திரு விருத்தம் -37-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு
க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும்
துர் கதிகளுமான தேசத்திலே போக –திரு தாயார் இவளை படுக்கையில்
காணாமையாலே -எல்லா படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே –
புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று -இவள் போன வழியை
பார்த்து மோஹிக்கிறாள்–திரு கோளூரில் புகுகிற   பெண் பிள்ளை உடைய
திருத் தாயாரைப் போலே -ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே –
எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-
கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-
பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் -நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –மண்ணை யிருந்து  துழாவி -4-4-
 வியாக்யானம் –
 
கொடுங்காற்  சிலையர் –

யோதா நாமக்னி கல்பானாம் பேசலாநாம்  மகேஷூணாம்–பால காண்டம் -6 21- – வீரத்தில் அக்னி போன்று யாராலும்-அண்ட இயலாமல் உள்ளவர்களும் -வலிமை மிக்கவர்களும் -கோணின காலை உடைய  சிலையர் –

ஹிம்சையில் த்வரையாலே எப்போதும் நாணி ஏறிட்டு வளைந்த படியே இறே இருப்பது .
கொடுமை என்றுமாம் –
கால்-நாணி -வில்லுக்கு கொடுமை யாவது -தான் சென்று நலிகை அன்றிக்கே -ஆள் இட்டு நலிகை
சிலையர்-நிரூபகம் –
உண்ணும் போதும் ஸ்வ ஸ்திரீ யோடு அனுபவிக்கும் போதும்-கையும் வில்லுமாய் இருக்கிறபடி -எப்போதும் கை கழலா நேமியானோடே-பெரிய திருவந்தாதி -87-

பழகினவள்  இறே இவள் –

அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது .-
அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது –
இது பிறர்க்கு அனர்த்தமாய் இருக்கும் இறே –

நாஹரயதி    சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா –அயோத்யா காண்டம் -60 -20 – – பெருமாளின் வலிமையான தோள்கள்-பற்றிய படி செல்லும் அவள் -கானகத்தில் உள்ள சிங்கம் யானை -போன்றவற்றை பார்த்து அஞ்ச வில்லை-என்னும் படியே

அவன் கையும் வில்லும் நினைத்தார் பயம் கெட்டு இருக்குமா போலே
இருக்கிறது அன்று இறே இங்கு –
நிரை   கோள் உழவர் –
பராகாரமான கோக்ரஹனம் பண்ணுகையே ச்வயன்க்ருஷியாய் இருக்கும் அவர்கள்-
கோ ப்ராக்மண ஹிதாயச  -என்று சாது சம்ரஷணம் பண்ணின வரோடே பழகினவள் இறே இவள் –
கொலையில் வெய்ய –

   கொல்லும் இடத்தில் வெவ்வியராய் இருக்கை-அர்த்தார்தம் ஆகவாதல்-எதிரி என்றாதல்-அன்றிக்கே -துடிப்பு காண்கையே பிரயோஜனமாக கொல்லுகை -சாவக் கொல்லாதே கிடந்தது உழலும் படி கொல்லுகை -இடையன் எறிந்த  மரம் ஆக்குகை-பெரிய திரு மொழி – 11-8 6– இடையர்கள் வெட்டி எறிகின்ற மரம்ஓர் இடத்தில் பச்சையாகவும் -மற்று ஓர் இடத்தில் காய்ந்தும் உள்ளது போன்று -குற்று உயிரும் கொலை உயிரும்  ஆக செய்வர் -அவர் பிறரை கொல்லும் இடத்திலும் -அவர்களுக்கும் ஹிதரூபம் ஆக இறே கொல்லுவது -பின்னையும் -சஞ்சாத பாஷ்ப பர வீர ஹந்தா ராமோ முகூர்த்தம் விமானா பபூவ –கிஷ்கிந்தா காண்டம் -24 -24 – எதிரிகளை வீழ்த்த வல்லனாகிய  பெருமாள்-சிறிது நேரம் துயரம் அடைந்த மனதுடன் அப்படியே அமர்ந்தான் -என்று கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –

 கடுங்கால் இளைஞர் –
பர ஹிம்சை பண்ண வென்றால் -பத்து புக்கு பத்து மீள வல்லராய் இருக்கை-
இவர்கள் ஒரு கிரியை செய்ய வேண்டாதே காணவே பயா வஹமாய் இருக்கும் பருவம்-
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே இளகின பருவமாய் இருக்கை –
துடி படுங்கவ் வைத்து –
பறைகளினுடைய ஓசை உடன் கூடிய கானகம்
துடி யினுடைய ஓசையை உடைத்து  -இத் த்வனி உள்ள இடத்தே போகிறது –
இருந்தால் தாயினுடைய ஹித வசனம் கேட்க வேணும் என்று —
இத் த்வனி உள்ள இடத்து போனால் அழிய உடம்பை இறே அழிப்பது –
இங்கு நித்தியமான ஆத்மாவை அழிக்கும் –
 

 அருவினையேன்–அவன் வேண்டி இராமை இல்லை-இவளுக்கு ருசி இல்லாமை இல்லை-கிட்டாது ஒழிகிற இது  காண்கிற என்னுடைய பாஹ்ய ஹானி இறே -மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்

நெடுங்காலம் இத்யாதி –

ஆஸ்ரயித்தின் அளவன்று கிடீர் -சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 -சடக்கென்று -சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –

தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –
தன்னையும் அறியாதே -தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –

மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி -பலநியமங்களை கடப் பிடித்து -பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –

நீண் மலர் பாதம் –
ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி
சுலபமான திரு அடிகள்-
அது தானும் தன் பேறாய் இருந்த படி –
மலர்

செவ்வி –

பரவிப் பெற்ற –
ஸ்தோத்ர வாதங்களை பண்ணி பெற்ற –
நிதி எடுத்தா ற் போலே –
தொடுங்கால் ஓசியும் இடை –
தொடத் தரியாய் இருக்கிறபடி –
நாயகனும் சீர்மை அறிந்து அனுபவியாதே பார்த்து இருக்கும் அத்தனை –

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து -திரு வாய் மொழி -6 7-8 – –

இவை உண்டோ இல்லையோ -என்று சம்சயிக்க வேண்டி இருக்கிறபடி –
மேலும் கீழும் பார்த்தால் இடையும் உண்டு என்று அனுமித்து கொள்ளும் அத்தனை –
இடைக்கு தாரகமாக கையை வைத்தால் -கை தானும் மலையை வைத்தாற் போலே இறே இருப்பது –
இள மான் சென்ற –
இவ்வழி போக்கும் இத்தனையும் பொறாத பருவம் கிடீர்
சூழ் கடம் –
க்ரூரமாய் பரந்து இருந்துள்ள காடு-
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: