஆகையாலே காலமும் சமூஹாத் மகமாய இருக்கும் –
என்று இறே இதுக்கும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
ஆக இவ்வளவும் ஸ்வரூபேன நித்யங்களான வஸ்துக்களைச் சொல்லிற்று –

மேலே பிரவாஹா ரூபேண நித்யங்களைச் சொல்லுகிறது –
ஸ்வரூபேண நித்யத்வமாவது -சத்தான பதார்த்ததினுடைய -உத்பத்தி விநாச அத்யந்த அபாவம் –
பிரவாஹா ரூபேண நித்யத்வமாவது -உத்பத்தி விநாச யோகியாகா நிற்கச் செய்தேயும்
பூர்வ காலத்தில் உண்டான நாம ரூப லிங்காதிகளுடைய அனந்யதா பாவம் –

இதில் மகாதாதி விகாரங்கள் -ஆவன –
மகத் தத்வம் தொடங்கி ப்ருத்வி அளவாக உண்டான இருபத்து மூன்று தத்வமும் –

அண்டங்கள் ஆவன –
இம் மகாதாதிகளாலே -ஆரப்தங்களாய் அண்டா நாந்து சஹஸ்ராணாம்
சஹஸ்ரான்ய யுதானி ச -என்கிற படியே அசங்க்யேயமாய் இருக்கிற அண்ட விசேஷங்கள்-

அண்டத்துக்கு உள் பட்ட தேவாதி பதார்த்தங்கள்-ஆவன –
அண்டார்ந்தார் வர்திகளான
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள்-

ஆக நார பதம் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————

சூரணை -98
அயநம் -என்றது இவற்றுக்கு ஆஸ்ர்யம்  என்றபடி –

மேலே அயன -பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அயன சப்தம் ஆஸ்ரய வாசியாகையாலே இவற்றுக்கு அயநம் என்றது
இவற்றுக்கு ஆஸ்ரயம் என்றபடி -என்கை –

——————————————————

சூரணை -99-
அங்கன் இன்றிக்கே இவை தனை ஆஸ்ரயமாக உடையன் -என்னவுமாம் –

பஹூ வ்ரூஹி சமாச அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இவற்றுக்கு ஆஸ்ரயம் என்று தத் புருஷனாக சொல்லுகை அன்றிக்கே –
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையன் -என்று பஹூ வ்ரிஹியாக சொல்லவுமாம் -என்கை

இவற்றுக்கு ஆஸ்ரயம் -என்கிற இடத்தில் குணங்களையும் சொல்லிற்றே ஆகிலும்
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையன் -என்கிற இடத்தில் குணங்களை ஒழிய சொல்ல வேணும் –
அக் குணங்களுக்கு வ்யாப்யத்வம் சொல்லும் அளவில் -ஆத்மாஸ்ரயமும் அனவஸ்தையுமாகிற
தோஷங்கள் வருமாகையால் -தன் குணங்களிலே ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டனாயே வியாபிக்க வேணும் –
நிர் குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபக குணங்களாய் அறுகையாலே ஆத்மாஸ்ர்ய தோஷம் உண்டாகும் –
அதுக்கு மேலே தன் குணங்களிலே குணி வியாபிக்க என்று புக்கால் -தத் ஆஸ்ர்யமான குணங்களையும் குணி
வியாபிக்க வேணும் -அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வியாபிக்க வேணும் –
ஆகையாலே -அனவஸ்தாதுஸ்தமாம் -என்ற இது தன்னை ஸூஸ்பஷடமாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே-

——————————————-

சூரணை -100
இவை இரண்டாலும் பலித்தது பரத்வ சௌ லப்யங்கள் –

இவ் உபய சமாசத்தாலும் பலிதாம்சத்தை அருளி செய்கிறார் -இது தொடங்கி -அதாவது –
நாரங்களுக்கு அயநம் -நாரங்களை அயநமாக உடையவன் -என்கிற இவை இரண்டாலும் – பலித்த அர்த்தம் –
தன்னை ஒழிந்த சமஸ்த வஸ்துக்களுக்கும் தான் ஆதாரமாய் இருக்கை யாகிற பரத்வமும் –
இப்படி பெரியனான தான் சகல சேதன அசேதனங்களிலும்  தன்னை அமைத்து கொண்டு
புக்கு இருக்கை யாகிற ஸௌலப்யமும் என்கை-

——————————————-

சூரணை -101
அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும் -ஆகவுமாம் –

இன்னமும் ஒரு பிரகாரத்தாலே இந்த சமாச த்வய பலிதங்களை அருளிச் செய்கிறார்-
அதாவது –
பஹூவ்ரீஹியும் தத் புருஷனுமாகிற உபய சமாசத்தாலும் பலித்தது –
அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் -சொல்லலுகிற படியே -அகில சேதன அசேதனங்களிலும்
அந்தராத்மதயா அவஸ்திதனாய் கொண்டு நியந்தாவாய் இருக்கை யாகிற -அந்தர்யாமித்வமும் –

இண் கதவ் -என்கிற தாதுவிலே யாதல் –
அயகதவ் -என்கிற தாதுவிலே யாதல்
சித்தமான அயன பதத்திலே – கரணே வ்யுத்புத்தியாலும்  -கர்மணி வ்யுத்புத்தி யாலும் –
பிரகாசிதமான உபாயத்வமும் உபேயத்வமும் -என்கை –

(அயனம் ஆஸ்ரயம் கீழே பார்த்தோம் –
இங்கு நாரங்கள் இதை அடைகின்றன இத்தால் அடைகின்றன -என்று கொண்டு
நாராயணனால் என்று கரணே –உபாயம்
நாராயணனை-கர்மணி- அடைகின்றனர் உபாயம் )

பஹூவ்ரீஹி யோஜனை சொல்லுகிற இடத்தில் யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை
குணங்களை ஒழிந்த வஸ்துக்களுக்கு வாசகமாக கொண்டாப் போலே –
தத் புருஷ யோஜனையிலும் -அயன சப்தத்தை உபாய உபேய வாசியாக
கொள்ளும் அளவில் யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை அசேதனங்களை ஒழிந்த
சேதன வஸ்துக்களுக்கு வாசகமாக கொள்ளக் கடவது –

நாரஸ்த்விதி சர்வ பும்ஸாம் சமூஹா பரிகச்யதே கதிராலபம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத -என்றும்
நார சப்தேன ஜீவானாம் சமூஹா ப்ரோச்யதே புதை தேஷாமயான பூதத்வான் நாராயண இஹோச்யதே -என்றும்
இத்யாதிகளாலே இவ் அர்த்தம் சொல்லப் படா நின்றது இறே –

————————————————–

சூரணை -102
எம்பிரான் எந்தை -என்கையாலே
ஈச்வரனே எல்லா உறவு முறையும் என்றும் சொல்லும் –

கர்மணி வ்யுத்புத்தி சித்தமான ப்ராப்யத்வத்துக்கு சங்கோசம் இல்லாமையாலே –
சர்வ பிரகார விசிஷ்டமாய் இருக்கை யாலும் –
பந்து லாபமும் -ப்ராப்யமுமாய் இருக்கை யாலும் –
ஈஸ்வரனுடைய சர்வ வித பந்துத்வமும் இப் பதத்திலே சொல்லும்படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே
ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

——————————————————–

சூரணை -103
நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காய் இருக்கும் –

இப்படி பந்து பூதனாய்க் கொண்டு இத் தலைக்கு அவன் செய்யுமது எது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
நாம் தன்னோடு ஓட்டற்று பிறர்க்கு நல்லராய் இருந்த காலத்திலும்
அவன் நமக்கு நல்லானாய் இருக்கும் என்கை –

——————————————————–

சூரணை -104
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்து -சத்தையே பிடித்து –
நோக்கிக் கொண்டு போரும்-

இப்படி நாம் அந்ய பரரான அன்றும் -நமக்கே யாய் இருந்து அவன் செய்து போருமது தான் எது –
என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
நேர்கொடுநேர் தங்கள் பக்கல் வந்து அபேஷிதங்களை வாங்கி ஜீவியாதே துர்மானத்தாலே
பட்டினியே திரியும் அவர்களையும் விடமாட்டாமையாலே -அசலறியாத படி -ராத்திரி மடத்திலே புஜிப்பாரை போலே –
தன் பக்கல் தலை சாயோம் -என்று இச் சேதனர் ஸ்வாதந்த்ர்யமடித்து திரியா நிற்க –
இவர்கள் கண் காணாதபடி அந்தராத்மாவாய் கொண்டு -உள்ளே மறைந்து இருந்து –
இவர்கள் சத்தையே தொடங்கி ரஷித்துக் கொண்டு போரும் என்கை-

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: