ஸ்ரீ வசன பூஷணத்தில் -226 -239 -சூர்ணிகைகளில் அருளிச் செய்தவற்றைப் போலவே இவையும் –
சூரணை -85-
இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன
பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு
இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே-ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார்
மேல் ஒரு சூரணையாலே..
1-ம்லேச்சனும் பக்தன் ஆனால்
சதுர் வேதிகள் அனுவர்த்திக்க
அறிவு கொடுத்து -குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
2-விச்வாமித்ர ,விஷ்ணு சித்த ,துளஸீ பிரித்யரோடே
உள் கலந்து -தொழு குலமானவன் ,
நிலையார் பாடலாலே ,
ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும்
(துளஸீ ப்ருத்யர் -துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் /
தொழு குலமானவர்-நம்பாடுவான் / ப்ராஹ்மணன் -ஸோம சர்மா )
3-கீழ் மகன் தலை மகனுக்கு சம சகாவாய்
தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு
பின் பிறந்தாரை சோதித்து
தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி
ஏக குலம் ஆனமையும்
4-தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும் ,
(தூது மொழிந்தவருடைய சம்யக் போஜனமும் –
தூது நடந்தவருடைய சகுண போஜனமும் —
தூது வந்தவருடைய ஸஹ போஜனமும் )
5-ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார் இருவருக்கு
தர்ம ஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும் –
(பெரும்புலியூர் ஸ்வாமிகள் -அங்குள்ள பிராமணர்கள் -யாகத்தில் திருமழிசைப்பிரானைக் கௌரவித்தார்கள் –
திருவையாறு மேற்கே ஒரு மேலே தொலைவில் உள்ள பெரும்புலியூர் )
6-ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள்
சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த
புத்ர க்ருத்யமும் –
7-புஷ்ப த்யாக போக மண்டபங்களில்
பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான
அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும்
அனுவர்தித்த க்ரமும்
8-யாக அனுயாக உத்தர வீதிகளில்
காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின
வ்ருத்தாசாரமும்
அறிவார்க்கு இறே
ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது ..
ம்லேச்சனும் பக்தன் ஆனால்
அதாவது –
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே – என்கிற படியே
-ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –
அஷ்ட விதையாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-
சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –
அதாவது –
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –
பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே –
சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள்
அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் –
அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-
குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
அதாவது –
ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-
மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –
( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே
குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-
பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று
அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –
அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –
அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி
பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் –
அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே –)
விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்
அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –
கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,
அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே –
பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து –
(நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு )
வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே
ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த
ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )
நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –
அதாவது –
சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி
ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக –
யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் –
பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம்
(உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று
நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே –
ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத
யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக
வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே –
அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்
கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் –
அதாவது –
நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) –
ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி ,
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-
(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும்
உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே –
தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் )
வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்-
(ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-
தம்பிக்கு முன் பிறந்து –
அதாவது –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1-
என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-
வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –
அதாவது –
இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க –
அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று ,
கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –
கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம்
தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண
இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-
ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )
(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான் -கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-
தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –
அதாவது-
ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான
பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர -அயோத்யா -86-1–என்கிற படியே
ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே
ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,
( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு
ஏக குலம் ஆனபடியும் –
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும்
அதாவது –
முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை
ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி
ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் )
குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம்
விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும்
பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
பண்ணின சகுண போஜனமும் ,
தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் )
உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் –
என்று திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2-
என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் .
ஒரு பிறவியிலே -இத்யாதி -அதாவது –
யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே
ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அகர பூஜை கொடுத்தமையும் –
ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே
ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள்
தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-
ஐவரில் இத்யாதி -அதாவது –
பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –
ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –
(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்
ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )
ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –
பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-
புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே
பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு
அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-
துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற
அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –
வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய்
பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை
வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-
தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –
யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-
அதாவது –
யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்
பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –
உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்
ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்
அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..
இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் –
உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் –
அவர்களுக்கு ஞான பிரதராய் –
ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும்
பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,
அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் –
அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –
பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும்
பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து ..
(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )
———————————
சூரணை-86-
ஜென்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது -என்ற இடத்தில் -தத் உத்கர்ஷ அபகர்ஷங்களுக்கு
உடலாக விவஷிதமானவற்றை -மேல் இரண்டு வாக்யத்தாலே வெளி இடுகிறார் –
அதில் பிரதமத்தில் அபக்ருஷ்ட ஜென்மம் இன்னது என்று தோற்றும்படி பகவத்
ஞான ரஹிதமான வர்ணாதிகளின் ஹேயத்வத்தை ச ப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார்-
அஜ்ஞர் பிரமிக்கிற
வர்ண
ஆஸ்ரம
வித்ய
வ்ருத்தங்களை
கர்த்தப ஜென்மம்
ஸ்வபசா தமம்
சில்ப நைபுணம்
பஸ்மாஹூதி
சவ விதவா அலங்காரம்
என்று கழிப்பர்கள்-
(அஜ்ஞர் பிரமிக்கிற வர்ணத்தைக் கர்த்தப ஜென்மம்-கழுதைப்பிறப்பு -என்றும் –
ஆஸ்ரமத்தை ஸ்வபசா தமம்-நாய் இறைச்சி தின்னும் நீசனை விட தாழ்ந்தது -என்றும்
வித்யயையைச் சில்ப நைபுணம்-செய் தொழில் திறன் -செருப்பு குத்த கற்றவோபாதி -என்றும்
வ்ருத்தத்தைப் பஸ்மாஹூதி–சாம்பலில் இட்ட ஆஹுதி -என்றும்
கொண்டு
சவ அலங்காரம் என்றும் –
விதவா அலங்காரம்-என்றும் கழிப்பர்கள்-
பகவத் சம்பந்தம் இல்லாத வர்ணமும் -ஆஸ்ரமும் -ஞானமும் -அனுஷ்டானமும் -தள்ளத்தக்கவை -என்றதாயிற்று )
அதாவது –
பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து –
தத் அனுகுணமாக -ஹேய உபாதேய விபாகம் பண்ணத் தக்க ஞானம் இல்லாதவர்கள் –
பகவத் அந்வய ரஹித தயா அபக்ருஷ்டராய் இருக்க –
உத்தம வர்ணம் -உத்தம ஆஸ்ரமம் ,சத் விதியை, சத் வ்ருத்தம்-என்று
உத்க்ருஷ்டமாக பிரமிக்கிற வர்ணாதியான அத்தை
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி
வேத பரா பராக்ராந்தஸ் ஸ்வை ப்ராஹ்மண கர்தப -என்று
நாலு வேதங்களையும் அதிகரித்து வைத்தே –
சர்வே வேதா யத்பதம் ஆமனந்தி–கடவல்லி -என்றும்
வேதைஸ்ச – சர்வைர் அஹமேவ வேதே –ஸ்ரீ கீதை -15-15-என்கிற படியே
சகல வேத பிரதி பாத்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனை அறியாதவன் குங்குமம் சுமந்த கழுதை போல் தான் பரித்து-சுமந்து
கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமண கழுதை என்றும் –
ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக
விஷ்ணு பக்தி விஹீனஸ்து யதிஸ்ஸ ச்வபச அதமா -என்று -யதிஸ்ஸ-சரம ஆஸ்ரயமி ஆகிலும்
பகவத் பக்தி ஹீனன் ஆனவன் ஸ்வபசனில் காட்டில் தண்ணியன் என்றும் –
தத் கர்ம யத் ந பந்தாப சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயா அபரம் கர்ம வித்யான்யா சில்பனை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-41 -என்று
பகவத் பரத்ய மோஷார்த்தை ஆனதுவே வித்யை –அல்லாதவை செருப்பு குத்த கற்றவோபாதி என்றும்-
ஆம்னா யாப்யசநான் யரண்யருதிதம் வேத விரதான் அன்வஹம் மேத்ஸ் சேத பலானி
பூர்த்த விதயஸ் சர்வே ஹுதம் பஸ்மினி தீர்த்தா நாம் அவகாஹாநாநி ச கஜஸ்நானம்
வினா யத்பத த்வந்த்வாம் போருஹ சம்ஸ்ம்ருதிர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்தமாலை –25-என்று
பகவத் ஸ்ம்ருதி இல்லாதவர்கள் உடைய கர்ம அனுஷ்டானம் –
பஸ்மாஹூதிவத் நிஷ் பிரயோஜனம் என்றும் –
யச்யாகிலாமி வஹபிஸ் ஸூமங்கலை வாசோவிமிச்ரா குண கர்ம ஜன்மபி
பிரணாந்தி சும்பந்தி புனந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாஸ் சவ சோபநா மத–ஸ்ரீ பாகவதம் -10-18-12—
விஷ்ணு பக்தி விஹீனச்ய வேதஸ் சாஸ்திரம் ஜெபஸ் தப அப்ராணாஸ் யேவ
தேஹஸ்ய மண்டனம் லோக ரஞ்சனம்–என்று
பகவத் அந்வய ரஹிதோக்திகளும்
பகவத் பக்தி ஹீனனுடைய வித்யா வருத்தங்களும் ஸ்வ அலங்கார கல்பம் என்றும் –
பிராதுர் பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவாஸ் ததீய ஜாத்ய வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீமத் புவன த்ராண தோன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ- என்று
பகவத் அநன்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம் –
பகவத் சம்பந்த ஞானம் ரூப சௌமாங்கல்ய அபாவத்தாலே விதவ அலங்கார சமம் என்றும்
ஞானிகள் ஆனவர்கள் இகழ்வார்கள் என்கை ..
ஆக -இப்படி பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற
வர்ண ஆஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்கையாலே –
கீழ் அப்க்ருஷ்ட ஜென்மதயா விவஷிதமானது இன்னது என்னும் இடம்
அறிவித்தார் ஆய்த்து –
பிரதம பிரகரணம் முற்றிற்று-
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply