(இரவு நலிய கீழ்
மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில்
புன் வாடை – மந்த மாருதம்
வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
அருள் உண்டு
இன்று எனக்கு அருளவில்லை
இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே
திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் –
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில்
இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )
அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று
சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-
பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-
பதவுரை
என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது
வியாக்யானம்-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால்
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே –6-9-1-
ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப் பல நாள் உகம் தோறும் உயிர்கள்காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
புன் வாடை –
மந்த மாருதம்
இது கண்டு அறிதும் –
இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –
போந்ததை இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும்
தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —
ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய
வியக்தியை சொல்லிற்று அன்று –
பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப் படுத்தும் ஜாதி
(இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி
வாடை என்று இந்த வியக்தி )
இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் –
இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம் —
ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –
பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே
சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே –
(ஓசித்த நுண்ணிடை இடவாய்ச்சியார் அல்லவே
ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே )
ம மேதம் என்று ரஜஸ் தமஸ்ஸூக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற அசுரர்
பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேஸ்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் –
திரு அடி உடைய திருக் குளம்பால் அசுரரைத் துகைத்தாரைப் போலே
இவ் வாடையும் துகைக்கக் காணும் நினைக்கிறது
அருள் அருளாத இந்நாள்
தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்–
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-
இவள் அங்கே பெருகைக்கு அன்றியிலே – பழி சுமைக்குக்கு உருப்பாயிற்று .
லோகம் அடங்க -ஒருத்தி-(பெருமானைப்) பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று
பழி சொல்லும் படி ஆயிற்று –
நிறை பழி –
தன் அளவிலே அன்றியிலே
இவள் காற்றிலே ஈடு பட (அவன்)வாராது ஒழிவதே -என்று
நாயகனுக்கும் பழி ஆன படி –
காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்
நின்று எம்மை வன் காற்று அடுமே –
ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –
எம்மை-
இக் காற்றுக்கு தடவிப் பிடிக்க வேண்டும் படி ஆஸ்ரயம் காண ஒண்ணாத என்னை –
வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –
வன் காற்று –
நீர்மை கலவாத காற்று
அடுமே –
ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-
ஸ்வாபதேசம்
இத்தால்
நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே
பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –
தாத்பர்யம்
பகவத் விஸ்லேஷம் பிறந்த தமக்கு
சம்சாரம் அஸஹ்யமாம் படியைச் சொல்லி வாடையில் அகப்பட்ட நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
ஓ ஸஹியே
நான் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்த வாடைக் காற்று நலி வதை
முன்பே நெடும்காலமாக அறிவேனாகிலும்
இப்பொழுது கருட வாஹனான -பரம காருணிகனுடைய அனுக்ரஹத்துக்கும் கூட விஷய பூதர் ஆகாமல் இருக்க
அவன் இடத்தில் அன்பு -ப்ரேமம் உள்ள என் மேல் வீசி நலிகிறதே
இதனால் ஊரெல்லாம் நாயகனையும் கூட பழிக்கும் படி நலிய
இப்போது தான் இதன் கொடுமையான ஸ்வபாவம் அறிந்தேன்
இது அதி அஸஹ்யமாய் உள்ளதே
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply