.திரு விருத்தம் -42-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து -தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம் –

வன் காற்று இத்யாதி –
மென் கால் கமலமாவது -மிருதுவான காற்றும் கூட பொறாத படியான மெல்லிய தாளை உடைத்தான கமலமாவது –
இதில் வன் காற்றாவது -அது தான் கண் பாராதே அறைவது –
ஒருங்கே -ஏகதோ முகமாக
மறிந்து கிடந்து அலர்ந்த -மற்றை அருகே புரியில் தர்மிலோபம் வரும் என்னும் படி ஆவது
இத்தால் சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வரா நின்றால் அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்-
பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும் அது தான் அரிது ஆம் படி இருக்கை–
எங்கும் பக்கம் நோக்கு அறியான்
-என்ன கடவதிறே-

மென் கால் கமலம் –
ப்ரக்ருத்யா தர்ம சீலச்ய-என்ன கடவதிறே –
இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது -இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தான் அணித்தாக கை கண்ட உபாயம்
ஆகையாலும் -சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் -பெருமாளுக்கு இந்த கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –
சமுத்ரம் -பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –
ராகவோ ராஜா -ஒரு குடிப்பிறப்பும் இன்றிக்கே அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?சரணம் கந்து மர்கதி -வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்க கண்ட படியாலே
அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –

சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய் -என்று மென்கால் கமலம் –
காற்று தான் வேண்டா வாயிற்று –தண் காலின்மென்மை-
மித்ர பாவேன-அவன் பக்கலில் பாவமே அமையும் -அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றை சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –
ஆர்த்தோவா யதிவாத் ருப்த –ராகவம் சரணம் கத –
என்ற உக்திதிரு  செவி பட்ட போதே இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –
உக்தியே இவன் பக்கல் உள்ளது -நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன் வத்யன் -என்றே இருந்தார்கள் –

ஆர்த்தன் ஆகையாவது -இத் தலையை பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை– 
த்ருப்தன் ஆகையாவது -நெஞ்சு இன்றிக்கே இருக்க செய்தே நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –
ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐ க்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில் இவனை பார்க்கும் அன்றிது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –
ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் -இதுவும் பல வியாப்தமாக கண்டு போருகிறது –
ஆகையாலே ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –
த்ருப்தனுக்கு -இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும் அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –
பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு -அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே -கொன்றேன் -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமாபோலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –
ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது -அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –
க்ருதாத்மன-இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –

ஒருவனோடு ஒன்றை அப்யசித்து சிஷித்தமனவாய் இருக்கும் அவனுக்கு இத்தனை செய்ய வேண்டி வரும் எப்படி பட்டவன் உடைய என்றால் –
மண்ணும் விண்ணும் இத்யாதி –
பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள் என்பாரை போலே –
ஆயிற்று ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரபபிற்று-பரப்பை உடைத்தான பூமியும் ,
எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள்
என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது
நான் அளக்க புகா நின்றேன் -உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்
நநமேயம்-என்று ஒட்டோம்-என்று ஆணை இடுவார்கள் இறே
அதுக்காக இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரை போலே ஆயிற்று அளந்தது –
இப்போ தத் அவபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் -இத்தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –
தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே
இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –
இத்தால் -மென் கால் கமலம் -என்றதை நினைக்கிறது –
வான் நிமிர்ந்தத தன் பால் பணிந்த என் பால்
இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல சுக்ருதமும் தானே என்கிறது
தான் முற்பட வணங்கி பின்னை இத்தலையை வணங்குவித்தான் -முற் தீமை செய்தான் தானே என்கை–
தான் முற்பட்டு இவனை அனுகூலிக்கும் படிபண்ணி பின்னை
-நீ அனுகூலித்தாய் -என்று இவன் தலையிலே ஏறிட்டு  இரங்கும் அவன் ஆயிற்று –
தன் பால் பணிந்த -என்கையாலே –வன் காற்று அறைய-என்கிறதை நினைக்கிறது –
என் பால் -என்கையாலே –ஒருங்கே மருந்து கிடந்து  அலர்ந்த -என்றதை நினைக்கிறது
எம்பிரான் தடம் கண்களே -இவன் பேற்றுக்கு தான் வருந்தினான் ஆயிராதே -இத்தால்
பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்

மென் கால் கமலம் என்றது -ஆபி முக்ய ஸூ சகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத
அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்
வன் காற்று -பூர்ண பிரபத்தி
அறைகை –ஆர்த்த பிரபத்தி

————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: