Archive for November, 2011

அருளி செயல் அரங்கம் -திரு மாலை சாரம் ..

November 27, 2011

திவ்ய பிர பந்தம் திவ்ய தேசம் திவ்ய சூரி

நாதனுக்கு நாலாராயிரம் அளித்தான் வாழியே
பா மாலை-திரு மாலை –
மேகம் பருகின சமுத்ராம்பு போல் -வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்
விஷ்ணு தர்மம்-திரு மாலை
அர்ஜுனன் -அபிமன்யு -பரிஷித் -ஜெயமேனி—வம்சம்-
திரு நாம வைபவம் -இணைப்பு பாலம்
இழுத்து கொண்டு கிட்டே கூட்டி வரும் நாமம்
சதாநீகனுக்கு சௌன பகவான் சொல்வது போல்
இங்கு ஆழ்வார் சொல்ல பெரிய பெருமாள் கேட்கிறார்  திரு மாலை
குழந்தை பேச்சு கேட்டு ஆனந்திக்கும் தகப்பன் போல்
முதல் பாசுரம்-பாவனம் திரு நாமம் –
நாமி பலம்-நாம பலம் கொண்டு திரு அடி
கட்டி பொன் பணி பொன்
ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறேஅச்சுதா ஆனந்தா -ஆஸ்திக நாஸ்திகனும் -மருந்தாக

நாவல் இட்டு-ராஜ குல மகாத்மயம்
அடுத்து -போக்கியம் -என்கிறார் -மரகத பச்சை திரு மேனி-
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
சௌலப்யம்-நழுவ விட மாட்டான்
பரத்வம் -அமரர் ஏறு –
சௌந்தர்யம்-ஆயர் தம் கொழுந்தே
மாலே-சௌலப்யம்-கருமை பெருமை மையல்-கண்ணன் என் னும் கரும் தெய்வம்
சீதா பிராட்டி-சரணாகதி வத்சலன் பட்டம் பெருமாளுக்கு
சரணாகத பஷ பாதி கண்ணன் -கழுத்தில் ஓலை கட்டி-18 -வித உதவி –
மனத்துக்கு இனியான்-மாலே கண்ணன்
மணி வண்ணா ஆலின் இலையாய்
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை
மாலே நெடியோனே கண்ணனே -முதல் ஆழ்வார்கள்
மூன்றாவது -பிறவி வேண்டாம்-அதாகும் -மீசை-அரையர் காட்டி ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதா -அர்ச்சை இருக்க

ஸ்ரீ ரெங்கமே இருக்க வேண்டும் –
மாதரார் வலை -போதறேன் என்று புந்தியில் புகுந்து
11 பாசுரம் பரோ உபதேசம்
கத்திற பந்து அன்றே பராம் கதி  கண்டு கொண்டான் –பிறவியுள் பினக்குமாறே
சூர்யா வம்சம்-அவதாரம்-சாத்திர பந்து-ஷத்ரிய அதமன்-
பண்டித புத்திரன்-மூர்க்கன் சமஸ்க்ருத அர்த்தம்
மொய்த்த வல் வினை-கல்ப கோடி இருந்தும் போக்க முடியாது
மூன்று எழுத்து -மந்த்ரம்-உபதேச முறையில்
மந்திரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் –
மறைத்த வஸ்துவுக்கு மரியாதை
கோவிந்தா -சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
கீதா கங்கை காயத்ரி – கோவிந்தா -நான்கையும் மறக்க கூடாது
27 /28 /29 மூன்றிலும் கோவிந்தா
உபாய வேஷத்தை கோவிந்தா –
கையும் உளவு காலும் –தேருக்கு நிற்கிற சாரத்திய வேஷத்தை -மாம் –
-தலை அறுப்பும் -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
சத்யம் –
அடுத்து -நாட்டினான் தெய்வம்-உய்வுவாருக்கு உய்யும் வண்ணம் காட்டினான் திரு அரங்கம்
சுள்ளி கால் நாட்டினால் போல்
சில கோடி தான் பந்தலுக்கு போகும்
வண்டினம் முரலும் சோலை-நித்யர் இவர்கள் பட்டர்

15 -24 வரை
உபதேசம் மீண்டு உலகினர் இயல்பு
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி
ஏகார சீமாட்டி  ஆண்டாள் –
ஒ காரா சீமான் ஆழ்வார்
ஒ ஒ உலகின் இயல்பே
புந்தியுள் புகுந்து –
யான் ஒட்டி  என்னுள் -ஆழ்வார் பாசுரம் போல் –
உயிர் கலந்து -என்னை நெகிழ்கவே
சயன திரு கோல அழகு-ஏழாம் திரு நாள் ஆண்டாள்-ஸ்ரீ ரெங்க மன்னார்
நீல மேனி அந்தோ –
மண்டி இருப்பார்கள் சயன கோலத்தில் எல்லா ஆழ்வார்களும்
கடல் நிற கடவுள் எந்தை -உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தீரே
திரு வேம்கடம்-அபிநயம் போல் பெரிய பெருமாளும் திரு அடி காட்டி கொண்டு
முரட்டு சமஸ்க்ருதம்-பின் பக்கம் காட்டி
ஆச்சார்யர் கிழக்கு பக்கம்-திரு அடி- என்பதால்-மண்டி இருப்பார்களாம்

எனக்கே தன்னை தந்த கற்பகம்-அர்ஜுனன் ஸ்தானம் என்று உகப்பார்கள்
கிடந்ததோர் கிடக்கை கண்டு எங்கனே மறந்து வாழ்கேன் ஏழையேன்
கங்கையில் புனிதமான காவேரி-
நுரை- கேலி சிரிப்பு-பட்டர்
திரை கையால் அடி வருட -கருமணி கோமளத்தை-
ந தர்ம நிஷ்டோமி
அகிஞ்சனன் அநந்ய கதித்வம்–குளித்து மூன்று -அனலை
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து –
கதறுகின்றேன் -அளித்து –
தெளிவலா  கலங்கல்–பேசிற்றே பேசும் -அளியல் நம் பையல் என்ன-கூப்பிட மாட்டாயா
காவேரி-மனக் கலக்கம் சொல்கிறார் -நீர் கலக்கம் சொல்ல வில்லை-கிம் குர்யாம்-சீர் வரிசை-

சிந்து கன்னியாய்-பெரிய பிராட்டி-
ரத்னம்-பொன்னி-தங்கமே வடிவு எடுத்த –
பாராதே பகவத் கீதை-/வேதம்-புருஷ சூக்தம் /
சரம ஸ்லோகம்-சாரம் கீதையில்-முன்பு சொன்னது இவன் மனம் பக்குவம் படுத்த
மேம் பொருள் போக விட்டு -சொல்ல வந்ததே திரு மாலை பிர பந்தம் .
த்வயம் தாத் பர்யம்-மந்திர ரத்னம்
அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்
நாயேன் வந்து அடைந்தேன்-
உன் தன்னோடு உற்றோமே ஆவோம்-
மேம் பொருள் போக விட்டு-மாயை-ஐவரையும் தோற்றி மாயம்
அவித்யை-மாமா காரம் அகங்காரம் போக விட்டு
மெய்மை- உண்மை பொருள்
தேக ஆத்மா விவேகம் போல்வன –
வேண்டாத பரம்- வேரை போக விட்டு- இதை வாழ வைத்து
சுயம் பிரகாச ஆத்மா சொரூபம்
ஆம் பரிசு-அறிந்து கொண்டு கைங்கர்யம்
புல்/அன்னம்/அமிர்தம் கைங்கர்யம் தாரகம் /மிருகம் மணிஷர் தேவர் பிரபன்னர்
ராவணன்-இந்திரிய தேசிகன்-
உள்ள படி உணர வேண்டும்
காம்பர தலை சிரைத்து -அகங்காரம்- அடியோடு விட்டு
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து
வாழும் சோம்பர்-ஞானி-ஆத்மைவ மே மதம்
திரு கண்ணா மங்கை ஆண்டான் போல் வாழும் சோம்பர்
கல் தேரை-தண்ணீர் எப்படி வந்தது-நமக்கு கொடுப்பான்-கல் தச்சன்-
பெருமாள் தலை சுமை இறங்கியது
பிரணவ அர்த்தமும் இதில் சொல்வார் –
கொடுமின் கொள்மின் -நின்னோடு  ஒக்க வழி பட வேண்டும் அடியார் –
பாகவத சேஷத்வம் சொல்லி முடிக்கிறார்
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -ஆச்ரயித்து வாழ -இளைய புன் கவிதை ஏலும் எம்பெருமான் உகப்பாரே
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -63/64/65/66/67/68/69/70..

November 27, 2011

சூரணை -63-

ஆக தர்ம வீர்யேத்யாதி-சூரணை-58– தொடங்கி இது வரை
இப் பிரபந்த வக்த்ரு வைலஷண்யம் பிரதி பாதித்து -இனி
இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்-

ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,
கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,
திரு மால் அவன் கவி என்றே ,
வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
உரிய சொல் வாய்த்த இது
வேதாதிகளில் ,
பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்
போலே அருளிசெயல் சாரம்-

அதாவது —
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருசை : கரவாண்யஹம்—பாலகாண்டம் -2-42-
( ஸ்ரீ ராமாயணம் காவ்யம் முழுவதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன் )என்று
ஸ்ரீ ராம கதையை சொல்லுவதாக ஸ்ரீ ராமாயணம் என்று உபக்ரமித்து
கங்கா சம்பவ ,ஸூப்ரஹ்மண்ய உத்பத்தி- புஷ்பக வர்ண ரூப கதைகளை
பரக்கப் பேசுகையாலே ,அசத் கீர்த்தனம் பண்ணி , வாக் அசுத்தி வந்தது இறே
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ..

நாராயண கதாமிமாம்–பாரதம் ஆதிபர்வம் -என்கிற படி ,நாராயண கதை என்று உபக்ரமித்து ,
சம்பவ பர்வதத்திலே காங்கேயரான ஸ்ரீ பீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக
அநேகருடைய உத்பத்தி பிரகாரங்களை ,விஸ்தரேண பிரதி பாதிக்கை யாலும் ,
-பூசல் பட்டோலை -என்னும் படி பாரத யுத்த பிரகாராதிகளையே பரக்க நின்று
வர்ணித்த படியாலும் ,அசத்கீர்தனத்திலே மிகவும் பரந்து ,அ சுத்த வாக்கை ,
அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் ,வாசம் ஸௌரி கதா லாப கங்கயைவ புநீமஹே-ஸ்ரீ ஹரிவம்சம் -என்று –
( பொருள் அல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினை
ஸ்ரீ கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீரால் தூய்மை ஆக்குகிறேன் ) –என்று
அசத் கீர்தனமாகிற காட்டிலே ,அலைந்து புழுதி படைத்த வாக்கை ,பகவத்
கதா லாபமாகிற கங்கையிலே ,சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் இறே
ஸ்ரீ வேத வியாச பகவான் .

ஸ்ரீ வால்மீகி பகவான் இப்படி அனுதபித்து ,வாக் சுத்தி பண்ணிற்று இலன் ஆகிலும் ,
இந்த நியாயம் அவனுக்கும் ஒக்கும் என்று ,நினைத்து இறே இவர் கூட்டி எடுத்தது ..

ஆக இப்படி உபக்ரமித்ததர்க்குச் சேராத படி அசத் கீர்த்தனம் பண்ணி ,வாக்கை அசுத்தை ஆக்கி
அதுக்கு சுத்தி பண்ண வேண்டாதபடி ,-திரு மாலவன் கவி யாது கற்றேன் -திருவிருத்தம் –48-என்று
ஸ்ரீய பதி என்று அடியிலே வாயோலை இட்ட பிரகாரத்திலே ,-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூதன் அடி மேல் –திருவாய் -6-8-11-என்கிற படியே ,
அந்ய பரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாத படி சப்தங்களைத் தெரிந்து எடுத்து ,
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி திருவாய் -4–5-6-என்கிற படியே விஷயத்துக்கு தகுதியான சொல்லாலே
சொல்லப் பட்டதாய் ,-வாய்த்த வாயிரம்-திருவாய் -2-2-11-என்று வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கு வாய்த்த இப் பிரபந்தம்
வேதேஷு பௌருஷம் ஸூக்தம்
தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்
பாரதே பகவத் கீதா
புராணேஷூ ச வைஷ்ணவம்–
( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் –
மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் )
என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,
தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-

இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே ,
ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் ,
பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே ,
பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று
இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————

சூரணை -64-

இனி மேல் இப்படி அருளிச் செயலில் சாரமான இதன் ப்ரமாண்ய அதிசயத்தை
பிரகாசிப்பைகாக ,ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர்
அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,பிரதி பாதியா நின்று கொண்டு ,
ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார் )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று
ஜைமினி எண்ணுகிறார்-ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே -தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் -(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை –
நிந்திக்கும் பொருளைக் காட்டிலும் வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–
சூரணை -65-

இப்படி இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தவர்
யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் .-

பாஷ்யகாரர்
இது கொண்டு
சூத்திர வாக்யங்கள்
ஒருங்க விடுவர்-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் பண்ணி அருளும் பொழுது
ஸூத்திர வாக்யங்களில் சந்நிதிக்தங்களான அர்த்தங்கள் எல்லாம்
இப் பிரபந்தத்தில் ,ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்க
விட்டு அருளுவர் என்கை-
( பேத சுருதி -அபேத சுருதி -ஒருங்க கடக சுருதி -தத்வ த்ரயம் -பேதம் -விஸிஷ்ட அத்வைதம் -ப்ரஹ்மாத்மகம் –
சரீராத்மா பாவம் -சாமானாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் -காரிய காரண நிபந்தம் –
த்ரிவித காரணம் -உபாதானமாக இருந்தும் நிர்விகாரம் -சரீரம் மாறலாம் ஆத்மா விகாரம் அடையாமல் -விஸிஷ்ட ப்ரஹ்மம்
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -இப்படிப்பட்ட உரு இல்லை -உருவமே இல்லை என்பது இல்லை
அசித் சித் விலக்ஷணன்-வியாப்ய கத தோஷம் இல்லாதவன் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
யானே நீ என் உடைமையும் நீயே –நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய்-
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -பிரகார பிரகாரி பாவம்
உரு பெரும் செல்வமும் இத்யாதி –மாறன் தமிழ் ஆரணமே )

———————————————————————

சூரணை -66-

அவர் தாம் அருளிச் செய்து அருளுகைக்கு மூலம் எது என்னும்
அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..

அதுக்கு மூலம்
விதயச்ச என்கிற
பரமாச்சார்ய
வசனம்-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் அப்படி செய்து அருளுகைக்கு அடி
விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மனோ னுசாரின-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -20-
(த்வதீயர் -பாகவதர்கள் -பக்தர்கள் வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள்-வேத வாக்கியங்கள் – தேவரீரைச்
சரணமாகப் பற்றி இருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அனுசரித்தவைகளாக ஆகின்றன -என்று
இதம் குரு -இதம் மகார்ஷீ -ஆரணம் -( இதனைச் செய்க இதனைச் செய்யற்க )-என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருக்கும் த்வதீயருடைய
ஐஸ் வர்யாதிகளால் கலக்க ஒண்ணாத படி கம்பீரமான
மனசை பின் செல்லும் என்று -இந்த ஸ்ரீ ஆழ்வார் போல்வார் நினைவை
சாஸ்திரங்கள் தான் பின் செல்லுமதாக பரம ஆசார்யரான
ஸ்ரீ ஆளவந்தார் அருளி செய்த வசனம் என்கை-

————————————————————

சூரணை -67-

இப்படி அபியுக்தர்கள் ஆனவர்கள் இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள்
நிர்ணயிக்கும் படி ,சகல வேத உப ப்ருஹ்மணங்களிலும் அதி பிரபலமாய் ,
இவ்வளவும் அன்றிக்கே கீழ் சொன்ன படியே ,திராவிட வேதமாக கொண்டு ,
வேத சமமாய் இருக்கிற ஆப்த தமமான இப் பிரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக
இவர் வேறே சில விஷயங்களை எடுப்பான் என் என்கிற சங்கையிலே ,அருளிச் செய்கிறார் ..

ஆப்திக்கு
இவர் சுருதி
மார்கண்டேயன் பார்த்தன்
என்கிற இவை
வியாச மநு பிரமவாதிகளை
வேதம் சொல்லுமா போலே-

அதாவது –
இதில் சொல்லுகிற அர்த்தங்கள் ஆப்த்திக்கு உறுப்பாக இவர் –
சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7-என்றும்
மார்கண்டேயனும் கரியே –திருவாய் -5–2-7-என்றும்
பார்த்தன் தெளிந்து ஒழிந்த–திருவாய் -2-8-6- -என்றும்
ஸ்ருதியையும் ,மார்கண்டேனயனையும் ,பார்த்தனையும் சொல்லுகிறவை –

பரம ஆப்தமான வேதம் –
ச ஹோவாச வியாச :பாராசர்ய –ஆரணம் -(பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாசர் சொன்னார் )என்றும்
யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -யஜுர்வேதம் (எது ஒன்றினை மனுவானவர் சொன்னாரோ அது மருந்து )என்றும்
ப்ரஹ்ம வாதினோ வதந்தி-யஜுர்வேதம் (ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் ) -என்றும்
ஆப்திக்கு உறுப்பாக வ்யாசனையும்,மநுவையும் ,ப்ரஹ்ம வாதிகளையும் சொல்லுகிறாப் போல் என்கை ..
ஆன பின்பு ,அது தாழ்வு அல்ல –ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்று கருத்து ..

( கீதாச்சார்யனும் மனு இஷுவாகு இவர்களுக்கு நானே முன்பு சொன்னவை என்று அர்ஜுனனுக்கு சொன்னால் போலேயும் )

————————————————————-

சூரணை -68-

ஆனால் இத்தை உபப்ருஹ்மணமாக சொன்ன பஷத்தில் ,வேத வ்யாக்யை யாமது ஒழிய
வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும்
த்ராவிடீம் பிரம சம்ஹிதாம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –6-என்றும்
திராவிட வேத ஸூக்தை–ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –16-என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம்
இதுக்கு கூடுமோ என்ன அருளி செய்கிறார் ..

பாரத கீதைகளின்
வேத உபநிஷ்த்த்வம் போலே
இதுவும்
வ்யாக்க்யை யானாலும்
வேத ரஹச்யமாம்-

(பாரதத்தின் வேதத்வம் போலேயும்
கீதையின் உபநிஷத்த்வம் போலேயும் )

இத்தால் கீழே வேத சாம்யம் சொன்ன இடத்தில் சொல்ல வேண்டி இருக்க
அநுத்தமாய் கிடந்தவற்றை இங்கே அருளிச் செய்தார் ஆய்த்து
அதாவது –
வேத உபப்ருஹ்மாணமான மகா பாரதமும் ,அதில் சாரமான ஸ்ரீ கீதையும் ,
வேதாந் அத்யாப யாமாச மகாபாரத பஞ்சமான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
( நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து நிலை நிற்கவே -ஸ்ரீ வில்லி பாரதம் )
பகவத் கீதா ஸூபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிற படியே ,
வேதமும் உபநிஷத்தும் ஆகிறாப் போலே
இது
வேத வ்யாக்க்யையான உப ப்ருஹ்மணமே ஆனாலும்
வேத ரகஸ்யமாம் என்கை-
வேத ரஹஸ்யம் ஆவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத் ,கீழே
சாந்தோக்ய சமமாகவே சொல்லிற்று –ஆகையால் இந்த பஷத்திலும் ,
இதின் திராவிட வேதத்வ ஹானி வாராது என்று கருத்து .

————————————————————–

சூரணை –69-

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது
தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே –
தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—
சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே
த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள்-( செய்கோலம்) பலவும் உண்டு என்கிறார் .

உதாத்தாதி பத க்ரம ஜடா
வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த
ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல்
எழுத்து அசை சீர் பந்தம் அடி
தொடை நிரை நிரை யோசை தளை இனம்
யாப்பு பாத்துறை பண் இசை தாளம்
பத்து நூறாயிரம்
முதலான செய்கோலம்
இதுக்கும் உண்டு-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் )
இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி
இரண்டு முறை சொல்லுதல்/ பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – )
ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் )
வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் ..
பர்வாதி என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..

பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பாதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் )
ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட வ்யஹாரம் உண்டு இறே ..
கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி ,
அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல் —

எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும்- குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –
வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்

அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்
(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )

சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர் )
வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம் )
வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )
பொதுச்சீர் பதினாறும் ,
ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-
(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள்
நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )

பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே
பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் ,
மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே
இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்

அடியாவது –
குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –
(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )

தொடையாவது
மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும்
அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் ,
அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக
ஆக நாற்பத்து மூன்று தொடையும் .

(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை
மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –
அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை
முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )

நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை ..(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம்
அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )

ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை
ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )

தளை யாவது
நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை –
ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை -முதலான ஏழு தளையும்

இனமாவது
தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும் ,,

யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )

பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்

துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே
புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –
செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/
வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )

பண் ஆவது –(ராகங்கள்)
முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம்
செந்திரி -பியந்தை இந்தளம் முதலானவை

இசையாவது –(ஸ்வர ஸ்தானம்)
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )

தாளமாவது
கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச
தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — )
கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ்
கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம்
சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே
கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் ..
ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட -போன்றவை தாள வேறுபாடுகள் –

பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான
அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது –
பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே
நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11-
என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது
சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்

முதலான என்கையாலே
முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய்
நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய்
மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய்
மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது-
( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )

முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது
செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால்
குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

———————————————————–

சூரணை -70-

ஆக இதுக்கு கீழ் திவ்ய பிரபந்தத்துக்கு வேத சாம்யமும் ,
தத் உப ப்ருஹ்மண சாம்யமும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்தார் ..
இங்கன் அன்றிக்கே
வேத ஆவிர்ப்பாவ விசேஷமாய் இவ் ஆழ்வாரால்
நிர்மிதமாக பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று ,இதுக்கு இன்னும் ஒரு
யோஜனை பண்ணுகிறார் மேல் .-

அதவா
வேத வேத்ய ந்யாயத்தாலே ,
பரத்வ பர முது வேதம்
வியூஹ வியாப்தி அவதரணங்களில்
ஓதின நீதி
கேட்ட மனு
படு கதைகளாய்
ஆக மூர்த்தியில்
பண்ணின தமிழ் ஆனவாறே
வேதத்தை திராவிடமாகச் செய்தார் என்னும்-

(வேத வேத்ய ந்யாயத்தாலே ,
பரத்வ பர முது வேதம்- வியூஹத்தில் ஓதின நீதியாய் -வியாப்தி யிலே கேட்ட மனுவாய் –
அவதரணங்களிலே படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆயிற்று –
ஆதலால் வேதத்தை திராவிடமாகச் செய்தார்
அப்படி இன்றியும்
வியாப்தி -கரந்த சில இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் பரந்து நிற்றல்
ஓதின நீதி -பாஞ்சராத்ரம்
கேட்ட மனு -மனு தர்ம சாஸ்திரம்
படுகதைகள் -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும்
ஆகமூர்த்தி -அர்ச்சாவதாரம் )

அதாவது
கீழ் சொன்ன
உபய பிரகாரமும் -(வேத சாம்யம் -உப ப்ரஹ்மணம் சாம்யம் )அன்றிக்கே ,
வேத வேதே பரே பும்சி ஜாதே வேத பிராசேத ஸாதா சீத் சாஷாத் ராமயணாத்மநா -பாலகாண்டம் –
(வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும்
பிரசேதஸ்ஸின் புதல்வரான ஸ்ரீ வாலமீகி பகவானிடம் இருந்து ஸ்ரீ ராமாயணமாகப் பிறந்தது ) -என்று
வேத வேத்யனான பரம புருஷன் தசரத புத்ரனே அவதரித்த இடத்தில் ,
அபௌ ருஷேயமான வேதமும் ,
ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் ஸ்ரீ இராமாயண ரூபேண அவதரித்தது என்கிற ந்யாயத்தாலே ,

ஷயந்தமஷ்ய , ரஜஸ ,பராகே-தைத்ரியம் -( இந்த ராக்ஷஸ தாமச குணங்களின் மயமான இப்பிரக்ருதி மண்டலத்தின்
மேலே பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவரான -)
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்–புருஷ ஸூக்தம் –( சூரியனனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்த
பரம புருஷனை நான் அறிவேன் -அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான் )
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயே -யஜுர் வேதம் ( விஷ்ணுவுடைய அந்த உயர்ந்த பரமபதத்தை
நித்ய ஸூரீகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் )
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,சோஸ்நுதே சர்வான் காமான் சக – ப்ரஹ்மணா விபிச்சதா -தைத்ரியம்
( ஹிருதய குகையில் உள்ள இந்த ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாதது
என்று சொல்லப்படும் பரமபதத்தில் அந்த ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் )- இத்யாதிகளாலே
பல விடங்களிலும் ,ஈஸ்வரனுடைய பராவஸ்தையைப் பிரதி பாதிக்கையாலே ,பரத்வத்திலே நோக்காய் ,
-முது வேதம்—திருவாய் -1-6–2-என்கிற படியே
புருஷ புத்தி பிரபவ தோஷம் கந்தம் இல்லாதபடி அநாதித்வேன பழையதாய் இருக்கும் வேதம் ஆனது-

வியூகத்தில் ஓதின நீதியாய் –
அதாவது –
ஷாண் குண்யாத் வாஸூ தேவ பர இதி ச பவான் முக்த போக்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -யுத்த -39-
( தேவரீர் பரவாஸூ திவ்ய மங்கள விக்ரகத்தோடே கூடினவராய் ஆறு குணங்களால் முக்தருக்கு இனியராகா நின்றீர் )
என்கிற படியே ஷாட் குணிய பரி பூர்ணனாய் , முக்த போக்யனாய் இருக்கிற அந்த பரனாவன்
பலாட்யாத் போதாத் சங்கர்ஷணஸ் த்வம் ஹரசி விதனுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத் ,
பிரத்யும்னஸ் சரக்க தர்மவ் நயசி ச பகவன் சக்தி தேஜோ அநிருத்தோ பிப்ராண பாசி தத்வம்
கமயசிச ததா வ்யூஹ்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் யுத்த -39-
(வலிமையோடு கூடின ஞானத்தால் சங்கர்ஷணராகிய நீர் சம்ஹாரத்தைச் செய்கின்றீர் -–சாஸ்திரங்களையும் நன்கு விரிவு படுத்துகின்றீர்–
ப்ரத்யும்னராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் ஸ்ருஷ்ட்டியையும் செய்து தர்மத்தை பரப்புகின்றீர்-
அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு ரஷிக்கவும் செய்து தத்துவத்தையும் பரப்புகின்றீர்-) என்கிற படி
சர்க்காதி நிர்வஹனார்தமாக வியூஹி பவித்த அவஸ்தையில் –

சங்கர்ஷணாதி சத்பாவம் பஜே லோக ஹிதேப்யச கிரமச
பிரளயோத்பத்தி ஸ்த்திபி பிராண்யனுக்ரக பிரயோஜன மதான்யச்ச
சாஸ்த்ர சாஸ்த்தார்த்த தத்பலை தசாஸ் துர்ய ஸூஷூப் த்யாத் யாச்
சதுர் வியூஹேபி லஷயே – ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை
( லோக க்ஷேமார்த்தமாக ஸ்வ இச்சையால் சங்கர்ஷணாதி முதலிய வ்யூஹ நிலைகளை அடைகிறேன் –
முறையாக சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் என்பைகளால் உயிர்களுக்கு அனுக்ரஹம் ஏற்படுகின்றது –
பின்னும் சாஸ்திரம் -சாஸ்திரத்தின் பொருளான தர்மம் – அவற்றாலாய தத்வ ஞானம் முதலிய பயன்களும் இருக்கின்றன –
நான்கு வியூகங்களிலும் துரியம் ஸூஷூப்தி இவை முதலான நிலைகளையும் அறிந்து கோடல் வேண்டும் ) இத்யாதியாலும்

தத்ர ஞான பல த்வந்த் வாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே
ஐஸ் வர்ய வீர்ய சம்பேதாத் ரூபம் பிரத்யும்ன முச்யதே
சக்தி தேஜஸ் சமுத்கர்ஷா தா அநிருத்த தனுர் ஹரே
ஏதே சக்தி மயா வியூஹா குணோன் மேஷ ஸ்வ லஷணா -ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை –
(அந்த வியூகத்தில் ஞானம் பலம் முதலிய குணங்களின் சேர்க்கையால் சங்கர்ஷண திரு உருவம் உண்டாகிறது –
ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யும்னன் திரு மேனி / சக்தி தேஜஸ் மூலம் அநிருத்தன் / இந்த சக்திமயங்களான வியூகங்கள்
குணங்களின் பிரகாசங்களுக்கு இலக்கணங்கள் )இத்யாதியாலும்

அந்த வியூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண பிரதி பாதிக்கைக்காக
பஞ்ச ராத்ரச்ய க்ருஸ்த்னச்ய வக்தா நாராயணா ஸ்வயம்–பாரதம் -(எல்லா பாஞ்ச ராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே )என்கிற படியே
சர்வத்துக்கும் ஆதி வக்தா ஈஸ்வரன் ஆகையாலே
-ஓதினாய் நீதி –இரண்டாம் திருவந்தாதி –48-என்று சொல்லப் பட்ட பாஞ்ச ராத்ரமாய் ஆவிர்பவித்து-

வியாப்தியில் கேட்ட மனுவாய்
அதாவது
இப்படி வியூஹிப்பித்த மாத்ரம் அன்றிக்கே
சர்வ சப்த வாஸ்யனாய்
சர்வ கர்ம சமாராத்யனாய் கொண்டு
சர்வ அந்தர்யாமித்வேன வியாபித்து
நிற்கும் அவஸ்தையில் –

ஆபோ நாரா இதி ப்ராக்தோ ஆபோ வை நர ஸூனவே
தா யதஸ்யாயநம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத –மனு ஸ்ம்ருதி -1-19-
(தண்ணீரானது நரேன் என்ற பரமாத்மாவினிடம் இருந்து தோன்றியது -ஆதலால் நாரம் என்று சொல்லப்படுகிறது –
முன்பு யாது ஒரு காரணத்தால் அந்நீரானது பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்ததோ
அதனால் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் )-இத்யாதியாலும்

பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்–மனு ஸ்ம்ருதி -12–122-
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும்
ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )
ஏநமேக வதந்த்யக்னிம் மருதோன்ய பிரஜாபதீம்
இந்திரமே கேபரே பிராண மபரே ப்ரஹ்ம சாஸ்வதம்–மனு ஸ்ம்ருதி -12-123-
(இவனைச் சிலர் நெருப்பு என்று சொல்கிறார்கள் – வேறு சிலர் மருத்துக்களாவும் சொல்கிறார்கள் -சிலர் பிரமனாகவும் இந்த்ரனாகவும்
மற்றும் பிராணனாகவும் மற்றும் சிலர் நித்தியமான ப்ரஹ்மமாகவும் சொல்கிறார்கள் )
ஏஷ சர்வாணி பூதானி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி
ஜன்ம வ்ருத்தி ஷயைர் நித்யம் சம்சார யதி சக்ரவத்–மனு ஸ்ம்ருதி -12-124 –
(இவன் எல்லா உயிர்களையும் மண் முதலிய ஐந்து ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல் வளர்த்தல் இறத்தல்
என்னும் இவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான் )இத்யாதியாலும்

ச ஆத்மா அங்கான்யன்ய தேவதா-தைத்ரியம் -என்கிற படியே
சர்வ தேவதா சரீரதையா சர்வ கர்ம சாமார்த்யன் –இவன் என்று தோற்றும் படி
பூர்வ பாக உப ப்ரஹ்மணமாய்க் கொண்டு சர்வ அந்தர்யாமிதயா வ்யாப்தியை பிரதி பாதிக்கைக்காக
கேட்ட மனு –நான்முகன்–76–என்கிற படியே
ஆப்தமாய் கேட்கப் பட்ட ,மன்வாதி ஸ்ம்ருதியாய் ஆவீர் பாவித்து-

அவதரணத்தில் படுகதைகளாய்
அதாவது
அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவன் சாது பரித்ராணாதிகளுக்காக ஸ்ரீ ராம ஸ்ரீ கிருக்ஷ்ணாத்ய
அவதாரங்களைப் பண்ணின அவஸ்தையில் தத் அவதார சேஷ்ட்யாதிகளை
பிரதி பாதிக்கைக்காக -படு கதையும் -நான்முகன் -76-என்கிற படியே வ்ருத்த கீர்த்தன ரூபமான-பாடும் கதையாக –
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மகா பாரத இதிகாசங்களாய் ஆவீர் பாவித்து –

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே
அதாவது
அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-
(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் )
என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக –
( நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )

தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே
த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்
தேச கால அதிகாராதிகளிலும்
ஸ்நான போஜனாதிகளிலும்
ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும்
அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும்
சர்வ ஸூலபமாய்
சர்வ அதிகாரமாய்
ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை..

எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாயமொழி )
எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது ..
இது தான் பரத்வ பரம் -என்கையாலே ஸ்பஷ்டம் இறே ..

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம் -திரு சந்த விருத்த சாரம் ..

November 26, 2011

எட்டரைக்கு முடிக்க வேண்டும்-எட்டரவரை சொல்கிறேன் -நக சுவை .

பண்டிதன் -பாகவதம் ஸ்லோகம்-சுருக்கம் சொல்வதே
பிரம ஸ்தோத்ரம்-சுருக்கி -விதீர்ணம்-அஸ்து தே  –மூன்று எழுத்தில் –
வைஷ்ண வித் -வைஷ்ண விட்டு –
கிடந்தவாறு எழுந்து இரு/பை நாக பாயை சுருட்டி கொள்
இட்ட வழக்காக இருப்பான் அவன்-
சனக சந்தாதிகள் போல் பக்தி சாரரும் அந்தர்யாமி ஆழ்ந்து .
மானச புத்ரர் ஏழு பேர் ஸ்ருஷ்ட்டி பண்ணி –
பிரவர்த்தி தர்மத்தில் நிவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மத்தில் பிரவர்த்தி –
அவன் இடமே -அவன் நியமனம்-பக்குவம் அடைந்த-
துருவன்-சங்கு ச்பர்சத்தால் ஞானம் அடைந்தது போல் -மயர்வற மதி நலம் பெற்று .
உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்ட -சொன்னார்
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தில் வைத்து ..-கரு இருந்த நாள் முதலா காப்பு
ஸூவ ரக்ஷணம்  பண்ணாமல் கர்பத்தில் இருக்கும் பொழுதே ரஷிக்கும் -அவனையே நினைந்து
வாசுதேவ சர்வம்-பகுனாம் ஜன்ம நாம் அந்தே -அறிந்த பிறவி
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்
சட வாயுகுவா-அவன் எங்கே -சமஸ்க்ருதம்-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-அனைத்துக்குள்ளும் இருந்தாலும்
நாம் உணர வில்லை- சரீர ஆத்மா -விசிஷ்ட அத்வைதம்
பூநிலாய ஐந்தும் -ஆரம்பித்திலேயே -ஸ்ருஷ்ட்டி லயம் விவரிக்கிறார்
ஆகாசம்-சப்தம் /வாயு-சப்தம் ஸ்பர்சம்
தேஜஸ்-அக்னி-சப்தம் ஸ்பர்சம் –வேறு தன்மையாய் யார் நினைக்க வல்லரே .
அறிந்தேன் என்பவன் அறிய வில்லை-சொல்லினால் சொலப்படா  தோன்றுகின்ற ஜோதி நீ
அறிய வில்லை என்பவன் அறிந்தவன் ஆகிறான்
உள்ளம் கை நெல்லி கனி போல் காட்டி
பஞ்சி கரணம்-பிரக்ரீயை
இவற்றுள் எங்கும் பரந்து கரந்து உளன்
உறையில் இடாதவர் -பரத்வம் நிர்ணயம்
எதற்கும் இடம் கொடுக்காமல் ஆதிக்யம் உடன் எதிரேகம் முறையில்
பீஷ்மர்-நேராக கண்ணனை காட்டி பரத்வம் நிர்ணயிக்க –
சக தேவன்-ராஜ சூயை யாகம்-யார் கொலோ அகர பூஜைக்கு உரியார் -கண்ணன் அல்லால் ..
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசைனையும் தகுமோ
புஷ்ப மழை பொழிந்ததாம் சக தேவன் மேல் -அடித்து சொன்னதும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
ஆதி யான கால எந்தை யாவர் காண வல்லரே
பிரம்மாவே ஸ்தோத்ரம் பண்ண- கேசவ-
க -பிரம்மா தேவனால் பிரதிஷ்டை-காஞ்சி மகாத்மயம்

ஈசன்-இருவரும் உம் இடம் வந்து உண்டானவர்கள்

சாகா வரம் கேட்டான் முடியாது -சிருஷ்டிக்க பட்டவரால் கொல்ல கூடாது -ஹிரண்யன் பிரம்மா இடம்
தன்னையே சமர்ப்பித்து -சிவன்  ஈஸ்வரன் ஆனான் –
மார்வில் இருப்பவள் கடாஷம்- மார்பில் வியர்வை -சாபம் போக்கும் -கபாலி
அரக்கு பிச்சை -ஹர சாப ஹரன் –
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம்-இனி அறிந்தேன் -ஸ்ரீமான் நாராயணன்
பூத பவ்ய பவத் பிரபு-முக் காலத்திலும் சர்வ ஸ்வாமி -ஆதி யான கால எந்தை
எங்கும் உளன் கண்ணன் -தேச கால வஸ்து -பரிச்சேதம் இல்லாதவன் –
எப்படி என்ற கேட்டவரை –
இதை ஒப்பு கொள்ளாத ஹிரண்யன் பட்ட பாடு படாதீர் -நம் பிள்ளை
கடி கமலத்து உள்ள இருந்தும் காண கில்லான்
-கடல் கரையில் குடிசை கட்டி கொண்டு இருப்பது போல் –
ஆரே அறிவர் அது நிற்க-கடலை கை இட்டு காட்டுவாரை போல்
சமுத்ரைவ காம்பீரம்-ஸ்வரூப ரூபா குண விபவ ஐஸ்வர்யம் ஆழம் காண முடியாதே -சர்வ சர்வ சிவா ஸ்தாணு -ஹிரண்ய கார்பன்-அதே அர்த்தம் -விஷ்ணு ஒருவனையே குறிக்கும் திரு நாமங்கள்
லீலா விபூதி இல்லாமல் அவனுக்கு சந்தோசம் இல்லை –அதனால் நீர்மையால்
தீர்த்தன்-உலகு அளந்த சேவடி-
திரு சித்ர கூடம்-சபா பதி-நிர்வாககர் -பிரத்யட்ஷம் –
வேத நூல் பயந்தவனே -புஸ்தகம் தொலைத்த முதல் குழந்தை பிரம்மா தான்
திக்கும் தேவாதிகளும் தெரியாமல் இருக்க –
நியதம்-பரம கிருபையால்-
சொல்லினால் சுருங்க நின் குணங்கள்- சொல்ல வல்லரே –
அவன் இடம் சேர்ந்ததால் குணம் நல்லதாய் ஆக்கும்
உலகு நின்னோடு அன்றி- யாவர் உள்ள வல்லரே
உலகு தன்னை நீ படைத்தீ -சிலந்து வலை கட்டுவது போல்
உள்ளொடுக்கி வைத்து மீண்டு —
வசுரேதா ..வாசு தேவ வாசுதேவ -வாசிதம் ஜகத் த்ரயம்-வியாபித்து
தான் படைத்த உலகில் மகன் ஒருவனுக்கு இல்லாத மா மாயன் வாசு தேவன்
வாசு பிரத வசுபிரத -தன்னை செல்வமாக-அவர்களுக்கு பெருமை இரண்டும்
நான் அன்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை கண்டாய்
ஓர் இடத்து இல்லையே எங்கும் உளன்
இங்கு உளன் அங்கு உளன் சொல்லாமல் எங்கும் உளன் என்றானே
தொட்ட தொட்ட இடம் தோறும் தோன்றானாகில் என் உயிரை நானே மாய்ப்பேன்
அன்னமாய் அன்று அரு மறை ஈந்தவன்
வேத நான்கும் ஓதினாய் புள்ளதாகி
புள்ளின் வாயை கீண்டாய்-பிர மேயம் காட்டி ரட்சித்து இங்கு ..
ஆனை காத்து ஆனை கொன்று-சென்று நின்று –
சக்கர ஆழ்வான் மெதுவாக வந்ததாம் அதனால் நின்றான்
புள் கொடி பிடித்த பின்பும் -புள்ளை ஊர்தி யாய்
புள்ளின் பகை கிடந்தது -சாமான்ய த்ருஷ்டியால் பார்த்தல் சத்ரு
கௌஸ்துபம்   – கருடன் பிரதி பிம்பம் -அதி சினேகா பாவ சங்கை -அஸ்தானே பயம்
விஷம் முறிக்க கருடன் வேண்டுமே -அதனால் இருக்கிறானாம் -இங்கும் ரஷன அர்த்தமாக
உத்தான சயனம்-அமுதனுக்கு தளிகை-திரு மழிசை ஆழ்வாருக்கு முதலில்
நியமனம் -பாரதந்த்ர்யம் காட்டி
துரோணர்-தர்மர் அச்வச்தாமா -கண்ணன் சொல்லியும் கேட்க வில்லை
நரகம் எட்டி பார்த்து போனான் -குஞ்சர சப்தம் காதில் விழாமல்
ஸ்ருது ஸ்மிர்த்தி மம வாக்கியம்
புண்யம் பாபம் பிரியம் அப்ரியம் தானே
அவாப்த சமஸ்த காமன்
திரு மழிசை பிரான் -ஆரா அமுத ஆழ்வார்
சுக துக்க பரந்தப -பைய துயின்ற பரமன்
-கௌவசல்யை -பெற்ற வயிற்றுக்கு பட்டம் கட்டுகிறார் விஸ்வாமித்ரர்
ஆரா அமுதே -இப்படியும் ஒரு திரு நாமம் உளதே -அபரியாம்ருதம்
நடந்த கால்கள் நொந்தவோ–பேசி வாழி கேசனே
நான் இருந்த முடுக்கு தெரு தேடி வந்தாயே-மாலா காரன்
கதே கதே சேது பந்தனம் -அடி போற்றி

வைதிக விமானம் -அமுதனுக்கு

பிரணவா காரம்-அகில புவன
இதி சர்வம் சமன்ஜய
நின்றது –அன்று வெக்கணை கிடந்தது
திரு விக்ரமன்-பரத்வம் காட்டி- பிரணவம் காட்டி
இருந்தது பாடகத்து நம சப்த -சௌலப்யம் பாண்டவ தூதன் -வேணி சம்காரம்
உபாய வைபவம் காட்டி- தூது போனவன் ஏற்றம்-
கழுத்தில் ஓலை கட்டி -இன்னார் தூதன் என்று நின்றான்
விடை தீர எவ்வுள் கிடக்கிறான் -அங்கு ஆசனம் இல்லை
மாம் ஏகம் சரணம் -பார்த்த சாரதி
அன்று கிடந்த-துயில் அமர்ந்த வித்து
யதோத்தகாரி – சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்
அநந்ய போக்யத்வம் காட்டி கொண்டு இருக்கிறான்
உபேயம் காட்டி –
——————————-
ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம்-பெருமாள் திரு மொழி சாரம் ..

November 26, 2011
ஸ்ரீ குலசேகர பெருமாள் என்றே வழங்கும் படியான பெருமை
திரு மழிசை பிரான்
கிருஷ்ணா த்ருஷ்ண தத்வம் ஆழ்வார் போலே
-ஸ்ரீ ராம அன்பே வடிவாக -பெருமாள்-அதனால் பெருமாள் திரு மொழி
ஷத்ரியன்-சக்கரவர்த்தி திரு மகன் போல் இவரும்-
சீதை பிராட்டி- எண் தந்தை ராஜ்ஜியம் நெருங்கி விட்டது என்கிறார் பெருமாள் .
ஐயன பார்த்து செய்த திரு மணம்
புனர்வசு இவரும்-நல்லவர்கள் கொண்டாடும் நாள்-மா முனிகள்
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சங்கு சகர லாஞ்சனை-உலகை புனிதமாக்க வந்தவர்கள் –
பிறர் மினுக்கம் -பெருமை -நான் முக கடவுள்-பெண் பித்தர் -நாவில் சரஸ்வதி கொண்டு
அர்த்தநாரி சிவன்- விரிஞ்சன் சிவன் இடையில் விஷ்ணு முதல் அவதாரம்-கோபி ஜனங்களுக்கு மொத்தமாக கொடுத்தவன்
பெண் பித்தர் -ஸ்ரீ வைஷ்ணவர் தான் உயர்ந்தவர் -தேசிகன் -காமாதி குணம் போக்கும் ஸ்ரீ ராமானுஜர் .
மலை போல் ஸ்திரம்-சுக துக்கம் பாதிக்காமல் இருப்பவர்
திரு ஆபரணம் தொலைந்து போக -குட பம்பில் கை இட்டு நிரூபித்தார்
அதனால் நல்லவர்கள் கொண்டாடும் மாசி புனர்வசு .
லஷ்மணன் போல்-முன்பே மர உரி தரித்து நின்றானாம் –
நண்பர்களுக்கு ஆனந்தம் கொடுக்கும் லஷ்மணன்
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தான் –
அனைவருக்கும் நடக்க ஆசை தான் பெருமாள் பின் –
ஸ்ரீ ராம கைங்கர்யம்-லஷ்மணன் நடந்தால் நாம் நடந்தது போல் -அதனால் ஆனந்தம் அடைந்தார்களாம்
அடி சூடும் அரசு -சித்தம் கொண்டு பாரித்தார் –

பரம்பரை யாக வந்த ராஜ்ஜியம் வேண்டாம்-லஷ்மணன் போல் சாம்யம்
பாதுகா பட்டாபிஷேகம் போல் அடி சூடும் அரசு
ராம பக்தி பாபம் இல்லாதவன் சத்ருக்னன்-போல் இவரும் –
சித்தம் அபகரிக்கும் அழகன் -பெருமாள்-
கோலம்-குருவி தானம்-மங்களம்-
செழும் சேறு எண் சென்னிக்கு அணிவனே –
கண்ண நீறு பெருக -ஓட -இதில் கலந்து சேறும் சகதியுமாக –
ராஜ குலத்தில் பிறந்தவர்-அடியார் அடியார்-
மதுர கவி நிஷ்டை இது தான்
ரெங்க யாத்ரை தினே தின -பாரித்து
கருமணியை கோமளத்தை காண
தென்னீர் பொன்னி -இவர்

தென்னீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
தெளிவில்லா கலங்கல் நீர் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ஏஷ நாராயண -யமுனை-தெளிந்த நீர் -பாகவதம் -கண்ணன் அவதாரத்தில்
அது போல் இங்கும்- காவேரி என்கிறார் -அரங்கன் சமீபத்தில் இருப்பதால் .
சமுத்ரம் மனைவி போல் நதிகள்-பிராட்டி அலை மகள் தானே
தன் பெண் /மாப்பிள்ளை காண-
மணத்தாலே பூவுக்கு பெருமை போல் தாயாரால் பெருமாளுக்கு பெருமை
திருவில்லா தேவரை தேவர் என்று சொல்லாமே
ஸ்ரீ தனம் கொடுக்க காவேரி-அழகர் /அச்சோ ஒருவர் அழகியவா
செல்வ அரங்கன்/நீர்மையினால் அருளினான்-/குளம் தரும் செல்வம் தரும் /ஆரா அமுதம்
அளப்பரிய ஆரமுதன் -ஐந்தும் சேர்ந்தவன்-சத்திர சாமரம் ரத்னம் பாக்கு கொண்டு வந்து
காவேரி கொண்டு வந்து கொடுக்குமாம்-அதனால் தெளிவில்லா காவேரி

ஸ்ரீ ரெங்கத்தில் ஈடுபாடு –
மணத் தூணை பற்றி நின்று -நிலைத்து தர்சிக்க
சர்வ கந்த சர்வ ரச -அனைத்தும் சேர்ந்து திரு மண தூண்கள் ஆனதாம்
பற்று கோல் ஆமோத ஸ்தம்பம்
தீயோம்பு -அக்னி -அந்தர்யாமி-
யோகிகள்-ஹிருதயம்
பிரதிமை-விக்ரகம் -நம் போல் அஜ்ஞர் –
எல்லா இடங்களிலும் ஞானி-சம தர்சனம்
பெருமாளும் விசாலாட்ஷி உடன் திரு அரங்க கைங்கர்யம்
ஆசார்யர் படு காடு கிடக்க
அங்கே சேவை இன்றி -இருந்தால் கிழித்து வருவேன்-பட்டார்
இவர் அறிவீனரா –
பிரதிமா -அபி சப்தம்
அறிவீனர்களுக்கு கூட என்று -பொருள் .
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தீரே
நம்மை கேட்கிறார்-பெருமாள் இடம் கேட்க வில்லை உருக்குவதே அவன் தானே
ஸ்ரீ வைஷ்ணவர் அனைவரும் உருக –
மூழ்குபவர் காக்க முடியாதே
சம்சாரிகள் -நம்மை பார்த்து அவன் தான் மயங்குவான்-
கடின சித்தம் –
தெய்வம் பார்த்தது இருக்கிறோம்-அர்ச்சையே பூர்ணம்
தொண்டன்-அயலான் அசலார் -எங்களில் ஒருத்தன்
அவஜானந்தி மாம் மூடா -நம் கை பார்த்து சக்தி மறைத்து இருக்கிறான்
அத்தியாவசியம் நம்பிக்கை வர வேண்டும்
வன் பெரு வானகம் உய்ய –அரங்கனே –
பாகவத பக்தியில் மூட்டும் பகவத் பக்தி –
ஈட்டம் கண்டிட கூடி -கண் பயன் ஆவதே –

பாகவத தர்சனமே கண்ணுக்கு விருந்து –
தனிகன்-பிள்ளை-அடியார் விரோதம் கூடாது –
பாகவத சேஷத்வம்-இரண்டாம் பதிகம்
சம்சாரிகள்- தன்னை கண்டால் சத்ருக்கள் போலவும்
சம்சாரம் கண்டால் சர்ப்பம் கண்டால் போலவும் -மூன்றாம் பதிகம்-
சரீரம் விரோதி- இதை அடித்தவன் இடம் நன்றி பாராட்ட வேண்டும் .
ராவணன்-விலகி-விபீஷணன் பெருமாள் இடம் சேர்ந்தது போல்
திரு நறையூர் நம்பி-பித்தாம் என்று பேசுகிறார் -அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பக்தி இருக்க-உன்மத்தர் பித்தர் போல் -ஜடம் போல் -நாரதர் பக்தி சாஸ்திரம்-
பட்டினி பெருமாள் போல்-இங்கும் அங்கும் தாவி –
விழித்தும் உறங்கியும் கோபிகள்-அனுபவத்தில் மயங்கியும் –
நட்டம் இட்டு -அவனுக்கே பித்தர் -மற்றை யாரும் பித்தரே .
முத்தே மணி மாணிக்கமே உன்னை எங்கனம் நான் விடுவனே
எடுத்த பேராளன்- பெரிய நிதி
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பேயரே எனக்கு யாவரும் –
தமர் உகந்த -மணலே சுவீகரித்து ராமானுஜர் -காட்டினாரே
கோபிகள் கண்ணன் நடந்த இடம் என்று புரண்டு -வானமா மலை ஜீயர் –
ஜன்மம் உத்க்ருஷ்டம்-நான்காவது பதிகம்-
ஏதேனும் ஆவேனே -குருகாய் பிறப்பேனே -மீனாக பிறக்கும் விதி
கண் இமைக்காது மீன்-/பொன் வட்டில் பிடித்து புகபெருவேன் ஆவேனே /
சரீரம் மனச தனம் கைங்கர்யம் –

பிரகிருதி மண்டலம்-பொன் வட்டில் பிடித்தால்-அடகு கடை போகுமே மனஸ்
செண்பகமாய் -பாரிஜாத -நினைவு வர –
தம்பகமாய் தவம் உடையவன்
புல் பூண்டு-
கல்லாக -சம்பந்தம் கொண்டு போக –
நதி /நெறி /படியாய் கிடந்தது உன் பவள வாய் காண
ஏதேனும் ஆவேனே-அவனே ஆகிலுமாம்
எங்கள் குலத்து இன அமுதே –
கோவிந்த ராஜனை ஸ்ரீ ராமராக அனுபவித்து அருளினார் ..

குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -57/58/59/60/61/62..

November 26, 2011

சூரணை-57-

அவர்கள் பிரசாதம் ஆர்ஷ மூலம் என்னும் இடம்-மச் சந்தா தேவாதே ப்ரஹ்மன் -என்றும்
புராண சம்ஹிதா -இத்யாதியாலே பிரபன்ன வக்தாக்களானவர்கள் வசன சித்தமாய் இருந்தது …
அப்படியே இவர் பிரபந்தங்களுக்கு ,மூலம் பகவத் பிரசாதம் என்னும் அது இவர் வசன சித்தமோ
என்னும் அபேஷையில் அத்தை மூதலிக்கிறார்-

கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யும் அவை போலே
மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது
நேர் படச் சொல்லும் நீர்மை இலா என்னை
தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து
தப்புதல் அற தன்னை வைகுந்தனாக
தன் சொல்லால் தானே துதித்து
மலக்கு நாவியல் மொய்ய சொல்லால்
சொல்ல வல்லேன் என்று
நானும் சொல்லி
நாடும் கை எடுக்கும் படி
என் சொல்லால் யான் சொன்ன
இன்கவி என்பித்தான் என்றார் இறே-

அதாவது
ஸ்ருஷ்டும் தத கரிஷ்யாமி த்வாமாவிச்ய பிரஜாபதே —ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரசதே சகலம் ஜகத் –
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச -பாரதம் கர்ணபர்வம் -என்கிற படியே
திசை முகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் –திருவாய்-5-10-8–என்றும்
வெள்ளை நீர் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் திருவாய்-5-10-4–என்றும்
சொல்லும் படி பிரம்மா ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் கொண்டு ஸ்ருஷ்ட்டி
சம்ஹாராதிகளை பண்ணா நிற்க செய்தே
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே -திருவாய்-1-1-8–என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேதோபதேசம் ஜகத் சம்ஹாரம் திரி புர தஹனம்
இவற்றை பிரம்மா ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக
லோகத்தார் சொல்லும்படி செய்தாற் போலே

மூவுருவா முதல்வனே-
அதாவது –
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-திருவாய் -7-9-2-
என்று ஸ்வேன ரூபேண நின்று கார்யம் செய்யும் இடத்தில் தனக்கு
தானே அடி ஆனால் போலே பிரம்மா ருத்ரர்களுக்கும் தானே அடியாய்
அவர்களை சரீரமாக கொண்டு நின்று சிருஷ்டி யாதிகளைப் பண்ணி
அவர்கள் செய்தார்கள் என்று பிரசித்தம் ஆக்கும் அவன்-

துப்புரவாம்-
அதாவது –
திறத்துக்கே துப்புரவாம் திருமால்—திருவாய் -7-9-9-என்கிற படி ஏதேனும் ஒரு கார்யத்திலும் வந்தால்
ஒரு த்ருணைத்தை கொண்டு கார்யம் தலை கட்டிக் கொள்ள வல்ல சாமர்த்தியத்தை உடையவன் ஆகையால் –

பரம கவிகளால் பாடுவியாது-
அதாவது –
இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னை பாடுவியாது –திருவாய்-7-9-6-
என்று சொல்லுகிறபடியே ,தன்னைக் கவி பாடுவிக்க வேண்டினால்,அதுக்கு ஈடான
ஞான சக்தி யாதிகளால் குறை வற்றவர்களாய் , இனிய கவி பாட வல்ல மேலான கவிகளான ,
வியாச பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும் ,செம்தமிழ் -பாடுவாரான முதல் ஆழ்வார்கள் உண்டாம் இருக்க ,
அவர்களைக் கொண்டு பாடுவித்து கொள்ளாதே ,-

நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையால் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி —திருவாய்-7-9-5-என்கிற படியே ,
தனக்கு தகுதியாம் படி வாய்க்க சொல்லுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் எனக்கு இன்றிக்கே இருக்க ,
-என்னை தன்னாக்கி -என்கிற படியே ,என்னை தன்னோடு ஒக்க ஞான சக்திகளை உடையனாம் படி பண்ணி-
ஆ முதல்வன் இவன் என்று தன்தேற்றி என் நா முதல் வந்து புகுந்து-திருவாய் -7-9-3- -என்கிற படியே
என்னுடைய வாக் பிரவர்திக்கு முதாலாய் வந்து புகுந்து
என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி–திருவாய் -7-9-4 -என்கிறபடியே -என்னை உபகரணமாக கொண்டு
பாடா நிற்க செய்தே ,என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாத படியாகக் கொண்டு ,
என்னால் தன்னை வைகுந்தனாக புகழ -திருவாய் -7-9-7-என்கிற படியே நான் புகழ்ந்த இத்தாலே ,
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ,அங்குத்தை ஐஸ்வர்யம் பெற்றானாய் நினைத்து ,
-தன் சொல்லால் தான் தன்னைக் கீர்தித்த மாயன்—திருவாய் -7-9-2-என்றும்
தானே யான் என்பரானாகித் தன்னைத் தானே துதித்து -திருவாய்-10-7-2–என்றும் சொல்லுகிற படி
சொல்லும் தன்னது ,சொன்னானும் தான் ,சொல்லிற்றும் தன்னை-என்னும் படி
எனக்கு அந்தர் ஆத்மாவாய் நின்று ,தன்னைத் தானே ஸ்துதித்து-

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –திருவாய்-6-4-9-என்று
ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத ,சர்வாதிகனை என் உக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம் படி
பண்ண வல்ல நா வீறுடைய எனக்கு என்றும் –
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்–திருவாய்-4-5-4–என்று
நெஞ்சு ஒழிய வாக் பிரவர்த்தி மாத்ரத்தாலே ,இசை மாலைகளைக் கொண்டு ஸ்துதிக்க கிட்டப் பெற்றேன் என்றும்
மொய்ய சொல்லால் இசை மாலைகள் , ஏத்தி உள்ளப் பெற்றேன்–திருவாய்-4-5-2–என்று
செறிந்த சொல்லாலே உண்டாய் ,இசையோடு கூடி இருந்துள்ள தொடைகளால் ஏத்தி அனுசந்திக்கப் பெற்றேன் என்றும்
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு–திருவாய்-4-5-9-என்று-
ஸ்ரீ வைகுண்ட நாதனை கவி சொல்ல வல்ல எனக்கு என்றும்

நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல –
சடகோபன் சொல் -திருவாய்-2-2-11–என்றவாறே
நான் இத்தை பாடினேனாக நினைத்து நாடும் அஞ்சலி பண்ணும் படி –
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து –திருவாய்-7-9-2–என்ற படி
என்னுடைய வசன வ்யக்தியாலே ,நான் கர்த்தாவாக சொன்ன இனிய கவி என்று
நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் என்று அருளிச் செயதார் இறே என்கை ..
ஆகையால் இவர் சர்வேஸ்வரன் அருள் அடியாகவே பாடினதாய் நிச்சிதம் என்று கருத்து ..

——————————————————–

சூரணை -58-

இப்படி இப் பிரபந்தங்களுக்கு மூல வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் உண்டு
என்று அறிவித்த அளவும் அன்றிக்கே, வக்த்ரு வைலஷண்யத்தால் ,வந்த
ஏற்றமும் உண்டு ,என்று அறிவிக்கைகாக ருஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு
உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார் ..
(ஆழ்வார் ஏற்றம் ஐந்து சூரணைகளில்-பிரேமம் -வைராக்யம் -தாரக போஷாக போக்யங்களில் வேறுபாடு
பல சாதன தேவதாந்தர-இவற்றை சொல்லும்)

தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து
ஹ்ருஷ்டராய் மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே
உள் கலங்கி
சோகித்து
மூவாறு மாசம் மோஹித்து
வருந்தி
ஏங்கி
தாழ்ந்த சொற்களாலே
நூற்கிற இவர்-

(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றே -)

அதாவது
ஹஷிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்பிரபச்யதி—ஸ்ரீ பாலகாண்டம் –3-4-
(ஸ்ரீ ராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னும் இவற்றையும் -சஞ்சாரத்தையும் -செயல்களையும்
மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வரபலத்தால் உள்ளபடியே நன்கு அறிகின்றார் )என்கிற படியே
தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் உடைய
சக்தியாலே ஜனித்த ஞானத்தாலே –
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்க்கு ஆள் அன்றி ஆவரோ –திருவாய் -7-5–7-என்கிற படியே
ஜ்ஞாதவ்யங்களை தெளிய அறிந்து , அது தான் –
ந போதாத் அபரம் சுகம்-(ஞானத்தை தவிர வேறு இன்பம் இல்லை )என்னும் படி
இருக்கையாலே ,ஹர்ஷ யுக்தராய் ,அந்த தெளிவும் ஹர்ஷமும் அடியாக
உத்தரோத்தரம் சப்தங்களை தொடுக்கும் ருஷிகளை போல் அன்றியே

தர்ம வீர்யத்தாலே வந்ததுக்கும் -அது தான் ஞான மாத்ரத்துக்கும் -எதிர் தட்டாம் படி
மயர்வற மதி நலம் அருளினன்–திருவாய் -1-1-1–என்கிற படியே ,
நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே வந்ததாய்
ஞான விபாக ரூபையான பக்தியாலே
தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர் தட்டாம் படி
-மதி எல்லாம் உள் கலங்கி–திருவாய் -1-4-3-என்கிற படி விரஹவ்யதையாலே
ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி ,
யதா மனோரதம் பகவத் அனுபவம் பெறாமையாலே-ஆடியாடி அகம் கரைந்து
2-4-பதிகங்கள் படியே சோகித்து —மூவாறு மாசம் மோகித்து

மேலே தொடுக்கும் அதுக்கு எதிர் தட்டாம் படி –
-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1-3-1- என்றும்
-பிறந்த வாறும் வளர்ந்தவாறும் –5-10-1-திருவாய் — என்றும் –
-கண்கள் சிவந்து பெரியவாய் –திருவாய் -8-6-1-என்றும்
சர்வாதிகனாய் ,அவாப்த சமஸ்த காமனாய் இருக்க செய்தே ,
ஷூத்ரராய் ,சபலராய் இருப்பாரைப் போலே -அவன் செய்த
நவநீத சௌர்ய வ்ருத்தாந்தையும் –
அகர்ம வச்யனாய் இருக்க செய்தேயும் -கர்ம வச்யரை போலே பிறந்த படியையும்
மாயக் கூத்தனில் தான் கண்ணும் வாயும் துவர்ந்தால் போல் தம்மை
பிறிகையாலே ,அவன் கண்ணும் வாயும் துவர்ந்து ,தம்மோடு கலந்த பின்பு அவை
தன்னிறம் பெற்ற படியும் அனுசந்தித்து -ஈது என்ன பிரகாரம் -ஈது என்ன பிரகாரம்-
என்று ஓர் ஒன்றில் அவ்வாறு மாசமாக மூவாறு மாசம் மோஹித்து —
வருந்தி நான் வாசக மாலை கொண்டு–திருவாய் -3-8-10-என்கிற படியே
ஒரு சொல் எடுக்கும் பொது ஒரு மலை எடுக்குமா போலே வருத்தப் பட்டு —
என்று என்று ஏங்கி அழுதக்கால்–திருவாய் -8-5-3-என்கிற படியே அனுபவ அலாப க்லேசத்தால்
அவன் படிகளை பல காலும் சொல்லி பொருமி பொருமி அழுது–
அங்கே தாழ்ந்த சொற்களால்—திருவாய் -8-5-11-என்கிற படியே -எங்கே காண்கேன்-என்ற
மன சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களால் –
வண் தமிழ் நூற்க நோற்றேன் –திருவாய் -4-5-10-என்ற இப் பிரபந்தத்தை நூற்கிறவர் இவர் என்கை .

————————————————————

சூரணை -59-

இப்படி பகவத் பிரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான அளவின்றிக்கே ,
இதர விஷய வைராக்யத்தாலும் ,அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் ..

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும்
கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர்
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை
கண்ட போதே யாமுறாமை என்னும் படி
இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று ..

(ஸ்வாத்யாயம் -வேதம் –
ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –
( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3- )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)

அதாவது-
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாமேநேத் ,
ஸ்வாத்யாய யோக சம்பத்யா பரமாத்மா பிரகாசதே ,
ததீஷணாய ஸ்வாத்யாயஸ் சஷூர் யோகஸ் ததா பரம் ,
ந மாம்ச சஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ச சக்யதே –-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-2-3- என்கிறபடியே ,
( வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன் -யோகத்தால் மீண்டும் வேதத்தை சொல்லக் கடவன்
வேதம் யோகம் இவ்விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கின்றன -அந்தப் பரம்பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண்
அப்படியே யோகம் சிறந்த கண் -பரம்பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்க்க முடியாதவன் )
ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற இரண்டு த்ருஷ்டிகளாலும் ஒழிய
மாம்ச சஷுசால் பரமாத்மாவை காணப் போகாமையாலே ஸ்வாத்யாத்யா சப்த வாசகமான வேதத்தை ஓதியும்-
யம நியமாத் அஷ்டாங்க யோகத்தை அப்யசித்தும் அவ் வழியாலே தத் உபய விஷயமான
பரமாத்மாவை ஏவம் பூதன் என்று தெளிந்தும் ,இம் முகத்தாலே ஸ்வ யத்நேன கண்ட காட்சியில்
அ வைசத்யாலே -ஓதி உணர்ந்தவர் முன்னா -திருவாய் –3-5-5-என்கிறபடியே
வேத சாஸ்த்ரங்களை ஓதி , த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்து இருக்கிற ருஷிகள் இன்று அளவும்
ஆசா பாச சதைர் பத்தா–ஸ்ரீ கீதை -16-12-
(ஆசைகளாகிற பல வகைப்பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பார்கள் ) -என்கிற படியே
சாம்சாரிக போக விஷயங்களான ஆசாக்ய பாத சதங்களாலே பந்திக்கப் பட்டு இருப்பார்கள் ..

திவ்யம் ததாமி தே சஷு –ஸ்ரீ கீதை -11-8- -என்கிற படி தன்னைக் காண்கைக்கு சாதனமாக அவன் கொடுத்த
திவ்ய ஞான ரூப சஷுசாலே -நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காணகிலான் -முதல் திருவந்தாதி -56-என்றும் ,
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்—நான்முகன் –73-என்றும் ,
நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடி –நான்முகன் 27–என்றும்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் இவர்கட்க்கும் கட்கரிய கண்ணன் -திருவாய் –7-7-11-என்றும்
சொல்லுகிற படி இவ் அருகில் உள்ளாரைக் காட்டில் ஞான சக்தி யாதிகளில் அதிகராய் ,
தாமோதரனை ,தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–திருவாய் -2-7-12-–ஒருவருக்கும் தரம் அறியலாமோ –
என்று தங்களை ஒழிய ஒருவருக்கும் அறியப் போகாது என்று இருக்கும்
பிரம ருத்ராதிகளுக்கும் காண அரியனாய்

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-திருவாய் -9–3-3-என்கிற படியே
யஸ்ய அமதம் தஸ்ய மதம்—கேனோ உபநிஷத் —
(எவன் பரம்பொருளை அளவிடப் பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம்பொருளை அறிகிறான் ) இத்யாதியாலே
வேதங்களும் அறிவரிய வஸ்து என்றே அறியும் படியாய் ,–
கேட்ப்பார்க்கு அரும் பொருளாய் நின்ற –நான்முகன் –60-என்று –
நாயமாத்மா ப்ரவசநேன லப்யா ந மேதையா ந பஹுநா ஸ்ருதேந –கட உபநிஷத் –
( பரம்பொருள் மனத்தாலும் தியானத்தாலும் கேள்வியாலும் -இறைவனாகிய
தன்னுடைய அருளால் ஒழிய – அடையத்தக்கவன் அல்லன் -)என்ற படி
தன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே ஸ்ரவணாதிகள்-கேட்டு -சிந்தித்து -தெளிந்து -இத்யாதிகள் – பண்ணுவாருக்கு
துர் லப வஸ்துவான சர்வேஸ்வரனை-

கண்டேன் கமல மலர்ப் பாதம் – திருவாய் -10-4-9- என்கிற படியே அவன் தானே காட்டுகையாலே ,
விசதமமாக கண்ட போதே ,-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1–என்று தொடங்கி ,
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யாதிகளை விடுவித்து
அருள வேண்டும் என்று அவனைக் கால் கட்டும் படி இவருக்கு
-மற்ற வன் பாசங்கள் –திருவாய் -8-2-11-என்று ஸ்வ யத்ன நிவர்த்யம் அல்லாத படி
பிரபலமான பாஹ்ய சங்கங்கள் –பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு -திருவாய் -7–8–5-என்னும் படி ,
தத் ப்ரசாதத்தாலே ஸ்வாசனமாக விட்டு அகன்றது என்கை ..

——————————————

சூரணை -60-

இவ்வளவும் அன்றிக்கே ,தாரகாதி வைலஷண்யத்தாலும்
அவர்களில் இவருக்கு உண்டான வ்யாவ்ருதியை அருளிச் செய்கிறார் .

அவர்களுக்கு
காயோடு என்னும் இவையே
தாரகாதிகள் ..
இவர்க்கு
எல்லாம் கண்ணன் இறே-

அதாவது –
ருஷிகள் ஆனவர்களுக்கு
-காயோடு நீடு கனி உண்டு வீசு கடும்கால் நுகர்ந்து -பெரிய திருமொழி -3–2-2–என்றும் –
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து–பெரிய திரு மடல் -12- என்றும் சொல்லுகிற படி
பல மூல பத்ர வாயு தோயங்களே-(கனிகள் கிழங்குகள் இலைகள் காற்றுத்தண்ணீர் என்னும் இவைகளே )
தாரக போஷாக போக்யங்கள் ..

ருஷிம் ஜுஷாமஹி–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் –) ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் )-என்று
இவரையும் ருஷி என்று சொல்லிற்று ஆகிலும் ,
தாரகாதிகள் அவை அன்று –கிருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவர்க்கு-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –திருவாய் -6-7-1-
என்கையாலே ,தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் கண்ணன் இறே என்கை ..

————————————————————–

சூரணை -61-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் பிராக்ருத விஷயங்களில் நசை அற்று
பகவத் ஏக பரரான இவர் தத் விரஹத்தில் படும் அது எல்லாம் அவர்கள்
ப்ராக்ருத விஷய சங்கம் அறாமையாலே ,அவ் விஷயங்களுடைய விரஹத்தில்
படுவார்கள் என்கிறார்.-

அழுநீர் துளும்ப கடலும் மலையும்
விசும்பும் துழாய் திரு மால் என்று
எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு ,
அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே ..

அதாவது –
சேயரி கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன–திருவிருத்தம் –2-என்றும்
‘கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய் -2-1-4-என்றும்
சிந்தை கலங்கி திரு மால் என்று அழைப்பன்–திருவாய் -9-8-10–என்றும்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை—திருவாய் -8-5–11-என்றும்
உன்னை காண்பான் நான் அலப்பாய் -திருவாய் -5-8-4-என்றும் சொல்லுகிற படி
பகவத் விரஹ விசயனத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான
கடலோடு,நிர்விவரமான மலையோடு – அச்சமான ஆகாசத்தோடு வாசி அற ,
எங்கும் தேடி ,ஹ்ருதயம் கலங்கி ,ஸ்ரீ ய பதியே -என்று கூப்பிட்டு
எங்கே காணக் கடவேன் என்று இவர் படும் அலமாப்பு –

ஸ்ரீ வசிஷ்ட பகவான் புத்ர வியோக க்லேசத்தாலே ,
ச மேரு கூடாதாத்மானம் முமோச பகவான் ருஷி
சிரஸ் தஸ்ய சிலாயஞ்ச தூலராசா விவாபதத் ,
ந மமார ச பாதேன ததாச முனி சத்தமே
ததாக் நிமித்வா பகவான் ச விவேச மகாவனே
தம் ததா ஸூ சமித் தோபி ந ததாஹா ஹூதாசன
தீப்ய மானோப்ய மித்ரக்னம் சீதோக்நிர்பவத்ததா
ச சமுத்திர மபிப்ரேத்ய சோஹாவிஷ்டோ மகா முனி
கண்டே பத்தவா சிலாம் குர்வீம் நிபபாத ததம்பசி -என்கிற படியே
(அந்த பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்தில் இருந்து விழுந்தார் -அவருடைய தலை கல்லில்
பஞ்சுக் குவியலில் விழுவது போலே விழுந்தது -அப்பொழுது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர் –
ஏ முனிவரே அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பினை மூட்டி அதிலே புகுந்தார் -நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் –
அப்பொழுது அந்த நெருப்பு எரிந்து கொண்டு இருந்தாலும் அவரை எரிக்க வில்லை -சோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கும்
அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினை கழுத்தினில் கட்டிக்க கொண்டு அந்தக் கடலிலே விழுந்தார் ) என்கிறபடி
மலையில் ஏறி விழுவது ,நெருப்பிலே புகுவது ,
கழுத்திலே கல்லைக் கட்டி கடலிலே விழுவது ஆகையாலும் ,

ஸ்ரீ வேத வியாச பகவான் புத்ர விரகம் பொறுக்க மாட்டாமல்
த்வை பாயனோ விரஹ காதர ஆஜுஹாவ புத்ரேதி –ஸ்ரீ பாகவதம் -1-2-2–
( வியாசர் புத்திரனான சுகரைப் பிரிந்த பிரிவுக்கு அஞ்சினவராய் புத்திரனே என்று கூப்பிட்டார் )என்கிற படியே
புத்ரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் ,
அவர்களுக்கு புத்ர விச்லேஷத்திலே நடக்கும் என்றபடி –

——————————————————–

சூரணை -62-

இம் மாத்ரமே அன்றியே பல சாதனாதிகளில் பிரதிபத்தி விசேஷத்தாலும் ,
இரண்டு தலைக்கும் உண்டான நெடு வாசியை அருளி செய்கிறார் மேல் .

பல சாதன
தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு
பேச்சிலே தோன்றும்-

அதாவது
நிரஸ்தாதிஸயாஹ்லாத ஸூக பாவைக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மதா
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ன கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் பிராப்தி ஹேதுர் ஜ்ஞானாநஞ்ச கர்ம சோக்தம் மகாமுனே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-60—
(தனக்கு மேல் ஒன்றும் இல்லாததாக ஆனந்த ரூபமான சுகம் ஒன்றையே வடிவாக யுடையதும்
துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது சம்சார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும் –
ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்தப் எம் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர் –
மைத்ரேய முனிவரே ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப் பட்டன ) இத்யாதிகளாலே
பகவத் ப்ராப்தியே பலமாகவும் ,
கர்ம ஞானாதிகளே உபாயமாகவும் ,
இந்திராதி தேவ அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யன் ஆகையாலே ,
இந்திராதி தேவதைகள் அனுவர்த்த நீயராகவும் இறே ருஷிகள் சொல்லுவது ..

தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திருவாய் -2-9-4-என்றும்
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3–1-என்றும்
கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் தத் சாதனமும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5–10 -11-என்றும்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–திருவாய் -6-10 –10 -என்கிற பிரபத்தி யாகவும் ,
உன்னித்து மற்றோர் தெய்வம் தொழாள்–திருவாய் -4–6–10-என்று
தேவதாந்தரங்கள் அனுவர்த்தநீயர் அல்லராகவும் இறே இவர்கள் அருளிச் செய்தது ..

ஆகையால் பலத்திலும் ,சாதனத்திலும் ,தேவதாந்தரங்களிலும் ,
அவர்கள் பிரதி பத்தியும் இவர் பிரதி பத்தியும் இரண்டு தலையில் பேச்சில் தெரியும் என்கை-

சகல வேத ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தால்
சேஷத்வைக நிரூபணியமாக பிரதி பாதிக்க பட்ட ஆத்மாவுககு
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தி யால்
சொல்லப் பட்ட கைங்கர்யமே ஆகையாலும் ,
மத்யம பத பிரதிபாதிதமான பகவத் அத் யந்த பாரதந்த்ர்யதுக்கு
தத் ஏக உபாயத்வம் ஒழிய ஸ்வ ரக்ஷண ஸ்வ பிரவ்ருத்தி சேராமையாலும்
மத்யம அஷர பிரதிபாதிதமான ,பகவத் அனந்யார்ஹத்வதுக்கு
தேவதாந்தர அனுவர்தன கந்தமும் சகியாமையாலும் ,
பகவத் ப்ராப்தமே பலமாகவும் ,
ஸ்வ யத்ன ரூப கர்மாதிகள் உபாயமாகவும் ,
அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷண தயா உபாதேயராகவும் கொள்ளுமது
ஸ்வரூப யாதாம்ய தர்சிகளுக்கு பரித்யாஜமாய் இறே இருப்பது ..

ஆன பின்பு பலாதி த்ரயத்தில் , அவர்கள் பிரதி பத்திக்கும் ,இவர் பிரதி பத்திக்கும்
நெடு வாசி உண்டாகையால், இவ் வழியிலும் ,அவர்களில் இவர்
அத்யந்த வ்யாவ்ருத்தர் என்றது ஆயிற்று-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -54/55/56..

November 25, 2011

சூரணை -54-

ஆக இப்படி இப் பிரபந்த சதுஷ்டத்யத்துக்கும் வேத சாம்யத்தை சாதித்தார் கீழ் ..
இங்கன் அன்றிக்கே இது தனக்கு வேதோபப்ருஹ்மண சாம்யமும் சொல்லுவார்கள் என்கிறார் மேல் ..

அன்றிக்கே
ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை
விசதமாக்குகிற
பஞ்சராத்ர
புராண
இதிகாசங்கள்
போலே
நீலபாரூ போக்தி
தெரியச் சொன்ன
வேத உப ப்ருஹ்மணம்
என்பர்கள்-

அதாவது இப்படி வேத சாம்யம் சொல்லுகை அன்றிக்கே
பகவத் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு எல்லாம் -பிரதிபாதகமாய் இருந்துள்ள வேதத்தில்
யத்த தத்ரேச மக்ராஹ்ய மகோதர மவர்ண மசஷுஸ் ச்ரோத்ரம் தாதா பாணி பாதம்
நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம்யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா -என்றும்
சத்யம் ஞான அநந்தம் ப்ருஹ்ம-என்றும்
நிஷ்கலம் ,நிஷ்க்ரியம் ,சாந்தம் நிரவத்யம் ,நிரஞ்சனம் நிர்குணம் -இத்யாதிகளால்
சொல்லப் படுகிற ஸ்வரூபத்தையும்-

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்–முண்டோகம்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச–ஸ்வேதாஸ்வதரம்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -சாந்தோக்யம் –இத்யாதிகளால் சொல்லப் படுகிற குணங்களும்-

ஸ்ருணு தத் பரமம் ஸூஷ்மம் சர்வஞ்ஜம் சர்வப்ருத் ததா ,ஞான ரூபம்
அநாதி அந்தம் அவிகாரி நிராமயம் அசஷுச் ஸ்ரோத்ரம் அஸ்பர்சம்
அபாணி சரணம் த்ருவம், நாம ஜாத் ஆதி ரஹிதம் அவர்ணம் அ குணம் த்வபி
விச்வஸ்ரவோ ,விச்வ சஷூர் , விச்வ பாணி பதம் பரம் , அ சக்தம் அ சரம்
சாந்தம் ஸ்வயம் ஜோதிரநூபமம் ,தூரஸ்த்தம் அந்திக சரம் ,ஜ்ஞான கம்யம் ,
நிரஞ்சனம் ,பூத பர்த்ரு சமம் ,ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ பரம் அஷரம்
சர்வ பூதஸ்தம் தத் விஷ்ணோ பரமம் பதம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -இத்யாதிகளாலும்

அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க் குணம் பரிகீயதே ,ஸ்ருணு நாரத
ஷாட் குண்யம் கத்திய மானம் மயானன.அ ஜடம் ஸ்வாத்ம சம்போதி
நித்யம் சர்வ அவகாஹனம் .ஜ்ஞானம் நாம குணம் பிராஹு பிரதமம்
குண சிந்தகா . ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே
ஜகத் பிரக்ருத் பாவோய சா சக்தி பரிகீர்த்திதா கர்த்ருத்வம் நாம
யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யம் ,பரிப்ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம்
குண தத்வார்த்த சிந்தகை ,ச்ரம ஹானிஸ்து யாதஸ்ய சததம் குர்வதோ ஜகத்
பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குண சிந்தகை தஸ்யோபாதான பாவேபி
விகார விரஹோ ஹி யவீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வா பராஹ்வய , சக கார்ய நபேஷா
யாதத் தேஜஸ் சமுதாஹ்ருதம்–அஹிர் புத்ன்யா சம்ஹிதை -இத்யாதிகளால் விசதமாக்குகிற பஞ்ச ராத்ரம் போலேயும்-

யாதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்தி அபிசம்விசந்தி–தைத்ரியம்
ப்ராஹ்மணோஸ்ய முகம் ஆசீத் பாஹு ராஜன்ய க்ருத ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய
பத்ப்யாம் ஸூத்ரோ அஜாயத–புருஷ ஸூக்தம் –
அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -ஆரணம் –
பாதோஸ்ய விஸ்வா பூதானி –புருஷ ஸூக்தம் –தைத்ரியம் –இத்யாதியாலும்

ச ஹோவாச மஹிமான ஏ வைஷாம் ஏதே த்ரயஸ் த்ரிம் ச தேவ தேவா இதி
கதமேத த்ரயஸ் த்ரிம்சதிதி அஷ்டவ் வஸவ் ஏகாதச ருத்ரா த்வாதச ஆதித்ய
த ஏகரிம்சத் இநதிரஸ் சைவ பிரஜாபதிஸ் ச த்ரயச்த்ரிசம்த்-ப்ருஹதாரண்யம்- -இத்யாதியாலும்

பவ்திமாப்யோ கோபவநாத் கோபவன , கௌசிகாத் கௌசிக ,கௌடிந்ண்யாத் கௌடிண்ந்ய
சாண்டில்யாத் சாண்டில்ய ,கௌசிகாச்ச ,கௌதமாச்ச ,கௌதம ,அக்நிவைச்யா அக்னிவைஸ்ய
சாண்டில்யாத் -ப்ருஹதாரண்யம்-இத்யாதியாலும்

ஜகஜ் ஜென்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவ ஜாதியில் வைவித்யத்தையும்
ருஷி வம்சாதிகளையும் பிரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப் படுகிற விபூதியை
சர்க்கச்ச பிரதி சர்கச்ச வம்சோ மன்வந்த்ராணி ச ,வம்சானுசரிதஞ் சைவ புராணம் பஞ்ச லஷணம்-அமரம்- என்கிறபடியே
சர்க்காதிகளையும் ,வம்சங்களையும் , மன் வந்தரங்களையும் ,வம்சானு சரிதங்களையும் ,
விஸ்தரேண பிரதி பாதிக்கிற முகேன விசதமாக்குகிற புராணம் போலவும்-

உத்ர்ர்தாசி வராஹேண -தைத்ரியம்
இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா நிததே பதம் –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
அவதார சேஷ்டிதங்களை- ஸ்ரீ ராமாயணம் நாராயண கதாம் -என்னும் படி
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண பிரதி பாதிக்கையாலும்-

அத விஷ்ணுர் மகா தேஜ அதித்யாம் சமஜாயதே ,வமானம் ரூபமாஸ்த்தாய,வைரோசநிமுபாகமத் ,த்ரீன் க்ரமாநத பிஷித்வ
பிரதி க்ருஹ்ய ச மாதவ ஆக்ரம்யலோகன் லோகாத்மா சர்வ லோகே ஹிதே ரத
மஹேந்த்ராய புன பிரதாந் நியம்ய பலிமோஜசா––பால காண்டம் -29-19-இத்யாதிகளாலே
ப்ராசங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லுகையாலும் ,

மோஷ தர்மத்திலே ஸ்ரீ ஜன்ம ரகஸ்யத்திலே-அவதார ரஹஸ்யத்திலே –நார தேனைவ முக்தச்து பிரத்யுவாச ஜனார்தனா -என்று தொடங்கி
பூர்வம் மஸ்த்யோ பவிஷ்யாமி ஸத்தா பயிஷ்யாமி மேதிநீம் வேதாம்ஸ்வை உத்தரிஷ்யாமி மஜ்ஜமானான்
மகார்ணவே,த்வதீயம் கூர்ம ரூபேண ஹேம கூட சமப்ரபம் ,மந்தரம் தாரைஷ்யாமி
அமிர்தார்த்தே த்விஜோத்தம –சாந்தி பர்வம் –348-3-4-இத்யாதியாலே
தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்கும் இதிகாசம் போலவும்-

நீல தோயாத மத்யஸ்தா வித்யுத்லேகேவ பாஸ்வர –நாராயண அநுவாகம்
மனோமய பிராண சரீரோ பாருப -முண்டகம்-இத்யாதிகளாலே விக்ரஹத்தை சொன்ன இத்தை
ஆதி மத் யந்தம்–விக்ரஹத்தை பல இடங்களிலும் வர்ணித்து கொண்டு பேசுகையாலே-
தெரியச் சொன்ன-திருவாய் -6-9-11–என்கிற படியே விசதமாக்கி சொன்ன
வேத உப ப்ரஹ்மணம் என்று இத்தை சொல்லுவார்கள் என்கை-

இப் பிரபந்த சதுஷ்டயமும்
முழு நீர் முகில் வண்ணன்-திருவிருத்தம் -2–என்றும்
மைப்படி மேனி-திருவிருத்தம் -94-
பச்சை மேனி–திருவாசிரியம்-1-
தாமரைக் காடு–திருவாசிரியம்-5-
நற் பூவை பூவீன்ற–பெரிய திருவந்தாதி –1-
கார் கலந்த மேனி–பெரிய திருவந்தாதி –86-
துயர் அறு சுடர் அடி–திருவாய்-1-1-1-
புனக் காயா நிறத்த–திருவாய்-10-10-6-
என்று உபக்கிரமம் பிடித்து உபசம்ஹாரம் பரியந்தம்
விக்ரஹத்தை வர்ணித்து கொண்டு செல்லா நிற்கும் இறே ..

தெரியச் சொன்ன–திருவாய்-6-9-11- -என்கிற இது திருவாய்மொழி சந்தையே ஆகிலும்
உப ப்ரஹ்மணத்வம் பிரபந்தாந்தரங்களுக்கு ஒக்கும் என்றே கொள்ள வேணும்
வேதத்வம் சொன்ன போது சாதாரணமாக சொன்னது இங்கும் ஒக்கும் இறே
பஞ்ச ராத்ர புராண இதிகாசங்களிலும் இப் பிரபந்தத்திலும் ஸ்வரூபாதி சம்ஸ்தார்தங்களும் சொல்லப் பட்டதே ஆகிலும்
இவ்வோ அர்த்தங்களில் இவற்றுக்கு நோக்கு ஆகையாலே- இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை-

———————————————————–

சூரணை -55-

உப ப்ருஹ்மணத்வ சாம்யம் உண்டானாலும் ,இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம்
ஆர்ஷமான புராணாதிகளுக்கு இல்லை என்னும் இடத்தை அறிவிக்கைக்காக ,
உபயத்தின் உடையவவும் உத்பத்தி மூலங்களை அருளி செய்ய கோலி ,பிரதமம்
ஆர்ஷோ பிரபந்த உத்பத்தி மூலத்தை அருளி செய்கிறார்-

கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும்
சதுர் முகன் சந்தஸூம்
மோஹ சாஸ்திர பிரவர்தகன்
பிண சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து
ஏறி ஏறி சுழன்று ஆடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து
தான் வணங்குமாறு உரைக்க கேட்ட
சஜாதீயர் பிரசாதமும் ஆர்ஷ மூலம்-

அதாவது
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா தஸ்ய தஸ்யது
மஹாத்மியம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் –என்கிறபடியே
குண த்ரய வஸ்யனான தனக்கு கால பேத குண த்ரயமும் சங்கீர்ணமாயும்
அதில் ஒரு குணம் பிரசுரமாய் இருக்கும் விசேஷத்தை இட்டு –
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவ ராஜசாஸ் தாமசாஸ் ததா-ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் – -என்று
சங்கீர்ணங்கள் என்றும் சாத்விகங்கள் என்றும் ,ராஜசங்கள் என்றும் ,தாமசங்கள் என்றும்
சொல்லப் படுகிற அஹஸ் ஸூக்களாகிற கல்பங்களுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான
குணானுகுனமான பிரதி பந்தம் ஆன படியே , –

அக்னேஸ் சிவஸ்ய மஹாத்மியம் தாமசேஷு பிரகீர்திதம் ராஜசேஷு ச மஹாத்மியம் அதிகம் ப்ரஹ்மணோ விது–
சாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் ,
சங்கீர்னேஷூ சரஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம்-என்கிற படி –
தாமச கல்பங்களிலே அக்னி சிவர்களுடைய மகாத்ம்யத்தையும்
ராஜச கல்பங்களில் தன்னுடைய மகாத்ம்யத்தையும்
சாத்விக கல்பங்களில் சர்வேஸ்வரனுடைய மகாத்ம்யங்களையும்
சங்கீர்ண கல்பங்களில் பித்ரு சரஸ்வதியின் மகாத்ம்யத்தையும்
வர்ணியா நிற்கும் சதுர் முகனுடைய –

மச் சந்தா தேவ தே ப்ரஹ்மன் பிரவ்ருதேயம் சரஸ்வதி–பால காண்டம் 2-30- என்கிற படி இவன் வாக்கிலே
இச் சப்தம் பிறக்கைக்கு அடியான அனுக்ரக கார்யமான நினைவும் ..
சந்தஸ் என்கிற இது நினைவு என்றே இவ் இடத்தில் கொள்ள வேண்டும் .
சந்தம் என்றே நினைவுக்கு வாசகம் .
சந்தஸ் என்கிற இதுவும் நினைவுக்கு வாசகமாக வந்த இடங்களிலோ கண்டு கொள்வது .
ஆக இப்படி இருந்துள்ள சதுர் முகன் நினைவும் –

மோஹ சாஸ்திர பிரவர்தகன்
அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஜூ மர்த்த்யோ பூத்வா பாவனேவ மாமாராதய கேசவ ..
மாம் வ்ருணீஷ் வச தேவேச வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோ பவம்–என்று
வரம் வேண்டின ஸ்வ உத்கர்ஷ காமன் ஆகையாலே —
த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹா சாஸ்த்ராணி காரய -என்று பகவான்
நியோகித்தது வியாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர பிரவர்தகனான ருத்ரன் ,
பிணங்கள் இடு காடதனுள் ,நடமாடு பிஞ்சகன் -பெரிய திருமொழி-2-6-9–என்றும் ,
சுடலையில் சுடு நீறன்-பெரிய திருமொழி-10-1-5–என்றும்
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யிற் பூசி–பெரிய திருமொழி-1-5-8–என்றும்
அக்கும் புலி இன தளும் உடையார் –பெரிய திருமொழி-9-6-1–என்றும்
ஆறும் பிறையும் அரவமும் உடம்பும் சடை மேல் அணித்து –பெரிய திருமொழி-6-7-9–என்றும்
எரி உருவத்து ஏறேறி –இரண்டாம் திரு வந்தாதி — 63-என்றும் –
சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலை மேல் கூத்தன்-பெரிய திருமடல்-60- -என்றும்
ஆலமமர் கண்டத்தவன்–முதல் திருவந்தாதி-4- -என்றும் சொல்லுகிற படியே
தம பிரசுரன் ஆகையாலே நிஹீன வ்ருத்தி பரனாய்-

உன்மத்த வத நுன்மத்த .பிரபு ,பிரபவதாமபி ராத்ரவ் ஸ்மசாநேப்யடசிதத் கிமே தத் தவேச்வர – -இத்யாதியாலே
சிம்சான பர்யடனம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுஷ்டிக்கைக்கு ஹேது என் என்று தேவி கேட்க்கும் படி
சம்சானங்களிலே சஞ்சரித்து ,சப பஸ்மத்தை உடம்பு எங்கும் பூசி ,
அத்தி மாலையை பூண்டு ,வயாக்ர சர்மத்தை உடுத்தி ,நதி சந்திர சர்பாதிகளை ஜடையிலே அணிந்து ,
சர்வேஸ்வரன் தன சார்வஜ்ஞ அனுகுணமாக , வேத மயனான விஹஹேச்வரனை மேற் கொண்டு உலவுவா போலே ,
தன் அறிவு கேட்டுக்கு அனுகுணமாக ஞான ஹீனமான ரிஷபத்தை வாகனமாய் உடையனாய் ,மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமா போலே
சக்ர பிரமம் போலே சுழன்று ஆடுவது ,விஷத்தை கண்டத்திலே தரிக்கை ஆகையாலே ,நம்மில் காட்டில் அதிசயித
சக்திகர் இல்லை என்று தன்னை ஈஸ்வரனாக நினைத்து இருப்பதாக பிராந்தி நீங்கி ,சத்வ குணம் தலை எடுத்து ,

சத்வம் விஷ்ணு பிரகாசம் ஆகையாலே –
ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு -நால்வருக்கு மேலை யுகத்துரைத்தான் –நான்முகன்-17-
என்கிற படியே -அகடிதகடநா சமர்த்தனான சர்வேஸ்வரனை தான் உபாசிக்கும் பிரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்கள் ஆகையாலே ,
சத்வ நிஷ்டராய் ,ருஷித்வத்தால் வந்த சாஜாத்யத்தை யுடையரான
அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர்கள் நால்வரில் ஒருவனான புலஸ்த்யன்
புராண சம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி தேவதாபார மார்த்யஞ்ச யதாவத் வேத்ச்யதே பவான் -என்று
ஸ்ரீ பராசர பகவானுக்கு வர பிரதானம் பண்ணுகையாலே சஜாதியரான ருஷிகள் பிரசாதமும்
ருஷி ப்ரோதக்தங்களான பிர பந்தகளுடைய மூலம் என்கை-

ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு அனுக்ரகரான பிரம்மாவை போலே
விஜாதீயன் அன்றிக்கே ஸ்ரீ பராசர பகவானுக்கு வரபிரதனான புலஸ்தயனும் ருஷி
ஆகையாலே ,இவனுக்கு சஜாதியன் என்னத் தட்டில்லை இறே..

மற்று உண்டான இதிகாச புராண கர்த்தாக்கள் உடைய பிரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் ,இப்புடையிலே யாயிருக்கும்
அத்தனை அல்லது அத்வாரக பகவத் பிரசாதம் ஒரு விஷயத்திலும் இல்லை என்று நினைத்து இறே
ஆர்ஷ மூலம் என்று திரள அருளி செய்தது—

————————————————————-

இனி இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது என்கிறார் —

சூரணை -56-

பரம சத்வத்தோடே
உள்ளி உரைக்கும்
நிறை ஞானத்து
அயனாம் சிவனாம் திருமால்
அருள் கொண்டு
இவர் பாடினார்-

அதாவது –
கல்பாதியில் உத்ரிக்தமான குண அனுகுணமாக தோற்றிற்று வர்ணிக்கும் என்றதுக்கு எதிர் தட்டாம் படி
பரம சத்வத்தோடே -உள்ளி உரைக்கும் -என்று
ரஜஸ் தமஸ் ஸூக்களோடும் தத் சகபடிதமான சத்வதோடும் அந்வயம் இன்றிக்கே ,
பரம சத்வ சமாஸ்ரய ஸ்தோத்ர ரத்னம் -12–என்கிறபடியே –
தனக்கு மேல் எல்லை இல்லை என்னும் படியான சுத்த சத்வ யுக்தனாய் ,தான் சொல்லிற்று அடைய வேதார்தமாய் இருக்கச் செய்தே
சடக்கென சொன்னால்,-வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று
சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்கு உறுப்பாக –
நெறி உள்ளி உரைத்த திருவாய்-1-3-5-–என்கிற படியே வேத மார்க்கத்தை விசாரித்து ,அருளி செய்யுமவனாய்
பிச்சு தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டு உண்டான , ஞான மாத்ரத்தை உடையவர்கள் போல் அன்றிக்கே ,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – திருவாய்-4-8-6–என்கிறபடி
பரி பூர்ண ஞானத்தை நிரூபகமாக உடையவனாய் ,
அயனாம் சிவனாம் திரு மாலால் -என்கிற படி கீழ் சொன்ன பிரம்மா ருத்ரருகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று ,
அவ்வவ கார்யங்களை நிர்வஹிக்கையாலே ,தத் தத் சப்த வாச்யனாய் , சர்வாதிகனான ஸ்ரீயபதி யினாலே –
அருளப் பட்ட சடகோபன்–திருவாய்-8-8-1- என்கிறபடியே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கண்ணி 8–– என்கிற படியே
அந்த அத்வாரக பகவத் பிரசாதத்தை மூலமாக கொண்டு இவர்
இப் பிரபந்தங்கள் பாடி அருளினார் என்கை .

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம்-நாச்சியார் திரு மொழி சாரம் ..

November 25, 2011
வேத சாரம்
வேதாந்த சாரம்
வேத வேதாந்த சாரம் -அருளி செயல்-
அருளி செயலின் சாரம் அனுபவம்
இன்று பூரம்-கோல் விழுக்காட்டில் விழுந்து –
திருப் பாவை-ஜீயர்-எம்பெருமானார் -அனுஷ்டானம்-அனுசந்தானம் –
மா முனிகள்- எம்பெருமானார் திரு நாமமும் த்வயமும் போல்
ஏய்ந்த பெரும் கீர்த்தி -வளர்த்த இத தாய்-
தங்கும் மனம் நீ எனக்கு தா -எம்பெருமானார் சம்பந்தம் ஒன்றாலே
வேதம் அனைத்து -சர்வ சாமான்ய சப்தம்
உம்மை-தொகை-வேத இதிகாச புராணம் அருளி செயல் அனைத்துக்கும்தத்வ ஹித புருஷார்த்தம் மூன்றையும்

திரு பாவை வித்து இவை சொல்ல வந்த –

முதல் கிளை நாச்சியார் திரு மொழி –
வேயர் பயந்து விளக்கு-ஆய குலத்தில் இல்லை
ஆயர் குலத்து விளக்காக மாறி-பக்தி  காதல்-
உலகில் தோற்றமாய் நின்ற சுடர் -ஆயர் குலத்தினில் அணி விளக்கு அவன்
ஒருத்தி மகனாய் பிரிந்து
மூன்று இடத்தில் திரு பாவையில்- அவதாரம்-
ஜன்ம கர்ம மே திவ்யம்
ஆண்டாளுக்கும் -மூன்று தனி சிறப்பு
பெரிய பிராட்டியாருக்கு சகி-நீளா பிராட்டி
பெரிய பிராட்டிக்கு அம்ச பரர்கள்
மல்லி நாட்டுக்கு சிததி -மட மயில் இவள்
இன்றோ திரு ஆடி பூரம்-மா முனிகள் வஸ்தறு வைலஷண்யம்
பிர பந்த வைலஷண்யம் பார்ப்போம் இனி
கம்பீர மதுரம் மென்மையான வார்த்தைகள் -ஆழ்ந்த கருத்துகள் நிறைந்த -சுருக்கி
நவிலுதல் –
ந ருக் வேத ந யஜுர் வேத-பெருமாள் வார்த்தை திரு அடி வார்த்தை
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -சொல்லி இல்லை –
அர்த்த ரசம்-மேல் எழுந்த ஞானம் – பாவ ரசம் -உணர்வு வெளி இட்டு /சப்த ரசம்
மூன்றும் சேர்ந்து நவிலுதல்
நாவால் பலவும் நவின்று -ஆண்டாள் கர்ப்பம் இருந்து வந்த -அழுத்தம் உண்டு

பிரதி பாத்தியா வைலஷண்யம் –
சங்கதி- வியாக்யானம்-பஞ்ச லஷணம்-
தொடர்பு-வேறு எங்கு-பிரமாணம் -வேற கோணம் யார் அருளி இருக்கிறார்கள்
திரு பாவை-உனக்கே நாம் ஆள் செய்வோம்-சாரம்
உன் தன்னை பிறவி -புண்ணியம்
உற்றோமே ஆவோம்
மூன்று வார்த்தை விவரிக்க நாச்சியார் திரு மொழி பிறந்தது –
அளவு கடந்த காதல் அவனுக்கு -கலந்தால் அல்லது இருவரும் வாழ்ந்ததாக நினைக்க மாட்டான்
அனுபவ ரசம் தலை மிஞ்சி போனால் -அதனால் முகம் காட்ட வில்லை
காரணம் ஆராய்ந்து -நம் ஆழ்வார்-இது போல் -ஆராய்ந்து -கலங்கி -தூது விட்டார்
தம் பிழையும் -பர விபவ -தூது நாலுக்கும் விஷயம் -ஆச்சர்ய ஹ்ருதயம் பொருளின் மேல் ஆசை மிக்கு-வஸ்து வைலஷண்யம்

தை யொரு -காமன் காலில் விழுந்து -கடகர் -ஆச்சர்ய ஸ்தானம்
திரு நெடும் தாண்டகம்- செம் கால மட நாராய்–திரு கண்ண புரம் –
பழன மீன் கவர்ந்து தருவேன்
உருக்க மலர் சமர்பித்து இவளும்

அடுத்து -நாமம் -எமக்கு வாதை தவிருமே -எம்பெருமானுக்கு கலக்கம் இதில்
என்னை பெற காமன் காலில் விழுந்தாலே
முற் பாடு வராமல் போனோமே என்று கலங்கினான்
கஜேந்திர ஆழ்வான்/திரௌபதி ரட்ஷிக்க வந்தது
பார்த்தன் தன தேர் முன் நின்றான்-
முன்- தேர் முன்னால்-இடம் முன் இரண்டு அர்த்தம்- தவிக்க விட்டோமே கலங்கி -தெளிந்தான்

அர்ஜுனன் கலக்கம்-கண்ணன் கீதை தொடக்கம் போல் 2 -11
கூடினான்-இரு உடல் ஒன்றாக ஆனது மூன்றாம் திரு மொழியில்-
குடைந்து நீராடுவான் கலந்தோம்
ஊடல்-கூடல் -உணர்ந்து -புணர்ந்து நான்கு நிலையும்நாம் யார் அவன் யார் உணர்ந்து

இரப்புவார்-/எத்திவார் வாழ்த்து வார் சீறுவார்  வெறுப்பார் ஐந்து போரையும்
தொழுது -ஏத்தி-துதி பாடி மாயவனே எங்கள் அமுதே
வாழ்த்துவார் கூத்தாட
சீறுவார் கூறை தாராய்
வெறுப்பார்-அஞ்ச உரைப்பாள் யசோதை
மூன்றாம் பத்தில் இவை அருளி
நான்காம்-பத்தில் -விச்லேஷம் –
மணி வல்லி-பேச்சு -திரு விருத்தம்
சம்யோகம்-விப்ர யோகம்
கூடல் இளைத்து -தட்டில் அரசில்- முத்து குறி –
ஒத்தை படை -கூடாதார் -அரையர் -திரு அரங்கம் எம்பெருமான் உடன் கூடுவது
ஐந்தாம்-திரு மொழி -குற்றம் சொல்வார் -சங்கு இழக்கும் வழக்கு உண்டே
குயில் காலில் விழுந்து -எம்பெருமான் இடம் தெரிவிகிகிய
ஆறாம் -திரு மொழி-சீதை பிராட்டி மேல் அனுபவம்- தானே கனா கண்டு
தோரணம் நாட்ட கனா கண்ட -விவாகம் க்ரமத்தை சொபனத்தில் அனுபவித்து
ராகவம் ச லஷ்மணன் -சேர்ந்த -வீரம்-திரு மேனி -காண கொடுக்க வில்லையே தரிக்க -என்கிறாள் பிராட்டி
இங்கு கோதை தரிக்க- ஒரு நாள் ஆவி தங்காது -அங்கு ஒரு மாசம் இருப்பேன் என்றாள்
சீர் பாடல்- களி வெண்பா பளிப்போமே-
ருசி அனுகுணமாக சொபனம்-கர்ம அனுகுணமாக –
அடுத்து எட்டாம் -திரு மொழியில்-
அவனை விட்டு பிரியாத சக்கரத்தாழ்வான்/ சங்கு ஆழ்வான்-
வாய் அமுதம் -கற்பூரம் நாறுமோ -வாய் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்டு
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலைத்தை -பெரும் பூசல்  இடுகிறாள் அதன் உடன் உறவு கொண்டு சுவை அனுபவிக்க

அடுத்து தூது மேகம்-அடுத்து -திரு மால் இரும் சோலை –

இரட்டை பதார்த்தங்கள்-சேர்ந்து இருந்த பொழுது குளிர்ந்து
இன் உயிர் சேவலும் நீரும்-குயில் பேடைகாள் ஆழ்வார்
தரிக்க/
அடுத்து திரு அரங்க அனுபவம்
குழல் அழகர் வாய் அழகர் –திரு அரங்கத்து செல்வனார்
ரட்ஷிப்பான்-ஹேது -அவன் வார்த்தை -உண்டே
பெரிய ஆழ்வார் சம்பந்தத்தால் பலன் தப்பாது
பிரிந்த நோய் தீர -திரு மேனி சம்பந்தம் –
பீதக வண்ண வாடை கொண்டு வாட்டம் தணிய வீசீரே
வீணை மீட்டும் பொழுது -பரகால நாயகி -நிலைமை தாய் வருந்தினது போல் நைந்து போனாள்-

கூட்டி போக -நடக்க சக்தி இல்லை –
தானே -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
பெண்ணின் வருத்தம் அறியாத –
சாத்து பாசுரம்-நிச்சய பரம பக்தி
பட்டி -இங்கே போத கண்டீரே
பலன் சொல்லி –
செம் கண் திரு முகத்து செல்வ திரு மாலால்  எங்கும்
திரு அருள் பெற்று வாழ்வார்கள்
விஷ்ணு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தனக்கு வைத்து கொண்டு வாழ்வார்கள்
கிளி கொத்திய ஒவ்பஷதம் போல்
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ்- பெருமை/ திரு விக்ரமன் /திரு அடி
பிரியாது என்றும் இருப்பார்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகைஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -53/

November 24, 2011

சூரணை -53-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின்
கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் ..

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே
திரு சக்கரம் ஒத்து
கால சக்கரச் செங்கோல் நடாவி
ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி
அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும்
மந்தேஹர்க்கு செம் தீயும்
முக்தி மார்க்கத் தலை வாசலும்
கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்
த்ரயீமயமுமான மண்டலத்திலே
தண் தாமரை சுமக்க
தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும்
படையும் திகழும் பொன் மேனியும்
செஞ்சுடர் தாமரை கண்ணுமாய்
அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி
இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற
செய்யாளான வித்தை யோடே
அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின்
சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான
ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே
ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே
தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று
வேத குரு உபதேசம் .

1-புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே –
அதாவது -காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி -சிறிய திருமடல் –என்றும்
ஒரு கால் உடைய தேர் -பெரிய திருமொழி-5-7-8–என்றும் சொல்லுகிற படியே –
காயத்ரீ /ப்ருஹதீ /உஷ்ணிக் /ஜகதீ/த்ருஷ்டுப் /அனுஷ்டுப் /பங்க்தி -என்கிற
ஏழு சந்தஸ்ஸூக்களும் ஏழு குதிரைகளாக கொண்டு வகிக்கையாலே ,
சப்தாஸ்வ யுக்தமாய் .கால சக்ர மயமான ஏக சக்கரத்தையும் உடையதான ரதத்திலே என்கை-
சப்த யுஜ்ஞஜந்தி ரதமேக சக்ரம் -ஆரணம்–என்றும்
ஹாயாச்ச சப்த சந்தாம்சி தேஷாம் நாமாநி மே ஸ்ருணு காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ
த்ருஷ்டுபேவச அனுஷ்டுப் பங்க்தி ரித்யுக்தா சந்தாம்சி ஹரயோ ரவ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-4-– என்றும் சொல்லக் கடவதிறே
ஏகோ அச்வோ வஹதி சப்தநாமா-ஆரணம்-–என்றதுக்கு ஹிருதயம் ஏதத் அனுகுணமாக
வியாக்யாதமான இடங்களில் கண்டு கொள்வது ..

திரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணே மின்யஷா ஆத்மகே , சம்வத்சர மயே க்ருத்ஸ்னம்
காலசக்ரேத் மகே பிரதிஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-3- என்கிற படியே ,
சாதுர் மாஸ்ய த்ரயாத் மகமான நாபியை உடைத்தாய்
சம்வஸ்தரம் பரிவஸ்த்ரம் , இதாவஸ்த்ரம்.அனுவஸ்த்ரம் , இத்வஸ்த்ரம் என்று சொல்லப் பட்ட ஐஞ்சு
வஸ்தரத்தையும் ,அரங்களாக உடைத்தாய்
வசந்த கிரீஷ்ம வர்ஷா சரத்தே மந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக உடைத்தாய் ,
ப்ரவாஹா பரி விருத்தியாலே , அஷய ரூபமாக இருக்கிற கால சக்கரத்திலே ,
சர்வம் பிரதிஷ்டிதம்-என்கையாலே ,
இந்த ஏக சக்கரம் கால சக்கரமாய் இறே இருப்பது .
ஆக இப்படி இருந்துள்ள சப்த அஸ்வங்களையும் ,ஏக சக்கரத்தையும்
உடைத்து ஆகையாலே ,இதர வ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே என்ற படி –

இனி மேல் மண்டலத்தை வர்ணிக்கிறது –

2-திரு சக்கரம் ஒத்து -அதாவது —
அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திருக் கை திருச் சக்கரம் ஒக்கும் -திரு விருத்தம் -88–என்னும் படி
விருத்தாகாரதையாலும் ,தேஜோ விசேஷத்தாலும் ,திரு ஆழியோடு ஒத்து இருக்கை-

3-கால சக்கரம் செம் கோல் நடாவி —- அதாவது –
திரு சக்கரத்தால் அகல் விசும்பும் ,நிலனும்,இருளார் வினை கெட செம் கோல் நடாவுதீர்–திரு விருத்தம் -33 -என்கிற படி
உபய விபூதியிலும் ,ஈஸ்வரன் தன் ஆக்ஜையை நிர்வகிக்கைக்கு உபகரணமான
திரு ஆழியைப் போலே ,-கால சக்கரத்தாய்–-திருவாய்-7-2-7-என்னும் படி
கால சக்கர நிர்வாகனானவனுடைய கால சக்கர விஷயமான ஆக்ஜையை
தனி வளர் செம் கோல் நடாவு தழல் வாய் அரசு -திரு விருத்தம் -13- -என்கிற படியே நடத்துகை ..

4-ஜோதீஸ் சக்கர ஒளி சுருக்கி –அதாவது –
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி -7–என்னும் படி ,சர்வதோதிக்கமாக
வ்யாப்தமான ஸ்வ தேஜஸ் பிரகர்ஷத்தாலே -துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி –திருப்பள்ளி எழுச்சி -3-
இத்யாதிப் படியே ,நஷத்ராதியான ஜ்யோதிர் கணங்களின் தேஜஸ்ஸை சங்கோசைப்பிக்கை –

5-அக்நி ஷோமீய தேஜோ அம்ருதத்து ஊற்றும் -அதாவது –
அக்னிம் வா வாதித்யஸ் சாயம் ப்ரவிசதி தஸ்மாத் அக்னிர் தூராத் நக்தம் தத்ருசே உபேவா தேஜஸீ சம்பத்யேதே–அஷ்டகம் -2- –என்றும்
ப்ரபா விவஸ்வதோ ராத்ரவ் அஸ்தம் கச்சதி பாச்கரே விசத்யக்னி மாதோ ராத்ரவ் வஹ்நிர் தூராத்
பிரகாசதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-20-என்றும் சொல்லுகிற படியே
அஸ்தமய சமயத்திலே தன்னுடைய பிரபையை அக்னியிலே
பிரவேசிப்பித்து ராத்ரியில் அக்னிக்கு தேஜோ வ்ருத்தியை வுண்டாக்குகையாலே
அக்நியுடைய தேஜஸ் ஸூக்கு ஊற்று என்கிறது ..

6-ஷீணம் பீதம் ஸூரைஸ் சோமம் ஆப்யாயயதி தீப்தி மான் ,மைத்ரேயைககலம்
சந்தம் ரச்மினைகேன பாஸ்கர , க்ரமேண ஏன பீதோசவ் தேவைஸ் தேன நிசாகரம்
ஆப்யாயத் யனுதினம் பாஸ்கரோ வாரி தஸ்கர–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-13-–என்கிற படியே
அபார பாசத்தில் ,பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் நித்யம் ஒரு கலையாக
அமிர்த மயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புசித்து பதினைந்தாவது
கலையை பஞ்சதசி அன்று அபராஹனத்திலே , பித்ருக்கள் புசிக்க ,இப்படி ஷீணனான சந்த்ரனுக்கு ,
பூர்வ பஷ பிரதமை தொடங்கி , நித்யம் ஒரு கலையாக பஞ்ச தசி அளவும் பதினஞ்சு கலைகளையும்
தன்னுடைய ரச்மிகளாலே ,வர்திப்பிக்கை யாலே ,சோமனுடைய அமிர்தத்துக்கு ஊற்று என்கிறது ..

ஆக இப்படி அக்னியினுடைய தேஜஸ்ஸூக்கும் ,சோமனுடைய அமிர்ததுக்கும் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கும் என்கை.

7-மந்தேஹருக்கு செம் தீயும் -அதாவது
மந்தேகர் என்பார் ,சில ராஷசர் சந்த்யா சமயத்தில் ,ஆதித்ய ரதத்தை
பற்றிக் கொண்டு ,போக ஒட்டாதே ஆதித்யனோடே மகா யுத்தம் பண்ணி ,
அவனைக் கொல்லத் தேடுவர்களாய் ,அவ்வளவிலே பிராமணர் காயத்ரி அபி
மந்திரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்தவமாக ப்ரேஷேபிக்க
அந்த காயத்ரி பூத அர்க்க்ய சக்தியாலே , ஆதித்ய மண்டலத்தில் ஜொலித்து கொண்டு ,
தோற்றின சிவந்த அக்னியிலே விழுந்து முடிந்து போவார்கள் என்று –
-மீண்டு அவற்றுள் எரி கொள் செம்தீ வீழ் அசுரரை போல் -திருவிருத்தம் -82—என்று ஆழ்வார்
அருளிச் செய்கையாலே ,மந்தேஹருக்கு ஜொலிக்கிற அக்நியாய் இருக்கும் என்கிறது ..

ராஷசரை அசுரர் என்று ஆழ்வார் அருளி செய்தது –
தானவனாகம் தரணியில்-பெரிய திருமொழி-1-4-1-என்றும் –
தானவன் வாள் அரக்கன்-பெரிய திருமொழி-2-2-2–என்றும்
சொன்னவை போலே ஆசூர பிரக்ருதிகளான ஆகாரத்தாலே ..

ததுஹா வா ஏத ப்ரஹ்மவாதின பூர்வாபிமுகா சந்த்யாயம்
காயத்ரி அபிமந்த்ரிதா ஆப ஊர்த்வம் விஷி பந்தி -ஆரணம்–என்றும்
சந்த்யா காலே து சம்ப்ராப்தே ரவ்த்ரே பரம தாருனே
மன்தேஹா ராஷசா கோராஸ் சூர்ய மிச்சந்தி காதிதும்
பிரஜாபதி க்ருதஸ் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரஷசாம்
அஷயத்வம் சரீரானாம் மரணம் ச தினே தினே
ததஸ் சூர்யஸ்ஸ தேஷாம் வை யுத்த மாஸீத் ஸூதாகுணம்
ததோ திவிஜோத்தமாஸ் தோயம் ப்ரஷிபந்தி மகாமுனே
ஓங்கார ப்ரஹ்ம சம்யுக்தம் காயத்ரியா சாபி மந்த்ரிதம்
தேன தக்யந்தி தே பாபா வஜ்ர பூதேன வாரிணா -என்றும்
பிராமணர் இங்கு பிரேஷேபிக்கிற அர்க்க்ய ஜலம் தானே
வஜ்ரீ பூதமாய் கொண்டு அந்த ராஷசரை நிரசிக்கும் என்று
ஸ்ருதியிலும் புராணங்களிலும் சொல்லுகையாலும் ,
அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜொலிப்பித்து
அணுக செல்லில் நசிக்கும் படி ஆக்கும் என்றும் சொல்லலாம் இறே-

8-முக்தி மார்க்கத் தலை வாசலும்-அதாவது
அர்ச்சிராதி கதி என்னும் முக்தி மார்க்கத்தாலே போம் அளவில் –
அர்சிஷா மேவாபி சம்பவந்தி -இத்யாதி படியே-
அர்ச்சி ப்ரப்ருதிகளை சென்று கிட்டிப் போகிற மாத்ரம் அன்றிக்கே ,-
தத் பித்வா சூர்யச மண்டலம்-என்றும் –
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல்-என்றும்
வெம் கதிர் வட்டத்தூடு போய்–பெரிய திருமொழி-4-5-10-என்றும் – சொல்லுகிற படியே ,
இம் மண்டலதூடே போகையாலும்-
அண்ட கடாஹத்தைப் பேதித்து புறப்படும் அதுக்கு முற்பட்டது ஆகையாலும்
இத்தை இம் மார்க்கத்துக்கு தலை வாசல் என்கிறது .

9-கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் -அதாவது
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு –திருவாய்-1-8-3-
சஷூர் தேவநாமுத மர்த்யாநாம்-யஜுர் வேதம் – -என்கிற படியே –
சர்வருக்கும் திருஷ்டி பூதனான சர்வேஸ்வரன் கண்ணிலே –
சஷோஸ் சூர்யோ அஜாயத -புருஷ ஸூக்தம்-என்கிற படியே ஜனிப்பதும் செய்து
ஜகதேக சஷுஷே -என்ற படி ஜகத்துக்கு திருஷ்டி பூதமுமாய் இருக்கும் என்கை ..

10-த்ரயீ மயமுமான மண்டலத்திலே -அதாவது -‘
த்ரயீ மயாய-என்கிற படியே வேத மயமாய் இருக்கிற ஆதித்ய மண்டலத்திலே என்கை ..

இத்தால்-த்யேய சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயண சரசி ஜாசன சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபு த்ருத சங்க சக்கர -என்ற
இதில் அவன் எழுந்து அருளி இருக்கிற சவித்ரு மண்டலத்தை வர்ணித்தார் ஆயிற்று ..
(த்யேயா சதாஸ் தேஜஸ் -ஆரம்பம் சாந்தோக்யம் / நாராயண -அதில் இதில் செய்யாள் உடன் /
ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்று காட்டும் / தன்நிறம் -செய்யாள் -ஹிரண்ய வர்ணாம் -இவள் திரு மேனி சிக்கப்பால்
அவனுக்கும் சூர்யா மண்டலத்துக்கும் -திருக்கண்டேன் -அவள் வர்ணத்தால் பொன் மேனி-காணும்படியும்
அருக்கன் அணி நிறமும் காணும்படியும் அன்றோ ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் -)

இனி அதில் எழுந்து அருளி இருக்கிற படியை வர்ணிக்கிறார் –

1-தண் தாமரை சுமக்க –அதாவது
தண் தாமரை சுமக்கும் பாத பெருமான் -திருவாய்-4-5-8–என்கிற படியே
சரசி ஜசன சந்நிவிஷ்டனாய் இருக்கை
தோள் வளையும் குழையும் பெரியாழ்வார்-1-5-10–அதாவது
இத்தால் கேயூரவான் மகர குண்டலவான் -என்றதை சொல்லுகிறது .
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ-திருவாய்-8-4-7-
இத்தால் கிரீடி ஹாரி த்ருத சங்க சக்கர -என்றதைச் சொல்லுகிறது ..

2-திகழும் பொன் மேனியும்-அதாவது
ஆரமும் படையும் திகழ திருவாய்-8-4-7–என்கிற படியே
கீழ் சொன்ன ஆயுத ஆபரணங்கள் எல்லாம் விளங்கும் படி இருப்பதாய் ,
பொன் மேனி கண்டேன்-மூன்றாம்-1–என்னும் படி ஹிரண்ய மயமான திரு மேனியும்
ச எஷாந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்ய ச்மஸ்ரூர்
ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண -சாந்தோக்யம்-–என்றும்
ஹிரண்மயவபு –என்றும் சொல்லக் கடவதிறே-

3-செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் -அதாவது
அஞ்சுடர் வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-என்ற அநந்தரம்
செஞ்சுடர் தாமரை கண் செல்வனும் வாரான்-என்றது
அந்த ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிறவனை இறே ..
ஸ்ருதியும் -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்றது அவ் இருப்பிலே இறே ..
ஆகையால் ஆதித்ய கிரணங்களால் விகசிதமான போதை சிவந்த ஒளியை உடைய
தாமரை போன்ற திரு கண்களுமாய் என்கை-

4-அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தையோடே –
அதாவது
திருக் கண்டேன்-என்று முதலில் தன்னை கண்ட அநந்தரம்
ருக்மாபம்-என்னும் படி இருக்கிற அவன் திரு மேனியைக் கண்டு -பொன் மேனி கண்டேன்-என்று இருக்கச் செய்தேயும்
தன் திரு மேனி நிறத்தில் வியாப்தியாலே இள வெய்யில் கலந்தால் போல் விளங்கி ,
தர்சநீயமாய் இருக்கும் அவன் திரு மேனி நிறத்தைக் கண்டு
திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -என்னும்படி யாகவும் ..

செய்யதோர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்—திருவாய் –4-4-2-என்று
அந்த மண்டல வாசிநியான தன் விக்ரக தேஜோ வியாப்தி யாலே சிவந்த ஒளியாலே அத்வீதீயமாய் இருக்கும் படியைக் கண்டு
ஸ்ரீ தரன் வடிவு ஈது என்று பிரமித்து சொல்லும் படியாகவும் ,
பகவத் விக்ரகமும் ஆதித்ய மண்டலமும் ஆகிய இரண்டையும் தன்னிறமாகும் படி பண்ணுகிற சிவந்த நிறத்தை உடையவள் ஆகையாலே
ஹிரண்ய வர்ணாம்—ஸ்ரீ ஸூக்தம் – இத்யாதி படியே
கமல மலர் மேல் செய்யாள்–திருவாய்-9-4-1-என்று நிரூபகம் ஆகும் படி இருப்பாளாய்
வித்யா சகாய மாதித்ய சமஸ்தம் வித்யா பிரசாதகம் -என்றும்
வித்யா சகாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் சனாதனம்-என்றும் சொல்லுகிற படியே
வித்யா சப்த வாச்யையான பிராட்டி யோடே கூடே-

அருக்கன் மேவின-
அதாவது
வானிடை அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு -பெரிய திருமொழி-2-1-7-என்கிற படியே சவித்ரு மண்டல மத்ய வர்தியான
-ய ஏஷ அந்தராதித்யே -என்றதை சொல்லுகிறது
சதாத்யேய தேஜஸ்ஸின்-அதாவது
த்யேயஸ் சதா -என்கிற படியே சர்வ காலமும் த்யானம் பண்ணுவாருக்கு விஷயமாய்
ஹிரண்மயஸ் சகுநிர் ப்ரஹ்ம நாம ஏன சூர்யஸ் தபதி தேஜசேத்த–காடகம்–என்றும்
தத் சவிதுர் வரேண்யம் பர்க்க -காயத்ரி –என்றும்
தேஜ பரம் தத் சவிதுர் வரேண்யம் தாம்னா பரேணா பிரணகாத் ஸூவர்ணம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர -79-என்றும்
சொல்லுகிற படி தேஜோ மயமாய் இருக்கிற வஸ்துவினுடைய-

சாமரே சோத்கானநாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே –
அதாவது
சாம்ன உத்கீதோ ரச – என்கையாலே சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள
உத்கானம் உண்டு–உத்கீதம்-( சாம ரஸம் உத்கீதம் -அதில் நாமம் உத் )
அதில் -உத்-என்று சொல்ல பட்ட -தஸ்ய உதிதி நாம -என்கிற திரு நாமம்
இதுக்கு உள்ளுறை யானமை தோற்றும் படியான ஆத்யந்தங்களை உடைத்தாய் இருக்கையாலே என்கை ..
உயர்வு-என்று எடுத்து உயர்ந்தே -என்று தலைக் கட்டுகையாலே
உ காரம் ஆதியும் த காரம் அந்தமும் ஆய இறே இருக்கிறது
ஆத்யந்தங்களாலே -என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இது என்று தோற்றுகைக்காகா-

ஓர் ஆயிரம் அவற்றிலே ஒன்றை-அதாவது
ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் பேர் ஆயிரம்-என்கிற படியே
ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று ஜகத் ரஷணம் பண்ண வல்ல
திரு நாமங்களிலே ஒரு திரு நாமத்தை –
(ஒன்றே ஆயிரமாய் அளிக்கும் என்றால் ஆயிரமும் பத்து லக்ஷமாக அளிக்கும்)

ஆயிரம் முகத்தினால் அருளிய -இத்யாதி-அதாவது –
ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கை–பெரிய திருமொழி-1-4-7–என்று
கங்கை தானும் ஒன்றாய் இருக்க ,லோக பாவன அர்த்தமாக சகஸ்ர முகமாக பிரவஹித்தால் போலே
தீர்த்தங்கள்-ஆயிரம் என்ற படியே -லோக பாவனமான ஆயிரம் பாட்டாக
விஸ்தரிக்கிறார் என்று ஸ்ரீ வேதாசார்ய பட்டர் உபதேசித்து அருளும் படி என்கை ..
விஸ்தரிக்கிறார் என்ற கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமற கீழ் சொன்ன படி கொள்வது-

ஆக -எவ்வுலகத்து எவ்வகையும் -சூரணை -39- தொடங்கி இவ் ஆழ்வார்
பிரபந்த சதுஷ்டயத்துக்கும்
வேத ரூபவத்வமும்
அங்க உபாங்க சாகித்யமும்
சாஸ்திர வாதி வேத லஷண சாம்யமும்
இதில் இவருக்கு தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதின் நித்ய அபௌருஷேயத்வ ஹானி இல்லாமையும்
அதில் சாம வேத ஸ்த்தாநீயமான திரு வாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத் சமம் என்னும் அதுவும்
சொல்லிற்று ஆயத்து-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளி செயல் அரங்கம் -திருப் பாவை சாரம் ..

November 24, 2011
ஸ்ரீ பாஷ்யம் அறியாதவர்கள் ஸ்ரீ வைஷ்ணவன் இல்லை
வேதம் அனைத்துக்கும் வித்து திருப் பாவை ..
துய்ய மதி பெற்ற மழிசை பிரான்-மகம்-அன்று கேட்க்கும் பாக்கியம்
சூர்யா வம்ச ரகு குலன் பெருமை பேசுவது
 கடலை ஓடம் கொண்டு கடக்க பார்ப்பது போல் -காளி தாசன்
பாவை-கோல மலர்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
திரு -பெரிய பிராட்டி
அவள் போல் இவளும்
நன் நாரில் பூட்டிய பாவை- ஆட்ட ஆடும் -பார தந்த்ர்யமே வடிவாக கொண்ட அவள்
பிறர்-அவன் -உகப்புக்காகவே கைங்கர்யம் –
அஞ்ஞான இருள் -நீங்க நீராட்டம் –
அனந்யார்க்க சேஷத்வம் அநந்ய உபாயத்வம் அநந்ய போக்யத்வம்
அவன் போக்தா நாம் போக்கியம்

நீராட்டம்-மூன்று இடத்தில் வரும் திருப் பாவை
பாவனா பிரகாஷம்-மானசீகமான உணர்வு
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-பொருள் நினைத்து அதுவே ஆனது போல்
பிரகலாதன்-அஹம் சர்வம்-சொன்னது போல்
வாம தேவன்-நான் தான் சூர்யன் /மனு
ஆண்டாளும்-இவர் போல்
மாநிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்-அனந்யார்க்க சேஷத்வம்
மார்கழி நீராட-
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி-திரு நெடும் தாண்டகம்
பொற்றாமரை கயம் நீராட போனாள்அடுத்து
அழகிய மணவாளன் -தான் பொற்றாமரை கயம்

பறை -அடைய வேண்டிய பயன்-பிராப்யம்
வாய் படைத்த பயன் அவனை ஆர்வத்தால் பாடுவதே
உன் தன்னை பாடி பறை கொண்டு
ச்வாபதேசம்-முன்னோர் அருளி-திரட்டி கொடுத்தார்கள்
ஸ்ரீ பாஷ்யம் ஒட்டினது முதல் பாசுரம்
முதல் நான்கு சூத்தரங்கள்-முன்னுரை
ஜகத் காரணம் -அனுமானத்தால் அறிய முடியாதவன்
ஐந்து பாசுரம் முன்னுரை இங்கும்

பிரதிக்ஜை முதல் பாசுரம் -நீராட போக
மாசானாம் மார்கழி-கீதை-தேவர் ஆராதனம்-
போதுவீர் போதுமினோ-உள் பொருள் அமைந்தது
வருவார் வாங்கோ சொல்லாமல் –
பகவத் அனுபவம் செய்வார் பின்
நேர் இளையீர் தலைக்கு ஆபரணம் வணங்குவது
வாய்க்கு ஆபரணம் மங்களா சாசனம் அருளுதல்
நாராயணனே நமக்கே -தன்னை தானே அடைவிக்கும்
க்யாதி லாப பூஜை -நாடாத மலர் நாடி- பகவத் கைங்கர்யம் செய்வதே பிறந்த பலன்
போக்ய பதார்த்தம் உண்ணோம் -ஆறு விஷயம் விட வேண்டியதை இரண்டாம் பாசுரத்தில் அருளுகிறாள்பாடி கொண்டே இருப்பது

நாள் காலே நீராடி-கர்ம யோகம்
மலர் இட்டு -வைத்து இல்லை-
செய்யதன செய்யோம்-முன்னோர்  குரவர்
மூன்று மழை அந்தணர் /கற்புடை பெண் /அரசன்
முதல் ஆழ்வார் அன்பே தகழி /வையம் தகழி போல்
வைஷ்ணவர்களுக்கு தேவதைகள்-கைங்கர்யம்-வருண தேவனுக்கு ஆணை
பிரம வித்தை செய்வது திரு நாமம் செய்யும்
ஆற்றிலே இழிவாருக்கு கை பிடிக்க பாகவதர் கூட்டி
சேஷ சயன -சௌந்தர்யா கடல்- திரு மண தூண் ஆலம்ப -ஸ்தம்ப த்வயம் போல்
இனியன தனி அருந்தேல்-அடியார் குழாம
பிள்ளாய் -அனுபவம் குறைந்தவள்-அடியார் உடன் அனுபவிக்க அறியாமல் தானே அனுபவிப்பது  ஆனை சாத்தான்-ஊர் குருவி

கீசு -சப்தம் பல
சந்த்யாவந்தனம் தர்மம் போல் தயிர் கடைவது இடைச்சிக்கு
சிறு வீடு-வீட்டின் பின் மேய்தல்
பிள்ளை -மிக்கு உள்ள பிள்ளை-விசேஷித்து -மிகவும் பிடித்த
மூன்று ஸ்ரீ வைஷ்ண லஷணம்
செவிடு
 ஊமை-பிறரை கோள் செய்வது
  சோம்பல்- வாழும் சோம்பல் -அனைத்தும் எம்பெருமான் -காம்பர தலை சிரைத்து
தன்னை காக்கும் சுமை-வஹாம் அஹம்-அவன் சுமப்பான்
திரு மந்த்ரத்தில் ஈடு பட்டு

நோற்று -பெரிய நம்பி போவார்- சித்தோ உபாய நிஷ்டர்
சு வர்க்கம்-நல்ல கோஷ்ட்டி உள்ள நித்யர் கூட
மால் பனி பால் வெள்ளம்-மூன்றும் சேர்ந்து அடுத்த பாசுரம்
பகவான் திரு உள்ளம் பற்றுவதே மோஷ ஹேது
வெள்ளி -வியாழன்-உறங்கிற்று -ஆழ்வார் காலம் -முடிந்து ஆண்டாள் காலம்
குள்ள குளிர -தகர வித்யை சொல்லும் -அவனை தேடி குணம் அனுபவிப்பது -குடைந்து –
வாய் பேசும் நங்காய்-நாத முனி போல்வார்
பங்கய கண்ணன்-நம் ஆழ்வார் சொல்லுகிறது
பங்கய கண்ணன் என்கோ பவள வாயன் என்கோ
இளம் கிளி-திரு மங்கை ஆழ்வார் போல்வார்
செல்வர் எழுந்து அருள -புன்னை மரம்-சில் என்று அலைஈன்மின் -பலி பேரம் வருவதை
நிறுத்தினார்களாம் -நம் பிள்ளை கோஷ்ட்டிக்கு இடைஞ்சல்
இல்லாத குற்றம் ஏற் இட்டு சொன்னாலும் இல்லை செய்யாமல் இருப்பதே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நானேதான் ஆயிடுக
எல்லாரும் போந்தாரோ-ஸ்ரீ வைஷ்ணவ சமாகம்

இருந்தும் நடந்தும் சேவை-
கை தல சேவை-
மங்களாசாசனம் சொரூபம் -போற்றி
பறை அர்த்தம் சிற்றம் சிறு காலையில் வைத்து
உபாய ச்வீகாரம்-கரைவைகள்-இறைவா நீ தாராய் பறை-
கைங்கர்யம் -உன் தொன்னோடு உற்றோமே -நவ வித சம்பந்தம்
உனக்கே நாம் ஆள் செய்வோம்- நம் ஆழ்வார் -பகவத் கைங்கர்யம் பேசி அடுத்து பாகவத சேஷத்வம்
ஆண்டாள் பாகவதர் -இங்கு உனக்கே -வாசி
அவன் திரு உள்ளம்-தனக்கே ஆக -உனக்கே நாம் ஆள் செய்வோம்

சங்கம் -கூட்டம்
தமிழ் -இன்பம்
மாலை- புஷ்பம்
தப்பாமே- அர்த்தம் ஒவ் ஒன்றிலும் பொதிந்து இருக்குமே
ஈர் இரண்டு -பெண்கள் ஸ்பர்சத்தால் கூடி கொண்டே இருக்குமாம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – -49/50/51/52

November 24, 2011

சூரணை -49
ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,
ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,
இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த
தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன்
சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே
ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல
கற்றனமே என்ற இவரும்
நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற
வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே
சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை
ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி
மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து
சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே
-இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற
யோக நித்தரை செய்த அனந்தரம் –

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே
ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும்
ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த -திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே
தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை -ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் -பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –

சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-
வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –
மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-
பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78-
இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8-
என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான
பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான
பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே
தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் –
சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே
புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் -ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி
சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி
மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –
வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்
பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –
இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற
-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல –
திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று
இப்படியே அவனோடு ஓதின இவரும்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி–
குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்
நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று
க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு –
ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி ..
ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை

கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்-
என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க
வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது
ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே ,
இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று
பேர் பெற்றது என்கை ..

ஆக -அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று
பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை -எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி
வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

—————————————————————

சூரணை -50-

திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது .
இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே
வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும்
நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது –
-அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் .

இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய திரு அந்தாதி
என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள்
ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..

பண்ணார் பாடல்–திருவாய்-10-7-5-என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –
பண்புரை வேதம்-திருவாய்-6-6-5–என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்
பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..

வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,
ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..
இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி
பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் –
ஆகையாலே சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-

—————————————————————

சூரணை-51-

ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..

ருக்கு சாமத்தாலே சரசமமாய்
ஸ்தோபத்தாலே பரம்புமா போலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-

அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய் ருசஸ் சாம ரச -என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ,
ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே
ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான–(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100-
திரு விருத்தம் நூறு பாட்டும்-
இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே
சாம வேத ஸ்தாநேயாய் -அமர் சுவை ஆயிரம்–திருவாய்-1-3-11-என்கிற படியே
சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை ..

—————————————————————

சூரணை-52-

இனி சாமம் தான் அநேக விதம் ஆகையாலே ,இது
எந்த சாமத்தொடு ஒக்கும் என அருளி செய்கிறார் மேல் ..

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து
யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே
வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி
சரம கதி முடிவாக
தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி
மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே
இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து —
அதாவது -சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே–திருச்சந்த -14- –
திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் – பெரிய திருமொழி –2-2-7-
சாமவேதோஸ்மி-ஸ்ரீ கீதை –10-22- -என்று
அபியுக்தரும் ,அவன் தானும் சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல்
சாந்தோகன் ,பவ்ழியன்,ஐம் தழல் ஓம்பு தைத்ரியன் ,சாம வேதி –பெரிய திருமொழி-5-5-9-
என்ற இடத்தில் -சாம வேதி -என்று மேல் சொல்லா நிற்க –சந்தோகன் -என்று முதலில் பிரித்தது என்கை –
இது நினைவன்றாகில் -சாம வேதி -என்றதுக்குள்ளே
இந்த சாமமும் அந்தர் பவிக்குமாய் இருக்க இங்கன் பிரித்து சொல்ல வேண்டா விறே- என்ற கருத்து-

யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே–
அதாவது -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை திருவாய்-2-3-7–என்று
யாழ் விஷயமாக அப்யசிக்க படுவதான சாஸ்திரத்தில் சொன்ன
லஷணத்தை உடைய நரம்பிலே பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி
கான ஸ்வரூபம் போலே இனியன் ஆனவனை -கான சாமான்யம் ஆகாமல்
-யாழ் நரம்பில் பெற்ற பாலை யாகி-(பாலையாகிய கான ஸ்வரூபி )-பெரிய திருமொழி-7-3-7–என்று
அந்த சாந்தோக சாமத்தின் நிறமான-பாலையாழ் என்கிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே என்கை ..
இப்போது இது சொல்லிற்று –
சாம வேத கீதன் -என்கிற இடத்தில் வேதத்தோடு அன்றிக்கே , அதன் கீதத்தோடு சாமானாதி கரிக்கையாலே
அந்த கீதமும் சாந்தோக சாம வேதம் என்று அறிவிக்கைகாக —

வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற —
அதாவது –இப்படி விசேஷிக்கையாலே ,பச்வதி கரண ந்யாயத்தாலே ,
சாம வேத கீதன்–சாமி–சாம வேதோச்மி –என்று சொன்ன சாமான்யமான இஸ் சாம சப்தமும் ,
கீத சப்தமும் ,கீழ் சொன்ன சந்தோக தத் கீதங்கள் ஆகிற விசேஷத்தில் பர்யவசிக்கும் இறே –
ஆன பின்பு சாந்தோக சாமமே இத்தால் சொல்லப் பட்டது
ஆகையாலே இப்படி அப்யுக்தரும் தானும் தன்னோடு சாமானாதி கரிக்கும் படி
உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரீயணமான சாந்தோக சாமம் ஈது என்னும் இடம் தோன்றும் படியாக என்கை ..

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி —
அதாவது –ஒரு சாமம் தனக்கே ,பிரஸ்தாபம், உத்கீதம் ,ப்ரதீஹாரம் ,உபத்ரவம் ,நிதநம்
என்று அஞ்சு பாகங்கள் உண்டாகையாலே ,அவற்றுக்குள் ஒன்றாக இருக்கச் செய்தே ,
சாம்ன உத்கீதோ ரச –சாந்தோக்யம்- என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப் படுமதாய் ,பிரணவ பூர்வமாக ,
கானம் பண்ணப் படுமதாய் ,இருப்பது ஓன்று இறே உத்கீதம் –
ஆகையால் அந்த உத்கீத அவயவமான பிரணவத்தை ,
ஓம் இத் ஏதத அஷரம் உத்கீதம் உபாசீத -என்று சாந்தோக்யம் தன்னில்
பிரதமத்தில் எடுத்தால் போலே ,இங்கும் பிரதமத்திலே எடுக்கிற அளவில் ,ஓம் என்று
சம்ஹிதா காரேன வெடுத்தால் அதிகிரிதா அதிகாரமாம் என்று அசம்ஹிதா காரேன
அஷர த்ரயத்தையும் பிரதம த்வதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்க செய்தே ,
பிரதம அஷரமான அ காரம் முதலாக எடாதே உ காரம் முதலாக எடுக்கையாலே
அஷர க்ரமத்தை மாறாடி என்கை-

இப்படி உ காரம் முதலாக எடுத்ததுக்கு பிரயோஜனம் அந்த
சாந்தோக்ய ரசமான உத் கீதத்துக்கு நோக்கான உத் -என்கிற
திரு நாமம் இதற்க்கு உள்ளுறை யானமை தோன்ற உ காராதியாக
எடுத்து -உயர்ந்தே -10-10-11–என்று தகாராந்தமாக முடிக்கை ….
இது தான் மேலில் சூர்ணையில் வியக்தம் ..
ஆக இப்படி அஷர த்ரய ரூபேண ,பிரணவத்தை பிரதமத்திலே கீர்த்தியா
நிற்கச் செய்தே ஏதத் அபிப்ரா யேன அஷர க்ரமத்தை மாறாடி-

சரம கதி முடிவாக —
அதாவது -சாந்தோக்ய மத்யே சொன்ன ,அர்சிராதியான சரம கதியை –
சூழ் விசும்பு அணி முகிலிலே-10-9-1- -பேசுகையாலே சரம கதியை முடிவாக கொண்டு என்கை ..
இத்தை சரம கதி என்கிறது -கர்ப்ப யாம்ய தூமாதிகள் போல் அன்றிக்கே எல்லை நிலமான முக்தி மார்க்கம் என்கையாலே —

தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி —
அதாவது -அந்த சாமம் -ஏதத் சாம காயன்னாச்தே–தைத்ரியம்–என்கிற படியே
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக -ஹாவு ஹாவு -இத்யாதி
படியே சாம கானம் பண்ணி அஹம் அந்நாதா -என்று களிக்கும் நித்ய முக்தரான
தேவர்களுக்கு போக்யமாம் ஆம் போலே -தொண்டர்க்கு அமுது உண்ண -9-4-9–என்கிற படியே
இதுவும் பகவத் அனுபவ சபலர்க்கு போக்யமாம் படி ஆக்கி என்கை ..

மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்னப் பாடுகையாலே —
அதாவது –
சர்வேப்யோபிஹி வேதேப்ய சாமகோஷோ மகாநபூத் அன்வ கோஷாய
தத்யர்த்தம் தேன ப்ரஹ்மாண்ட மண்டப -என்றும்
பாடு நல் வேத ஒலி -திருவாய்-5-9-3–என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தை உடைத்தான
சாம வேதம் போலே ,பெரிய திரு அத்யயனம் என்னப் பாடுகையாலே என்கை ..
இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..

ஆக இப்படி கீழ் சொன்ன ஆகாரங்களை கொண்டு ,இத்தை
சாந்தோக சாமத்தில் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்துக்கு
சமம் என்று அபியுக்தர்கள் சொல்லுவார்கள் என்கை-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-