(திருக்கண்களின் அழகு
ஈற்று எவகாரம் -இதில் ஈடுபட்டவர் வேறு எங்கும் புகார்
கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -அதே அர்த்தம்
தோள் கண்டார் தோளே கண்டார் போல்
இரக்கத்தைக் குறிக்கும் ஏவகாரம்
கண்ணாலே பார்த்தால் -இவ்வளவு கையால் அணைக்க முடியவில்லையே என்ற இரக்கமாகவுமாம்
ஒரே பாசுரத்தில் ஐந்து பிரான் இதில்
ஞாலப் பிரான்
விசும்புக்கும் பிரான்
மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான்
எம்பிரான்
உரு வெளிப்பாடு
எங்கனேயோ அன்னைமீர்காள் -செல்கின்றது என் நெஞ்சமே -அங்கும் உரு வெளிப்பாடு
நெஞ்சம் நிறைந்தன
ஏழையர் ஆவி வுண்ணும் இணைக் குற்றங்களோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்களோ அறியேன்
சூழவும் நாண் மலர் போல் வந்து தோன்றும் -திருமேனி முழுவதுமே திருக்கண்கள் ஆகவே –
தலைமகள் பாசுரம்
உருவ வெளிப்பட்டால் தலைவிக்கு தோழிக்கு கூறுவது )
அவதாரிகை –
கீழ் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள்
தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகைத் தொடையான
திரு கண்களிலே போய் முட்டிற்று
திருக் கண்கள் தனக்கு அவ்வருகு போக ஒட்டாதே
நலிகிறபடி சொல்லுகிறது
க்ருஹீத் வா ப்ரேஷ மாணா ஜானகி உதிதா பவத் பர்த்தாராம் இவ -இத்யாதி சுந்தர காண்டம் -36-4-
கணை ஆழி பார்த்த உடன் பெருமாளையே கண்ட படி பிராட்டி மகிழ்ந்தாள்-
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-
நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-
பதவுரை
நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.
வியாக்யானம் —
நீல தட வரை மேல்
பச்சை மா மலை போல் மேனி -என்னுமா போலே
ஒரு நீல கிரி போலே காணும் திரு மேனி இருப்பது
புண்டரீக -இத்யாதி –
அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –
உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –
அவ் அவயவம் ஒழிய அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —
(கிருபையா -சர்வ-இத்யாதி -பராசர பட்டர் -கண்கள் நாடு பிடிக்கப் புறப்பட )
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷணீ – என்று உபநிஷத்களில் -சாந்தோக்ய உபநிஷத் -16-7-
சொல்லுகிற தாமரை –
எமக்கு எல்லா இடத்தவும் –
கந்தவ்ய பூமியில் இல்லாத படிக்கு ஈடாக திருக் கண்கள் தொடர்ந்த படி –
கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –
(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளே ஒக்கின்றதே )
புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1-
கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்மொழி -8-9-1—இத்யாதி-
பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் –
பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரை உடைத்தான கடல் சூழ்ந்த
பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-
(மூன்று தொழில்கள்
படைத்து பூமிக்கு நீரில் இருந்து தானே படைப்பு
காக்கவும் நீர் வேணுமே
பிரளயத்தில் நீர் உண்டே
இப்படி மூன்றும் உண்டே )
விசும்புக்கும் பிரான் –
இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாகனானவன்
மற்றும் நல்லோர் பிரான்
நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்
கோலம் கரிய பிரான்
இக் கண்ணுக்கு வளைத்து கொடுக்கும் உடம்பு –
நித்ய ஸூரிகளுக்கு முற்றூட்டாக அனுபவிக்க கொடுக்கும் உடம்பு
இவ் வடிவைக் காட்டி இறே அவர்களை பிச்சேற பண்ணுவது –
(ஸகல மனுஷ நயன விஷயதாங்கன் )
எம் பிரான்
அவர்களுக்கு நாயகன் ஆனாற் போலே
எனக்கும் நாயகன் ஆனபடி
கண்ணின் கோலங்களே-
எனக்கு உபகாரன் ஆனவனுடைய விலஷணன திருக் கண்கள் –
நீல தட வரை மேல்-புண்டரீக நெடும் தடங்கள் போலே பொலிந்து
எமக்கு எல்லா இடத்தவும்-
தாத்பர்யம்
திருமேனி சவுந்தர்யம் ஸ்மரிக்கும் பொழு து
அத்துடன் திருக்கண்களும் ஸ்ம்ருதமாய்
ஈடுபட்டு
நாயகனின் உருவ வெளிப்பாட்டை நாயகி தோழிக்கு உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
அழகிய திருமேனியோ
‘அதில் பூத்த திருக் கண்கள்
சகல பிராணிகளையும் உகப்பிக்கும்
அவனான திருக்கண்கள் அழகானது
இந்திரிய நீல மாணிக்க மலை மேல்
தடாகங்களில் உள்ள தாமரை மலர் என் பக்கம் சூழ்ந்து எனக்கு காட்டா நின்றது -என்கிறாள் –
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply