திரு விருத்தம் -38-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
யோகிகள் யோக அப்யாசம்பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக
லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—அது போல் இவரும் பகவத் அனுபவம்
சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக
யாத்ரையின் நின்றும் வேத யாத்ரையில் மூட்டும் தனை அருமை
போரும் ஆழ்வார்களை -வேத யாத்ரையில் நின்றும் லோக யாத்ரையிலே
மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத்
விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும் ஆழ்வார்கள் –
பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து -சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு
இரண்டும் எம்பார் அருளி செய்தார் –
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான்  உரு ஒத்தன நீலங்களே -38-
பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் -தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –சொன்னால் விரோதம் இது -3-9
வியாக்யானம் –
கடமாயினகள் கழித்து –
ருனானி த்ரிகுண்யா பாக்ருத்ய -என்கிறபடியே -மூன்று வித கடன்கள் கழிந்த பின்னர்
மனசை மோஷத்தில் நிலை நிறுத்த வேண்டும் -மனு ஸ்மரதி – 6-35 –
ப்ரஹ்ம  சர்யேனருஷிப்ய  யஜ்ஜேன தேவேப்ய பிரஜாயா பித்ருப்ய –  என்று சொல்லுகிற படியே –
ப்ரஹ்மசர்யம்  மூலம் ரிஷிகளின் கடனையும் –
யாகம் மூலம் தேவர்கள் கடனையும் –
பிள்ளை பேரு மூலம் பித்ருக்களின் கடனையும் -தீர்க்க கடவன் –
உஷ்ண காலத்திலேயே -உஷ்ணமான தேசங்களிலே -சரீர க்லேசங்களாலே –
சொல்லுகிற ருண த்ரயத்தையும் இறுத்து —
 
தன் கால் வன்மை இத்யாதி –
தன்னுடைய யத்னத்தாலே யாதல்-
தபோ பலத்தால் ஆதல்-
சத்தையை நோக்கி இட்டு வைத்து –
சீத காலத்திலேயே கடலோடு -குளப் படியோடு வாசி அற -தீர்த்த
தேசங்கள் எல்லாம் புக்கு -கழுத்து மட்டும் நீரிலே நின்று –
தபசு பண்ணின அந்த பலத்தாலே -வந்ததோ உங்களுக்கு

இப் பரம சாம்யா பத்தி ?–

நீல மலர்கள் இப்படி கடன் தீர்கின்றன -கடம்=கடன் –
குடமாடி-
மன்றிலே தன் அழகை சூறை கொள்ளும் படிக்கு ஈடாக நின்று -குடக் கூத்தை ஆடி –
இடையருக்கு உண்டான செருக்குக்கு தலை சாவி வெட்டின படி –
 
இம் மண்ணும் இத்யாதி –
ஒரு தெருவிலே யாதல்-
சிலர்க்கு ஆதல்-
தன்னை கொடுக்கும் அது அன்றிக்கே
லோகமாக வாழும் படி கூத்தாடின படி –
குலுங்க-
சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே -லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி   –
உலகு அளந்து நடமாடிய –
இந்திரன் தான் இழந்த பூமியை கொண்டு போக –
மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –
அத்தை கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக –
இவர் திரு உலகு அளந்து அருளின போதை தம் பேறாக அனுபவித்தார் –
உரு ஒத்தன நீலங்களே –
இப்படி சர்வதா சத்ருசமான வடிவை நீலங்கள் பெருகைக்கு அடி –
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தபசோ ?-
இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால்
அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலியும் படி இறே
பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது .
——————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: