.திரு விருத்தம் -43-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

 கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே -தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –உயர்வற உயர் நலம் -1-1-
கண்ணும் செம் தாமரை –
எம்பிரான் தடம் கண்கள் என்று கண் அழகை அனுபவித்தார் –
அவ்  அழகு தான் அவயவாந்தரத்திலே மூட்டிற்று -கண்ணும் செம் தாமரை என்று மற்றை அழகுகளோடு ஒருகால் சேர்ந்து அனுபவிக்கிறார் –
முற்பட குமுழி நீருண்டார் -இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –
கையும் அவை -கண் இட்டு கொடுக்க அணைத்த கை –
சம்ச்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா சுகாடாம்பரி ஷச்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –
அடியோ அவையே -அணைத்த போதே சுகஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –
புண்டரீகாஷா நாம -இறே-
கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –
வண்ணம் இத்யாதி -எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –
பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளை பிள்ளை ஆழ்வான்

கண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்-
மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-
மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –
விண்ணும் இத்யாதி -சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி
சத்தானத்தை உடையவனுமாய் -அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா
தொடக்கமானவர் -அதுக்கு அவ் வருகான முக்தர் -நித்யர் -இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –
எம்பிரான்-தமக்கு அவ் அழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –
நக்ராஹ்யா கேநசித் க்வசித் –
யச்யாமதம் தஸ்யமதம் -இத்யாதி –
ரூப சம்ஹனனம்-சம்ச்நானத்தை-
லஷ்மீம் -சமுதாய சோபை -இருந்தபடி –
சொவ்குமார்யம் -பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
சூவேஷதாம் -தாபச வேஷம் இருந்தபடி –
தத்ருசிர்  விச்மிதாகாரா -விச்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-
ராமஸ்ய வன வாஸின -அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: