ஸ்ரீ முமுஷுப்படி-திருமந்திர பிரகரணம் –சூரணை-35-57–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை-35
இதில் அகாரம் சகல சப்தத்துக்கும் காரணமாய்
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே
சகல ஜகத்துக்கும் காரணமாய்
சர்வ ரஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –
(அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு )

இனி இவ் அஷய த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அகார அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதாவது –

இவ் அஷர த்ரயத்திலும் வைத்து கொண்டு பிரதம அஷரமான அகாரம்
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச பிரபஞ்சம் வேத சப்தேப்ய எவாதவ் தேவாதீநாஞ் சகர ச -என்கிறபடியே
லௌகிக சகல சப்தங்களுக்கும் வேதம் காரணமாய்

பிரணவாத்யா சதத வேதா ஓங்கார பிரபவா வேதா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அந்த வேதங்களுக்கும் பிரணவம் காரணமாய் –

தஸ்ய பிரக்ருதிலீ நஸய -என்கிறபடியே
அந்த பிரணவம் தனக்கும் தான் காரணமாய் இருக்கையாலே –

அகாரோ வை சர்வா வாக் சமஸ்த சப்த மூலாத்வாத காரஸ்ய ஸ்வபாவாத -என்கிறபடியே
சகல சப்தத்துக்கும் காரணமாய்

சர்வேஸ்வரன் சமஸ்த வஸ்து சரீரதயா சர்வ ரஷகனாய் இருக்கும் படியை பிரதி பாதிக்கிற
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே –

யதோ வா இமானி பூதாநி ஜாயந்தி யே
ந ஜாதானி ஜீவநதி ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச ச சரக்க கர்த்தா
ச ஏவ பாத்யத்தி ச பால்யதே ச -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

எல்லா ஜகத்துக்கும் காரணமாய்
எல்லாருக்கும் ரஷகனாய் இருக்கும் எம்பெருமானைச் சொல்லுகிறது என்கை-

இத்தால்
இவ் அஷரத்தில் -பிரக்ருத் யர்த்தமான-காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

இவ் அகாரத்துக்கு நாராயண பத ஸங்க்ரஹ தயா ரஷக வாசித்வம் சொல்லும் போதும்
தாது சித்த வேஷத்தை அவலம்பித்தே சொல்ல வேணும் இறே

——————————————–

சூரணை-36
ரஷிக்கை யாவது
விரோதியை போக்குகையும்-
அபேஷிதத்தைக் கொடுக்கையும் –

ரஷிக்கை யாவது தானெது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார்
அதாவது
ரஷகவம் தான் அநிஷ்ட நிவர்த்தகத்வ இஷ்ட பிராபகத்வ ரூபேண த்விவிதமாகையாலே
ஈஸ்வரன் சேதனரை ரஷிக்கையாவது
அவர்களுக்கு துக்க அவஹமான விரோதியைப் போக்குகையும்
ஸூக அவஹமான அபேஷித்ததைக் கொடுக்கையும் என்கை-

——————————————

சூரணை -37
இவை இரண்டும் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும்-

இவர்களுக்கு இவன் போக்கும் விரோதி எது –
கொடுக்கும் அபேஷிதம் எது என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -என்றது
தத் தத் அதிகார அனுகுணமாக இருக்கும்-

—————————————–

சூரணை -38
சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள் -அபேஷிதம் அன்ன பாநாதிகள் –
முமுஷுகளுக்கு விரோதி -சம்சார சம்பந்தம் -அபேஷிதம் பரம பத ப்ராப்தி
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி -கைங்கர்ய ஹானி -அபேஷிதம் -கைங்கர்ய விருத்தி –

இது தன்னை வியக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது
தேக ஆத்மா அபிமாநாதிகளும்-சப்தாதி விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும் சம்சாரிகளுக்கு –
நிவர்த்யமான விரோதி
சத்ருக்களால் வரும் நலிவு தொடக்க மானவை –
பிராப்யமான அபேஷிதம்
சோறு தண்ணீர் முதலானவை என்கை –

சத்ரு பீடாதிகள் என்ற  இடத்தில்  ஆதி சப்தத்தாலே
தேக மனோ வியாதி முதலானவற்றால் வரும் பீடைகளைச் சொல்லுகிறது –
அன்ன பாநாதிகள் என்கிற  இடத்தில் -ஆதி சப்தத்தாலே
ஸ்ரக் வஸ்த்ர ஆபரண அங்கராக அங்கந ஆலிங்க நாதிகளைச் சொல்லுகிறது –

முமுஷுகளுக்கு இத்யாதி –
அதாவது
சம்சாரத்தில் அடிக் கொதித்து -பரம பதத்தில் ஆசைப் படா நிற்கும் முமுஷுகளுக்கு – நிவர்த்யமான  விரோதி –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய்க் கொண்டு –
இவ் விபூதியில் இருக்கை -ஆகிற சம்சார சம்பந்தம்-
ப்ராப்யமான அபேஷிதம் –
பகவத் அனுபவாதிகளுக்கு அனுகூலமான பரமபதத்தைப் பிராபிக்கை என்கை –

முக்தருக்கும் இத்யாதி –
அதாவது –
நிவ்ருத்த சம்சாரராயும் -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராயும் -பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்ய பரராய் இருக்கும்
முக்தருக்கும் நித்யருக்கும் விரோதி –
வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் திரு அடிகளிலே
ஸ்வரூப அனுரூபமாக பண்ணிக் கொண்டு போகும் கைங்கர்யத்துக்கு வரும் விச்சேதம்
அபேஷிதம் -உத்தரோத்தரம் அடிமை செய்து செல்லுகை யாகிற கைங்கர்ய விருத்தி என்கை-

ஆக இப்படி அதிகார அனுகுணம் விரோதியைப் போக்கி
அபேஷிதத்தைக் கொடுக்கை யாகையாலே
ஈஸ்வரனே சர்வ ரஷகன் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று-

————————————–

சூரணை -39
ஈஸ்வரனை ஒழிந்தவர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம்
பிரபந்த பரித்ரானத்திலே  சொன்னோம் –

இப்படி ஈஸ்வரனேயோ பின்னை எல்லாரையும் ரஷிக்கிறவன்-
லோகத்திலே மாதா பிதா பிரகிருதி தேவதாந்திர பர்யந்தமாக ரஷகராய் போகிறவர்கள்
பலரும் இல்லையோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

நிருபாதிக  பந்துவாய் -சர்வகாலமும் கைவிடாதே நோக்கி கொண்டு போரும் சர்வேஸ்வரனை
ஒழிந்த ஔபாதிக பந்துகளான மாதா பித்ராதிகளும் அர்வாசீ நரான தேவதாந்த்ரங்களும் –
ரஷகர் அல்லர் என்னும் இடம் –
ச ஹேதுகமாக பிரபன்ன பரித்ரானம் என்கிற பிரபந்தத்திலே சொன்னோம் –
அதில் கண்டு கொள்வது என்கை-

————————————-

சூரணை -40
ரஷிக்கும் போது பிராட்டி  சந்நிதி வேண்டுகையாலே -இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம் –

அநந்தரம் அர்த்த பலத்தாலே -இப்பதத்தில் அனுசந்திக்கப் படும் ஸ்ரீ யபதித்வத்தை அருளிச் செய்கிறார்
அதாவது

லஷ்ம்யா சஹா ஹ்ருஷிகேசா தேவ்யா காருண்யா ரூபயா ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே -என்கிறபடி
ரஷகனான சர்வேஸ்வரன் சேதனரை ரஷிக்கும் தசையிலே –
இவர்களுடைய அபராதங்களை கண்டாதல் –
தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே யாதல் –
உபேஷியாமல் செய்கைக்கும் உறுப்பான கிருபையை ஜனிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டி ஸந்நிதி அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே
ரஷகனான அவனைச் சொல்லுகிற இவ் அவகாரத்திலே அவனுடைய லஷ்மி சம்பந்தமும்
அனுசந்தேயம் என்கை –

(சாலப் பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் கோலத் திரு மா மகளோடு கூட
அவளே கருணை ரூபம் -இவனது கருணையை கிளப்பி விடுகிறாள் -)

லஷ்மி என்னாதே ஸ்ரீ என்றது –
ஸ்ரயத இதி ஸ்ரீ -என்கிறபடி அவனை நித்ய சேவை பண்ணுகையாலே -அவனோடு இவளுக்கு உண்டான
அவிநாபாவமும்-
ஸ்ரீ யத இதி ஸ்ரீ -என்கிறபடி
சேதனருக்கு இவள் நித்ய சேவ்யயாய்  இருக்கும் என்னும் அதுவும் தோற்றுகைக்காக-

——————————————————-

சூரணை -41
அத்ர பகவத் சேநாபதி மிஸ்ரர் வாக்யம்-
அவன் மார்பு விட்டு பிரியில்
இவ் அஷரம் விட்டு பிரிவது –

இன்னும் இவ் அவகாரத்தில் ஈஸ்வரனுடைய லஷ்மி சம்பந்தம் நியமேன தோற்றும்
என்னுமத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிக்கிறார்-
அதாவது –

இவ்விடத்தில் ஞாநாதிகரான ஸ்ரீ சேனாபதி சீயர் அருளி செய்யும் வார்த்தை –
அகலகில்லேன் இறையும் என்று அவன் திரு மார்பில் நித்ய வாசம் பண்ணும் இவள்
அவன் மார்பை விட்டு பிரியல் ஆயிற்று -அவனுக்கு பிரதிபாதகமான இவ் அஷரத்தை விட்டு பிரிவது என்று -என்கை –

என்று -என்கிற
இத்தனையும் கூட்டாத போது கீழோடு இவ் வாக்யம் அந்வயியாது-

இத்தால் அவன் திரு மார்பில் சம்பந்தம் இவளுக்கு நித்யம் ஆகையாலே –
அவன் தோற்றும் இடத்தில் இவளும் தோற்றுகை நிச்சிதம் ஆகையால் –
அவன் திருமார்பில் அந்வயித்தோ பாதி
அவனுக்கு வாசகமான அகாரத்தில் அந்வயமும் இவளுக்கு நித்யம் என்றது ஆயிற்று-

—————————————–

சூரணை -42
பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும்
விடாதே இருக்கும் மாதாவைப் போலே
பிரதம சரம பதங்களை விடாதே இருக்கும் இருப்பு –

இன்னும் இவ் அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக -ஈஸ்வர சேதன வாசகங்களான
அகார மகாரங்கள் இரண்டிலும் -இவளுக்கு உண்டான அநவரத அந்வயத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது

சேஷ பூதையான தன் ஸ்வரூபத்துக்கு சேரும்படி அவனை ரஷிப்பிக்கைக்காக
பர்த்தாவினுடைய படுக்கையையும் விடாதே –
ரஷகையான தன் ஸ்வரூபதுக்கும் போரும்படி தத் ரஷணம் பண்ணுகைக்காக
பிரஜையினுடைய தொட்டிலையும் விடாதே
இருக்கும் மாதாவானவளைப் போல் -இவளும்

பர்த்ருபூதனான ஈஸ்வரனுக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
பிரதம பதமான அகாரத்தையும்-
பிரஜாபூதரான  சேதனருக்கு பிரதிபாதகமாய் இருந்துள்ள
சரம பதமான மகாரத்தையும்
தத் தத் விஷயத்திலே தனக்கு உண்டான சம்பந்தத்துக்கு ஈடாக
ரஸிப்பிக்கை ரஷிக்கை ஆகிற இவற்றைப்   பற்ற
விடாதே இருக்கும் இருப்பு என்கை

(க ம லா லாதேன ஆதேன-ஒருவரை ஒருவர் இடம் சேர்ப்பிக்கிறாள் )

—————————————

சூரணை -43
ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே

கீழ் சொன்ன த்ருஷ்டாந்தத்தை ஒரு விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார்
அதாவது

பார்யையான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஸிப்பைக்கக்கு பர்த்தாவான ஸ்ரீ நந்த கோபரையும் விடாதே –
மாதாவான தன் ஸ்வரூப அனுகுணமாக ரஷிப்பிக்கைக்கு தன் புத்ரனான கிருஷ்ணனையும் விடாதே –
அம்பரமே -என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
மத்யே வர்த்திக்கும் யசோதை பிராட்டியைப் போலே
பிரதம சரம வாச்யரான ஈஸ்வர சேதனர்கள் இருவரையும் விடாதே இவளும் வர்த்திக்கும் படி என்கை-

————————————-

சூரணை-44
ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவண ஓலை எழுதுவது –
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே-

அது போலே நாம் பிராட்டி அடிமையாய் இருக்கும் படி –
ஈஸ்வர  சேஷத்வ மாத்ரம் ஒழிய பிராட்டிக்கும் சேஷம் என்னும் இடம்
இவ்வாசகத்தில் இன்றிக்கே இருக்க செய்தேயும் இவளுக்கும் சேஷம் என்று
நாம் கொள்ளுகிற  படி எங்கனே -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –

லோகத்தில் ஒருவன் தாஸ தாஸிகள் முதலான அடிமையை
கொள்ளும் போது -தனக்கு என்றே எழுதிக் கொள்ளும் அது ஒழிய தன் க்ருஹிணிக்கு என்று அன்று
விலையோலை எழுதி கொள்வது –
ஆயிருக்க செய்தேயும் அடிமைத் தொழில் செய்வது க்ருஹிணிக்கு இறே –

அது போலே ஈஸ்வர சேஷம் என்னும் அளவை இவ் அகாரம் சொல்லிற்றே ஆகிலும் –
நாம் பிராட்டிக்கு அடிமையாய் இருக்கும் படி என்கை

——————————————-

சூரணை -45-
ஆக பிரித்து நிலை இல்லை –

கீழ் சொன்ன ஹேதுக்களை எல்லாம் அனுவதித்து கொண்டு ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும்
ஒருகாலும் ப்ருதக்  ஸ்திதி இல்லாமையை அருளிச் செய்கிறார்-

————————————

சூரணை -46
பிரபையையும் பிரபாவையையும்-பிரபாவானையும்-
புஷ்பத்தையும் மணத்தையும் போலே –

அந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்துக்கு இரண்டு திருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது
பிரபைக்கும் பிரபாவானுக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும்
புஷ்பத்துக்கும் பரிமளத்துக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லாதாப் போலேயும் -என்கை –

அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேன பிரபா யதா –
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேன பிரபா யதா -என்று
பிரபா பிரபாவான்களை போலே இருவருக்கும் பிருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம்
இருவர் வாக்காலும் சொல்லப் பட்டது இறே-

பிர ஸூ நம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ-என்கிற இடத்தில்
ஈஸ்வரனை புஷ்பத் ஸ்தாநேயாகவும்-பிராட்டியை பரிமள ஸ்தானே யாகவும் பட்டர் அருளிச்
செய்கையாலே புஷ்ப பரிமளங்களைப் போலே -இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை
என்னும் இடம் அர்த்தாசித்தம்-

———————————–

சூரணை -47
ஆக இச் சேர்த்தி உத்தேச்யமாய் விட்டது-

இந்த ப்ருதக் ஸ்திதி அத்யபாவத்தை அனுவதித்துக் கொண்டு -இச் சேர்த்தியே சேதனருக்கு
உத்தேச்யமாய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார்
அதாவது –

இச் சேர்த்தி உத்தேச்யம் என்கையாலே –
இவர்களை தனித் தனியே விரும்புகை உத்தேச்யம் அன்று என்ற படி –
இருவரையும் பிரித்து விரும்பினால் -ராவண சூர்பணகைகளைப் போலே அனர்த்தமே பலிக்கும் அத்தனை –

இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப்   போலே வாழல் ஆவது-
(தானே வலிய சிறை புகுந்தாள்-ஸ்ரீ விபீஷணனை சரணாகதன் ஆக்கவும் ராவணனை திருத்தவும் – )

————————————-

சூரணை -48
இதில் சதுர்த்தி ஏறிக் கழியும்

இனிமேல் இதில் விபக்த்யர்த்தம் அருளி செய்வதாக பிரதமம் விபக்தி தன்னை நிர்தேசிக்கிறார் –
அதாவது
இவ் அகாரத்தில் சதுர்த்தி ஏறி -சூபாம் சூலுக் -இத்யாதி சூத்ரத்தாலே லுப்தமாய் போம் என்கை-
(சப்தம் கழிந்தாலும் அர்த்தம் சித்திக்கும் )

————————————————–

சூரணை -49
சதுர்த்தி ஏறின படி என் ? என்னில்

விபக்த்யந்தரம் எல்லாம் கிடக்க இவ் அகாரத்திலே சதுர்த்தி ஏறின படி தான் எங்கனே -என்கிற
சங்கையை அனுவதிக்கிறார்

——————————————————-

சூரணை -50
நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாய் இருக்கையாலே

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
அதாவது
இவ் அகாரம் சதுர்த்யந்தமான நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹம் ஆகையாலே –
இதிலும் சதுர்த்தி ஏறிற்று -என்கை –
இங்கன் அன்றாகில் இரண்டுக்கும் ஸங்க்ரஹ விவரணத்வம் சித்தியாது இறே

————————————————–

சூரணை -51
இத்தால் ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிறது

இத்தால் சொல்லுகிற அர்த்தம் தான் எது -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
இது தான் தாதர்த்யே சதுர்த்தீ-ஆகையாலே இச் சதுர்த்தியால்
ஈஸ்வரனுக்கு சேஷம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-
( தத் அர்த்தம் அவனே பிரதானம் பிரயோஜனம் -)

————————————–

சூரணை -52
சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் காண்கிறது என்னில் –

சர்வம் பரவசம் துக்கம்-ஸூ வசம் ஸூகம் – சேவா ஸ்வ வ்ருத்தி-என்கிற லௌகிக நியாயத்தைக் கொண்டு
சேஷத்வத்தை துக்க ரூபமாக நினைத்து இருக்கும் அவர்கள் பண்ணும் பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

————————————————

சூரணை -53
அந்த நியமம் இல்லை –
உகந்த விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு
ஸூகமாக காண்கையாலே-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
அதாவது
நாடு தன்னிலே -பணிமின் திருவருள் -திருவாய்மொழி –4-1-5-இத்யாதி படியே
அபிமத விஷயத்துக்கு சேஷமாய் இருக்கும் இருப்பு ஸூகமாக காண்கையாலே –
சேஷத்வம் ஆகில் துக்க ரூபமாய் இருக்கும் என்கிற நியமம் இல்லை -என்கை-

—————————————–

சூரணை -54
அகாரத்தாலே கல்யாண குணங்களை சொல்லுகையாலே இந்த சேஷத்வமும் குணத்தாலே வந்தது

அபிமத விஷயத்தில் சேஷத்வம் ஸூகமாகிறது –
அவ் விஷயத்தில் குணம் அடியாக வந்ததாகை யாலே அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது –

ஈஸ்வரனுடைய ரஷகத்வ பிரதிபாதகமான அகாரத்திலே -அந்த ரஷண உபயோகியான
கல்யாண குணங்களைச் சொல்லுகை ஆகையாலே –
ஈஸ்வர விஷயமான இந்த சேஷத்வமும் –
அந்த குணங்கள் அடியாக வந்தது என்கை –
ஆகையால் இதுவும் ஸூக ரூபமாக இருக்கக் குறை இல்லை என்று கருத்து-

(அகாரத்தால் ஜகத் காரணத்வமும் ரக்ஷகத்வத்வமும் சேஷித்வமும் உண்டே
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப பிரகிருத தாஸ்யம்
ஸ்ரீ சீதா பிராட்டி அநஸூயை சம்வாதம்
குணைர் தாஸ்யம் உபாகத-லஷ்மணன் -குணங்களை பெருமாள் இடம் இருந்து பிரிக்க முடியாதே )

——————————————-

சூரணை-55
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –

ஆனால் ஔபாதிகமான இது ஸ்வரூபம் அன்றோ ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
உகந்த விஷயத்தில் இதன் ஸூக ரூபத்துக்கு குண க்ருதவத்தை ஹேதுவாகச் சொல்லுகையாலே –
அந்த குண க்ருத்வத்வம் இங்கும்  உண்டு  என்னும் இடத்துக்கு சொன்ன இத்தனை ஒழிய –
அர்த்த ஸ்திதியை நிரூபித்தால்

ஸ்வத்வ மாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் பிராமணி ஸ்திதம் –
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மார-
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே  ஹ்யாத்மனா பரமாத்மன-
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -இத்யாதிகளில் இத்தை
ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமாக சொல்லுகையாலே -சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்கை-

————————————

சூரணை -56
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை –

சேஷத்வமே என்று அவதரிப்பான் என் ?-ஞான ஆனந்த ஸ்வரூபமான ஆத்மா வஸ்துவுக்கு
இல்லாத போதும் ஸ்வரூபம் இல்லையோ ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
சேஷத்வம் இல்லாத போது ஆத்மா அபஹார ரூபமான ஸ்வாதந்த்ர்யா புத்தி நடக்கையாலே –
ஸ்வரூபம் அழிந்து விடும் என்னுமத்தை தர்சிப்பிக்கிறார் மேல் இரண்டு வாக்யத்தாலே –

(ஞானியான ஆத்மா சேஷம் என்று சொல்லாமல் சேஷனான ஜீவனே ஞான ஆனந்த ஸ்வரூபம் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை யாகுமே)

—————————————

சூரணை -57
ஆத்மா அபஹாரமாவது ஸ்வதந்த்ரம் என்கிற நினைவு –
ஸ்வதந்த்ரமாம் போது இல்லையே விடும் –

யோ அன்யதா சந்தமாத்மா நமன்யதா பிரதிபத்தி கிம்  தேன ந க்ருதம் பாபம் சோரேன் ஆத்மாபஹாரினா –
என்று சர்வ பாப மூலமாக சொன்ன ஆத்மா அபஹாரமாவது தன் ஸ்வரூபம் ஸ்வதந்த்ரம் என்கிற பிரபத்தி –
ஸ்வதந்த்ரமாம் அளவில் -அசந்நேவ-என்கிறபடியே ஸ்வரூபம் இல்லையாம் விடும் என்கை –

ஆகையால் சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்னத் தட்டில்லை என்று   கருத்து

ஆக பிரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய
காரணத்வமும்
தாத்வர்த்தமான ரஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
பிரத்யய சித்தமான சேதன சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷத்வமும்
ஆகிற அகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: