சூரணை-1
முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று –
முமுஷு ஆகிறவன் மோஷத்திலே இச்சை உடையவன் ஆவான் –
யேமுச்ல் மோஷனே ஏ இறே தாது –
இத்தால் சம்சார விமோசனத்தில் இச்சை பிறந்தவனுக்கு என்ற படி-
(சம்சார நிர்வேதம் முதல் படி அன்றோ-விட்டே பற்ற வேண்டுமே-
பகவத் ப்ராப்தியில் இச்சை வந்தால் தான் சம்சார நிவ்ருத்தியில் இச்சை உண்டாகும்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு என்றபடி
பலம் ப்ராப்யம் உபேயம் புருஷார்த்தம் பேறு -பர்யாய சொற்கள்
உபாயம் பிராபகம் ஆறு-பர்யாய சொற்கள் )
ஆத்ம ப்ராப்தி காமனுக்கும் முமுஷ்த்வம் உண்டே ஆகிலும் இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று –
அவனுக்கு ரகஸ்ய த்ரய ஞான அபேஷை இல்லை இறே –
ஆகையால் இவர் முமுஷு என்கிறது -பகவத் ப்ராப்தி காமதயா சம்சார நிவ்ருத்தியிலே இச்சை பிறந்தவனை –
ஏவம் பூதன் ஆனவனுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று என்றது –
இவனுக்கு அவசியம் ஞானதவ்யமாய் உள்ளது ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் ஆகையாலும்
அவற்றை இந்த ரகஸ்ய த்ரயம் உள்ளபடி பிரதிபாதிக்கை யாலும் –
ரகஸ்ய த்ரயமே அறிய வேண்டும் என்கை–
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷுபி ஞான த்ரய உபாதேயம் ஏதத் அந்யந்ந கிஞ்சன –
என்னக் கடவது இறே –
ரகஸ்யம் மூன்று என்று இவர் உத்தேசிக்கிறது
திருமந்த்ரமும்
த்வயமும்
சரம ஸ்லோகமும் ஆகிற
இவற்றை என்னும் இடம் மேலே ஸூஸ்பஷ்டம்-
இவற்றை ரகஸ்யங்கள் என்கிறது –
சகல வேதார்த்த சாரார்த்த பிரதிபாதகதயா பரம குஹ்யங்கள் ஆகையாலே —
ஆக
இவ் வாக்யத்தால் –
அதிகாரி நிர்தேசமும் –
தத் ஞாதவ்ய நிர்தேசமும்
பண்ணி அருளினார் ஆய்த்து-
(நான் யார் -என்ன அறிய வேண்டும் -இவற்றைச் சொன்னவாறு
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்திர யாதாம்யார்த்தம் )
———————————————
சூரணை -2
அதில் பிரதம ரகஸ்யம் திருமந்தரம் –
இனி அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதம ரகஸ்யம் ஏது என்னும் ஆகாங்கஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் வைத்து கொண்டு -இவ் அதிகாரிக்கு பிரதமம் -ஞாதவ்யமான ரகஸ்யம் –
ஸ்வரூப யாதாம்ய பரமாய் –த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை
பரிபூர்ணமாக பிறப்பிக்குமதான திரு மந்த்ரம் என்கை –
அநந்யார்ஹ சேஷத்வம்–அநந்ய சரணத்வம் –அநந்ய போக்யத்வம் -ஆகிற
ஆகார த்ரயத்தையும் -பிரதிபாதிக்கையாலே –
சேதன ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் –
தத் அனுகுண த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் –
ஸூஸ்பஷ்டமாய் பிரதி பாதியா நின்று உள்ள இம்மந்த்ரத்தாலே -ஸூஷிததானவனுக்கு இறே
மற்றை ரகஸ்யங்கள் இரண்டிலும் பிரதிபாதிக்க படுகிற உபாய உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது –
ஆகையால் ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை –
இன்னமும் பிரணவத்துக்கு மந்திர சேஷம் விவரணமாப் போலே –
மந்திர சேஷத்துக்கு த்வயம் விவரணமாய் –
த்வயத்துக்கு சரம ஸ்லோகம் விபரணமாய் இறே இருப்பது –
அந்த நியாத்தாலும் இதனுடைய பிரதாம்யம் சித்தம் இறே –
(அ விளக்கம் உ ம -ஓம்
அதுக்கு விளக்கம் நமோ நாராயணாயா
அதுக்கு விளக்கம் த்வயம்
அதுக்கு விளக்கம் சரம ஸ்லோகம்
விவரண விவரணி பாவம்-இம் மூன்றுக்கும் உண்டே )
ஆக இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி ஆய்த்து –
பிரதம ரகஸ்யம் திரு மந்த்ரம் -என்று இவர் அருளிச் செய்தது –
இத்தை மந்த்ரம் என்கிறது –
மந்தாராம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
சப்த சக்தியாலும் –
அர்த்த போதனத்தாலும் –
தன்னை அனுசந்திப்பார்க்கு ரஷகம் ஆகையாலே –
சப்த சக்தியாலே ரஷகமாம் -ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளும் உபாசகருக்கு –
அர்த்த போதனத்தாலே ரஷகமாம் -ஈச்வரனே உபாயம் என்று இருக்கும் பிரபன்னருக்கு –
அர்த்த போதனத்தாலே ரஷகம் ஆகையாவது –
தேகாசக்தாத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்யாந்தோ யதி ஸ்யாத் பிரதமம்
இதர சேஷித்வ தீச்சேத் த்வதீயம்
ஆத்ம த்ரானோந் முகச்சே நம இதி ச பதம்
பாந்தவாபாச லோலச் சப்தம் நாராயணாக்யம்
விஷய சபல தீச்சேத சதுர்த்தீம் பிரபன்ன -ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி –
என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி தன்னை அனுசந்திப்பார்க்கு –
1-தேக ஆத்மா அபிமானமும் (த்ருதீய -மகாரம்-ஞானமயன் – அறிந்து போக்க வேண்டும்- )
2-ஸ்வாதந்த்ரியமும் (பிரதமம் -அகாரம் அறிந்து போக்க வேண்டும்–அறிவுடையவன் என்று அறிந்து
நிமிந்து செருக்கி ஸ்வ தந்திர அபிமானம் போக்க -அ ஆய ம-அவனுக்கு அடிமை )
3-அந்ய சேஷத்வமும் (த்விதீயம் உகாரம் -அவனுக்கே அடிமை )
4-ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வயமும்
5-அபந்து சங்கமும்
6-விஷய பிராவணயமும்
மேலிடாத படி பண்ணி ஸ்வரூப அனுரூபமாக நடக்கும் படி நோக்குகை –
—————————————–
சூரணை -3-
திருமந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி பிரேமத்தோடே பேணி அனுசந்திக்க வேணும் –
இனிமேல் இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை விஸ்தரேண பிரதிபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் இதனுடைய அனுசந்தான க்ரம கதன முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
திரு மந்த்ரத்துக்கு சீர்மை யாவது –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவ ஆதர்வணா நிச சர்வ அஷ்டாஷரச்ந்தச்தம் -என்கிறபடியே
(சகல வேத ஸங்க்ரஹமாய் -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே
ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகமாய் -)
மந்த்ரானாம் பரமோ மந்திர குக்யானாம் குக்யமுத்தமம்
பவித்ரம் ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன-என்கிறபடியே –
மந்த்ரங்களில் வைத்து கொண்டு பரமமான மந்த்ரமாய் –
குஹ்யங்களில் வைத்து கொண்டு உத்தமமான குஹ்யமாய் –
பவித்ரங்களிலும் பவித்ரமாய் இருக்கிற கௌரவம்-
சீர்மைக்கு போரும் படி -என்றது -தகும்படி என்கை –
பிரேமத்தோடு பேணி அனுசந்திக்கை ஆவது -இத்தை அனுசந்திக்கும் அளவில்
சுஷ்க ஹ்ருதயனாய் )வறட்டு நெஞ்சம்) இருந்து அனுசந்திக்கை அன்றிக்கே -இதன் வைல்ஷண்ய ஞானம் அடியாக
இதின் பக்கல் தனக்கு உண்டான பிரேமத்தோடே
குஹ்யானாம் குஹ்யமான இது அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )
மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற படி பேணிக் கொண்டு அனுசந்திக்கை –
இப்படி அனுசந்திக்க வேணும் என்கையாலே -பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது-
——————————————-
சூரணை -4
மந்த்ரத்திலும்
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது –
இப்படி தன் பக்கல் பிரேமம் உண்டாகவே
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரமோ என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
ஞாதவ்யார்த்த ஞாபகமான இம் மந்த்ரம் தன்னிலும் –
சேஷித்வ சரண்யத்வ பிராப்யத்வங்கள் ஆகிற
ஆகார த்ரய யுக்ததயா இம் மந்த்ரத்துக்கு வாச்ய வஸ்துவாய் இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்திலும் –
தன் மந்த்ரம் ப்ராஹ்மாணாதீனம் – என்கிறபடியே
இம்மந்த்ரம் ஆச்சார்யா அதீனமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
இத்தை யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு -தனக்கு உபகரித்த ஆச்சர்ய விஷயத்திலும் –
தத் தத் வை லஷண அனுரூபமாக ப்ரேமம் அதிசயம் உண்டானால்
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரம் ஆவது என்கை –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரவ த்ரிஷூ பக்திஸ்
சதா கார்ய சா ஹி பிரதம சாதனம் -என்னக் கடவது இறே —
(ஒன்றை விட அடுத்தத்தில் பிரேமம் கனக்க உண்டாக வேண்டும் -)
————————————–
சூரணை-5
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து –
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட –
சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி –
தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் –
(நர நாராயணன் -சிஷ்யன் ஆச்சர்யனுமாய் -முதலில் சொன்னது நாம் தானே இழந்து உள்ளோம்)
இனி இம் மந்த்ரத்தின் உடைய அவதரண பிரகார கதன முகத்தாலே இதனுடைய அப்ரிதம வைபவத்தை
அருளிச் செய்கிறார் –
சம்சாரிகள் ஆகிறார் அநாதி அசித் சம்பந்தத்தால் பிரவாக ரூபேண வருகிற –
அவித்யா கர்ம வாசன ருசி விவசராய் -ஜன்ம மரணாதி க்லேச பாகிகளாய் திரிகிற -பக்த சேதனர் —
தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -என்றது –
தாஸாபூதா ஸ்வ தஸ் சர்வே ஹ்யாத்மான பரமாத்மனா
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -என்கிற படியே –
ஸ்வத சித்தமான பகவத் சேஷத்வத்தை லஷணமாக உடையராய் இருக்கிற தங்களையும் –
பதிம் விச்வச்ய ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
தங்களுக்கு நிருபாதிக சேஷியாய் இருக்கிற ஈஸ்வரனையும் அறியாது என்கை-
ஆனால் அறியாமல் என்னாதே–மறந்து என்பான் என் ?-
முன் ஒரு கால் நினைத்து பின்பு
அந் நினைவுக்கு பிரச்யுதி வந்த இடத்தில் இறே மறந்து என்னாலாவது என்னில் –
மறந்தேன் உன்னை முன்னம் -பெரிய திரு மொழி -6-2-2-என்கிறபடியே
ஸ்வத சித்தமான சம்பந்தத்தை உணர்ந்தால் முன்பு நினைத்து இருந்த அர்த்தத்தை மறந்தால் போலே
இருக்கும் சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து அருளிச் செய்தாராம் இத்தனை –
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -என்றது
கீழ் சொன்ன அஞ்ஞானத்தாலே வகுத்த சேஷியான ஈஸ்வர விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தையும்
ப்ராபிக்கப் பெறாதே என்கை —
புருஷார்த்தத்தின் உடைய கௌரவத்தையும் -அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து
கிட்டப் பெறாமல் கிடந்த படியையும் நினைத்து -இழந்து என்கிறார் –
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே-என்றது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஞானமும் புருஷார்த்த ஞானமும் இல்லாமையாலே –
ஸ்வ சேஷத்வ அனுரூபமான சேஷி விஷய கைங்கர்ய ரூப புருஷார்த்தத்தை
இழந்தோம் என்கிற அலாப க்லேச அனுசந்தானமும் இன்றிக்கே என்கை-
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட என்றது –
சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே –
அநந்த க்லேச பாஜனமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே கரை காண அரிதாம் படி இருக்கிற
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்துக்கு உள்ளே விழுந்து -தாப த்ரய அபிபூதராய் கொண்டு -க்லேசப்பட என்கை –
இத்தால் –
தங்களையும் -ஈஸ்வரனையும் அறியாமையாலும் –
புருஷார்த்தத்தை அறியாமையாலும் –
சம்சார சாகரத்துக்கு உள்ளே கிடந்தது நோவு படா நிற்க -விரோதியான சம்சாரம் தன்னையும்
தந் நிஸ்த்ரண உபாயத்தையும் -அறியாமையாலும் –
ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்திலும் ஒன்றையும் அறியாமல் கிடந்தார்கள் என்கை –
ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதிப்படியே -சகல சாஸ்த்ரங்களுக்கும் பிரதிபாதிப்பது
அர்த்த பஞ்சகத்தையும் இறே –
இவ்வர்த்தங்களை இவர்களுக்கு ஸூக்ரகமாக அறிவிக்கைக்காக சகல சாஸ்திர ஸங்க்ரஹமான
திரு மந்த்ரத்தை சர்வேஸ்வரன் வெளி இட்ட பிரகாரத்தை சொல்லுகிறது மேல் –
சர்வேஸ்வரன் தந் கிருபையால் என்றது –
ஈசேசித வியசம்பந்தாத் அநிதம் பிரதமாதபி -என்கிற படியே அநாதியாக ஈச்வரனோடு உண்டான ஈசே சிதவ்ய
சம்பந்தத்தை உடையனான எம்பெருமான் –
ஏவம் சம்ஸ்ருதி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்கா குலே விஷ்ணோ க்ருபா காப்யு பஜாயதே -என்கிறபடியே –
இவர்கள் படுகிற துக்க தர்சன மாத்ரத்தால் உண்டான தன்னுடைய நிர்கேதுக கிருபையாலே என்கை –
இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி -என்றது –
இப்படி சம்சார சாகரத்திலே கிடந்தது நோவுபடுகிற இவர்கள் –
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷின-என்றும்
சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் -என்றும் சொல்லுகிறபடி
சம்சார நிஸ்தரண உபாய பூதனான தன்னை அறிந்து சம்சார சாகரத்தை கடந்து
அக்கரை படும்படி என்கை –
(வைகுந்தன் என்னும் தோணி -நாவாய் முகுந்தன் )
தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று -என்றது
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி–10-6-1- என்கிறபடியே
நர நாராயண ரூபேண அவதரித்து -நரனான தான் சிஷ்யனுமாய்
நாராயணனான தான் ஆச்சார்யனுமாய் நின்று என்கை –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -என்றது
சகல சாஸ்திர சங்க்ரகமாய்-அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும்
ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை பிரகாசிப்பித்தது அருளினான் என்கை-
அருளிச் செய்தான் என்னாதே வெளி இட்டு அருளினான் -என்றது –
இப்போது தான் ஒன்றை நியமித்து சொன்னான் அல்லன் –
அநாதி யானத்தை பிரகாசிப்பித்தான் இத்தனை என்னும் இடமும்
அதி குஹ்யமாய் உள்ளதை இவர்கள் துர் கதி கண்டு சகிக்க மாட்டாமையாலே
பிரகாசிப்பித்தான் என்னும் இடம் தோற்றுகைக்காக–
—————————————————-
சூரணை-6
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே –
அத்தை அறிவிக்கைக்காக –
ஆனால் ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருள அமையாதோ ?
சிஷ்யனாய் நின்றது எதுக்காகா ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருளின அளவு அன்றிக்கே -தானே சிஷ்யனுமாய் கொண்டு நின்றது –
ஆச்திகோ தர்ம சீலச்த சீலவான் வைஷ்ணவ ச சுசி
கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே -என்றும் –
சரீரம் வசூ விஞ்ஞானம் வாசா கர்ம குணா நசூன் குர்வர்த்தம்
தாரேயேத்யஸ்து ச சிஷ்யோ நேதர ஸ்ம்ருத -என்றும் –
சத்புத்திஸ் சாதுசேவி சமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷி
ஸூஸ்ருஷி சத்யக்தமான ப்ரநிபாதன பர பிரச்னகால பிரதீஷ
சாந்தோ தாந்தோ அனசூயஸ் சரண முபகதஸ் சாஸ்திர விசுவாச சாலி
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவிதபிமத்தஸ் தத்வதச் சிஷணீய–நியாஸ விம்சதி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியும்
சாத்யாந்திர நிவ்ருத்தியும் –
பல சாதன சிஸ்ருஷையும் –
ஆர்த்தியும்
ஆதரமும்
அனசூயையும்
உடையனாய் இருக்கையும் ஆகிற சிஷ்ய லஷணம் லோகத்தில் உள்ளார் அறியாமையாலே –
அத்தை ஸ்வ அனுஷ்டானத்தாலே அறிவிக்கைக்காக என்கை-
உபதேசத்தால் அறிவிக்கும் அளவில் -ஸ்வோத்கர்ஷம் தேடிக் கொள்ள வந்தான் இத்தனை என்று
நினைக்கவும் கூடும் –
அனுஷ்டானத்தில் அறிவிக்கும் அளவில் நமக்கும் இது வேணும் என்று
விஸ்வசித்து பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே-
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –