ஸ்ரீ முமுஷுப்படி-திருமந்திர பிரகரணம்-சூரணை-7-21–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

சூரணை -7
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயமார்ஜிதம் போலே –
திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –

இப்படி சிஷ்யனாய் நின்று இம்மந்திர சிஷை பண்ணி இவ்வழி யாலே ஞானம் பிறக்க வேணுமோ ?
ஞானக் கலைகள் என்கிறபடியே சகல சாஸ்திரங்களும் ஞான சாதனமாய் அன்றோ இருப்பது –
அவற்றை அப்யசித்து அவ்வழி யாலே ஞானம் பிறந்தாலோ என்ன –

சாஸ்திர ஜன்ய ஞானத்துக்கும் இம்மந்திர  ஜன்ய ஞானத்துக்கும் உண்டான விசேஷத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-

அதாவது தத்வ ஞான ஜனகங்களான ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்த்ரங்களாலும்
சேதனருக்கு பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜித தனம் போலே அத்யாயாச லப்யமாய் இருக்கும் -என்கை-
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புதேச்சல நகாரணம்  உபதேசாத் ஹரிம் புத்த்வா
விரமேத் சர்வ கர்மஸூ -என்னக் கடவது இறே –

இத்தால் சாஸ்த்ரங்களில் காட்டிலும் தத் ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்துக்கு உண்டான
வைபவம் சொல்லிற்று ஆயிற்று

————————————

சூரணை-8
பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –

ஆனால் சாஸ்திரங்கள் ஒழிந்தாகிறது-பகவந் மந்த்ரம் தான் இது ஓன்று அன்று இறே-
பின்னையும் பல இல்லையோ -என்கிற சங்கையிலே மந்த்ரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைபவத்தை அருளி செய்வதாக திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –

ஆஸ்தாம் தே குணரா விசத் குணா பரிவாக ஆத்மாநாம் ஜன்மனாம் சங்க்ய்யா-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்த்வம்-2-74-
ஸ்ரீ ரெங்க நாதா உன் கல்யாண குணங்களை போல அவற்றை  உணர்த்தும் உன் அவதாரங்களும் பல –

பாகவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய ஸந்தி தே -அயோத்யா காண்டம் -2-26-
தசரதனே உனது புத்ரனுக்கு கல்யாண குணங்கள் பல த்வாநந்த குணச்யாபி ஷாட் ஏவ பரதமே குணா –
பகுநீ மே வ்யதீதானி ஜன்மானி தவசார்ஜுனா-என்றும்

எண்ணில் தொல் புகழ்-திரு வாய் மொழி -3-3-3–என்றும்

எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –திரு விருத்தம் -1-என்றும்-இத்யாதிகளில் சொல்லுகிற படியே

பகவத் குணங்களும் -குண பரிவாக ரூபங்களான அவதாரங்களும் –
அசங்க்யாதமாய் இருக்குமா போலே -அவற்றை அனுபந்தித்து இருக்கும்
மந்திர விசேஷங்களும் -அநந்தா வை பகவந் மந்த்ரா -என்கிறபடியே அநேககங்களாய்  இருக்கும் என்கை-

—————————————–

சூரணை -9
அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –

அவை எல்லாம் தான் ஏக வர்க்கமோ என்ன -இரண்டு வர்க்கம் என்கிறார் –
அதாவது
சர்வ வியாபகமான பகவத் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே வியாபகங்கள் என்றும் –
பகவத் அவதார குண சேஷ்டிதங்களில் ஓர் ஒன்றை பிரதிபாதிக்கையாலே -அவ்யாபகங்கள் என்றும் –
உபய வர்க்கமாய் இருக்கும் என்கை –

————————————————–

சூரணை -10
அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –

வர்க்க த்ரயமும் தன்னில் ஒக்குமோ -என்ன –
அதாவது –
அவ்யாபகங்களாய் இருந்துள்ள சகல மந்த்ரங்களிலும் –
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் –
என்று விஷ்ணு காயத்ரியில் ஒதப்படுகிற -வியாபக மந்த்ரங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்களாய்  இருக்கும் என்கை –

இந்த விஷ்ணு காயத்ரியில் -நாராயண வாஸூதேவ -விஷ்ணு -சப்தங்கள்
அந்த மந்திர த்ரயத்துக்கும் பிரதான பூத நாம த்ரயங்கள் ஆகையாலே -சாதாரண பிரணவ நமஸூ க்களோடு கூடின
மந்திர த்ரயத்துக்கும் உப லஷணமாகக் கடவது –

(நாமங்களுக்கு ஓம் ஆய நம மூன்றும் -சேர்த்தால் மந்த்ரங்கள் ஆகும்
இந்த மூன்றுக்கும் தான் நம முன்னாக வரும் -மற்றவை ஓம் கேசவாயா நம போல இருக்கும்

——————————————–

சூரணை -11
இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்

இந்த வியாபக மந்திர த்ரயமும் தன்னில் ஒக்குமோ என்ன –
அதாவது
அவ்யாபகங்களில் காட்டில் ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள இவ் வியாபக மந்த்ரங்கள்
மூன்றிலும் வைத்து கொண்டு
நாராயணாய வித்மஹே என்று பிரதமோபாத்தம் ஆகையாலும் –
அர்த்த பூர்த்தி யாதிகளாலும் –
நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத்  பர -என்னும்படியான பெருமை உடைய பெரிய திரு மந்த்ரம்
பிரதானமாய் இருக்கும் என்கை –

————————————————–

சூரணை -12
மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு –

மற்ற வியாபக த்வயத்துக்கும் தாழ்வு என்ன –
அதாவது
வாஸூதேவ விஷ்ணு சப்தங்களான மற்றை வியாபக மந்த்ரங்கள் இரண்டுக்கும்
நாராயண சப்தம் போலே
ஸ்வரூப ரூப குணாதிகளை எல்லாம் பிரதிபாதியாதே –
ஸ்வரூப மாத்ரத்தை பிரதி பாதிக்கையாலே –
நிர்  விசேஷ சிந்மாத்ரா வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற
அசிஷ்ட பரிக்ரஹமும் –
வியாப்ய அத்ய ஆகாராதிச அபேஷதை ஆகிற அபூர்த்தியும் உண்டு என்கை –

ஷட் அஷரி -வியாப்ய பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே -வியாப்தி மாத்திர பிரகாசம் ஆகையாலே -அபூர்ணம் –

வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் -வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி-என்ற அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் –
அதில் குணம் அன்வயியாமையாலும் இனி குண சித்திக்காகா பகவந் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் -திரு த்வாதச அஷரியும் அபூர்ணம்

இம்மந்த்ரம் அவை போலே அன்றி –
வியாப்ய பதார்த்தங்களோடு
வியாபன பிரகாரத்தோடு
வியாபன பலத்தோடு
வியாபனுடைய குணங்களோடு
வாசி அற சாப்தமாக காட்டுகையாலே -அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த
பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு –
பரந்த ரகசியம் -என்று மற்ற வியாபக மந்த்ரங்கள் இரண்டினுடைய அபூர்தியையும்
திருமந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் ஸூ ஸ்பஷ்டமாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே

—————————————————–

சூரணை -13
இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –

இதுக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது

விஷ்ணு காயத்ரியிலே வியாபக மந்திர த்ரயத்தையும் சொல்லுகிற அளவில்
பிரதமத்தில் நாராயண சப்தத்தை பிரதானயேன பிரதி பாதிக்கையாலும் –
விச்வம் நாராயணம்  -என்று தொடங்கி
நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராதமா நாராயணா பர யச்ச
கிஞ்சிஜ் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்பகிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித –
என்று சகல வேதாந்த சார பூதமான நாராயண அனுவாகத்திலும் –

ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மோ நேசானோ நேம த்யாவாப்ருதிவி -என்று மகா உபநிஷத்திலும்
(ஒன்றும் தேவும் இத்யாதியால் -நம்மாழ்வார் இத்தை அருளிச் செய்கிறார் )

சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -என்று தொடங்கி-
திசச்ச பிரதிசச்ச நாராயணா -என்று முடிவாக நடுவு அடைய ஸூபால உபநிஷத்திலும்
(கண்ணும் கருவியும் பார்க்க வேண்டியவையும் நாராயணனே )

யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதுவீ  சரீரம் -என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் -என்கிறது ஈறாக நடுவு உள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூதாந்த்ராத்மா அபகதபாப்மா திவ்யோ தேவா ஏகோ நாராயணா -என்று
அந்தர்யாமி ப்ரஹ்மாணத்திலும்

வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து-நாராயண சப்தத்தை இட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும் –
அபௌ ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமாய்
ஸ்வத பிரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றன

எதா சர்வேர்ஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாஷராத் பர-என்றும் நாரதீயம்

பூத்வோர்தவ பாஹூ ரதயாத்ர சர்வ பூர்வம் ப்ரவீமிவ
ஹே புத்திர சிஷ்யா ஸ்ருனுத ந மந்த்ரோஷ்டாஷராத் பர-என்றும்

சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிரஷ்டாஷரோ
ந்ருனாம் அபு நர்ப்பவ காங்க்ஷினாம் ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச-என்றும்

பீதா கோரேஷு சவ்யாதிஷு வர்த்த மாநா சங்கீர்த்தாயா நாராயண  சப்த மாதரம்
விமுக்ததுக்காஸ் சுகிநோபவந்தி நாரயணோதி சப்தோச்தி வாகச்தி வசவர்த்திநீ-என்றும்

ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்

கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் விரதை
நமோ நாராயண  யேதி மந்திர  சர்வார்த்தாதா   சாதகா -இத்யாதிகளாலே –

வேதார்த்த உப ப்ரஹ்மணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பல இடங்களில்
இத்தை ஸ்லாகித்துக் கொண்டு சொல்லுகையாலே –
வேதார்த்த விசதீகரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகளும் விரும்பினார்கள்

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8–என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று திரு மழிசைப் பிரானும்
(நான்முகன் திருவந்தாதி முதலிலும் திருச்சந்த விருத்தம் பின்பும் )

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –

இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-

இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில்
இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

———————————————

சூரணை-14
வாச்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம் –

இனி வாச்யம் தன்னிலும் இதுக்கு உண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
இதுக்கு வாச்யனாய் இருந்துள்ள ஈஸ்வரனுடைய பெருமை போல அன்று
தத் வாசகமான இதன் பெருமை என்ற படி –

———————————————-

சூரணை -15
அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்

அது தான் ஏது என்ன அருளி செய்கிறார்
அதாவது
இதுக்கு வாச்யன் ஆனவன் ஸந்நிஹிதன் அன்றிக்கே தூரஸ்தனாய் இருந்த காலத்திலும் –
வாசகமான இது ஆசந்னமாய் நின்று
தன்னை அத்யவசித்தவர்கள் அபேஷிதங்களைச் சாதித்துக் கொடுக்கும் என்கை-

————————————————-

சூரணை -16
திரௌபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமம் இறே

இப்படி வாச்யன் தூரஸ்தனாய் இருக்க வாசகம் உதவின இடம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
மகா சதச்சிலே துச்சாசனன் வஸ்த்ர அபகாரம் பண்ணுகிற போது-
மகாத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
முன்பே  ஸ்ரீ வசிஷ்ட மக ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து –
சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலய அச்யுத  கோவிந்த புண்டரீ காஷா ரஷமாம் சரணா கதாம் -என்று
சரணம் புகுந்த த்ரௌபதிக்கு  அவ் வபத்திலே கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணமாம் தூராவாசினம்-என்கிறபடியே

வாச்யனான கிருஷ்ணன் தூரஸ்தனாய் இருக்கச் செய்தேயும் –
வஸ்த்ரத்தை வர்த்திப்பித்து கொடுத்தது அவ் வவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்கிற திரு நாமம் இறே என்கை –

நாராயண சப்த்தத்தில் ஏக தேசத்துக்கு வாசகமான ஒரு திரு நாமம் செய்த படி கண்டால் இதின் பிரபாவம்
கிம்புநர் நியாய சித்தம் இறே என்று கருத்து –

———————————————–

சூரணை -17
சொல்லும் க்ரமம் ஒழிய சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது –

இன்னும் ஒரு பிரகாரத்தாலே இதின் பிரபாவத்தை அருளிச் செய்கிறார்
அதாவது
ஏதேனும் ஒரு மந்த்ரம் தன்னை தஞ்சமாக விச்வசித்து சொன்னவர்களுக்கு ஒழிய
தன் கார்யம் செய்யாதே ஆகிலும் –
இது அங்கன் இன்றி தன்னை தஞ்சமாக விச்வசித்து சொல்லுகிற க்ரமம் ஒழிய –
சாங்கேத்யம்-பாரிஹாச்யஞ்ச ஸ்தொபம் ஹெனமேவ வா -என்கிற படியே சொல்லிலும்
சொன்னவர்களுக்கு ரஷகம் ஆகையாகிற தன் ஸ்வரூபத்தில் நின்றும் நழுவ நில்லாது என்கை –

அஜாமிளன் -சிசு பாலன் போன்றவர்களுக்கு உதவிற்றே-

———————————————-

சூரணை -18
இது தான் குலம் தரும் என்கிறபடியே எல்லா அபேஷிதங்களையும் கொடுக்கும் –

இனி இதன் சர்வ அபேஷித பிரதித்வம் ஆகிற வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
இம் மந்த்ரம் தான் குலம் தரும் என்று தொடங்கி -ஆழ்வார் அருளிச் செய்தபடியே –
அதிகார  அனுகுணமான அபேஷிதங்களை எல்லாம் கொடுக்கும் என்கை –

——————————————

சூரணை -19
ஐஸ்வர்ய கைவல்ய பகவ லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றை கொடுக்கும் –

அத்தை விசதீகரிக்கிறார்
அதாவது
ஐஹா லௌகிகம் ஐஸ் வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம் கைவல்யம்
பகவன் தஞ்ச மந்த்ரோயம் சாதா இஷ்யதி -என்கிறபடியே
ஐஹிஹமாகவும் பரலோககிகமாயும் இருக்கும் ஐஸ்வர்யத்தையும்
ஆத்ம ப்ராப்தி ரூபமான கைவல்யத்தையும்
பரம புருஷார்த்த பகவ லாபத்தையும்
ஆசைப்பட்ட அதிகாரிகளுக்கு ஜப ஹோமாதிகளாலே ஸ்வயம் சாதனமாய் நின்று
அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்கை –

—————————————————-

சூரணை -20
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி
அவற்றை தலைக் கட்டிக் கொடுக்கும் –

இனி கர்மா யுத்பாய சஹா காரித்வ ரூபமான இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
கர்ம யோகத்தில் இழிந்தவர்களுக்கு ஜப ஹோமாதிகளால் தன்னை சகாயமாக கொள்ளும் அளவில் –
கர்ம யோக ஆரம்ப விரோதியான -பாபத்தைப் போக்கி –
அந்த கர்மத்தின் உடைய அவிச்சேதா பாதகமாய்க் கொண்டு
அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் –

பிரதமத்திலே ஞான யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சகாயமாக கொள்ளும் அளவில்
கர்ம சாத்தியமான ஞான ஆரம்ப விரோதி பாப நிவ்ருத்தியைப் பண்ணி
அந்த ஞானத்துக்கு நாள் தோறும் அதிசயத்தை பண்ணா நின்று கொண்டு –
அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும்

பக்தி யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சகாயமாக கொள்ளும் அளவில்
பக்தி ஆரம்ப விரோதியான பாபத்தை போக்கி
பக்தி விருத்தி  ஹேதுவாய்க் கொண்டு அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் என்கை..

————————————————–

சூரணை-21
பிரபத்தியில் இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து
காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் —

இங்கன் அன்றி பிரபன்னருக்கு இது செய்யும் உபகார வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் சொன்னவை போலே
துச்சகமுமாய்
ஸ்வரூப விருத்தமாய் -இருக்கை அன்றிக்கே –
ஸூசகமுமாய் –
ஸ்வரூப அனுரூபமான பிரபத்தி உபாயத்தில் இழிந்தவர்களுக்கு

தத் அனுரூபமான – பகவத் பாரதந்த்ய ரூப ஸ்வரூப ஞானத்தை விசதமமாகப் பிறப்பித்து-
அர்த்த அனுசந்தாதிகளாலே  போது போக்குக்கைக்கும் ஹேதுவாய் –
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6- என்கிறபடியே –
பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: