ஸ்ரீ முமுஷுப்படி- திருமந்திர பிரகரணம் -சூரணை-22-34—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -22
மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே -அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்
இதுக்குள்ளே உண்டு –

இனி ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகத்வம் ஆகிற இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம்
இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

——————————————————–

சூரணை -23
அதாவது ஐஞ்சு அர்த்தம்

அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம்  ஆகிறது எது ? என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வ ஸ்வரூப
பர ஸ்வரூப
புருஷார்த்த ஸ்வரூப
உபாய ஸ்வரூப
விரோதி ஸ்வரூபங்கள் -ஆகிற அர்த்த பஞ்சகமும் என்ற படி –

பிராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் பிராப்துச்ச பிரத்யகாத்மனா பிராப்துபாயம் பலம் பிராப்தேஸ்
ததாப்ராப்தி விரோதி ஸ் வதந்தி சகலாவேதாஸ் சேதிகாச புராணக முநயச்ச மகாத்மானோ வேதவேதார்த்த வேதின-
என்கிறபடியே சகல வேத சாஸ்திரங்களும் பிரதிபாதிப்பது இவ் அர்த்த பஞ்சகத்தையும் ஆகையாலே –
தத் ஸங்க்ரஹமான இம் மந்த்ரத்துக்கும் பிரதிபாத்யம் இதுவே இறே-

இம் மந்த்ரம் தான்
பிரணவத்தாலே-பிரத்யகாத்ம ஸ்வரூபத்தையும் –
நமஸாலே-விரோதுபாய ஸ்வரூபங்களையும் -( ம விரோதி -ந ம -உபாயம் )
நாராயண பதத்தாலே -பர ஸ்வரூபத்தையும் –
அதில் சதுர்த்தியாலே -பல ஸ்வரூபத்தையும் –
பிரதிபாதிக்கக் கடவதாய் இறே இருப்பது –

————————————————————-

சூரணை -24
பூர்வாச்சார்யர்கள் இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு -தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –
இதில் அர்த்த ஞானம் பிறந்த பின்பு -பிறந்த பின் மறந்திலேன் -என்கிறபடியே -இத்தை ஒழிய வேறு ஒன்றால்
கால ஷேமம் பண்ணி அறியார்கள்

இம்மந்த்ரார்த்த வைபவத்தை அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
நாதயாமுன யதிவராதி களான நம் பூர்வாச்சார்யர்கள் –
அன்று நான் பிறந்திலேன் -திரு சந்த விருத்தம் -64 என்கிறபடியே –
இம்மந்த்ரத்தில் அர்த்தம் அறிவதற்கு முன் தங்களை பிறந்தார்களாக நினைத்து இரார்கள் –

இதில் அர்த்த ஞானம் தங்களுக்கு உண்டான பின்பு –
பிறந்த பின் மறந்திலேன் -என்று
ஆழ்வார் திவ்ய ஸூக்தியில் சொல்லுகிற படி இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – ஒழிய
மற்று ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்கை –

வேத சாஸ்திரங்கள் ஆழ்வார் அருளிச் செயல்கள் இவற்றால் போது போக்கும் போதும் –
இம்மந்த்ரத்தை-மந்த்ரார்த்தை – உள் கொண்டே அனுசந்திக்கையாலே –
இத்தை ஒழிய வேறு ஒன்றால் கால ஷேமம் பண்ணி அறியார்கள் என்னத்  தட்டில்லை

———————————————————-

சூரணை -25
வாசகத்தில் காட்டில் வாச்யத்தில் ஊன்றுக்கைக்கு அடி -ஈச்வரனே உபாயம் உபேயம் என்று
நினைத்து இருக்கை –

வாசக சக்தி சர்வத்தையும் சாதித்து கொடுக்க வற்றாய் இருக்க -இதனுடைய வாச்யத்திலே இவர்கள்
ஊன்றுகைக்கு ஹேது  ஏது என்ன அருளி செய்கிறார் –
அதாவது –
சர்வ பலத்துக்கும் ஸ்வயம் சாதனமாயும் சாதனாந்தரங்களுக்கும் சககாரியாய் நின்று தலைக் கட்டி கொடுத்தும் போருகிற
இதனுடைய வாசக சக்தி -தானே அமைந்து இருக்கச் செய்தே –
அதிலும் காட்டில் கீழ் சொன்ன படி இம்மந்த்ரத்தினுடைய வாச்யத்திலே பூர்வாச்சார்யர்கள் ஊன்றுகைக்கு அடி –
உபேயாந்த்ரா பரராய் இத்தை சக காரியாய் கொள்ளுதல் செய்யும் அவர்களை போல் அன்றிக்கே –
உபாய உபேயங்கள் இரண்டும் ஈச்வரனே என்று பிரதிபத்தி பண்ணி இருக்கை என்ற படி –
(அத்தை தின்று அங்கேயே கிடக்குமே )

ஆக
திரு மந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி என்று -சூரணை -3 -தொடங்கி-
இவ்வளவும் வாய் வந்தபடி அனுசந்திக்க ஒண்ணாத படியான இதனுடைய கௌரவத்தையும் –
ஈச்வரனே தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று வெளி இட்டு அருளுகையாலே -வந்த ஏற்றத்தையும் –
சகல சாஸ்திரங்களிலும் -சகல மந்த்ரங்களிலும் -வாச்யம் தன்னிலும் காட்டில் இதனுக்கு உண்டான பெருமையையும் –
அக்ரமமாக தன் கார்யம் செய்யும் ஆதிக்யத்தையும் –
அபேஷித சகல பல ப்ரதத்வ ரூப மகாத்யத்தையும் –
கர்மாத் உபாய சக காரித்வ  ரூபமான உத்கர்ஷத்தையும் –
ஞாதவ்ய சகல அர்த்த பிரதிபாதகதயா வந்த மகாத்ம்யத்தையும் –
ஏதத் பிரதிபாதித்ய அர்த்த கௌரவ விசேஷத்தையும் -அருளிச் செய்கையாலே –
இம்மந்த்ரத்தின் உடைய வைபவத்தை எல்லாரும் அறியும் படி தர்சிபித்து அருளினார் ஆயிற்று –

———————————————

சூரணை -26
இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
ஸ்வரூபமும்–ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும்
ஸ்வரூபமும் உபாயமும் பலமும்
என்னவுமாம் –

(ஓம் நம ஸ்வரூபம் / நாராயணாயா ப்ராப்யம் / சேஷத்வம் ஓம் பாரதந்தர்யம் நம என்றபடி
பரன் யாருக்கு தந்திரமாக பிரதானமாக பிரயோஜனமாக கொள்கிறானோ அவனே பரதந்த்ரன் –
ஓம் ஸ்வரூபம் / நம உபாயம் / பலம் நாராயணாயா
இரண்டு படியாக அருளிச் செய்கிறார் )

இனிமேல் இம்மந்த்ரத்துக்கு வாக்யார்த்தம் இரண்டு படியாக அருளிச் செய்கிறார் –
அதாவது
இம்மந்த்ரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் –
இவ் ஆத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும் –
அந்த ஸ்வரூப அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் –

அன்றிக்கே –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபமும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயமும்
உபாய லப்யமான  பலமும்–என்று சொல்லவுமாம் என்கை –

இதில் பிரதம யோஜனையில்-
பிரணவ நமஸ்ஸுகளால் ஸ்வரூபமும்
நாராயண பதத்தாலே ப்ராப்யமும் சொல்லுகிறது –

அனந்தர யோஜனையில் –
பிரணவத்தாலே-சேஷத்வமும்
நமஸாலே -உபாயமும் –
நாராயண பதத்தாலே பலமும் –
சொல்லுகிறது –

———————————————

சூரணை -27
பலம் இருக்கும் படி ப்ரமேய சேகரத்திலும் -அர்ச்சிராதிகதியிலும் சொன்னோம் –

பல வேஷம் தான் இருக்கும் படி எங்கனே ? என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
இவ் ஆத்மாவுக்கு ப்ராப்யமான பலம் தான்
அர்ச்சிராதி மர்க்கத்தாலே பரம பதத்திலே போய்
பரிபூர்ண பகவத் அனுபவத்தைப் பண்ணி –
அவ் அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு பண்ணும்
அசேஷ சேஷ விருத்தி ஆகையாலே –

அது இருக்கும் படியை ஸங்க்ரஹேன
ப்ரமேய சேகரம் ஆகிற பிரபந்தத்திலும் –
விஸ்தரேன அர்சிராதிகதி ஆகிற பிரபந்தத்திலும் விசதமாக சொன்னோம் —
அவற்றிலே கண்டு கொள்க என்கை –

—————————————

சூரணை -28
இது தான் எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –

இனி இம்மந்த்ரத்துக்கு பிரதிபதம், அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
ப்ரதமம் இதனுடைய அஷர சங்க்யையையும் -பத சங்க்யையையும் அருளிச் செய்கிறார் –
அதாவது
இம்மந்த்ரம் தான் –
ஒமித்யேகாஷரம்-நாம இதி தவே அஷரே -நாராயணா யேதி பஞ்ச அஷ ராணி –
இதி அஷ்டாஷரம் சநதசா காயத்ரீ சேதி ஒமித்யக்ரே வியாஹரேத் நம இதி பச்சாத்
நாராயணா எத்யுபரிஷடாத்-என்கிறபடியே
எட்டு திரு அஷரமாய் -மூன்று பதமாய் இருக்கும் என்கை –

இதனுடைய அஷ்டாஷரத்வம்    சொல்லுகிற இடத்தில்
ஒமித்யே காஷரம் -என்று பிரணவத்தை ஓர் அஷரமாகவும்
நம இதி த்வ அஷ ரே -என்று நமஸ் இரண்டு அஷரமாகவும் –
நாராயணா யேதி பஞ்சாஷராணி -என்று நாராயணா பதத்தை அஞ்சு அஷரமாகவும்
ஸ்ருதி சொல்லுகையாலே –

சமஸ்த பதமான நாராயணா பதத்தில் நார பதத்தை பிரித்து ஷட் அஷரமாக்கி
பிரணவத்தை ஒழிய அஷ்டாஷரத்வம் சொல்லும் அவர்களுடைய பஷம் அவைதிகம் ஆகையாலே –
அநாத ரணீயமாக கடவது

———————————————————

சூரணை -29
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது

இதி பத த்ரயமும் எவ் அர்த்தத்தைச் சொல்லுகிறது என்னும் ஆ காங்ஷையிலே
மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது என்கிறார்

—————————————————

சூரணை -30
அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும்

அவ் வர்த்தங்கள் தம்மை விசதமாக அருளிச் செய்கிறார்
அதாவது சேஷத்வமும் -பாரதந்த்யமும் -கைங்கர்யமும் -என்று

ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் என்று
முதல் சொன்ன வாக்ய அர்த்தம் இத்தை நினைத்து  இறே

—————————————————–

சூரணை -31
இதில் முதல் பதம் பிரணவம்-

பிரதம பதம் ஏது என்ன
ஒமித்யக்ரே வியாஹரேத் -என்று இறே ஸ்ருதி சொல்லிற்று –

ஸ்ம்ருதியும் -பிரணவாத்யம் நமோ  மத்யம் நாராயணா பதாந்திமம் மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத்
சர்வ சித்தி கரம் ந்ருணாம் என்றது இறே

————————————

சூரணை-32
இது அ என்றும் -உ என்றும் -ம என்றும் மூன்று திரு அஷரம்-

இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக இதனுடைய அஷய த்ரய ஆத்மகதையை
அருளிச் செய்கிறார் –
அதாவது –
இப் பிரணவம் தான் அசம்ஹிதாகாரத்தாலே –
மூன்று அஷரமாய்-
மூன்று பதமாய் -மூன்று அர்த்த பிரகாசமாய் –

சம்ஹிதாகாரத்தாலே –
ஏக அஷரமாய்-
ஏக பதமாய் –
ஏக பிரகாசமாய் -இறே இருப்பது –

——————————————-

சூரணை -33
மூன்று தாழி யிலே   தயிரை நிறைத்து கடைந்து வெண்ணெய் திரட்டினால் போல்
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது –

இந்த அஷர த்ரயத்தின் உடையவும் உத்பத்தி க்ரமத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்
அதாவது –
பூரிதி ருக்வேதா தஜாயாத புவ இதி யஜுர்வேதாத் ஸூவரிதி சாமவேதாத்
தானி சுக்ரான் யப்யதபத் தேப்யோ அபிதப்  தேப்யஸ் த்ரயோ வர்ணா
அஜாயந்த அகார உகார மகார இதி தானே கதா சமபரத்த தேததோமிதி-என்றும் –

அகாரஞ்சாப் யுகாரஞ்ச மகாரஞ்ச பிரஜாபதி
வேத த்ரயான் நிரப்ருஹத் பூர்புவஸ் ஸ்வரிதீதி ச -என்றும் –

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -ருக் யஜுர் சாம ரூபமான வேத த்ரயத்திலும் நின்றும் –
பூ புவ ஸூவ என்கிற வியாஹுதி த்ரயத்தையும் தோற்றுவித்து –
அந்த வியாஹுதி த்ரயத்தையும்
பொன்னோடு வைக்குமா போலே தன் சங்கல்பத்தாலே ஓட வைத்து –
அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்கள் ஆகிற அஷரங்கள் மூன்றும் அடைவே தோன்றும் படி பண்ணி –

இப்படி
சர்வேஸ்வரன் சமுத்தரித்த படியை திரு உள்ளம் பற்றி –
பாத்ர த்ரய கதமான தயிரை தனித்தனியே கடைந்து –
தத் சாரமான வெண்ணெயை வாங்கி திரட்டினால் போலே –
மூன்று வேதத்திலும் மூன்று அஷரத்தையும் எடுத்தது -என்கிறார்

————————————–

சூரணை -34
ஆகையால் இது சகல வேத சாரம் –

இத்தால் பலித்ததை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஷர த்ரயமும் ஒரோ வேதத்தின் உடைய சாரமாக சமுத்ரதம் ஆகையாலே
இவ் அஷர த்ரய யாத்மகமான பிரணவம் சகல வேத சாரம்-என்ற படி –

ஆக -இது தன்னில் சொல்லுகிற அர்த்தம் -என்று தொடங்கி-
இவ்வளவும்
இம்மந்த்ரத்தினுடைய வாக்யர்த்தத்தையும்
அஷர சங்க்யையையும்
பத சங்க்யையையும்
பத த்ரயமும்
அர்த்த த்ரய பிரதிபாதிகத்வம் என்னுமத்தையும்
அதில் பிரதம பதம் இன்னது என்னுமத்தையும்
அது தான் அஷர த்ரயாத்மகமாய் இருக்கும் என்னுமத்தையும்
அவ் வஷர த்ரயமும் வேத த்ரய சாரமாக உத்பன்னம் ஆகையாலே
தத் சமுதாயமான பிரணவம் சகல வேத சாரம் என்னுமத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: