.திரு விருத்தம் -41-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று
இருந்த இவளுக்கு ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை
பாதகம் ஆகிற படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் -வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இ ஆறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்னும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –
புன் வாடை -மந்த மாருதம்
இது கண்டு அறிதும் -இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –
போந்ததை  இது என்று சொல்வான் என் எனில் சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும்
தத் தத் வியவகார யோக்யதை யும் உண்டாகையாலே —
ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று -பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி
இவ்வாறு வெம்மை-ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  -இப்படி பட்ட வெவ்விய ச்வாபத்தை உடைத்ததை இருப்பது ஒன்றும்
காண்கிறிலோம்   —ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –
பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள்
அன்றியிலே -ம மேதம் என்று ரஜஸ் தமசுக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற-அசுரர் பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேச்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் -திரு அடி உடைய
திரு குளம்பால் அசுரரை துகைத்தாரை போலே இவ் வாடையும் துகைக்க காணும் நினைக்கிறது
அருள் அருளாத இந்நாள்
தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்– மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-
இவள் அங்கே பெருகைக்கு அன்றி – பழிசுமைக்குக்கு உருப்பாயிற்று .
லோகம் அடங்க -ஒருத்தி பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று
பழி சொல்லும் படி ஆயிற்று –
நிறை பழி –
தன் அளவிலே அன்றியிலே இவள் காற்றிலே ஈடு பட வாராது ஒழிவதே -என்று
நாயகனுக்கும் பழி ஆன படி –காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்

நின்று எம்மை வன் காற்று அடுமே –
ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –
எம்மை-
இக்காற்றுக்கு தடவி பிடிக்க வேண்டும் படி ஆச்ரயம் காண ஒண்ணாத என்னை –
வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –
வன் காற்று –
நீர்மை கலவாத காற்று
அடுமே –
ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-

ஸ்வாபதேசம்
இத்தால் நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாதபடியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –

————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: