ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்- சூர்ணிகை -87/88/89/90..

சூரணை -87-

இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம்
என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள்
ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் ..

அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில்
ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும்
பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-

(அணையப் பெறுகிற ஊரப் பெறுகிற புணையப் பெறுகிற திர்யக்கு ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்கள்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் – பரிக்ரஹித்தார்கள்-
அடி படப் பெறுகிற- பொடி படப் பெறுகிற-பர்வதத்திலே ஏதேனுமாகப் பெறுகிற –பவனங்களில் ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரியோர்—
ஸ்ரீ ஸூகப் ப்ரஹ்ம ரிஷி/ ஸ்ரீ உத்தவர் /ஸ்ரீ குலசேகர பெருமாள் / ஸ்ரீ ஆளவந்தார் -பிரார்த்திப்பர்கள்-)

அதாவது–
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது–திருவாய் -2-8-1 -என்று ஸ்ரீ பிராட்டி
திரு மேனி ஸ்பர்சத்தோடு ஒக்க விகல்பிக்கலாம் படி -அத்யந்த ஸூக ஸ்பர்சமாய் –
சைத்ய மார்தவ ஸௌரப்யங்களை பிரகிருதியாக உடைத்தாய் கொண்டு –
ஸ்ரீயபதியானவன் கண் வளர்ந்து அருளுகைக்கு பாங்காய் இருக்கும்
ஸ்ரீ திரு அரவணை யாயும் –

ஊரும் புள் கொடியும் அஃதே –திருவாய் –10-2-3-என்கிற படியே
ஆர்த்த ரஷணத்துக்கும் அனுகூலரை அனுபவிப்பக்கைக்கும் -தன் உகப்பு தனக்குமாக –
அவன் பல காலம் மேற் கொண்டு நடத்துகைக்கு வாகனமான
ஸ்ரீ கருள புள்ளாயும்-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் -திருவாய் -1-9-7-
புணைந்த தண் அம் துழாய் –என்கிற படியே -அவன் ஆதரித்து ( கேசவ பிரியா அன்றோ )சாத்துகைக்கு அர்ஹமான
திருத் துழாயாயும் இருக்கும்-
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை-

பெரு மக்கள் உள்ளவர் –திருவாய் -3-7-5-என்கிற படி -அஹ்ருத சஹஜ (திருட முடியாத -கூடவே உள்ள) தாஸ்யர் ஆகையாலே –
அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத் -தைத்ரியம் –என்பது –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது இது –தைத்ரியம் – -என்பதாக வேண்டாதபடி என்றும் ஒக்க
உளராய் இருக்கிற மகாத்மாக்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் -பகவத் கைங்கர்ய இச்சையாலே
பரிக்ரஹித்தார்கள் –

பத்யு பிரஜானாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே அஹம்
கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனா தடே – என்று பிராஜாபதி பசுபதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன் –
பூத்த நீள் கடம்பேறி –நாச்சியார் -4-4–என்றும் –
பூம் குருந்து ஏறி இருத்தி –நாச்சியார் -3-3–என்றும் சொல்லுகிற படி
யமுனை கரையில் அவன் திரு அடிகளால் மிதித்து ஏறின கடம்பாதல் -குருந்தாதல் ஆக வேணும் என்றும் –

ஆஸாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்ம லதெவ்ஷதீனாம் யா துஸ்த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜூர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்–ஸ்ரீ பாகவதம் -10-48-61—என்று
ஸ்ருதிகளால் தேடப் படும் ஸ்ரீ கிருஷ்ணன் போன வழியை
ஸ்வ ஜனாதிகளும் அதிக்ரமித்து -யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள் -அவர்கள் உடைய பாத ரேணுவை
பஜித்து இருப்பனவாய் பிருந்தாவனத்தில் இருக்கும் சில செடிகள் கொடிகள் ஒவ்ஷதிகளில் வைத்து கொண்டு –
ஏதேனும் ஒன்றாகவேனாக வேணும் என்றும் -( ஸ்ரீ உத்தவர் / ஸ்ரீ ஸூகர் பிரார்த்தனை அடி பட -பொடி பட )

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே -ஸ்ரீ பெருமாள் -4-1-
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் –4-2-
செண்மகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே —ஸ்ரீ பெருமாள் -4-4-
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் -4-5-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –என்று
ஸ்ரீ திருமலை ஆழ்வாரோட்டை சம்பந்தம் உடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களில்
ஏதேனும் ஒன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும் –ஸ்ரீ பெருமாள் -4-10-இத்தகையப் பிறப்பையும் –
(பொன்மலை – பர்வதங்களில் ஏதேனுமாக -)

தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று
தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி –
கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும் -( பவனங்களில் ஏதேனுமாக -)

இப்படி
அவனடி படவும்-
அவனை அணைந்தார் அடியில் பொடி படவும் –
அவன் உகந்து அருளின நிலத்தே ஆதல் ,
அவன் அடியார் அபிமானம் உள்ள நிலத்திலே ஆதல் ,
வர்திக்கவும் ஈடாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை –
பேராளன் பேரோதும் பெரியாரான–ஸ்ரீ பெரிய திருமொழி -7-4-4- -ஸ்ரீ ஸுக பிரம ரிஷி ,ஸ்ரீ உத்தவர் ,ஸ்ரீ குலசேகர பெருமாள் ,
ஸ்ரீ பெரிய முதலியார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் என்ற படி ..

இத்தால் -வாசிகை பஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை
கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர –மனு ஸ்ம்ருதி -12-9- -என்று
இந்த விபூதியிலே -திர்யக், ஸ்தாவர ஜன்மங்கள் -வாசிக காயிக பாப பலங்களாக சாஸ்திரம் சொல்லா நிற்க-
அப்படி இன்றிக்கே
ஸ்ரீ பகவத் விநியோக அர்ஹமாக இந்த ஜன்மங்களை நித்ய ஸூரிகள் ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்வார்கள் என்றும் –
தாஸ்ய ரசஜ்ஞரான முமுஷுக்கள் தத் சம்பந்த -ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்திப்பார்கள் என்றும்
சொல்லுகையாலே -தாஸ்ய குண ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்றது ஆய்த்து–

———————————————

சூரணை -88-

பகவத் விநியோஹ அர்ஹம் ஆகையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
நித்ய ஸூரிகள் பரிக்ரஹிக்கைக்கு பிராப்தம் –
அங்கன் இன்றிக்கே
முமுஷுக்கள் ஆன இவர்கள் –
பகவத் ,பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்தார்கள் ஆகிலும்
உத்க்ருஷ்டதயா சாஸ்திர சித்தமான வர்ணத்தை இப்படிக் கழிக்கிறது என் என்ன
அருளி செய்கிறார்-

சேஷத்வ பஹிர்பூத
ஞான ஆனந்த மயனையும்
சஹியாதார்
த்யாஜ்ய உபாதியை
ஆதரியார்களே-

(த்யாஜ்ய உபாதியை-தள்ளத்தக்க-கர்மம் அடியாக -இடையில் வந்த வர்ணத்தை -ஆதரிக்க மாட்டார்களே )

அதாவது –
ந தேஹம் ந பிராணான் நச ஸுகம் அசேஷ அபிலஷிதம் நச ஆத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத ஷணமபி
சஹே யாது சததா வினாசம் தத் சத்யம் மதுமதன !விக்ஜ்ஞாபனமிதம் –ஸ்தோத்ர ரத்னம் -56–என்று
தேவரீர் உடைய சேஷத்வதுக்கு புறம்பான தேஹாதிகள் ஒன்றினையும் ஷணமும் சகியேன் –
அவ்வளவு அன்றியே –
ஞான ஆனந்த மயமான ஆத்ம வஸ்துவையும் சகியேன் –அது சததாவாக விநாசத்தை அடைவதாக —
இந்த விண்ணப்பம் அஹ்ருதயம் அன்று -சத்யம்-
திரு முன்னே பொய் சொன்னேன் ஆகில் தேவருக்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்கையாலே
சேஷத்வத்துக்கு புறம்பான போது –
ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா-என்று
ஞான ஆனந்த மயத்வாலே ஸ்லாக்யமாய் இருக்கும் ஆத்மாவையும் சகியாதவர்கள் –
சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேது ஆகையால் த்யாஜ்யமாய் -கர்ம நிபந்தனம் ஆகையாலே
ஒவ்பாதிகமாய் இருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோ என்கை–

ஒவ்பாதிகமான இத்தை உபாதி என்றது கார்ய காரண உபசாரம்-

—————————————-

சூரணை -89-

வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம் தன்னை -உதாரண முகேன தெரிவிக்கிறார் மேல் –

இதின் ஒவ்பாதிகத்வம்
ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன்
நீசனாக்குவித்த ராஜாவை
வாரே உறுப்பாக யஜிப்பித்து
ஸ்வர்கம் ஏற்றின போதே தெரியும்-

(இதின் ஒவ்பாதிகத்வம்-வந்தேறி -ஒரு ராஜா-விசுவாமித்திரர் – தன்னை மறை முனிவன் ஆக்கினவன்-ப்ரஹ்ம ரிஷி யாகும்படி
செய்த வசிஷ்ட பகவான் -நீசனாக்குவித்த ராஜாவை-வசிஷ்டராலே நீசனாகும் படி சபிக்கப்பட்ட திரிசங்கு என்னும் அரசன் –
வாரே உறுப்பாக யஜிப்பித்து-தோலாகிய வார் -வேள்விக்கு அங்கமான உறுப்புத் தோலாக-ஸ்வர்கம் ஏற்றின போதே
வர்ணம் வந்தேறி ஸ்வாபாவிகம் இல்லை என்று தெரியும்-
சரு மாத்தின கதை -ஜமதக்கினி -பரசுராமர் -பிறப்பால் ப்ராஹ்மணர் -க்ஷத்ரியர் ஆனார் )

அதாவது
இவ் வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம்
குசிக வம்சனாய் ராஜாவான விஸ்வாமித்திரன் ப்ரஹ்ம ரிஷித்வ காமனாய்–நெடும் காலம் தபசு பண்ணின தன்னை –
மந்திரம் கொள் மறை முனிவன் –பெருமாள் -10-2- என்னும் படி
ப்ரஹ்ம ரிஷி ஆக்கின சக்திமான வசிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் -தன்னை அவ மதி பண்ணிப்
போனது கொண்டு ஸ்வ புத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பில் இட்ட யக்ஜோபவீதமே வாராம் படி -சண்டாளன் ஆக்குவித்த –
இஷ்வாகு வம்சனாய் உள்ள திரி சங்கு என்கிற ராஜாவை -அந்த வார் தான் யஜ்ஞாங்கமான உருப்பு தோலாகக் கொண்டு
தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க ஆரோகணம் பண்ணுவித்த போது ஸு ஸ்பஷ்டம் என்கை ..

இத்தால் ஒரு ஷத்ரியன் ஸூஹ்ருத விசேஷத்தால் -அந்த சரீரம் தன்னோடே ப்ரஹ்ம ரிஷி ஆகையாலும் –
ஒரு ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரம் தன்னோடே சண்டாளன் ஆகையாலும் ,
ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்ம ரிஷி ஆனவன் –
தான் ப்ரஹ்ம ரிஷி ஆவதற்கு முன்பே ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை
அந்த வேஷம் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்கத்தில் ஏற்றுகையாலும்
வர்ணத்தின் கர்ம ஒவ்பாதிகத்வம் எல்லோருக்கும் தோன்றும் என்றது ஆய்த்து-

—————————————-

சூரணை -90-

இனி மேல் ப்ராகரணிகமாய் வருகிற பிரமாத்ரு வைபவ ஸ்தாபனத்துக்கு
உறுப்பாக பிரமாண பிரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும்
த்யாஜ்ய உபதேயங்கள் உண்டு என்னும் இடத்தை விபஜித்து சொல்லி –
இவ் விசேஷம் அறிவார் பெரும் பேற்றையும் -இது அறியாமல் பாகவத
ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அதஹ்பதிக்கும் படியும் அறிவிக்கிறார் —

மா வுருவில் கள்ள வேடம்
திருந்து வேத மலமான மானிடம் பாடல்
சர்வ வர்ண சூத்ரத்வம்
காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம்
தென்னுரையில் ஹரி கீர்த்தி
ஸ்வபசரில் பத்தி பாசனுமும்
அறிவார் ஆரார் அமரர் என்ன வேற (ஏற)
அறியாதார் சாதி அந்தணர்கள் ஏலும் தகர விழுவர்-

அதாவது
எம்மா உருவும் வேண்டும் ஆற்றாலாவாய் எழில் ஏறே –திருவாய் -5-8-2-என்கிற படியே எல்லா ரூபமும்
அப்ராக்ருதம் ஆகையாலே ஸ்லாக்யமுமாய் -இச்சா க்ருஹீதமாயுமாய் இருக்கும்
பகவத அவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு -வேத அப்ராமாண்யத்தை உபபாதித்து –
வைதிக ருசியை குலைக்கைகாக –
யதாஹி சோரஸ் சத்தாஹி புத்த – அயோத்யா -109-33-என்கிற படியே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் –திருவாய் -5-10-4-என்னும் படி
பரிக்ரஹித்த புத்த முனியான விக்ரஹமும் –

பகவத் ஸ்வரூபாதிகளை யாதாவாக பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்த வேதத்தில் –
ந ஸ்மர்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்கிற படியே
ஸ்மரிக்கவும் ஆகாத படி மல அம்சமான -மானிடம் பாடல் என்னாவது–திருவாய் -3-9-3 -என்கிற படி
ஷேத்ரஜ்ஞரை பிரசம்சிக்கிற வாக்யங்களும் —

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா சர்வ வர்ணேஷு தே
சூத்ரா யேஹ்ய பக்தா ஜனார்தனா –பாரதம் ஆஸ்வ -118-32-என்று
எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் சூத்ரத்வம் ஆகிற –

பிரமேயத்திலும் -பிரமாணத்திலும் -பிரமாதாக்களிலும் உண்டான த்யாஜ்ய அம்சங்களும்-

காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் -நாச்சியார் -12-8-என்று ஊர் மனையில் வஸியாமல் –
பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வர்திக்கையாலே –
காடு வாழ் சாதி -என்கிற கோப ஜாதியில் சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கிற
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய -காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணர் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் -3-3-1-
என்று தாம் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டும் படி பசு மேய்த்து வருகிற போதை
அலங்காரத்தோடு கூடி இருக்கிற விக்கிரஹமும்-

தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திரு மடல் -6-என்கிற படி தஷிண திக் வர்தியானது கொண்டு –
தென்னுரை என்று சொல்லப் படுகிற திராவிட பாஷை யான பிரபந்தங்களில் –
ஹரி கீர்த்திம் வினை வான்யத் ப்ராஹ்மணோ நரோத்தம பாஷா காநம் ந கர்த்தவ்யம் -காதவ்யம்-
தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் –ஸ்ரீ மத்ஸ்ய புராணம் – இத்யாதிப் படியே பகவத் பிரதிபாதாக மானவையும்-

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதாக –என்கிற படி ஸ்வபசரில்
பெறற்கு அரிய நின் பாத பத்தி யான பாசனம் –திருச்சந்த -100–என்று ஸ்வ யத்னத்தாலே,
பெறற்கு அரிதாய் உள்ள பகவத் பாத கமல பக்தி ஆகிற தனம் உடையார்களும் ஆகிற –

பிரேமயாதி த்ரயத்திலும் உபாதேய அம்சங்களும் ஆன இவ் விபாகம் அறிவார் –
நீரார் முகில் வண்ணன் பேரார் ஓதுவார் ஆரார் அமரர்—திருவாய் -10-5-8-என்கிற படியே –
ஏதேனும் ஜென்ம வருத்தங்களை உடையேரே ஆகிலும் -ஸூரி சமர் என்னும் படி ஸ்லாக்க்கியராய் –
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –திருவாய் -3-8-11-என்கிற படியே
அத்யுஜ்வலமான பரம பதத்தை ப்ராபிக்க —

இப் பிரேமயாதி த்ரயத்திலும் ,கீழ் சொன்ன வாசி அறியாதாராய் கொண்டு -பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணுவார் –
அமர வோரங்க மாறும்—திருமாலை -43-என்கிற பாட்டில்
சாங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்க்களுமாய் இருந்தார் ஆகிலும்
தேவரீர் திரு அடிகளின் சம்பத்- ஏக நிரூபணியரான ஸ்ரீ வைஷ்ணவர்களை – ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பர் ஆகில்
காலாந்திர தேசாந்தர அன்றிக்கே
அப்போதே அவ்விடம் தன்னிலே அவர்கள் தங்கள் சண்டாளர்கள் ஆவர்கள் என்கிற படி
உத்க்ருஷ்ட ஜென்மாக்களே ஆகிலும் கர்ம சண்டாளராய் இனி ஒரு காலமும் கரை ஏற
யோக்யதை இல்லை என்னும் படி அதபதிப்பர்கள் என்கை
அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ரூந் ஹீன ஜென்மன
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்–ப்ரஹ்மாண்ட புராணம் -என்னக் கடவதிறே-

ஆக
சூரணை 75–வீட்டின்ப இத்யாதி வாக்கியம் தொடங்கி,
சூரணை -84 -நிமக்னரை உயர்த்த தாழ இழிந்த்தார் -என்னும் அளவும் -ஆழ்வாருடைய வைபவத்தை பிரதிபாதித்து –
தத் ஸ்தாபன அர்த்தமாக -மிலேசனும் பக்தன் ஆனால் -என்று தொடங்கி –
மேல் எல்லாம் சாமான்யேன பாகவத வைபவத்தை விஸ்தரேண பிரகாசிப்பித்தது
உபக்ரம வாக்கியத்தில் போலே – பிரமாண பிரமேயங்கள் உடனே சேர்த்து பிரமாத்ரு வைபவத்தை நிகமித்தார் ஆய்த்து –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: