அருளி செயல் அரங்கம் -பெரிய திரு அந்தாதி -சாரம் ..

ஸ்ரீ யபதி -என் செவி வழி வந்து மனசில்புகுந்து –யான் பெரியன் -நீ பெரியன் என்பதை  யார் அறிவர்

நான் உன்னை விழுங்க -நீரால் உருகி- தான் முன்னம்பாரித்து  என்னை முற்ற பருகினான்-
அவனுக்கு அடக்கம் தான் -ஆழ்வார் .
சிறிய திரு அந்தாதி வேற இல்லை- பெரிய சிறிய திரு மடல் போல் –
முன் உரைத்த திரு விருத்தம் முறையில் வரும் திரு ஆஸ்ரியம் -அடுத்து பெரிய திரு அந்தாதி
பகவத் அனுபவ விரோதி –சம்சாரம் விலக்க முதலில்அசோகா வனம் பிராட்டி இருந்தது போல் .-
பிரகிருதி சம்பந்தம் நீக்கி- இனி யாம் உறாமை-அடியேன் செய்யும் விண்ணப்பமே –
உபக்கிரமம் உபசம்காரம்-பொல்லா அருவினை –அழுந்தார் சொல்லி தலை கட்டினார் ..
திண்ணம் அழுந்த கட்டி -என்னை போர வைத்தார் புறமே –
தன் ஸ்வரூப ரூப குண விபூதி  சேஷ்டிதங்களை  அனைத்தையும் காட்டி அவரை தரிக்க வைத்தான் –
திரு ஆஸ்ரயத்தில் இது நடக்க –அடுத்து பெரிய திரு அந்தாதி
ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை -நான்கு பிரபந்தங்களுக்கும்மூன்றாவது ஸ்ரீ யபதியில்
கைங்கர்ய விரோதி – தவித்த தவிப்பு போல் திரு விருத்தம் –
சித்ர கூடம் சென்று -அனைவரையும் கூட்டி -தரித்து போனானே -திரு ஆஸ்ர்யம்
ஸ்ரீ பாதுகை பெற்று -நந்தி கிராமம் -அடி சூட்டும் அரசு-நாள்களை தள்ளி -பெரிய திரு அந்தாதி
முடி சூடிய பின்பு தனக்கு வகுத்த -நிழலும் அடி தாறும் போல் -இருக்க திரு வாய் மொழி
மனசு வெதுப்பு-பெருமாளுக்கு முடி சூட்ட -அவர் திரு அடி தான் சிரஸில் வைத்து -ஆறினதே-
அப்யாசம் பண்ணி குண அனுபவத்தில் ஆழ்ந்த  பிரபந்தம்..
பெரிய -comperative -இல்லை absolute
அவன் கல்யாண குணம்-அனவதிக அஸங்க்யேய- கல்யாண குணம்- போல் இந்த பிரபந்தம் .-
கல்யாண குணம்பரி பூர்ண அனுபவம்-இதில்-என்பதால் பெரிய திரு அந்தாதி .
இதை உணர்ந்து -தான் அனுபவித்து -நமக்கும் காட்டிய ஆழ்வார் பெரியவர்
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே -உபய விபூதிகளும் உன் இடம் -என்கிறார்
நீ என் செவியின் வழிபுகுந்து என் உள்ளாய்–  –ஹிருதயத்தில் இருக்கிறாய்
அவி வின்றி-சங்கை இன்றி –யான் பெரியன் -இங்கே -இத்தை நீர்த்தேசித்த பின்பு  -மேலே – நீ பெரியை யார் அறிவர்-
நிர்ணயமான அர்த்தம் ஆழ்வார் பாசுரங்களில் .உண்டே

உள்ளு -நீ யே ஆராய்ந்து பார்த்து கொள் -சொல் என்று  சொல்ல வில்லை ..

ஆதி-மத்யம்-அந்தி -மூன்றிலும் குண அனுபவம்
முந்துற்ற நெஞ்சே -தனியன்
வந்தித்து வாயார வாழ்த்தி -வாழ்த்தியே -பாடமும் உண்டு
முயர்தீ-முயன்று கொண்டு -தரித்து -மனசுக்கு
தொழுது எழுது என் மனனே போல் இங்கும்
பரி பூர்ண பகவத் அனுபபம் பரி வாகம்-சக காரி மனஸ் தானே –
உற்சாகத்துடன் முதலில் போகும் நெஞ்சை கொண்டாடுகிறார்
நெஞ்சமே நல்லை நல்லை -நீ பெற்ற பேறு போலே எனக்கும் வேண்டுமே –
முருகு -அழகு –மாறன் பெயரை சொல்லு -தனியன்-நம் நெஞ்சுக்கு –
முன்புற்ற நெஞ்சே—எம்மோடு கூடி இயற்றுவாய் -ஆழ்வார்
நல் பூவை -பூவை பூ-மேய்த்த வடிவு திவ்ய ரூபம்-புகழ்-கல்யாண குணம்
நயப்பு -ஆசை -உடைய நாக்கு-துள்ளியும் ஆடியும் பண்ண வைக்குமே –
நயப்புடைய நா ஈன்ற தொடை கிளவி-சப்த கூட்டம் –உள் பொதிவோம்-உள் புகுந்து அவகாசித்து
புகுந்துகுடைந்து ஆடி-அனுபவிக்க -குண அனுபவ பூர்த்தி -த்ருஷ்ண அனுபவம் –
ஸ்வரூப அனுகுணமாக பயந்து-ஸ்ருதிகள் கைவிட்டு போனதே-
நைச்ய அனுசந்தானம் -பூஷணம் இது தானே –புகழ்வோம் பழிப்போம் -பாசுரம்
தகுதி இல்லை இருந்தாலும் செய்கிறேன் ஷமா ரூபமாக இதையும் அருளுகிறார் ..
மனக்குற்றம் மாந்தர் பழிக்கில் புகழ்-போல் -அமுதனார் –
புகழோம்  பழியோம்எங்கள் மால்-பொருள் படுத்தாதே -அத்யந்த வியாமோகம் கொண்டவன்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பு தானே
எங்கள் மால் செம் கண் மால்-பார்த்து அறிந்தோம் –
என் செய்ய தாமரை-நான்கு காரணம்-
1-ஐஸ்வர்யம்
2-வியோமகம்
3- விரோதி சினம்-
4-ஆழ்வார் போல்வாரை பிரிந்த -ஆக இந்த நான்கு காரணங்கள்.
சீறேல்-கோபித்துக் கொள்ளாதே -சீறி அருளாதே
இவை அன்றே நல்ல  இவை அன்றே தீமை அறிவன்-அடுத்து சொல்கிறார்
அடைப்பு நீக்க ஒண்ணாது -பற்றவும் முடியாது தவிர்க்கவும் முடியாது என்கிறார் –
என்னில் புகழ் மிக்கர் யாரே-என்றும் நான் தானே -சாத்விக அகங்காரம் .
கரும் சோதி கண்ணன்-சீல பெரும் சோதி
கடல் புரையும்-அபரி சின்னமான கல்யாண குணம் –
வேட்கை மிக்கு அருளி –
என் நெஞ்சினாரை கண்டு இதுவோ தகவு-அடுத்த தூது அங்கே-
தாமே அணுக்கராய் தான் ஒழிந்தார் – யாமே அரு வினையோம்-
சேயோம்-அகன்று இருக்க -மனஸ் அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார்
பிராட்டி சேர்த்து வைத்ததால்-பாரிடந்த அம்மான் பாதம்-
54 பாசுரம் அனுபவித்து
55 தன் பெற்ற பேறை சாதிக்கிறார்
அனுபவ விரோதி நீங்கி-வானோ மறி கடலோ -ஆன் ஈன்ற கன்று –
மாருதமோ தீயகமோ கானோ-பஞ்ச பூதமும் சாதித்து –
நொடியார்-வடிவார் மாதவன் போக்கி தருவானே நொடி பொழுதில்
குண அனுபவ நிஷ்டர்
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் -என் நினைந்து போக்குவார் -இறுதியில்
 ஸ்வாபிகமாக-தன்னை போல் -வாயும் திரை உகளும் காற்றையும் கழியையும்  கட்டி அழுதாரே  –
நன்மையே ச்வாபம் தர்மன் திரி யோதனன்-இருவராலும் கெட்டவன் ஒருவனை
கொண்டு வர முடியவில்லையே அது போல்
சூழ் வினையின் ஆழ் துயரை இதை கொண்டு போக்காமல் எப்படி
 இருப்பார்கள்- என் நினைந்து பொழுது போக்குவார்கள்
திரு மேனி சோபை-கண்டும் -திவ்ய ஆயுத சேர்க்கை-திவ்ய ஆபரணம் போலே தானே இவை-
பார்கலந்த பல் வயிற்றான்-பிரளயத்தில் வைத்து -ஆபத் சகத்வம் காட்டியும்
பாம்பணையான்-சர்வ சேஷி காட்டி கொடுக்க –
சீர் கலந்த சொல் நினைந்து -இந்த பிரபந்தம் –
கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் -ஸ்ரீமத் ராமாயணம்
கை கலந்த ஆழியான் சீர் கலந்த சொல் -தம் அத்புதம்-கையில் அனைத்தும் -சர்வ அவதாரம்-
 கிருஷ்ணா அவதாரம் -ஸ்ரீ பாகவதம் போல்வன
பார் கலந்த பல் வயிற்றான் சீர் கலந்த சொல் -சிருஷ்டி ஸ்திதி  பிரளயம் மூன்றும் இவன் தொழில்
தத் பிரம -சுருதி -வியூகன் -பாஞ்சராத்ரம் போல்வன

பாம்பணையான் சீர் கலந்த சொல் –நித்ய விபூதி -முக்த போக்ய முகுந்தன் –ஸ்ருதிகள் அனைத்தும்

இப்போதும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே
ஆழ்வார் அடுத்து சொல்கிறார்
இன்னும் இனி சிறிது சென்றாலும் இதையே சொல்லி கொண்டு இருப்பேன்-
எப்பொழுதும் கை நழுவா நேமியான் நம் மேல்வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்வாய்
இப்படி பிரித்து அனுபவம் -அனைத்தும் சொல்லும் பெரிய திரு அந்தாதி
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: