சூரணை -81-
எல்லாம் செய்தாலும் ,பூர்வ வர்ணங்களில் பிறவி போலே ,சதுர்த்த வர்ணத்தில் பிறவி
தேஜஸ்கரம் அன்றே என்ன –
தாஸ்ய ரசஞ்ஞற்கு இது தேஜஸ்கரம் என்னும் அத்தை திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-
தேவத்மும் நிந்தை யானவனுக்கு
ஒளி வரும் ஜனிகள் போலே
ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி
உள் நாட்டு தேசு இறே-
(தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஸ்ரீ ராமனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு / உள் நாட்டு தேசு-பரமபத தேஜஸ் )
அதாவது
ராவண வத அநந்தரம் ப்ரஹ்மாதிகள்-பவான் நாராயணோ தேவோ–யுத்த –120–13-என்றது
அசஹ்யமாய் -ஆத்மானம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – யுத்த -120-11-என்கையாலும் ,
கோவர்தந உத்தரண அநந்தரம் அந்த அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப் பட்ட கோபர்
பாலத் வஞ்ச அதி வீர்யஞ்ச ஜன்மச அஸ்மாஸ்வ அசோபனம்
சிந்தய மாநமமே யாத்மன் சங்காம் கிருஷ்ண பிரயச்சதி
தேவோ வா தானவோ வா த்வம் யஷோ கந்தர்வ ஏவ வா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-7–என்று சங்கித்து சொல்ல
ஷணம் பூத்வா த்வசவ் தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 9–என்கிற படியே
அது அசஹ்யமாம் என்னும் இடம் தோன்ற சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்னை –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாத நைவ சிந்தய மதோன்யதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12- -என்கையாலும்
தேவர்க்கும் தேவனான தான், லோக ரஷண அர்த்தமாக
மனுஷ்ய சஜாதீயனாக அவதரித்த அளவில்
தேவனாக சொல்லுகையும் நிந்தையாகும் படி
புரையறப் பிறக்கும் சீலாதிகனான சர்வேஸ்வரனுக்கு-
சவு ஸ்ரேயான் பவதி ஜாயமான–யஜுர் வேதம் -3-6-3- -என்கிற படியே
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய் -1-3-2 –என்று தாழ விழுந்த தனையும்
கல்யாண குணங்கள் ஒளி பெற்ற வரும் ஜென்மங்கள் போலே
மாஸ்ம பூதபி மே ஜன்ம சதுர் முகாத்மான–ஸ்தோத்ர ரத்னம் -35–என்று பிராமணியத்துக்கு எல்லை நிலமான
பிரம்மாவாய் பிறக்கையும்
சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேது வாகையாலே
ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி –
தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்- 9-2–என்ற திரு வாய் மொழியில்
பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்
உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே
தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு -உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே -பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே
நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில்
வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ்கரம் என்று கருத்து –
————————————————————-
சூரணை -82-
இனி இவர் அவதாரத்தின் பரோ உபகாரகத்வத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் ..
ஜனக தசரத வசுதேவ
குலங்களுக்கு
மூத்த பெண்ணும்
நடுவில் பிள்ளையும்
கடைக் குட்டியும் போலே
இவரும் பிறந்து
புகழும் ஆக்கமும் ஆக்கி
அம் சிறையும் அறுத்தார்-
( ஜனக குலத்துக்கு மூத்த பெண் பிறந்து புகழை ஆக்கினால் போலேயும்
தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளை -ஸ்ரீ பரதாழ்வான் -பிறந்து ஆக்கத்தை ஆக்கினால் போலேயும்
வசுதேவ குலத்துக்கு கடைக்குட்டி பிறந்து அம் சிறை அறுத்தால் போலேயும்
இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் )
அதாவது
ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து –
ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மே ஸூதா
சீதா பர்த்தார மாசாத்ய ராமம் தசரதாத் மஜம்–பால -67-21- -என்கிற படியே-
தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும்-
தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரஹா அயோத்யா –82-12–இத்யாதியாலே
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்கிற குல மரியாதையை
நடத்தின அளவு அன்றிக்கே –
ஜடிலம் சீர வசனம் ப்ராஞ்சலீம் பதிதம் புவி–அயோத்யா -100-1-என்றும்
பங்கதிக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷிதே –யுத்த –127-5-என்றும் சொல்லுகிற படி
ஜ்யேஷ்டரான பெருமாள் உடைய விஸ்லேஷத்தில் ,சடை புனைந்து
வற்கலை உடுத்தி ,கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து ,
குலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை உண்டாக்கினால் போலேயும் –
வசுதேவ குலத்துக்கு -மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-என்கிற படியே கடைக் குட்டியான
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -பெரிய திருமொழி -7-5-1-என்கிறபடியே
தங்களால் விடுவித்துக் கொள்ள ஒண்ணாத மாதா பிதாக்கள் கால் கட்டை அறுத்தால் போலேயும்-
இவரும் திரு அவதரித்து –
மலி புகழ் வண் குருகூர் –திருவாய் -4-2-11-என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கி
குடி கிடந்தது ஆக்கம் செய்து -என்கிற படியே சேஷத்வ குல மரியாதை
தப்பாத படி நின்ற மாத்ரம் அன்றிக்கே ,சேஷி விரஹ கிலேச அதிசயத்தாலே ,
காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து–திருவாய் -8-5-2- -என்றும்
கண்ண நீர் கைகளால் இறைத்து –7-2-1–என்றும்
இட்ட கால் இட்ட கையாம் படி
நிஸ் சேஷ்டராய் ,தரைக் கிடை கிடந்த பிரேம விசேஷத்தாலே ,
இக் குடிக்கு பண்டு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கி ..
அறுவர் தம் பிறவி அம் சிறையே –1-3-11-என்கிறபடி தம் உடைய
பிரபந்த அப்யாச முகத்தாலே தம்மோட அந்விதரான இவர்கள்
உடைய சம்சாரமாகிற அரிய சிறையும் அறுத்தார் என்கை-
திருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும் ,
இத்தனையும் ஸ்வரூப அனுகூலமாக செய்கையாலும் இவர்
பிறப்பு இறே மிகவும் பரோ உபகாரம் ஆய்த்து-
————————————————————–————————————————————–
சூரணை -83-
இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்கு உண்டான
நன்மைகளை அருளிச் செய்கிறார் ..
ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-
(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )
ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
அதாவது
கதிரவன் குண சிகை சிகரம் வந்து அணைந்தான் -கனவிருள் அகன்றது –திருப்பள்ளி -1- என்னும் படி
பாஹ்ய அந்தகாரத்தை போக்கிக் கொண்டு உதிக்கும் ஆதித்யனுக்கு போகாத உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரம்
தமோ பாஹ்யம் வினச்யேத்து பாவக ஆதித்ய சந்நிதவ்
பாஹ்ய மாப்யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க சந்நிதவ் -என்கிற படியே நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அதாவது –
சரஜாலாம் சுமான் சூர கபே ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதே–ஸூ ந்தர -37-16-
(ராம சூர்யன் இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார் ) என்கிற படியே –
சர ஜாலங்கள் ஆகிற கிரணங்களை உடையனாய் கொண்டு
சத்ரு ராஷசர் ஆகிற சமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கும் வற்றாத
பிறவி என்னும் பெரும் கடல்-என்கிற சம்சார சாகரம் வற்றி –
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
அதாவது
ததோகில ஜகத் பத்ம போதய அச்யுத பாநுனா தேவகி பூர்வ
சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்ற ஜகத் பத்மம் விசிதாகும் படியாக
தேவகியாகிற பூர்வ சந்தையில் ,ஆவீர் பாவித்த அச்யுத பானுவான கிருஷ்ணனுக்கு
விகஸியாத -போதில் கமல வன் நெஞ்சம் பெரியாழ்வார் -5-2-8–என்கிற ஹிருதய பத்மம் விகசிதம் ஆய்த்து-
யத் கோ சஹாஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்கர
யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -என்று
திரு வாய் மொழி ஆயிரம் ஆகிற கிரணங்களை உடையவராய் ,
மகிஷீ பூஷண ஆயூத விசிஷ்டனான நாராயணனை –
கண்கள் சிவந்ததில்-8-8-1–படியே உள்ளே உடையவராய் ,
வேத வித்துகளான சர்வ சிஷ்டர்களும் கேட்ட போதே
தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை உடையராய் ,
வகுளா பரணாராய் இருக்கிற ஆழ்வார் ஆகிற பாஸ்கரனுடைய உதயத்தில் என்கை-
ஆதித்ய திவாகர பானு சப்தங்களால் அன்றிக்கே-( ஆதித்யன் -அதிதியின் புத்ரன் /திவாகரன் பகலை செய்கிறவன் /
பானு -பிரகாசிக்கிறவன் / பாஸ்கரன் -பிரகாசிக்கச் செய்கிறவன் ) பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே –
ஊரும் நாடும்-6-7-2- -இத்யாதி படியே ஸ்வ சம்பந்தத்தை
உடையார் எல்லாருக்கும் பிரகாசத்தைப் பண்ணுமவர் என்று தோற்றுகிறது ..
—————————————————————-
சூரணை -84-
இப்படி பர உபகார ஜன்மமான இவர் வர்ணத் த்ரயத்தில் ஒன்றிலே அவதரியாதே ,
சதுர்த்த வர்ணத்தில் தாழ இழிவான் என் என்ன ,
அதுவும் பர ரஷண அர்த்தமாகவே என்கிறார் ..
வம்ச பூமிகளை உத்தரிக்க
கீழ்க் குலம் புக்க
வராஹ கோபாலரைப் போலே
இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்-
(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்-)
(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்
அதாவது
யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி
யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை –
அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை
கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி
உத்தரிப்பிக்கைக்காக-
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே
கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-
அதாவது –
ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை-
உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந -தைத்ரியம் – –என்றும்
நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக -கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –
இவரும் நிமக்னரை உயர்த்த
தாழ இழிந்தார்
அதாவது
குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை ,
அந் நிலையில் நின்றும் பேதித்து -அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்
உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள்
அனர்த்த கரம் என்று தோற்றும் படி தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே
தாழ இழிந்தார் என்கை ..
இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே
அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக-
அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு
நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து ..
—————————————————————
ஆக
வீட்டு இன்பம் -சூர்ணிகை -75- என்று தொடங்கி இவ்வளவும்
மந்த மதிகளுடைய சங்க நிராகரண அர்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்தில் வரும் பிரத்யவாயமும் –
வ்யாசாதிகளை பற்ற இவர் அவதார வைலஷண்யமும் -78-79-80-81-
அவதாரம் பரார்த்தம் என்னும் இடமும் ,82-83-
மகா பிரபாவர் ஆன இவர் தாழ அவதரிக்கைக்கு நிதானமும்-84
அருளி செய்தாராய் நின்றார் .
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply