ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம் — சூர்ணிகை -99/100..

சூரணை -99-

இனி மேல் இவருடைய இந்த பக்தி தான் கர்ம ஞான சாத்யையாய் –
பகவத் பிராப்தி சாதன பூதையாய் இருக்கும் உபாசகர் பக்தியிலும் –
பிரபன்னர் பகவான் பக்கல் அர்த்தித்து பெறும் கைங்கர்ய உபகரண பக்தியிலும்
வ்யாவிருத்தை என்னும் இடம் அறிவிக்கைக்காக –
பிரதமம் சாதன பக்தி வேஷத்தை தர்சிப்பிகிறார் இதில் –

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்
3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு
4-ஊன் வாடப் பொருப்பிடைத் தான் வருந்தி
5-துன்ப வினைகளை விடுத்து
6-விவேக சமாதிகள் வளர
7-எட்டு நீக்கி
8-எட்டும் இட்டு
9-எட்டினாய பேதப் பூவில் சாந்தோடு
10-தேவ கார்யம் செய்து
11-உள்ளம் தூயராய்
12-வாரி புன் புல வகத்தினுள் இளைப்பினை அடையவே விளக்கினைக் கண்டு
13-யோக நீதி நண்ணி
அறம் திகழும் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெறும் சுடரை
கண்கள் சிவந்ததிற்படியே மனவுட்கொண்டு
14-நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய்
கனவில் மிக்க தர்சன சமமாய்
ஆகத்து புல்கு மத்யர்த்த பிரியமாய் வைகும்
சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத
அநந்ய பிரயோஜனமாய்
வேதன உபாசன சேவாத்யானாதிகள் என்று சொல்லும் அது
சாத்திய சாதன பக்தி யாக சாஸ்திர சித்தம்-

(க்யாத குலங்களில் -புகழ் நிறைந்த மேல் குலங்களில் / விளக்கினை -இங்கு ஆத்மாவை /
அரும் பெரும் சுடர் -இங்கு பரமாத்மாவை-
உள்ளம் தூயராய் –முடிய கர்மத்தைச் சொல்லி -யோக நீதி நண்ணி -முடிய ஞானத்தைச் சொல்லுகிறது)

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே -அதாவது –
ஜென்மாந்தர சஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி :
நராணாம் ஷீண பாபானாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –ஸ்ம்ருதி –என்றும்
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எல்லாம்–திருச்சந்த –75 -என்றும்
சொல்லுகிற படியே ஜென்மாந்திர சஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக
பூர்வமாக –பகவத் சமாராதன ரூபேண அனுஷ்டிதங்களான சத்கர்மங்களாலே –

க்யாத குலங்களில் பிறந்து –
அதாவது
ஸூசினாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே-அதவா
யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்-ஸ்ரீ கீதை -6-41–
(-யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தில் நின்றும் நழுவினவன்
பரிசுத்தர்களும் ஸ்ரீ மான்களுமானவர்களுடைய குலத்தில் பிறக்கிறான் –
அன்றிக்கே யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஞானிகளுமானவர்களுடைய பெரிய குலத்தில் பிறக்கிறான் ) என்றும்
ஜெனித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசசாம் சுசினாம்
யுக்தாநாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்—ஸ்தோத்ர ரத்னம் -61–
( நான் உலகில் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும் பரிசுத்தர்களும் யோகம் செய்து கொண்டு இருப்பவர்களும்
குணமயமான பிரகிருதி ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்திலே பிறந்து )
என்றும் சொல்லுகிறபடி –
தத்வ வித்துகளாய் -பரம யோகிகள் என்று ஜகத் பிரசித்தம் ஆனவர்கள் உடைய குலங்களில் பிறந்து –

2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய் –
அதாவது –
தெரித்து எழுதி வாசித்து கேட்டும் -நான்முகன் -63-என்கிறபடியே
பகவத் விஷயத்தை அனுசந்தித்து தத் விஷயமான சப்தங்களை லிகிப்பது வாசிப்பது பிறர் சொல்ல கேட்பதாய் கொண்டு
இந்த சாஸ்திர அப்யாச முகேன பிறந்த தத்வ ஞானமுடையராய் –

3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு –
அதாவது –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -திருமாலை -25-என்கிறபடியே -உபாசன அங்கமான -நித்ய கர்ம அனுஷ்டான
உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்யர்த்தமான ஸ்நானத்தை பண்ணி –
ஓதி உரு எண்ணும் அந்தி–முதல் திருவந்தாதி -33- -என்றும் –
ஐ வேள்வி —பெரிய திருமொழி -3-8-4-என்றும்
அறு தொழில் அந்தணர் –திரு எழு கூற்று இருக்கை -என்றும் -சொல்லுகிற
சந்த்யாவந்தன காயத்ரி ஜபம் என்ன –
தேய யஜ்ஞம் -பித்ரு யஜ்ஞம் -பூத யஜ்ஞம் -மனுஷ்ய யஜ்ஞம் -ப்ரஹ்ம யஜ்ஞம் -ஆகிய
பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்ன
அத்யயன –அத்யாபன -யஜன -யாஜன -தான -பிரதிக்ரகங்கள் -ஆகிய ஷட் கர்மங்கள் என்ன-
இப்படி இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூரணராய்-

4-ஊன் வாட பொருப்பிடை தாம் வருந்தி –
அதாவது
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு -பெரிய திருமொழி -3-2-1-என்றும்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும்–மூன்றாம் திருவந்தாதி -78–என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -உடலம் தாம் வருந்தி—பெரிய திருமடல் -12-என்றும்
சொல்லுகிற படி நித்ய கர்மாதிகளை அவிகலமாக அனுஷ்டிக்கையாலே
தபசர்ய யோக்யதை பிறந்தவாறே -காய சோஷன அர்த்தமாக -அசநத்தை குறைத்து –
பிராண தாரணத்துக்கு தக்க அளவாக்கி -உஷ்ண காலத்திலேயே பர்வதாக்ரத்திலும் –
பஞ்ச அக்னியில் மத்தியிலும் நின்றும் -சீத காலங்களில் அகாக்யமான தடாகங்களில் மூழ்கிக் கிடந்தும் –
ஜீர்ண பர்ண பல அசநராயும் –இப்படி தபச் சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து ( வாடச் செய்து )–

5-துன்ப வினைகளை விடுத்து –
அதாவது –
கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே மேவு துன்ப வினைகளை விடுத்து -திருவாய் -3-2-8-என்கிற படியே
தில தைலாதிவத்-( எள்ளில் எண்ணெய் போன்று ) ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற
துக்க ஹேதுவான பாபங்களை -தர்மேன பாப மபநுததி-தைத்ரியம் –
( நாள்தோறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களை போக்குகிறான் ) -என்கிற படியே போக்கி –

6-விவேக சமாதிகள் வளர –
விவேகாதிகள் -சமாதிகள் -வளர –
அதாவது –
இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..
( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )

இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காயசுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் )
என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள
அன்னத்தால் உண்டான காய சுத்தி –
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் /பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )
ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில்
ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது )
என்றும் சொல்லுகிற இடங்களிலும் -சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..

விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..
யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் —
காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –

அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான அலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி-
இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )

கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் -சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே
பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –

கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே –
சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல் )
அன்றிக்கே
நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .-அது இல்லாமை- அநபிதியை

அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –
சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —
அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –
அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–
அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய
அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –
அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )

இனி–சமாதிகளில் – -அதாவது –
சமம் ஆவது அந்த கரண நியமனம் –
தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்
சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்
தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –
என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..
ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும்
சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே ,
உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..
மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

7-எட்டு நீக்கி-
அதாவது
ஈனமாய எட்டும் நீக்கி –திருச்சந்த -114–என்று
ஞான சங்கோசதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகள் ஐந்தும் ,
( அவித்யை -செருக்கு -இராகம் -த்வேஷம் அபிநிவேசம் )
சரீர சம்பந்த பிரயுக்தமான தாப த்ரயங்களும் ஆகிற எட்டையும் போக்கி ..

துன்ப வினைகளை விடுத்து -அதாவது –
கீழேயும் கர்ம விமோசனம் சொல்லிற்றே என்னில் – அங்கு சொல்லிற்று ஞான உத்பத்தி விரோத
பிராசீன கர்ம மாதரம் ஆகையால் விரோதம் இல்லை –
அன்றிக்கே
ஆத்மாவுக்கு பொல்லாங்கை பண்ணுவதான
காம குரோத லோப மோஹ மத மாத்சர்ய அஞ்ஞான அசூயை ஆகிய எட்டையும் போக்கி என்னவாம்-
காமம் ஆவது-அர்தித்த பதார்த்தம் அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணா தசை –
குரோதமாவது -அதின் கார்யமாய் அர்தித்த பதார்த்த அலாபத்தில் சந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம் ..
லோபம் ஆவது -சந்நிஹிதர் பதார்த்தத்தில் அதி பிராவண்யம் ..
மோஹம் ஆவது கர்தவ்ய அகர்தவ்யங்களை விவேகிக்க மாட்டாது ஒழிகை .
மதம் ஆவது அர்தாதி லாபத்தில் வரும் களிப்பு-
மாத்சர்யம் ஆவது-பர சமிர்தியை பொறாமையை அனுஷ்டான பர்யந்தமாக நடத்துகை ..
அஞ்ஞானம் ஆவது -இவற்றால் மேல் வரும் அநர்த்தம் நிரூபியாமை ..
அசூயை ஆவது -குணங்களில் தோஷத்தை ஆவிஷ்கரிக்கை ..
ஏவம் பூதங்களான இவற்றைப் போக்கி என்ற படி –

8-எட்டும் இட்டு-
அதாவது –
இன மலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும் –
கந்த மா மலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -3-5-6-என்றும் -சொல்லுகிற படி
ஓர் ஒரு அஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம் போலே அவனுக்கு போக்யமாம் படி இருக்கையாலே ,
அஷ்ட வித புஷ்பம் சமர்பிப்பாரை போலே திரு மந்த்ரத்தை அனுசந்தித்து ,
அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே–திருச்சந்த –77 -என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள்
வல்லர் வானம் ஆளவே –திருச்சந்த –78-என்றும் சொல்லக் கடவதிறே
அன்றிக்கே –
அஹிம்சா பிரதமம் புஷ்பம் ,புஷ்பம் இந்திரிய நிக்ரக -சர்வ பூத தயா புஷ்பம் ,
ஷமா புஷ்பம் விசேஷத-ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் -புஷ்பம் தவைவச
சத்யம் அஷ்ட வித புஷ்பம் விஷ்ணோ பிரதீகரம் பவேத் -என்கிற படியே
அஹிம்சாத் அஷ்ட வித புஷ்பங்களையும் இட்டுமாம் —

கீழே விவேக சமாதிகள்
என்றதில் அந்தர் பூதங்களானவை இதிலும் வந்ததாகிலும் ஈஸ்வரனுக்கு
இவற்றை போக்யத்வேன அனுசந்தித்து அனுஷ்டிக்கையைச் சொல்கிறது
ஆகையாலே விரோதமில்லை –ஆகையிலே இவற்றை புஷ்ப சமர்பணமாக சொல்கிறது —

9-எட்டினாய பேத பூவில் சந்தொடு தேவ கார்யம் செய்து –
அதாவது –
எட்டினாய பேதமோடு இறைஞ்சி -திருச்சந்த -77-என்கிற படியே
மநோ புத்ய அபிமாநேன சஹன்யச்ய தராதலே
கூர்ம வச்சதுர : பாதான் சிரஸ் தத் ரைவ பஞ்சமம் -என்கிற படியே ,
பக்நாபிமானனாய் விழுகையும் , மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனே விஷயம் ஆகையும் ,
பாத த்வயங்களும் ,கர த்வயங்களும் ,சிரசும் பூமியிலே பொருந்துகுகை யாகிற
அஷ்டாங்க பிரமாணத்தைப் பண்ணி ,
பூவில் புகையும் விளக்கும் சாந்தும் நீரும் மலிந்து –திருவாய் -5-2-9-என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல வாய்ந்து கொண்டு –திருவாய் -10-2-10-என்கிற படியே
புஷ்பாங்கராதிகளான சாமராதந உபகரணங்களைப் பல சங்க கர்துவங்களாகிற-துராலும் ,
மயிரும் ,புழுவும் படாத படி ஆராய்ந்து மிகவும் சம்பாதித்து கொண்டு ,

10-தேவ கார்யம் செய்து–பெரியாழ்வார் -4-4-1 -என்கிற படியே பகவத் சமாராதனத்தை செய்து –

11-உள்ளம் தூயராய் –
அதாவது –
ஒன்றி நின்று நல் தவம் செய்து ,ஊழி ஊழி தோறு எல்லாம்நின்று ,
நின்றவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்—திருச்சந்த -75-என்கிற படியே ,
நித்ய கர்ம அனுஷ்டானம் தொடங்கி,பகவத் ஆராதன பர்யந்தமாக பண்ணும் ,
த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்ம அனுஷ்டானத்தாலும் ,பகவத் குண அனுசந்தாதாலும் –
காஷயே கர்மபி :பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
( கர்மங்களைச் செய்வதனால் பாபம் அழிந்த அளவில் பின்னர் ஞானம் தோன்றுகிறது )-என்கிற படி
ஜ்ஞான யோகார்ஹமாம்படி ம்ருதீத கஷாயர் ஆகையாலே ,பரிசுத்த அந்த கரணராய்-

12-வாரிப் புன்புல வகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினை கண்டு –
அதாவது
பிரகீர்னே விஷயாரண்யே பிரதாவந்தம் பிரமாதிகம் ,
ஜஞாநான்குசேன க்ருஹ்நீயாத் வஸ்ய இத்திரிய தந்தினம் –
( பரந்து இருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டு இருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான
இந்த்ரியங்களாகிற யானையை த்யாஜ்ய உபாதேய ஞானம் ஆகிற அங்குசத்தால் வசப்படுத்த வேண்டும் ) என்று
விஸ்தீரணமான விஷய அடவியிலே ஓடா நிற்ப்பதாய் ,அகப்பட்டாரை கொல்லுமதான இந்திரியமாகிற யானையை ,
த்யாஜ்யோ உபாதேய விவேக ஞானம் ஆகிற அங்குசத்தால் ,வஸ்யமாகப் பண்ணுவான் என்கிற படியே –
வாரிச் சுருக்கி மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -முதல் திருவந்தாதி -47–என்று
மதித்த யானைகளை தண்ணீரிலே செறுப்பிக்குமா போலே ,இந்திரியங்கள் ஆகிற
மத ஹஸ்திகளை விஷய அனுபவம் ஆகிற போகத்தை குலைத்து -அவ்வவளவும் அன்றிக்கே –
விஷயங்கள் நடமாடும் இடத்தில் போகாதே -பிரத்யக் வஸ்து விஷயமாகை ஆகிற செவ்வியிலே நிறுத்தி என்றும் –

புன்புல வழி அடைத்து ,அரக்கு இலச்சினை செய்து ,நன் புல வழி திறந்து ,ஞான நல் சுடர் கொளீ இ-திருச்சந்த -76- -என்று
அல்ப அஸ்த்ராதித்வ தோஷ துஷ்டமான சூத்திர விஷயங்களை பற்றிப் போகிற இந்திரிய மார்க்கத்தை நிரோதித்து ,
அவற்றினுடைய சூத்திர அனுசந்தத்தாலே ,வாசனா அனுவர்தியும் அறும் படி ,அத்தை உறைப்பித்து ,
விலஷண விஷயத்தில் இந்திரிய மார்க்கத்தைப் பிரகாசிப்பித்து நன்றான ஞான பிரபையும் மிகவும் உண்டாக்கி என்றும் –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து –திரு எழு கூற்று இருக்கை -என்று
ஸ்ரோத்ராதி இந்திரியங்கள் ,சப்தாதி விஷயங்களில் போகாமே
உள்ளே அடக்கி என்றும் சொல்லுகிற படியே -நிக்ருஹிதேந்திரிய க்ராமராய்-( க்ராமம் கூட்டம் )

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற
பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற
கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த ( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி ,
த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து ,
சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை ,
சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து ,
சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய்
நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும்
யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..

விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் –
பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது ..
யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

13-யோக நீதி நண்ணி-
அதாவது –
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள்–திருச்சந்த -63- என்கிற படி யோகம் ஆகிற உபாயத்தாலே கிட்டி ,

அறம் திகழ் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும்
அரும் பெரும் சுடரை ,கண்கள் சிவந்ததில்-படியே மன உள் கொண்டு –
அதாவது
மறம் திகழும் மனம் ஒழித்து ,,வஞ்சம் மாற்றி ,வன் புலன்கள் அடக்கி ,
இடர்பார துன்பம் துறந்து ,இரு முப்பொழுது ஏத்தி ,எல்லை இல்லா
தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் தம் கதியை–பெருமாள் திருமொழி -1-7-என்று
கொலையும் சினமும் கொடுமையாகிய மறத்தால் விளங்கா நின்றுள்ள மனசை வாசனையோடு போக்கி ,
பொய்யை தவிர்ந்து ,வன் புல சேக்களை பட்டி புகாமே கட்டி ,மிக்க துக்கத்தை விளைப்பதான –
பாரமாய பழ வினையை பற்று அறுத்து – ஸ்லாக்கியமாய் இருந்துள்ள -ஆதி நடு அந்தி -ஆகிய
மூன்று பொழுதிலும் ஏத்தி ,அளவிறந்த பழைய மரியாதையிலே ,சிலவரால் கலக்க ஒண்ணாத படி ..
நிலை நின்ற வைஷ்ணவர்களான ,ஆந்ரு சம்ச்யோஜ்வல சித்தருக்கு
பரம ப்ராப்யன் ஆனவன் என்றும் –

மறையோர் மனம் தன்னுள்-
அதாவது –
மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை—பெரிய திருமொழி -7-3-7-என்று
பிராமணர் ஹிருதயங்களை தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் இருக்கும் -அமரர்கள் அதிபதியை -என்றும் ,
மா தவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை—பெரிய திருமொழி -2-1-1-என்றும் ,
மகா தபஸை உடையராய் இருக்கும் மனுஷ்யர்களுடைய ஹிருதயங்களில் ,
அநந்ய பிரயோஜனனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகின்ற ஸ்வாமி என்றும் -சொல்லுகிற படி ,
பரி சுத்த அந்த கரணரான பரம யோகிகள் ஹிருதயங்களிலே ,-

அரும் பெரும் சுடரை –
அதாவது
ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினைச் சேரும் நெஞ்சினர்–பெருமாள் திருமொழி -2-7-என்னும் படி ,
ஆபரணாத் அலங்குருதனாய் அத்யுஜ்வலமான விக்ரகத்தோடே எழுந்து அருளி இருக்கும் சர்வேஸ்வரனை —

கண்கள் சிவத்தில் படியே –
அதாவது –
கண்கள் சிவந்து–திருவாய் -8-8-1- -என்கிற பாட்டில் சொல்லுகிற படி
அவயவ சோபை–ஆபரண சோபை –ஆயுத சோபை களோடு
காள மேக நிபஸ்யமாய் இருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே–
மன உள் கொண்டு-
கற்றவர் தம் தம் மன உள் கொண்டு – பெரிய திருமொழி -7-3-1–என்று
அறிவு உடையரான யோகிகள் ஆனவர்கள் தம் தம் ஹிருதயங்களில் கொண்டு என்ற படி ..
ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி –

14-நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய் –
அதாவது
நிரந்தரம் நினைப்பதாக–திருச்சந்த -101- -என்றும் ,
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்-பெரிய திருமொழி -3-5-4-என்றும் சொல்லுகிற படியே
அந்த த்யானதுக்கு விச்சேதமும் விஸ்மிருதியும் அற்று –

துடக்கறா மனத்தராய் –
அதாவது –
சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் -திருச்சந்த -78–என்று சர்வ காலமும்
விஷயாந்தரங்களால் அபஹ்ருதம் ஆகாத பிரேமத்தை உடையார் ஆகையாலே ,
தத் சம்ச்லேஷ வியோகைக சுக துக்காராம் படி -சத்வ சுத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -சாந்தோக்யம் —
( அந்தக்கரணம் தூய்மை அடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகும் )-என்கிற படி ,
த்யேய வஸ்துவில் துடக்கறாமல் த்ருவ அனு ஸ்ம்ருதியாய் –

கனவில் மிக்க தர்சன சமமாய்-
அதாவது –
கனவில் மிக கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81- -என்று இந்திரியங்களால் கலக்க
ஒண்ணாதபடி மானச ஜ்ஞானத்தாலே ,அழகிதாக கண்டேன் என்னலாம் படி
ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன சமானகார – ஸ்ரீ பாஷ்யம் -லகு சித்தாந்தம் –
( அந்த நினைவு தானும் கண்ணால் நேரே காண்பது போலே இருப்பது ஓன்று )என்கிற படி
அது தான் பிரத்யஷா சாமானகாரமாய் ..

ஆகத்து புல்கும் அத்யந்த பிரியமாய்-
அதாவது –
அப்படி தர்சனம் ஆனது தான் –
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-திருவாய் -10-4-6-என்றும் ,
ஆகத்து அணைப்பார் அணைவரே -முதல் திருவந்தாதி -32-என்றும் ,
எல்லையில் அந்நலம் புல்கு–திருவாய் -1-2-4 -என்றும்
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்—முதல் திருவந்தாதி -50-என்னும் படி ,
அங்கனா பரிஷ்வங்கம் போலே -பிரியோ ஹி ஞானின அத்யர்தமஹம் -ஸ்ரீ கீதை -7-17–என்கிற
ஸ்மிர்தவ்ய விஷய சாரத்தாலே ,தானும் அத்யர்த்த பிரியமாய் —

வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய் –
அதாவது –
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் ,மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53-
என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதம் இன்றியே செல்லுகிற சிந்தையிலும்
காட்டிலும் இனிதோ நீ அவருக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும் பரம பதம் என்றும் –

சிறப்பு விட்டு-
அதாவது –
உலகு படைத்து இத்யாதி–அமுத வெள்ளத்ததானாம் சிறப்பு விட்டு –ஒரு பொருட்கு அசைவோர் அசைக
நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியீர் குறிப்பு–-திருவாசிரியம் -2-என்று
பரத்வ ஸுலப்யாதிகளாலே பரிபூர்ணனான சர்வேஸ்வரன் நிரதிசய போக்யமான திரு அடிகளை அனுபவிக்கையில் உண்டான
அபிநிவேசத்தில் -த்ரவீபூதமாய் ,ஓர் அவயவியாக காண ஒண்ணாத படி மங்கின ஆத்ம வஸ்துவிலே ,
அந்த ஆதாரம் அடியாக பிறந்த விலஷணமான சங்க காமத்ய அவஸ்தைகளை உடைய பக்தியால் விளைகிற
நிரதிசய ரசத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு -சூத்திர புருஷார்தங்களுக்கு கிலேசப் படுவார் அங்கனே கிலேசப் படுக –
ஸ்லாக்கியமான ஐஸ்வர்யம் ,–அதில் விலஷணமான ஆத்ம அனுபவம் –அவ்வளவு
இன்றிக்கே பர விலஷணமான மோஷம் -இவற்றைப் பெருமளவு ஆனாலும் ,
சார அசார விவேக ஜ்ஞர்களுடைய ஹிருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவு உண்டோ என்றும் —

குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்
உனது பாலே போர் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்று
அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு–பெரிய திருவந்தாதி -58-என்று
உன்னுடைய ஸ்மர்யமான தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்து ஒழிந்தேன் –பின்பு
ஒருகால் பிறவாமை பெற்று ,திரு அடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகை அன்று எனக்கு வேண்டுவது ..
பிறந்த ஞானத்துக்கு மறப்பின்மை எனக்கு வேண்டும் தனமானம் -என்றும் சொல்லுகிற படி
இவ் அனுசந்தானத்தாலே ,தேச விசேஷத்தில் அனுபவத்தையும் உபேஷிக்கும் படி தானே
பரம பிரயோஜனமாய் ரசிக்கையாலே ,அநந்ய பிரயோஜனமாய் ..

வேதன உபாசன சேவா த்யானாதிகள் என்று சொல்லும் அது
சாத்திய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம்-அதாவது
வேதனம் என்றும் , உபாசனம் என்றும் ,சேவை என்றும் ,த்யானம் என்றும் ,
ஏவமாதி சொற்களால் சொல்லப் படுகிற பக்தியானது –
உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய –ஆத்மசித்தி
( கர்மம் ஞானம் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு )-என்கிற படியே ,
கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது ஓன்று ஆகையாலே -சேதன சாத்தியமாய் –
பகவத் பிரசாதந உபாயதயா – தத் பிராப்தி சாதனமான பக்தியாக – ச உப ப்ரும்ஹண வேதாந்த சாஸ்த்ரத்தில்
( இதிகாச புராணங்களுடன் கூடிய வேத சாஸ்திரத்தில் ) சொல்லப் பட்டது என்கை-

———————————

சூரணை-100-

இப்படி உபாசன ரூபமாய் -உபாயமுமாயும் -இருந்துள்ள இது போல் அன்றிக்கே ,
உபேய பூத கைங்கர்ய உபகரணமாக பிரபன்னர் பகவான் பக்கல் அபேஷித்து பெரும்
பக்தி விசேஷத்தை பிரதி பாதிக்கிறார் மேல் –

ஸ்வீக்ருத சித்த சாதனர்
இத்தை சாத்தியமாக
இரக்க
பிராப்திக்கு முன்னே
சித்திக்கும்-

(இத்தை -பக்தியை )

அதாவது
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும் ,
த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் பிரபத்யே–கத்யத்ரயம் – -என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்வீகரிக்க பட்ட சித்த சாதனத்தை உடையவர்கள்..
இத்தை –
அதாவது –
இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே ,
பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி ,
பகவத் பக்திம் அபீ பிரயச்சமே -ஸ்தோத்ர ரத்னம் -54-என்றும் ,
ஸ்தான த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ-சரணாகதி கத்யம் -என்றும் ,
பரபக்தி ,பரஞான ,பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ–சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படி
பகவான் பக்கலிலே அர்த்திக்க
இமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபம் விஸ்ருஜ்ய ததா நீ மேவ-சரணாகதி கத்யம் –இத்யாதியிலே சொல்லுகிற படி –
சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் என்கை –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: