.திரு விருத்தம் -40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த
தசையை சொல்லுகிறது-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் -இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தையுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிரைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-

தர்சநீயமாய் அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர -அச்தமய பர்வதத்தே புக –
தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் -இந்திரியங்கள் தனி தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே -தரித்து இருக்கலாம் –

குழாம் விரிந்த இத்யாதி-

ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே -ஆதித்யன் அச்தமிததவாறே -ராத்ரியானது-குழாம்  குழாமாக வந்து விஸ்ருதமான படி -இந்திரியங்கள் எல்லாமொக்க உபரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே
அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-
நீல கங்குல் இத்யாதி –
கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –
ராத்ரியை பகுவசனமாக சொல்லுவான் என் என்னில் -கல்பங்கள் ஊழி கள் என்னுமாபோலே நேரிழையீர்
இவ்வாணை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே-
ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-
ஞானப் பொன் மாதின் மணாளன்
அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமி பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே -நிதி உடையார்
எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே இவளுக்கும்-இவள் உண்டு என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது மாதின் மணாளன் –
இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது -இவள் பக்கலில்
இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –
துழாய் இத்யாதி –
அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே -அவனும் அவளுமாக
துகைத்த மாலையை ஆசை படுகிறாள் -ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-
இவன் தான் -சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது -அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசை படுகிறது –

நாங்கள் சூழ் குழற்கே  ஏலப் புனைந்து –
பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே
ஏல -ஏற்க்கவே -அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –
என்னைமார் –
விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது -வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –
எம்மை நோக்குவது என்று கொலோ –
இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: